Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில்.கனமழை – நீரேரிகளின் நீர்மட்டம் உயர்வு – மக்களை விழிப்பாக இருக்குமாறு எச்சரிக்கை

Featured Replies

யாழில்.கனமழை – நீரேரிகளின் நீர்மட்டம் உயர்வு – மக்களை விழிப்பாக இருக்குமாறு எச்சரிக்கை

யாழில் பெய்து வரும் கன மழை காரணமாக தொண்டமனாறு கடல் நீரேரியின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால் அதனைச் சூழவுள்ள கிராம மக்களை அவதானமாக இருக்குமாறு நீர்பாசனத் திணைக்களம் எச்சரிக்கைவிடுத்துள்ளது. யாழில்.கடந்த 24 மணிநேரமாக மழை பெய்து வருகின்றது. இந்த மழை தொடர்ந்து நீடிக்குமாயின் தொண்டமனாறு கடல் நீரேரியின் நீர் மட்டும் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகின்றது.

அதனால் கோப்பாய், அச்சுவேலி, புத்தூர், வாதரவத்தை மற்றும் மாண்டான் ஆகிய பகுதி மக்களை விழிப்பாக இருக்குமாறு வடக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் பொறியியலாளர் என். சுதாகரன் அறிவித்துள்ளார்.

அதேவேளை யாழ்ப்பாணம் – காரைநகர் வீதியில் கல்லுண்டாய் சந்தியிலிருந்து அராலி வடக்கு வரையான பகுதியில் வீதிக்கு மேலால் வெள்ளம் பாயும்நிலை ஏற்பட்டுள்ளது. வழுக்கை ஆறு வாய்க்காலின் நீர் மட்டம் அதிகரித்ததாலேயே இந்த நிலைக்கு காரணமெனத் தெரிவிக்கப்படுகின்றது.  அதேவேளை வழுக்கை ஆறு வாய்காலின் 10 வான் கதவுகளும் திறந்து விடப்பட்டு உள்ளன.

http://globaltamilnews.net/archives/49287

 

 

முல்­லைக் குளங்­க­ளின் நீர்­மட்­டம் அதி­க­ரிப்பு

 
 
முல்­லைக் குளங்­க­ளின் நீர்­மட்­டம் அதி­க­ரிப்பு
 
 

கடந்த ஒரு வார­மாகப் பெய்து வந்­துள்ள மழை­யைத் தொடர்ந்து முல்­லைத்­தீவு மாவட்­டத்­தின் சிறு­கு­ளங்­கள் மற்­றும் பெருங்­கு­ளங்­க­ளின் நீர் மட்­டம் அதி­க­ரித்­துள்­ளது.

அதன் அடிப்­ப­டை­யில் நேற்று வரை­யான புள்­ளி ­வி­வரங்­கள் நீர்­பா­சனத் திணைக்­க­ளங்­க­ளால் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன.
அத­ன­டிப்­ப­டை­யில் வவு­னிக்­கு­ளம் நீர்­பா­ச­னத் திணைக்­க­ ளத்­தின் கீழான குளங்­க­ளின் நீர்­மட்ட விவ­ரம்:

வவு­னிக்­கு­ளம் 13 அடி­யா­க­வும், தென்­னி­யன்­கு­ளம் 4 அடி 05 அங்குலம், ஜயன்­கு­ளம் 6 அடி 07 அங்­கு­ல­ம், அம்­ப­லப்­பெ­ரு­மாள் குளம் 3 அடி 06 அங்­கு­ல­ம், கல்­வி­ளான் குளம் 4 அடி 10 அங்­கு­ல­ம் மரு­தன்­கு­ளம் 7 அடி 10 அங்­கு­ல­ம், பளைய முறி­கண்­டிக் கு­ளம் 4 அடி 10 அங்­கு­ல­ம், கோட்­டை­கட்­டி­ய­கு­ளம் 7அடி­யா­க­வும், கொல்­ல­வி­ளாங்­கு­ளம் 6 அடி 11 அங்­கு­ல­ம், மல்­லா­விக்­கு­ளம் 7 அடி 07 அங்­கு­ல­ம், தேறாங்­கண்­டல் குளம் 9அடி 03 அங்­கு­ல­ம், பனங்­கா­மம் குளம் 4அடி 03 அங்­கு­ல­ம், அம்­ப­ல­வா­ணேஸ்­வ­ரர் குளம் 3 அடி 04 அங்­கு­ல­ம் உயர்­வ­டைந்­துள்­ளன.
கடந்த ஏழு நாள்க­ளில் வவு­னிக்­கு­ளத்­தில் 16 மில்­லி­மீற்­றர் மழை­வீழ்ச்சி அதி­க­ள­வாக பதி­வா­கி­யுள்­ள­தா­க­வும், ஐயன்­கு­ளத்­தில் 52 மில்­லி­மீற்­றர் மழை­வீழ்ச்­சி­யும், அம்­ப­லப்­பொ­ரு­மாள் குளத்­தில் 70 மில்­லி­மீற்­றர் மழை­வீழ்ச்சி பதி­வா­கி­யுள்­ள­தா­க­வும் புள்­ளி­ விவ­ரங்­கள் ஊடாக அறிய முடி­கின்­றது.இதனை விட முத்­து­ ஐ­யன் கட்டு நீர்­பா­ச­னத் திணைக்­க­ளத்­தின் கீழான குளங்­க­ளின் நீர்­மட்­ட­மும் உயர்­வ­டை­யத் தொடங்­கி­யுள்­ளன.

