Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறு­பான்­மை­க­ளுக்குள் பகைமை பெரும்­பான்­மையின் ஆளுமை

Featured Replies

சிறு­பான்­மை­க­ளுக்குள் பகைமை பெரும்­பான்­மையின் ஆளுமை

56-e0b9eb31ccf224ac8dcd2b4b5a98b124d2691e1e.jpg

 

1946 ஆம் ஆண்டு செர் ஐவர் ஜெனிங்ஸ் இயற்­றிய சோல்­பரி யாப்பில் ஒரு ஷரத்து இவ்­வாறு இடம்­பெற்­றி­ருந்­தி­ருக்க வேண்டும். அதா­வது சிறு­பான்­மை­களின் பூரண சம்­ம­தமும் அவர்­களின் அடிப்­படை உரி­மை­களின் உள்­ள­டக்­கமும் பல்­லின நீதி­ய­ர­சர்­களின் அங்­கீ­கா­ர­மு­மின்றி யாப்பை மாற்ற முடி­யாது. என்று அமைத்­தி­ருக்க வேண்டும். அப்­படிச் செய்­தி­ருந்தால், சிறு­பான்மைக் காப்­பீட்டுச் சட்­ட­மான 29 ஆம் ஷரத்து நிலைத்து இருந்­தி­ருக்கும்.

எனினும், பாரா­ளு­மன்­றத்தால் யாப்பை இரத்­தாக்க முடி­யாது என்று மட்­டுமே ஐவர் ஜெனிங்ஸ் குறிப்­பிட்­டி­ருந்தார். அதனால் தான் 1972 ஆம் ஆண்டு பாரா­ளு­மன்­றத்­துக்கு வெளியே கொழும்பு ரோயல் கல்­லூரி நவ­ரங்­க­ஹல மண்­ட­பத்தில் சிங்­களப் பெரும்­பான்­மை­யினர் மட்டும் கூடி அந்த யாப்பை இரத்துச் செய்­தனர். அத்­தோடு சிறு­பான்மைக் காப்­பீட்டுச் சட்­ட­மான 29 ஆம் ஷரத்தும் இரத்­தா­னது. சிறு­பான்­மை­களின் அடிப்­படை உரி­மைகள் சலு­கை­க­ளா­கின.

29 ஆம் ஷரத்து இருந்த நிலை­யிலும் கூட அதற்கு மதிப்­ப­ளிக்­காமல் 1949 ஆம் ஆண்டு பெரும்­பான்மைச் சமூ­கத்­தினர் கிழக்கில் திட்­ட­மிட்ட சிங்­களக் குடி­யேற்­றத்தை நிகழ்த்­தி­ய­தோடு மலை­யக இந்­திய வம்­சா­வ­ளி­யி­னரின் பிர­ஜா­வு­ரி­மை­யையும் இரத்து செய்­தனர். கோடீஸ்­வரன் வழக்கில் மட்­டுமே 29 ஆம் ஷரத்து வென்­றது.

அதற்குப் பிற­குதான் கால­னித்­து­வத்தை நீக்கி பௌத்த சிங்­களக் குடி­ய­ர­சாக இலங்­கையை மாற்றி சிறு­பான்­மை­களின் அடிப்­படை உரி­மை­களை சலு­கை­க­ளாக்க 1972 ஆம் ஆண்டின் யாப்பு இயற்­றப்­பட்­டது. அதன் அடிப்­ப­டை­யில்தான் பௌத்த மத, பௌத்த சாசன முன்­னு­ரி­மைகள் வகுக்­கப்­பட்டு 29 ஆம் ஷரத்து அகற்­றப்­பட்­டது.

சேர் ஐவர் ஜெனிங்ஸ் யாப்பில் விட்டிருந்த ஓட்­டையை இடது சாரி­யான டாக்டர் கொல்வின் ஆர்.டி.சில்­வாவே கண்­டு­பி­டித்து அந்த பேரின யாப்பை இயற்­றிக்­கொ­டுத்தார். இட­து­சாரிப் பேரி­ன­வாதம் என்றே இதைக்­கூற வேண்டும். சோல்­பரி யாப்பில் இத்­த­கைய ஓட்டை இருப்­பதை அப்­போதே சிறு­பான்­மைகள் கண்­டு­பி­டித்து ஏன் அடைக்­க­வில்லை.

