Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உதவி செய்­யா­விட்­டாலும் உபத்­தி­ரவம் செய்­யா­தி­ருப்­பது நன்று

Featured Replies

உதவி செய்­யா­விட்­டாலும் உபத்­தி­ரவம் செய்­யா­தி­ருப்­பது நன்று

 

தமிழ் மக்­களின் அன்­றாட பிரச்­சி­னை­க­ளுக்கும் அடிப்­படைப் பிரச்­சி­னைக்கும் தீர்வு காண்­ப­தற்­கான முயற்­சி­களை முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான பொது எதி­ர­ணி­யினர் அர­சியல் நோக்கம் கொண்டு குழப்­பி­ய­டிக்கும் செயற்­பாட்டில் ஈடு­பட்டு வரு­கின்­றனர்.

மூன்று தசாப்­த­கால யுத்­தத்­தினால் தமிழ் மக்கள் பெரும் சொல்­லொணாத் துன்­பங்­களை அனு­ப­வித்து வந்­தனர். 2009 ஆம் ஆண்டு இடம்­பெற்று வந்த இறுதி யுத்­தத்தின் போது பல்­லா­யி­ரக்­க­ணக்­கான தமிழ் மக்கள் படு­கொலை செய்­யப்­பட்­டனர். பல்­லா­யி­ரக்­க­ணக்­கானோர் அங்­க­வீ­னர்­க­ளா­யினர். ஆயி­ரக்­க­ணக்­கானோர் காணா­மல்­போ­யினர். 90 ஆயி­ரத்­திற்கும் மேற்­பட்ட பெண்கள் வித­வை­க­ளாக்­கப்­பட்­டனர். 9 ஆயி­ரத்­திற்கும் மேற்­பட்ட சிறு­வர்கள் அநா­த­ர­வாக்­கப்­பட்­டனர். இவ்­வாறு பேரி­ழப்­புக்­களை சந்­தித்த தமிழ் மக்கள் இன்­னமும் அந்த வடுக்­க­ளி­லி­ருந்து விடு­ப­ட­மு­டி­யாமல் திண்­டா­டி­ வ­ரு­கின்­றனர்.

அழிந்­து­போன தமது வாழ்­வா­தா­ரத்தை மீளக்­கட்­டி­யெ­ழுப்ப முடி­யாது அவர்கள் பெரும் கஷ்­டங்­களை அனு­ப­வித்து வரு­கின்­றனர். இடம்­பெ­யர்ந்த மக்கள் இன்­னமும் முழு­மை­யாக தமது சொந்த இடங்­களில் மீளக்­கு­டி­யேற முடி­யாத நிலைமை நீடித்து வரு­கின்­றது. படை­யி­னரால் சுவீ­க­ரிக்­கப்­பட்ட காணிகள் இன்­னமும் முழு­மை­யாக மீள வழங்­கப்­ப­ட­வில்லை. காணா­மல்­போ­னோ­ரது பிரச்­சி­னை­யா­னது நீடித்து வரு­கின்­றது. அர­சியல் கைதிகள் விவ­காரம் தொடர்­க­தை­யாக மாறி­யுள்­ளது. யுத்­தத்தில் பாதிக்­கப்­பட்ட மக்கள் வேலை­வாய்ப்­பின்றி அல்­லல்­ப­டு­கின்­றனர். புனர்­வாழ்­வ­ளிக்­கப்­பட்ட முன்னாள் போரா­ளிகள் 12600 பேர்­வ­ரையில் சமூ­க­ம­யப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள போதிலும் அவர்­க­ளுக்கு உரிய வரு­மானம் இன்­றிய நிலைமை காணப்­ப­டு­கின்­றது.

