Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பைஸரின் உரையின்போது சர்ச்சை

Featured Replies

பைஸரின் உரையின்போது சர்ச்சை

6-c2eb886b320b4345965e9e9b6729ee89d4a3186b.jpg

 

(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்)

வெளி­நாட்டு விஜயம் மேற்­கொண்­டி­ருந்த மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சர் பைஸர் முஸ்­தபா நேற்று சபையில் பிர­சன்­ன­மாகி உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தல் தாமதம் தொடர்­பாக கருத்­துக்­களை முன்­வைக்க முற்­பட்ட வேளை சபையில் கடும் சர்ச்சை வெடித்­தது.  

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று திங்­கட்­கி­ழமை 2018 ஆம் ஆண்­டுக்­கான வரவு செல­வுத்­திட்­டத்தில் மகளிர் மற்றும் சிறுவர் விவ­கார, வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு, சமூக வலு­வூட்டல் மற்றும் நலன்­புரி அமைச்­சு­க­ளுக்­கான ஒதுக்­கீ­டுகள் மீதான குழு­நிலை விவா­தத்தின் போது அமைச்சர் பைஸர் முஸ்­தபா உரை­யாற்ற ஆரம்­பித்தார்.

அவர் தனது உரையில், அநுர குமார திஸ­நா­யக்க எம்.பி என்­மீது கடு­மை­யான குற்­ற­சாட்­டு­களை சுமத்­தி­யி­ருந்தார். நான் எக்­கா­ரணம் கொண்டும் பிரத்­தி­யேக விஜயம் மேற்­கொண்டு வெளி­நாடு செல்ல வில்லை. நான் பொது­ந­ல­வாய உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் தொடர்­பான மாநாட்டில் கலந்து கொள்ளும் முக­மாவே மோல்ட்­டா­வுக்கு சென்­றி­ருந்தேன். மாறாக நான் எங்கும் தப்­பித்து ஒடவும் இல்லை. ஒடி மறை­யவும் இல்லை. எல்லை நிர்­ணய செயற்­பாட்டின் போது அனைத்து கட்­சி­க­ளுக்கும் மதிப்­ப­ளித்து செயற்­பட்டேன். நீதி­மன்ற தீர்ப்­பினால் தாமதம் செய்­யப்­பட்­டமை எனது தவ­றல்ல என்றார்.

இதன்­போது குறுக்­கீடு செய்த மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலை­வரும் எதிர்க்­கட்சி பிர­தம கொற­டா­வு­மான அநுர குமார திஸா­நா­யக்க,

இவ்­வ­ருடம் பெப்­ர­வரி மாதம் முதல் எல்லை நிர்­ணயம் தொடர்­பான பிரச்­சினை எழுந்­துள்­ளது. இந்­நி­லையில் எல்லை நிர்­ணயம் தொடர்­பான பிரச்­சி­னை­யையும் குறைப்­பாட்­டையும் 9 மாதங்­க­ளாக அமைச்­ச­ரினால் இணங்­காண முடி­ய­வில்லை. அதுதான் முக்­கி­ய­மான விட­ய­மாகும். அத்­துடன் நீங்கள் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி உறுப்­பி­ன­ரா­வீர்கள். இதன்­படி உங்­க­ளுக்கு எதி­ராக ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யி­னரே வழக்கு தாக்கல் செய்­துள்­ளனர். அமைச்­ச­ருக்கு எதி­ராக வழக்கு தாக்கல் செய்­த­வர்கள் சுதந்­திர்க்­கட்­சி­யி­ன­ராகும் என்­பது தெட்­ட­தெ­ளி­வா­யுள்­ளது. அத்­துடன் அந்த வழக்­கினை கையாள்­ப­வர்­களும் உங்­க­ளு­டைய கனிஷ்ட சட்­டத்­த­ர­ணி­க­ளே­யாவர். எனவே இந்த வழக்­கினை பைசர் வேர்சஸ் பைசர் என்றே அழைக்க வேண்டும் என்றார்.