பூரண சுதந்­தி­ரத்­திற்கு மட்­டுமே வடக்கு, கிழக்கு தமி­ழர்கள் முயன்று கொண்­டி­ருந்­ததால் இதைப்­பார்க்­க­வில்லை. சிங்­கள மக்களை முற்­றிலும் நம்பி ஒன்­றி­ணைந்து வாழலாம் எனும் நம்­பிக்­கையில் முஸ்லிம்­களும் பொருட்­ப­டுத்­த­வில்லை. ஆக அப்­போது சிறு­பான்­மைகள் தமக்குள் கடு­மை­யாக முரண்­பட்­டி­ருந்­த­தாலும் கவ­னக்­குறை­வாக இருந்­த­தா­லுமே பின்­வி­ளை­வுகள் பெரி­தா­கின. இவை பற்றி அல­சு­வதே இங்கு எனது நோக்­க­மாகும். தமி­ழ­ருக்கும் முஸ்­லிம்­க­ளுக்கும் முரண்­பாடு எவ்­வாறு ஏற்­பட்­டது?

1948 ஆம் ஆண்டின் டொமி­னியன் சுயா­தீனத்தின் போது தமி­ழர்­களும் முஸ்­லிம்­களும் யாப்பு வரைவில் தமது எதிர்­கால தனித்­து­வங்­களை தக்க வைத்­தி­ருக்­கலாம். சிங்­கள மக்­களின் கைகளில் முகா­மைத்­துவம் வழங்­கப்­படும் முன் கூட்­டாக இயங்கி பல்­லின வடிவை உறு­திப்­ப­டுத்­தி­யி­ருக்­கலாம்.

எனினும் முஸ்­லிம்கள் ஏக­மு­டி­வோடு சிங்­க­ளவர் பக்­கமே சார்ந்து நின்று எவ்­வித நிபந்­த­னை­க­ளு­மின்றி முகா­மைத்­து­வத்தை சிங்­களத் தலை­வர்­க­ளி­டமே வழங்­கச்­செய்­தனர். 1949 ஆம் ஆண்டு வடக்கு, கிழக்கு தமிழர் சமஷ்டி கோரி­ய­போ­தும்­கூட முஸ்­லிம்கள் சிங்­க­ளவர் சார்­பா­கவே நின்­றனர். கிழக்கில் அதே ஆண்டு சிங்­கள மக்கள் குடி­யேற்­றப்­பட்ட போதும்­கூட முஸ்­லிம்கள் சிங்­க­ள­வர்­க­ளையே சார்ந்து நின்­றனர்.

வடக்கு, கிழக்கு பெரும்­பான்மைத் தமிழர் பகுதி வாழ் முஸ்­லிம்­களும் கூட சிங்­கள பகு­திவாழ் முஸ்லிம் தலை­வர்­க­ளையே பின் தொடர்ந்­தனர். பாரா­ளு­மன்­றத்தில் தனிச்­சிங்­கள சட்­ட­மூலம் கொண்­டு­வ­ரப்­பட்­ட­போதும் முஸ்­லிம்கள் சிங்­க­ளத்­த­ரப்­பையே சார்ந்து நின்­றனர்.

பேரி­ன­வா­திகள் அல்ஹாஜ் பதி­யுதீன் மஹ்­மூதை கல்­வி­ய­மைச்­ச­ராக்கி கல்­வியில் முன்­னேற்றம் பெற்­றி­ருந்த தமி­ழரின் தனியார் கல்­லூ­ரி­களை சுவீ­க­ரித்­த­தோடு விகி­தா­சாரம் எனும் பெயரால் பரீட்சைப் பெறு­பே­றிலும் புள்ளி வழங்­கலில் தரப்­ப­டுத்தல் முறையைக் கொண்டு வந்­தி­ருந்­தனர். 1972 ஆம், 1978 ஆம் ஆண்­டு­களில் இயற்­றப்­பட்ட பேரின யாப்பைத் தமிழர் மட்­டுமே எதிர்த்­தனர். முஸ்­லிம்கள் ஒத்­து­ழைத்­தனர். சிறு­பான்மைக் காப்­பீட்டு ஷரத்­தான 29 ஆம் ஷரத்து நீக்­கப்­பட்­ட­போதும் கூட தமி­ழர்கள் மட்­டுமே எதிர்த்­தனர் முஸ்­லிம்கள் ஒத்­து­ழைத்­தனர்.