இவ்­வாறு யுத்­தப்­பா­திப்­புக்­குள்­ளான தமிழ் மக்­க­ளுக்­கான அன்­றாடப் பிரச்­சி­னைகள் இன்­னமும் முழு­மை­யாக தீர்க்­கப்­ப­ட­வில்லை. இந்த பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­காண அர­சாங்கம் முயற்­சிக்­கின்­ற­போது அதற்கு எதி­ராக பொது எதி­ரணி உட்­பட இன­வாத சக்­திகள் கருத்­துக்­களை தெரி­வித்து வரு­கின்­றன. சிங்­கள மக்கள் மத்­தியில் தவ­றான கருத்­துக்­களை பரப்பும் செயற்­பா­டுகள் இடம்­பெற்று வரு­கின்­றன.

இதே­போன்றே தமிழ் மக்­களின் இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காணும் வகையில் அர­சியல் தீர்வை உள்­ள­டக்­கிய புதிய அர­சியல் யாப்பை உரு­வாக்கும் முயற்சி இடம்­பெற்று வரு­கையில் அதற்கு எதி­ரா­கவும் பொது எதி­ரணி போர்க்­கொடி தூக்­கி­யுள்­ளது. புதிய அர­சியல் யாப்­பா­னது நாட்டை பிள­வு­ப­டுத்­தி­விடும் என்று பொது எதி­ரணி குற்­றம்­சாட்டி ­வ­ரு­கின்­றது. புதிய அர­சி­யல்­யாப்பு முயற்சியை முறி­ய­டிப்­ப­தற்­காக முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­பாய ராஜ­பக் ஷ தலை­மையில் 'எலிய' என்ற அமைப்பு ஆரம்­பிக்­கப்­பட்டு பிர­சா­ரங்­களும் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

தமிழ் மக்கள் தமது அன்­றா­டப்­ பி­ரச்­சி­னைகள் தீர்க்­கப்­ப­டா­மையைக் கண்­டித்து தொடர்ச்­சி­யான போராட்­டங்­களில் ஈடு­பட்டு வரு­கின்­றனர். காணா­மல்­போ­னோ­ரது உற­வி­னர்கள் கடந்த ஆறு­மா­த­கா­லத்­திற்கும் மேலாக கிளி­நொச்சி, வவு­னியா, யாழ்ப்­பாணம், திரு­கோ­ண­மலை என பல பகு­தி­க­ளிலும் தொடர்ச்­சி­யான கவ­ன­யீர்ப்புப் போராட்­டத்தில் ஈடு­பட்­டுள்­ளனர். இத­னை­விட கேப்­பாப்­பு­லவு உட்­பட பல பகு­தி­களில் மக்கள் தமது காணி­களை மீள வழங்­கு­மாறு தொடர்ச்­சி­யாக போராடி வரு­கின்­றனர். நல்­லாட்சி அர­சாங்­க­மா­னது பத­விக்கு வந்­த­தை­ய­டுத்து வலி­காமம் வடக்கு மற்றும் திரு­கோ­ண­ம­லையில் சம்பூர் உட்­பட பகு­தி­க­ளிலும் பொது­மக்­களின் காணி­களை விடு­வித்­துள்­ளது. 5000 ஏக்கர் காணிகள் வரையில் இது­வரை விடு­விக்­கப்­பட்­டுள்­ளன. தொடர்ச்­சி­யாக காணி­களை விடு­விக்க முயற்­சிகள் எடுக்­கப்­படும் போது அதற்கு எதி­ராக பொது எதி­ர­ணி­யினர் கருத்­துக்­களை தெரி­வித்து வந்­த­துடன் சிங்­கள மக்கள் மத்­தியில் இன­வா­தத்­தையும் ஊட்­டி­ வந்­தனர்.

இதே­போன்றே ஏனைய பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­காண முயற்சி எடுக்­கின்ற போது அதற்கு எதி­ரா­கவும் அவர்கள் செயற்­பட்டு வந்­தனர். இதனால் அர­சாங்­க­மா­னது இந்த விட­யத்தில் தாம­தப்­போக்கை காண்­பிக்கும் நிலைமை உருவா­கி­யி­ருந்­தது. இவ்­வா­றான சூழ்­நிலையில் தற்­போது பொது எதி­ர­ணி­யா­னது காணி விடுவிப்பு விடயம் தொடர்பில் தமிழ் மக்­களை கவரும் வகையில் கருத்து தெரி­வித்­துள்­ளது.

