Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரன் : ஆட்டிப்படைக்கும் ஆளுமை.!

Featured Replies

பிரபாகரன் : ஆட்டிப்படைக்கும் ஆளுமை.!

thumb_large_velupillai_prabhakaran_birthday.jpg

விடு­தலைப் புலி­களின் தலைவர் வேலுப்­பிள்ளை பிர­பா­க­ரனின் 63 ஆவது பிறந்த நாள் இன்று.  இத்­த­கைய நிலையில், கடந்த 18ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்தில் அமைச்­சரும் பீல்ட் மார்­ஷ­லு­மான சரத் பொன்­சேகா உரை­யாற்­றிய போது, வேலுப்­பிள்ளை பிர­பா­க­ர­னையும் தொட்டுச் சென்­றி­ருந்தார். அவ­ரது உரையின் முக்­கி­ய­மான பகுதி அது. 

“பிர­பா­க­ர­னிடம் தான், நாங்கள் போரைக் கற்றுக் கொண்டோம், பிர­பா­கரன் உரு­வா­கி­யதால் தான், பீல்ட் மார்ஷல் ஒரு­வரும் உரு­வானார்” என்று அவர் கூறி­யி­ருந்தார்.

2011ஆம் ஆண்டு ஒஸ்­லோவில் நடந்த ஒரு நிகழ்வில் உரை­யாற்­றிய, நோர்­வேயின், இலங்­கைக்­கான முன்னாள் சமா­தானத் தூதுவர் எரிக் சொல்­ஹெய்மும், அமெ­ரிக்­காவின் முன்னாள் உதவி இரா­ஜாங்கச் செயலர் ரிச்சர்ட் ஆர்­மி­ரேஜூம், விடு­தலைப் புலி­களின் தலைவர் பிர­பா­க­ரனை ஒரு சிறந்த போரியல் வல்­லுனர் – இரா­ணுவ மேதை என்று குறிப்­பிட்­டி­ருந்­தனர்.

ஆனாலும், பிர­பா­க­ரனின் அர­சியல், இரா­ஜ­தந்­திர ஆளு­மையை அவர்கள் அந்­த­ள­வுக்கு சிறப்­பாக மதிப்­பிட்­டி­ருக்­க­வில்லை.  எனினும், விடு­தலைப் புலி­களின் தலைவர் பிர­பா­க­ரனின், போரியல் ஆளுமை என்­பது, எவ­ராலும் குறைத்து மதிப்­பிட முடி­யாத ஒன்­றா­கவே இருந்­தது என்­பதில் மாற்றுக் கருத்­துக்கு இட­மில்லை.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா ஒன்றும் பிர­பா­க­ர­னுக்கு புக­ழாரம் சூட்­டு­வ­தற்­காக, பாரா­ளு­மன்­றத்தில் அந்தக் கருத்தைக் கூறி­யி­ருக்­க­வில்லை. அது பிர­பா­க­ரனின் போரியல் ஆளு­மையை வெளிப்­ப­டுத்தும், அங்­கீ­க­ரிக்கும் கருத்து என்­பதில் சந்­தே­க­மில்லை.

இன்று இலங்­கையின் முப்­ப­டை­களும் அதி­ந­வீன ஆயு­தங்கள், போர்த்­த­ள­வா­டங்­க­ளுடன் இருக்­கின்­றன என்றால், மூன்று இலட்சம் படை­யி­னரைக் கொண்­ட­தாக விளங்­கு­கி­றது என்றால், அதற்கு ஒரே காரணம் பிர­பா­கரன் தான்.

அதனால் தான், பிர­பா­க­ர­னிடம் தான் நாங்கள் போரைக் கற்றோம் என்று சரத் பொன்­சேகா கூறி­யி­ருந்தார்.

போர் தொடங்­கிய போது, வெறும் 10 ஆயிரம் படை­யி­னரே இலங்­கையில் இருந்­தனர். அப்­போது எந்த நவீன போர்த் தள­வா­டங்­களும் படை­யி­ன­ரிடம் கிடை­யாது. போருக்­கான ஆயத்­த­நி­லையும் இல்லை.

இருந்­தாலும், மர­புசார் பயிற்­சி­களைப் பெற்ற ஓர் இரா­ணுவம் இருந்­தது. அதனை எதிர்­கொண்டு தான் பிர­பா­கரன் தனது போர் ஆற்­றலை வளர்த்துக் கொண்டார்.