தமி­ழரை எதிர்ப்­பதும் சிங்­க­ள­வரை ஆத­ரிப்­ப­துமே முஸ்­லிம்­களின் ஒரே நோக்­க­மாக இருந்­ததால் இதன் பார­தூ­ரத்தை உண­ர­வில்லை. 29 ஆம் ஷரத்து நீக்­கப்­பட்­டதால் சிறு­பான்­மை­களின் உரி­மைகள் யாவும் சலு­கை­க­ளா­கவே மாற்­றப்­பட்­டி­ருந்­தன. இதனால் முஸ்­லிம்­களின் அடிப்­படை உரி­மை­களும் சலு­கை­க­ளா­கின.

ஆங்­கி­லே­யரின் ஆட்­சி­கா­லத்தில் அறிஞர் சித்­தி­லெப்பை, அறிஞர் ஐ.எல்.எம்.அப்துல் அஸீஸ், வாப்­பிச்சி மரைக்கார், ஹொன­ரபள் அப்­துர்­ரஹ்மான், எம்.சி.அப்துர் ரஹ்மான், சேர்.ராசிக் பரீத் ஆகி­யோ­ரெல்லாம் பெற்­றுத்­தந்த முஸ்­லிம்­களின் அடிப்­படை உரி­மை­க­ளைத்தான் 1972 ஆம் ஆண்டு தமி­ழரை எதிர்த்து சிங்­க­ள­வரை சார்ந்து நின்­றதால் முஸ்­லிம்கள் இழந்­தார்கள். ஆக தமிழ், முஸ்லிம் பகையால் இரண்­டுமே தோற்­றன.

தமி­ழர்­க­ளு­ட­னான முஸ்­லிம்­களின் தொடர் பகைக்கு யார் காரணம் 1880 ஆம் ஆண்டு சட்­ட­நிர்­ணய சபையில் முஸ்­லிம்­க­ளுக்­கு­மாகச் சேர்த்து சேர்.பொன் இரா­ம­நா­தனே பிர­தி­நி­தித்­துவம் வகித்­து­வந்தார். இந்­நி­லையில், முஸ்­லிம்கள் தமக்கும் ஒரு பிர­தி­நி­தித்­துவம் தனி­யாக வேண்டும் என அடிக்­க­டி ­கோரி வந்­தனர். இதை ஆட்­சே­பித்த சேர்.பொன் இரா­ம­நாதன் முஸ்­லிம்கள் தமி­ழரே எனவும் தமி­ழ­ராக இருந்து முஸ்லிம் ஆன­வர்கள் எனவும் கூறி முஸ்­லிம்­களை எதிர்த்தார். இந்­நி­லை­யில்தான் அறிஞர் சித்­தி­லெப்­பையின் சார்பில் அறிஞர் ஐ.எல்.எம்.அப்துல் அஸீஸ், சேர்.பொன் இரா­ம­நா­தனை எதிர்த்து நின்றார்.

இவர்­களை எதிர்த்து சட்­ட­நிர்­ணய சபையில் உரை­யாற்­றிய சேர்.பொன் இரா­ம­நாதன் அரச ஆசிய கழ­கக்­கூட்­டத்தில் ETHNOLOGY OF THE MOORS OF CEYLON (இலங்கைச் சோனகர் இன வர­லாறு) எனும் ஆய்­வுக்­கட்­டு­ரையை வாசித்தார். அதில் அவர் இலங்கை முஸ்­லிம்கள் தமி­ழரின் பரம்­ப­ரை­யி­னரே என நிரூ­பிக்க முயன்றார்.

