Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பசியால் கதறும் குழந்தைகள் வீதியோரத்தில் தவிக்கும் மக்கள்

Featured Replies

நம்றி மாப்பு

20070313001.jpg

20070313002.jpg

20070313003.jpg

நன்றி லிசா. சில உண்மையான தமிழ் நேசிகளை இப்படித்தான் நான் கண்டு கொள்வது. பப்பாவில ஏறினா சிலபேருக்கு இருண்டது மாதிரி தெரியிறது. ஆனால் இந்த அவலச்சாவு வாழ்க்க்கை எல்லாம் என்னை புதுவிதமாக சிந்திக்க வைக்கின்றது. இப்ப ஒரு கொஞ்ச நேரத்துக்கு முன் அவுஸ்திரேலிய எம்பஸிக்கு அடிச்சு சண்டை பிடித்தேன். அவர்கள் சொல்லுகிறார்கள் அப்படி எனக்கு உதவி செய்ய முடியுமாயின் அங்க தகப்பன் அல்லது தாய் காணாமற்போய் அல்லது இரண்டு பேருமே இறந்து போய் பிள்ளைகள் நடுத்தெருவில நிற்கிற ஒவ்வொரு குடும்பத்தினை இங்க சிற்றிசன் இருப்பவர்கள் கூப்பிடலாமாம். அதற்குறிய தகவல்கள் எனது வீட்டு ஈமெயிலுக்கு போய் உள்ளது. எனக்குத்தெரிந்த ஒரு கைதடி யாழ்ப்பாண பிள்ளை ஒன்றை நான் ஸ்பொன்ஸர் பண்ணி பிளேன் செலவில் இருந்து அப்பிலிகேசன் லொட்ச் பண்ணி இங்க வந்தா என்னுடைய வீட்டிலேயே இருந்து 5 வருடத்திற்கான பொருப்பினை எடுக்கப்போகிறேன். அப்டி எல்லோரும் செய்யலாமாம். என்கே உங்களுக்கு தெரிந்த அவுஸ்திரேலிய ஆட்களுக்கு தெரியாமல் இருப்பவர்களுக்கு சொல்ல முடியுமாயின் சொல்லவும். கிட்டத்து உறவு தேவையில்லை. ஆனால் செலவு முழுக்க எடுத்து 5 வருடம் அவர்கள் செட்டில் ஆகுமட்டும் உதவி செய்யவேண்டும். இதுதான் கண்டிசன்.

என்னால் சைவன் சொன்னது போல செய்வதற்கு பொருளாதார வசதி இல்லை நான் படித்து கொண்டிருப்பதனால் அவ்வாறு செய்ய முடியவில்லை ஆனால் என்னால் இன்னும் 5 வருடத்துக்கு பிறகு செய்ய முடியும் ஆனால் அதுவரை என்னால் ஆன சிறிய உதவிகளை நிச்சயம் செய்வேன்

சனிக்கிழமை நாட்களில இங்க கனசனம் வீட்டுப்புல்லு வெட்ட ஆட்களைக்கூப்பிடுறவை. அதற்கு 30- 40 டொலர் கொடுப்பீனம். என்கட நேரத்தினை மிச்சம் புடிச்சு ஒரு குழுவாய் வேலை செய்யதா லீகலாக நாம் ஒரு ஸ்தாபணத்தினை உறுனாக்கி அதனூடாக் பலரை இங்கால கூப்பிடால்மல்லா? புல்லு வெட்டி திருநாவுக்கரசர் மாதிரி மக்களுக்காக தொண்டு செய்ய நான் ரெடி. ஒற்றுமையினால் ஏற்றத்தாள்வு பார்க்காது நாம் புகுந்து பல கிழீன் பண்ணுவது, பிள்ளைகளைப் படிப்பித்துவிடுவது. ஒயில் பெயிண்டிங் பழக்கி அதில் வரும் பணத்தினை பொதுவான சரிட்டி என்ற ஒருதருமே கைவைக்கமுடியாத எக்காவுன்ட் ல் போட்டால் அந்த வருமானபே போதும் ஒரு கொஸ்டல் நடத்த. எத்தனையோ பேர் இப்படியாக வீடுவீடாக சென்று கார் கழுவிவிட்டு, தோட்டம் துப்பரவாக்கி விட்டால் தமிழ்மக்கள் அள்ளி அள்ளி எறிவார்கள். எங்களுக்கு தகுதி பாக்கோணும் அவன் என்னைப்பிறகு மதிக்கமாட்டான் என்றா ஒன்றுமே செய்ய முடியாது. ஏனென்றால் அப்படி நினைப்பது எமது தாழ்வு மனப்பாண்மையால். நாங்கள் எங்களுக்காக செய்யாமல் யாரோ பெத்த பிள்ளைகளுக்கு தானே செய்யப்போரம். பெருமையாய்தான் இருக்கும்