அதன் அடிப்­ப­டை­யில், முத்­து­ ஜ­யன் கட்டு குளத்­தில் 6 அடி­, உடை­யார் கட்­டுக் குளத்­தில் 15 அடி 02 அங்­கு­ல­மா­க­வும், விசு­வ­மடு குளத்­தில் 13 அடி 01 அங்­கு­ல­ம், கணுக்­கே­ணிக்­கு­ளம் 12 அடி 03 அங்­கு­ல­ம், மத­வா­ள­சிங்­கம் குளம் 11 அடி 09 அங்­கு­ல­ம், தண்­ணி­மு­றிப்பு குளம் 13 அடி 01 அங்­கு­ல­ம், மரு­த­மடு குளம் 14 அடி 03 அங்­கு­ல­ம், தட்­டை­யர்­மலை குளம் 8அடி 05 அங்­கு­ல­ம் உயர்­வ­டைந்­துள்­ளது.

அத்­து­டன் முத்து ஐயன் கட்­டுப்­ப­கு­தி­யில் 58.40 மில்­லி­மீற்­ற­ரும் கணுக்­கே­ணி­யில் 129 மில்­லி­மீற்­ற­ரும் உடை­யார் கட்­டில் 80 மில்­லி­மீற்­ற­ரும் தண்­ணி­மு­றிப்­புப் பகு­தி­யில் 130 மில்லி மீற்­ற­ரும் மாங்­கு­ளம் பகு­தி­யில் 56 மில்­லி­மீற்­ற­ரும் மழை­வீழ்ச்சி பதி­வா­கி­யுள்­ள­தாக தெரி­ய­வந்­துள்­ளது.
இந்த புள்­ளி­வி­வ­ரம் கடந்த 02 ஆம் தொடக்­கம் நேற்று வரை­யில் பதி­வா­கி­யுள்­ள­தன் அடிப்­ப­டை­யில் எடுக்­கப்­பட்­டது என்று அதில் தெரிவிக்கப்பட்டது.

http://newuthayan.com/story/45345.html

  • தொடங்கியவர்

யாழில் இன்று அதிகாலையிலிருந்து கடும் மழை! மேலும் நீடிக்கலாம் எனத் தெரிவிப்பு!!

 

யாழில் இன்று அதிகாலையிலிருந்து கடும் மழை! மேலும் நீடிக்கலாம் எனத் தெரிவிப்பு!!

யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதும் இன்று அதிகாலை ஆரம்பித்த மழை விடாது பொழிந்தவண்ணம் இருக்கின்றது. பெரு மழையாக இல்லாதுவிடினும் அடாத தூறல் மழை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளைப் பாதித்திருக்கின்றது என்றுதான் சொல்லமுடியும். இதனால் குடாநாட்டின் பல பிரதேசங்களும் இன்று மாலைவரை வெள்ளக்காடாக காணப்படுகின்றன.

23513556_1619263661465910_1382766697_n.jpg?oh=5dbc09e159d0542bdbe22dc951ec5b72&oe=5A07A35E

சில வீதிகளால் வெள்ளம் மேவிப் பாய்கின்றதோடு நெற் காணிகளில் மிதமிஞ்சிய வெள்ள நீர் தேங்கி நிற்பதையும் காணமுடிகிறது. 

இதேவேளை மாவட்டத்தின் தாழ் நிலங்களில் வசிக்கும் மக்களை, மழை வெள்ளம் வெகுவாகப் பாதித்திருக்கின்றது. வலிகாமத்தில் உடுவில், சண்டிலிப்பாய், சங்கானை, நல்லூர், கோப்பாய், யாழ்ப்பாணம், தெல்லிப்பழை போன்ற பிரதேச செயலர் பிரிவுகளிலும், வடமராட்சியில் பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவிலும், தென்மராட்சியில் சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவிலும், தீவகத்தில் வேலணைப் பிரதேச செயலர் பிரிவிலும் இம்முறை அதிக பாதிப்புக்கள் ஏற்பட்டிருக்கின்றன.