அச்­ச­ம­யத்தில் இடை­யீடு செய்த அமைச்சர் பைஸர் முஸ்­தபா,

உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான வர்த்­த­மா­னியில் எந்­த­வொரு குறை­பாடும் இல்லை. அதனை நான் உறு­தி­யாக கூறு­கின்றேன். நீதி­மன்­றத்­தினால் வர்த்­த­மா­னிக்கு இடைக்­கால தடை மாத்­தி­ரமே விதிக்­கப்­பட்­டுள்­ளது. எனினும் இது குறித்து ஆராய சட்ட ஆலோ­சனை பெற்று வரு­கின்றோம். எனவே இதனை உரிய முறையில் தீர்க்க முடியும் என நம்­பு­கின்றோம். அநுர குமார திஸா­நா­யக்க எம்.பி உளவு பிரி­வினை போன்று தக­வல்­களை பெறு­கின்றார். நீதி­மன்­றத்தில் வழக்கு தாக்கல் செய்­வ­தற்கு அனை­வ­ருக்கும் உரிமை உள்­ளது. இந்­நி­லையில் நான் நாட்டில் இல்­லாத போது ஒன்­றல்ல இரண்டும் நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணைகள் எனக்கு எதி­ராக சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளன. நான் எந்த தவறும் செய்­ய­வில்லை என்­ப­தனை உறு­திப்­ப­டுத்த மக்கள் நீதி­மன்­றத்தின் முன்னால் செல்­லவும் தயா­ரா­கவே உள்ளேன். மோச­டி­யான வர்த்­த­மா­னியை நான் தயா­ரிக்­க­வில்லை. இடைக்­கால தடையை நீக்­கி­யதன் பின்னர் வர்த்­த­மானி குறை­பாடு இல்லை என்­பதை சட்­டமா அதிபர் உறு­தியா தெளி­வு­ப­டுத்­தி­யுள்ளார். சிறு­பான்­மை­யி­ன­ருக்கு மதிப்­ப­ளித்தேன். அவர்­க­ளுக்கு அநீதி ஏற்­பட்ட போது முன்­னின்றேன். மக்கள் விடு­தலை முன்­னணி சார்­பா­கவும் அவர்­களின் கோரிக்­கை­களை பூர்த்தி செய்யும் வகையில் என்னால் முடிந்த விட­யங்­களை செய்­துள்ளேன் எனறார்.

அச்­ச­ம­யத்தில் மீண்டும் குறுக்­கீடு செய்த அநுர குமார திஸா­நா­யக்க எம்.பி,

வர்த்­த­மா­னிக்கு எதி­ராக வழக்கு செய்­யப்­பட்­ட­மைக்­கான காரணம் தாக்கல் செய்­த­வர்­க­ளுக்கே தெரி­யாது என்­ப­தனை நான் உறு­தி­யாக கூறு­கின்றேன். இந்த வழக்­கினை அநீதி ஏற்­பட்­ட­மைக்­காக தாக்கல் செய்­ய­வில்லை. தமது அர­சி­ய­லுக்­கான சுய தேவையை நிறை­வேற்­றிக்­கொள்­ளவே நீதி­மன்­றத்தை நாடி­யுள்­ளனர். வழக்கு தாக்கல் செய்த தரப்­பி­னரில் ஒரு­வ­ரான ஹாலி­எல வீதி அதி­கார சபையின் ஊழியர் இரா­ஜாங்க அமைச்சர் டிலான் பெரே­ராவின் உற­வி­ன­ராக இருக்­கலாம். எனினும் இதில் குடும்ப உற­வுகள் என்­ப­தனை விட அர­சியல் ரீதி­யான விட­யமே பிர­தான கார­ண­மாக அமைந்­துள்­ளது என்றார்.

அச்­ச­ம­யத்தில் இடை­யீடு செய்த அமைச்சர் பைசர் முஸ்­தபா

அர­சியல் நோக்­கு­டனே வழக்கு தாக்கல் செய்­யப்­பட்­ட­தாக கூறு­கின்­றனர். இந்த வழக்­கினை சுதந்­திரக் கட்­சியே தாக்கல் செய்­த­தா­கவும் கூறு­கின்­றனர். தாக்கல் செய்­யப்­பட்ட வழக்கு நீதி­யா­னதா? அல்­லது பிழை­யா­னதா? என்­தனை நீதி­மன்­றமே தீர்­மா­னிக்க வேண்டும். நீதி­மன்றம் செல்­வ­தற்கு நாட்டு மக்­க­ளுக்கு உரிமை உள்­ளது. நீதி­மன்றம் சென்ற பிறகு அவ­ரது வழக்கு நீதி­யா­னதா? நியா­ய­மா­னதா? என்­ப­தனை நீதி­மன்றம் தீர்­மா­னிக்கும். இதற்கு பதி­லாக தேர்­தலை தாமதம் செய்ய நான் எந்­த­வொரு ஆத­ரவும் வழங்­க­வில்லை என்றார்.