நான் எழுதிக்கொன்டு இருக்கிற சமூகமும் சாதி அமைப்புகளும் என்ற மனிதனின் பொசிட்டீவான சிந்தனையுடன் அந்தக்கால்த்தில ஒரு சமூகதினை உறுதியாக வைத்திருக்கு எப்படி 4 வகையான் குழுவை அமைத்தார்களோ. அதனில் ஏற்பட்ட நெகடீவ் பக்கங்களை இங்கால் வரவிடாம ஒரு சமூகதினை காப்பாற்ற நாம் சேர்ந்து மக்களுக்குள் மக்களாக வேலை செய்தால் எந்த வல்லரசாலும் ஒரு மயிரையும் பிடுங்கமுடியாது. பிரச்சனை வந்தா ஒற்றுமையா அவைச்சுற்றிவளைத்தால் இன்னார் தான் லீட் என்று பிடிக்க முடியாது. ஏன் எண்டா இத் ஒரு கட்டமைப்பு எமது தமிழ என்ற இனம் அழிந்து போகாம இருக்க நாம் நமக்கே ஏற்படுத்திக்கொண்ட மற்றவனை தாக்கமாட்டாத ஒரு புதிய சிந்தனை. அதாவது எமது மக்கள் தொண்டர்கள் மற்ற நாட்டுக்காரர்களுக்கு ஒரு தொந்தரவும் செய்யாது வாழ்ந்து எமது கலாச்சாரம்.மத சுதந்திரம், பண்வலிமையிருந்தால் அடுத்தவருக்கு உதவுதல், ஒருவெருக்கொருவர் ஆதரவாக செயப்ப்டுதல் இதுகளினை பேணப்பார்க்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரி நீங்க சொன்ன கருத்து மிகவும் நடைமுறைச் சாத்தியமானது. ஆனால் நாங்கள் இந்த விடயத்திற் கெல்லாம் செவி சாய்க்க மாட்டோம். எங்களுடைய முக்கிய சிந்தனையெல்லாம் கோடை காலம் வருகிறது இந்தியாவில் இருந்து எந்த நடிகரை, பாடகரை யார் கூப்படுகினம், அல்லது விடுமுறையை கழிப்பதிற்க்கு எந்த நாட்டிற்கு போகலாம் இப்படி எவ்வளவோ பிரச்சினை எங்களுக்கு இருக்கு அதுக்கிலை வேறை நீங்க என்னவோ சொல்லுகிறீங்க..

சந்திரனில இறங்கமுடியும் என்று ஒருவர் அப்ப சொல்லேக்க சொன்னவரை சன்ம் ஒருமாதிரி பார்த்தவையாம். ஆனா அதன் பின்பு நடந்தவைகள் பொசிடீவ் சிந்தனைகளால் உலகத்தில் எதனையும் சாதிக்கலாம். நல்லதினையே நினைத்து முடியும் என்று மக்களை அணுகினால், அந்த பாரங்கல்லுகள் போல இருக்கும் கல்மனமும் நகரும் என்பது என் நம்பிக்கை. தண்ணியில ஓடுர கார் என்னால் செய்யமுடியும் என்று இப்ப நான் சொன்னா நீங்க ஒரு மாதிரி இப்ப யேசிக்கிறமாதிரி யோசிக்காது செய்யப்பார்ப்போம். ஒரு உயர்ந்த மரக்கொப்பில் இருப்பவன் அப்படியே இருக்கட்டும் நாம அவனைப்பார்த்து அவனிடம் போவோம். அப்படி கிட்ட கிட்ட போக அவன் எங்களை நோக்கி விரைந்து கீழேவருவது போல நாம் வீல் பண்ணுவம். ஆனா அவன் அப்படியே இருப்பான். ஆனா நீங்க மனோபலத்தில முன்னேறி அவனை மூக்கில விரலை வைக்கப்பண்ணலாம். அவனை சிந்திக்க வைக்கலாம்.

