Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிணை­முறி ஆணைக்­கு­ழுவை நிய­மித்­ததால் அரசில் சிலர் எனக்கு எதி­ராக செயற்­ப­டு­கின்­றனர்

Featured Replies

பிணை­முறி ஆணைக்­கு­ழுவை நிய­மித்­ததால் அரசில் சிலர் எனக்கு எதி­ராக செயற்­ப­டு­கின்­றனர்

7-8c41ca97abbdc447eb6eae2287103677e676c370.jpg

 

தவ­றி­ழைத்­த­வர்­க­ளுக்கு தண்­டனை வழங்­க­வேண்டும் என்­கிறார் ஜனா­தி­பதி 
(எம்.எம்.சில்­வெஸ்டர்)

தவ­றி­ழைத்­தவர் யாரா­யி­ருப்­பினும் அவ­ருக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும். தவ­றுக்கு எதி­ராக செயற்­ப­டு­வது தண்­டனை வழங்­கு­வது தொடர்பில் எவ­ருமே எதிர்ப்பு தெரி­விக்க முடி­யாது. அதனை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும். இது நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டா­மையே எனக்கு உள்ள பிரச்­சி­னை­யாகும் என்' ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார். 

மத்­திய வங்­கியில் நடை­பெற்ற மோச­டிகள் குறித்து ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவை நிய­மித்­துள்­ளதால் அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் சிலர் எனக்­கெ­தி­ராக செயற்­ப­டு­கின்­றனர். இது எதற்­காக? மத்­திய வங்கி சம்­ப­வத்­துக்­காக ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழு­வொன்றை நிய­மித்­த­தற்­கா­க­வே­யாகும்

சங்­கைக்­கு­ரிய சோபித்த தேரரின் 2 ஆவது நினைவு தின நிகழ்வு பத்­த­ர­முல்­லை­யி­லுள்ள அபே கமையில் நேற்று நடை­பெற்­றது. அதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே ஜனா­தி­பதி இதனைத் தெரி­வித்தார்.

இந்­நி­கழ்வில் ஜனா­தி­பதி தொடர்ந்து உரை­யாற்­று­கையில்

இன்று ( நேற்று) எமது மாது­லு­வாவே சோபித்த தேரரின் இரண்­டா­வது வருட நினைவு தினத்தை நினைவு கூரு­கிறோம்.அவரை நினை­வுப்­ப­டுத்தும் வித­மாக அவரின் நினைவுச் சிலையை நிர்­மா­ணிப்­ப­தற்­கான அடிக்­கல்லை நாட்­டினோம். அவர் நாட்டில் சாதி மத ஒற்­று­மையை நிலை­நி­றுத்­து­வ­தற்கு முன்­னின்று உழைத்தார்.

அவர் எதிர்­பா­ராத வித­மாக நோய்­வாய்­பட்டு இறந்தார். அவரை எனக்கு 25 வரு­டங்­க­ளுக்கு முன்­னர்தான் தெரியும். மத சேவை­களை செய்­வதில் முன்­னின்ற செய்­தது போலவே சமூ­கத்தில் காணப்­படும் பல வித­மான பிரச்­சி­னை­களை நிவர்த்தி செய்­வ­திலும் முன்­னின்றார்.

யுத்த காலத்தில் இந்­நாட்டில் யுத்தம் நடந்த பிர­தே­சங்­க­ளுக்குச் சென்று அம்­மக்­க­ளுக்­கான நலன்சார் விட­யங்­களை செய்தார். யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட மக்­களின் கஷ்ட நஷ்­டங்­களை கேட்­ட­றிந்தார். அவர் அன்று அந்த யுகத்­தின்­போது நிறைய தியா­கங்­களை செய்­தி­ருந்தார். அதே­போன்று நாட்டில் ஏற்­பட்ட அர­சியல் முரண்­பா­டு­களை சரி செய்ய நல்­லாட்சி ஒன்றை நிறு­வு­வ­தற்கு கடந்த காலங்­களில் முன்­னின்று உழைத்தார். நாட்­டுக்குத் தேவை­யான அர­சியல் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­தவும் நாட்டை கட்­டி­யெ­ழுப்­பு­த­வற்கும் அது தொடர்பில் பொது மக்­களின் கருத்தை அறிந்து கொள்­வ­தற்கும் தலைமை தாங்­கினார். அது அர­சியல் கட்­சி­யொன்றின் கொள்­கைக்­காவோ தூர­நோக்குப் பார்­வைக்­கா­கவோ அல்ல. பொது மக்­களின் தேவை­களை நிவர்த்தி செய்­வ­தற்­கா­கவே அவர் முன்­னின்றார்.

