Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிந்தோட்டை பகுதிக்கு தொடர்ந்தும் பாதுகாப்பு : இனக்கலவரம் ஏற்பட்ட இடத்தில் பிரதமர்.!

Featured Replies

கிந்தோட்டை பகுதிக்கு தொடர்ந்தும் பாதுகாப்பு : இனக்கலவரம் ஏற்பட்ட இடத்தில் பிரதமர்.!

காலி, கிந்தோட்டை பிரதேசத்துக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க விஜயம் செய்துள்ளார்.

23718475_10208518414392586_142425537_n.j

நேற்று முன்தினம் கிந்தோட்டையில் குழப்பநிலை காரணமாக முஸ்லிம்களின் சொத்துக்களுக்கு பாரிய சேதம் ஏற்பட்டது.

அத்துடன் இரண்டு பள்ளிவாசல்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதுடன், பெற்றோல் குண்டு வீச்சுகளும் இதன்போது பயன்படுத்தப்பட்டிருந்தன.

23756183_10208518414432587_182368706_n.j

இந்த நிலையில் இன்று காலை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு நேரில் சென்று மக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

பிரதமரின் இந்த விஜயத்தின் போது அமைச்சர்களான வஜிர அபேவர்த்தன, சாகல ரத்நாயக்க ஆகியோரும் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.

23722106_10208518414352585_1346359608_n.

இதேவேளை, தற்போது குழப்பநிலை முழுமையாக குறைவடைந்துள்ள போதிலும், அப் பகுதிக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை அவ்வாறே வைத்திருக்குமாறு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணித்துள்ளதாக, சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார். 

23756061_10208518363031302_1882301356_n.

அத்துடன், மறு அறிவிப்பு வரை அப் பகுதிக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை விலக்கிக் கொள்ளவோ தளர்த்தவோ வேண்டாம் எனவும், அமைச்சர் பொலிஸ் மா அதிபருக்கு தெரியப்படுத்தியுள்ளார். 

மேலும், சமூக வலைத் தளங்களில் இந்த சம்பவம் தொடர்பான பொய்யான பிரச்சாரங்களை மேற்கொள்வதை நிறுத்துமாறும், அதுபோன்ற பொய்ப் பிரச்சாரங்களை நம்ப வேண்டாம் என்றும் அவர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

http://www.virakesari.lk/article/27234

நல்லாட்சிப் பயங்கரவாதத்தை முன்னெடுக்கும் ரணிலுக்கு யாழ் நூலகத்தை இவரது பயங்கரவாதக் கட்சி எரித்த போது ஏற்பட்ட சந்தோசத்தை இந்த விஜயம் மீண்டும் கொடுத்திருக்கும்.

  • தொடங்கியவர்

கிந்தோட்டை அசம்பாவிதம் : வன்முறையாளர்கள் தண்டிக்கப்படுவர்

11-19951a05e070b5ed19c89d2187abeb08512ca5ef.jpg

 

நேரில் சென்ற பிரதமர் அறிவிப்பு;கடும் நடவடிக்கைக்கும் உத்தரவு
 (எம்.எப்.எம்.பஸீர்)

கிந்­தோட்­டையில் கல­கத்தை தூண்டும் வண்­ணமும் வன்­மு­றை­யுடன் செயற்­பட்டும் சொத்­துக்­க­ளுக்கு சேதம் விளை­வித்த அத்­தனை பேருக்கும் எதி­ரா­கவும் தரா­தரம் பாராது சட்ட நட­வ­டிக்கை எடுக்­க­ப்படும் என பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்.

இது தொடர்பில் உரிய ஆலோ­ச­னை­களை பொலி­ஸா­ருக்கு வழங்­கி­யுள்­ள­தா­கவும்

  பிர­தமர் குறிப்­பிட்டார். கிந்­தோட்­டையில் சிங்­கள - முஸ்லிம் சமூ­கத்­த­வ­ரி­டையே ஏற்­பட்ட முறுகல் மற்றும் வன்­முறை தொடர்பில் ஆராய்­வ­தற்­காக நேற்று பகல் அங்கு விஷேட விஜயம் ஒன்­றினை முன்­னெ­டுத்த போதே, பாதிக்­கப்­பட்ட மக்­களை பார்­வை­யிட்டு பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க இந்த விட­யத்தை தெரி­வித்தார்.

இத­னி­டையே இந்த வன் முறைகள் தொடர்பில் உட­ன­டி­யாக தமக்கு பூரண அறிக்கை ஒன்­றினை அளிக்­கு­மாறு சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்­நா­யக்­க­வுக்கு பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க உத்­தர்­விட்­டுள்ளார். இந் நிலையில் குறித்த அறிக்­கையை மிக விரை­வாக தனக்கு வழங்­கு­மாறு பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­த­ர­வுக்கு அமைச்சர் சாகல ரத்­நா­யக்க ஆலோ­சனை வழங்­கி­யுள்ளார்.

நேற்று நண்­பகல் கிந்­தோட்டை பகு­திக்கு விஜயம் செய்த பிர­தமர் ரணில், வன்­மு­றை­களால் பாதிக்­கப்­பட்ட வர்த்­தக நிலை­யங்கள், வீடுகள் பல­வற்றை பார்­வை­யிட்டார். இதன்­போது சிங்­கள சமூக தரப்­பினர் சில­ரு­டனும் முஸ்­லிம்கள் மக்­க­ளு­டனும் பிர­தமர் கலந்­து­ரை­யா­டினார்.

