Jump to content

காடு, மலை தாண்டி கடவுளைத் தேடி..! பரவசப் பயணம்


Recommended Posts

பதியப்பட்டது

காடு, மலை தாண்டி கடவுளைத் தேடி..! பரவசப் பயணம்

 
 

லகம் ஒரு புத்தகம். பயணமே செய்யாதவர்கள் அதில் ஒரே ஒரு பக்கத்தை மட்டும்தான் படிக்கிறார்கள்’ என்று சொல்லியிருக்கிறார் செயின்ட் அகஸ்டின். நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆப்பிரிக்காவைச் சேர்ந்த இந்த கிறிஸ்தவத் துறவி சொன்னது இன்றைக்கு மட்டுமல்ல... என்றென்றைக்கும் பொருந்தக்கூடிய பொன்மொழி. ஆதிகாலத்திலிருந்து மனிதனின் கூடவே நிழல்போல் தொடர்ந்து வருவது யாத்திரை. மனிதன் மட்டும் பயணம் செய்யாமல் ஓரே இடத்தில் இருந்திருந்தால், பல அரிய விஷயங்களைக் கண்டுபிடித்திருக்க மாட்டான். மனித இனம் முன்னேறியிருக்காது; நாகரிகம் அடைந்திருக்காது.

யாத்திரை

 

யாத்திரை மனிதனுக்கு ஒருவகையில் ஆசிரியர்; நல்லவையோ, கெட்டவையோ பிரமாதமான பல அனுபவங்களை போதிக்கும் ஆசான். பல புதிய மனிதர்களை, தாவரங்களை, விலங்குகளை, புதிய இடங்களை, பண்பாட்டை, மொழியை, கலைகளை மனிதர்களுக்கு அறிமுகப்படுத்தியது பயணமே. அதனால்தான் யாத்திரைக்கும் யாத்ரீகர்களுக்கும் எப்போதும் முக்கியத்துவம் கொடுத்துவந்திருக்கிறது நம் இந்தியப் பண்பாடு. அன்னச் சத்திரங்களும், தங்கும் விடுதிகளும், மண்டபங்களும், சுமைதாங்கிக் கற்களும் யாத்ரீகர்களின்பொருட்டே உருவாக்கப்பட்டன. அதிலும் கோயில் யாத்திரைக்குச் செல்பவர்களை தெய்விகத் தன்மையுடன் பார்த்தது நம் கலாசாரம். தெற்கிலிருந்து வடக்கே காசியாத்திரை செல்பவர்களாகட்டும்... வடக்கிலிருந்து தெற்கே ராமேஸ்வரத்துக்கு வருபவர்களாகட்டும்... அவர்களைத் துறவிகளைப்போல் கருதினார்கள் நம் மக்கள். பாதபூஜை, பல உபசாரங்கள் செய்து, பயபக்தியோடு அனுப்பிவைத்தார்கள்.

புனித யாத்திரை

புனித யாத்திரை என்பது ஒரு பக்தனுக்கும் கோயிலில் உறையும் தெய்வத்துக்கும் இடையில் இருக்கும் பந்தம் மட்டுமல்ல. கோயிலில் வழிபட்டு வருவதோடு `அந்தக் கடமை முடிந்துவிட்டது’ என நினைக்கிற காரியமும் அல்ல. அந்த வழித்தடம் விரிக்கும் காட்சிகள், எதிர்ப்படும் சிறு எறும்பு தொடங்கி சந்திக்கும் பல மனிதர்கள் வரை நமக்குத் தரும் அனுபவம் அலாதியானது. புனித யாத்திரை நாம் யார் என்பதை நம்மையே உணரச் செய்யும் அற்புதமான பாடம், தத்துவம்.

இந்தியாவில் இறைவன் உறையும் திருக்கோயில்களுக்குப் பஞ்சமில்லை. மலைகளிலும், அடர்ந்த காடுகளிலும், புனித நதிக்கரைகளிலும் எண்ணற்ற ஆலயங்கள் அமைந்திருக்கின்றன. அப்படிப்பட்ட இயற்கை வனப்புடன் திகழும் ஆலயங்களுக்கான பயணமும், பயணத்தின்போது கிடைக்கும் அனுபவங்களும் படிப்பினைகளும் ஏராளம். அவை நம் மனதைப் பண்படுத்தி செம்மையாக்கும். மன மாசுக்களை அறவே நீக்கும். ஆனால், ஆலயங்களை தரிசிப்பதில் மக்களுக்கு ஆர்வம் ஏற்படவேண்டுமே. அதற்காகத்தான், ஒவ்வோர் ஆலயத்தையும் தரிசித்து வழிபட்டால், ஒவ்வொரு பலன் கிடைக்கும் என்று சொல்லப்பட்டது.

புனித யாத்திரை

பலனை எதிர்பார்த்தும், எந்தப் பிரதிபலனும் கருதாமலும் இறைவன் உறையும் ஆலயங்களைத் தரிசிக்க அந்தக் காலத்தில் ஆன்மிக யாத்திரைகளை மேற்கொண்டார்கள். போக்குவரத்து அவ்வளவாக இல்லாத காலத்திலேயே பக்தர்கள் நடந்தே சென்று ஆலயங்களை தரிசித்த்தார்கள். நூற்றுக்கணக்கான மைல்களைக் கடந்து இறைவனை தரிசிக்கச் சென்றதால், அவர்களின் உடலும் மனமும் புத்துணர்ச்சி பெற்றது. பல இடங்களில் பல நாள்கள் தங்கிச் செல்லவேண்டி இருந்தது. அதன் காரணமாக அந்தந்தப் பகுதி மக்களின் கலை, கலாசாரம், பண்பாடு மற்றும் விழாக்கள் பற்றிய விவரங்களைக் கேட்டும், பார்த்தும் அறிந்துகொள்ள முடிந்தது. 'வேற்றுமையிலும் ஒற்றுமை' என்ற நம் தேசத்தின் மகத்துவத்தை அவர்களால் புரிந்துகொள்ளவும் முடிந்தது.

இயற்கை எழில் சூழ்ந்த இடங்களில் அமைந்திருக்கும் ஆலயங்களை தரிசிக்கச் செல்லும்போது, உடல் ஆரோக்கியம் மேம்படும். பல சிரமங்களைக் கடந்து செல்வதால், மனதிடம் உண்டாகும். நம்முடைய மனம் முழுக்க, 'எப்போது இறைவனை தரிசிப்போம்?' என்ற ஆர்வமே நிறைந்திருப்பதால், மனதில் தேவையற்ற எண்ணங்கள் ஏற்படாது.

இன்றைக்கும் காசி யாத்திரை, ராமேஸ்வரம் யாத்திரை, கயிலாய யாத்திரை, பழநி யாத்திரை, சதுரகிரி யாத்திரை, சபரிமலை யாத்திரை என்று பல யாத்திரைகளை பக்தர்கள் நடைப்பயணமாகவே மேற்கொள்கின்றனர். இதுபோன்ற பிரபல யாத்திரைகள் மட்டுமல்ல... யாத்திரை செல்ல, இன்னும் பல புனிதத் தலங்கள் இருக்கவே செய்கின்றன. வெளியுலகத்துக்கு அதிகம் தெரியாத அது போன்ற புண்ணியத் தலங்களை ஆன்மிக அன்பர்களுக்கு அறிமுகப்படுத்த விரும்பினோம்.

அதற்காக சில யாத்திரைகளை மேற்கொண்டு, அவற்றில் நமக்குக் கிடைத்த அனுபவங்களையும் படிப்பினைகளையும் விகடன் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம் என நினைத்தோம். எங்கள் முதல் யாத்திரை தொடங்கியது.

பயணம்

வேலூர் மாவட்டம், ஞானமலைக்கு நம் நிருபர் குழு பயணம் மேற்கொண்டது. ஆன்மிகத் தேடல் என்பதே ஞானத்தைத் தேடிய பயணம்தானே? அந்த வகையில் நம் முதல் யாத்திரை ஞானமலை யாத்திரையாக அமைந்திருப்பது மிகவும் பொருத்தமானதே.

ஞானமலையும் சரி, சுற்றிலும் இருக்கும் வேறு சில மலைகளும் சரி... அளவற்ற தெய்விக ஆற்றல் கொண்டவை. அபூர்வ மூலிகைகளின் பொக்கிஷமாகத் திகழ்பவை. ஞானமலைக்கு அத்தனைச் சிறப்புகளும் உள்ளன. கூடவே ஒரு தனிச்சிறப்பு... திருமணம் முடித்த தெய்வத் தம்பதியர், தேனிலவு கொண்டாடிய மலை இது.

 

அந்த தெய்வத் தம்பதியர் யார் தெரியுமா?

https://www.vikatan.com/news/spirituality/108861-the-pilgrim-towards-wisdom.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2

Posted

காடு, மலை தாண்டி கடவுளைத் தேடி..! பரவசப் பயணம் - 2

 

பயணம்

 

 
 

து ஒரு ஞாயிற்றுக்கிழமை... மென்மையான குளிர் கலந்த காற்று வீசும் அதிகாலை. சென்னையில் இருந்து ஞானமலைக்கு எங்கள் பயணம் தொடங்கியது. அங்கே தேனிலவு கொண்டாடிய தெய்வத் தம்பதியைப் பற்றிப் பேச்சு ஆரம்பித்தது. 'ஞானம் அருளும் ஞானமலையில் தேனிலவு' என்கிற செய்தியே எங்களுக்கு ஆச்சர்யத்தைத் தந்திருந்தது. ஆனால், அங்கே சென்ற பிறகுதான், நமக்கு ஓர் உண்மை விளங்கியது. அதைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்னர், பயணத்தின்போது நாங்கள் கண்ட, கேட்ட சில சிலிர்ப்பூட்டும் விஷயங்களைப் பார்த்துவிடுவோமே...

ஞானமலை முருகன்

பூந்தமல்லியை நெருங்கியபோது நம்முடன் வந்த நண்பர் ஒருவர் சொன்னார். ``இந்த ஊரில்தான் ஶ்ரீராமாநுஜரின் குருவான திருக்கச்சி நம்பிகள் அவதரித்தார். போக்குவரத்து வசதி இல்லாத அந்தக் காலத்திலேயே, தினமும் மலர்களைப் பறித்து, அவற்றால் மாலை தொடுத்து, அதை எடுத்துக்கொண்டு காஞ்சிபுரம் செல்வார். அங்கேயிருக்கும் வரதராஜ பெருமாளுக்கு புஷ்ப கைங்கர்யமும், ஆலவட்ட (விசிறி) கைங்கர்யமும் செய்வார். பகவான் கைங்கர்யம் செய்வதற்காக தினமும் யாத்திரை மேற்கொண்டார்.

வயது முதிர்ந்த நிலையில் ஒருநாள், அவரால் காஞ்சிக்குப் போக இயலவில்லை. `ஐயோ... பெருமாளுக்கு கைங்கர்யம் செய்ய முடியாமல் போய்விட்டதே... அவரை இன்றைக்கு தரிசிக்கும் பேறு கிடைக்காமல் போய்விட்டதே...’ என்று உள்ளம் நொந்து வருந்தினார். பக்தரின் வேதனையைப் பொறுக்க முடியாத பெருமாள் உடனே நேரில் தோன்றி அருளினார். திருக்கச்சி நம்பிகளுக்கு திருவரங்கம், திருப்பதி, காஞ்சி ஆகிய தலங்களில் எப்படிக் காட்சியளிக்கிறாரோ, அதே மூர்த்தங்களாகத் தோன்றி, முக்தியும் அருளினார். அதன் சாட்சியாகத்தான் பூந்தமல்லி பஸ் ஸ்டாண்டுக்குப் பக்கத்தில், `திருக்கச்சி நம்பிகள் சமேத வரதராஜ பெருமாள் கோயில்’ இருக்கிறது’’ என்றார் அந்த நண்பர். அந்த சிலிர்ப்பான வரலாற்றைக் கேட்டு, பெருமாளையும் திருக்கச்சி நம்பிகளையும் நினைத்து கண்ணை மூடி வேண்டினோம்.

நண்பர் திருக்கச்சி நம்பிகள் பற்றிய விஷயத்தைச் சொல்லி முடித்த சிறிது நேரத்தில் நாங்கள் ஶ்ரீபெரும்புதூரை அடைந்தோம். இந்தத் தலத்தில்தான் `மதப்புரட்சி செய்த மகான்’ என்ற சிறப்புக்குரிய ஶ்ரீராமாநுஜர் அவதரித்தார் என்பது நமக்குத் தெரிந்த விஷயம்தான். உடனே எங்கள் பேச்சு ஸ்ரீராமாநுஜரை நோக்கித் திரும்பியது.

ஏரி

இப்படி பல சத்விஷயங்களைப் பேசியபடி சென்றதால், நேரம் போனதே தெரியவில்லை. காவேரிப்பாக்கத்தை நெருங்கிவிட்டோம். காவேரிப்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து சற்றுத் தொலைவில் இடப்புறமாக ஒரு சாலை பிரிந்து சென்றது. ``அந்தப் பாதை சோளிங்கருக்குச் செல்லும் பாதை; அந்தப் பாதையில்தான் நாம் செல்லப் போகிறோம்’’ என்று கூறிய நண்பர், நமக்கு வலப்புறத்தில் பிரிந்த சாலையைக் காட்டி, ``அது திருப்பாற்கடலுக்குச் செல்லும் வழி’’ என்று கூறினார். அந்தத் தலத்தில் சைவ - வைஷ்ணவ ஒற்றுமையை உணர்த்தும் வகையில், ஆவுடையார்மீது பெருமாள் நிற்கும் கோலத்தில் காட்சி தருவதாகவும், அந்த மூர்த்தியைப் பற்றி காஞ்சிப் பெரியவர் `தெய்வத்தின் குரல்’ நூலில் போற்றி இருப்பதையும் கூறினார். அதைக் கேட்டதும், மனிதர்களிடையே எந்தப் பேதமும் இருக்கக் கூடாது என்பதற்காக இறைவன்தான் எத்தனை எத்தனை லீலைகளை நிகழ்த்தவேண்டியிருக்கிறது?! என்று நமக்குத் தோன்றியது.

சோளிங்கருக்குச் செல்லும் பாதையில் திரும்பினோம்.