அதில் மிகவும் முக்­கிய விட­ய­மா­னது கடந்த ஜனா­தி­பதி தேர்­த­லின்­போது பொது அபேட்­சகர் ஒருவர் தொடர்­பி­லான யோச­னையை ஏற்­ப­டுத்­தி­ய­மை­யாகும். அது தொடர்பில் இணைத்­துக்­கொள்­ளக்­கூ­டிய அர­சியல் சங்­கங்கள் தொழிற்­சங்­கங்­கள்இ சிவில் அமைப்­புக்கள் தனி நபர்கள் போன்­ற­வற்றை ஒன்­றி­ணைத்தார். அவரின் முயற்­சிக்கும் பலன் கிடைத்­தது.

நிறை­வேற்று அதி­கா­ரம்­கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை நீக்­கு­வ­தற்கு 1988 முதல் நடை­பெற்ற ஐந்து ஜனா­தி­பதித் தேர்­தல்­க­ளிலும் பொது அபேட்­சகர் தொடர்­பி­லான யோசனை கொண்­டு­வ­ரப்­பட்ட போதிலும் அதனை நடை­மு­றைக்கு கொண்­டு­வர முடி­யாமல் போனது.

அவரின் அந்த ஆலோ­ச­னைக்­க­மைய கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் பொது அபேட்­சகர் என்ற யோசனை செயற்­ப­டுத்­தப்­பட்­ட­துடன் வெற்­றியும் பெற்­றது. இதில் பொது அபேட்­ச­கரை தெரிவு செய்­வது தேர்­த­லுக்கு முகம் கொடுப்­பது தேர்­தலில் வெற்றி பெறு­வது என்­பன இல­கு­வான விட­ய­மல்ல. அது சவால்­மிக்­க­துடன் குழப்­ப­மிக்க விட­ய­மாகும்.

எனினும் இந் நாட்டு மக்­களின் ஆசீர்­வாதம் அதற்கு தலை­மைத்­துவம் வழங்­கிய ரணில் விக்­கி­ர­ம­சிங்க உள்­ளிட்ட சகல அர­சியல் கட்சித் தலை­வர்கள் தொழிற்­சங்­கங்கள் சிவில் அமைப்­புக்கள் மத அமைப்­புகள் ஆகிய தரப்­பினர் இதற்கு பாரிய முயற்­சி­களை மேற்­கொண்­டனர்.

இதை­ய­டுத்து அரச ஊட­கங்கள் அரச திணைக்­க­ளங்கள் அரச சொத்­துக்கள் என்­பன வர­லாற்றில் என்­று­மில்­ல­த­வாறு மிலேச்­சத்­த­ன­மாக தேர்­த­லின்­போது பாவிக்­கப்­பட்­டன. இவை அனைத்­தையும் எதிர்­கொண்டு அந்த தேர்­த­லுக்கு முகம்­கொ­டுத்தோம்.

பெல்­ம­து­ளையில் நடை­பெற்ற தேர்தல் பிர­சார கூட்­டத்­தின்­போது கல்­வீச்சு தாக்­குதல் நடத்­தினர். எனது பிரச்­சார மேடை­க­ளுக்கு தீ வைத்து பல மிலேச்­சத்­த­ன­மான வேலை­களை செய்­தனர். மேலும் நாக­ரீ­க­மற்ற விதத்தில் அரச ஊட­கங்கள் நடந்­து­கொண்­டன. முடிந்­த­ளவில் எனது நற்­பெ­ய­ருக்கு களங்கம் விளை­வித்­தனர். அரச நிதியை அவர்­க­ளது தேர்தல் பிரச்­சா­ரங்­க­ளுக்­காக பயன்­ப­டுத்­தினர். அவ்­வ­னைத்­தையும் எதிர்த்து போட்­டி­யிட்டு இறு­தியில் மக்கள் வெற்­றி­பெற்­றனர். அம்­மக்­களின் நோக்­கத்தை செயற்­ப­டுத்­து­வ­தற்­காக அர­சாங்­கத்தை பொறுப்­பேற்ற அர­சி­யல்­வா­தி­களின் பொறுப்­புக்கள் எந்­த­ள­வுக்கு வெற்­றி­பெற்­றுள்­ளன என்­பது குறித்து நாம் சிந்­திக்க வேண்டும்.

