Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிங்கள ஆட்சியாளர்களை கதிகலங்கவைத்த ஈழத் தமிழ் மக்களது பாதுகாவலன் பிரபாகரன்

Featured Replies

 
சிங்கள ஆட்சியாளர்களை  கதிகலங்கவைத்த  ஈழத் தமிழ் மக்களது  பாதுகாவலன் பிரபாகரன்
 
 

சிங்கள ஆட்சியாளர்களை கதிகலங்கவைத்த ஈழத் தமிழ் மக்களது பாதுகாவலன் பிரபாகரன்

தந்தை செல்­வ­நா­ய­கத்­திற்­குப் பின்­னர் இந்த நாட்­டுத் தமிழ்­மக்­க­ளது தேசி­யத்­த­லை­வ­ரா­கப் பிர­பா­க­ரன் இருந்­தார். 1983 ஆம் ஆண்­டுக்­குப்­பின்­னர் உல­கத்­த­மி­ழர்­க­ளின் அடை­யா­ள­மா­க­வும், தமி­ழர்­க­ளின் தலை­நி­மி­ர।்­வுக்­கும், பலத்­திற்­கும் உயர்­வுக்­கும் காலம் தந்த சரித்­தி­ரத் தலை­வ­னா­க­வும் விளங்­கிய பிர­பா­க­ர­னது 63ஆவது பிறந்­த­நா­ளா­கிய இன்று அவ­ரது போரி­யல் சிந்­த­னை­கள், சாத­னை­கள் அவ­ரின்­சி­றப்­பு­கள், தனித்­து­வங்­கள் பற்ற।ி நினைவுகூரு­தல் பொருத்­த­மா­னது.

ஈழத்­த­மி­ழி­னத்தை வழி­ந­டத்த உரு­வா­கிய தலை­வ­னான பிர­பா­க­ரன் ஒரு தமிழ்த்­தே­சிய இனத்­தின் அடை­யா­ளம். இன்­றும் கூட ஒரு­ க­ணம் பிர­பா­க­ரன் என்ற பெயரை உச்­ச­ரிப்­ப­தன் மூலம் எந்­த­வொரு தமி­ழ­னும் புத்­து­ணர்வு பெறு­கி­றான்.

தமி­ழி­னத்­தின் விடு­த­லையை ெவன்­றெ­டுப்­ப­தற்­காக தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி­கள் அமைப்பை உரு­வாக்கி ஆயு­தப்­போ­ராட்­டத்தை 30 ஆண்­டு­கா­லம் வரை நடத்­திய பிர­பா­க­ரன் எதி­ரி­க­ளா­லும், மாற்­றுக்­கட்­சி­யி­ன­ரா­லும் இலங்­கை­யின் முப்­ப­டை­யின் சில உய­ர­தி­கா­ரி­க­ளா­லும் கூட விதைந்­துை­ரக்­கப்­பட்­ட­தொரு தலை­வ­ரா­வார். இந்­திய இரா­ணு­வத்­தி­லி­ருந்த உய­ர­தி­கா­ரி­கள் சில­ரா­லும், ஐரோப்­பிய நாடு­க­ளைச்­சேர்ந்த பல இரா­ஜ­தந்­தி­ரி­க­ளா­லும் இன்­றும் விதந்து விமர்­சிக்­கப்­ப­டும் வீரத் தலை­வ­ரா­கவே பிர­பா­க­ரன் விளங்­கு­கின்­றார்.

1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23 ஆம் திக­தி­யன்று நள்­ளி­ர­வு­வேளை பலாலி வீதி திரு­நெல்­வே­லி­ யில் வீதிப் பாது­காப்­புக்­க­ட­மை­யில் ஈடு­பட்­டுக் கொண்­டி­ருந்த இரா­ணுவ வாக­னம் மீது நிலக்­கண்ணி வெடித்­தாக்­கு­தலை மேற்­கொண்­ட­தன் மூலம் ஆயு­தப்­போ­ராட்­டத்­துக்கு அடி­ யெ­டுத்­துக் கொடுத்த நாளி­லி­ருந்து, வன்னி முள்­ளி­வாய்க்­கா­லில் 2009 மே 18 ஆம்் திகதி இறு­திப்­போர் முடி­யும்­வரை பிர­பா­க­ரன் இலங்­கை­யர்­க­ளா­லும், பன்­னாட்­டுத் தரப்­பு­க­ளா­லும் அதி­கம் பேசப்­பட்ட மனி­த­ராக இருந்து வந்­துள்­ளார்.