எனினும் அநுர குமார திஸா­நா­யக்க எம்.பி,

உள்­ளூ­ராட்சி மன்ற எல்லை நிர்­ணயம் தொடர்­பான வர்த்­த­மா­னிக்கு எதி­ரான வழக்­கிற்கும் உங்­க­ளுக்கும் தொடர்பு இல்லை என்­கி­றீர்­களா? அப்­ப­டி­யாயின் அதன் உண்மை நிலைமை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் மன­சாட்­சிக்கு தெரியும் என்று காட்­ட­மான தொனியில் குறிப்­பிட்டார்

அச்­ச­ம­யத்தில் அமைச்சர் பைசர் முஸ்­தபா,

எனக்கு இந்த விட­யத்தில் எந்­த­வொரு தொடர்பு கிடை­யாது. ஜனா­தி­ப­திக்கும் தொடர்பும் கிடை­யாது. இந்த வர்த்­த­மா­னிக்கு எதி­ரான வழக்கு தாக்­கலின் பின்­ன­ணியில் சுதந்­திக்­கட்­சியும் நானும் இ ருப்­ப­தாக கூறு­வ­தனை ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என்று காட்­ட­மான தொனியில் பதி­ல­ளித்தார்.

இச்­ச­ம­யத்தில் எழுந்த கூட்டு எதிர்க்­கட்சி பாரா­ளு­மன்­றக்­கு­ழுவின் தலைவர் தினேஷ் குண­வர்த்­தன எம்.பி,

அமைச்சர் இலங்­கையில் தேர்­தலை நடத்­து­வ­தனை விட்டு மோல்ட்­டாவில் தேர்தல் நடத்­து­வ­தற்கு சென்­றுள்ளார். மோல்ட்­டாவின் அர­சியல் வர­லாற்றை தெரிந்து வந்தால் நன்­றாக இருக்கும் என்­ற­போது, சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய அம­ருங்கள் என்று கூறி­ய­வாறு இடை­யூறு விளை­வித்­த­மை­யினால் தினேஷ் குண­வர்­தன எம்.பி ஆத்­தி­ர­ம­டைந்தார்.

இதனால் தினேஷ் குண­வர்­தன எம்.பி, சபா­நா­ய­கரே கொஞ்சம் இருங்கள். என்னைப் பேச விடுங்கள். சபா­நா­ய­கரே நீங்கள் பொறு­மை­யாக அம­ருங்கள். ஏன எமக்கு பேச இட­ம­ளிக்­காமல் மறுக்­கின்றீர் என்றார்.

இதனை அடுத்து சபா­நா­யகர் தினேஷ் குண­வர்­த­ன­வுக்கு உரை­யாற்­று­வ­தற்கு இட­ம­ளித்தார்.

அத­னை­ய­டுத்து தினேஷ் எம்.பி,

உள்­ளு­ராட்சி மன்ற தேர்­தலில் மக­ளிர்­க­ளுக்கு 25 வீதம் இட ஒதுக்­கீடு வழங்­கி­யுள்­ளீர்கள். எனினும் அந்த 25 வீத பெண் பிர­தி­நி­தித்­து­வத்தை தெரிவு செய்­வ­தற்கும் தேர்தல் நடத்­தப்­பட வேண்டும். எனினும் தேர்­த­லுக்கு தடை ஏற்­பட்­டுள்­ள­மையை நீர் அறி­வீரா? என்றார்

அச்­ச­ம­யத்தில் அமைச்சர் பைசர் முஸ்­தபா,

எல்லை நிர்­ணய வர்த்­த­மானி தொடர்பில் நீதி­மன்றம் தீர்ப்­பொன்று உள்­ளது. ஆகவே தீர்ப்­பினை ஏற்­றுக்­கொள்ள வேண்­டி­யுள்­ளது. என்­றாலும் சட்ட ஆலோ­சனை பெற்று துரித நட­வ­டிக்கை எடுப்போம். இந்த விட­யத்தில் என்னால் பொறுப்பு கூற முடி­யாது என்றார்.

