Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வட கிழக்கில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் தினம் அனுஷ்டிப்பு

Featured Replies

வட கிழக்கில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் தினம் அனுஷ்டிப்பு

 

பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று பொதுச்சுடரேற்றி அஞ்சலி
(நமது பிராந்திய நிருபர்கள்)

வடக்கு, கிழக்குப் பகு­தி­களில் மாவீரர் நாள் நிகழ்வு நேற்று மிகவும் உணர்­வெ­ழுச்­சி­யுடன் இடம்­பெற்­றது. மாவீரர் துயி­லு­மில்­லங்­களில் ஒன்­று­கூ­டிய பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்கள் உயி­ரி­ழந்த தமது உற­வு­களை நினை­வு­கூர்ந்து தீப­மேற்றி அஞ்­சலி செலுத்­தினர்.

வடக்கில் யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு, மன்னார், வவு­னியா ஆகிய மாவட்­டங்­களில் உள்ள மாவீரர் துயி­லு­மில்­லங்­களில் மாபெரும் அஞ்­சலி நிகழ்­வுகள் இடம்­பெற்­றன.

இதே­போன்றே கிழக்கில் மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, திரு­கோ­ண­மலை மாவட்­டங்­க­ளிலும் உணர்­வு­பூர்­வ­மாக உயி­ரி­ழந்த முன்னாள் போரா­ளி­க­ளுக்கு அவர்­க­ளது உற­வுகள் அஞ்­சலி செலுத்­தினர்.

மாவீரர் துயி­லு­மில்­லங்­களில் நேற்று மாலை ஒன்­று­கூ­டிய மக்கள் மாலை 6.05 மணி­ய­ளவில் பொதுச்­சுடர் ஏற்­றப்­பட்­ட­தை­ய­டுத்து சுட­ரேற்றி கண்­ணீர்­விட்டு கத­றி­ய­ழுது தமது உற­வு­களை நினை­வு­கூர்ந்­தனர்.

2009 ஆம் ஆண்டு யுத்தம் முடி­வ­டைந்த பின்னர் முதன் முத­லாக வடக்கு, கிழக்­கி­லுள்ள மாவீரர் துயி­லு­மில்­லங்­களில் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்கள் ஒன்­று­கூடி முதற்­த­ட­வை­யாக உணர்­வெ­ழுச்­சி­யுடன் மாவீரர் நாள் நிகழ்­வு­களை அனுஷ்­டித்­துள்­ளனர்.

கிளி­நொச்­சியில்

கிளி­நொச்­சியில் உணர்­வெ­ழுச்­சி­யுடன் மாவீரர் நாள் நிகழ்­வுகள் நேற்று மாலை இடம்­பெற்­றன.

கிளி­நொச்­சியில் கன­க­புரம், முழங்­காவில், தேராவில் ஆகிய மூன்று துயி­லு­மில்­லங்­க­ளிலும் மாவீ­ரர்­களின் பெற்­றோர்கள், உற­வி­னர்கள், முன்னாள் போரா­ளிகள், பொது மக்கள் என பல்­லா­யி­ரக்­க­ணக்­கா­ன­வர்கள் உணர்­வு­பூர்­வ­மாக ஒன்று திரண்டு உய­ரிய இலட்­சி­யத்­திற்­காக தங்­களின் இன்­னு­யிர்­களை தியாகம் செய்­த­வர்­க­ளுக்கு தங்­களின் அஞ்­ச­லி­களை செலுத்­தி­யுள்­ளனர்.

அந்த வகையில் கிளி­நொச்சி கன­க­புரம் மாவீரர் துயி­லு­மில்­லத்தில் மாலை 6.05 மணிக்கு மணி­யோசை எழுப்­பட்டு, அக­வ­ணக்கம் செலுத்­தப்­பட்ட பின்னர் பிர­தான பொதுச் சுடரை போரா­ளியின் தாயார் ஒருவர் ஏற்­றி­வைக்க ஏனைய சுடர்­களை மாவீ­ரர்­களின் பெற்­றோர்கள் மற்றும் கலந்­து­கொண்­ட­வர்­களால் ஏற்றி அஞ்­சலி செலுத்­தினர்.

தொடர்ந்து துயி­லு­மில்ல பாட­லான ''தாயக கன­வுடன் சாவினை தழு­விய சந்­தன பேழை­களே'' எனும் பாடல் ஒலி­ப­ரப்­பா­கி­யது. இதன் போது மாவீ­ரர்­களின் பெற்றோர், உற­வி­னர்கள் மற்றும் கலந்­து­கொண்­ட­வர்கள் மிகவும் அமை­தி­யாக கண்ணீர் மல்க உற­வு­களை நினைவு கூர்ந்­த­மை­யினை காணக் கூடி­ய­தாக இருந்­தது.

