Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வியாழக்கிழமையன்று ஜனாதிபதியைச் சந்திப்பர்

Featured Replies

காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வியாழக்கிழமையன்று ஜனாதிபதியைச் சந்திப்பர்
 

image_80dc09ec3a.jpgஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, வியாழக்கிழமையன்று தாம் சந்திக்கவுள்ளனரென, காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். “குறித்த சந்திப்பில், எட்டு மாவட்டங்களையும் சேர்ந்த 31 பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர் என, கிளிநாச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கச் செயலாளர் எஸ். நாதன் தெரிவித்தார்.   

“கிளிநொச்சிக்கு, கடந்த மாதம் விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதியிடம் தனியாகச் சந்திப்பதற்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. குறித்த சந்திப்பின்போது பொருத்தமான திகதியை அறிவிப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்” என்றும் அவர் தெரிவித்தார்.  

“அதன்பிரகாரம், ஜனாதிபதியுடனான சந்திப்பை, ஜனாதிபதி செயலகம், எதிர்வரும் வியாழக்கிழமை ஏற்பாடு செய்துள்ளது. அந்த ஏற்பாடானது, வரவேற்கத்தக்கது” எனவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் தெரிவித்தது.   

“எம்மை அழைத்திருக்கின்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தம்முடைய பிரச்சினைக்கு, நல்லதொரு பதிலைத் தருவார் என்று, எதிர்பார்த்துள்ளோம்” என்றும் சங்கம் தெரிவித்தது.  

http://www.tamilmirror.lk/செய்திகள்/காணாமலாக்கப்பட்டவர்களின்-உறவினர்கள்-வியாழக்கிழமையன்று-ஜனாதிபதியைச்-சந்திப்பர்/175-207204

  • தொடங்கியவர்

 

காணாமல்போனவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்பதை, ஜனாதிபதியுடனான இன்றைய சந்திப்பு உணர்த்தியுள்ளதாக, காணாமல்போனவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

  • தொடங்கியவர்

காணா­மல்­போ­னோரின் உற­வி­னர்­க­ளி­ட­மி­ருந்து முறைப்­பா­டு­களை பெற புதிய விண்­ணப்­பப்ப­டி­வம்

p15-d3d66c7cbc304c508052206a06d56fb6b5e6245b.jpg

 

மாவட்ட செய­லா­ளர்­க­ளுக்கு சுற்­று­நி­ருபம் அனுப்ப ஜனா­தி­பதி நட­வ­டிக்கை

(ரொபட் அன்­டனி)

காணாமல் போனோரின் உற­வி­னர்­களின் முறைப்­பா­டுகள் மற்றும் கோரிக்­கை­கைளை சேக­ரிப்­ப­தற்கு புதிய விண்­ணப்­ப­ப்படி வம் ஒன்றை மாவட்ட செய­ல­கங்கள் ஊடாக  விநி­யோ­கிக்க நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உரிய அதி­கா­ரி­க­ளுக்கு ஆலோ­சனை வழங்­கி­யி­ருக்­கிறார். 

அத்­துடன் இந்த விண்­ணப்பப்ப­டிவம் ஊடாக அனைத்து தக­வல்­க ளையும் எதிர்­வரும் டிசம்பர் மாதம் 15ஆம் திக­திக்கு முன் னர் சேக­ரிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை எடுக்கு­மாறு மாவட்ட செய­லா­ளர்­க­ளுக்கு சுற்­று­நி­ருபம் ஒன்றை அனுப்­பு­வ­தற்கும் அறி­  வு­றுத்தல் வழங்­கி­யுள்ள ஜனா­தி­பதி, இவ்­வாறு கிடைக்­கப்­பெறும் முறைப்­பா­டுகள் தொடர்பில் காணா­மல்­போனோர்  அலு­வ­ல­கத்தில் ஆரா­யப்­படும் எனவும் குறிப்­பிட்­டுள்ளார். 

காணா­மல்­போ­னோரின் உற­வி­னர்கள் சிலர் நேற்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஜனா­தி­பதி செய­ல­கத்தில் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தினர். இதன்­போதே இந்த நட­வ­டிக்­கை­களை ஜனா­தி­பதி மேற்­கொள்­வ­தற்­கான அறி­வு­றுத்­தல்­களை வழங்­கினார்.