அத­னை­ய­டுத்து எழுந்த ரோஹித அபே­கு­ண­வர்­தன எம்.பி,

 இந்த கால தாம­தத்­திற்கு தான் பொறுப்பு இல்லை என அமைச்சர் கூறு­கின்றார் என்று கருத்­துக்­களை முன்­வைக்க முனைந்­த­போது அமைச்சர் பைசர் முஸ்­தபா எழுந்து குறுக்­கீடு செய்­த­வண்­ண­மி­ருந்தார்.அத­னை­ய­டுத்து சபா­நா­ய­கரின் அறி­வுத்­தலின் பிர­காரம் அமைச்சர் பைசர் ஆச­னத்தில் அம­ரவும் ரோஹித்த எம்.பி கருத்­துக்­களை தொடர்ந்தார். அவர், அமைச்­ச­ருக்கு பொறுமை இல்லை. அமைச்­சரே கொஞ்சம் அம­ருங்கள். உங்­க­ளுக்கு என் மீது விருப்பம் உள்­ளது தானே? அப்­ப­டி­யாயின் அம­ருங்கள். அமைச்­சரே தேர்தல் கால தாம­தத்­திற்கு உங்கள் மீது குற்றம் சுமத்­தி­யது நாங்கள் அல்ல. ஐக்­கிய தேசியக் கட்சி உறுப்­பி­னர்­க­ளாகும் அதனைப் புரிந்­து­கொள்­ளுங்கள் என்றார்.

அதன்­போது ஆச­னத்தில் இருந்து எழுந்த அமைச்சர் பைசர் முஸ்­தபா,

இந்த பிரச்­சி­னையை எவ­ருக்கு எப்­ப­டியும் கூற முடியும். ஆகையால் இதனை பற்றி நான் அலட்­டிக்­கொள்ள மாட்டேன். என்­னு­டைய பொறுப்பை சரி­வர நிறை­வேற்­றி­யுள்ளேன். எனினும் ரோஹித்த எம்.பி பின்­வ­ரிசை எம்.பிகளை காரணம் காட்டி அர­சியல் இலா­ப­மீட்ட முனை­கின்றார் என்றார்.

இத­னை­ய­டுத்து சாப­நா­யகர் இதனை விவா­த­மாக்க முடி­யாது என்று கூறி அறி­வுரை செய்­த­தோடு சபையை கட்­டுப்­பாட்­டிற்குள் கொண்டு வந்தார். அத­னைத்­தொ­டர்ந்து அமைச்சர் பைஸர் தனது உரையைத் தொடர்ந்தார். ஒதுக்­கீட்டு விட­ய­தா­னத்­திற்­கு­ரிய விட­யங்­களை விடுத்து தனது பயணம், உள்­ளு­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்தல் விட­யங்கள் தொடர்பில் தான் அவ­ரது கருத்­துக்கள் இருந்­தன.

இந்­நி­லையில் அமைச்சர் பைஸரின் உரையை அடுத்து மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலை­வரும் எதிர்க்­கட்சி பிர­தம கொற­டா­வு­மான அநுர குமார திஸா­நா­யக்க எம்..பிக்;கு உரை­யாற்ற சந்­தர்ப்பம் வழக்­கப்­பட்­டது. அவரும் தனது உரையில் அமைச்சர் பைசர் முஸ்­த­பாவை கடு­மை­யாக சாடினார்.

குறிப்­பாக முன்­னைய ஆட்­சியின் போது மஹிந்த ராஜ­ப­க்ஷவை வேறு வழியில் வழி­ந­டத்தி சென்ற கும்­பலே தற்­போது தேர்­தலை தொடர்ந்து தாமதம் செய்­கின்­றது. மஹிந்த ராஜ­ப­க்ஷவை தவ­றான முறையில் வழி­ந­டத்தி சென்­றது முஸ்­த­பாக்­க­ளாகும். அதில் பைசர் முஸ்­த­பாவும் ஒரு­வ­ராகும். முன்­னைய ஆட்­சியின் போது ஷிரானி பண்­டா­ர­நா­யக்­க­வுக்கு ஏற்­பட்ட நிலை­மைக்கும் நீதித்­துறை சீர­ழி­வ­தற்கு முஸ்­தா­பாவே கார­ண­மாகும் என்றார்.

