Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்­லி­ணக்கம், பொறுப்­புக்­கூ­ற­லுக்கு முழு­மை­யான ஆத­ரவு வழங்­குவோம்

Featured Replies

நல்­லி­ணக்கம், பொறுப்­புக்­கூ­ற­லுக்கு முழு­மை­யான ஆத­ரவு வழங்­குவோம்

33-b76ef73ee1c06d3696552ac1b1a1def495d14e69.jpg

 

 அமெ­ரிக்க அர­சியல் விவ­கா­ரங்­க­ளுக்­கான செயலர் தோமஸ் செனன்
 (ரொபட் அன்­டனி)

இலங்­கையில் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்ற அர­சி­ய­ல­மைப்பு மறு­சீ­ர­மைப்பு செயற்­பா­டுகள், நல்­லி­ணக்கம் மற்றும் பொறுப்­புக்­கூறல் விவ­காரம் சட்­டத்தின் ஆட்­சி­ப்ப­டுத்தல் ஜன­நா­ய­கத்தை  பலப்­ப­டுத்­துதல் ஆகி­ய­வற்­றுக்கு அமெ­ரிக்கா முழு­மை­யான ஆத­ரவை வழங்கும் என்று இலங்­கைக்கு நேற்று விஜயம் செய்த அமெ­ரிக்­காவின் அர­சியல் விவ­கா­ரங்­க­ளுக்­கான தூதுவர் தோமஸ் செனன் தெரி­வித்தார்.  

இலங்­கைக்கு நேற்று விஜயம் மேற்­கொண்ட அமெ­ரிக்­காவின் அர­சியல் விவ­கா­ரங்­க­ளுக்­கான தூதுவர் தோமஸ் செனன் மற்றும் இலங்கை வெ ளியு­றவு செயலர் பிரசாத் காரி­ய­வசம் தலை­மையில் நேற்று இலங்கை அமெ­ரிக்க கூட்டு கலந்­து­ரை­யாடல் நடை­பெற்­றது. அதன் பின்னர் வெ ளிவி­வ­கார அமைச்சில் நடை­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து வெ ளியி­டு­கை­யி­லேயே அமெ­ரிக்­காவின் அர­சியல் விவ­கா­ரங்­க­ளுக்­கான தூதுவர் தோமஸ் செனன் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்

இலங்­கைக்கும் அமெ­ரிக்­கா­வுக்கும் இடை­யி­லான கூட்டு கலந்­து­ரை­யா­ட­லின்­போது இரண்டு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான பல்­வேறு விட­யங்கள் குறித்து பேசப்­பட்­டது. குறிப்­பாக இரண்டு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான தொடர்­பு­களை மேலும் வலுப்­ப­டுத்­து­வது குறித்து விரி­வாக ஆரா­யப்­பட்­டது.

விசே­ட­மாக இலங்­கையின் மறு­சீ­ர­மைப்பு செயற்­பா­டு­க­ளுக்கு அமெ­ரிக்கா முழு­மை­யான ஒத்­து­ழைப்பை வழங்கும். அத்­துடன் நல்­லி­ணக்கம் மற்றும் பொறுப்­புக்­கூறல் விவ­காரம் சட்­டத்தின் ஆட்­சி­ப­டுத்தல் ஜன­நா­ய­கத்தை பலப்­ப­டுத்­துதல் ஆகி­ய­வற்­றுக்கு அமெ­ரிக்கா முழு­மை­யான ஆத­ரவை வழங்கும். பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியை வழங்­கு­வ­தற்­கான பொறுப்­புக்­கூறல் செயற்­பாட்­டிலும் இலங்­கைக்கு அமெ­ரிக்கா உதவும். இரு­த­ரப்பு பாது­காப்பு விவ­கா­ரங்கள் குறித்தும் ஆரா­யப்­பட்­டது.

இலங்­கையும் அமெ­ரிக்­காவும் முக்­கி­ய­மான கட்­டத்தில் உள்ளன. இருதரப்பு உறவும் சிறந்த கட்டத்துக்கு சென்றுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையுடன் அர்ப்பணிப்புடன் பயணிக்க அமெரிக்கா தயாராக இருக்கின்றது. அதன் கட்டமைப்புக்கள் குறித்து நாங்கள் பார்க்கின்றோம் என்றார். 

http://epaper.virakesari.lk

புதிய அர­ச­மைப்பு குறித்து அமெ­ரிக்கா தீவிர கவ­னம்

 

இலங்­கை­யின் புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கம் குறித்­தும், போருக்­குப் பின்­ன­ரான நல்­லி­ணக்­கச் செயற்­பா­டு­கள் தொடர்­பி­லும் நாம் தீவிர கவ­னம் செலுத்தி வரு­கின்­றோம்.