மேலும் காணா­மல்­போ­னோரின் உற­வி­னர்கள் இதன்­போது தமது பிரச்­சி­னைகள் மற்றும் கோரிக்­கைகள் தொடர்­பாக ஜனா­தி­ப­திக்கு எடுத்­து­ரைத்­தி­ருந்­தனர். அதற்கு பதி­ல­ளித்த ஜனா­தி­பதி, தான் நாட்டின் அனைத்து மக்­க­ளி­னதும் பிரச்­சி­னைகள் தொடர்­பாக போது­மான புரிந்­து­ணர்வை கொண்­டுள்­ள­தா­கவும் வௌிப்­படைத் தன்­மை­யு­டனும் நேர்­மை­யா­கவும் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­காண நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் எனவும் குறிப்­பிட்­டி­ருக்­கிறார்.

இதன்­போது அர­சாங்­கத்தின் சிறைக்­கூ­டங்­களில் தமது உற­வுகள் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­தாக காணா­மல்­போ­னோரின் உற­வி­னர்கள் ஜனா­தி­ப­தி­யிடம் தெரி­வித்­தனர். அதற்கு பதி­ல­ளித்த ஜனா­தி­தி­பதி , அவ்­வாறு ரக­சிய முகாம்கள் எதுவும் தற்­போ­தைய அர­சாங்­கத்தின் கீழ் இல்­லை­யெ­னவும், அவ்­வாறு எவறும் ரக­சி­ய­மாக தடுத்து வைக்­கப்­ப­ட­வில்லை எனவும் சுட்­டிக்­காட்­டினார். மேலும் காணா­மல்­போ­னோரின் உற­வி­னர்கள் எதிர்­கொள்ளும் பிரச்­சி­னை­க­ளுக்கு துரித தீர்­வைக்­காண தான் எதிர்­பார்ப்­ப­தா­கவும் ஜனா­தி­பதி இதன்­போது பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு உறு­தி­ய­ளித்­தி­ருக்­கிறார்.

இந்­த­நி­லை­யி­லேயே காணாமல் போனோரின் உற­வி­னர்­களின் முறைப்­பா­டுகள் மற்றும் கோரிக்­கை­கைளை சேக­ரிப்­ப­தற்கு புதிய விண்­ணப்­ப­டிவம் ஒன்றை மாவட்ட செய­ல­கங்கள் ஊடாக விநி­யோ­கிக்க நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு ஜனா­தி­பதி சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­க­ளுக்கு ஆலோ­சனை வழங்­கி­யி­ருக்­கிறார்.

இவ்­வாறு விநி­யோ­கிக்­கப்­படும் விண்­ணப்­ப­டி­வங்கள் ஊடாக கிடைக்­கப்­பெறும் தக­வல்கள், முறைப்­பா­டுகள், கோரிக்­கை­களை காணா­மல்­போனார் பற்­றிய அலு­வ­லகம் மற்றும் காணா­மல்­போனார் குறித்து ஆரா­ய­வுள்ள ஆணைக்­குழு ஊடாக விசா­ரிப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கு­மாறும் ஜனா­தி­பதி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியிருக்கிறார்.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் காணாமல்போனோரின் உறவினர்களிடமிருந்து குறித்த விண்ணப்படிவங்கள் ஊடாக முறைப்பாடுகளையும், கோரிக்கைகளையும் பெற்றுக்கொள்ளும் வகையில் மாவட்ட செயலாளர்களுக்கு சுற்று நிருபம் ஒன்றை உடனடியாக அனுப்பிவைக்குமாறும் ஜனாதிபதி இதன்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-11-17#page-1

  • கருத்துக்கள உறவுகள்
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஜனாதிபதியிடம் விடுத்த கோரிக்கை! Top News 
[Friday 2017-11-17 08:00]
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர். கொழும்பில், ஜனாதிபதி மாளிகையில் நேற்று காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுப்பட்டுள்ளனர்.இதன்போது, இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் சார்பாக கலந்து கொண்ட அவ்வமைப்பின் ஏற்பாட்டாளர் அ.அமலநாயகி தெரிவித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர். கொழும்பில், ஜனாதிபதி மாளிகையில் நேற்று காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுப்பட்டுள்ளனர்.இதன்போது, இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் சார்பாக கலந்து கொண்ட அவ்வமைப்பின் ஏற்பாட்டாளர் அ.அமலநாயகி தெரிவித்துள்ளார்.   