நீண்ட நாள்களுக்குப் பிறகு காவேரிப்பாக்கம் ஏரி நிரம்பி இருந்தது. அதன் காரணமாகவே எங்கும் பசுமை தன் செழுமையையெல்லாம் பரப்பிக் காட்டிக்கொண்டிருந்தது. நிரம்பி வழிந்த ஏரியின் நீர், மதகுகள் வழியே வழிந்து கால்வாயில் சென்றுகொண்டிருந்த காட்சியைப் பார்த்தபடியே சென்றோம். `வேலூர் மாவட்டத்தின் மிகப் பெரிய ஏரி’ என்ற பெருமைமிக்கது காவேரிப்பாக்கம் ஏரி. காற்றின் தாளத்துக்கு ஏற்ப நடனமாடிக்கொண்டிருந்த ஏரியின் நீர்ச் சத்தத்தைக் கேட்டபடி, மங்கலம் என்ற ஊரைக் கடந்தோம். அங்கிருந்து இரண்டு கி.மீ தொலைவில் இருந்த கோவிந்தச்சேரி என்ற சிறிய கிராமத்தை அடைந்தோம். ஊரின் வாசலிலேயே, `ஞானமலை’ என்ற நுழைவுத் தோரண வளைவு எங்களை வரவேற்றது.

ஞானமலை

அதைக் கடந்து சுமார் 1 கி.மீ தூரம் சென்றதும், ஞானமலை அடிவாரம் தெரிந்தது. மலையில் இருக்கும் ஞானபண்டிதனின் ஆலயமும் தென்பட்டது. ஞானம் என்பது மிக உயர்வான நிலையல்லவா? எனவேதான், நமக்கெல்லாம் ஞானத்தை உபதேசிக்கும் முருகப் பெருமானின் ஆலயங்கள் எல்லாம் மிகவும் உயர்ந்த மலைப்பகுதிகளிலேயே காணப்படுகின்றன போலும்.

வள்ளிமலையில் வள்ளியை மணந்துகொண்ட முருகப் பெருமான், தணிகைமலைக்குத் திரும்பும் வழியில், இந்த மலையின் அழகைக் கண்டு, இங்கே இளைப்பாறத் தங்கிவிட்டாராம். நமக்கெல்லாம் ஞானம் அருள்வதற்காக ஞானமலையில் அமர்ந்த முருகப் பெருமானின் வாழ்க்கையை, நம்முடைய வாழ்க்கையைப்போலவே பாவித்து, முருகப் பெருமான் இளைப்பாறிய இடம் என்றும், தேனிலவு கண்ட இடம் என்றும் கூறுகிறோம் போலும். நம்மைப்போலவே இறைவனையும் பாவிப்பதுதானே உயர்ந்த பக்தி?! எனவே, பக்தர்கள் அப்படிக் குறிப்பிடுவதும் சரிதான் என்றே தோன்றியது.

ஞானமலை யாத்திரை

நாம் அங்கே வரப்போகிறோம் என்பதை முன்னதாகவே தெரிவித்திருந்ததால், மலையடிவாரத்தில் இருந்த ஞானாச்ரமம் அறக்கட்டளை அலுவலகத்தில், அறக்கட்டளை நிர்வாகிகளும், ஊர் பெரியவர்களும் கூடியிருந்தார்கள். நம்மை வரவேற்றார்கள்.

ஞானமலையின் சிறப்புகள் பற்றி, அங்கிருந்த அன்பர்கள் பகிர்ந்துகொண்ட சிலிர்ப்பும் நெகிழ்ச்சியுமான அனுபவங்கள் பற்றி...

(பயணிப்போம்...)

https://www.vikatan.com/news/spirituality/109532-in-search-of-god-adventure-travel-second-part.html

Posted

காடு மலை தாண்டி, கடவுளைத் தேடி..! - பரவசப் பயணம் - 3

 
 

 

கடவுளைத்தேடி

 

உயரம் எதற்கான குறியீடு? மேன்மை, சிறப்பு, புகழ், வளர்ச்சி... அடுக்கிக்கொண்டேபோகலாம். கந்தன் குடிகொண்ட மலைகளின் உயரம் உணர்த்தும் குறியீடு வேறு. மலையைப் பார்க்கும்போதெல்லாம், `இதில் ஏறித்தான், இதைக் கடந்துதான் முருகனைத் தரிசிக்க முடியும்’ என்கிற எண்ணம் பக்தனுக்கு வரும். `இந்த உயரத்துக்கு முன் நான் சிறியேன்’ என்கிற நினைப்பு அழுத்தமாக மனதில் பதியும். உயரமான மலையைத் தன் திருப்பாதங்களால் அழுத்தி நின்றுகொண்டிருக்கும் கந்தப்பெருமானின் பெருமை, மனத்துக்கு தெளிந்த நீராகப் புலப்படும். கந்தவேலை தரிசித்து முடித்து, மலையிலிருந்து இறங்கும்போது, விடுவிடுவென கீழிறங்குவோம். கனிந்துருகி கந்தனை வழிபட்டதற்கு இயற்கையும் இறைவனும் காட்டும் கருணையின் அடையாளம் அது. 

ஞானமலை அத்தனை உயரமில்லை. சின்னஞ்சிறு குன்று என்றே சொல்லலாம். மொத்தமே 150 படிகள்தான். அடிவாரத்திலிருந்து பார்த்தபோதே, அழகான படிகள் நம்மை `வா... வா...’ என அழைத்துக்கொண்டிருந்தன. மலையைச் சுற்றி இயற்கையின் பசுமை, பச்சை மையைத் தரையெங்கும் தீற்றியதுபோல ரம்யமாக இருந்தது. பொட்டல்காட்டைக்கூட பட்டா போட்டுவிடும் ஆக்கிரமிப்புகளைச் சுற்றிலும் காண முடியவில்லை.  மொத்தத்தில் இயற்கை, ஒரு குழந்தையைப்போல ஆர்ப்பரித்துக்கொண்டிருந்ததாகத் தோன்றியது. 

ஞானமலை பயணம்

ஐவகை நிலங்களில் மூத்தது குறிஞ்சி. மலையும் மலைசார்ந்த இடமுமே குறிஞ்சி. அதன் கடவுள் முருகன். கற்சிலைகளாகவும், உலோகச் சிலைகளாகவும் வடிக்கப்பட்ட கடவுளர்களை வணங்குவது, வழிபடுவது பக்தியின் ஆரம்பநிலை. இயற்கையின் ஒவ்வொரு துளியிலும் ஆண்டவன் உறைகிறான் என்பதே நிஜம். அந்த வகையில், ஞானமலையின் இயற்கைத் தோற்றம் முழுவதிலும் இறைவன் வியாபித்திருந்தான். `காக்கைச் சிறகில், அதன் கறுமை நிறத்தில் கண்ணனை பாரதியால் எப்படிப் பார்க்க முடிந்தது’ என்பதை ஞானமலையில் நம்மால் உணர முடிந்தது.  ஒவ்வொரு புல்லிலும், பூவிலும் குமரன் தன் அழகுக்கோலத்தை உள்ளேயிருத்திக் காட்சி தந்துகொண்டிருந்தான். 

கடவுளைத் தேடி

அடிவாரத்தில் இருந்த 'ஞானமலை ஞானாச்ரம’த்தைச்  சுற்றிவந்தோம். அமைதி தவழும் இடமாக இருந்தது ஆஸ்ரமம். அங்குதான் ஞானமலை முருகப்பெருமானின் உற்சவ மூர்த்தியை வைத்திருக்கிறார்கள். மிக எளிமையான அந்த ஆஸ்ரமத்தில், மயில் வாகனத்தில் மிடுக்காக அமர்ந்து காட்சிதருகிறார் முருகப்பெருமான்.  200 கிலோ எடைகொண்ட, பஞ்சலோகத்தால் ஆன சிலை. 'குறமகள் தழுவிய குமரன்' , தன் இடது தொடையில் வள்ளிப்பிராட்டியை அமர்த்தி, அணைத்தபடி தரிசனம் தருகிறார். வள்ளிப்பிராட்டியின் வலதுகரம், முருகப்பெருமானின் முதுகைத் தொட்டுச் சேர்த்தணைத்தபடி இருக்கிறது. மனமொத்த தம்பதிகளின் ஏகாந்த வடிவம் அது. 

முருகன் வள்ளி

மயில் வாகனத்தின் காலுக்குக் கீழே படமெடுத்த நிலையில் நாகம். முருகனை மனமுருக தியானித்த நிலையில், நின்ற கோலத்தில் அருகே அருணகிரிநாதர். ``அருணகிரிநாதரின் திருப்புகழ்ப் பாடல் ஒன்றில் குறிப்பிடப்பட்டிருக்கும் கோலத்தின் அடிப்படையில்தான் இந்த உற்சவர் சிலை வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் காட்சி தந்த கோலமும் இதுதான்’’ என்றார், ஆஸ்ரம நிர்வாகி ஒருவர்.  திருமுருகனோடு, அழகிய பிரதோஷ மூர்த்தி, அம்பாளுடன் உற்சவ சிலைவடிவில் அருள்பாலிக்கிறார். 

``மலை மேல் உற்சவ, அபிஷேக சிலைகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க முடியாது என்பதால்தான், கீழே ஆஸ்ரமத்தில் வைத்திருக்கிறோம். அபிஷேகத்தின்போதும், விழாக்காலங்களிலும் சிலைகளை மலைமீது கொண்டுபோய்விடுவோம்’’ என்கிறார்கள் நிர்வாகிகள்.  மலை வாயிலை அடைந்தோம். `ஞான பண்டித சுவாமி திருக்கோயில்’ அலங்கார நுழைவு வாயில் கம்பீரமாக நின்றுகொண்டிருந்தது. அதன் இடதுபுறத்தில் அமைந்திருக்கிறது ஊர் கிராம தேவதையின் ஆலயம். `பொன்னியம்மன்’ என்ற பெயரில், அமர்ந்த கோலத்தில், நான்கு கரங்களோடு திருக்காட்சி தருகிறாள் சக்தி. அவளை மனதாரப் பிரார்த்தித்துக்கொண்டு பயணத்தைத் தொடங்கினோம். 

பொன்னியம்மன்

மலையின் தொடக்கத்திலேயே வலது புறத்தில் விநாயகர். சின்னஞ்சிறு சந்நிதியில் 'ஞான சித்தி கணபதி' அருள்பாலிக்கிறார். பரசு, மாங்கனி, கரும்புத்துண்டு, பூங்கொத்து எனப் பல அபூர்வப் பொருள்களைத் தனது கரங்களில் ஏந்தியபடி, ஞானமே வடிவாகக் காட்சி தருகிறார் கணபதி. நேர்த்தியான விநாயகரின் உருவம், சிற்பக்கலையின் உன்னதத்தை நமக்கு உணர்த்தியது. பிள்ளையாரின் அழகில் மயங்கி, சற்று நேரம் கரம்கூப்பியபடி அவரையே பார்த்துக்கொண்டிருந்தோம். பிறகு, கணபதியை வணங்கி உத்தரவு பெற்றுக்கொண்டு மலை ஏறத்தொடங்கினோம். 

ஞான கணபதி

சற்று தூரத்தில் ஒரு பிரமாண்டமான பாறையைத் தழுவி, படர்ந்து வளர்ந்திருந்தது ஓர் ஆலமரம். பார்ப்பதற்கு அப்படியே சோமாஸ்கந்தரை நினைவுபடுத்தும் தோற்றம். சிவ, சக்தி, சுப்ரமணிய திருக்கோலத்தை நம் கண்முன்னே காட்சிப்படுத்திக்கொண்டிருந்தது அந்த மரம்.

ஞானமலை யாத்திரை

மலையெங்கும் விதவிதமான,  மிக அரிதான மரங்கள் அணிவகுத்து நிற்கின்றன. அரிதாகிப்போன வெப்பாலை, குடசப்பாலை, கல்லாலம் உள்ளிட்ட பல மரங்கள், இங்கே சாதாரணமாக வளர்ந்து நிற்கின்றன. மரங்களைக் கடந்து வரும் காற்று, நம் உடலையும் மனதையும் ஒருசேர குளிர்விக்கிறது. 25 ஏக்கர் நிலப்பரப்பில், 2 கிலோமீட்டர் சுற்றளவில்  பரந்து விரிந்திருக்கிறது ஞானமலை. முருகப்பெருமானை தரிசிக்க வரும் பக்தர்களைத்தான் எழுந்துநின்று வரவேற்க முடியாது என்ற காரணத்தால் மலைமகள், குளிர்ந்த காற்றை அனுப்பி நம்மை வரவேற்றுக்கொண்டிருந்தாள். மலை வளத்தையும், மலைப்பாதையின் வழியே அந்த ஊரின் நில, நீர் வளங்களையும் பார்த்து ரசித்தபடி பயணத்தைத் தொடர்ந்தோம். 

``இந்த மலையின் வடமேற்குப் பகுதியில் வள்ளிமலை, வடக்கில் சோளிங்கர் மலை, வடகிழக்கில் திருத்தணிகை மலை அமைந்திருக்கின்றன. வள்ளிமலை, சோளிங்கர், திருத்தணிகை மூன்று மலைகளையும் ஒரே நாளில் காலை, நண்பகல், மாலை  என மூன்று வேளைகளில் தரிசிப்பது விசேஷம்’’ என்றார் நம்முடன் வந்தவர். ``இந்தப் புகழ்பெற்ற மூன்று திருத்தலங்களுக்கு வரும் அன்பர்கள் ஞானமலைக்கும் வர வேண்டும். ஞானமலையின் அமைதியும் இயற்கைச் சூழலும் அலாதியானது என்பதை வந்தவுடன் உணர முடியும். முருகப்பெருமானின் திருவடிகளைத் தாங்கி நிற்கும் இந்த மலை, இறையனுபவத்திலும் மிக மிகச் சிறப்பான மலைதான்’’ என்றார் நம் நண்பர். 

பரவசப் பயணம்

மலை உச்சிக்கு, படிகளின்  வழியாக பக்தர்கள் ஏறிச்செல்ல ஒரு வழி, வாகனங்கள் சென்று வர ஒரு வழி என இருவழிகள் இருந்தன. நாம் படியேறி மலைமீது செல்லத்துவங்கினோம். படிகள் முடிவுற்ற இடத்தில், வலது புறமாக ஒருவர் தவமிருந்துகொண்டிருந்தார். அவரைப் பார்த்ததும் நாங்கள் அப்படியே நின்றுவிட்டோம். யார் அவர்? அடுத்த பகுதியில்...

