Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு முதலமைச்சருக்கும் முன்னணியினருக்குமிடையே இன்று காலை சந்திப்பு!

Featured Replies

வடக்கு முதலமைச்சருக்கும் முன்னணியினருக்குமிடையே இன்று காலை சந்திப்பு!

 

 

வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கும் இடையே இன்று காலை முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

வடக்கு மாகாண முதலமைச்சரின் இல்லத்தில் இன்று காலை 8.30 மணியளவில் ஆரம்பமான இந்தச் சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் இடம்பெற்றது. 

எனினும் சந்திப்புத் தொடர்பில் ஊடகங்களுக்கு தகவல் வழங்குவது இல்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, முதலமைச்சரின் தரப்பு இதுகுறித்த தகவலினை வழங்க மறுத்துவிட்டது. 

இந்தச் சந்திப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், உள்ளிட்ட 4 பேர் பங்கேற்றனர் என அந்தத் தரப்பு மேலும் தெரிவித்துள்ளது.

https://news.ibctamil.com/ta/internal-affairs/Vigneswaran-Gajendrakumar-secret-meeting

  • தொடங்கியவர்
’அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை’
 

-எஸ்.நிதர்ஷன்

“எனக்கும் மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமாருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பில் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை” என, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் இடையிலான சந்திப்பு, யாழிலுள்ள முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் நேற்று காலை 8 மணி தொடக்கம் 10 மணி வரை நீண்ட நடைபெற்றது.

இந்த சந்திப்பு தொடர்பாக, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“நாங்கள் அரசியல் ரீதியாக சேர்ந்திருக்காவிட்டாலும், கொள்கை ரீதியான விடயத்தில் நாங்கள் பல விடயங்களை ஆராய வேண்டிய நிலை இருக்கின்றது. இப்பொழுது அரசாங்கம் எடுத்துகொள்ளும் தீர்வு மக்களுக்கு போதுமானதாக இருக்காது எனவும் அது தொடர்பில் கரிசனை எடுக்கவேண்டும் எனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டிருந்தார்.

“நான் அது சம்பந்தமாக என்னால் முடிந்த வரை எல்லாவிதாமான நடவடிக்கைகளையும் எடுத்துக்கொண்டிருக்கின்றேன் என்று குறிப்பிட்டிருந்தேன்.

“ நாங்கள் அரசியல் ரீதியாக பேசவில்லை. அரசியல் ரீதியாக பேசுவதற்கும் ஒன்றுமில்லை. என்னென்றால் நான் மக்கள் அமைப்பின் தலைவர் என்ற ரீதியிலும் அவர் மக்கள் அமைப்பில் இருக்கும் அரசியல் கட்சியின் தலைவர் என்ற ரீதியிலும் கொள்கை ரீதியான ஒருமைப்பாடு சம்பந்தமான சில விடயங்களை பேசவே வந்தார்” என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் பேரவையின் ஆதரவுடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஈ.பி.ஆர்.எல் எவ் ஆகிய இரு கட்சிகளும் இணைந்து உள்ளூராட்சி தேர்தலை எதிர்கொள்ளப் போவாதாக அறிவித்திருந்த நிலையில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/அரசியல்-ரீதியாக-எதுவும்-பேசவில்லை/71-207900

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.