Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிவாஜிலிங்கம் இராணுவத்தினரைத்தான் நினைவுகூரவேண்டும்: சம்பிக்க ரணவக்க!

Featured Replies

சிவாஜிலிங்கம் இராணுவத்தினரைத்தான் நினைவுகூரவேண்டும்: சம்பிக்க ரணவக்க!

 

சிவாஜிலிங்கம் இராணுவத்தினரைத்தான் நினைவுகூரவேண்டும்: சம்பிக்க ரணவக்க!

தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர்களை நினைவுகூறும் சிவாஜிலிங்கம் முதலில் இராணுவத்தினரைத்தான் நினைவுகூறவேண்டும் என தென்னிலங்கை பேரினவாதக் கட்சிகளில் ஒன்றான ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரும், அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

மேலும், மாவீரர் தினத்தைக் கடைப்பிடிப்பவர்களும் விடுதலைப்புலிகள்தான், அவர்கள்மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களது விடுதலைக்காய் தமது இன்னுயிர்களை தியாகம் செய்த மாவீரர்களது நினைவு நாள் இன்று அனுட்டிக்கப்படுகின்றது.

தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு, கிழக்கு உட்பட ஸ்ரீலங்காவின் ஏனைய பகுதிகளிலும், புலம்பெயர் நாடுகளிலும் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் அனுட்டிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் கொழும்பிலுள்ள ஐந்து நட்சத்திர விடுதியொன்றில் இடம்பெற்ற நிகழ்வில் இன்றைய தினம் கலந்துகொண்ட அமைச்சர் சம்பிக்க ரணவக்க, நிகழ்வின் பின்னர் மாவீரர் நினைவேந்தல் தொடர்பாக கருத்து வெளியிட்டார்.

“ஜே.வி.பியினரால் மாவீரர்களை நினைவுகூற முடிந்தால் ஏன் விடுதலைப் புலிகளுக்கு அதனை செய்யமுடியாதென சிலர் கேள்விகேட்கின்றனர். விடுதலைப் புலிகள் என்பது போரில் தொடர்புபடாத, அரசியலில் இருக்காத மக்களை கொலை செய்த இயக்கம். சிவாஜிலிங்கம் அல்லது வேறு யாராகிலும் விடுதலைப் புலிகளின் தலைவரை கொண்டாடினால் கொழும்பில் அல்லது யாழ்ப்பாணத்திலும் இயக்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளில் பிரதிவாதிகளாக, பொறுப்புக் கூற வேண்டியவர்களாக அவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும். ஜனநாயக நாட்டில் அதற்கு இடமளிக்கக்கூடாது.

மீண்டும் ஒருமுறை பயங்கரவாதிகளை வீரர்களாக மாற்ற முயற்சிக்கிறவர்களும் போராளிகளாவர். ஜனநாயகவாத நாட்டை முன்கொண்டுசெல்ல வேண்டுமென்றால், ஜயஸ்ரீ மகா விகாரை, தலதா மாளிகை மீது தாக்குதல் நடத்திய அதேபோல பிக்குகளையும், மக்களையும் கொலை செய்தவர்களை வீரர்களாக நினைப்பவர்களும் போராளிகள்தான். அவர்களுக்கு எதிராக நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். அமிர்தலிங்கம் முதல் யோகேஸ்வரன் வரை படுகொலை செய்தவர்கள் ஸ்ரீலங்கா இராணுவம் அல்ல, விடுதலைப் புலிகளாவார். அதனை தமிழ் மக்களும் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்.

இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் வடக்கில் அரசியலில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பம் ஸ்ரீலங்கா இராணுவத்தினால்தான் உருவாகியிருக்கிறது. அப்படியல்லாவிட்டால் தமிழ்ச் செல்வனின் காலை கழுவிக்கொண்டிருக்கும் அரசியல்தான் இன்று இடம்பெற்றிருக்கும். சிவாஜிலிங்கம் முதலில் ஸ்ரீலங்கா இராணுவத்தினரை நினைவுகூர்ந்துதான் மாவீரர் தினத்தை அனுஷ்டித்திருக்க வேண்டும். ஏனென்றால் அவருக்குக்கூட விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் ஏற்பட்டிருந்தது” என்றார்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/champika-ranavaka-Warning

 

https://news.ibctamil.com/ta/internal-affairs/champika-ranavaka-Warning

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.