Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லக்சுமி! – ஒர் பார்வை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லக்சுமி! – ஒர் பார்வை!

 

ஆண் நோக்குநிலையில் பெண்ணிய உளவியல் பார்வை.

லக்சுமி குறுந்திரைப்படம் பல நேர் எதிர் விமர்சனங்களை எதிர்கொண்டது. ஆண்களும் பெண்களும் ஆதரவாகவும் எதிராகவும் எழுத்தித்தள்ளினர். எனது பங்குக்கு உடனடியாக எழுதத் தோன்றவில்லை. நடைபெற்ற விவாதங்களைக் கவனித்தபோது எழுத வேண்டும் எனத் தோன்றியது.

lakshmi 7இது சிறந்த குறுந் திரைப்படமா என்பது கேள்விதான். ஆனால் முக்கியமான படம் என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக பெண்ணிலை சார்ந்த முக்கியமான படம். பெண்ணியம் என்பது வெறுமனே உடலும் பாலியுலுறவும் சார்ந்த விடயம் மட்டுமல்ல என்பது நாமறிந்ததே. இவற்றைவிட மேலும் பல பல உரிமைகள் சுதந்திரம் தொடர்பான விடயங்கள் பெண்ணியத்திலுள்ளன. ஆனால் பாலியலுறவும் அதில் ஒரு முக்கியமான தவிர்க்க முடியாத விடயமே. இதையும் மேலும் சில விடயங்களையும் லக்சுமி குறுந்திரைப்படம் வெளிப்படுத்துகின்றது.

lakshmi 9மத்தியதர குடும்பத்தின் இயந்திர வாழ்வை அழகாக வெளிப்படுத்தும் குறுந் திரைப்படம் இது. குடும்பத்திற்குள் உள்ள முரண்பாடுகளையும் வெளிப்படுத்துகின்றது. இக் கட்டுரையில் மனைவி எனப் பயன்படுத்துவதை தவிர்க்கின்றேன். ஏனெனில் அவர் வேலைக்குச் செல்கின்ற பெண். ஆகவே துணைவியார் எனப் பயன்படுத்துகின்றறேன். ஆனால் ஆணோ வழமையான வீட்டு வேலைகளில் பங்ககெடுக்காத பாரம்பரிய ஆணாக இருக்கின்றார். ஆகவே துணைவர் எனப் பயன்படுத்தாமல் கணவர் எனப் பயன்படுத்துகின்றேன். ஆணுக்கு வேலையில் மட்டுமே வேலை. ஆனால் பெண்ணுக்கோ வீட்டிலும் வேலையிலும் ஓயாத வேலை. குறிப்பாக காலையில் சமைத்து கணவருக்கும் குழந்தைக்கும் வழங்குவது, குழந்தையை பாடசாலைக்குத் தயார்படுத்தி பின் தான் வெளிகிட்டு வேலைக்குச் செல்வது, வேலையில் ஓய்வில்லாத வேலை. அது முடித்து வீட்டுக்கு வந்து சமைத்து சாப்பாடு கொடுத்து சட்டி பானை கழுவி வைத்துவிட்டு அயர்ந்து தூங்குவார். அப்பொழுது கணவன் தட்டி எழுப்பி உடலுறவு இல்லை வல்லுறவு செய்வான். இந்த இறுதிக் காட்சி தொடர்பாக சுமதி அவர்கள் அழகான குறுந்திரைப்படத்தை தயாரித்திருந்தார். மேலும் மத்திய தர குடும்பத்தின் வறுமை. வசதியின்மை. சுதந்திரமாக உறவாட முடியாத சூழல் என்பவற்றையும் காட்டுகின்றது. இவ்வாறான ஒரு சூழலில் வளரும் குழந்தையின் எதிர்காலம் தொடர்பாகவும் நாம் அக்கறை கொள்ள வேண்டும். அதுவும் ஒரு குறுந் திரைப்படாக எடுக்கப்படக் கூடியதே.