'எமது உறவுகளை தேடி, நாம் அஹிம்சை வழியில் மேற்கொள்ளும் போராட்டங்கள் அரச புலனாய்வு துறையினரால் கண்காணிக்கப்படுவதானது இன்னும் தொடர்கின்றது.இந்த செயற்பாடானது பாதிக்கப்பட்ட தரப்பினரை மேலும் பாதிப்படைய செய்கின்றது.

கைதுகள், வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் ஆகியவற்றுக்கு தகுந்த ஆதாரங்கள் காணப்பட்ட போதும் விசாரணைகள் தாமதமாவது ஏன்?

விசேட விசாரணை குழுக்கள் கடந்த காலத்தில் அமைக்கப்பட்ட போதும் அவர்களது விசாரணை பக்கச்சார்பாக காணப்பட்டமை நீதி தன்மையை கேள்விக்குறியாக்கி உள்ளது.

கடந்த 2000ஆம் ஆண்டு தொடக்கம் 2009 வரையான காலப்பகுதியில் 600க்கும் மேற்பட்ட எமது உறவுகள் வீடுகளில் உணவருந்தி கொண்டிருந்த போதும், வயல் மற்றும் தொழில் செய்யும் இடங்களிலும், ஏன் வீதியில் பயணம் செய்யும் போதும் மனைவி பிள்ளைகள் தாய் தகப்பன் நண்பர் உறவினர் முன்னிலையில் வலிந்து இழுத்துச்செல்லப்பட்டனர்.இவர்கள் ஆயுதக்குழுவுடன் எவ்வித தொடர்புமற்றவர்களாவர்.

வீட்டில் உணவருந்திக்கொண்டிருந்த போது வெள்ளை வானில் வந்த அதிரடிப்படை என இனங்காணப்பட்டோரால் இழுத்துச்செல்லப்பட்ட கணவனை தேடி, அதிரடிப்படை முகாமுக்கு மகனை அழைத்து சென்ற தாய், கணவனுடன் மகனையும் தொலைத்த நிலை எமது கண்ணீர் வரலாறுகளுக்கு உதாரணமாகும்.

எனவே, எமது உறவுகளின் இன்றைய நிலை தொடர்பான உண்மையானதும் நீதியானதும் விரைவானதுமான விசாரணை மேற்கொள்ளப்பட்டு, எமக்கு தகவலும் நீதியும் வழங்கப்படவேண்டும். எமது உறவுகள் எம்முடன் இணைக்கப்பட வேண்டும்.

மாறாக கடந்த காலங்களில், தமிழ் மக்களுக்கு எதிராக துணைப்படையுனருடன் இணைந்து இலங்கை அதிரடிப்படையினர், இராணுவத்தினர், புலனாய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்ட வன்செயல்களுக்குக்கான நீதி இதுவரை கிடைக்காத நிலையில், அண்மையில் இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகள் தொடர்பாக நீதி எமக்கு வழங்கப்படுமா? என்கின்ற கேள்வி எமக்குள் எழுகின்றது.

அத்துடன் கடந்த காலத்தில் நடைபெற்ற பின்வரும் சம்பவங்கள் தொடர்பாகவும் கருத்தில் எடுக்கப்பட வேண்டியதும் அவசியமாகும்.

1. 1990.08.09ஆம் திகதி அன்று புனானை மயிலம்கரச்சி என்னும் பகுதியில் 39 பேர் காணாமல் ஆக்கப்பட்டனர்.

2. 1990.02.08ம் திகதி மூன்று தடவைகள் சுற்றிவழைப்பு மேற்கொள்ளப்பட்டு சித்தாண்டி முருகன் கோவிலில் அகதிகளாக தஞ்சம் புகுந்து வாழ்ந்து வந்த 89ஆண்கள் இராணுவத்தினரால் கைது செய்ப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டனர்.

3. 1990.09.09ம் திகதி சத்துருக்கொண்டானில் சிறுவர்கள், பெண்கள், கற்பிணித்தாய்மார், முதியோர், வலதுகுறைந்தோர், ஆண்கள், யுவதிகள் 186 பேர் இராணுவத்தினரால் சுற்றிவழைப்பில் கைதுசெய்யப்பட்டு காணாமலாக்கப்பட்டனர்.