பிற இனத்­த­வர்­க­ளின் 
பாராட்­டு­தல்­க­ளுக்கு 
உள்­ளா­ன­வர் பிர­பா­க­ரன்

இலங்­கை­யில் சிங்­கள முஸ்­லிம், தரப்­பு­க­ளி­லி­ருந்­தும் பலர் பிர­பா­க­ர­ னைப் போற்­றிப் பாராட்­டி­யு­முள்­ள­னர். ‘‘பிர­பா­க­ரனை தமிழ் சமூ­கம் ஒரு போதும் மறக்­கப்­போ­வ­தி்ல்லை.

தமிழ்­மக்­கள் மனங்­க­ளில் ஆகக் கூ­டிய செல்­வாக்­கு­டன் இறு­தி­வரை மதிக்­கப்­பட்­ட­வர் பிர­பா­க­ரன் மட்­டும் தான்’’ என கிழக்கு மாக­ணத்­தைச்­சேர்ந்­த­வ­ரும் முஸ்­லிம் காங்­கி­ர­சின் முக்­கிய தலை­வர்­க­ளில் ஒரு­வ­ரு­மான பசீர்­சே­கு­தா­வுத் துணிச்­ச­லான கருத்தை சில ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் தெரி­வித்­தி­ருந்­தார் ‘‘தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி­கள் நாட்­டின் எந்­தப்­பா­கத்­தி­லும் எந்­தத்­தாக்­கு­த­லை­யும் நடத்­தக்­கூ­டிய வல்­ல­மை­யைப் பெற்­றி­ருந்­தார்­கள். தமிழ் மக்­க­ளின் தேசிய விடு­த­லைச்­சின்­ன­மாக விடு­த­லைப்­பு­லி­க­ளும் அதன் தலை­வர் பிர­பா­க­ர­னும் இருந்­தார்­கள்’’ என்­றும் அவர் தெரி­வித்­தி­ருந்­தார்.

முப்­பது ஆண்­டு­க­ளில் நான்கு ஈழப்­போர்­களை வழி­ந­டத்­திக் காட்­டிய தேசி­யத்­த­லை­வ­ரான பிர­பா­க­ரன் இலங்­கைப் படை­க­ளாலோ, இந்­தி­யப்­ப­டை­க­ளாலோ தன்னை உயி­ரோடு பிடிக்­க­மு­டி­யா­த­வாறு தனது பாது­காப்பு கட்­ட­மைப்பை பல­மாக வைத்­தி­ருந்­தார். தமி­ழீ­ழமே தமிழ் மக்­க­ளுக்­கான இறு­தி­வழி என்ற கொள்­கை­நி­லைப்­பாட்­டில் அவர் மாறா­மல் இறுதி வரை சிங்­கள அர­சுகளை எதிர்த்­துப் போரா­டி­னார்.

சிறு வய­தி­லும் தனித்­து­வச் 
சிந்­தனை கொண்­ட­வ­ரா­யி­ருந்­தார் பிர­பா­க­ரன்

 

வேலுப்­பிள்ளை பார்­வதி தம்­ப­தி­யி­ன­ருக்கு கடைசி மக­னா­கப் பிறந்த பிர­பா­க­ரன் வல்­வெட்­டித்­துறை ஊரிக்­காடு என்ற இடத்­தி­லுள்ள சிதம்­ப­ராக்­கல்­லூ­ரி­யில் 10 ஆம் வகுப்பு வரை கல்வி கற்­றார். பாட­சா­லை­யில் கல்வி கற்­கும் காலப்­ப­கு­தி­யில் பிர­பா­க­ர­னின் சித்­தனை யோட்­ட­மும் செயற்­பா­டு­க­ளும் தனித்­து­வம் மிக்­க­தா­கவே இருந்­தன. தந்­தை­யு­டன் பிற இடங்­க­ளுக்­குச் செல்­லும் போது இலங்­கைப்­ப­டை­யி­னர் அப்­பா­வித் தமிழ் மக்­க­ளைத் தாக்­கு­வ­தைக்­கண்டு பல சந்­தர்ப்­பங்­க­ளில் அதி­ர்ச்­சி­யும் வேத­னை­யும்் அடைந்­தார்.