பேரா­சி­ரியர் சரத் விஜ­ய­சூ­ரி­ய­வினால் எழு­தப்­பட்ட நூலை (சோபித்த தேரரின் இரண்­டா­வது ஆண்டு நினைவு தின நூல் ) வாசித்தேன். அதில் பத்து யோச­னைகள் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன. அவற்­று­குக்கு வாக்­கெ­டுப்­பொன்று நடத்­தப்­பட்டால் எனது ஒரு கையை அல்ல இரு கைக­ளையும் உயர்த்­துவேன். அதுதான் உண்மை நிலை.

நாம் தவ­றுகள் செய்த அந்த அர­சாங்­கத்தை வீழ்த்தி புதிய அர­சாங்­க­மொன்றை நிறு­வி­யமை எதற்­காக? எமது அர­சாங்­கத்தை எதிர்ப்­ப­வர்­களும் நல்­லாட்சி என்றே அழைக்­கின்­றனர். எமது அர­சாங்­கத்தை ஆத­ரிப்­ப­வர்­களும் நல்­லாட்சி என்றே அழைக்­கின்­றனர்.

தவறு செய்­த­வர்­க­ளுக்கு எதி­ராக விரல்­களை நீட்­டு­வது போல் தவறு செய்­த­வர்­க­ளுக்கு தண்­டனை வழங்­கு­வது போல் நாமும் எமது பணி­களை சரி­யாக செய்­கி­றோமா என எமது மன­சாட்­சி­யிடம் கேட்­டுக்­கொள்ள வேண்டும்.

சரத் விஜ­சூ­ரி­யவின் யோச­னை­களை நான் 100 வீதம் ஏற்­றுக்­கொள்­கிறேன். நடை­மு­றைப்­ப­டுத்­துவேன். எனது மட்­டத்தில் என்னால் செய்­யக்­கூ­டிய விட­யங்­களை செய்­துள்ளேன். எமது வெற்றி குறித்தும் நாம் செய்­துள்ள வேலைத்­திட்­டங்கள் குறித்தும் முன்­னேற்­றங்கள் குறித்தும் எத்­தனை பேர் பேசிக்­கொள்­கின்­றனர். 19 ஆவது அர­சி­ய­ல­மைப்பின் முக்­கி­யத்­துவம் குறித்து எத்­தனை பேர் உரை­யா­டு­கின்­றனர். கடந்த அர­சாங்­கத்தால் எதிர்க்­கப்­பட்ட ஒள­டத சட்­ட­மூ­லத்தை பாரா­ளு­மன்றில் கொண்­டு­வந்து சுகா­தார சேவையில் ஏற்­ப­டுத்­திய மாற்றம் தொடர்பில் யார் கதைக்­கின்­றனர். இவற்றை விடுத்து காலை முதல் இரவு வரை தனியார் ஊட­கங்­களில் குறை­கூறி நாக­ரீ­க­மற்ற முறையில் செயற்­ப­டு­கின்­றனர்.

இன்று பெற்றோல் பிரச்­சினை தொடர்பில் என்­னிடம் கேட்­கின்­றனர். நான் தான் பெற்றோல் விநி­யோ­கிக்­கிறேன் என்று எல்­லோரும் நினைக்­கின்­றனர். வைத்­தி­ய­சா­லையில் வேலை­நி­றுத்தம் என்­றாலும் என்னை திட்­டு­கின்­றனர். நான்தான் மருந்து கொடுக்­கிறேன் என நினைக்­கின்­றனர். பாட­சா­லைக்கு பிள்­ளையை சேர்க்க முடி­யாது பேனாலும் ஜனா­தி­ப­திதான் தவ­றி­ழைத்­தவர் என கூறு­கின்­றனர். ஜனா­தி­ப­திதான் பிள்­ளையை பாட­சா­லைக்கு சேர்க்­கிறார் என்று நினைக்­கின்­றனர். இதற்கு கார­ண­மொன்று உள்­ளது. மக்­களின் பக்­கத்தில் அவ்­வாறு நினைப்­பது சரி­யாகும். கடந்த காலத்தில் ஜனா­தி­ப­தியை அதற்கு பழக்­கப்­ப­டுத்தி சக­ல­தையும் அவரை செய்ய வைத்­துள்­ளனர்.