lakshmi 5மத்தியதர குடும்பங்களுக்குள் இருக்கின்ற முரண்பாட்டை, அதிகாரத்துவ கட்டமைப்பை, உழைப்புச் சுரண்டலை அழகாக வெளிப்படுத்துகின்றது. பெரும்பாலான கணவர்கள் வீட்டில் துணைவர்களாகவே இல்லை. வீட்டு வேலைகளில் பங்கு கொள்வது மிகவும் அரிது. பெண்களின் எல்லா வேலைகளிலும் துணைவர்கள் பங்கு கொள்ளும் பொழுது துணைவிக்கு வேலைப்பளு குறையும் என்பதை உணர்வதில்லை. காலையில் நேரமாகும் பொழுது தானும் எழும்பி பங்களிக்கலாம் என சிந்திப்பதில்லை. பதிலாக துணைவியை ஏன் வேளைக்கு (நேரத்திற்கு) எழும்பாமல் நீண்ட நேரம் தூங்குகின்றாய் (நித்திரை) கொள்கின்றாய் என்ற குற்றச்சாட்டும் வேறு. ஆனால் தான் துணைவி நித்திரை கொள்வதற்கு முதலே நித்திரை கொண்டு அவர் எழும்பிய பின்னரே எழும்புவதை வசதியாக மறந்து விடுகின்றார். ஆகவே எல்லா வேலைகளையும் பெண்ணே செய்ய வேண்டிய நிர்ப்பந்தம். அதுவும் வேலைக்குச் செல்கின்ற பெண்களுக்கு இது இரட்டைச் சுமை. அரிதாகப் பெண்கள் அதிகாரத்துவம் செய்யும் இடங்களிலும் பெண்களின் நிலையை உணரும் ஆண்கள் மட்டுமே இவ்வாறான வேலைப் பங்கீடைப் பொறுப்பெடுத்து செய்கின்றர்..

lakshmi 3இக் குறுந்திரைப்படத்தில் உடலுறவு தொடர்பான பிரச்சனையே முக்கியம் பெற்றுள்ளது. இதில் காட்டப்பட்டது உடலுறவா? வல்லுறவா? வண்புணர்வா? நிச்சமாக இது உடலுறவில்லை. வல்லுறுவு என ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன். ஏனெனில் இங்கு ஆணிண் சக்தி வெளியேற்றம் மட்டுமே நடைபெறுகின்றது. பெண் எந்தவகையிலும் அந்த உறவில் பங்கு கொள்ளவில்லை. ஆண் விரும்பியவுடன் அவள் காலை அகல விரிக்க வேண்டும். அவ்வளவே. பெண் தயாரா இல்லையா என்றும் கேட்பதில்லை. அவளுக்கு உணர்ச்சி ஊட்ட வேண்டுமா என்பதிலும் அக்கறையில்லை. ஆகவேதான் அவளது ஆடை களையாமல் இருக்கின்றது. அதிலும் குறிப்பாக குழந்தையின் அசைவும் சத்தமும் அவளைப் பதட்டமடையச் செய்கின்றது. அவ்வாறு உடலுறவின் பொழுது பதட்டமையும் பொழுது பெண்ணின் யோனி சுருங்கிவிடும். அதுவரை உருவான(?) அவ்வளவு உணர்ச்சிகளும் (இருந்திருந்தால்)  இல்லாமல் போய்விடும். இதன்பின்பு உடலுறுவு கொள்வதற்கான மனநிலை பெண்ணிற்கு இருக்காது. இவ்வாறான சூழ்நிலையில் தொடர்ந்தும் புணர்வு நடைபெற்றலால் அது வல்லுறவே. ஏனெனில் அங்கு பெண்ணின் உடல் தயார் நிலையில் இல்லை. ஆனாலும் ஒவ்வொரு நாளும் இதே நிலையில் உடலுறவு மன்னிக்கவும் வல்லுறவு தொடர்கின்றது. இவ்வாறு கணவர் செய்வதால் இதனை வல்லுறவு எனக் கூறலாம். இதையே குறிப்பிட்ட பெண்ணுடன் அவளுக்குத் தெரியாத அல்லது சட்டரீதியாக அனுமதி பெறாத அல்லது பெண்ணின் உடன்பாடில்லாத ஆண் செய்யும் பொழுது அது வன்புணர்வாகின்றது.