பிர­பா­கரன் எங்கும் போர்க்­க­லையைக் கற்­க­வில்லை. எந்த நாட்­டி­டமும் பயிற்­சி­களைப் பெற­வில்லை. ஆனாலும், பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சே­காவே, பிர­பா­க­ர­னிடம் தான் போரைக் கற்றுக் கொண்டோம் என்று கூறும் அள­வுக்கு அவ­ரது போர் ஆளுமை அமைந்­தி­ருந்­தது.

இலங்கை இரா­ணுவம் இப்­போது, உலகில் கவ­னிக்­கத்­தக்க ஓர் இரா­ணு­வ­மாக இருக்­கி­றது என்றால்,  இலங்கை இரா­ணு­வத்­திடம் போர் அனு­ப­வங்­க­ளையும் நுட்­பங்­க­ளையும் கற்­றுக்­கொள்ள பல நாடுகள் முற்­ப­டு­கின்­றன என்றால், அதற்கு ஒரே காரணம், பிர­பா­க­ரனின் போர் ஆளுமை மட்டும் தான்.

அந்த ஆளு­மையைத் தோற்­க­டித்த ஒரே கார­ணத்­தினால் தான், இலங்கை இரா­ணு­வத்­துக்கு இந்த மவுசும் மதிப்பும் கிடைத்­தது. வெளி­யு­லக ஆத­ரவு இல்­லாமல் ஒரு படைக்­கட்­ட­மைப்பை உரு­வாக்கி, சர்­வ­தே­சத்தைத் திரும்பிப் பார்க்க வைக்கும் அள­வுக்கு அதனைக் கட்­டி­யெ­ழுப்­பி­யி­ருந்தார் பிர­பா­கரன். பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­றிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா, போர் தொடங்கும் போது, வெறும் 10 ஆயிரம் படை­யினர் தான் இருந்­தனர். இப்­போ­துள்ள 3 இலட்சம் படை­யினர் இருந்­தி­ருந்தால், இரண்டு ஆண்­டு­களில் போரை முடி­வுக்குக் கொண்டு வந்­தி­ருப்போம் என்று கூறி­யி­ருக்­கிறார்.

இலங்கை இரா­ணு­வத்­துடன் போரைத் தொடங்­கிய போது, விடு­தலைப் புலி­களும் ஒன்றும் ஆயி­ரக்­க­ணக்­கான போரா­ளி­க­ளையோ, மிகப்­பெ­ரிய ஆயுத தள­வா­டங்­க­ளையோ, நவீன போர்க்­க­ரு­வி­க­ளையோ, சண்­டைப்­ப­ட­குகள், விமா­னங்­க­ளையோ கொண்­டி­ருக்­க­வில்லை.

ஐந்து பத்துப் பேரில் இருந்து தான், இரா­ணு­வத்­துக்கு எதி­ரான போர் புலி­களால் தொடங்­கப்­பட்­டது. குறைந்­த­ளவு போரா­ளி­களே இருந்­தாலும், இரா­ணு­வத்தின் செறிவு குறை­வாக இருந்­தமை, புலி­க­ளுக்குச் சாத­க­மாக இருந்­தி­ருக்­கலாம்.

அதனால் தான், இப்­போ­துள்ள படை­ப் பலம் இருந்­தி­ருந்தால் இரண்டு ஆண்­டு­களில் போரை முடித்­தி­ருக்­கலாம் என்று சரத் பொன்­சேகா கூறி­யி­ருக்­கிறார்.

எனினும், படை­பலம் மாத்­தி­ரமே, விடு­தலைப் புலி­க­ளுக்கு எதி­ரான போரை வெற்­றி­கொள்­வ­தற்கு சாத­க­மான அம்­ச­மாக இருந்­தது என்ற கருத்து ஏற்­பு­டை­ய­தல்ல. மூன்­றா­வது கட்ட ஈழப்­போரில் கூட, இரண்டு இலட்சம் படை­யி­ன­ருடன் தான் அர­சாங்கம் இருந்­தது.

ஆனாலும் புலி­களை அப்­போது தோற்­க­டிப்­ப­தற்­கான சூழலும், உத்­தி­களும் வாய்க்­க­வில்லை.

பிர­பா­க­ர­னிடம் இருந்து போரிடும் முறை­களை மாத்­திரம் இரா­ணுவம் கற்றுக் கொள்­ள­வில்லை. பல ஆயு­தங்­களின் அறி­மு­கமும்  கூட இரா­ணு­வத்­துக்கு புலி­களால் தான் கிடைத்­தி­ருந்­தது.