பயணிப்போம்...

https://www.vikatan.com/news/spirituality/110207-a-travel-spiritual-journey-to-gnanamalai.html

Posted

காடு மலை தாண்டி, கடவுளைத் தேடி..! - பரவசப் பயணம் - 4

 
 

யாத்திரை

 

பயணங்கள் எல்லாமே மகிழ்ச்சியைத் தருபவைதான். அது கடவுளைத்தேடிச் செல்லும் ஆன்மிகப் பயணமாக மாறும்போது 'உள்முகப் பயணமாக' மாறிவிடுகிறது. ஆம், தன்னைத்தானே தேடும் முயற்சியாக மாறும்போதுதான் பயணம், யாத்திரையாகிவிடுகிறது. ஆன்மிகப் பயணத்தில் கோயிலைச் சுற்றுவது, மொட்டை அடித்துக்கொள்வது, காவடி தூக்குவது எல்லாமே ஓர் அடையாளம்தான். கடவுளைத் தேடுகிறோம் என்ற சாக்கில் நம்மை நாமே தேடிக்கொள்ளும் ஓர் ஆன்ம விசாரிப்புதான் யாத்திரை. ஏன் இங்கு பிறந்தோம்... பிறந்ததன் நோக்கம் என்ன? இப்படிக் கேள்விகள் எழும்பிக்கொண்டே போனால், கடைசியில் தெரிவது சரணாகதிதான். பிரமாண்டமான இறைவடிவத்தின் முன்பு நாம் ஒன்றுமே இல்லை என்பதை அறிந்துகொள்வதே சரணாகதி. நாம் ஒன்றுமே இல்லை என்பதை இயற்கை மட்டும்தான் உணர்த்தும். அந்த இயற்கையின் பிரமாண்ட வடிவம்தான் மலை. அதனாலேயே மலைகளின் மீது கடவுளர்களை வைத்து வணங்கத் தொடங்கினோம்.

முருகப்பெருமான்

மலை எத்தனை பிரமாண்டமானோதோ அத்தனைக்குப் பொறுமையானதும்கூட. அதாவது கடவுளைப்போல. மரங்களைப்போலவோ, கடலைப்போலவோ, தீயைப்போலவோ ஏன்... மற்ற எந்த இயற்கையின் வடிவம்போலவும் மலை சலனப்படுவதே இல்லை. சற்றுக்கூட அசைவதில்லை. எல்லாவற்றுக்கும் சாட்சியாக மட்டுமே இருக்கிறது. அதுவே மலையைக் கடவுளின் வடிவமாக வணங்கக் காரணமாகிறது. ஆனால், 'சாது மிரண்டால் காடு கொள்ளாது' என்பதுபோல் அமைதியான மலையே தனது பொறுமையை இழந்தால், சலனப்பட ஆரம்பித்தால், எரிமலையாக வெளிப்படும். எரிமலையின் குமுறலை உயிர்களால் தாங்க முடியாது என்பது நமக்குத் தெரிந்த உண்மை. மலை, பொறுமையின் வடிவமாக இருக்கிறது என்றால், அதுவே நமக்கு மானசீக குருவாகவும் விளங்குகிறது. மலையே ஒரு குருவடிவம்தான் என்று எண்ணிக்கொண்டு ஞானமலை மீது ஏறிக்கொண்டிருந்த எங்களுக்கு, மலைப்படிகளின் இறுதியில் வலப் புறமாக தவமியற்றிக்கொண்டிருந்த குருவுக்கெல்லாம் குருவான தட்சிணாமூர்த்தியின் காட்சி கிடைத்தது.

தென்முகக் கடவுளை தத்ரூபமாக தரிசிப்பதைப்போலவே அந்த ஆலமர்ச்செல்வனின் ரூபம் எங்களை வசீகரித்தது. கல்லால மரத்தின் அடிப்பகுதி இயற்கையாகவே பீடம்போல் அமைந்திருக்க, அந்தப் பீடத்தில் அமர்ந்திருந்தார் ஞானத்தின் தலைவரான தட்சிணாமூர்த்தி. சின்முத்திரை தாங்கி, புன்னகை தவழும் திருமுகத்துடன் காட்சிதரும் இவரை `ஞான தட்சிணாமூர்த்தி’ என்றே வணங்குகிறார்கள். அன்பு இருக்குமிடத்தில் கருணை இருக்கும். ஞானம் இருக்குமிடத்தில் அமைதி இருக்கும். அமைதியான அந்த இடத்தில் அமர்ந்து மௌனத்தாலேயே உபநிஷதங்களை உபதேசித்த குருவை தியானித்து அருள் பெற்றோம்.

தட்சிணாமூர்த்தி

ஞான தட்சிணாமூர்த்தியை தியானித்துவிட்டு, மேலே தொடர்ந்தோம். அடுத்து நாம் சென்ற இடம், அருணகிரிநாதர் யோகாநுபூதி மண்டபம். ஆறுமுகப்பெருமானே அனைத்தும் என்று வாழ்ந்த அருணகிரிநாதருக்கு யோகாநுபூதி அளித்த தலம் இது என்பதால், இங்கு இந்த மண்டபம் அமைக்கப்பட்டிருக்கிறது போலும்! பக்தர்கள் தங்கிச் செல்லவும், சுமைகளை இறக்கிவைக்கவும் இந்த மண்டபம் அமைக்கப்பட்டிருக்கிறது. மண்டபம் தாண்டி சற்று தூரம் நடந்தால் ...

யாத்திரை

ஞானபண்டித சாமியின் ஆலயம்! ஞானத்தின் வடிவமாக, ஓம்காரத்தின் நாதமாக, ஒரு நாமம், ஒரு வடிவம் ஒன்றுமில்லாத, தேவர்க்கெல்லாம் தலைவனான முருகப்பெருமானை நோக்கி விரைவாக நடைபோட்டோம். கொடிமரம், பலிபீடம், மயில் வாகனம் தாண்டி கோயிலுக்குள் நுழைந்தோம். அடடா... மிகச்சரியாக நாங்கள் சென்ற வேளை, வேலனுக்கு அபிஷேகங்கள் நடக்கவிருந்தன. ஒரு முகமும், நான்கு திருக்கரங்களும் கொண்ட முருகப்பெருமான் வள்ளி, தேவசேனாவோடு காட்சியளிக்கிறார். பின் இரு கரங்களில் ஜபமாலையும் கமண்டலமும் தாங்கி, முன் வலக்கை அபயமுத்திரை காட்ட, முன் இடக்கை இடுப்பிலும் அமைந்தவாறு `பிரம்ம சாஸ்தா' வடிவில் காணப்படுகிறார். பிரணவத்தின் பொருளை மறந்த பிரம்மாவை தண்டித்த முருகப்பெருமானின் கோலமே பிரம்ம சாஸ்தா வடிவம்.

ஞானமலை முருகன்

இது பல்லவர் காலத்து சிலை வடிவம் என்று கூறப்படுகிறது. மூன்றடி உயர வடிவில் ஞானவல்லி, ஞானகுஞ்சரி சமேதராக அருள்செய்யும் முருகப்பெருமான் பால், தயிர், பன்னீர், சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம், விபூதி... எனப் பலவகை திரவியங்களால் அபிஷேகிக்கப்பட்டு ஆனந்தமடைந்துகொண்டிருந்தார். 'திறந்த விழி திறந்தபடி' என்று சொல்வதுபோல் கண்களை இமைக்காமல் நாங்களும் அந்த அற்புதக் காட்சியை கண்டு தரிசித்தோம். 'தருநிழல் மீதில் உறைமுகில் ஊர்தி தரு திரு மாதின் மணவாளா' என்று அருணகிரிநாதர் வணங்கிப் போற்றிய முருகனை, திருமால் மருகனை வணங்கி, 'அருணகிரிக்கு அருள்செய்து காட்சி தந்த பெருமானே, இங்கே உன்னை தரிசித்துக்கொண்டிருக்கும் எங்களைப் போன்ற அடியவர்களுக்கும் மனமிரங்கி காவல் செய்ய வேண்டும்’ என்று உருகினோம். அபிஷேகத்தின் நிறைவில் அலங்காரமும் ஆராதனையும் நடைபெற்றன. அலங்கார பூஷிதனாக அந்த ஆறுமுகப்பெருமானை ஆரத்தி ஒளியில் தரிசித்தோம். `ஞானம் இருக்குமிடத்தில் பயம் இருப்பதில்லை’. எனவே, `யாமிருக்க பயமேன்?’ என்று உரைத்தவனின் திருவடியை வணங்கி ஆரத்தியை கண்களில் ஒற்றிக்கொண்டோம்.

கடவுளைத் தேடி

'இமையவர் துதிப்ப ஞானமலையுறை குறத்திபாக இலகிய சசிப்பெண் மேவு பெருமாளே' என்று அருணை முனிவன் தொழுது போற்றிய ஞானபண்டிதனை கண்ணார தரிசித்துவிட்டு, கருவறைவிட்டு வெளியே வந்தோம். அப்போதுதான் கோயிலைத் தாண்டி செல்லப்போகும் பகுதியில் இருக்கும் கல்வெட்டுகள், தேவசுனை, ஞானவெளி சித்தரின் ஜீவசமாதி, முருகப்பெருமானின் காலடித் தடங்கள் என்று ஆச்சர்யத்துக்கு மேல் ஆச்சர்யமான விஷயங்கள் இருக்கின்றன என்று கேள்விப்பட்டோம். `ஆஹா... இந்த மலை யாத்திரையின் முக்கியக் கட்டத்துக்கு இப்போதுதான் வந்திருக்கிறோம்’ என்று உணர்ந்து அந்த இடங்களை நோக்கி நடைபோட்டோம். எங்களோடு கரிய முகில்களும் தலைக்கு மேலாக விரைந்து சென்றன.

https://www.vikatan.com/news/spirituality/110921-a-journey-to-god-gnanamalai.html

Posted

ஞானிகள், யோகிகள் வணங்கிப் போற்றிய ஞானமலை குமரன் தரிசனம்! காடு, மலை தாண்ட, கடவுளைத்தேடி..! பரவசப் பயணம் - 5

 
 

பயணக்கட்டுரை

 

ல்லாப் பறவைகளும் மரத்தில் கூடு கட்டுகின்றன. ஆனால், ராஜாளி மட்டும் மலையில் வாழ்கின்றது. உயர்ந்த லட்சியங்கள்தாம் நம்மை உயர்ந்த மனிதர்களாக மாற்றும். நாம் பிறப்பெடுத்ததன் லட்சியமே வாழ்க்கையைச் சிறப்பாக மாற்றிக்கொள்வதற்காகத்தான். சிறப்பான வாழக்கையைப் பெறுவதற்கு நமக்கு இறையருள் தேவை. இறைவனைத் தேடி, இன்னருள் பெறுவதற்கு யாத்திரைகள் பெரும் உதவி செய்கின்றன. இயற்கையின் மேன்மையையும், இயற்கையைப் போற்றிப் பாதுகாக்கவேண்டியதன் அவசியத்தை அறிவுறுத்தவும், வலியுறுத்தவுமே மலைகளிலும், அடர்ந்த வனங்களிலும் கடவுளர்களின் கோயில்கள் அமைந்திருக்கின்றன.

பரவசப் பயணம்

எங்கும் நிறைந்திருக்கும் இறைவனின் மாட்சியையும், இறைவனின் ஆட்சியையும் இயற்கையில் உணர்ந்துகொள்கிறோம். பஞ்சபூதங்களின்றி மனிதர்களே இல்லை என்ற உணர்வினைக் கண்டுகொள்கிறோம். இறைவனைத் தேடி இறையருள் பெற நாம் மேற்கொண்ட யாத்திரையின்போதுதான் நாம் ஞானமலையை தரிசித்தோம். இதுவரை ஞானமலையின் சிறப்பம்சங்களையும், அதிசயங்களையும் தரிசித்த நாம், இந்த நிறைவு அத்தியாயத்திலும் இன்னும் பல அதிசயங்களைக் காணவிருக்கிறோம்.

நாங்கள் மலையில் ஏறிக்கொண்டிருந்தபோதே, வானில் மேகங்கள் சூழ்ந்துகொண்டது. எங்கே மழை வந்துவிடுமோ என்ற எண்ணத்தில் நாம் வேகமாக ஏறத் தொடங்கினோம். ஆனால், மழை வருவதற்கு வாய்ப்பே இல்லை என்று கட்டியம் கூறிச் சொல்வதுபோல், குரங்குகள் அன்னநடை போட்டபடி திரிந்துகொண்டிருந்தன. குரங்குகளை நமக்குச் சுட்டிக்காட்டிய அன்பர், ''மழை வரும் என்றால் இந்தக் குரங்குகள் முதலில் எங்காவது போய் ஒதுங்கிக்கொள்ளும். எனவே, நாம் பொறுமையாகவே செல்லலாம்'' என்று கூறினார்.

குரங்கு

கோயிலின் பின்புறத்திலும் ஒரு கோயில் பிரமாண்டமாகக் கட்டப்பட்டு வருகிறது. பல்லவர்கள் காலத்தில் கட்டப்பட்ட அந்தக் கோயில் சிதிலமடைந்துவிடவே, தற்போது திருப்பணிகள் செய்து வருகிறார்கள் என்றும், அடுத்த வருடம் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதாகவும் அங்கிருந்தவர்கள் கூறினார்கள். புதிதாகக் கட்டப்பட்டு வரும் கோயிலைக் கடந்து சென்ற நாம், முதலில் கண்டது பாலை சித்தர் என்னும் ஞானவெளி சித்தரின் ஜீவசமாதியை.

அருணகிரிநாதரின் குருவான பாலை சித்தர், பல அற்புத ஆற்றல்கள் கொண்ட மகாஞானி. மக்களின் குறைகளைத் தீர்த்த ஞானப்பொக்கிஷம். இவரின் ஜீவசமாதி அமைந்துள்ள இடம் இப்போது ஞானகிரீஸ்வரர் ஆலயமாக அமைந்துள்ளது. ஞானப்பூங்கோதை, ஞான கணபதி, ஞான சுப்பிரமணியர், நவகிரகங்கள், பைரவர், சண்டிகேஸ்வரர் சந்நிதிகளும் இங்கு இருக்கின்றன. இவற்றையெல்லாம் தரிசித்து, மனதுக்குள் அந்த அற்புதச் சித்தரை எண்ணி சிறிது நேரம் அங்கேயே தியானம் செய்தோம். தியானத்தின் நிறைவில் மனம் நிர்மலமாகி, ஒரு பரவச உணர்வு நம்மை ஆட்கொண்டது.