4. 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் வாகரையில் 11 பேர் காணாமல் செய்யப்பட்டனர்.

5. 1990.09.20ஆம் திகதி சவுக்கடியில் 67பேர் இராணுவத்தினரால் சுற்றுவளைப்பு மேற்கொள்ளப்பட்டு அவர்கள் அழைத்து செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டனர்.

6. கடந்த 1990.09.05 அன்று கிழக்கு பல்கலைக்கழகத்தில் அகதிகளாக இடடம் பெயர்ந்து தஞ்சம் புகுந்திருந்த மக்களை சுற்றி வளைத்து அதில் குறிப்பாக 158 இளம் வயது ஆண்களை வற்புறுத்தலில் கைதி செய்து கொண்டு சென்றனர்.

மேற்கூறப்பட்டவை சில உதாரணங்களே ஆகும். நாங்கள் பலதடவைகள் குரல் கொடுத்திருந்த போதும், எதிர்பார்க்கும்நீதி மற்றும் தங்களால் வழங்கப்பட்ட வாக்குறிதி எனபன இதுவரை காலமும் நிறைவேற்றவில்லை என்பதனை வேதனையுடன் சுட்டிக்காட்டுகின்றோம்.

ஆயினும் இனத்துவ ஒருமையை விரும்புவதாக தெரிவிக்கும் தாங்களது நல்லாட்சியில் இனிமேலும் பாகுபாடுகளை நாம் உணராதவாறு தங்களது உற்ற உறவாக எம்மை கருதி காலதாமதமின்றி எமக்கான நீதி கிடைக்க உதவுவீர்கள் என நம்புகின்றோம் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

maithri-missing-parents-171117-seithy.jpg
 
 
  • கருத்துக்கள உறவுகள்
காணாமல் போனோர் குறித்து புதிதாக விபரங்களை திரட்ட ஜனாதிபதி உத்தரவு! 
[Friday 2017-11-17 08:00]
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனாவுக்கும் காணாமல் போனோரின் குடும்ப உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.  தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகளை இதன்போது அவர்கள் ஜனாதிபதி அவர்களிடம் விரிவாக முன்வைத்தனர்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனாவுக்கும் காணாமல் போனோரின் குடும்ப உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகளை இதன்போது அவர்கள் ஜனாதிபதி அவர்களிடம் விரிவாக முன்வைத்தனர்.   

நாட்டின் அனைத்து மக்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும் போதிய புரிந்துணர்வினைத் தான் கொண்டிருப்பதாக இதன்போது குறிப்பிட்ட ஜனாதிபதி, வெளிப்படைத்தன்மையுடனும் நேர்மையாகவும் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்கு தமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகத் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் சிறைக்கூடங்களில் சிலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி , அத்தகைய இரகசிய தடுப்புமுகாம்கள் எதுவும் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் செயற்படவில்லை என்றும் அவ்வாறு எவரும் இரகசியமாகத் தடுத்து வைக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

காணாமல் போனோரின் உறவினர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான துரித தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க தான் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார். காணாமல் போனோரின் உறவினர்களின் முறைப்பாடுகள், கோரிக்கைகள் மற்றும் தகவல்களை சேகரிப்பதற்கான புதிய விண்ணப்பப்படிவம் ஒன்றினை மாவட்ட செயலாளரின் ஊடாக வழங்குவதற்கும் இதன் போது ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி , எதிர்வரும் டிசம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னர் குறித்த தகவல்களை சேகரிக்குமாறு சகல மாவட்ட செயலாளர்களுக்கும் சுற்றுநிருபம் ஒன்றினை அனுப்பி வைக்குமாறும் அறிவுறுத்தல் வழங்கினார்.

சேகரிக்கப்படும் தகவல்களை காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் மற்றும் காணாமல் போனோர் பற்றிய ஆணைக்குழுவின் ஊடாக மீண்டும் விசாரணை செய்யவும் அறிவுறுத்தல் வழங்கினார். ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெர்னாண்டோ, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வி. சிவஞானசோதி உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.http://www.seithy.com/breifNews.php?newsID=193999&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.