சுமார் ஐயா­யிரம் வரை­யான பொது மக்கள் இங்கு உணர்­வெ­ழுச்­சி­யுடன் கலந்­து­கொண்­டனர். கடந்த வரு­டத்தை விட இவ்­வ­ருடம் மிகவும் சிறப்­பாக மாவீரர் நாள் நிகழ்­வுகள் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

முல்­லைத்­தீவில்

முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் மல்­லாவி, வன்­னி­வி­ளாங்­குளம், முள்­ளி­ய­வளை, அலம்பில், இர­ணைப்­பாலை, இரட்­டை­வாய்க்கால், முள்­ளி­வாய்க்கால், களிக்­காடு கோடா­லிக்­கல்லு ஆகிய மாவீரர் துயி­லு­மில்­லங்­களில் நேற்று மாலை உணர்­வு­பூர்­வ­மாக பொதுச்­சுடர் ஏற்றி உயி­ரி­ழந்த முன்னாள் போரா­ளி­க­ளுக்­காக அஞ்­சலி செலுத்­தப்­பட்­டது. பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்கள் கலந்­து­கொண்டு தீப­மேற்றி கண்­ணீர்­விட்டு கத­றி­ய­ழுது தமது உற­வு­களை நினை­வு­கூர்ந்­தனர்.

மன்­னாரில்

மன்னார் மாவட்­டத்தில் ஆள்­காட்­டி­வெ­ளி­யி­லுள்ள மாவீரர் துயி­லு­மில்­லத்தில் நேற்று மாலை அஞ்­சலி நிகழ்வு இடம்­பெற்­றது. மூவா­யி­ரத்­துக்கும் மேற்­பட்ட மக்கள் கலந்­து­கொண்டு பொதுச்­சு­ட­ரேற்றி நினை­வி­டத்தில் மல­ரஞ்­சலி செலுத்தி அஞ்­சலி செலுத்­தினர். இந்த நிகழ்வில் அருட்­ப­ணி­யா­ளர்கள், அருட்­ச­கோ­த­ரிகள், கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சாள்ஸ் நிர்­ம­ல­நாதன், வட­மா­காண மகளிர் அமைச்சர் அனந்தி சசி­தரன், சுகா­தார அமைச்சர் குண­சீலன் உட்­பட பெரு­ம­ள­வானோர் பங்­கேற்­றி­ருந்­தனர்.

வவு­னி­யாவில்

வவு­னியா மாவட்­டத்தில் ஈச்­சங்­குளம் துயி­லு­மில்­லத்­திற்கு அரு­கா­மையில் வவு­னியா மாவட்ட பிர­ஜைகள் குழுவின் ஏற்­பாட்டில் நேற்று மாலை மாவீரர் தின நிகழ்வு அனுஷ்­டிக்­கப்­பட்­டது. இந்த நிகழ்வில் பல நூற்­றுக்­க­ணக்­கா­ன­வர்கள் கலந்­து­கொண்டு உயி­ரி­ழந்த தமது உற­வு­க­ளுக்­காக அஞ்­சலி செலுத்­தினர்.

மட்­டக்­க­ளப்பில்

மட்­டக்­க­ளப்பு மாவட்டம் கொக்­கட்­டிச்­சோலைப் பிர­தேசத்

தில் அமைந்­துள்ள மாவ­டி­முன்­மாரி துயி­லு­மில்­லத்தில் நேற்று மாலை

6.05 மணிக்கு ஈகைச் சுடர் ஏற்றி அஞ்­சலி செலுத்­தப்­பட்­டது.

மாவீ­ரர்­களின் பெற்­றோர்கள், உற­வி­னர்கள், பொது­மக்கள், தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், முன்னாள் கிழக்கு மாகா­ண­சபை உறுப்­பி­னர்கள் உள்­ளிட்ட பல நூற்றுக் கணக்­கானோர் இதில் கலந்து கொண்­டி­ருந்­தனர்.

யுத்தம் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்ட பின்னர் இத்­து­யி­லு­மில்லம் கவ­னிப்­பா­ரற்ற நிலையில் பற்­றைக்­கா­டாக காட்­சி­ய­ளித்­தது. பின்னர் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பா.அரி­ய­நேத்­தி­ரனின் முயற்­சி­யினால் துப்­ப­ரவு செய்­யப்­பட்­டுள்­ளது. யுத்தம் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்ட பின்னர் இத்­து­யி­லு­மில்­லத்தில் வெளிப்­ப­டை­யாக மாவீ­ரர்­களின் பெற்­றோர்கள் உள்­ளிட்ட பலரும் ஒன்­று­தி­ரண்டு ஈகைச் சுடர் ஏற்றி, அஞ்­சலி செலுத்­தி­யுள்­ளமை இதுவே முதற்­த­ட­வை­யாகும்.

யாழ்ப்­பா­ணத்தில்

மாவீரர் நாள் நிகழ்­வுகள் மாவீரர் எழுச்சிக் கீதங்­க­ளுடன் யாழ்.மாவட்­டத்தில் நேற்று மாலை உணர்­வெ­ழுச்­சி­யுடன் அனுஷ்­டிக்­கப்­பட்­டது.