கண்ணீருடன் எழுதுகின்றேன். எம் உறவுகளின் மனக் கசிவையும் உதவிடும் ஆர்வத்தையும் கண்டு. நன்றி உறவுகளே. எனினும் உதவும் ஆர்வத்தில் தவறான கைகளில் எமது உதவிகள் சென்று சேராமல் பார்த்துக் கொள்வதும் நம் கடமை. பேச்சுடன் மட்டுமல்லாது செயலிலும் காட்டுங்கள் உங்கள் ஆதரவை. எமக்கு நாமே துணை . எம் கைளே எம் மக்களுக்கு உதவட்டும்.

ஈழத்திலிருந்து

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிந்த சில ஈழத்தமிழர்கள் இந்தியா, பாகிஸ்தான், பங்கள தேச நாடுகளில் உள்ள அனாதைப் பிள்ளைகளுக்கு உதவி செய்கிறார்கள். அவர்களிடம் ஈழத்துப்பிள்ளைகளுக்கு எங்களை விட்டால் வேறு இல்லை. ஈழத்துப்பிள்ளைகளுக்கு உதவி செய்யலாம் தானே என்று கேக்க, அதற்கு அவர்கள் 'தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தினால் அனுப்பப்படும் பணம் அப்பிள்ளைகளுக்கு உண்மையில் செல்கிறதா என்று கேக்கிறார்கள். ஆனால் இவர்கள் இந்தியா, பாகிஸ்தான், பங்களதேசத்தில் உள்ளவர்களை நம்புகிறார்கள். கோயில்கள் கட்டவும்,தேவாலயங்களுக்கு பண உதவி செய்து புண்ணியம் தேடலாம் என்று நினைப்பவர்களுக்கு கஸ்டப்பட்ட குழந்தைகளுக்கே உதவி செய்தால் அதை விட புண்ணியம் கிடைக்கும் என்று நினைப்பதில்லை. இறைவனைக் காண வேண்டும் என்று தமிழகக் கோவில்களுக்கும், புட்டபர்த்திக்கும், அன்னை வேளங்கண்ணி, லூட்சுக்கும் விமானத்தில் கணக்க காசு கொடுத்து போகிறவர்கள்' ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்' என்பது பற்றி யோசிப்பதில்லை.

சிட்னியில் சன் தொலைக்காட்சி பார்ப்பதற்கு ஈழத்தமிழர்கள் மாதம் மாதம் 44 வெள்ளிகள் கட்டுகிறார்கள். அத்தொலைக்காட்சியில் எங்களுக்கு ஆதரவான செய்திகளும் வருவதில்லை. ஆனால் ஒரு பிள்ளையினைப் பார்ப்பதற்காக தமிழர் புனர் வாழ்வுக்கழகம்(அவுஸ்திரெலியா) 30 வெள்ளிகள் மாதம் தேவை என்று கேக்கிறார்கள். ஜேசுதாசும் வந்து போய் விட்டார். ஜானகியும் இப்பொழுது தான் வந்து போனார். மண்டபம் நிறையச் சனம் இருந்து 50,70,100,150 வெள்ளிகள் கொடுத்து பார்த்து ரசித்து விட்டுப் போனார்கள். ஆனால் தாயக நிகழ்வு என்றால் அதற்கு கதை சொல்லுகிறார்கள். தமிழர் மருத்துவ நிதிக்கும் நிறையப் பணம் தேவைப்படுகிறது. ஆனால் சிட்னி முருகன் கோவிலுக்கு விசேட பூசைக்கு கொடுக்கும் பணத்தினை தமிழர் மருத்துவ நிதிக்கு வழங்கினால் பிரயோசனமாக இருக்கும் என்றால் அவர்களுக்கு புரிவதில்லை.

பணம் கொடுப்பதற்கு நேற்றே முடிவெடுத்துவிட்டோம் தோழரே. இந்த களத்தினில் வந்து போகும் 5- 6 பேருடன் ஒன்றும் ஆகப்போவதில்லை. எத்தனையோ மக்கள் சத்திய சாயி பாபா வுக்கென்று பயபக்தியோடு தம் காசுகளை( என் மனைவி உட்பட) போட்டு சில நல்ல நிகழ்ச்சிகலை( கைவிடப்பட்ட வயோதிபர் இல்லங்களுக்கு போய் அவர்களுக்கு ஆறுதலாக வேலை செய்வது) போல டி. ஆர். ஓ நார்சிங்கோமுகலை அமைத்து சமூகத்தொண்டுகளினை எப்பவோ செய்ய நினைச்சிருக்கோணும். எனியும் காலம் போகவில்லை.