lakshmi 8இக் குறுந் திரைப்படத்தில் பெண்ணின் ஏக்கங்கள், விருப்பங்கள், ஆசைகள் தொடர்பாக சிறப்பாக வெளிப்படுத்துகின்றது. இவ்வாறான உணர்வுகளினால் பெண்ணினது கனவு உறவு அல்லது திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு முக்கியத்துவமாகின்றது.  இது பெண்ணினது விருப்பங்கள் ஆசைகள் எதிர்பார்ப்புகள் தொடர்பான வண்ண வண்ணக் கனவுகளாக இருக்கலாம். அல்லது தனது பயணங்களின் போது தன்னை ஒருவன் கவனிப்பதை கவனித்து அவருடன் வாழ்வது போன்று தோன்றிய ஒரு கண எண்ணமாக இருக்கலாம். அல்லது அப்படி ஒருவனுடன் உண்மையிலையே ஒரு நாள் வாழ்ந்த வாழ்க்கையாகவும் இருக்கலாம். எப்படி இருந்தபோதும் இங்கு முக்கியமானது அந்தப் பெண்ணின் எதிர்பார்ப்புகள் விருப்பங்கள் குடும்ப வாழ்வில் பூர்த்தி செய்யப்படுவதில்லை. இதனை யாரும் புரிந்து கொள்ளாமலே விமர்சனங்களை அவள் மீது முன்வைக்கின்றனர்.

lakshmi 6காலையில் சிடு சிடு எனப் பாயும் கணவர். பெண்ணிடம் சாப்பாட்டை வாங்கிக் கொண்டு நன்றியோ சிரிப்பையோ வெளிப்படுத்தாத சிடு முஞ்சிக் கணவன். அதில் உருவாகும் ஏக்கம். இயந்திரயமாக உடலுறவு கொள்ளும் கணவன். வல்லுறவு செய்தபின் கணவன் அந்தப் பக்கம் திரும்பி படுத்துவிடுவான். இருப்பினும் தன்னைக் கட்டிப்பிடித்துப் படுக்கவில்லையே என்ற தவிப்பும் பயன்படுத்திவிட்டு புறக்கணித்துவிட்டான் என்ற கோவமும் அவளின் பார்வையில் தொனிக்கின்றது. இந்த ஏமாற்றங்களும் மகிழ்ச்சியில்லாத உறவும் அப் பெண்ணுக்கு வாழ்வின் மீது அலுப்பை பற்றின்மையை உருவாக்கின்றது. இயந்திர வாழ்வின் சலிப்பும் சேர உயிரற்ற வாழ்வாகின்றது.

lakshmi 12தன்னை அழகு என்று ஒருவர் சொல்லும் பொழுது ஏற்படும் உணர்வு. தன்னை அழகாக்கிப் பார்ப்பதில் இருக்கும் சுகம். தனக்கும் ஒருவர் சமைத்துப் போடும் போது கிடைக்கும் ஆனந்தம். அது தொடர்பான எதிர்பார்ப்பு. இவை எல்லாம் ஆணாதிக்க சமூகம் கட்டமைத்தவையாக உருவாக்கியவையாக இருக்கலாம். இருப்பினும் இதை எல்லாம் ஒருவர் செய்யும் பொழுது இயல்பாகவே ஒருவருக்கு காம காதல் உணர்வு ஏற்படலாம். இது இருவரையும் பாலுறவுக்கு இயல்பாகவே கொண்டு செல்லலாம். கதிர் கணவனாக இல்லாதபோதும் இங்கு நடைபெறுவது வண்புணர்வுமல்ல வல்லுறவுமல்ல. மாறாக அது ஒரு இன்பமயமான பாலுறவு. இருவரும் உடன்பட்டு நடைபெறும் உறவு. இவ்வாறு புதியவர்கள் சந்திக்கும் பொழுது உணர்வுகள் பொங்கி வழிகின்றன. ஆனால் நீண்ட காலம் உறவில் இருப்பவர்கள் ஒவ்வொரு நாளும் சந்திக்கும் பொழுது ஒன்றுமே நடைபெறுவதில்லை. எதனால்? பிரக்ஞைக்கும் பிரக்ஞையின்மைக்கும் இடையிலான வேறுபாடு இதுதானோ?

