Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீள முடி­யாத படு­கு­ழிக்­குள் நாட்­டின் பொரு­ளா­தா­ரம்

Featured Replies

 
மீள முடி­யாத  படு­கு­ழிக்­குள்  நாட்­டின்  பொரு­ளா­தா­ரம்
 
 

மீள முடி­யாத படு­கு­ழிக்­குள் நாட்­டின் பொரு­ளா­தா­ரம்

 

அடுத்த இரண்டு ஆண்­டு­க­ளில் வெளி­நா­டு­க­ளி­ட­மி­ருந்து கட­னா­கப் பெற்ற மூன்று லட்­சம் கோடி ரூபா­வைத் திருப்­பிச் செலுத்த வேண்­டி­யுள்­ள­தா­கத் தலைமை அமைச்சர் ரணில் விக்­கி­ர­ம­ சிங்க தெரி­வித்­தி­ருக்­கி­றார்.

எமது நாடு எந்த அள­வுக்­குக் கடன் சுமை­யில் உள்­ளது என்­பதை தலைமை அமைச்­ச­ரின் இந்­தக் கூற்று தெளிவா­கப் புலப்­ப­டுத்­து­கி­றது இலங்கை போன்­ற­தொரு அபி­வி­ருத்தி அடைந்துவரும் நாட்­டுக்கு மூன்று லட்­சம் கோடி ரூபா கடன் என்­பது மிகப்­பெ­ரிய தொகை­யா­கும். நாட்­டின் வளங்­கள் அனைத்­தை­யும் சேர்த்­தால் கூட இந்­தத்­தொகை தேற­மாட்­டாது.

முன்னைய ஆட்சியாளர்களது கடன் நிலுவையையும் தற்போதைய அரசே  செலுத்த வேண்டும்

கடந்த ஆட்­சிக் காலத்­தில் பெரும் தொகை­யான பணம் வெளி­நா­டு­க­ளி­ட­மி­ருந்து கட­னா­கப் பெறப்­பட்­டது. இதற்கு அதிக வட்­டி­யும் செலுத்த வேண்­டிய நிலை­யும் அர­சுக்கு உண்டு. கடன் வழங்­கிய நாடு­க­ளைப் பொறுத்த வரை­யில் சீனா முத­லி­டத்­தில் உள்­ளது.

இலங்­கையை அபி­வி­ருத்தி செய்­வ­தா­கக் கூறிக் கொண்டு சீன அரசு பெருந்தொகை­யான கடனை இலங்­கைக்கு அள்ளி அள்ளி வழங்­கி­யது. இதற்கு அதிக வட்­டி­யை­யும் விதித்­தி­ருந்­தது. தற்­போ­தும் சீனா இலங்­கைக்கு மேலும் கடனை வழங்­கிக் கட­னா­ளி­யாக்கி வரு­கின்­றது. இதன் கார­ண­மா­கவே அம்­பாந்­தோட்­டைத் துறை­மு­கத்தை சீனா­வுக்­குத் தாரை­வார்க்க வேண்­டி­ய­தா­யிற்று.

முன்­னர் அரச தலை­வ­ரான மகிந்த ராஜ­பக்ச தமது சொந்த மாவட்­ட­மான அம்­பாந்­தோட்­டை­யில் துறை­மு­கம், பன்­னாட்டு வானூர்தி நிலை­யம், விளை­யாட்­ட­ரங்­கம் ஆகி­ய­வற்­றைப் பெரும் பொருட் செல­வில் அமைத்­தார்.

 

இவற்­றைச் சீனா­வி­ட­மி­ருந்து பெற்ற கடன்­கள் மூல­மா­கவே அமைக்க முடிந்­தது. கடன் தொகைக்­கான முத­லும், வட்­டி­யும் பெருந் தொகை­யாக உரு­வெ­டுத்து தற்­போ­தைய அர­சைப் பெரும் இக்­கட்­டுக்­குள் தள்ளி விட்­டுள்­ளது.

வெள்­ளை­யா­னை­க­ளை கட்­டிப் பரா­ம­ரிக்க வேண்­டிய நிலை­யில் கூட்டு அரசு

துறை­மு­க­மும், வானூர்தி நிலை­ய­மும் வர்த்­தக ரீதி­யில் பார்க்­கும்­போது பய­னற்­ற­வை­க­ளா­கவே காணப்­ப­டு­கின்­றன. வௌ்ளையா­னை­க­ளாக உரு­வெ­டுத்து நிற்­கும் இவற்­றைப் பரா­ம­ரிப்­பதே இய­லாத காரி­ய­மா­கப் போய்­விட்­டது.