Image result for யாழ் மழை வெள்ளம் பாதிப்பு

குறித்த பகுதிகளைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை நாட்டின் பெரும்பாலான பாகங்களில் மழையுடனான காலநிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்திருக்கின்றது. குறிப்பாக வடக்கு கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அதிகமான மழைவீழ்ச்சியினை எதிர்பார்க்கமுடியும் என்று குறித்த திணைக்களம் வெளியிட்டுள்ள கால நிலைத் தரவுகளில் கூறப்பட்டுள்ளது.

மழை மேலும் நீடிக்கக்கூடிய நிலை காணப்படுவதால் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

2017/11/10 (இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம்)

https://news.ibctamil.com/ta/internal-affairs/heavy-rainfall-in-jaffna-nov10

  • தொடங்கியவர்

வெள்ளத்தால் தவிக்கும் மூளாய் கிழக்கு மக்கள் – உதவி கோருகின்றனர்

 
வெள்ளத்தால் தவிக்கும் மூளாய் கிழக்கு மக்கள் – உதவி கோருகின்றனர்
 

யாழ்ப்பாணம் குடாநாட்டில் தற்போது தொடர் மழை பெய்துவரும் நிலையில் தாழ் நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

வலி. மேற்கு ஜே/171 மூளாய் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட மூளாய் கிழக்கில் உள்ள 60 குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் அவர்கள் அருகில் உள்ள தேவாலயத்தில் தற்போது தங்கியுள்ளனர் என்று தெரிவித்தனர்.

IMG-407a6b27dfaac31982fb44b7a2f6bace-V-7IMG-709af67e496fd15b0a6d1593014277c6-V-7IMG-f0345dd21b31ce93b88e0d6834ec826a-V-eIMG-fe9431e60dda68d50dbb91a4ecce63bd-V-e

உடனடி உதவிகள் அங்குள்ள அமைப்பு ஒன்றால் செய்து தரப்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்ந்து மழை பெய்துவரும் நிலையில் நாளை தாங்கள் பெரும் நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் அவர்கள் அச்சம் தெரிவித்தனர்.

http://newuthayan.com/story/45601.html

  • தொடங்கியவர்
  • யாழ்ப்­பா­ண மாவட்­டத்­தில் கொட்­டும் மழை­யால் 9 ஆயி­ரம் பேர் பாதிப்பு
யாழ்ப்­பா­ண மாவட்­டத்­தில் கொட்­டும் மழை­யால் 9 ஆயி­ரம் பேர் பாதிப்பு
 
 

யாழ்ப்­பா­ண மாவட்­டத்­தில் கொட்­டும் மழை­யால் 9 ஆயி­ரம் பேர் பாதிப்பு

 

யாழ்ப்­பா­ண மாவட்­டத்­தில் தொட­ரும் அடை மழை­யால் 2 ஆயி­ரத்து 518 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 9 ஆயி­ரத்து 141 பேர் பாதிப்­ப­டைந்­துள்­ள­னர். 4 வீடு­கள் முழு­மை­யா­க­வும், 159 வீடு­கள் பகுதி அள­வி­லும் சேத­ம­டைந்­தன.

இவ்­வாறு யாழ்ப்­பாண மாவட்டச் செய­லர் நா.வேத­நா­ய­கன் தெரி­வித்­தார். இது தொடர்­பில் அவர் மேலும் தெரி­வித்­ததா­வது-:
மழை தொட­ரு­மாக இருந்­தால் தாழ் நிலப் பகுதி மக்­கள் இன்­னும் இடம்­பெ­யர வேண்­டிய நிலமை ஏற்­ப­டும்.

உடு­வில் பிர­தேச செய­லர் பிரி­வில் 106 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 385 பேரும், ஊர்­கா­வற்­று­றைப் பிர­தேச செய­லர் பிரி­வில் 40 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த137 பேரும், காரை­ந­கர் பிர­தேச செய­லர் பிரி­வில் 8 குடும்­பங் க­ளைச் சேர்ந்த 27 பேரும், யாழ்ப்­ பா­ணம் பிர­தேச செய­லர் பிரி­வில் 55 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 209 பேரு ம், நல்­லூர் பிர­தேச செய­லர் பிரி­வில் 146 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 552 பேரும், கோப்­பாய் பிர­தேச செய­லர் பிரி­வில் 249 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 893 பேரும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