கடந்த வெள்­ளிக்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­றிய கூட்டு எதிர்க்­கட்­சியின் பாரா­ளு­மன்றக் குழுத்­த­லைவர் தினேஷ் குண­வர்த்­தன பாரா­ளு­மன்­றத்தில் விசேட குழு­வொன்றை அமைத்து வடக்கு, கிழக்­கி­லுள்ள காணி­களை துரி­த­மாக விடு­விக்க நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும். முன்­னைய ஆட்­சியின் போதும் எம்மால் முடி­யு­மான அள­விற்கு காணி­களை விடு­வித்தோம். தற்­போது பெரு­ம­ள­வி­லான நிலப்­ப­ரப்­புக்­களில் கண்­ணி­வெ­டிகள் அகற்­றப்­பட்­டு­விட்­டன. ஆகவே, காணி விடு­விப்­புக்கு நாம் பூரண ஒத்­து­ழைப்பை வழங்­குவோம் என்று தெரி­வித்­துள்ளார்.

தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு உறுப்­பி­னர்கள் காணி விடு­விப்பு தொடர்பில் கோரிக்கை விடுத்­துள்­ளனர். ஆகவே, இந்தப் பிரச்­சி­னையை துரி­த­மாக தீர்க்­க­வேண்டும். இது தொடர்பில் விசேட கவனம் செலுத்­த­வேண்டும். குழு­வொன்றை நிய­மித்து இதற்­கான நட­வ­டிக்­கையை எடுக்­க­வேண்டும். இந்த விட­ய­மா­னது சர்­வ­தே­சத்­துடன் சம்­பந்­தப்­பட்ட விட­ய­மாகும். எனவே, இதற்கு பூரண ஆத­ரவை வழங்க நாம் தயார் என்றும் தினேஷ் குண­வர்த்­தன கூறி­யுள்ளார்.

இதே­போன்றே புதிய அர­சி­யல்­யாப்பு முயற்­சிக்கு எதி­ராக செயற்­பட்டு வரும் பொது எதி­ர­ணி­யா­னது அது­ தொ­டர்­பான கூட்­டங்­களை நடத்­தி­வ­ரு­கின்­றது. அநு­ரா­த­பு­ரத்தில் நேற்று முன்­தினம் 'எலிய ' அமைப்பின் தலைவர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ தலை­மையில் கூட்­ட­மொன்று நடை­பெற்­றது. இந்­தக்­கூட்­டத்தில் கருத்து தெரி­வித்த கோத்­த­பாய ராஜ­பக் ஷ சிரேஷ்ட அர­சி­யல்­வா­தி­யான எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்தன் 'எலிய' அமைப்­பினை இன­வாத அமைப்­பாக சித்­தி­ரிக்­கின்­ற­மை­யா­னது கவ­லை­ய­ளிக்கும் விட­ய­மாக உள்­ளது. 'எலிய' அமைப்­பா­னது இந்த நாட்டின் எதிர்­கா­லத்தின் மீதான கரி­ச­னையின் பேரி­லேயே உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. அதன் கார­ண­மா­கவே நான் இந்த அமைப்­புடன் இணைந்து அதி­க­ளவில் செயற்­பட்டு வரு­கின்றேன். எதிர்க்­கட்சித் தலைவர் ஒரு சிரேஷ்ட அர­சி­யல்­வா­தி­யாவார். அவர் ஏன் அவ்­வாறு கூறு­கின்றார் என்று எனக்குத் தெரி­ய­வில்லை என்று கூறி­யுள்ளார். .

