Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உறுப்பினர்களின் அசமந்தத்தால் மாகாண மூலதன நிதி கிடப்பில் 61 சதவீதமானது இன்னும் செலவு செய்யப்படவில்லை

Featured Replies

 

உறுப்பினர்களின் அசமந்தத்தால் மாகாண மூலதன நிதி கிடப்பில்

61 சதவீதமானது இன்னும் செலவு செய்யப்படவில்லை

நடப்பு வரு­டத்­தில் வடக்கு மாகா­ண­சபை உறுப்­பி­னர்­க­க­ளின் பிர­மாண அடிப்­ப­டை­யி­லான மூல­தன நன்­கொடை நிதி­யில் மேற்­கொள்ள சமர்ப்­பித்த வேலைத்­திட்­டங்­கள் இழுத்­த­டிப்பு நிலை­யில் காணப்­ப­டு­வ­தாக மாகாண பேர­வைச்­செ­ய­ல­கம் தெரி­வித்­துள்­ளது.

தக­வல் அறி­யும் உரி­மைச் சட்­டத்­தின் ஊடாக நடப்பு வரு­டத்­தில் மேற்­கொள்­ளப்­ப­டும் திட்­டங்­கள் பற்­றிய விவ­ரங்­களை கேட்­ட­போதே இவ்­வாறு பதி­ல­ளிக்­கப்­பட்டது.

அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­ட­தா­வது:
வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர்­கள் ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் நடப்பு வரு­டத்­தில் பிர­மாண அடிப்­ப­டை­யி­லான மூல­தன நன்­கொடை நிதி­யாக தலா 6 மில்­லி­யன் ரூபா வழங்­கப்­பட்­டது. அந்த நிதி­யில் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்ள திட்­டங்­க­ளுக் கான அறிக்­கை­யை அவர்­கள் முன்­வைத்­தி­ருந்­தா­ரக்ள்.

அதன் படி 2ஆயி­ரத்து 390 திட்­டங்­களை முன்­வைக்­கப்­பட்­டன. ஆனால் அந்த வேலை­கள் யாவும் நடப்பு வரு­டத்­தில் மேற்­கொள்­ளப்­பட வேண்­டி­யவை. வரு­டம் நிறை­வ­டை­வ­தற்கு ஒரு மாத காலம் மட்­டுமே எஞ்­சி­யுள்ள நிலை­யில் இது­வரை 925 திட்­டங்­கள் மாத்­தி­ரமே முழுமை பெற்­றுள்­ளன.

அதா­வது 39 வீத­மா­ன­வையே முழுமை பெற்­றுள்­ளது. திட்­டங்­களைக் கால­தா­ம­த­மின்றிச் சமர்ப்­பி­யுங்­கள், வேலை­களை முன்­னெ­டுங்­கள் என்று தெரி­விக்­கப்­பட்ட போதும் அனை­வ­ரின் முன்­திட்ட முன்­மொ­ழி­வு­ க­ளும் ஒக்­டோ­பர் மாதமே கிடைத்­தது.
வடக்கு மாகா­ணத்­தில் 17 திணைக்­க­ளங்­க­ளுக்கு மொத்த நிதி ஒதுக்­கீ­டாக நடப்பு வரு­டத்­தில் ரூ 198 மில்­லி­யன் வழங்­கப்­பட்­டது.

 

சபை உறுப்­பி­னர்­கள் இதற்­கான வேலை­களை குறித்த திணைக்­க­ளங்­கள் ஊடாக மேற்­கொள்­ளு­வ­தற்கு அறிக்கை சமர்ப்பித்­தி­ருந்­தார்­கள்.

அதன்­படி உள்­ளு­ராட்­சித் திணைக்­க­ளம் 397 வேலைத்­திட்­டத்­தில் 243 வேலை­கள், கலா­சா­ரத் திணைக்­க­ளம் 291 வேலைத்­திட்­டத்­தில் 97 வேலை­கள், தொழில்­து­றைத் திணைக்­க­ளம் 173 வேலைத்­திட்­டத்­தில் 17 வேலை­கள், கூட்­டு­றவு அபி­வி­ருத்­தித் திணைக்­க­ளம் 34 வேலைத்­திட்­டத்­தில் 22 வேலை­கள், கால்­நடை உற்­பத்தி சுகா­தா­ரத் திணைக்­க­ளம் 191 வேலைத்­திட்­டத்­தில் 63 வேலை­கள், கல்­வித் திணைக்­க­ளம் 502 வேலைத்­திட்­டத்­தில் 187 வேலை­கள், விளை­யாட்­டுத் திணைக்­க­ளம் 216 வேலைத்­திட்­டத்­தில் 62 வேலை­கள், கிராம அபி­வி­ருத்­தித் திணைக்­க­ளம் 159 வேலைத்­திட்­டத்­தில் 89 வேலை­கள், சுகா­தா­ரத் திணைக்­க­ளம் 30 வேலைத்­திட்­டத்­தில் 4 வேலை­கள், விவ­சா­யத் திணைக்­க­ளம் 62 வேலைத்­திட்­டத்­தில் 38 வேலை­கள், சுதேச மருத்­து­வத் திணைக்­க­ளம் 5 வேலைத்­திட்­டத்­தில் 5 வேலை­கள், நீர்ப்­பா­ச­னத் திணைக்­க­ளம் 2 வேலைத்­திட்­டத்­தில் 1 வேலை, சமூக சேவை­கள் திணைக்­க­ளம் 153 வேலைத்­திட்­டத்­தில் 30 வேலை­கள், சிறு­வர் நன்­ன­டத்­தைத் திணைக்­க­ளம் 2 வேலைத்­திட்­டத்­தில் 0 வேலை­கள், பேர­வைச் செய­ல­கம் 1 வேலைத்­திட்­டத்­தில் 0 வேலை­கள் என்­ப­னவே தற்­போது நிறை­வ­டைந்துள்­ளன.

 

இது பற்றி பேர­வைச் செய­ல­கம் தெரி­வித்­த­தா­வது:
ஒதுக்­கப்­பட்ட நிதி­யில் முன்­மொ­ழி­வு­ களைச் சமர்ப்­பித்து வேலைத் திட்­டங்­களை ஆரம்­பி­யுங்­கள் என்று தெரி­வித்­தா­லும் வருட இறு­தி­வரை வேலைத்­திட்­டங்­களை இழுத்­த­டிப்பு செய்­வது வழமை. பொருள்­கள் கொள்­வ­னவு, திட்ட அறிக்­கை­யில் மாற்­றம் போன்ற கார­ணத்­தி­னால் வேலைத்­திட்­டங்­கள் தாம­தம் ஆகி­னா­லும், வருட ஆரம்­பத்­தில் நிதி ஒதுக்­கீடு கிடைக்­கும். வேலை­களை அப்­போது ஆரம்­பித்­தால் வேலை­கள் தாம­தம் ஆகாது. கணக்கு அறிக்கை சமர்­பிப்­ப­தில் எமக்­கும் சிக்­கல் இருக்­காது–என்று தெரி­விக்­கப்­பட்­டது.

http://newuthayan.com/story/50437.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.