அதை எதிர்த்து அறிஞர் ஐ.எல்.எம்.அப்துல் அஸீல் THE CRITSM TO RAMANATH (ராம­நா­த­னுக்கு ஆட்­சே­பனை) எனும் திற­னாய்வு நூலொன்றை வெளி­யிட்டார். அதில் முஸ்­லிம்கள் தனி இனம் எனவும் இலங்­கையில் குடி­யே­றிய அர­பி­களின் சந்­ததி எனவும் நிரூ­பித்தார். முடிவில் ஐ.எல்.எம்.அப்துல் அஸீஸின் கருத்­துக்கள் ஆங்­கி­லேய ஆட்­சி­யா­ளரால் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்டு 1889 ஆம் ஆண்டு முஸ்­லிம்­க­ளுக்­கெ­னத்­த­னி­யாக எம்.சி.அப்துர் ரஹ்மான் நிய­மிக்­கப்­பட்டார்.

இதைத்­தொ­டர்ந்து 1914 ஆம் ஆண்டு வர­லாற்றில் என்­றுமே இல்­லா­த­வாறு சிங்­கள மக்­களால் முஸ்­லிம்கள் கொடூ­ர­மாகத் தாக்­கப்­பட்­டார்கள். அதன் பின்­ன­ணியில் சேர்.பொன் இரா­ம­நாதன் இருந்­த­தாக முஸ்­லிம்கள் சந்­தே­கித்­தார்கள். அதை நிரூ­பிப்­ப­துபோல் கல­கக்­கா­ரர்­களை ஒடுக்கும் அவ­ச­ர­கால நட­வ­டிக்­கையை சேர்.பொன் இரா­ம­நாதன் இங்­கி­லாந்­துக்குப் போய் இரத்­தாக்க வைத்தார்.

அப்­போது அவர் கொழும்புத் துறை­மு­கத்தில் வந்து இறங்­கி­ய­போது சிங்­களத் தலை­வர்கள் தேரில் வைத்து இழுத்­து­வந்­தார்கள். அந்த செல்­வாக்கால் அவ­ரது சகோ­தரர் சேர்.பொன் அரு­ணா­சலம் 1918 ஆம் ஆண்டு சுதந்­தி­ரத்தை முன்­னெ­டுக்கும் இலங்கை தேசியக் கழ­கத்தின் தலை­வ­ராகத் தெரி­வு­செய்­யப்­பட்­டி­ருந்தார். எனினும், அவரால் அதில் நீடிக்க முடி­ய­வில்லை. அவரை நீக்கி விட்டு சிங்­க­ளத்­த­லை­வர்கள் சேர்.பாரன் ஜய­தி­லக்­கவைத் தெரிவு செய்து கொண்­டார்கள். இறு­தி­கா­லத்தில் தனது தவறை சேர்.பொன் இரா­ம­நாதன் உணர்ந்து கொண்­ட­போதும் 100 வரு­டங்கள் கழிந்த பின்பும் அந்த மேலா­திக்கம் இருப்­ப­தற்கு விக்­னேஸ்­வரன் சிறந்த உதா­ர­ண­மாகும்.

இவர் அண்­மையில் கூறிய கருத்து என்ன? முஸ்­லிம்­களில் இரு பிரி­வினர் உள்­ளனர். முதற் பிரி­வினர் தென்­னிந்­தி­யா­வி­லி­ருந்து மரக்­க­லங்­களில் வந்தோர். மற்றப் பிரி­வினர் மத்­திய கிழக்­கி­லி­ருந்து வந்து குடி­யே­றியோர் ஆவர். இந்­தி­யா­வி­லி­ருந்து வந்தோர் தமிழ்ப் பாரம்­ப­ரி­யங்­களில் திளைத்தோர் என்­பதால் அவர்கள் முதலில் தமி­ழரே. பிற­குதான் முஸ்­லிம்கள் மத்­திய கிழக்­கி­லி­ருந்து வந்­தோரே வடக்கு, கிழக்கு இணைப்பை எதிர்க்­கி­றார்கள். அவர்கள் மதத்தை முன்­னி­லைப்­ப­டுத்தி தனி இன­மாகக் காட்­ட­மு­யற்­சிக்­கி­றார்கள் என்­கிறார்.