யாழ்.பல்­க­லைக்­க­ழ­கத்தில் மாவீர்­க­ளுக்­காக விசே­ட­மாக ஒதுக்­கப்­பட்ட இடத்தில் நேற்று மாலை 6.05 மணிக்கு ஈகைச்­சு­டர்கள் ஏற்­றப்­பட்டு மாவீர்­க­ளுக்­கான அஞ்­சலி நிகழ்­வுகள் இடம் பெற்­றது. பல்­க­லைக்­க­ழக சமூ­கத்­தினால் ஏற்­பாடு செய்­யப்­பட்ட இந்­நி­கழ்வில் ஏரா­ள­மான மாண­வர்கள் கலந்­து­கொண்டு மாவீ­ரர்­க­ளுக்­கான அஞ்­ச­லி­களைச் செலுத்­தினர்.

தீவகக் கோட்ட மாவீரர் பணிக்­கு­ழுவின் ஏற்­பாட்டில் யாழ்.வேலணை சாட்­டி­யி­லுள்ள மாவீரர் துயிலும் இல்­லத்தில் உணர்­வெ­ழுச்­சி­யுடன் மாவீரர் தின நிகழ்­வுகள் நேற்று மாலை ஆரம்­ப­மா­னது. மூன்று மாவீ­ரர்­களின் தந்­தை­யான இரா­ச­லிங்கம் ஈகைச்­சு­ட­ரினை ஏற்றி வைத்­த­துடன் அஞ்­சலி நிகழ்­வுகள் ஆரம்­ப­மா­னது. அத­னைத்­தொ­டர்ந்து மாவீ­ரர்­களின் பெற்­றோர்கள், உற­வி­னர்கள் மற்றும் பொது­மக்கள் எனப் பலர் மாவீ­ரர்­க­ளுக்கு மலர் தூவி அஞ்­சலி செலுத்­தி­னார்கள்.

இந்­நி­கழ்வில் மாகாண சபை உறுப்­பினர் விந்தன் கன­க­ரட்ணம், மாவீ­ரர்­களின் பெற்றோர் மற்றும் உற­வி­னர்கள், முன்னாள் போரா­ளிகள் என பல நூற்­றுக்­க­ணக்­கானோர் கலந்து கொண்­டனர்.

தமி­ழ­ரசுக் கட்சி அலு­வ­ல­கத்தில்

இதே­வேளை மார்ட்டீன் வீதி­யி­லுள்ள இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சியின் அலு­வ­ல­கத்­திலும் மாவீரர் அஞ்­சலி நிகழ்வு இடம்­பெற்­றது. நிகழ்வில் பிர­தான ஈகைச்­சு­ட­ரினை தமி­ழ­ரசுக் கட்­சியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை சேனா­தி­ராசா ஏற்­றி­வைத்தார். அதனைத் தொடர்ந்து வட­மா­காண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே சிவ­ஞானம் மற்றும் கட்­சியின் ஆத­ர­வா­ளர்கள் சுட­ரேற்றி மலர் தூவி அஞ்­சலி செலுத்­தி­னார்கள்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணியின் ஏற்­பாட்டில் கோப்பாய் மாவீரர் துயி­லு­மில்­லத்தின் முன்­பாக மாவீரர் தின நிகழ்­வுகள் நடை­பெற்­றது. நிகழ்வின் பொது ஈகைச்­சு­ட­ரினை மாவீ­ரரின் தந்தை ஒருவர் ஈகைச்­சடர் ஏற்­றி­யதைத் தொடர்ந்து தீபங்­களை தமிழ்த்­தே­சிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் மாவீரர்களின் உறவினர்கள், முன்னாள் போராளிகள் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

வடமராட்சியில்

யாழ்ப்பாணம் வடமராட்சியில் வல்வெட்டித்துறை, உடுத்துறை பகுதிகளில் மாவீரர் நாள் நினைவுதினம் மிகவும் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது. வடமராட்சி கிழக்கு உடுத்துறை மாவீரர் துயிலுமில்லத்தில் நேற்று மாலை ஒன்றுகூடிய பல்லாயிரக்கணக்கான மக்கள் தமது உறவுகளை பொதுச்சுடரேற்றி நினைவுகூர்ந்தனர்.

இதேபோன்று வல்வெட்டித்துறை, தீருவில் குமரப்பா புலேந்திரன் சதுக்கத்தில் ஒன்றுகூடிய பொதுமக்கள் மாவீரர் நினைவுநாளை அனுஷ்டித்தனர். மாலை 6.05 மணியளவில் முன்னாள் போராளி மேஜர் முரளியின் தாயார் கிண்ணியம்மா பொதுச்சுடரினை ஏற்றிவைத்தார். இதனைத் தொடர்ந்து ஏனையோரும் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.

(எம்.நியூட்டன், வட­ம­ராட்சி, கரைச்சி, கண்­டா­வளை, பட்­டி­ருப்பு, பெரி­ய­போ­ர­தீவு, ஓமந்தை, தலை­மன்னார் நிரு­பர்கள்)

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-11-28#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.