 நாட்டின் ஜனா­தி­ப­தி­யினர் பெற்றோல் நிலை­யங்­களில் பெற்றோல் நிரப்பும் வேலை­களை மாத்­தி­ரமே செய்­ய­வில்லை. அனைத்­தையும் செய்­துள்­ளனர். அதுதான் உண்மை. இதனால் நாட்டில் ஒரு சாதா­ரண பிரச்­சினை ஏற்­பட்டால் கூட ஜனா­தி­பதி செய்ய வேண்­டிய காரியம் அல்­லவா அவர்தான் செய்­யாமல் இருக்­கிறார் என மக்கள் நினைத்­துக்­கொள்­கின்­றனர்.

இவ்­வா­றான நிலை­யில்தான் நாம் அர­சாங்கம் என்ற வகையில் கட­மை­களை செய்து வரு­கிறோம். தவ­றி­ழைத்­தவர் யாரா­யி­ருப்­பினும் அவ­ருக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும். தவ­றுக்கு எதி­ராக செயற்­ப­டு­வது தண்­டனை வழங்­கு­வது தொடர்பில் எவ­ருமே எதிர்ப்பு தெரி­விக்க முடி­யாது. அது நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட வேண்டும். இது நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டா­மையே எனக்கும் உள்ள பிரச்­சி­னை­யாகும்.

நான் அமைச்­ச­ர­வையில் இது குறித்து கூறி­யி­ருந்­தது அமைச்­சர்­க­ளுக்கு தெரியும். மத்­திய வங்­கியில் நடை­பெற்ற மோச­டிகள் குறித்து ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவை நிய­மித்­துள்­ளதால் அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் மிகச்­சிலர் எனக்­கெ­தி­ராக செயற்­ப­டு­கின்­றனர். இது எதற்­காக? மத்­திய வங்கி சம்­ப­வத்­துக்­காக ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழு­வொன்றை நிய­மித்­த­தற்­கா­க­வே­யாகும். சோபித்த தேரர் இருந்­தி­ருந்தால் நான் செய்­தது சரி என கூறுவார்.

நாங்கள் இவ்­வி­டத்­துக்கு வந்­தது எதற்­காக? அர­சாங்­கத்தை மாற்­றி­யது எதற்­காக? எமது நோக்கம் என்ன? நாம் வந்­தது எமது ‘ பைகளை’ நிரப்­பு­வ­தற்­கா­கவா? நாம் வந்­தது திரு­டவா? நான் ஜனா­தி­பதி ஆணைக்குழுவை நியமித்தது எந்தவொரு அரசாங்க நபரையும் குறிவைத்து அல்ல. அரசிலுள்ள அமைச்சர்களை குறிவைத்து அல்ல. மத்திய வங்கி விடயம் குறித்து அப்போதிருந்த அந்த நிலை தொடர்பில் மக்கள் நன்கு அறிவர். இதனாலேயே மக்களின் எதிர்ப்புக் குரல் எழுந்தது.

ஊழல் மோசடி நடைபெற்றுள்ளது. இது தொடர்பில் ஆராய வேண்டும் என்பதற்கான தேவை இருந்தது. இதனால்தான் ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டிய தேவை இருந்தது. அதனாலேயே நான் அதனை செய்தேன்.

நாம் வந்தது மக்களுக்கு சேவை செய்யவேயாகும். அவர்களுக்கு சேவை செய்ய இன்னும் 3 ஆண்டு காலம் உள்ளது. தவறு செய்த சிலரை திருத்திக்கொண்டு அரசாங்கத்தை கொண்டு செல்ல வேண்டிய தேவை உள்ளது. அதற்கான காலமும் உள்ளது.

தவறிழைத்தவர்கள் எவராயினும் சட்டம் ஒழுங்கு சரியாக நடத்தப்பட வேண்டும். என்றார். இந்நிகழ்வில் சபாநாயகர் கரு ஜயசூரிய எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் உள்ளிட்ட முக்கிஸ்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

http://epaper.virakesari.lk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.