1985ஆம் ஆண்டு ஜன­வரி 9ஆம் திகதி, அச்­சு­வே­லியில் புலி­களின் முகாம் ஒன்றை இரா­ணு­வத்­தினர் சுற்­றி­வ­ளைத்­தனர். அது ஓர் ஆயுதக் களஞ்­சி­ய­மா­கவும் விளங்­கி­யது. அங்­கி­ருந்து தான், ஆர்.பி.ஜி என்ற ரொக்கட் லோஞ்சர் முதன்­மு­த­லாக இரா­ணு­வத்தின் கையில் கிடைத்­தது.

அதற்குப் பின்னர் அதே ஆர்.பி.ஜிகளை பெரு­ம­ளவில் இரா­ணுவம் வாங்கிக் குவித்­தது. அது­போல பல ஆயுத தள­வா­டங்­களை விடு­தலைப் புலிகள் போரில் அறி­மு­கப்­ப­டுத்­திய பின்­னரே, இரா­ணு­வத்­தினர் அதனை வாங்க முயன்­றனர்.

சாம் எனப்­படும் விமான எதிர்ப்பு ஏவு­க­ணை­க­ளையும் விடு­தலைப் புலி­க­ளுக்குப் பின்னர் தான் விமா­னப்­படை வாங்­கி­யது. பல்­குழல் பீரங்­கி­க­ளையும் விடு­தலைப் புலிகள் தான் முதன் முதலில் இலங்­கையில் பயன்­ப­டுத்தத் தொடங்­கினர்.

          

1999ஆம் ஆண்டு தொடக்­கத்தில் தள்­ளாடி படைத்­தளம் மீதான தாக்­கு­தலில் புலிகள் 12 குழல்­களைக் கொண்ட பல்­குழல் பீரங்­கியை பயன்­ப­டுத்­தி­யி­ருந்­தனர்.

2000ஆம் ஆண்டு யாழ்ப்­பாணக் குடா­நாட்­டுக்குள் புலிகள் நுழைந்த போது தான் இரா­ணுவம் பல்­குழல் பீரங்­கி­களை வாங்­கி­யது.

இப்­படி போரில் பல ஆயு­தங்­களை இரா­ணு­வத்­துக்கு அறி­மு­கப்­ப­டுத்­தி­ய­வரே பிர­பா­கரன் தான். 

ஆயுத தள­பா­டங்­களை மாத்­தி­ர­மன்றி, பல போர் உத்­தி­க­ளையும் பிர­பா­க­ர­னிடம் இருந்தே, இலங்கை இரா­ணுவம் பெற்றுக் கொண்­டி­ருக்­கி­றது. 

விடு­தலைப் புலி­களைத் தோற்­க­டித்த- நான்­கா­வது கட்ட ஈழப்­போரில் இலங்கை இரா­ணுவம் பயன்­ப­டுத்­திய பெரும்­பா­லான உத்­திகள் விடு­தலைப் புலி­க­ளிடம் இருந்து கற்றுக் கொண்­டவை தான்.

பின்­தளப் பகுதி வரை ஊடு­ருவிச் சென்று நிலை­யெ­டுத்த பின்னர் தாக்­கு­தல்­களைத் தொடுப்­பது, சிறிய கெரில்லா அணி­க­ளாக இரா­ணு­வத்தைப் பிரித்து சண்­டையில் ஈடு­ப­டுத்­தி­யது என்­பன அதில் முக்­கி­ய­மா­னது.

பரந்­து­பட்ட பிர­தே­சத்தில் கிட்­டத்­தட்ட கெரில்லா பாணி­யி­லான  ஒரு அரங்­கையும், மர­பு­வ­ழி­யி­லான ஒரு அரங்­கையும் சம­நே­ரத்தில் திறந்து விட்­டி­ருந்­தது இரா­ணுவம். பிர­பா­க­ரனின் கெரில்லா போர் உத்­தி­க­ளையே இங்கு இரா­ணுவம் பயன்­ப­டுத்­தி­யது.

அதனை எதிர்­கொள்­வ­தற்கு விடு­தலைப் புலிகள் சிர­மப்­பட்­டார்கள். அது தனியே போர் உத்­தி­யுடன் தொடர்­பு­டைய பிரச்­சி­னை­யாக மாத்­திரம் இருக்­க­வில்லை.

