Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பகுதி பகுதியான தேர்தலுக்கு இடமில்லை ; ஐக்கிய தேசிய முன்னணி

Featured Replies

பகுதி பகுதியான தேர்தலுக்கு இடமில்லை ; ஐக்கிய தேசிய முன்னணி

 

 

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை பகுதி பகுதியாக நடத்துவதற்கு இடமளிக்க முடியாது. அனைத்து மன்றங்களுக்கும் ஒரேநாளி லேயே தேர்தல் நடத்தப்படவேண்டும். புதிய முறைமையில் சிக்கலாயின் சட்டத்திருத்தத்தின் மூலம் பழைய முறைமையை பின்பற்ற முடியும் இதுவே ஐக்கிய தேசிய  முன்னணியின் இறுதியான நிலைப்பாடாகும் என நேற்று மாலை அக்கட்சி  தீர்மானம் மேற்கொண்டுள்ளது.

ranil-wickramasinghe.jpg

இத் தீர்மானத்தினை முன்னணியின் தலைவர் பிரதமர்  ரணில் விக்கிரமசிங்க இன்று சனிக்கிழமை ஜனதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து திட்டவட்டமாக அறிவிக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.

பாராளுமன்றத்தில் நேற்று  வெள்ளிக்கிழமை கட்சித்தலைவர்கள் கூட்டம் இடம்பெற்றது. இதன் பின்னர் அவசரஅவசரமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டம் அலரிமாளிகையில் இடம்பெற்றது. இரவு எட்டுமணியளவில் ஆரம்பமான கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான கபீர் காசிம், பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச்செயலாளாரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியூதீன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் தொடர்பில் ஆராயப்பட்ட விடயங்கள் சம்பந்தமாக அவதானம் செலுத்தப்பட்டது. குறித்த கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் எவ்விதமான முடிவுகளும் எடுக்கப்பட்டிருக்காத நிலையிலும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் 133 மன்றங்களுக்கு தேர்தலை நடத்தமுடியும் என்று குறிப்பிட்ட கருத்து தொடர்பிலும் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்கள் ஆழமான கவனத்தினை செலுத்தியிருந்தனர்.

மேலும் தேர்தல் காலதமாதப்படுவதும், பகுதி பகுதியாக தேர்தலை நடத்துவதும் ஐக்கிய தேசிய முன்னணிக்கு பெரும் பாதகங்களையே ஏற்படுத்தும். ஆகவே உள்ளுராட்சி மன்றங்கள் அனைத்திற்கும் ஒரே தினத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அவ்வாறு புதிய முறைமையில் அனைத்து மன்றங்களுக்கும் ஒரே தினத்தில் தேர்தலை நடத்துவதில் சட்டச்சிக்கல்கள் நீடிக்குமாயின் புதிய முறைமையைக் கைவிட்டு பழைய முறைமையில் தேர்தலை நடத்த முடியும். இதற்காக பழைய தேர்தல் திருத்தச்சட்டத்தில் சிறு திருத்தமொன்றையே மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதனை காலதமதப்படுத்தாது மேற்கொள்ள முடியும் என்பதும்  இக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த பிரதிநிதிகளால் சுட்டிக்காட்டப்பட்டு ஆராயப்பட்டது. 

ஆதனடிப்படையில் ஐக்கிய தேசிய முன்னணியானது தேர்தல் தாமதப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பினை  வெளியிடுகின்றது என்றும் மேலும் காலதாமதமாவதனை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றும் அனைத்து மன்றங்களுக்கான தேர்தலும் ஒரே தினத்தில் நடத்துவதென்றும் புதியமுறைமையில் முடியாது விட்டால் பழைய முறைமையில் நடத்துவதறகு தயார் என்றும் ஏகோபித்த இணக்கத்தின் அடிப்படையில் தீர்மானம் எடுக்கப்பட்டது. 

மேலும் இத்தீர்மானத்தினை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடத்தில் நேரடியாக கூறுவார் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

இதேவேளை ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்கள் அனைவரும் கூட்டாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று சனிக்கிழமை சந்தித்து உள்ளூராட்சித் தேர்தலை உடன் நடத்துவதை வலியுறுத்தவுள்ளதோடு ஐ.தே.முன்னணியில் தாம் எடுத்த முடிவையும் ஜனாதிபதியிடத்தில் முன்வைத்து வலியுறுத்தவுள்ளதாக அமைச்சர் மனோகணேசன்  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/27472

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.