பழைய கோயில்

அமைதியான சூழலில் மனமும் ஒடுங்கியிருக்க, நாம் நடையைத் தொடர்ந்தோம். எல்லாம் அவன் செயல் என்ற சரணாகதி நிலையில் ஆன்மா அடங்கி இருந்ததை அனுபவத்தில் நம்மால் உணரமுடிந்தது. மூச்சு விடும் சத்தம் கூட கேட்கும்படியான அமைதி அங்கே நிலவியது. எல்லாம் சித்தர் அருள் என்று எண்ணியபடி பின்புறம் இருந்த முருகப்பெருமானின் திருவடி பதிந்திருக்கும் ‘ஞானமலை முருகன் திருவடிப்பூங்கோயிலை' அடைந்தோம். அழகிய விசாலமான மண்டபத்தின் நடுவில், அருணகிரிநாதருக்குக் காட்சி தந்தபோது பதிந்த அழகன் முருகனின் பாதங்களை நாம் தரிசித்தோம்.

திருவண்ணாமலையில் கம்பத்து இளையவராக காட்சி தந்து அருணகிரிநாதரை ஆட்கொண்ட முருகப்பெருமான், ஞானமலையில் இரண்டாவது முறையாக ‘குறமகள் தழுவிய குமரனாக' காட்சி தந்தார். அவர் காட்சி தந்தபோது பதிந்த அவரது காலடித்தடங்கள் கண்டதும் மெய்சிலிர்த்துப்போனோம். பரவச நிலையில் அந்தத் திருவடிகளை விழுந்து வணங்கினோம். 'எத்தனையோ ஞானியர்களும், யோகியர்களும் வணங்கி ஏத்திய இந்த அற்புத மலரடிகளை இந்தச் சாதாரண அடியேனுக்கும் காணச் செய்தனையோ எங்கள் குமரா' என்று மனம் நெகிழ்ந்தவர்களாக அங்கும் சற்று நேரம் தியானம் செய்தோம்.

குமரனின் காலடி

அந்த மண்டபத்தில் இருந்தபடியே கீழே தெரிந்த இயற்கைக் காட்சிகளை ரசித்துக்கொண்டி ருந்தோம். 'போதும், போதும் இத்தனை அற்புதமான இன்பங்கள் போதும்' என்று மனம் பரவசத்தில் லயித்திருக்க, அங்கேயே இருந்துவிட முடியாதா என்று எண்ணி ஏங்கச் செய்தது. ஆனால், நாம் பெற்ற இன்பத்தை மற்றவர்களும் அறிந்து இன்புறவேண்டுமே என்ற எண்ணமும், நமக்கான நம் கடமைகளும் நம் மனதைத் திருப்ப, நாம் அங்கிருந்து புறப்பட்டோம்.

மயில் காலடி

வரும் வழியில் முருகப்பெருமான் திருக்கோயிலின் பக்கவாட்டில் மலையின் ஒருபக்கம் இறங்கினால் தாமரை மலர்கள் பூத்திருக்கும் ஞானச் சுனை அமைந்திருப்பதைக் காணலாம். இதுவே முருகப்பெருமானின் அபிஷேக நீராக முன்னர் இருந்துள்ளது. இப்போது பச்சை நிறத்தில் பாசிப் படர்ந்து இருக்கிறது. இந்தச் சுனையின் அருகே மேல்புறமாக காளிங்கராயன் கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. "சகல லோகச் சக்கரவர்த்தி வென்று மண்கொண்ட சம்புவராயரின் (கி.பி 1322 - 1340) 18-ம் ஆட்சியாண்டில் சம்புவராயப் பழரையர் மகன் காளிங்கராயன் என்பவன் இங்கு ஞானமலை மேல் உள்ள கோயிலுக்குச் செல்லப் படிகளை அமைத்தான்' என்று அந்தக் கல்வெட்டு வரலாற்றுத் தகவலைச் சொல்கிறது.

ஞானச் சுனை

மனம் நிறைய எதிர்பார்ப்புடன் சென்ற நமக்கு, ஞானமலையில் கிடைத்த ஆன்மிக அனுபவங்கள் ஏற்படுத்திய பரவச உணர்வை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. அருணகிரிநாதருக்கு அருளிய அழகன் முருகன், 'குறமகள் தழுவிய குமர'னாகக் கோயில் கொண்டிருக்கும் ஞானமலையை தரிசித்துக் கிளம்பிய நாம், மலையடிவாரத்தை அடைந்ததும் மறுபடியும் மலையுச்சியைப் பார்த்து, அங்கிருக்கும் முருகப் பெருமானிடம், 'எல்லோருக்கும் எல்லா வளங்களையும் தந்தருள்வாய் முருகா' என்று பிரார்த்தித்தோம். மலைகள் மௌனமாக நம் கோரிக்கையை ஏற்று ஆசீர்வதிப்பதுபோல் மௌனமாகக் காட்சி தந்தது.

முருகன்

ஒருமுறை உண்டால் மட்டும் பசி இல்லாமல் போய்விடுமா என்ன? எத்தனை முறை உண்டாலும் மீண்டும் மீண்டும் பசிப்பதைப் போலத்தான் இறைவனைத் தேடும் முயற்சியும். எனவே, யாத்திரை என்பதும் திரும்பத் திரும்பத் தொடரவேண்டிய ஒன்றுதானே? எங்கெல்லாம் மனம் இறைவனோடு சங்கமிக்கிறதோ, எங்கெல்லாம் மனம் இறையுணர்வில் பரவசம் அடைகிறதோ அங்கெல்லாம் யாத்திரையைத் தொடரவேண்டும் என்ற எண்ணத்தில் நாமும் நம் அடுத்த யாத்திரையைத் தொடர்கிறோம்...

 

யாத்திரை தொடர்கிறது ...

  • 3 weeks later...
Posted

அபூர்வ மூலிகைகள்... சந்திரகாந்தக் கல்... ஆன்ம அதிர்வை எழுப்பும் ஈசன் மலை...! காடு, மலை தாண்டி கடவுளைத் தேடி, பரவசப் பயணம் - 6

 
 

பரவசப் பயணம்

 

னிதனின் வாழ்க்கையே ஒரு யாத்திரைதான். மனிதன் பிறக்கும்போதே அவனுடைய தீர்வும் நிச்சயிக்கப்பட்டு விடுகிறது. அந்தத் தீர்வு எப்போது என்பது தெரியாமல், ஆனால், என்றோ வரப்போகும் தீர்வை எதிர்பார்த்தபடியே மனிதனின் வாழ்க்கை யாத்திரையைப் போலத் தொடங்குகிறது. தீர்வு எப்போது என்பது தெரியாமல் இருப்பதில்தான் வாழ்க்கையின் சுவாரஸ்யம் இருக்கிறது. 

மரணம், மரணத்துக்குப் பிந்தைய வாழ்க்கை பற்றிய பயம்தான் மனிதர்களை ஓரளவு நியாயமாக வாழச் செய்கிறது. கடவுள் பற்றிய தேடலையும் உருவாக்குகிறது. ஞானத்தை நோக்கிய எல்லா யாத்திரைகளின் இலக்குகளும் அர்த்தமுள்ளவை. அவை பிறப்பெடுத்ததின் பயனையும், வாழ்வின் அவசியத்தையும் விளக்குகின்றன. மரணத்தைப் பற்றிய அச்சத்தையும் போக்கி விடுகின்றன. அரட்டையில்லாத ஆன்மரீதியிலான உள்முக யாத்திரைகள் உங்களை உங்களுக்கே அடையாளம் காட்டிவிடும்.

பரவசப் பயணம் - ஈசன் மலை

 

ஞானமலை யாத்திரையின் தொடர்ச்சியாக நாம் அடுத்துச் சென்றது, ஈசன் மலை. ஆதிகாலத்தில் பிரமாண்ட வடிவம் கொண்ட எல்லாமே வணக்கத்துக்கு உரியதாக இருந்தன. பஞ்சபூதங்களின் அம்சமான நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் என்று மனிதர்களின் வழிபாடு முறைப்படுத்தப்பட்டது. இதில் நிலத்தின் பிரமாண்ட வடிவம்தான் மலை. மலையே லிங்கத்தின் வடிவம்தான் என்பது சைவர்களின் நம்பிக்கை. 'ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி!' என்று மாணிக்கவாசகர் திருவாசகத்தில் சிவனை மலையாகவே வழிபட்டுள்ளார் என்பதே அதற்குச் சாட்சி.

ஈசன் மலை, இயற்கையும், இறைவனும் பின்னிப்பிணைந்து ஒன்றுக்குள் ஒன்று திளைத்து நிற்பதைக் காட்டும் அமைதியான, ஆள் அரவமற்ற பசுமையான மலை. அபூர்வமான மூலிகைகளும், அரிதான மரங்களும் நிறைந்து காணப்படும் அற்புதமலை. வள்ளிமலை அருகே இருக்கும் இந்த மலை, ஈசான்ய மூலையில் அமைந்திருப்பதால், 'ஈசானிய மலை' என்றும் அழைக்கப்படுகிறது.

பரவசப் பயணம்

மலை அடிவாரத்தை அடையும் பாதையே இயற்கைச் சோலையாக, இறைவனின் சாட்சியாக திகழ்கின்றது. மலையின் அடிவாரத்திலிருந்து மலையைப் பார்க்கும்போதே மனதில் ஒரு மோனநிலை உருவானது. எங்கும் அமைதி தவழ்ந்திருக்க, ஏதோ ஓர் ஆவல் நம்மைத் தொற்றிக்கொண்டது. 'இங்கே ஏதோ ஓர் அற்புத அனுபவம் நமக்குக் காத்திருக்கிறது' என்று நம் உள்ளுணர்வு சொல்லிக்கொண்டே இருந்தது.

நாம் ஈசன்மலைக்குச் சென்றது உச்சிப்பொழுது. ஆனால், நடுவானில் பிரகாசித்த சூரியனின் கிரணங்கள்கூட வெம்மையைத் தராமல், குளிர்ச்சியையே எங்கும் பரப்பியது. அந்த அளவுக்கு மரங்கள் அடர்த்தியாக வளர்ந்திருக்கும் மலை ஈசன்மலை.

பரவசப் பயணம் - ஈசன் மலை

மலையின் அடிவாரத்தை அடைந்தோம். அடிவாரத்தில் புதிதாக எழுப்பப்பட்டிருந்த கோயிலில் வரசித்தி விநாயகர் நமக்கு தரிசனம் தருகிறார். அவரை வணங்கிவிட்டு மலையேறத் தொடங்கினோம். நிலப்பனங்கிழங்கு, தண்ணீர்விட்டான் கிழங்கு, புளியாரை, புளி நாரை என நூற்றுக்கணக்கான மூலிகைச் செடிகளும், பாதிரி, வெண்நாவல், தவிட்டான், கருங்காலி, வலம்புரி உள்ளிட்ட பல அபூர்வ மரங்களும் நம்மை விழி விரியச் செய்கின்றன. இவை எல்லாமே 'ஸ்ரீ அகத்தியர் பசுமை உலகம் டிரஸ்ட்' என்ற அமைப்பால் நடப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.

உயிர்காக்கும் பல அபூர்வ மூலிகைகள் இங்கு மலிந்து கிடக்கின்றன. அதுமட்டுமா? அபூர்வமான குளிர்ச்சி மிக்க சந்திரகாந்தக் கல் ஒன்று மலை மீது காணப்படுகிறது. சந்திரனைப்போல குளிர்ச்சிமிக்க இந்தக் கற்கள்தான் நமது கோயில்களில் விமானத்தின் உள்பக்கம் பொருத்தப்பட்டு, கருவறைக்குக் குளிர்ச்சியைத் தருகின்றன. கல் இறுகி இரும்பைப்போலான பாறைத்தொடர் ஒன்றும் மலையைச் சுற்றிச் செல்கிறது. எங்கும் பசுமை நிறைந்திருக்க, மலையின் இடைவழியில் வள்ளி, தெய்வசேனா சமேத ஸ்ரீ சுப்ரமணிய ஸ்வாமியின் ஆலயம் எதிர்ப்படுகிறது. குன்றுதோறாடல் செய்யும் நம் குமரனை, 'அருவமும், உருவுமாகி, அநாதியாய்ப் பலவாய், ஒன்றாய், பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனி'யாகக் காட்சித் தந்த தமிழ்க்கடவுளை, தன்னிகரில்லாத அழகனை வணங்கி வெளியே வந்தோம். பக்தர்கள் தங்கிச் செல்ல பெரியதொரு மண்டபம் அமைக்கப்பட்டிருந்தது. பின்புறத்தில், ஶ்ரீகாளப்ப ஸ்வாமியின் சமாதி. ஈசன்மலையின் வளர்ச்சிக்கும் புகழுக்கும் அடித்தளம் அமைத்த மகானின் திருவடி தொழுது யாத்திரையைத் தொடர்ந்தோம்.

பரவசப் பயணம் - ஈசன் மலை

வழியில், சிலுசிலுத்தோடுகிறது ஒரு சுனை. தண்ணீரைப் பார்த்தவுடனே அள்ளிப் பருகத் தோன்றுகிறது. பெயரே மருந்து சுனை. அருகிலிருக்கும் வெண் நாவல் மரத்தினடியில் காட்சி தருகிறார் அருள்மிகு ஜம்புகேஸ்வரர். ஜம்பு என்றாலே நாவல் மரம்தான். ஆள் அரவமற்ற அந்த இடத்தில், ஈசனின் திருமுன்பு அமர்ந்து சற்றுநேரம் தியானித்தோம். 

அப்போது நம் தலையைச் சுற்றிச் சுற்றி ஒரு ஈ ரீங்காரமிடுகிறது. வடிவத்தில் பெரிதாக இருக்கும் அந்த ஈ ஏதோ ஒரு தொடர்பில் நம்மை அண்டுகிறது. மலையின் உயரத்தில் அதுவும் குளிர் அதிகம் உள்ள சூழலில் ஈக்கள் இருக்காது. ஆனால், இங்கு மட்டும் யார் தியானம் செய்தாலும் அவர்களின் தலையைச் சுற்றிச் சுற்றி வந்து அந்த ஒற்றை ஈ ரீங்காரமிடுகிறது. சித்தர்களில் ஒருவர்தான் ஈ வடிவத்தில் தியானம் செய்பவரைச் சுற்றி வந்து ஆசிர்வதிப்பதாகச் சொல்கிறார்கள் அங்கி்ருப்பவர்கள்.