இத­னால் அம்­பாந்­தோட்டை, மாகம்­புர துறை­மு­கத்­தைச் சீனா­வுக்கு வழங்க வேண்­டி­ய­தா­யிற்று. வானூர்தி நிலை­யத்­தின்மீது இந்­தியா கண்­வைத்­துள்­ளது. அம­பாந்­தோட்­டைத் துறை­மு­கம் சீனா­வின் வசம் சென்று வட்­ட­தில் இந்­தியா கடு­மை­யான அதி­ருப்­தி­யில் உள்­ளது.

தெற்­கா­சி­யா­வில் கேந்­திர முக்­கி­யத்­து­வம் வாய்ந்த இடத்­தில் இலங்கை அமைந்­துள்­ள­தால், அங்கு அமைந்­துள்ள துறை­மு­கத்தை சீனா பயன்­ப­டுத்­து­வது தனது பாது­காப்­புக்­குப் பெரிய அச்­சு­றுத்­த­லாக அமைந்­து­வி­டு­மென இந்­தியா கரு­து­வ­தில் தவ­றொன்­று­மில்லை.

வானூர்தி நிலை­யத்தை இந்­தி­யா­வுக்கு வழங்­கு­வ­தி­லும் சிக்­கல் நிலை­யொன்று தோன்­றி­யுள்­ளது. தெற்­கில் இதற்கு எதிர்ப்­புக் கிளம்­பி­யுள்­ள­தால், அரசு இந்த விட­யத்தை ஆறப் போட்­டுள்­ள­தாக எண்­ணத் தோன்­று­கின்­றது. ஆனால் இந்­தத் தாம­திப்பை இந்­தியா ஏற்­றுக்­கொள்­வது சந்­தே­கமே.

நாட்­டின் பொரு­ளா­தா­ரப் பின்­ன­டை­வுக்­குப் போைரயே கார­ணம் கூறிக் கொண்­டி­ருப்­ப­தால் ஆகப்­போ­வது ஒன்­று­மில்லை. போர் முடி­வுக்கு வந்து எட்டு ஆண்­டு­கள் கடந்து விட்­டன.

 

இனி­ மேல் நாட்­டின் அபி­வி­ருத்தி தொடர்­பான சிந்­த­னை­களே ஆட்­சி­யா­ளர்­க­ளி­டம் இருத்­தல் வேண்­டும். நாடு தற்­போது நாட்டு மக்­க­ளது அத்­தி­யா­வ­சி­யத் தேவைக்­கான சகல பொருள்­க­ளை­யும் இறக்­கு­மதி செய்­ய­வேண்­டிய நிலை­யில் உள்­ளது.

இதற்கு பெருந்­தொ­கை­யான அந்­நி­யச் செலா­வணி தேவைப்­ப­டு­கின்­றது. இதனை ஈடுசெய்ய ஏற்­று­ம­தி­களை அதி­க­ரிக்க வேண் டும். ஆனால் முக்கிய ஏற்­று­ம­திப்­பொ­ருள்­க­ளின் உற்­பத்­தி­யில் வீழ்ச்சி ஏற்­பட்­டுள்­ள­தால் நாட்­டின் ஏற்­று­ம­தி­யில் உரிய இலக்கை எட்ட முடி­ய­வில்லை.

உதா­ர­ண­மாக தேயிலை, இறப்­பர் ஆகிய முக்­கிய ஏற்­று­ம­திப் பொருள் களின் உற்­பத்தி பெரும் வீழ்ச்சி கண்­டுள்­ளது. ஒரு காலத்­தில் நெற்­க­ளஞ்­சி­ய­மாக விளங்­கிய இந்த நாடு அரி­சியை இறக்­கு­மதி செய்ய வேண்­டிய நிலை­யில் உள்­ளது.

எரி­பொ­ருள்­க­ளின் இறக்­கு­ம­திக்­கென ஆண்டு தோறும் அதி­க­ளவு பணம் செல­வி­டப்­ப­டு­கின்­றது. மன்­னா­ரில் எண்­ணெய் வளம் இருப்­ப­தா­க­வும், விரை­வில் அதை வர்த்­தக ரீதி­யில் பெற்­றுக்­கொள்ள முடி­யு­மெ­ன­வும் தெரிவிக்­கப்­பட்­டது. ஆனால் இது­வரை அது சாத்­தி­ய­மா­க­வில்லை.

கடல் வள­மும் சரி­யான முறை­யில் பயன்­ப­டுத்­தப்­ப­டு­வ­தில்லை. மீன்­க­ளைப் பிற நாடு­க­ளி­ட­மி­ருந்து இறக்­கு­மதி செய்ய வேண்­டிய அவல நிலையே இன்­ன­மும் நீடிக்­கி ­றது. தற்­போது தேங்­காய் உற்­பத்­தி­யும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தால் அவற்­றின் விலை உயர்ந்­துள்­ளது.தேங்­காய்­க­ளை­யும் இறக்­கு­மதி செய்ய வேண்­டிய நிலை ஏற்­ப­டக் கூடும் என்­ப­தை­யும் மறுக்க முடி­யாது.