சிட்னி முருகன் கோயில் முருகபக்தர்கள் தற்போது கோயிலைச்சுற்றி வேண்டிவைத்திருக்கும் 30 க்கு மேற்பட்ட வீடுகளில் ஒன்றினை விற்று இந்த சனங்களுக்கு கொடுக்க கோவில் நிர்வாகம் கருத்தில் எடுக்க வைக்க வேண்டும். இது நான் உள்ளாள எடுத்த தகவல். ஒரு வீடு 500K ற்கு ஈசியா குடுக்கல்லாமில்லையா? இதற்கு ஒரே வழி எனி டி. ஆர். ஒ தனிய மக்களிடம் போய் பண உதவி செய்ய கேட்pathu

Edited by saivan

  • தொடங்கியவர்

பசியால் துடித்து கதறியழும் குழந்தைகள், மயங்கி விழும் சிறுவர்கள் வீதியோரத்திலும் மரங்களின் கீழும் தவிக்கும் பல்லாயிரக்கணக்கானோர்

* தொண்டர் நிறுவன உதவி இதுவரையில்லை; அசிரத்தை காட்டுவதேன்?

மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெயர்ந்து அடிப்படைத் தேவைகளுக்காக ஏங்கித் தவிக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவிகள் எதுவும் சென்றடையவில்லையென கவலையும் விசனமும் தெரிவிக்கப்படுகிறது.

இதனை அரசாங்கமும், அரச உயர் அதிகாரிகளும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

கடந்த சில தினங்களாக இடம்பெயர்ந்துவரும் பல்லாயிரக் கணக்கான மக்கள் மர நிழல்களிலும் வீதியோரங்களிலும் தஞ்சமடைந்துள்ள நிலையில் கர்ப்பிணிப் பெண்கள் சிலர் வீதியோரங்களில் பிரசவித்துள்ளதாக அறிய வருகிறது.

பசியால் கதறியழும் குழந்தைகளின் எண்ணிக்கை பல இடங்களில் கேட்பதாகவும் சிறுவர்கள் சிலர் பசியால் மயங்கி விழுந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள அதேவேளை மற்றும் பல சிறுவர்கள் வீதியோர மரங்களில் உள்ள பழங்களை உண்டு பசியாறுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனை உள்ளூர் சமூக ஆர்வலர்கள் சிலர் `தினக்குரலுக்கு' உறுதிப்படுத்தியதுடன் வெளிநாட்டு, உள்நாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் வீதியால் வாகனங்களில் புழுதியைக் கிளப்பிக் கொண்டு செல்கின்றதேயன்றி இடர்படும் மக்களுக்கு எத்தகைய உதவிகளையும் இதுவரை வழங்கவில்லையெனவும் குற்றம் சாட்டினர்.

இதேவேளை, இடம்பெயர்ந்துள்ள மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து கொடுப்பதில் வெளிநாட்டு, உள்நாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் அசிரத்தையாக இருப்பது குறித்து மட்டக்களப்பு மாவட்ட அரச அதிகாரிகள் சிலரும், அரசின் முக்கிய அமைச்சரொருவரும் விசனம் தெரிவித்ததுடன் தமது கடும் கண்டனத்தையும் வெளியிட்டனர். எனினும், அரச சார்பற்ற நிறுவனங்கள் சிலவற்றிடம் இதுபற்றிக் கேட்ட போது, பல்லாயிரக் கணக்கான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். தினமும் ஆயிரக் கணக்கான மக்கள் இடம் பெயர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் இடம்பெயர்ந்தவர்களுக்கான அடிப்படைத் தேவைகளைப் பெற்றுக் கொடுப்பதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்கிறோம். ஏற்கனவே, இடம் பெயர்ந்தவர்களுக்கு பல வழிகளில் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இடம் பெயர்ந்தவர்கள் பற்றிய விபரங்கள் தற்போதும் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அவர்களுக்கு உதவிகள் சென்றடைவதில் சில தாமதங்கள் ஏற்பட்டுள்ளமை உண்மை என்றும் தெரிவித்தன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.