Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குறும்படங்களான பிரபல சிறுகதைகள்

Featured Replies

‘கர்ணமோட்சம்’ முதல் ‘பசி’ மாந்தர்கள்... உயிர் பெறுகிறார்கள்!’ - குறும்படங்களான பிரபல சிறுகதைகள்

ஒருகாலத்தில் கவிதை, சிறுகதை எழுதுவதும், அவற்றை வாரப் பத்திரிகைகளுக்கு அனுப்பி பரிசு பெறுவதும் பலருக்கும் விருப்பமான செயலாக இருந்தது. அதன்பின் ஓவியம் வரைவதும், பாட்டு பாடுவதும் சிலரது விருப்பச் செயலானது. தற்போது `குறும்படம்' எடுப்பது, பல இளைஞர்களின் பொழுதுபோக்காக மாறியுள்ளது. டிஜிட்டல் மீடியாவின் எழுச்சியாலும், குறும்படம் எடுத்து பிறகு திரைப்பட இயக்குநர்களாக சாதித்தவர்களாலும் குறும்படம் எடுப்பது பிரபலமாகிவிட்டது. தற்போதைய அரசியல் சூழலை, அன்றாட வாழ்க்கையை நகைச்சுவையாக பாவிக்கும் `ஸ்பூப்' வீடியோக்களை எடுப்பது பிரபலமாகிவருகிறது. ஆனாலும், குறும்படங்கள் மோகம் குறைந்தபாடில்லை. யூ டியூப் எங்கும் நிறைந்துகிடக்கும் குறும்படங்களில் எழுத்தாளர்களின் சிறுகதைகளை, கதைகளை மையப்படுத்தி எடுத்த குறும்படங்கள் சிலவற்றைப் பற்றி பார்ப்போம்.

பசி : 

 

பசி

‘இன்று நேற்று நாளை’ திரைப்படத்தின் இயக்குநர் ரவிக்குமார் எழுத்தாளர் கே.ராஜாராமின் ‘பசி’ என்ற சிறுகதையைத் தழுவி இந்தக் குறும்படத்தை எடுத்துள்ளார். உடல்நிலை சரியில்லாத தன் அம்மா படுக்கையில் இருக்க, ஆட்டைப் பிடித்துக் கட்டிவிட்டு பள்ளிக்குக் கிளம்புகிறான் ஒரு சிறுவன். வீட்டில் உள்ள காலிப் பாத்திரங்களைத் தடவிப்பார்த்துவிட்டு பட்டினியுடனே பள்ளிக்கு ஓடுகிறான்.

 

 

பள்ளியில் அவன் நுழையும்போது  சத்துணவுக்காக சமையல் வேலைகள் நடந்துகொண்டிருப்பதாகத் தொடங்குகிறது குறும்படம். வெளியே தயாராகிக்கொண்டிருக்கும் உணவைப் பற்றியே வகுப்புக்குள் இருக்கும் சிறுவன் சிந்தித்துக்கொண்டிருப்பான். பசியின் உக்கிரம் ஆட்கொண்டிருக்கும் கணமும், உணவுக்கான காத்திருப்பும், அந்தச் சிறுவனின் மன ஓட்டமும் இந்தக் குறும்படத்தில் நிறைவாகச்  சித்திரிக்கப்பட்டிருக்கும்.

தொடரும்...

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

தரமணியில் கரப்பான் பூச்சிகள்: 

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் சிறுகதையான `தரமணியில் கரப்பான் பூச்சிகள்' கதையைத் தழுவி அதே பெயரில் எடுக்கப்பட்ட குறும்படம். இந்தக் குறும்படத்தின் இயக்குநர் மடோன் அஸ்வின். இவர் சமீபத்தில் வெளியான `குரங்குபொம்மை' திரைப்படத்துகான வசனம் எழுதியவர். இவர் `தர்மம்' என்ற குறும்படத்துக்காக தேசிய விருது பெற்றவர். சென்னை வீதிகளில் அயர்ன் செய்த சட்டையுடன் டை அணிந்தபடி புத்தகங்கள் மற்றும் வாஷிங் பவுடர்களை மார்க்கெட்டிங் செய்யும் எண்ணற்ற இளைஞர்களை நாம் கடந்திருப்போம். அத்தகைய மார்க்கெட்டிங் வேலையில் அல்லல்படும் இளைஞர்களை மையமாகவைத்து இந்தக் குறும்படம் எடுக்கப்பட்டுள்ளது.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

தக்கையின் மீது நான்கு கண்கள்: 

எழுத்தாளர் சா.கந்தசாமியின் `தக்கையின் மீது நான்கு கண்கள்' என்ற சிறுகதையை மையப்படுத்தி, இயக்குநர் வசந்த் இயக்கியிருக்கும் குறும்படம். இதில் நடிகர் வீராசாமி, தாத்தாவாக நடித்திருப்பார். பல ஆண்டுகளாக மீன் பிடித்துவரும் தாத்தாவால் குளத்தில் இருக்கும் மீன் ஒன்றைப் பிடிக்க முடியாமல்போகவே அந்த ஆற்றாமை, பேரனின் மீதான கோபமாக மாறும். பேரனுக்கும் அந்த மீனைப் பிடிக்கும் ஆசையிருக்க, தாத்தாவுக்கும் பேரனுக்கும் இடையிலான மனப்போட்டியாக கதை நகரும். 