பரவசப் பயணம் - ஈசன் மலை

 

மௌனகுரு சாமிகள், வள்ளிமலை ஸ்வாமிகள், திருப்புகழ்ச் சித்தர் போன்றோர் தவமிருந்த இடமிது. அந்தப் பரப்பில் பரவும் மெல்லிய ஆன்ம அதிர்வை நம்மால் தெளிவாக உணர முடிகிறது. அதை அனுபவித்துக்கொண்டே அடுத்த அடி எடுத்துவைத்தோம். 

https://www.vikatan.com/news/spirituality/112174-spiritual-journey-to-esan-malai-temple.html

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மிக மேன்மையான தொடர்....தொடருங்கள்.....!  tw_blush:

Posted

இயற்கை காதலர்களை ‘வருக வருக’வென அழைக்கும் ஈசன் மலை! காடு, மலை தாண்டி கடவுளைத் தேடி..! பரவசப் பயணம் - 7

 
 

யாத்திரை ஈசன் மலை

 

ஏதோ ஒன்றைத் தேடி ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குச் செல்வதுதான் பயணம் அல்லது யாத்திரை.

இந்தப் பிரபஞ்சத்தில் எல்லாமே பயணிக்கவே செய்கின்றன. உயிருள்ளவை மட்டுமல்ல, உயிரற்றவையும் பயணிக்கின்றன. கோள்கள், துணைக்கோள்கள் என அனைத்துமே இந்தப் பால்வீதியில் ஒரு தாளலயத்தோடு பயணிக்கவே செய்கின்றன. ஊழிக் காலம்வரை இந்தப் பயணம் தொடரவே செய்யும். விலங்குகளும் பறவைகளும்கூட இரை தேடியும், சீதோஷ்ண சூழலுக்காகவும் பல்லாயிரக்கணக்கான மைல்கள் பயணிக்கின்றன. அப்படியிருக்க, மனிதன் மட்டும் வெந்ததைத் தின்று நான்கு வீதிகளுக்குள் அடங்கிக் கிடப்பது நியாயமா? 50 கி.மீ தொலைவும், 500 வார்த்தைகளும் மட்டுமே எல்லையாகக் கொண்டு வாழும் மனிதர்கள் உண்மையில் பரிதாபத்துக்கு உரியவர்கள்தான்.

ஈசன்மலை மண்டபம்

பயணங்கள் நீளும்போதுதான் மனிதர்களின் அறிவும் மனமும் விசாலமாகிறது. ஓடினால்தான் நீர், தேங்கி விட்டால் சகதிதான். பயணங்கள் அனுபவத்தைக் கொடுக்கிறது என்றால், ஆன்மிகம் சார்ந்த பயணங்கள் அதாவது யாத்திரைகள் சகலத்தையும் அறியச்செய்கிறது; மெய்ஞ்ஞானத்தை உணரச்செய்கிறது; அனைத்துக்கும் மேலாக சகல ஜீவன்களை நேசிக்கவும் செய்கிறது. இங்கு எல்லாமே இறைவனின் படைப்புதான் என்பதை நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. அப்படி ஒரு மாற்றத்தை நமக்குள் ஏற்படுத்துவதுதான் புனித யாத்திரையின் நோக்கம்.

ஈசன் மலை

ஞானமலை யாத்திரையின்போதும் தொடர்ந்த ஈசன்மலை யாத்திரையின்போதும் நாம் பெற்ற படிப்பினை இதுதான்.

அடர்ந்த மரங்கள், குளிர்ந்த காற்று, சலசலக்கும் நீரோடைகள், சங்கீதம் பாடும் பறவைகள் என இயற்கையே சாட்சியாய், இறைவனுடைய ஆட்சியின் மாட்சிமையை நமக்குக் கூறிக்கொண்டிருந்த ஈசன் மலை எங்களுக்கு உண்மையிலேயே அற்புத ஆனந்தப் பரவசத்தை நமக்குத் தந்துகொண்டிருந்தது.

ஈசன்மலை யாத்திரை

நாம் தியானம் செய்த இடத்திலிருந்து பார்த்தபோது மலையுச்சி தெரிகிறது. மலையின் உச்சியிலும் ஒரு சிவலிங்கத் திருமேனி இருப்பதாகவும், அங்கே சித்தர்கள் வழிபாடு செய்வதாகவும் சொல்லப்படுகிறது. அந்த இடத்துக்குச் செல்வது மிகவும் சிரமமான செயல் என்பதாலும், திரண்டு வந்த மேகங்களால் இருள் சூழ்ந்துவிட்டபடியாலும், மேலும் மலை உச்சிக்குப் போக முடியவில்லை. முருகப்பெருமானின் ஆலயம், வெண்நாவல் மரத்தடி ஜம்புகேஸ்வரர், காளப்ப சித்தரின் சமாதி போன்றவற்றை மீண்டும் ஒருமுறை நின்ற இடத்திலேயே தரிசித்துவிட்டு கீழே இறங்கத் தொடங்கினோம். எதிரே மலைமீது மயில் ஒன்று அகவியபடியே ஓடி மறைந்தது கண்டு சிலிர்த்துப்போனோம். ஆம், அது ஒரு இன்பமான சிலிர்ப்பை, பரவச உணர்வை எங்களுக்குள் ஏற்படுத்தியது. 'ஈசனின் படைப்புகள் எல்லாமே எத்தனை அழகு!' என்று எண்ணி மனம் சிலிர்ப்படைந்தது.

ஈசன்மலை

வழியெங்கும் விதவிதமான நறுமணங்களை நம்மால் நுகர முடிந்தது. வேறெங்கும் காணவே முடியாத மரம், செடி, கொடிகள் காற்றில் கையசைத்து நம்மை வழியனுப்பின. ஈசனும், அவர்தம் திருக்குமாரனும் ஒன்றாகச் சேர்ந்து அருளாட்சி செய்யும் இந்த பசுமை மலை, பரவசத்தை அருளும் ஈசன் மலை, அசுத்தம் என்பதே இல்லாத அழகிய மலை; அற்புதமான மலை. வந்து பார்ப்பவர்களுக்கு பரவசநிலையை அருளும் ஈசன்மலை, இயற்கையை நேசிக்கும் எவருக்குமே மிகவும் பிடித்தமான மலையாகத் திகழும் என்பதில் சந்தேகமே இல்லை.

ஜம்புகேஸ்வரர்

வள்ளிமலை.. திருத்தணிகைமலை தரிசிப்பவர்கள் இந்த ஈசன்மலைக்கும் வரவேண்டும்; இயற்கையழகை ரசிப்பதுடன், இறையருளையும் பெற்றுத் திரும்பவேண்டும். திருத்தணி, வள்ளிமலை கோயிலுக்கு வருபவர்கள், இந்த ஈசன் மலைக்கும் வரலாம். இறைவனோடு, எழில்கொஞ்சும் இயற்கையையும் தரிசிக்கலாம். வள்ளிக்குறமகளோடு வாசம் செய்யும் குமரனையும், வான் முகில்கள் கொஞ்சி விளையாட வெட்டவெளியில் காட்சி தரும் ஜம்புகேஸ்வரரையும் தரிசிக்க மட்டுமல்ல, உங்களை நீங்களே உணர்ந்துகொள்ளவும் இந்த மலை உங்களுக்கு உதவக்கூடும். அதற்காகவாவது இங்கு வரலாம். மனம் நிறைய அமைதி நிரம்பியிருந்தாலும் எதோ ஒன்றை விட்டுவிட்டு வந்ததைப்போல பிரிய மனமில்லாமல் விடைபெற்றோம் ஈசன் மலையிடமிருந்து. ஒரு யோகியைப்போல இறுக்கமாக அதுவும் எங்களை வழி அனுப்பி வைத்தது. கிணற்றுக்குள் வானம் தெரியலாம், ஆனால், கிணற்றுக்குள் கிடப்பதே வானமில்லை. யாத்திரைகள் தொடர்ந்துகொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் கொஞ்சமேனும் இறைவனின் இருப்பினை உணர்ந்துகொள்ள முடியும். மீண்டும் வேறொரு மலைத் தலத்தினை இங்கே தரிசிப்போம்.

ஈசன்மலை, ராணிப்பேட்டை - சித்தூர் சாலையில் ராணிப்பேட்டையிலிருந்து சுமார் 26 கி.மீ தொலைவில் உள்ளது.

 

யாத்திரை தொடர்கிறது ...

https://www.vikatan.com/news/spirituality/114047-pilgrim-of-vallimalai-temple.html

Posted

வள்ளி… ஆடி, ஓடி, விளையாடி அருளிய வள்ளிமலை தரிசனம்! காடு, மலை தாண்டி கடவுளைத் தேடி..! – பரவசப் பயணம்! - 8

 

யாத்திரை தொடர்

 

 

 

அறிவு என்பது வேறு; ஞானம் என்பது வேறு. அறிவை நாம் எப்படியும் எங்கிருந்தும் பெற்றுக்கொள்ளலாம். பார்த்தும், கேட்டும், படித்தும் அறிவை நாம் பெற்றுவிடலாம். அனுபவங்களின் மூலமாகவும் பெறலாம். அறிவு என்பது உங்களை உலகத்துக்குக் காட்டப் பயன்படும். ஆனால், ஞானம் என்பது உங்களை உலகுக்குக் காட்டுவதுடன், உங்களையும் உங்களுக்குக் காட்டும். ஞானம் என்பது ஆன்மிகத் தேடல்களின் மூலமாக மட்டுமே நமக்குக் கிடைக்கும். தேடல் என்றாலே தேடிப் பயணிப்பதுதான்.

வள்ளிமலை

தாழ்ந்த இடம் நோக்கிச் செல்லும் நீரைப் போல, வெற்றிடத்தை நோக்கிச் செல்லும் காற்றைப் போல அமைதியை நோக்கி நாடிச் செல்லும் மனமே ஞானத்தை அடைகிறது. பல இடங்களை நோக்கித் தொடரும் யாத்திரையில், எங்கோ ஓர் இடத்தில் மனதுக்கு ஞானம் கிடைத்துவிடுகிறது. அப்படி நமக்கும் எங்கே ஞானம் ஸித்திக்குமோ என்ற ஏக்கமும் எதிர்பார்ப்புமாகவே நாமும் ஞானமலை, ஈசன்மலையைத் தொடர்ந்து நம்முடைய யாத்திரையை வள்ளிமலையை நோக்கித் தொடர்ந்தோம்.

யாத்திரை

‘ஞானத்தைத் தேடத் தேட மனம் அலைபாய்ந்தபடியே இருந்ததே தவிர, ஒருநிலையில் ஒடுங்கவேயில்லை. சில இடங்களில் மட்டும் மனம் தற்காலிகமாக லயித்துப் போய் இருந்ததே தவிர, பக்குவப்படவே இல்லை. எந்த இடத்தில் மனம் பக்குவப்பட்டு, ஞானம் கிடைத்துவிடுகிறதோ அதன் பிறகு யாத்திரை அந்த இடத்திலேயே முற்றுப் பெற்றுவிடுமே. நம்முடைய யாத்திரையில் நாம் பெற்ற ஞானத்தை மற்றவர்களுக்கு வழங்க முடியாவிட்டாலும், யாத்திரையின்போது நாம் பெற்ற சிலிர்ப்பூட்டும் அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளலாமே’ என்றெல்லாம் பலவாறாக நினைத்தபடி நாம் வள்ளிமலை அடிவாரத்தை அடைந்தோம். 'ஞானத்தைத் தேடிய நம் யாத்திரையில் நாம் இப்போது செல்லப்போகும் வள்ளிமலையிலாவது நமக்கு ஞானம் கிடைத்துவிடாதா?' என்ற எதிர்பார்ப்புடன் நாம் வள்ளிமலையின் தெய்விக அழகை தரிசித்து வணங்கினோம். அந்த மலையின் மீது எழுந்தருளி இருக்கும்

வள்ளிமலை பயணம்

அந்த அழகு முருகனை, மாலவன் மருகனை, வள்ளிக்குற மகளின் உள்ளம் கவர்ந்த நாயகனை மலையடிவாரத்திலிருந்தபடி நாம் இருகரம் கூப்பித் தொழுதோம்.

‘பாலினுள் மறைந்திருக்கும் நெய் போலவும், ஸ்வரங்களுக்குள் மறைந்திருக்கும் ராகங்கள் போலவும், மன மாயை இருளுக்குள் மறைந்திருக்கும் ஞானத்தைத் தேடி அடைந்திடவே, முருகா, நின் திருவடி நாடி வந்துள்ளேன்’ என்று இறைஞ்சியபடியே சற்றுநேரம் நின்றிருந்தோம். நின்றபடியே வள்ளிமலையின் தோற்றத்தை மனத்திரையில் படம் பிடித்துக்கொள்ள முயற்சி செய்தோம்.

வள்ளிமலை முருகன்

வள்ளிமலை ஓர் அபூர்வமான தோற்றத்தைக் கொண்டது. எந்த ஒரு மலையையும் கண்ணால் கண்ட பிறகு கண்களை மூடிக்கொண்டு அந்த மலையின் தோற்றத்தை மனதுக்குள் கொண்டு வந்துவிட முடியும். ஆனால், வள்ளிமலையின் தோற்றத்தை மட்டும் நம் மனத் திரையில் படம் பிடிக்க முடியவில்லை. மனதுக்குச் சிக்காத மந்திரமலை அது! அந்த மலை வள்ளிமலையல்லவா? வள்ளி என்றால் இச்சா சக்தி. அதாவது ஆசை - எண்ணங்களின் வடிவம் வள்ளி. தேவசேனா கிரியா சக்தி அதாவது ஆசைகளை - எண்ணங்களைச் செயல்வடிவம் பெறச் செய்யும் ஆற்றல் சக்தி. ஆசைகளையும் ஆற்றல்களையும் கட்டுப்படுத்தும் ஞானசக்தியே முருகப்பெருமான். நமக்குள் ஞானம் பெறவேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டியவள் வள்ளி; எண்ணம் செயல்வடிவம் பெறுவதற்காக நாம் மேற்கொள்ளும் யாத்திரைக்குத் தேவையான ஆற்றலை நமக்கு அருள்பவள் தேவசேனா. தேவியர் இருவர் அருளுடன் ஞானசக்தியான முருகனின் அருளைப் பெற்றிட விரும்பிய நாம் வள்ளிமலையை அடைந்துவிட்டோம்.

வள்ளி

வள்ளிக்குறமகள் பிறந்து உலவிய இடம் இது, அவளை ஆட்கொண்டு மணம்புரிய எம்பெருமான் குமரவேல் திருவிளையாடல் நடத்திய இடம் இது. இவர்களின் திருமணத்துக்கு உதவ விநாயகப்பெருமான் யானை உருவமெடுத்து வந்த தலம் இது என்று மனம் நிறைய பக்தியோடு முதலில் நாம் சென்றது ஆறுமுகநாத சுவாமிக் கோயில். கோயில் சந்நிதிக்கு வெளியில், நிறைய திருமண மண்டபங்களாக இருந்தன. வள்ளியை முருகப்பெருமான் மணந்த தலம் இது என்பதால், இங்கு நிறைய திருமணங்கள் நடைபெறுகின்றன போலும்! மலையடிவாரக் கோயிலின் முன்புறம் பரந்த மண்டபமும் உள்ளது. அதன் மேற்புறத்தின் சுற்றுப்புறங்களில் வள்ளிப்பெருமாட்டியின் வரலாற்றைச் சொல்லும் படங்களும், முருகப் பெருமானின் திருஅவதாரம் கூறும் படங்களும் அழகுற வரையப்பட்டுள்ளன. மண்டபத்தைத் தாண்டி, ஐந்துநிலை மாடக் கோபுரத்தைத் தாண்டி கோயிலின் உள்ளே செல்கிறோம்.