இரா­ணு­வத்­திடம் கிடைத்­தி­ருந்த நவீன கண்­கா­ணிப்பு வச­திகள், ஆயுத விநி­யோ­கங்கள் முடக்­கப்­பட்­டமை, மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட ஆளணி, இரா­ணு­வத்தின் ஆட்­பலப் பெருக்கம் போன்ற, இரா­ணு­வத்தின் உத்­திக்கு எதி­ரான வியூ­கங்­களை வகுப்­ப­தற்குப் புலி­க­ளுக்குப் போதிய அவ­கா­சத்தைக் கொடுத்­தி­ருக்­க­வில்லை.

அது புலி­களின் தோல்­விக்குக் கார­ண­மா­கி­யது.

எவ்­வா­றா­யினும், போர் முடிந்து எட்டு ஆண்­டு­க­ளுக்குப் பின்னர், பிர­பா­க­ர­னிடம் தான் போரைக் கற்­றுக்­கொண்டோம் என்ற உண்­மையை பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா ஒப்புக் கொண்­டி­ருக்­கிறார்.

பிர­பா­கரன் என்ற இரா­ணுவ ஆளுமை இல்­லாமல் போயி­ருந்தால் இலங்கை வர­லாற்றில் ஒரு பீல்ட் மார்­ஷலோ, சரத் பொன்­சேகா போன்ற பல நட்­சத்­திர நிலைத் தள­ப­தி­களோ உரு­வா­கி­யி­ருக்க முடி­யாது.

குறைந்த ஆளணிப் பலத்­தையும், மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட ஆயுத பலத்­தையும் வைத்துக் கொண்டு, ஒரு நாட்டின் இரா­ணு­வத்­துக்கே, போரைக் கற்­றுக்­கொ­டுக்கும் அள­வுக்கு பிர­பா­கரன் இரா­ணுவ மேதை­யாக விளங்­கி­யி­ருந்தார்.

இரா­ணு­வத்­திடம் இருந்தே போர் நுணுக்­கங்­களைப் பெற்றுக் கொண்டு, அதற்கு எதி­ரான வியூ­கங்­களை அவர் வகுத்தார். இரா­ணு­வத்தின் போர் நுட்­பங்­க­ளையும், மூலோ­பாயத் திட்­டங்­க­ளையும் முன்­னு­ணர்ந்து செயற்­படக் கூடிய ஆற்றல் பிர­பா­க­ர­னுக்கு இருந்­தது.

அதுவே, போரின் கடைசி நாள் வரை பிர­பா­க­ர­னுக்­காக மூன்று இலட்சம் படை­யி­னரும், அர­சியல், இரா­ணுவத் தலை­மை­களும் தலையைப் பிய்த்துக் கொண்டு அலையும் நிலையை ஏற்படுத்தியது.

இப்போது புலிகளும் இல்லை, பிரபாகரனும் இல்லை. இந்தநிலையில் தான், சரத் பொன்சேகா பிரபாகரன் இல்லாத நிலையின் பாதகத்தை உணரத் தொடங்கியிருக்கிறார் போலுள்ளது.

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கான ஒரு மூலோபாயத் திட்டம் இதுவரை இல்லை என்று அவர் புலம்பத் தொடங்கியிருக்கிறார்.

பிரபாகரன் என்ற ஒரு மையத்தைச் சுற்றியே ஓடிப் பழகி விட்ட இலங்கைப் படையினர், அந்த மையம் வெறிதானவுடன், பலமிழக்கத் தொடங்கி விட்டது என்பதையே சரத் பொன்சேகாவின் கருத்து எடுத்துக் காட்டுகிறது.

இந்தநிலையில் இருந்து மீள்வதற்கே, அவர் தேசிய பாதுகாப்புக்கான மூலோபாயத் திட்டம் பற்றிப் பேசத்தொடங்கியிருக்கிறார். அதற்காகத் தான் அவர் பிரபாகரனை நினைவுபடுத்தியிருக்கிறார்.

ஆக, பிரபாகரனை வைத்துத் தான் எதையும் செய்யக் கூடிய நிலையில் இன்றைக்கும் இலங்கைப் படைக் கட்டமைப்பு இருக்கிறது என்பதே உண்மை.

http://www.virakesari.lk/article/27525

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
 

பிர­பா­க­ரன் எனும் ஆளுமை!