தொடரும்...

  • தொடங்கியவர்

கர்ண மோட்சம்: 

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் மிகச்சிறந்த கதை. எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரி மாணவரான முரளிமனோகர் இயக்கிய குறும்படம். பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட இந்தப் படம், தேசிய விருதைப் பெற்றுள்ளது. கூத்துக் கலைஞர்களின் வாழ்வு எவ்வளவு மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது என்பதை இந்தக் குறும்படம் சித்திரிக்கிறது. பள்ளியில் நடக்கும் விழாவுக்காகத் தன் மகனுடன் கூத்துக்கட்ட வருகிறார் கூத்துக்கலைஞர். அந்த விழா ரத்துசெய்யப்பட்டவுடன் அவரும் மகனும் வீட்டுக்குத் திரும்புவதாகத் தொடங்கும் படம், கூத்துக் கலைஞரின் அகவுணர்வுகளைச் சார்ந்து நகரும்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

குறும்பட அறிமுகம்: ஒடுக்கி வைக்கப்படும் விருப்பங்கள்

 

 
10chrcjisha%20short%20film

தி

ரையரங்கில் படம் பார்க்கும்போது, ஏதாவது ஒரு தருணத்தில் கைதட்டி விசிலடித்து ஆர்ப்பரிக்கத் தோன்றும். ஆனால், மற்றவர்கள் என்ன நினைத்துக்கொள்வார்களோ என்ற சங்கோஜத்தால் அதைச் செய்யாமல் நம் உணர்ச்சியைக் கட்டுப்படுத்திக்கொள்வோம். நம் விருப்பங்கள் ஒன்றாகவும் சமூகத்தின் எதிர்பார்ப்புகள் வேறாகவும் இருக்கும்போது நாம் நம்மை அறிந்தோ அறியாமலோ இரட்டை வேடம் போட வேண்டியிருப்பதை அழுத்தமாகச் சுட்டிக் காண்பிக்கிறது ‘இஷா’(Isha) என்கிற குறும்படம்.

சார்லஸ் மைக்கேல் என்பவர் இயக்கியிருக்கும் இந்தக் குறும்படம் நான்கு நடிகர்களை வைத்து 11 நிமிடங்களுக்குள் ஒரு நுட்பமான உளவியல் சிக்கலை அறிமுகப்படுத்துவதுடன் சிறந்த திரையனுபவத்தையும் தருகிறது.

பப் ஒன்றில் இரவு நேரத்தில் மது அருந்திவிட்டு ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கிறாள் இஷா. மறுநாள் காலை, தன் கல்லூரி புராஜக்ட் பணிகளைத் தொடங்கத் தயாராகும்போது முதல் நாள் அவளுடன் பப்பில் இருந்த பையன் வந்து அவள் கையைப் பிடித்து இழுத்து அணைக்க முயல்கிறான். மிரண்டுபோய்,எதுவும் புரியாமல் அவனிடமிருந்து விலகிச் செல்கிறாள் இஷா. “நீ என்னை ஏமாற்றுகிறாய்” என்று திட்டிவிட்டுச் சென்றுவிடுகிறான் அந்த இளைஞன். இதனால் ஏற்படும் குழப்பத்தில் புராஜக்ட் பணிகளைக் கவனிக்க மனமில்லாமல் வீட்டுக்குச் சென்றுவிடுகிறாள் இஷா. அங்கே புகைபிடித்துக்கொண்டிருக்கும் அவளுடைய அக்காவிடம், கழிவறைத் தொட்டிக்குள் சிகரெட் துண்டுகள் கிடந்ததாக இஷா கடிந்துகொள்கிறாள். “எனக்கு சிகரெட் பிடிப்பவர்களைக் கண்டாலே பிடிக்காது என்று உனக்குத் தெரியாதா அக்கா” என்று குழப்பமும் வேதனையும் கலந்த குரலில் கேட்கிறாள் இஷா. அன்றைய இரவே பப்புக்குச் சென்று அந்த நண்பனைத் தேற்றி மீண்டும் அவனுடன் நெருக்கம் காட்டுகிறாள்.

இதில் யார் உண்மையான இஷா? பப்புக்குச் செல்பவளா, சிகரெட்டின் வாசனையே பிடிக்காதவளா? ஆண் நண்பனுடன் நெருக்கமாக இருப்பவளா, ஆணின் தீண்டலையே வெறுப்பவளா? அல்லது இவள்தான் அவள், அவள்தான் இவளா? எது நன்மை, எது தீமை? என்றெல்லாம் எந்த விதமான தீர்ப்பும் சொல்லாமல் வாழ்வில் நாம் எதற்கெல்லாம் நம் விருப்பங்களை அடக்கிக்கொண்டு வேறொரு முகமூடி போட்டுக்கொள்கிறோம் என்று யோசிக்கவைக்கிறது இந்த இந்திப் படம்.