பிர­பா­க­ரன் சிறு­வ­னாக இருந்த காலப்­ப­கு­தி­யில் 1958 ஆம் ஆண்டு முதன் முத­லில் அப்­போ­தைய தலைமை அமைச்சரான எஸ்.ஆர்.டி.பண்­டா­ர­நா­யக்­க­வின் அர­சி­னால் தமிழ்­மக்­க­ளுக்கு எதி­ரான இன­வன்­முறை தூண்டி விடப்­பட்டு நூற்­றுக்­க­ணக் கான தமிழ் மக்­கள் படு­கொலை செய்­யப்­பட்ட சம்­ப­வ­மும் அவர் மன­தில் மிக­வும் ஆழ­மா­கப் பதிந்­தி­ருந்தது.

தென்­னி­லங்­கை­யில் சிங்­க­ளக் குண்­டர்­க­ளால் இன­வன்­மு­றை­யின்­போது தமிழ்­மக்­கள் ஈவு இரக்­க­மில்­லாது கொடூ­ர­மா­கக் கொல்­லப்­பட்ட நெஞ்சை உறுத்­தும் பல­சம்­ப­வங்­களை பிர­பா­க­ரன் நன்கு அறிந்­தி­ருந்­தார். தமிழ் மக்­க­ளுக்கு இந்­த­கைய இன்­னல்­கள் எதற்­காக ஏற்­பட வேண்­டும்? அப்­பா­வித்­த­மிழ் மக்­க­ளுக்கு ஏன் இந்த நிலை தமி­ழ­னாக இலங்­கை­யில் பிறந்த குற்­றத் துக்காக இப்­ப­டித்­து­ய­ரங்­களை அனு­ப­விக்­க­வேண்­டுமா? என்று பிர­பா­க­ரன் மன­தில் தமிழ் மக்­கள் மீது அனு­தா­ப­மும் பரி­வும் ஏற்­பட்­டி­ருந்­தது.

இன­வெ­றி­கொண்ட சிங்­கள அர­சு­க­ளின் பிடிக்­குள்­ளி­ருந்து தமிழ் மக்­களை மீட்­டெ­டுக்­க­வேண்­டும். என்ற உத்­வே­கம் பிர­பா­க­ரன் மன­தில் உரு­ வா­கி­யது. தனது வாலிப வயதை எட்­டும் பரு­வத்­தில் ஆயு­தப்­போ­ராட்­டத்­தின் மூல­மா­கவே இத­னைச் சாதிக்க முடி­யும் என்­று உ­ணர்ந்­தார். பிர­பா­க­ரனின் காலில் கைக் குண்டு எரி­கா­யம் ஏற்­பட்­டது. மருத்­து­வ­சி­கிச்­சை­க­ளுக்­குப்­பின்­னர் அந்த இடத்­தில் கரு­மை­யாக இருந்­த­மை­யி­னால் கரி­கா­லன் என்ற புனை­பெ­ய­ரும் ஏற்­பட்­டி­ருந்­தது.

தமிழ் மாண­வர்­கள் பாட­சா­லைக்­கல்­வியை முடித்­த­பின்­னர் மேற்­ப­டிப்­புக்­காக பல்­க­லைக் கழ­கம் செல்­வ­தற்கு சிங்­கள அர­சின் தரப்­ப­டுத்­தல் கொள்கை ஒரு தடை­யாக இருந்­தது. 10 ஆம் வகுப்பு வரை­யி­லும் கல்வி கற்ற பிர­பா­க­ரன் விடு­த­லைப் போ­ரா­ளி­யாக செயற்­ப­டத்­தொ­டங்­கி­ய­ப­டி­யி­னால் மேற்­கொண்டு படிப்பை அவ­ரால் தொட­ர­மு­டி­ய­வில்லை.

பிர­பா­க­ர­னி­னது போக்கு அவ­ரது பெற்­றோ­ருக்­குப் புரி­ய­வில்லை. மகன் புரட்சி நட­வ­டிக்­கை­க­ளில் ஈடு­பட்­டி­ருக்­கி­றார் என்­பதை அறிந்து கொள்­ளும் சந்­தர்ப்­பம் தானே தேடி வந்­தது. ஒரு முறை பிர­பா­க­ர­ னைத்­தேடி பொலி­ஸார் அதி­காலை வேளை 3 மணிக்கு அவ­ரது வீட்­டுக் கத­வைத் தட்­டி­னர் பொலி­ஸார் தன்­னைத்­தேடி வந்­த­தை­ய­றிந்த பிர­பா­க­ரன் ஒரு­வா­றாக எவ­ரும் அறி­யா­மல் தப்பி விட்­டார்.
அப்­போ­து­தான் தமது மகன் இர­க­சிய இயக்­கத்­தில் செயற்­பட்டு வரு­கி­றார். என்­பதை பெற்­றோர்­க­ளால் உணர முடிந்­தது. பிர­பா­க­ர­னைக் கைது செய்ய வந்த பொலி­ஸாருக்­கும் பெருத்த ஏமாற்­ற­மா­கவே முடிந்­தது. இதன் பின்­னர் பிர­பா­க­ரன் தனது சொந்த வீட்­டுக்­குத் திரும்­ப ­வே­யில்லை.