 

பல சரி பிழை­க­ளுக்கு அப்­பால் தமிழ் இனத்­தின் ஒப்­பற்ற தலை­வன் பிறந்த நாள் இன்று. இதற்கு முன்­னும் இனி­யும் அவ­னைப் போன்ற தலை­வன் ஒரு­வன் தமி­ழர்­க­ளுக்­குக் கிடைப்­பானா என்­பது சந்­தே­கம்­தான். சாத்­தி­ய­மா­ன­வற்­றைச் சாத்­தி­ய­மாக்­கும் அர­சி­யல் கலை­யைப் பயி­லும் அர­சி­யல் தலை­வர்­கள் மத்­தி­யில் தனக்கு வேண்­டி­ய­தைச் சாத்­தி­ய­மாக்­கு­வதே அர­சி­யல் என்று பயின்­ற­வர் அவர். அதனை 30 வரு­டங்­க­ளாக வெற்­றி­க­ர­மாக நடத்­திக் காட்­டிய ஒரே தலை­வன். தான் கொண்ட கொள்­கை­யில் கடைசி வரைக்­கும் அசை­யாத பற்­று­று­தியோடு நின்ற தலை­வன். இன்று அவ­னுக்கு 63ஆவது வயது.

வர­லாற்­றின் பல இடங்­க­ளில் அவர்­க­ளது மறைவு பற்­றிய மர்­மங்­க­ளால் சாகா வரம் பெற்ற தலை­வர்­கள் இருக்­கி­றார்­கள். ஆனால் அத்­த­கைய உன்­னத இடத்­தைப் பெற்­ற­வர்­க­ளின் பெயர்ப் பட்­டி­யல் மிகச் சிறி­யது. அதற்­குள் தமி­ழர்­கள் முதன்­மைப்­ப­டுத்­தக்­கூ­டிய பெயர் வேலுப்­பிள்ளை பிர­பா­க­ரன்.

உல­கின் ஆதி மொழி­க­ளில் தமி­ழுக்கு முக்­கிய இடம் உண்டு. அதன் வழி அறி­யப்­ப­டும் தமி­ழர்­க­ளுக்­கும் தனி வர­லாறு உண்டு. மேற்­கு­ல­க­மும் அதன் வழி மொத்த உல­கும் போற்­றும் கிரேக்க, ரோம வர­லா­று­க­ளுக்கு நிக­ரா­க­வும், அதை­வி­ட­வும் மேம்­பட்­ட­தா­க­வும் தமி­ழர்­க­ளுக்­கும் பெரு­மை­யும் அதி­கா­ர­மும் இருந்­தது. ஆனால், 12ஆம் நூற்­றாண்­டில் ஆட்சி அதி­கா­ரத்­தைத் தமிழ் இழந்­தது முதல் சுமார் 800 ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக தமிழ் இனம் தொடர்ந்து அடி­மைப்­பட்டே கிடக்­கின்­றது. இந்த காலம் முழு­வ­தும் தன்­னைத் தக்­க­வைத்­துக்­கொள்­ளும் தற்­காப்­புப் போராட்­டத்­தி­லேயே தமிழ் இனம் காலங் கடத்தி வந்­தது.

 

அந்த நிலை­யில் இருந்து வலிந்து முன்­னேறித் தாக்கி இழந்­த­வற்றை மீளப்­பெ­றும் மனோ நிலை­யைத் தமிழ் இனத்­திற்கு ஏற்­ப­டுத்­திய ஒரே தலை­வன் என்­றால் அது பிர­பா­க­ரன்­தான் என்­ப­தைத் துணிந்து சொல்­ல­லாம். பிர­பா­க­ர­னின் போராட்ட வழி­மு­றை­கள் மீது ஆயி­ரம் விமர்­ச­னங்­கள் இருக்­க­லாம். அவ­ரது விடாப்­பி­டி­யான கொள்­கை­யால்­தான் தமி­ழர்­கள் இவ்­வ­ளவு பெரிய அழி­வைச் சந்­தித்­தார்­கள் என்று விமர்­சிப்­ப­வர்­கள் இருக்­க­லாம். ஆனால், எல்­லாச் செயல்­க­ளுக்­கும் ஒரு காரண காரி­யம் உண்டு என்­ப­தைப் போல பிர­பா­க­ர­னும் தமி­ழர்­க­ளுக்கு அவர்­க­ளது ஆன்ம பலத்தை மீட்­டுக்­கொ­டுப்­ப­தற்கு விட்­டுக்­கொ­டுக்­காத அந்த கொள்­கைப் பற்­றும்­பி­டிப்­பும்­தான் கார­ணம் என்­பதை அவர்­கள் உண­ராது விட்­டு­விட்­டார்­கள்.