lakshmi 11இறுதியாகப் பல ஆண்கள் இதைப் பார்த்துவிட்டு தானும் கதிர் என்று நிலைத்தகவல்கள் போட்டவர்களும் உண்டு. தான் கதிர் இல்லையே என்று ஏங்கியவர்களும் உண்டு. உண்மையில் இங்கு கதிர் என்பது ஒரு குறியீடாகவும் இருக்கலாம்தானே. நல்லதொரு கணவன் அல்லது துணைவன் இப்படியும் இருக்கலாம் என்பதற்கான ஒரு எடுத்துக் காட்டாக கொள்ளலாம்தானே. ஏன் ஒரு கணவன் கதிரைப் போல இருக்கக்கூடாது என்பதையே இக் குறுந் திரைப்படம் கேள்வி கேட்கின்றது எனலாம். கணவன் இன்னுமோரு பெண்ணுடன் இவ்வாறு உறவாடுவதை ஊக்குவிக்கவில்லை. மாறாக ஒவ்வொரு கணவனும் கதிரைப்போல lakshmi 4இருக்கலாமே என வலியுறுத்துகின்றது. இதன் அர்த்தம் கணவர் மற்றவனின் துணைவியுடன் உறவு கொள்வதையல்ல. ஒவ்வொரு துணைவரும் இவ் வண்ண வண்ணக் கலர் பகுதிகளில் வரும் பண்புகளை கொண்டிருந்தால் உறவுகள் அழகாகும் என்பதையே சொல்கின்றது. ஆனால் பெரும்பான்மையானவர்களின் ஆண் மனங்கள் மனைவி அல்லது துணைவியார் இன்னுமொருவனுடன் படுத்ததையே இழுத்துப் பிடித்து வைத்திருக்கின்றன. அதையே விமர்சிக்கின்றன. அதேவேளை தாம் கதிரைப் போன்றவர்கள் என்னுடன் படுக்க வாருங்கள் என்பதையுமே முதன்மைப்படுத்துகின்றார்கள். இவ்வாறு பகிடிக்கு கூறினாலும் இது பகிடிவிடும் விடயமல்ல. இன்னும் சிலரோ அட அட நாம் கதிரைப் போல வாய்ப்பு கிடைத்தவர்கள் இல்லையே என அங்கலாய்கின்றார்கள். இதேநேரம் சில பெண்கள் தாம் அவளைப் போல தெரியாத இன்னுமொருவனுடன் படுக்கப் போக மாட்டோம். அந்தளவிற்கு மோசமானவர்கள் அல்ல நாங்கள் என தம்மைப் பாதுகாக்கின்றனர். ஆனால் ஒருவரும் அது சொல்ல வரும் அடிப்படைச் செய்தியை புரிந்து கொள்ளவோ காணவோ தவறிவிட்டார்கள் என்றே தோன்றுகின்றது.

lakshmi 2குறுந்திரைப்படத்தில் நடித்த அனைவரும் நன்றாக நடித்திருந்த போதும் பிரதான பாத்திரமான லக்சுமி சிறப்பாகவே நடித்திருந்தார். அவரது கண் மிக நன்றாகவே ஒவ்வொரு காட்சியிலும் நடித்திருந்தது. அவரது தயக்கம், பயம், ஏக்கம், தவிப்பு, மகிழ்ச்சி, விருப்பம் என்பவற்றை மிக அழகாக வெளிப்படுத்தியிருந்தார். சிறந்த நடிப்பும் நெறியாள்கையும். முக்கியமான படம். ஆனால் சிறந்த படம் அல்ல. குறைகள் உண்டு. அவற்றை இங்கு குறிப்பிடுவது அவசியமல்ல.

மீராபாரதி

01.12.2017

படங்கள் கூகுள்

https://meerabharathy.wordpress.com/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.