விக்­னேஸ்­வரன் கொழும்பில் வாழ்ந்­தவர். இவர் 60 ஆண்­டு­க­ளுக்­குமுன் இவ­ரது வாலிப வயதில் கொழும்பில் முஸ்­லிம்­க­ளிடம் காணப்­பட்ட நிலை­யையே முன்­வைத்துப் பேசி­யுள்ளார். சோனகன் சம்மான் எனும் பிளவு அப்­போது கொழும்பில் இருக்­கவே செய்­தது. சேர்.பொன் இரா­ம­நா­தனே இதற்குத் தூபம் போட்­டி­ருந்தார். போரா­மேமன், ஜாவா, மலை­யாள, தமி­ழக முஸ்­லிம்­க­ளையும் அவர் காட்­டியே இவர்கள் இலங்­கையின் சுதே­சிய உரித்­தா­ளிகள் அல்லர் என அப்­போது கூறியிருந்தார். இந்­நி­லை­யில்தான் சேர். ராசிக் பரீத் சோனகர் எனும் அடை­யா­ளத்தை ஐ.எல்.எம். அப்துல் அஸீஸ் அவர்­களின் ஆய்­வின்­மூலம் பெற்­றுக்­கொண்டு அதை முன்­வைத்து சுதே­சிய அந்­தஸ்தைப் பெற்­றுக்­கொ­டுத்தார். அவ­ரது அன்­றைய மதி­நுட்­பத்தால் பல­தரப்­பட்ட முஸ்­லி­ம்க­ளுக்கும் பிற்­கா­லத்தில் பிரஜா உரிமை கிடைத்­தி­ருந்­தது. 1000 வரு­டங்க­ளுக்கு முற்­பட்ட முஸ்­லிம்­க­ளோடு இவர்­களுக்கும் சம அந்­தஸ்து கிடைத்­தி­ருந்­தது.

எனினும் விக்­னேஸ்­வரன் சோனகன் சம்மான் என முஸ்­லிம்­களை மீண்டும் பிளவு­ப­டுத்­து­கிறார். சம்மான் முஸ்­லிம்கள் வடக்கு, கிழக்கு இணைப்பை விரும்­பு­வ­தாகவும், சோனக முஸ்­லிம்கள் வடக்கு, கிழக்கு இணைப்பை எதிர்ப்­ப­தா­கவும் கூறி­யுள்ளார்.

வடக்கு, கிழக்கு முஸ்­லிம்கள் சம்மான் முஸ்­லிம்­களா? வடக்கு, கிழக்­குக்கு வெளியே வாழும் முஸ்­லிம்கள் சோனக முஸ்­லிம்­களா வடக்கு, கிழக்கு முஸ்­லிம்கள் முதலில் தமி­ழர்­களா? வடக்கு, கிழக்கு இணைப்பை விரும்­பாத சோனகர் மட்­டுமா மதத்தை முன்­னி­லைப்­ப­டுத்தி தனி இன­மா­கக்­காட்டிக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.

1000 வரு­டங்­க­ளுக்கும் மேலாக இலங்­கையில் முஸ்­லிம்கள் மகத்­துவ இன­மா­கத்­தானே வாழ்ந்து கொண்­டி­ருக்­கி­றார்கள். ஆங்­கிலம், தமிழ், சிங்­களம், மலாய், உருது, அரபு எனப் பல்­வேறு மொழி­க­ளையும் இலங்கை முஸ்­லிம்கள் பேசு­கி­றார்கள். எனவே இவர்கள் தமி­ழரோ சிங்­க­ள­வரோ அல்லர். மதத்தை மட்டும் முன்­னி­லைப்­ப­டுத்­திய பன் மொழி தனி இனத்­தி­ன­ரா­வார்கள்.