வள்ளிமலை ஆறுமுகநாதர்

அமைதியான ஒரு சுற்றுக்கோயில். கருவறைக்குள் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஆறுமுகநாதர் அழகுற காட்சியளிக்கிறார். எல்லா வினைகளையும் அறுத்தெறிந்து ஆட்கொள்ளும் முருகப்பெருமானை கண் குளிர தரிசித்து கோயிலைச் சுற்றி வந்தோம். கோயிலின் இடப் புறமாக நவகிரக சந்நிதி அமைந்துள்ளது. கோயிலெங்கும் குரங்குகளின் நடமாட்டம் அதிகமாகவே உள்ளது.

வள்ளிமலை கோயில்

மலையடிவாரக்கோயிலை விட்டு வெளியே வர, பின்புறமாக அமைந்துள்ளது சரவணப்பொய்கை எனும் அழகிய திருக்குளம். குளத்துக்கு முன்புறமாக திருமுருக கிருபானந்த வாரியாரின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. வள்ளிமலையின் வளர்ச்சிக்கு காரணமான வள்ளல் அல்லவா அவர்!

வாரியார் ஸ்வாமிகள்

திருக்குளத் தீர்த்தத்தை சிறிது எடுத்து நம் தலையில் தெளித்துக்கொண்டு மலையடிவாரத்தை அடைந்தோம்.

திருக்குளம்

மலையடிவாரத்தில் தமிழ்க்குறமகள் வள்ளி பிராட்டியின் தனிச்சந்நிதி முதலில் காணப்பட்டது. இந்தச் சந்நிதி வள்ளிமலையில் மிக மிக விசேஷமான இடம் என்று அந்த கோயில் அர்ச்சகர் நம்மிடம் கூறினார்.

வள்ளி கோயில்

அப்படி என்ன விசேஷம் அந்தக் கோயிலுக்கு..?

 

பயணம் தொடரும்...

https://www.vikatan.com/news/spirituality/114047-pilgrim-of-vallimalai-temple.html

Posted

கானகம் தந்த பரிசு வள்ளிப்பிராட்டி!-வசீகரிக்கும் வள்ளிமலை! காடு, மலை தாண்டி கடவுளைத் தேடி! பரவசப் பயணம்! - 9

 
 

யாத்திரை

 

 

 

வள்ளிமலையை வெறுமனே ஒரு மலை என்ற அளவில் மட்டுமே நம்மால் கடந்து சென்றுவிட முடியாது. யுகாந்தரங்களுக்கு முன்பாக, அழகன் முருகனைக் கரம் பற்றுவதற்காக வள்ளிக் குறமகள் தோன்றி விளையாடிய மலை. புராதனச் சிறப்புகள் கொண்ட வள்ளிமலை, தமிழர்களுக்கான ஆன்மிக பொக்கிஷம் என்றே சொல்லலாம். அடர்த்தியான வனம், அரியவகை மூலிகைகள், நீர் வற்றாத சுனைகள், அழகிய சிற்பங்கள் என எங்கு நோக்கினாலும் அழகும் அதன் பின்னே ஒரு வரலாற்றுச் சம்பவமும் பின்னிப்பிணைந்து நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது.

வள்ளி ஆலயம்

மலையடிவாரத்தில் இருக்கும் வள்ளிக்கோயிலை அடைந்தோம். ஒரு சுற்று மட்டுமே கொண்ட சிறிய சந்நிதி என்றாலும், அழகுடன் காட்சி அளிக்கிறது ஆலயம். திருமாலின் இரு புதல்விகளான அமுதவல்லியும், சுந்தரவல்லியும் முருகப்பெருமானை மணமுடிக்கத் தவமிருந்தனர். அமுதவல்லியின் கடுமையான தவத்தின் பயனாக அவள் இந்திரனின் மகளாக அவதரித்தார். சுந்தரவள்ளியோ பூவுலகில் வள்ளிக்கிழங்குத் தோட்டத்தில் அவதரித்தார்.

குழந்தையைக் கண்டெடுத்த இந்தப் பகுதியின் வனராஜன் நம்பிராஜன், வள்ளிக்கிழங்குத் தோட்டத்தில் கண்டெடுத்ததால், வள்ளி எனப்பெயரிட்டு வளர்த்து வந்தார். இந்த மலைப்பகுதியில், ஒப்பாரும் மிக்காரும் இல்லாத அழகுப் பெண்ணாக, சுதந்திரமான வன அரசியாக வாழ்ந்து வந்த வள்ளிக்குறமகள், தினைப்புனம் காத்து வேடுவ மக்களுக்கு மட்டுமின்றி, வனவிலங்களுக்கும் தோழியாகத் திகழ்ந்தார். தற்போது சரவணப்பொய்கை எதிரே இருக்கும் வள்ளி சந்நிதி இருக்கும் இடத்தில்தான் முன்னர், வள்ளிப்பிராட்டி திருமாலை வணங்கி வழிபாட்டு வந்தார் எனப்படுகிறது. அதனால்தான் இந்தச் சந்நிதியில் வைணவ சம்பிரதாயப்படி பெருமாள் பாதம் பதித்த சடாரி பக்தர்களின் தலைகளில் வைக்கப்படுகிறது. நின்ற கோலத்தில் வலக் கரம் அபயம் காட்ட, இடக் கரத்தை பறவைகளை விரட்டப் பயன்படும் கவணை ஏந்தியும் காட்சி தருகிறார்.

வள்ளிமலை

வண்ணத்தமிழ் கொஞ்சும் எங்கள் வடிவேல் முருகனுக்கு வானகம் வழங்கிய தந்த கொடை தெய்வானை என்றால், கானகம் தந்த பரிசு வள்ளிப்பிராட்டி அல்லவா? வணங்கும் எல்லோருக்கும் வளமான வாழ்வருளும் தமிழ்க்குறமகளுக்கு தலைதாழ்ந்து வணக்கம் செலுத்தினோம். நல்லோர் உறவும், நலம் கொண்ட வாழ்வும் அருள மனமாரத் துதித்தோம்.

'வடிவாட்டி வள்ளி அடி போற்றி வள்ளி

மலை காத்த நல்ல மணவாளா, முத்துக்குமரா'

என்று வணங்கி சந்நிதியை விட்டு வெளியே வந்தோம். மலைமீது ஏறும் படிக்கட்டுப்பாதை தொடங்குவதற்கு முன்னரே இடப் புறமாக அருணகிரிநாதர் திருமடம் காணப்படுகிறது. இங்கு 300 சாதுக்கள் தங்கி இருந்து வருகின்றனராம்.நாம் சென்ற அன்று காலையில் அவர்களுக்கு கம்பங்கூழ் வழங்கப்பட்டுக்கொண்டிருந்தது. அவர்கள் திருப்புகழ்ப் பாடல்களைப் பாடியபடி பசியாறும் காட்சியைக் கண்டோம்.

அருணகிரிநாதர்

அங்கிருந்த அருணகிரிநாதரின் திருவுருவச் சிலையினை தரிசித்து வெளியே வந்து மலைமீது செல்லும் படிகளில் ஏறினோம். மலையைச் சுற்றிலும் பல இடங்களில் பனை மரங்கள் வளர்ந்து காணப்பட்டன. இவையெல்லாம் மண்வெட்டிச் சித்தர் என்ற ஒரு சித்தபுருஷரால் விதைக்கப்பட்டு வளர்க்கப்பட்டவை என்று நம்முடன் கூட வந்த, 'அகத்தியர் பசுமைக்குடில்' அமைப்பைச் சேர்ந்த சரவணன் கூறினார். அவரே மலை முழுக்க இருந்த பல அபூர்வ மரங்களையும், மூலிகைகளையும் இனம் கண்டு நமக்கு தெரிவித்தவாறு வந்தார்.

மலைப்படிகள் ஏற, ஏற மூச்சு இரைத்தது, காலும், இடுப்பும் சோர்ந்து வலியும் கூட, வலியைப் போக்கும் விதமாக மனமும், உதடும் 'முருகா, முருகா' என்று தன்னிச்சையாகவே ஜபிக்கத் தொடங்கியது. நெட்டுக்குத்தாக ஓங்கி உயர்ந்து காணப்பட்ட அந்த மலை, நமக்கு மலைப்பையும் வியப்பையும் தர, தொடர்ந்து நடந்தோம். ஆலயங்கள் எல்லாம் எளிதாக அமைந்து இருந்தால் இறைவன் பற்றிய சிந்தனையே வராது போகும் என்பதால்தான், இப்படிப்பட்ட மலைப் பகுதிகளில் கோயில்களை அமைத்துச் சென்றனர் நம் முன்னோர்கள். சிரமம் தெரியாதிருக்க நம் மனம் இறைவனை தியானிக்க, மலை ஏறத் தொடங்கினோம். ஒவ்வொரு அடியும் ஒவ்வொன்றாக நம் கர்மவினைகளை தொலைப்பது போல் நம்மால் உணர முடிந்தது.

வள்ளிமலை படிகள்

மலையேறும் வழியெங்கும் அற்புதமான மரங்களும், சுனைகளும் அமைந்துள்ளன. சில்லென்ற காற்று வீசிக்கொண்டே இருக்க களைப்பையும் மறந்து இயற்கையை அதன் ஒப்பற்ற அழகை தரிசித்தோம். அழகு முருகன் கோயில் கொண்டிருப்பதால்தான் மலையும் மலை சார்ந்த பகுதியும் குறிஞ்சி நிலம் என்று அழைக்கப்படுகிறது போலும்! குறிஞ்சி நிலத்தின் உயிர்த்துடிப்புள்ள பிரதேசமாக வள்ளிமலை இன்றும் அற்புத எழிலுடன் காட்சி தருகிறது. வள்ளிமலை ஒழுங்கற்ற அமைப்பைக் கொண்டது என்பதால், படிக்கட்டுகளில் மட்டும்தான் ஏறிச் செல்ல முடியுமே தவிர, வாகனங்கள் செல்லக்கூடிய வகையில் பாதை அமைக்க முடியவில்லை.

வள்ளிமலை மீது ஏறும் படிக்கட்டுப் பாதையில் அமைந்திருக்கும் எட்டுக் கால் மண்டபம் இன்னும் பழைமை மாறாமல் காட்சி தருகிறது. 'படிக்கட்டுகளும், சுற்றியுள்ள சந்நிதிகளும் புனரமைப்பு செய்யப்பட்டு அழகாகக் காட்சி தரும்போது, இந்த மண்டபம் மட்டும் பழைமை மாறாமல் காட்சி தருவது ஏனோ?" என்ற கேள்வி எழுப்பிய சிந்தனையுடன் அந்த மண்டபத்தின் திண்ணையில் உட்காரச் சென்றோம். அங்கிருந்த சாது ஒருவர், எங்களைத் தடுத்து நிறுத்தி 'இது ஒரு மகான் நித்திரை செய்யும் இடம், இங்கே அமர வேண்டாம்' என்று கேட்டுக்கொண்டார். ஆம், இந்த மலைப்பாதையில் புனரமைப்பு வேலைகள் நடைபெற்றபோது, இந்த மண்டபத்தையும் புனரமைப்பு செய்வதற்காக ஒரு பாறையை அகற்றும்போது, உள்ளிருந்து நறுமண வாசனை சூழ்ந்ததாகவும், அதனுள்ளே பார்க்கையில் அமர்ந்த நிலையில் ஒரு சித்தர் தியான நிலையில் இருந்ததாகவும், அதனால் அந்தப் பாறையை அப்படியே மூடிவிட்டனர் என்றும் கூறினார். அதனாலேயே இந்த மண்டபத்தை மட்டும் புனரமைப்பு செய்யாமல் விட்டுவிட்டார்கள் என்று கூறினார். நாம் அந்த இடத்தைத் தொட்டு வணங்கி விட்டு கிளம்பினோம்.

வள்ளிமலை மண்டபம்

மலைப்பாதையில் இன்னும் சற்று தொலைவு சென்றதும் நமக்கு இடப் புறமாக, 'குகை சித்தர் சமாதி' என்று ஒரு சந்நிதி ஒன்று தென்பட்டது. அங்கு குனிந்து குகையினுள் உற்றுநோக்க எவரோ ஒரு சித்தரின் சமாதி சிவலிங்கத்திருமேனி அமைப்போடு காணப்பட்டது. குகை சித்தரை வழிபட்ட நாம், குகையின் அழகான வடிவமைப்பை எண்ணி வியந்தபடியே மேலே ஏறத் தொடங்கினோம்.

சித்தர் குகை

சற்றுத் தொலைவு சென்றதும் எதிர்ப்பட்ட நான்கு கால் மண்டபம், முருகன் கோயில் சமீபத்தில் வந்துவிட்டதை நமக்குத் தெரிவித்தது. வேகமாக அந்த மண்டபத்தை நெருங்கினோம். மண்டபத்தில் இருந்தே, 'வள்ளிக்குறமகளை மணந்த எங்கள் வடிவேல் முருகனை' மனதாரத் துதித்து ஆலயத்தினுள்ளே செல்கிறோம். எந்த வித கட்டட வேலையும் இல்லாமல், இயற்கையான சூழலில் சங்கு போன்ற வடிவத்தில் அமைந்திருக்கிறது முருகக் கடவுளின் திருக்கோயில். கோபுரம் மட்டுமே பின்னர் எழுப்பப்பட்டது என்று சொல்லப்படுகிறது.

வள்ளிமலை மண்டபம்

கொடிமரம், பலிபீடம், மயில் வாகனம் கடந்து முருகக் கடவுளின் சந்நிதிக்குள் சென்றோம். சந்நிதி இருள் சூழ்ந்த குகை போல் காட்சி அளித்தது. இருளுக்கு நம் கண்கள் பழக்கப்பட்டு, காட்சிகள் நம் கண்களுக்குத் தெரிந்தபோது நாம் தரிசித்த தெய்வத் திருவடிவங்கள் நம்மைப் பரவசத்தில் ஆழ்த்தின. ஆம், முதலில் நாம் வள்ளியை தரிசித்தோம். பின்னர் விநாயகப் பெருமானையும் தரிசித்துவிட்டு, முருகப் பெருமானை தரிசிக்கச் சென்றோம். மூவரும் புடைப்புச் சிற்பமாகவே காட்சி தருகின்றனர் என்பது மிகவும் சிறப்பான அம்சம். முருகப் பெருமானின் சந்நிதிக்கு இடப் புறத்தில் வீரபாகு உள்ளிட்ட நவவீரர்கள் உள்ளனர்.