சங்­கானை பிர­தேச செய­லர் பிரி­வில் 273 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த ஆயி­ரத்து 66 பேரும், சண்­டி­லிப்­பாய் பிர­தேச செய­லர் பிரி­வில் 128 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 444 பேரும், தெல்­லிப்­பழை பிர­தேச செய­லர் பிரி­வில் 393 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த ஆயி­ரத்து 253 பேரும், சாவ­கச்­சேரி பிர­தேச செய­லர் பிரி­வில் 189 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 759 பேரும், பருத்­தித்­து­றைப் பிர­தேச செய­லர் பிரி­வில் 283 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த ஆயி­ரத்து 45 பேரும், மரு­தங்­கேணி பிர­தேச செய­லர் பிரி­வில் 643 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 2 ஆயி­ரத்து 382 பேரும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­ள­னர்- என்­றார்.

http://newuthayan.com/story/45611.html

  • தொடங்கியவர்
 

வடக்­கில் மழை இன்­றும் தொட­ரும்

 
 

இரண்டு நாள்­கள் இடை­வெ­ளி­யின் பின்­னர் வடக்­கில் மீண்­டும் மழை நேற்­று­ம­தி­யம் தொடக்­கம் ஆரம்­பித்­துள்­ளது. இலங்­கை­யின் வட அரைப் பகு­தி­யில் இந்த மழை நாளை­யும் நீடிக்­கும் என்று வளி­மண்­ட­ல­வி­யல் திணைக்­க­ளம் தெரி­வித்­தது.

கடந்த வார­மும் இத்­த­கைய குழப்­பமே நில­வி­யது. இலங்­கை­யின் கிழக்கே தென்­மேற்கு வங்­கக்­க­ட­லில் ஏற்­பட்­டுள்ள வளி­மண்­டல குழப்­ப­நிலை கார­ண­மா­கவே மழை ஏற்­பட்­டுள்­ளது என்று யாழ்ப்­பா­ணம் திரு­நெல்­வே­லி­யி­லுள்ள வளி­மண்­ட­ல­வி­யல் திணைக்­கள பொறுப்­ப­தி­காரி ரி.பிர­தீ­பன் தெரி­வித்­தார்.

திணைக்­கள அறி­விப்­பின்­படி இன்று இரவு (நேற்று) தொடக்­கம் 36 மணித்­தி­யா­லங்­க­ளுக்கு அதா­வது நாளை ஞாயிற்­றுக் கி­ழமை வரை வடக்­கி­லுள்ள 5 மாவட்­டங்­க­ளி­லும் மழை நீடிக்­கும்.

முகில்­கூட்­டங்­க­ளும் காணப்­ப­டும். சில இடங்­க­ளில் 100 மில்­லி­மீற்­றர்­வரை மழை வீழ்ச்சி பதி­வா­கும். கடற்­ப­கு­தி­யில் 70 தொடக்­கம் 80 கிலோ­மீற்­றர்­வரை காற்று வீசக்­கூ­டும். மீன­வர்­கள் இத­னைக் கவ­னத்­தில் கொண்டு அவ­தா­ன­மா­கச் செயற்­ப­டு­மாறு அறி­வு­றுத்­தப்­ப­டு­கின்­ற­னர்.

வடக்­கில் நேற்­று­ம­தி­யம் தொடக்­கம் தொடர் மழை பெய்­துள்­ளது. நேற்­றுக்­காலை 8.30 தொடக்­கம் இரவு 8.30 வரை­யான நேரத்­தில் வளி­மண்­ட­ல­வி­யல் திணைக்­க­ளம் அமைந்­துள்ள யாழ்ப்­பா­ணம் திரு­நெல்­வே­லி­யில் 26.1 மில்­லி­மீற்­றர் மழை வீழ்ச்சி பதி­வா­கி­யுள்­ளது.

நேற்­று­முன்­தி­னம் மாலை 5.30 தொடக்­கம் நேற்­றுக்­காலை 8.30 வரை திரு­நெல்­வே­லி­யில் 53.5 மில்­லி­மீற்­றர் மழை­வீழ்ச்சி பதி­வா­கி­யுள்­ளது.

பருத்­தித்­து­றை­யில் 47.2 மில்­லி­மீற்­றர், அலம்­பில் 51.9, வல்­லி­பு­ரம் 45.3, கச்­சே­ரி­யடி 43.6, யாழ்ப்­பா­ணக் கோட்டை 37.2 மில்­லி­மீற்­றர் மழை வீழ்ச்சி பதி­வா­கி­யுள்­ளது – என்று அவர் மேலும் தெரி­வித்­தார்.

http://newuthayan.com/story/45626.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.