2015ஆம் ஆண்டு ஏற்­ப­டுத்­தப்­பட்ட நல்­லாட்சி அர­சின் மூலம், அனைத்து இன மக்­க­ளுக்­கு­மான சுதந்­தி­ரம் உறு­தி­ப்ப­டுத்­தப்­பட்­டுள்­ளது என்று நினைக்­கி­றோம்.

போருக்குப் பின்­ன­ரான அபி­வி­ருத்­திச் செயற்­பா­டு­கள் தொடர்­பில் இலங்கை மேற்­கொள்ள வேண்­டி­ய­வை­கள் மற்­றும் அபி­வி­ருத்தித் திட்­டங்­கள் தொடர்­பில் அமெ­ரிக்கா ஆலோ­சனை வழங்கி வரு­கின்­றது.

இவ்­வாறு அமெ­ரிக்­கா­வின் அர­சி­யல் விவ­கா­ரங்­க­ளுக்­கான உத­விச் செய­லர் தோமஸ் சானொன் தெரி­வித்­தார்.
இலங்கை வந்­துள்ள உத­விச் செய­லர் தோமஸ் சானொன், இலங்கை அய­லு­ற­வுத்­துறை அமைச்­சின் செய­லர் பிர­சாத் காரி­ய­வ­சத்­து­டன் பேச்சு நடத்­திய பின்­னர் செய்­தி­யா­ளர் சந்­திப்­பில் கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

நல்­லி­ணக்­கம், பொதுப் பாது­காப்பு அபி­வி­ருத்­திச் செயன்­முறை தொடர்­பில் ஆராய இலங்­கைப் பய­ணம் மிக­வும் பய­னுள்­ள­தாக அமைந்­தது.
இலங்­கை­யில் மேற்­கொள்­ளப்­ப­டும் அபி­வி­ருத்­தித் திட்­டங்­கள், நல்­லி­ணக்­கச் செயற்­பா­டு­கள், கடல் பாது­காப்பு, வெளி­நாட்­டுக் கொள்கை போன்ற பல விட­யங்­கள் தொடர்­பில் ஆராய்ந்­தி­ருந்­தோம்.

இலங்­கை­யின் அபி­வி­ருத்­திக்­கா­க­வும் பாது­காப்பு நட­வ­டிக்­கைக்­கா­க­வும் 21 மில்­லி­யன் டொலர்­களை வழங்­கி­யி­ருந்­தோம்.
போருக்­குப் பின்­ன­ரான காலப்­ப­கு­தி­யில் இலங்­கை­யில் ஏற்­ப­டுத்­தப்­பட்ட நல்­லி­ணக்­கச் செயற்­பா­டு­கள் மற்­றும் நீதிப் பொறி­முறை தொடர்­பில் அமெ­ரிக்கா அதி­கம் கவ­னம் செலுத்­து­கி­றது.

இலங்­கை­யில் தற்­போது முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் நல்­லி­ணக்­கம், சட்ட விதி­முறை மற்­றும் நீதித்­துறை சீர்­தி­ருத்த முயற்­சி­க­ளுக்­கி­ணை­யாக, இரு­த­ரப்பு பாது­காப்­புப் பிரிவு ஒத்­து­ழைப்­பும் தொட­ரப்­ப­ட­வுள்­ளது.

கண்­ணி­வெ­டி­களை அகற்­று­தல், கூட்டு இரா­ணுவ ஈடு­பா­டு­கள், இலங்கை அதி­கா­ரி­க­ளுக்­கான மனித உரி­மை­கள் பயிற்சி, கப்­பல்­கள் மற்­றும் இரா­ணுவ அதி­கா­ரி­க­ளின் வருகை ஆகி­ய­வற்­றுக்­கான ஐக்­கிய அமெ­ரிக்­கா­வின் ஆத­ரவு ஆகி­யவை உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளன.

உல­க­ளா­விய பாது­காப்­புக்கு பெரும் அச்­சு­றுத்­த­லாக மாறி­யுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். தீவி­ர­வாத குழுக்­கள் தொடர்­பான தமது கரி­ச­னையை இலங்­கை­யும், ஐக்­கிய அமெ­ரிக்­கா­வும் பகிர்ந்து கொண்­டுள்­ளன.

வட­கொ­ரி­யா­வின் ஏவு­க­ணைத் திட்­டங்­க­ளி­னால் பன்­னாட்டு அமைதி மற்­றும் பாது­காப்­புக்கு ஏற்­பட்­டுள்ள அச்­சு­றுத்­தல் குறித்­தும், வட கொரியா மீது அனைத்து ஐக்­கிய நாடு­கள் உறுப்­பி­னர்­க­ளும் அழுத்­தம் செலுத்த வேண்­டி­ய­தன் முக்­கி­யத்­து­வம் குறித்­தும் ஆரா­யப்­பட்­டது – என்­றார்.

http://newuthayan.com/story/44293.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.