சிலிகுரி சர்வதேசக் குறும்பட விழா 2014, தர்ட் ஐ ஆசியத் திரைப்பட விழா 2015, புனே குறும்பட விழா 2014 ஆகியவற்றில் திரையிடப்பட்டுப் பரவலான பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இதுபோன்ற நுட்பமான உளவியல் சிக்கல்கள் நல்ல தாக்கம் செலுத்தும் விதத்தில் அலசப்படுவது குறும்படம் என்கிற ஊடகத்தின் சாத்தியம் குறித்த நம்பிக்கையை விதைக்கிறது.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article20009473.ece

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

'பாதிக்கப்பட்டவங்களுக்கும் ஒரு பாதை இருக்கு' - சாட்டை சுழற்றும் 'செங்காந்தள்' குறும்படம்!  

குறும்படத்தின் தொடக்கத்தில் ஒரு சிறுமி, "பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் கமலாதேவி (பெயர் மாற்றப்பட்டது). பள்ளி முடித்து வீடு திரும்பும் வழியில் அடையாளம் தெரியாத நான்கு பேரால் பாலியல் பலாத்காரம்செய்யப்பட்டார். காவல்துறை வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொள்கிறது' என்ற பத்திரிகைச் செய்தியைத் தட்டுத்தடுமாறி வாசித்துக்கொண்டிருக்கிறார். பெண்கள் மீதான தனிமனிதத்  தாக்குதல்களும் அவர்களுக்கான நியாயமான உரிமைகளைக்கூட போராடிப் பெறவேண்டிய நிலையே தொடர்கிறது என்பதையும் முன்வைத்து வெளிவந்திருக்கிறது, 'செங்காந்தள்' குறும்படம். குறும்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார், தமிழ்ச்செல்வன்.

 

 

 

"நம்ம புள்ள ஒழுங்கா இருந்தா இந்த அசிங்கம்லாம் தேவையா நமக்கு? நீயும் நானும் எந்தப் பள்ளிக்கூடத்துக்கு போனோம், கல்யாணம் பண்ணிக்கல... புள்ள பெத்துக்கல? எவன் தலையிலையாவது கட்டி வைப்பியா... அதை விட்டுப்புட்டு..." எனப் பாதிக்கப்பட்ட பெண்ணின் அம்மாவிடம் சொல்லிக்கொண்டிருக்கிறார், உறவுக்காரப் பெண் ஒருவர். பக்கத்து அறையிலிருந்து நுழையும் அந்தப் பெண்,

"ஒரு வாரமா யாரை பார்த்தாலும் இதே பேச்சு. அவங்களுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்... ஒரே ஒரு சாமி இருக்கிற ஊர்ல, தலைக்கட்டுக்கு ஆயிரம் ரூபா போட்டு, நாலு தடவை திருவிழா நடத்துறீங்க? வீட்டுக்கு ரெண்டு மூணு பொம்பளைங்க இருக்கோம். ஆத்திர அவசரத்துக்குப் போறதுக்கு, ஒரு கக்கூஸ் கூட இல்ல. அதப் பத்தி யாருக்கும் கவலை இல்லை. அதைக் கட்டுறதுக்கு யாரும் துப்பில்ல. அங்கேயெல்லாம் போய் புத்தி சொல்லிடாதீங்க. நான் வயசுக்கு வந்தப்போ வெளிய போகாத, விளக்கு வைக்கிறதுக்குள்ள வீட்டுக்கு வா, ஆம்பிளைங்கள பார்த்தா தலையைக் கீழ போட்டுக்கோன்னு சொன்னிங்க. இதே மாதிரி உங்க பசங்களுக்கும் குடிசை கட்டி, இப்படி ஏதாச்சும் சொல்லிருந்தா, இந்த பிரச்னையே வந்திருக்காதுல..?" எனச்சொல்கிறார். இப்படி செங்காந்தள் குறும்படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் நிஜம் அறைகிறது.  

"தங்களுக்குக் கிடைக்கவேண்டிய நியாயமான உரிமைகள் கூட முடக்கப்பட்டாலும் அதைப் போராடி வென்றுகொண்டிருக்கும் அனைத்து கண்மணிகளுக்கும் சமர்ப்பணம்" என்ற தன்னம்பிக்கை வார்த்தைகளோடு நிறைகிறது, 'செங்காந்தள்' குறும்படம்.

https://www.vikatan.com/

  • 2 months later...
  • தொடங்கியவர்

இந்த அற்புதப் படைப்பைத் தவறாது பாருங்கள்.

நிஜ வாழ்க்கையில் இதுபோன்ற அம்மா இருக்கின்றனரா என்ற கேள்விக்கு பதில் ஆச்சரியக்குறிதான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.