உள்­நாட்­ட­லு­வல்கள் அமைச்சர் வஜிர அபே­வர்­தன, சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்­நா­யக்க, பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விஜே­பால ஹெட்டி ஆரச்சி ஆகி­யோரும் இதில் கலந்­து­கொண்­டி­ருந்­தனர்.

இதன்­போது பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க முதலில் விதா­ன­கொட பகு­தியில் தாக்­கு­த­லுக்கு உள்­ளான சிங்­க­ளவர் ஒரு­வரின் வீட்டை பார்­வை­யிட்டார். அதன் பின்னர் பேசிய அவர் ' நாம் அரசு என்ற ரீதியில் சட்டம் ஒழுங்கை பாது­காக்க நட­வ­டிக்கை எடுத்­துள்ளோம். அதன்­படி இந்த வன்­மு­றை­க­ளுடன் தொடர்­பு­டைய ஒரு தொகு­தி­யி­னரை கைது செய்­துள்ளோம். எமது கட்­சியைச் சேர்ந்த முன்னாள் பிர­தேச சபை உறுப்­பினர் ஒரு­வரும் இத­னுடன் தொடர்­பு­பட்­டுள்­ள­தாக பலர் கூறு­கின்­றனர். அவ்­வா­றா­ன­வர்­களும் கண்­டிப்­பாக தண்­டிக்­கப்­படல் வேண்டும்.

அதே போல் நாம் கிராம சேவ­கர்கள் ஊடாக வன்­மு­றை­க­ளினால் சேத­ம­டைந்த சொத்து விப­ரங்­களை திரட்டி, அது தொடர்பில் மதிப்­பீட்டை முன்­னெ­டுத்து நட்ட ஈட்­டினை பெற்­றுத்­த­ரவும் அரசு என்ற ரீதியில் நட­வ­டிக்கை எடுத்­துள்ளோம். தற்­போ­தைக்கு பொலிஸ் அறிக்கை இல்லை என்று யாரும் அச்­சப்­பட தேவை­யில்லை. முன்­னெ­டுக்­க­வேண்­டிய அனைத்து நட­வ­டிக்கை தொடர்­பிலும் உள் நாட்­ட­லு­வல்கள் அமைச்சர் வஜிர, சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாக­ல­வுக்கு நான் ஆலோ­சனை வழங்­கி­யுள்ளேன். தற்­போது எமக்கு அவ­சி­ய­மா­வது, இந்த வன்­முறை நிலை­மையை கட்­டுப்­ப­டுத்தி சுமுக நிலையை ஏற்­ப­டுத்­து­வ­தாகும். இந்த ஊரியில் இரு சமூ­கங்­களும் ஒன்­றாக சமா­தா­ன­மாக வாழ வேண்டும். அதற்­காக நாம் அவ­ச­ர­மாக தேவை­யான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­துள்ளோம். சக வாழ்வை ஏற்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுத்­துள்ள அதே சமயம் வெளியில் இருந்து வருவோர் இங்கு தாக்­கு­தல்­களை நடாத்­து­வதை தடுக்க நாம் பொலிஸ், பொலிஸ் விஷேட அதி­ர­டிப்­படை மற்றும் முப்­ப­டையின் பாது­காப்பை உறுதி செய்­துள்ளோம். ஊர­டங்கு சட்­டத்தை இந்த பகு­திக்கு மட்டும் தேவை ஏற்­படின் அமுல் செய்­யு­மாறு ஆலோ­சனை வழங்­கி­யுள்ளோம். என்றார்.

இத­னை­ய­டுத்து பிர­தமர் ரணில் மற்றும் அமைச்­சர்கள் முஸ்லிம் வீடொன்­றுக்கு சென்­றனர். இதன்­போது அவ்­வீட்டில் இருந்த அப்துல் வதூத் எனும் நபர், தசாப்த கால­மாக பிர­தே­சத்தில் சிங்­கள முஸ்லிம் மக்கள் ஒற்­று­மை­யாக வாழ்ந்­த­தா­கவும், சிறு விடயம் ஒன்­றுக்­காக வன்­மு­றைகள் கட்­ட­விழ்த்­து­வி­டப்­படும் நிலை­மையை கட்­டுப்­ப­டுத்தி தரு­மாறும் அவர் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­விடம் கோரினார்.

இதன்­போது மீண்டும் பேசிய பிர­தமர் ரணில், எதிர்­கா­லத்தில் இவ்­வா­றான எந்த ஒரு சம்­ப­வமும் இடம்­பெற அனு­ம­திக்­கப்­ப­ட­மாட்­டாது என உறு­தி­ய­ளித்தார். அத்­துடன் பாது­காப்பு பலப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் சொத்து இழப்­புக்­க­ளுக்கு நட்ட ஈடு வழங்­கப்­படும் எனவும் பிர­தமர் சுட்­டிக்­காட்­டினார்.

இதன்­போது கருத்து தெரி­வித்த அமைச்சர் சாகல ரத்நாயக்க,

 இந்த வன்முறையின் ஆரம்பத்தில் அதனைக் கட்டுப்படுத்த நாம் விஷேட அதிரடிப் படை மற்றும் பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்தினோம். அதனால் வன்முறை கட்டுப்படுத்தப்பட்டது. பின்னர் சுமுகமான சூழல் உருவாகி இருப்பதாக நம்பியே நாம் அதிரடிப் படையை மீளப் பெற்று ரோந்து பணிகளில் ஈடுபடுத்தினோம். இந் நிலையிலேயே இந்த கவலைக்குரிய சம்பவங்கள் பதிவாகின. இனிமேல் இவ்வாறு இடம்பெறாது. என்றார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-11-20#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.