 

உள்­ளூ­ரில் உற்­பத்தி செய்­யக் கூடிய உரு­ளைக்­கி­ழங்கு, பெரிய வெங்­கா­யம் ஆகி­ய­ன­வும் இறக்­கு­மதி செய்­யப்­ப­டு­கின்­றன.இந்த நிலை­யில் நாட்­டின் பொரு­ளா­தா­ரத்­தில் வளர்ச்சி ஏற்­ப­டு­மென எவ்­வாறு எதிர்­பார்க்க முடி­யும்?

உற்­பத்­தி­கள் பெரு­கும்­போ­து­தான் நாட்­டின் தேசிய வரு­மா­னம் அதி­க­ரிக்­கும். ஒரு நாட்­டின் பொரு­ளா­தா­ரத்­தின் அள­வு­கோ­லாக விளங்­கு­வது தேசிய வரு­மா­னமே என்­பதை நாம் நினை­வில் கொள்ள வேண்­டும்.

அத­ள­பா­தா­ளம் நோக்­கிச் செல்­லும் நாட்­டின் பொரு­ளா­தா­ரம்

நாடு தற்­போது பய­ணிக்­கின்ற திசை­யைப் பார்க்­கும்­போது பெற்ற கடன்­க­ளைச் செலுத்­து­வ­தற்கு மீண்­டும் கடன்­பட வேண்­டிய நிலை காணப்­ப­டு­கின்­றது. இது நாட்டை மீள­மு­டி­யாத படு­கு­ழிக்­குள் தள்­ளி­வி­டும்.

சீனா தனது நலன்­க­ளைப் பேணு­வ­தற்­காக எவ­ரு­ட­னும் உற­வு­க­ளைப் பேனு­வ­தற்­குத் தயா­ராக உள்­ளது. தனக்கு நன்மை கிடைக்­கு­மா­னால் தனது பரம எதி­ரி­யான இந்­தி­யா­வு­டன்கூட கை கோர்ப்­ப­தற்­கும் அது தயங்­காது.

இந்­தி­யா­வும் அதே நிலை­யில்­தான் உள்­ளது. ஈழத் தமி­ழர்­க­ளின் இனப் பிரச்­சி­னை­யில் அந்த நாடு ஒதுங்கி நிற்­ப­தற்கு அதன் பிராந்­திய நலன் குறித்த சுய­ந­லமே பிர­தான கார­ண­மா­கும்.

அந்த வகை­யில் இலங்­கை­யின் சிங்­கள ஆட்­சி­யா­ளர்­கள் தரப்பை எதிர்ப்­ப­தற்கு இந் தியா ஒரு­போ­தும் விரும்­பாது. ஒட்டு மொத்­த­மாக நோக்­கும்­போது எமது நாடு பொரு­ளா­தா­ரத்­தில் மீட்சி பெறு­வ­தற்­கான ஒளி வெகு தூரத்­தில் கூடத் தெரி­வ­தா­கக் கூறிக் கொள்ள முடி­ய­வில்லை.

http://newuthayan.com/story/51487.html

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, நவீனன் said:

நாடு தற்­போது பய­ணிக்­கின்ற திசை­யைப் பார்க்­கும்­போது பெற்ற கடன்­க­ளைச் செலுத்­து­வ­தற்கு மீண்­டும் கடன்­பட வேண்­டிய நிலை காணப்­ப­டு­கின்­றது. இது நாட்டை மீள­மு­டி­யாத படு­கு­ழிக்­குள் தள்­ளி­வி­டும்.

இதைத்தான் தமிழராகிய நாங்கள் அன்று தொட்டு கூறுகிறம் மலேசியா சிங்கையை வெட்டி விட்டது போல் எமது தாயக பகுதிகளை எம்மிடமே தந்து விலகி விடுங்கள் உங்களுக்கும் சுபீட்ஷம் எங்களுக்கும் நிம்மதியான வாழ்வுண்டு இல்லையோ மதன முத்து கதைபோல் பசுமாட்டு கன்டும் இல்லை சட்டியும் இல்லை என்றது போல் தமிழர் சிங்களவர் ஆகிய இருவருக்கும் இந்த நாடு சொந்தமில்லாமல் ஒரு பகுதியை சீனாவும் மற்ற பகுதியை இந்தியாவும் உங்கள் சம்பந்தனின் தொகுதியை அமெரிக்கனும் தத்து எடுத்து விடுவாங்கள் பக்கத்தில் இருக்கும் ஓநாய் இந்தியா இதுக்காகவே தினமும் எங்களை ஈழத்தமிழரை நினைத்து  அழுவது போல் நடிக்கிறது உங்களுக்கு புரியவில்லையா ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.