பல்­வேறு மொழிகள் பேசு­வோரும் முஸ்­லிம்­களில் உள்­ளனர். தமிழ் மொழியை ஒரு முஸ்லிம் பேசு­வதன் கார­ண­மாக மட்­டுமே அவன் தமி­ழ­னாக முடி­யாது. அந்­த­வ­கை­யில்தான் தந்தை செல்வா முஸ்­லிம்­களின் தனித்­து­வத்தை அங்­கீ­க­ரித்­தி­ருந்தார். இதுவே சம்­பந்தன், மாவை சேனா­தி­ராஜா ஆகி­யோ­ரி­னதும் கருத்­தாகும் எனினும் முஸ்­லிம்­களைப் பிள­வு­ப­டுத்தும் விக்­னேஸ்­வ­ரன்தான் ஒரு­முறை முஸ்லிம் அதி­கார அல­குக்கும் முன்­மொ­ழிந்­தி­ருந்தார். வடக்கு, கிழக்கு முஸ்­லிம்கள் மதத்­தையோ இனத்­தையோ முன்­னிலைப்­ப­டுத்­த­மாட்­டார்கள். தமிழில் கலந்­து­வி­டு­வார்கள் என்றால் முஸ்லிம் அலகு சாத்­தியமா?

அர­சி­யலில் வயோ­திபர் ஒதுங்கி வாலி­பர்­க­ளுக்கு இட­ம­ளிக்க வேண்டும் எனவும் இவர் கூறி­யுள்ளார். இவ்­வாறு தன்னை முத­ல­மைச்­ச­ராக்­கிய சம்­பந்­த­னுக்கே பொடி வைத்துப் பேசு­கிறார். அனு­ப­வமும் மதி­நுட்­பமும் நிறைந்த சம்­பந்­தனை விக்­கி­னேஸ்­வரன் புறந்­தள்­ளு­கி­றாரே.

வாலி­பர்­களை எதற்குப் பயன்­ப­டுத்த வேண்டும் என்­பது இவ­ருக்குத் தெரி­யாதா? அர­சியல் முனைப்பை அடி­யோடு முடக்கி யுத்த முனைப்­புக்கே இவர் இட்டுச் செல்­கிறார். அர­சி­யல்­மு­னைப்பை பல­வீ­னப்­ப­டுத்தி ஆயு­த­மு­னைப்பை வலுப்­ப­டுத்தும் இவ­ரது செயற்­பாடு மீண்­டு­மொரு பின்­ன­டை­வுக்கே இட்டுச் செல்லும் என்­பதில் சந்­தே­க­மில்லை.

ஆயுத ரீதி­யி­லான அர­சியல் முன்­னெ­டுப்­புத்தான் அர­சியல் ரீதியில் முன்­னெ­டுப்பு செய்த அமிர்­த­லிங்­கத்­தையும் சிவ­சி­தம்­ப­ரத்­தையும் முடக்­கி­யது. தற்­போ­தும்­கூட அது­போன்­ற­தொரு நிலை ஏற்­ப­ட­வேண்டும் என்றா விக்­னேஸ்­வரன் எதிர்­பார்க்­கிறார்.

