Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லிம் தலைவர்கள் பொதுபலவுடன் “டீல்”

Featured Replies

முஸ்லிம் தலைவர்கள் பொதுபலவுடன் “டீல்”
 

image_a5315c712e.jpg “பொதுபல சேனா, சமூகத்துக்கு எதிராக மேற்கொண்ட அனைத்துவிதமான எதிர் நடவடிக்கைகளையும் நாம் மன்னிக்கின்றோம், அதற்கு பிரதியுபகாரமாக, எங்களுக்கு எதிராக, போட்டிருக்கின்ற வழக்குகளை நீங்கள் வாபஸ்பெற வேண்டுமென்று, பொதுபல சேனாவுடன், முஸ்லிம் அரசியல் தலைவர்கள் பேரம் (டீல்) பேசுவதாக செய்திகள் வந்திருக்கின்றன” என்று, வடக்கு மாகாணசபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் தெரிவித்தார்.

ஆண்டியாப் புளியங்குளம் மக்கள் சந்திப்பொன்று வாழவைத்தகுளம் பொதுநோக்கு மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“இலங்கை முஸ்லிம் அரசியலை, வியாபாரமாகவே எமது முஸ்லிம் அரசியல் தலைவர்கள் நோக்குகின்றார்கள். முஸ்லிம்கள் வியாபாரிகளின், வியாபாரம் உன்னதமானது. அது நபிவழி வாழ்வாதாரமுமாகும். வியாபாரம் மக்களுக்குப் பயனுள்ளதாக, மக்களால் அங்கிகரிக்கப்பட்ட வியாபாரமாக இருக்க வேண்டும். ஆனால், இன்றைய இலங்கை முஸ்லிம் அரசியல் தலைவர்கள் அரசியலையும் வியாபாரமாகவே நோக்குகின்றார்கள்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

“அவ்வாறானவர்கள் ஒன்றை முதலீடு செய்து, அதனை பல மடங்கு இலாபமாகப் பெற்றுக்கொள்ளவே முயற்சிக்கின்றார்கள். எனவே, அத்தகைய வியாபாரிகளிடமிருந்து மக்கள் நலன் என்ற அரசியலின் உன்னத நோக்கத்தை எம்மால் எதிர்பார்க்க முடியாது. அவர்களை விமர்சிப்பதும், அவர்களைக் குறைகூறுவதும், அவர்கள் எமது மக்களின் நலன்களுக்காக உழைப்பார்கள் என்று எதிர்பார்ப்பதும் அர்த்தமற்றவையேயாகும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.  

“மறிச்சுக்கட்டி பிரதேசத்தின் எல்லைகள் தொடர்பில் ஒரு பிரச்சினை எழுந்தது. வர்த்தமானி அறிவித்தலின் மூலம் அதனைப் பாதுகாக்கப்பட்ட வனப்பிரதேசமாகப் ஜனாதிபதி பிரகடனம் செய்தார். அதற்கு முன்னமே வன்னியின் அரசியல் வியாபாரிக்கு எதிராக வில்பத்து சரணாலய காணிகளை அபகரிப்படுவதாக, வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.

“அதேபோன்று, மற்றுமொரு அரசியல் வியாபாரிக்கு எதிராகவும் கொழும்பில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த வழக்குகள் சிலவற்றை பொதுபலசேனா தாக்கல் செய்திருந்தது. இப்போது எமது அரசியல் தலைவர்கள் சிலர், பொதுபலசேனாவுடன் டீல் பேசுகின்றார்கள்.

“இப்படியாக பேரம் பேசுகின்ற தலைவர்கள், எமது மக்களின் நலனுக்காக அர்ப்பணத்தோடு செயலாற்றுவார்கள் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. இப்போது மீண்டும் மக்கள் சுயாதீனமாகத் தீர்மானமெடுக்கும் ஒரு சூழ்நிலை உள்ளூராட்சித் தேர்தல்கள் என்னும் வடிவத்தில் வரவிருக்கின்றது. அதனை மக்கள் சரியாகப் பயன்படுத்தவேண்டும்” என்றார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/முஸ்லிம்-தலைவர்கள்-பொதுபலவுடன்-டீல்/175-207272

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நவீனன் said:
முஸ்லிம் தலைவர்கள் பொதுபலவுடன் “டீல்”
 

 

என்ன இருந்தாலும் பேக் கெட்டிக்காரர். எங்க பிரட்டவேணுமன்று சரியாத்தெரிந்தவர்கள். எங்கடையள்................ கடையளாத்தான்................

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.