 

தப்­பிச்­சென்ற பிர­பா­க­ரனை பெற்­றோர்­கள் சமா­தா­னப்­ப­டுத்­தித் தமது வீட்­டிற்கு அழைத்துச் சென்­ற­னர். வீட்­டிற்கு வந்த பிர­பா­க­ரன்’’ நான் ஒரு­போ­தும் உங்­க­ளுக்­குப் பயன்­பட மாட்­டேன். என்­னால் உங்­க­ளுக்கு எந்­தத் தொல்­லை­யும் வேண்­டாம். என்னை என்­போக்­கில் விட்­டு­வி­டுங்­கள். இனி எதற்­கும் என்னை எதிர்­பார்க்­கா­தீர்­கள்’’ என்று கூறி­விட்டு வீட்­டி­லி­ருந்து வௌியே­றி­னார்.

படை­யி­னர் மீதான தாக்­கு­தல் க­ளுக்கு உரிமை கோரி­னர் 
புலி­கள்

1978ஆம் ஆண்டு ஏப்­ரல் மாத­ம­ள­வில் வன்னி முருங்­கன் காட்­டுப்­ப­கு­திக்­குள் இன்ஸ்­பெக்­டர் பஸ்­தி­யாம்­பிள்ளை உட்­பட 04 இலங்கை புல­னாய்­வுப்­ப­டை­யி­னர் சுட்­டுக்­கொல் லப்­பட்ட சம்­ப­வம் நாடெங்­கும் காட்­டுத்­தீ­யா­கப் பர­வி­யது. பிர­பா­க­ர­னால் உரு­வாக்­கப்­பட்ட தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி­கள் அக்­கா­ல­கட்­டத்­தில் நடத்­தப்­பட்ட இரா­ணுவ நட­வ­டிக்­கை­க­ளுக்கு பகி­ரங்­க­மாக உரிமை கோரி அறிக்கை விட்­டி­ருந்­த­னர். இதன்­பின் தமிழ்­மக்­க­ளின் விடு­த­லைக்­கான போராட்­டம் தொடர்ந்து பிர­பா­க­ர­னால் முன்­னெ­டுக்­கப்­பட்டு வந்­தது. ஐக்­கி­யத்­தே­சி­யக்­கட்சி ஆட்­சி­யில் விடு­த­லைப்­பு­லி­க­ளின் தாக்­கு­தல் நட­வ­டிக்­கை­கள் தொடர்ந்­தன. புலி­களை ஒழிப்­ப­தற்கு கடும் நட­வ­டிக்­கை­க­ளை­யும் அர­சும் படை­க­ளும் மேற்கொ­ண்­டி­ருந்­தன.

புலி­கள் அமைப்பை அழிப்­ப­தற்கு சகல நட­வ­டிக்­கை­களை அரசு மேற்­கொள்ள முனைந்­த­போது ஆயு­தப்­போ­ரட்­டத்­தை­யும் அர­சி­யல் போராட்டத்­தை­யும் உறு­திப்­ப­டுத்தி விரி­வாக்­க­ வேண்­டும் என்ற நோக்­கில் பிர­பா­க­ரன் அர­சாங்­கத்­தின் அடக்கு முறை நட­வ­டிக்­கை­களை முறி­ய­டிப்­ப­தற் காக ெகரில்லா போர் முறை­யைப் ப­லப்­ப­டுத்தி அர­சி­யல் பிரி­வை­யும் விரி­வாக்க முடி­வு­ செய்­தார்.