அப்­போது வட்­டுக்­கோட்டைத் தீர்­மான விதையால் அறு­வ­டை­யா­ன­தாகும். தந்தை செல்வா கொள்­கை­யாக விதைத்­ததை ஜே.ஆர்.ஆயுத விதை­யாக்­கினார். தற்­போது பாரிய அழிவை தமிழ் மக்கள் அடைந்­தி­ருக்கும் நிலையில் மீண்டும் ஆயுத விதை­யாக்­கி­வி­டு­வது அதிக சுலபம். இந்த நிலையில் தந்தை செல்­வாவின் வழியில் கொள்­கையை விதைக்கும் சம்­பந்­தனை முடக்­கி­விட்டு ஜே.ஆரின் விதை­யாக்க வேண்­டி­ய­தில்லை. தோற்­ற­வரின் யுத்த முனைப்­பையே காரணம் காட்டி வென்­ற­வர்கள் இணக்­கப்­பாட்­டுக்கு வர­ம­றுப்­பார்கள். ஆழ­மாகப் பாதிக்­கப்­பட்­டோரின் மன­நி­லையை வெகு எளி­தா­கவே சம்­பந்­த­னுக்கு எதி­ரான நிலைப்­பாட்­டுக்குக் கொண்டு வர­மு­டியும். இதனால் அவ­ரது அர­சியல் இருப்பை பல­வீ­னப்­ப­டுத்­தி­வி­டலாம். தலை­வ­ராக ஆன­தற்­கா­கவும் வாக்­குகள் பெற்­றுப்­பா­ரா­ளு­மன்றம் சென்­ற­தற்­கா­கவும் எதிர்க்­கட்சித் தலை­வ­ராக ஆன­தற்­கா­கவும் எல்லாப் பொறுப்­பு­க­ளையும் பழி­க­ளையும் அவர் தலை­மீதே போட்டு விட்டு போதாக்­கு­றைக்கு காலையும் வாரி­வி­டு­கி­றார்கள். தாமும் ஒத்­து­ழைக்­காமல் எதிர்ப்­பா­ளர்­க­ளையும் உரு­வாக்­கு­கி­றார்கள்.

எல்­லோரும் ஒன்­று­கூடி அடக்­க­மாகச் செய்ய வேண்­டிய காரி­யத்தை சந்தி சிரிக்­க­வைக்­கி­றார்கள். ஏற­விட்டு ஏணியை எடுக்கும் இந்த நிலைப்­பாடு இருக்­கு­மாயின் சம்­பந்­தனால் மட்­டு­மல்ல எவ­ராலும் தீர்வை எட்­ட­மு­டி­யாது என்­பதே உண்­மை­யா­கி­விடும். மட்டக்களப்புத் தொகுதிக்கு 1977 ஆம் ஆண்டு செல்லையா ராசதுரைக்கு தமிழரசுக்கட்சியின் சார்பில் போட்டியிட அமிர்தலிங்கம் இடமளிக்கவில்லை. காசி ஆனந்தனுக்கு வாய்ப்பை வழங்கினார்.

இதனால் செல்லையா ராசதுரை ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டு வெல்லவே காசிஆனந்தன் தோல்வியுற்றார். இந்த வடக்கு, கிழக்கு மனோபாவத்தால் கிழக்கின் மிகப்பெரும் தமிழரசுக்கட்சியின் தியாகி ஜே.ஆரின் பக்கம்போக நேர்ந்தது. 30 வருட தமிழ் ஆயுத முனைப்பு தோற்றது ஏன்? வடக்குப்புலிகள் கிழக்குப் புலிகள் எனப் பிரிந்ததாலேயே யுத்தம் பலவீனப்பட்டது. இணக்கப்பாடு இல்லாததாலேயே தமிழ் ஆயுதக்குழுக்கள் பலவும் உருவாகின.

அவை விட்டுச் சென்ற முஸ்லிம் எதிர்ப்புக்கொள்கை யையே தற்போதும் விக்னேஸ்வரன் தொனிக்கிறார். அவற்றின் வழியிலேயே பிளவுபடுத்தி வடக்கு, கிழக்குத் தமிழர் அனைவரும் ஒருமுகப்படும் நிலையைத் தடுக்கிறார். எல்லாவற்றுக்கும் அதிகமாக தமிழர், முஸ்லிம் நல்லிணக்கத்துக்கு வேட்டுவைக்கிறார். பின்வரும் பாடலைப் பாருங்கள் விஷயம் புரியும். "நாட்டுக்கு மட்டும் யோசனை சொல்லி நம்பிய பெண்ணின் நிலையை அறியா ஞானியை நீயும் பாரு இது ஞாயம் தானா கேளு. நம்பியிருப்பதும் நட்பு வளர்ப்பதும் அன்பு மெய் அன்பு அந்த அன்பின் கருத்தை விதவிதமாக அர்த்தம் செய்தால் அதுவம்பு" என்பது பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் வரிகளாகும். நம்பிக்கையும் நட்பும் இல்லாவிட்டால் பின் தொடரமுடியாது.

ஏ.ஜே.எம் நிழாம்

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-12-02#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.