எல்­லாப் போராட்­டங்­க­ளி­லும் வெற்­றி­யும் தோல்­வி­க­ளும் உண்டு. அவற்­றைக் கொண்டு நடத்­தும் தலை­வர்­க­ளின் ஆளு­மை­யில் அதன் விரைவு தங்­கி­யி­ருக்­கும். தமி­ழர்­க­ளின் போராட்­டத்­தில் பிர­பா­க­ரன் தனது வகி­பங்கை மிகச் சரி­யா­கவே நிகழ்த்­திச் சென்­றி­ருக்­கி­றார். 30 ஆண்டு காலப் போராட்­டத்­தில் எதிர்­வ­ரும் 10 தசாப்­தங்­க­ளுக்­குத் தமி­ழர்­க­ளுக்­குத் தேவை­யான உறு­தி­யைக் கொடுத்­து­விட்­டுச் சென்­றி­ருக்­கி­றார்.

ஒரு­வேளை பிர­பா­க­ரன் இந்­தத் தினத்­தில் பிறக்­கா­ம­லேயே போய் இருந்­தால் இன்று இலங்­கை­யில் தமி­ழர்­கள் வாழ்ந்­தார்­கள், பின்­னர் குவே­னி­யு­டன் சேர்ந்து விஜ­ய­னும் அவ­னு­டன் சேர்ந்த பாண்­டிய நாட்டு இள­வ­ர­சி­க­ளா­லும் முகிழ்த்­தெ­ழுந்த சிங்­கள இனத்­திற்­குள் கரைந்­து­போ­னார்­கள் என்று வர­லாறு கூறி­யி­ருக்­கக்­கூ­டும். பிர­பா­க­ரன் இல்­லாத காலத்­தில் வடக்கு கிழக்­கில் பல­வந்­த­மாக ஊன்­றப்­ப­டும் விகா­ரை­க­ளை­யும் குடி­யி­ருப்­புக்­க­ளை­யும் பார்க்­கை­யில் அத்­த­கைய ஒரு வர­லாறு எழு­தப்­பட்­டி­ருக்­காது என்­ப­தற்கு எந்த நிச்­ச­ய­மும் இல்லை.

 

அண்­மை­யில் நாடா­ளு­மன்­றத்­தில் பேசிய உறுப்­பி­னர் ஒரு­வர் இத்­தனை வருட காலப் போரில் அர­சுக்கு நிக­ராக விடு­த­லைப் புலி­க­ளும் பணத்­தைச் செல­விட்­டி­ருக்­கி­றார்­கள் என்று தெரி­வித்­தி­ருந்­தார். 75 சத­வீத மக்­க­ளி­னால் கட்­டி­யெ­ழுப்­பப்­பட்ட, உல­கின் மற்­றைய நாடு­க­ளால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்டு ஒரு நாட்­டின் அர­சு­டன் வெறும் 12 சத­வீத மக்­கள் கூட்­டத்­தின் தலை­வன் சரிக்­குச் சம­மா­கப் போரை நடத்­தி­னான் என்­றால் அவன் அர­சி­யல், பொரு­ளா­தார, ராஜ­தந்­தி­ரம் அனைத்­தி­லும் சிறந்து விளங்­கி­னான் என்­ப­து­தானே பொருள்.
அது­தான் பிர­பா­க­ர­னின் பலம். தன் மக்­களை ஆழ நேசித்த, தன் மக்­க­ளுக்­காக மட்­டுமே வாழ்ந்த ஒரு தலை­வ­னால் மட்­டுமே அது சாத்­தி­யம்.

துர­திர்ஷ்­ட­வ­ச­மாக ஒட்­டு­மொத்த உலக நாடு­க­ளும் சேர்ந்து தங்­கள் தங்­கள் நலன்­க­ளுக்­காக அந்­தத் தலை­வனை அவன் படை­களை அழித்து ஒழித்­து­விட்­டன. தமிழ் இனம் நட்­டாற்­றில் நிற்­கின்­றது. எத்­தனை தலை­வர்­கள் வந்­தா­லும் இட்­டு­நி­ரப்ப முடி­யாத பெரு­வெ­ளி­யா­கக் கிடக்­கி­றது பிர­பா­க­ரன் என்­கிற ஆளுமை நிரப்­பி­விட்­டுப்­போன இடம்.

http://newuthayan.com/story/50533.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.