முப்­பது ஆண்­டு­கள் வரை தமி­ழி­னத்­தின் விடு­த­லைக்­கா­கப் போரா­டிய புலி­க­ளின் தலை­வர் பிர­பா­க­ர­ னின் சாவு பற்­றிய செய்­தி­கள் இன்று வரை­யில் ஓர் மர்­மம்் நிறைந்­த­தொன்­றா­கும். 2009ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம்­தி­கதி அல்­லது 18 ஆம் திகதி பிர­பா­க­ரன் கொல்­லப்­பட்­டு­ விட்­டார் என்ற செய்­தியை இலங்கை அரசு அறி­வித்­தி­ருந்­தது. உயி­ரு­டன் இருக்­கின்­றாரா? இல்­லையா? என்ற வாதப்­பி­ரதி வாதங்­கள் தென் இலங்­கை­யி­லும் தமிழ் மக்­கள் மத்­தி­யி­லும் எழுந்த வண்­ணமே இருக்­கின்­றன. இந்­திய அரசு ராஜீவ்­காந்தி கொலை வழக்கை முடி­வுக்கு கொண்­டு­வ­ரும் பொருட்டு பல­த­ட­வை­கள் பிர­பா­க­ர­னது இறப்புச் சான்றி­தழை வழங்­கு­மாறு கோரி­யும் இலங்கை அரசு பிர­பா­க­ர­னது இறப்புச் சான்­றி­தழை இது­வரை கைய­ளிக்­க­வில்லை.

இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சி­யல் தீர்­வொன்றை வழங்­காது ஆட்­சி­யா­ளர்­கள் காலத்தை இழுத்­த­டித்­த­மை­யா­லேயே வடக்­கில் ஆயு­தப்­போ­ராட்­டம் தலை தூக்­கி­யது. பிர­பா­க­ரன் என்ற இளை­ஞர் ஆயு­தப் போராட்­டத்தை ஆரம்­பிக்க கார­ண­மா­கி­யது என இரா­ஜாங்க அமைச்­ச­ரான டிலான் பெரேரா கடந்த வரு­டம் தெரி­வித்­தி­ருந்­தார்.

தமி­ழர்­கள் மத்­தி­யில் பிர­பா­க­ரன் இல்­லாத நிலை­யில், இன்று அவ­ரது போராட்­டத்­தை­யும் விடு­த­லையு ணர்­வை­யும், வீரத்­தை­யும் அவர்­கள் பாராட்­டு­வ­தி­லி­ருந்து, பெருந்­த­லை­வ­ராக பிர­பா­க­ரன் தமிழ் மக்­கள் மத்­தி­யில் எத்­த­கைய மதிப்­புக்­கும் மரி­யா­தைக்­கும் உரி­ய­வ­ரா­கி­யி­ருந்­தார் என்­பது தெட்­டத் தௌிவா­கி­றது. அதேவேளை தமிழ்த்­தே­சி­யத்­தை­யும், பிர­பா­க­ர­னை­யும் மக்­கள் ஒரு­போ­தும் மறந்­து­வி­டப் போவ­தில்லை.

 

உல­கின் எந்­த­வொரு விடு­தலை இயக்­க­மும் சந்­தித்­தி­ராத பல சரி­வு­களை, பல திருப்­பங்­களை பல நெருக்­க­டி­களை பிர­பா­க­ரன் சந்­தித்­தி­ருந்­தார். இவ்­வா­றான துணிச்­சல் மிக்­க­வீ­ர­னாக செயற்­பட்டு வந்­த­து­டன் கொண்ட கொள்­கை­யில் உறு­தி­யா­க­வே­யி­ருந்­தார்.

இலங்­கை­யில் தமி­ழி­னம் நிம்­ம­தி­ யாக வாழ­வேண்­டும் என்­ப­தற்­காக தனது தம­ழீ­ழக் கனவை எடுத்­தி­யம்­பி­னார். இதன் கார­ண­மா­கவே தமிழ் மக்­கள் போராட்­டத்தை நேசித்­த­னர். இப்­போ­ராட்­டத்­தால் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான தமிழ் மக்­கள் உயி­ரி­ழந்­த­னர். அப்­ப­டி­யி­ருந்­தும் பிர­பா­க­ர­னு­ டைய போராட்­டம் சரி­யா­ன­தே­யென இன்­றும் பெரும்­பா­லான மக்­கள் கரு­து­கின்­ற­னர்.