இச்­ச­ம­யத்தில் குறுக்­கீடு செய்த அமைச்சர் பைஸர் முஸ்­தபா

நிதி­மன்ற விட­யத்தில் முன்னாள் ஜனா­தி­பதி தலை­யிட்­ட­மையை கூற முடி­யாது. முன்னாள் ஜனா­தி­பதி மீது தேவை­யற்ற முறையில் பழி­சு­மத்த முடி­யாது. ஆகவே அவர் அதனை திருத்­திக்­கொள்ள வேண்டும் என்று காட்­ட­மான தொனியில் கூறினார். இதனால் சபையில் மீண்டும் அமை­தி­யின்மை ஏற்­பட்­டது.

அச்­ச­ம­யத்தில் அநுர குமார திஸா­நா­யக்க எம்.பி,

மோசடி செய்­த­வர்­க­ளுக்கும் குழப்­பத்தில் பின்­ன­ணியில் இருப்­ப­வர்­க­ளுக்கும் பொறுமை இருக்­காது. நீதி­மன்ற கட்­ட­மைப்பு முர­ணாண வகையில் பிர­யோகம் செய்­யப்­பட்­டுள்­ளது. தேர்தல் முறைமை தொடர்­பான வர்த்­த­மானி அசோக பீரிஸின் வர்த்­த­மானி கிடை­யாது. அது உங்­க­ளது வர்த்­த­மா­னி­யாகும். உங்­க­ளது வர்த்­த­மா­னியே கால தாத­மத்­திற்கு பிர­தான கார­ண­மாகும்.

தேர்­த­லுக்­கான மைதானம் தயா­ரான போதே தாம­தத்­திற்கு வழி­செய்து விட்­டனர். அமைச்­சரே வர்த்­த­மானி அறி­வித்­தலில் எந்­த­வொரு பிழையும் இல்லை என்று கூறு­கின்­றீர்கள். எனினும் தற்­போது நீதி­மன்ற தடைக்கு உட்­ப­டாத 133 உள்­ளூ­ராட்சி மன்றங்களில் 40 வரையான சபைகளின் பெயர்களில் அச்சுபிழை உள்ளது. அதனை நீங்கள் திருத்த கூடாதா? அந்த திருத்தங்களுக்கு ஜனாதிபதி கைச்சாத்திடுவாரா? என்பது சந்தேகம். கைச்சாத்திட்ட பின்பு தென்கொரியா செல்வார் என்பதும் எமக்கு சந்தேகம். எனவே அமைச்சர் தனது பொறுப்பை சரிவர நிறைவேற்றவில்லை. இந்த கால தாமதம் அரசின் சாணக்கிய விளையாட்டாகும். சாணக்கிய விளையாட்டை விளையாடிவிட்டு மறைய வேண்டாம். அரசியல் சாணக்கிய விளையாட்டை விளையாடினோம் என்று கூறுங்கள். கொள்கையில்லாதவர்களே மறைகின்றனர். நிறைவேற்று அதிகாரத்துடன் இணைந்தே தேர்தல் தாமத விளையாட்டை முன்னெடுத்துள்ளனர். எனவே தேர்தலுக்காக வீதியில் இறங்க தயாராக உள்ளோம் என்றார்.

அச்சமயத்தில் அமைச்சர் பைசர் முஸ்தபா,

 நீங்கள் எவ்வாறும் குற்றம் சாட்டலாம். நான் நேர்மையாகவே செயற்பட்டேன். அரசியல் சாணக்கிய விளையாட்டை விளையாட வேண்டிய அவசியம் எமக்கு இல்லை. நாம் தற்போது துரிதமாக தேர்தலை நடத்துவதற்கு சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனையை பெறவுள்ளோம். அந்த ஆலோசனையுடன் செயற்படவுள்ளேன் என்றார். 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-11-28#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.