வள்ளிமலை

நாம் முருகப்பெருமானை தரிசித்து வழிபட்ட நிலையில், உடன் வந்த அன்பர், நம்மிடம் விநாயகப் பெருமானின் திருவடிகளுக்குக் கீழே பார்க்கும்படிக் கூறினார். அங்கே யானைகள் அணிவகுத்துச் செல்வது போன்ற காட்சி செதுக்கப்பட்டிருந்தது. அதற்கான காரணம் தெரியாமல், உடன் வந்த அன்பரிடம் கேட்டோம். அவர் கூறிய விஷயம் விநாயகப் பெருமான் நிகழ்த்திய ஓர் அருளாடலை நமக்குத் தெரிவித்தது.

அந்த அருளாடல்தான் என்ன..?

 

பயணம் தொடரும்...

https://www.vikatan.com/news/spirituality/114672-one-spiritual-experience-in-vellore-vallimalai-subramanyar-temple.html

Posted

குமரனே குறத்தியாக மாறி குறி சொன்ன வள்ளிமலை! - காடு, மலை தாண்டி கடவுளைத் தேடி! பரவசப் பயணம் - 10

 

யாத்திரை

 

 

ண்ணீர் தவழ்ந்தால்தான் ஆறு; தேரோட்டம் நடந்தால்தான் திருவிழா; வேர்கள் மண்ணுக்குள் ஊடுருவிப் பரவினால்தான் விருட்சம். அதேபோல் மனிதர்களும் பயணிக்கும்போதுதான் அனுபவங்கள் கிடைக்கின்றன. கிடைக்கக்கூடிய அனுபவங்களே வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன. பயணத்தின் நோக்கம் ஆன்மிகத் தேடலாக இருந்தால், அந்தப் பயணம் யாத்திரையாகப் பரிணமிக்கிறது. நம் வாழ்க்கைக்கு பரிமளம் சேர்க்கிறது. யாத்திரையின் தொடர்ச்சியாக வள்ளிமலைக்குச் சென்ற நாம், மலைப் பாதையைக் கடந்து, வள்ளிமலைக் குகைக் கோயிலுக்குள் செல்கிறோம்.

வள்ளிப்பிராட்டி

குகைக்குள் புடைப்புச் சிற்பமாக வள்ளிப்பிராட்டி திருக்காட்சி தருகிறாள். வலக்கை அபயம் காட்ட, இடக் கையில் கவண் ஏந்தி இருக்கும் வள்ளிப் பிராட்டியின் வடிவழகு, ஒற்றை தீபத்தின் மெல்லிய ஒளியிலும் நம்மை மெய்சிலிர்க்கச் செய்தது. அவள் தினைப்புனம் காக்க மட்டுமா கவண் ஏந்தினாள்? நம் மனதில் தோன்றும் தீய எண்ணங்களை விரட்டவும் கவண் ஏந்தியிருப்பதாகத்தான் நம் மனதுக்குப் பட்டது. குமரனே குறத்தியாக வந்து குறி சொல்லிக் கொண்டாடிய வள்ளிமலை நாயகியை வணங்கிவிட்டு வெளியே வருகிறோம்.

விநாயகர்

வள்ளியின் குகைக் கோயிலுக்கு வெளியில் எதிர்ப்புறமாக கணபதியின் ஆலயம் வனப்புடன் காட்சி தருகிறது. யானைமுகத்தோனின் திருவடிகளுக்குக் கீழே யானைகள் வலமும் இடமும் ஓடுவதைப் போல் செதுக்கப்பட்டிருந்தது. புலிகளும், சிங்கங்களும், யானைகளும் உலவும் வனத்தில் வளர்ந்தவள் வள்ளிப் பிராட்டி. அவள் எப்படி ஒரு யானையைக் கண்டு அச்சம் கொண்டாள் என்ற கேள்வி நமக்குள் எழுந்தது. காட்டு யானைகள் அவளுக்கு எப்போதுமே துன்பம் விளைவிக்கத் துணிந்ததில்லை. ஆனால், வள்ளியைத் துரத்தியது காட்டு யானை அல்லவே. இச்சா சக்தியான வள்ளிப் பிராட்டியை ஞானசக்தியாம் முருகப் பெருமானுடன் இணைப்பதற்காக, யானைமுகத்தோன் அல்லவா வள்ளியை விரட்டி அச்சுறுத்தினார்? அவர் அச்சுறுத்தினாரா அல்லது அச்சுறுத்துவதுபோல் நடித்தாரா என்பதும், வள்ளிப் பிராட்டி அச்சப் பட்டாளா அல்லது அச்சப்படுவதுபோல் நடித்தாளா என்பதும், அந்த அற்புதத் திருவிளையாடல் நடத்திய அவர்களுக்கு மட்டும்தான் வெளிச்சம்! கணபதி சந்நிதிக்கு வெளியில் மகர வடிவம் செதுக்கப்பட்டிருக்கிறது. எனவே, இந்தச் சிற்பங்கள் பாண்டியர் காலத்தைச் சேர்ந்ததாகச் சொல்லப்படுகிறது. வினைகளை அகற்றும் நாயகனிடம், நம்முடைய வினைகளையும் அகற்றும்படி வேண்டிக்கொண்டு முருகப் பெருமானின் சந்நிதிக்குச் செல்கிறோம்.

வள்ளிமலை சந்நிதிகள்

அழகன் முருகனை திருவடி முதல் திருமுகம் வரை கண்ணும் மனமும் குளிரக் குளிர தரிசித்தபடி, 'நதி,தான் பட்ட கடனை கடலில் தீர்க்கும்; மதி தான் பெற்ற கடனை இரவில் தீர்க்கும்; ஐயனே! என் விதி பட்ட கடனை உந்தன் திருவடிகளில் தீர்க்கிறேன்' என்று நெஞ்சம் உருகப் பிரார்த்தித்து வழிபட்டோம். அவ்வளவில் முருகப் பெருமானின் அருளொளி நம்முள் பாய்ந்தது போன்ற ஒரு பரவச உணர்வு நம்மை ஆட்கொண்டது. குமரனின் சந்நிதிக்கு வலப் புறமாக வீரபாகு உள்ளிட்ட நவ வீரர்கள் கணபதி, சிவலிங்க வடிவில் சிவபெருமான், அம்பிகை ஆகியோரும் நமக்கு அருட்காட்சி தந்தனர். அவர்களை வழிபட்டுவிட்டு, அங்கேயே சற்று நேரம் தியானம் செய்தோம். குகையின் இருளும் குளிர்ச்சியும் நம்மை பூரண அமைதி நிலைக்கு இட்டுச் சென்றது. சற்றுப் பொறுத்து கோயிலிலிருந்து புறப்பட்டு, குகைக்கு மேலாக அமைக்கப்பட்டிருந்த கோபுரத்தையும் தரிசித்துவிட்டுத் திரும்பினோம்.

வள்ளிமலை

வழியெங்கும் சங்க இலக்கியங்களில் சொல்லப்பட்டிருக்கும் பிரம்பை மரம் போன்ற பல பிரமாண்டமான மரங்கள் வள்ளிப்பிராட்டியின் காலத்துக்கே நம்மை கொண்டு சென்றது. சில்வண்டுகள் எழுப்பும் ஒலியைத் தவிர வேறு எந்த ஒலியும் எழாத அந்தப் பாதையில் மனம் அமைதியில் லயித்துக் கிடந்தது. எதிரே காணப்படும் பிரமாண்ட பாறைகளின் வழுவழுப்பு அந்த மலையின் வனப்பை மேலும் அழகூட்டியது.

வள்ளிமலைக் காடு

காணும் இடமெங்கும் பழைமையின் சுவடுகள் பளிச்சிட்டுக் காணப்பட, ஒரு கணம் நம் மனதுக்குள் ஏதோ உடைந்து, கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. அமைதியாக அமர்ந்து யோசித்தேன். வரலாற்றுப்படி பார்த்தாலும் முதலாம் சங்க காலத்தில் வாழ்ந்த ஒரு வேடுவப் பெண், வனக்குறத்தியாக, வள்ளிப்பிராட்டியாக வாழ்ந்து, தனது வீரத்தாலும், கண்ணியத்தாலும், பக்தியாலும் உயர்நிலையை எட்டி இறைவனையே அடைந்த செயல் சிலிர்க்கச் செய்தது. வேளாண்மைக்கு முன்னர் வேட்டையாடுவதுதானே ஆதி தொழிலாக இருந்தது. வேட்டையாடி பிழைத்த காலத்திலேயே தெய்வமாக விளங்கிய எங்கள் வீரத்தமிழ்ப் பெண் இங்குதானே உலவி இருப்பார். இங்குதானே நீர் கொண்டு சென்று இருப்பார் என்றெல்லாம் மனம் அலை பாய்ந்துகொண்டு இருந்தது.

வள்ளிமலை ஆஸ்ரமம்

உடன்வந்தவர்கள் மேலும் நடந்து வள்ளிமலை ஸ்வாமிகளின் ஆஸ்ரமம், வள்ளியம்மை வேடனைச் சந்தித்த இடங்கள், அற்புதச் சுனைகள், பொங்கியம்மன் சந்நிதி, மலை உச்சியில் இருக்கும் சிவலிங்க தரிசனம் இவற்றையெல்லாம் தரிசிக்க வேண்டாமா என்று கூறியதும், உடனே பயணத்தை தொடர்ந்தோம். அடர்த்தியாகப் புதர் போல் மண்டிக்கிடந்த அரளிச்செடி களைக் கடந்து குறுகலான ஆஸ்ரமப்பாதையில் நுழைந்தோம். அரளிச்செடிகள் அதிகம் இருந்தாலே அந்த இடம் பூஜைக்கு உரிய இடம்தான்.

(வள்ளிமலை அற்புதங்களைச் சொல்லும் விடியோவைக் காண இங்கே க்ளிக் செய்யவும்...)

ஆஸ்ரமத்தில் முதலில் கண்ட காட்சியே நம்மை மெய்சிலிர்க்க வைத்தது. இரண்டு பிரமாண்ட பாறைகளுக்கு நடுவே சிறிய சந்நிதியில் நின்ற கோலத்தில் அருபாலித்தார் பொங்கியம்மன். திருமகள், கலைமகள் இடையே பொங்கியம்மன் இருப்பதாக ஓர் அறிவிப்புப் பலகை நமக்குக் கூறுகிறது. அம்மனுக்கு பூஜைகளைச் செய்து ஆரத்தி காட்டிய அர்ச்சகர் 'திருமணம் முடித்த பிறகும், இந்த மலையின் மீது கொண்ட ஆர்வத்தாலும், சித்தர்களின் வேண்டுதல்களாலும் வள்ளியம்மை பொங்கியம்மனாக இங்கே வந்து வீற்றிருக்கிறாள். வேண்டும் எல்லா வரங்களையும் அளித்து காத்து வருகிறாள்' என்று கூறினார்.

பொங்கியம்மன்

பொங்கியம்மனை தரிசித்து விட்டு அந்த எளிமையான ஆசிரமத்தைச் சுற்றி பார்த்தோம். தரையெங்கும் சாணம் தெளிக்கப்பட்டு, தூய்மையாக இருந்தது. களைத்திருந்த எங்களுக்கு பொங்கியம்மன் ஊற்று நீர் வழங்கப்பட்டது. இளநீரெல்லாம் தோற்றுவிடும் சுவையும், குளிர்ச்சியும் எங்களை பரவசப்படுத்தியது. அந்த அற்புத மூலிகை நீரை மனமும் வயிறும் குளிரப் பருகினோம். பிறகு, வள்ளிமலை ஸ்வாமிகள் தியானம் இருந்த குகைக்குள் சென்று தியானத்தில் இருந்தோம். பக்தர் ஒருவர் அங்கிருந்த ஒரு படத்தை நம்மிடம் காட்டினார். அந்தப் படத்தில் இருந்தவர் வீணை வைத்திருந்தார். நாம் அவரைக் கேள்விக்குறியுடன் பார்த்தோம்.

வள்ளிமலை ஸ்வாமிகள்

நம் பார்வையின் பொருளைப் புரிந்தவர்போல், ''இவர்தான் வள்ளிமலை ஸ்வாமிகள். திருப்புகழை வீணையிலேயே இசைத்ததால், வீணைபிரம்மம் என்று போற்றப் பெற்றார்'' என்று விளக்கமளித்தார். வீணையிலேயே திருப்புகழை மீட்டி முருகப்பெருமானை மகிழ்வித்த மகா யோகியான வள்ளிமலை ஸ்வாமிகளை வணங்கிவிட்டு சுற்றுப்புறத்தை நோக்கினோம். ஸ்வாமிகள் வணங்கிய வேல், அருணகிரிநாதர் சிலை யாவும் நமக்குள் ஒரு பரவச நிலையினை ஏற்படுத்த அமைதியாக வெளியே வந்தோம். அருகேயே இருந்த ஸ்வாமிகளின் அறைக்குச் சென்று அவர் பூஜித்த லிங்கத்திருமேனி உள்ளிட்ட மூர்த்தங்களை தரிசித்தோம். அந்த ஆசிரம வளாகத்திலும் காட்சி தந்த கணபதியை வணங்கி விட்டு நகர்ந்தபோது, அங்கே இருந்த வேம்பு, வில்வம், அரசு மரங்கள் எங்களைக் கவர்ந்தது.