இலங்கை அரசிடம் விலை போகாத தமிழ் மக்களது தலைவர் பிரபாகரன்

நோர்வே நாட்­டின் முன்­னாள் வௌிவி­வ­கார அமைச்­ச­ரும் தூது­வ­ரு­மான எரிக் சொல்ஹெய்ம் பிர பாகரன் குறித்த தனது கருத்தை சில ஆண்­டு­க­ளுக்­கு­முன்­னர் பதிவு செய்­திருந்தார். தனது தாயக விடு­த­லை­குறித்த உறுதியி­லி­ருந்து இலங்கை அரசுக்கு விலைபோகாத பிரபாகரன் இறுதி நிமி­டம்வரை மாற­வில்லை, என்­றும் குறிப்­பி­டுகின்றார்.

தேசி­யத்­த­லை­வர் என்று கூறத்தக்க ஒரே ஒரு தலை­வர் வேலுப்­பிள்ளை பிர­பா­க­ரன். அவ­ருக்கு முன்­பும் அப்­படி ஒரு தேசி­யத்­த­லை­வர் இருந்­த­து­மில்லை. இனி­யும் இன்­னு­மொரு தேசி­யத் தலை­வர் உரு­வா­கப் போவ­து­மில்லை என தமி­ழ் அரசுக் கட்­சி­யின் முக்­கி­யஸ்­த­வ­ரும் வடக்கு மாகாண சபை­யின் தவி­சா­ள­ரு­மான சீ.வே.கே. சிவ­ஞா­னம் தெரி­வித்­தி­ருந்­தார்.

பிர­பா­க­ரன் போரில் ஈடு­பட்­டது பக­வத்­கீ­தையை அடிப்­ப­டை­யா­கக் கொண்­டு­தான் என­வும், கீதா­சா­ர தர்­மம் போர் என­வும் ஸ்ரீ ஜெய­வர்த்­த­ன­புர பல்­க­லைக்­க­ழக வர­லாறு மற்­றும் தொல்­லி­யற்­துறை பீட பேரா­சி­ரி­யர் ரி.ஜீ.குல­துங்க 2013ஆம் ஆண்டு தெரி­வித்­தி­ருந்­தார்.

பிரபாகரனது பிறந்தநாள் 
தமிழினத்தின் எழுச்சிநாள்

நவம்­பர் மாதம் 26ஆம் நாள் பிர­பா­க­ர­னின் பிறந்­த­நாள் என்­பது ஈழத் தமி­ழர்­க­ளின் மன­தி­லி­ருந்து எழு­கின்ற எழுச்­சிநாள். நவம்­பர் 27ஆம் நாள் மாவீ­ரர் நாளாக உணர்ச்சி பூர்­வ­மாக கொண்­டா­டப்­ப­டு­கின்ற நாள்­க­ளா­கும். தமிழ் மக்­க­ளின் உரி­மை­க­ளுக்­கா­கப் போரா­டிய வீரத் தலை­வ­னாக – காவி­ய­நா­ய­க­னாக போற்­றப்­ப­டு­ப­வ­ராக என்­றும் மனக் கண்­முன்­னால் வலம் வரு­கின்ற தலை­வர் பிர­பா­க­ரன்.

தமி­ழி­னம் தோற்­றுப் போகின்ற இன­ மல்ல. தோற்­க­டிக்க முடி­யாத இனம் என்று வீர முழக்­க­மிட்ட தலை­வ­ரான பிர­பா­க­ர­னது புக­ழுக்கு அழி­வென்­பது கிடை­யாது என்­பது வர­லாறு கூறும் செய்­தி­யா­கும்.

தமி­ழர்­க­ளின் விடு­த­லைப் போராட்­டம் ஜெனி­வா­வரை கொண்­டு­செல்­லப்­பட்டு இன்று அதி முக்­கி­யத்­து­வம் பெறு­வ­தற்­கும் இப்­பி­ரச்­சினை தொடர்ந்­தும் தீர்க்­கப்­ப­டா­ததால் இலங்கை அர­சுக்கு பன்னாட்டு அழுத்­தங்­க­ளும், நெருக்­க­டி­க­ளும் உரு­வா­கிக்­கொண்­டி­ருப்­ப­தற்­கும் தலை­வர் பிர­பா­க­ரன் என்ற சக்­தி­மிக்க மாவீ­ரனே கார­ண­மா­கும். அந்த சக்தி மிக்க வீரத் தலை­வ­னின் பிறந்­த­நாள் தமி­ழர்­க­ளுக்கு எழுச்சி நாள் என்பதில் மாற்றுக்கருத் தில்லை.

http://newuthayan.com/story/50535.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.