முப்­பது வரு­டங்­க­ளாக இந்த நாட்டில் யுத்தம் நீடித்­த­மை­யினால் என்னால் தமிழ் மக்­க­ளுக்­கான சேவையை முன்­னெ­டுக்க முடி­யா­தி­ருந்­தது. அந்த நேரத்தில் எவ்­வா­றான இன­வாத நிலை­மைகள் இருந்­தன என்­பதை எதிர்க்­கட்சித் தலைவர் அறிவார். யுத்தம் நிறை­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டதன் பின்னர் தமிழ் மக்­களின் மீள்­கட்­டு­மானம் உள்ளிட்ட அனைத்து விட­யங்­க­ளுக்கும் என்­னா­லான செயற்­பா­டு­களை அதி­க­மான ஈடு­பாட்­டுடன் செய்­துள்ளேன். எதிர்க்­கட்சித் தலை­வரை விடவும் தமிழ் மக்­க­ளுக்­காக அதிக ஈடு­பாட்­டுடன் நான் செயற்­பட்­டுள்ளேன். தமிழ் மக்­களை நாம் ஓரம்­கட்­ட­வில்லை. அவர்­களை அடக்­கு­மு­றைக்குள் தள்­ள­வில்லை. அவர்­க­ளுக்கு பிரச்­சினை இருந்தால் அவற்றை கூறு­மி­டத்து தீர்­வு­களை வழங்­கு­வ­தற்கு தயா­ராக உள்ளோம் என்றும் கோத்­த­பாய ராஜ­பக் ஷ தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

தமிழ் மக்­களின் அன்­றாடப் பிரச்­சி­னை­க­ளையும் அடிப்­படைப் பிரச்­சி­னை­க­ளையும் தீர்ப்­ப­தற்கு அர­சாங்கம் முய­லும்­போது அதற்கு முட்­டுக்­கட்­டை­யிடும் பொது எதி­ர­ணி­யா­னது தற்­போது ஓர­ள­விற்­கேனும் தமிழ் மக்­களின் பிரச்­சி­னையை புரிந்­து­கொண்­டுள்­ளமை வர­வேற்­கத்­தக்­க­தாகும். கூட்டு எதி­ர­ணியின் பாரா­ளு­மன்றக் குழுத்­த­லைவர் தினேஷ் குண­வர்த்­தன பாரா­ளு­மன்­றத்தில் காணிகள் விடு­விப்பு தொடர்­பாக தெரி­வித்த கருத்து யதார்த்­த­பூர்­வ­மா­ன­தாக உள்­ளது. காணி விடு­விப்­புக்கு எதிர்ப்பு தெரி­வித்து வந்த பொது எதி­ர­ணியே இன்று காணி­களை விடு­விக்­க­வேண்டும் என்று கூறியுள்ளது. யாழ்ப்பாணத்திற்கு சில மாதங்களுக்கு முன்னர் விஜயம் செய்திருந்த முன்னாள் அமைச்சர் பஷில் ராஜ­பக் ஷவும் இந்த விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவித்திருந்தார்.

'எலிய' அமைப்பின் தலைவரும் முன்னாள் பாதுகாப்பு செயலாளரு­மான கோத்தபாய ராஜ­பக் ஷ சம்பந்தனைவிட தமிழ் மக்களுக்கு தான் உரிய சேவைகளை செய்துள்ளதாக மார்தட்டியுள்ளார். எனவே, இவ்வாறு கூறும் பொது எதிரணியினர் இனியாவது தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கும் அடிப்படை பிரச்சினைகளுக்கும் தீர்வைக் காண ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

நல்லாட்சி அரசாங்கமும் தமிழ் தேசியக்கூட்டமைப்பும் இணைந்து பிரச்சினைகளுக்கு தீர்வுகாண எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு பொது எதிரணியானது ஒத்துழைப்பு வழங்கவேண்டும். இந்த நடவடிக்கைகளுக்கு குறைந்தபட்சம் பொது எதிரணி ஒத்துழைப்பு வழங்காவிட்டாலும் கூட உபத்திரவம் கொடுக்காமல் இருந்தால் அது நன்றாகும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-11-28#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.