சித்தர் மரங்கள்

அந்த மரங்களைப் பற்றிய விவரங்களைக் கேட்டதும், 'வெறும் மரங்களா அவை?' என்ற கேள்விதான் நமக்குள் தோன்றியது. இப்படி ஒரு கேள்வி நமக்குத் தோன்றுவதற்குக் காரணம் என்ன தெரியுமா..?

https://www.vikatan.com/news/spirituality/115278-vallimalai-birth-place-of-goddess-valli.html

  • 1 month later...
Posted

`காணும் யாவும் தெய்வம்’ என்ற உணர்வைத் தரும் வள்ளிமலை! காடு, மலை தாண்டி கடவுளைத் தேடி! பரவசப் பயணம் - 11

 

யாத்திரை

 

 

மனமும் உடலும் இணைந்து செயல்படுவது என்பது குறைந்துகொண்டே வருகிறது. உடல் ஒரு செயலில் ஈடுபட்டிருக்கும்; மனமோ வேறு ஒரு சிந்தனையில் லயித்திருக்கும். பழக்கத்தின் காரணமாகவும் நம் உடல் அனிச்சையாகவே பல செயல்களைச் செய்கிறது. ஆனால், மனமும் உடலும் எளிதாக ஒருமைப்படக்கூடிய இடங்கள் என்று எதுவும் இருக்கிறதா என்று கேட்டால், கோயில்கள்தாம் நம்முடைய ஒரே பதிலாக இருக்கும். அவற்றில்கூட இயற்கை எழில் சூழ்ந்த இடங்களில் அமைந்திருக்கும் கோயில்கள், நம் மனதையும் உடலையும் ஒருமைப்படுத்துவதுடன், பரவச அனுபவத்தையும் நமக்குத் தருகின்றன. 

வள்ளிமலை

வருங்காலத்தில் பரபரப்பான சூழலில் நாம் சிக்கித் தவிக்கப்போகிறோம் என்பதை தீர்க்கதரிசனத்துடன் உணர்ந்திருந்த நம் முன்னோர்கள், அதன் காரணமாகவே இயற்கை எழில் சூழ்ந்த இடங்களில் கோயில்களை அமைத்துச் சென்றிருக்கின்றனர். நம்முடைய வள்ளிமலை யாத்திரையில் நமக்கு ஏற்பட்ட இத்தகைய சிந்தனைகளுடனே, வள்ளிமலை வள்ளலை - அழகு முருகனை தரிசித்துவிட்டு, வள்ளிமலைச் சித்தரின் தியான மண்டபத்தை அடைந்தோம். அங்கு நாம் கண்ட வேம்பு, வில்வம், அரசு ஆகிய விருட்சங்களைப் பற்றி உடன் வந்த அன்பர் கூறிய தகவல் நம்மை மெய்சிலிர்க்கச் செய்தது.

வள்ளிசுனை

மூன்று விருட்சங்களுமே மூன்று சித்தர்களின் ஜீவசமாதிகள் என்று கூறிய அன்பர், வள்ளிமலைச் சித்தர் அங்கே வந்தபோது மூன்று சித்தர்களின் தெய்விக உடல்கள் அழிந்துபோகாமல் தியான நிலையில் இருந்ததைக் கண்டு, அந்த இடத்தை மூடி, மூன்று மரங்களை நட்டு வைத்தார் என்றும் தெரிவித்தார். அருகில் உள்ள அறிவிப்புப் பலகையும் அன்பர் கூறிய செய்தியை உறுதிப்படுத்தியது. சித்தர்களின் அம்சமான அந்த மரங்களை வணங்கிவிட்டு, மலையின் உச்சியை நோக்கி ஏறத் தொடங்கினோம். பாறைகள் வழுவழுப்பாக வழுக்கிவிடுவதுபோல் இருந்ததால், மிகவும் கவனமாகக் கால் பதித்து ஏறினோம்.

வள்ளிமலை சுனை

மலையுச்சியை நோக்கி நடந்தோம். பாதையின் ஆரம்பத்திலேயே ஓர் இடத்தைக் காட்டிய அன்பர், அந்த இடத்தில்தான் முருகப்பெருமான் வேங்கை மரமாக நின்றதாகக் கூறினார். (தற்போது அங்கே மரம் இல்லை) அருகிலேயே முருகப்பெருமான் குளித்ததாகச் சொல்லப்படும் சுனையும் காணப்பட்டது. சற்றுத் தொலைவு சென்றதும் மற்றொரு சுனையைக் காட்டி, அந்தச் சுனையில்தான் வள்ளியம்மை மஞ்சள் தேய்த்துக் குளித்ததாகத் தெரிவித்தார் அன்பர். இரண்டு சுனைகளிலும் பாசி படர்ந்த நிலையில் தண்ணீர் காணப்பட்டது. வழியெங்கும் மலைப் பாறைகள் மஞ்சள் பூசியதுபோல் மஞ்சள் நிறத்தில் காணப்பட்டன. மலைப் பாறைகளின்மீது படியும் ஒருவித உப்புச் சத்துதான் இப்படி மஞ்சள் நிறமாக மாறுவதாகச் சொல்கிறார்கள். அந்தச் சத்தை சிலா சத்து என்கிறார்கள். ஆனால், வள்ளியம்மை விட்டுச் சென்ற மஞ்சள் என்றே நினைத்து, அதைத் தடவி எடுத்து நெற்றியில் இட்டுக்கொள்கிறார்கள் பக்தர்கள். 

வள்ளிமலை யாத்திரை

மலை உச்சியில் சிறிய அழகிய மண்டபத்தின் கீழே மல்லிகார்ஜுனர் அருள்பாலிக்கிறார். சிமென்ட் பூச்சு எதுவுமின்றி கட்டப்பட்ட அழகிய சிற்ப மண்டபம் இது. பெரிய ஆவுடையில் சிறிய லிங்கத் திருமேனியராகக் காட்சி அருள்கிறார். முருகப் பெருமானுக்கும் வள்ளிப்பிராட்டிக்கும் ஈசன் இங்கே காட்சி தந்ததாகச் சொல்கிறார்கள். ஈசனுக்கு நீரால் அபிஷேகம் செய்து, அல்லிமலர்களால் அலங்கரித்து வணங்கினோம்; வணங்கி மகிழ்ந்தோம்.
 

மல்லிகார்ஜுனர்

மலையைச் சுற்றிலும் காணக் காண இயற்கை அழகு நெஞ்சை அள்ளுகிறது. எங்கும் பசுமை, எங்கும் பிரமாண்ட மலைகள் என்று காட்சியளிக்கிறது. அங்கிருந்து பார்த்தால் ஞானமலை, பொன்னைநதி எல்லாமே தெரிகிறது. ஆந்திராவிலிருந்து வரும் பொன்னை நதி காலத்தால் காவிரிக்கு மூத்தவள் என்கிறார்கள். நாம் நின்றிருந்த மலைச்சரிவுக்குக் கீழே, செதுக்கிய சிற்ப வடிவில் வெங்கடாசலபதி காணப்படுகிறார். அவரையும் வணங்கிவிட்டு, இயற்கை அழகைவிட்டுப் பிரிய மனமில்லாமல் இறங்குகிறோம். 

வள்ளிமலை அழகு

வழியெங்கும் பாறைகளின் இடுக்குகளில் எல்லாம் சுனை நீர் காணப்படுகிறது. அந்தச் சுனைகளில் பூத்திருக்கும் அல்லி மலர்கள் நமக்கு வள்ளியம்மையை நினைவுபடுத்தின. வழியில் ஒரு பெரிய தாமரையைக் கண்டு ரசித்தபடி இறங்கிக்கொண்டிருந்தோம். மலையின் இடப் புறமாகச் சென்ற நீண்ட பாதையில் நம்மை அழைத்துச் சென்றார்கள். அங்கு கண்ட காட்சி நம்மை மலைக்கச் செய்தது. 

மலை சுனைகள்

ஆம், ஒரு பிரமாண்ட மலைப்பாறையைச் செதுக்கி கலைப்பொக்கிஷமாகவே மாற்றியிருக்கிறார்கள். சமணர்களின் படுக்கைகளும், சமண சமய தீர்த்தங்கரர்களின் சிலைகளும் அங்கே பாறைகளில் செதுக்கப்பட்டுள்ளன. நுண்ணிய அந்தக் கலைப்படைப்புகள் நம்மைப் பெரிதும் வியக்கச் செய்தன.

சமணக்குகைகள்

கங்க ராஜ மல்லன் (கிபி 816-843) காலத்தது என்று கல்வெட்டு கூறுகிறது. மலையைச் செதுக்கி ஒரு கலைக்கூடமாக மாற்றிய விந்தையை எண்ணியவாறே வள்ளிமலையை விட்டு இறங்கினோம். 

வள்ளிமலைக் குகைகள்

 

 

 

 

 

ஆழியை ஆழாக்கு அளக்க முனைந்ததைப் போலவும், அண்டமதை அளக்க முழங்கை முனைந்ததைப் போலவும், முருகப்பெருமானே! நீயும் நின் தேவி வள்ளியம்மையும் உலாவிய இந்த வள்ளிமலையில் எமக்குக் கிடைத்த அனுபவங்களை, ஆன்மிகப் பரவசத்தை எம்மால் முடிந்த வரை மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டுள்ளோம். 

வள்ளிமலை

'தீபக்கோயிலில் அதன் சுடர் தெய்வம்; மலர்க்கோயிலில் அதன் நறுமணம் தெய்வம் என்பார்கள். ஆனால். எம் ஐயனே, அழகு முருகனே! நீ கோயில் கொண்டு அருளாட்சி செலுத்தும் இந்த வள்ளிமலையில் காணும் யாவுமே தெய்வம்' என்று முருகப்பெருமானின் திருவருளைப் போற்றியபடி, இயற்கை விரிந்து பரந்து தெய்வமாகக் காட்சி தரும் வள்ளிமலையை மறுபடியும் ஒருமுறை தொழுதுவிட்டு அங்கிருந்து புறப்பட்டோம்.

 

பயணம் தொடரும்...

https://www.vikatan.com/news/spirituality/116012-vallimalai-subramanyar-temple-in-vellore.html

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பார்க்க பரவசம்,படிக்க பேரின்பம்....., தொடரட்டும் பயணங்கள்.....!  tw_blush:

  • 3 weeks later...
Posted

அசுரனுக்கே இறங்கி அருள்தந்த ஈசன் உறையும் காஞ்சனகிரி! - காடு, மலை தாண்டி கடவுளைத் தேடி! பரவசப் பயணம் - 12

 
 

யாத்திரை

 

ரிமலை வெடித்தால் என்ன நிகழும்? மிகப் பெரும் அழிவும் சுற்றுச்சூழல் சீர்கேடும்தான் ஏற்படும். ஆனால், ஒரு எரிமலை வெடித்ததும், வெடித்த எரிமலைக் குழம்புகளே சிவலிங்கமாகவும் நந்தியாகவும் மாறிய ஒரு மலையைப் பற்றிக் கேள்விப்பட்டு ஆச்சர்யப்பட்டோம். நாம் வள்ளி மலைக்கு யாத்திரை சென்றபோதுதான் இப்படி ஓர் அதிசயத் தகவல் நமக்குத் தெரியவந்தது. உடனே அந்த மலைக்குச் செல்லவேண்டும் என்ற ஆர்வமும் நமக்கு ஏற்பட்டது. உடன் வந்த அன்பரிடம் நம் விருப்பத்தைத் தெரிவித்தோம். அவரும், வள்ளிமலையிலிருந்து திரும்பும் வழியில்தான் அந்த மலை இருக்கிறது. எனவே, நாம் சென்னைக்குத் திரும்பும்போது காஞ்சனகிரி மலையையும் தரிசித்துவிடலாம் என்று கூறிவிட்டார். வள்ளிமலையிலிருந்து காஞ்சனகிரிக்கு எங்கள் யாத்திரை தொடர்ந்தது.

காஞ்சனகிரி


வேலூர் மாவட்டம் வாலாஜாப்பேட்டைக்கு அருகில் லாலாப்பேட்டை என்ற ஊருக்கு அருகில் அமைந்திருக்கிறது காஞ்சனகிரி. காஞ்சனகிரியிலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது பாடல் பெற்ற திருத்தலமான திருவலம். காஞ்சனகிரிக்கும் திருவலத்துக்கும் உள்ள புராணத் தொடர்பைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு முன்பாக, எரிமலைக்குழம்பே சிவலிங்கமாகவும் நந்தியாகவும் மாறி காட்சி தரும் காஞ்சனகிரியை தரிசித்துவிடலாமே...

காஞ்சனகிரி ஈசன்

அடர்ந்த செடிகொடிகளுக்கிடையில், நீண்டு வளைந்த பாதையில் காரில் பயணித்தோம். செடிகொடிகளுக்கிடையில் காற்று புகுந்து புறப்படும் ஓசையே இனியதொரு சங்கீதமாக நம் காதுகளில் ஒலித்து, மனதில் ஒரு சுகானுபவத்தை ஏற்படுத்தியது. மலைப் பாதையில் அங்கங்கே தென்பட்ட பாறைகள், அந்த மலை முற்காலத்தில் எரிமலையாக இருந்தது என்பதை நிரூபிப்பதுபோல் காணப்பட்டன.

மலையின் உச்சியை அடைந்ததும் நாம் வியப்பின் எல்லைக்கே சென்றுவிட்டோம். ஆம். காஞ்சனகிரியின் உச்சியில் சுமார் 60 ஏக்கர் பரப்பளவில் விரிந்து பரந்திருந்த ஒரு சமவெளியைக் கண்டோம். சமவெளியின் ஒருபுறம் பிரமாண்டமான சிவலிங்கமும், நந்தியும் அமைந்திருந்த காட்சி நமக்குள் பரவசத்தை ஏற்படுத்தியது. மலையில் ஓரிடத்தில் சுமார் 600 ஆண்டுகளைக் கடந்த பிரமாண்டமான ஆலமரமும், அதன் அருகில் சப்த கன்னியர் மற்றும் ஆஞ்சநேயர் சந்நிதிகள் அமைந்திருக்கின்றன.

சப்த கன்னியர்


மலையெங்கும் ஆச்சாள், செந்தூரம், சரக்கொன்றை, மயில்கொன்றை போன்ற மரங்கள் அடர்ந்து காணப்படுகின்றன. மலையின் மேல் பரந்து விரிந்த திருக்குளத்தையும், அதன் எதிரில் முருகப் பெருமானின் திருக்கோயிலையும் கண்டபோது, நம்முடைய யாத்திரை முழுவதும் முருகப் பெருமான் வழித்துணையாக வருவது போன்ற ஓர் உணர்வு ஏற்பட்டு, பரவசப்படுத்தியது. விநாயகர் மற்றும் நாகர் சிலைகளும் அங்கங்கே காணப்பட்டன. 

எரிமலை சிவரூபங்கள்


மலையின் இடப்புறமாக அமைந்திருக்கும் படிகளைக் கடந்து சென்றதுமே, நாம் எந்த அதிசயத்தைத் தேடி வந்தோமோ, அந்த அதிசயக் காட்சியை அல்ல... அல்ல, அதிசயக் காட்சிகளைக் கண்டு சிலிர்த்தோம். ஆம். நூற்றுக்கணக்கான சின்னஞ்சிறு சிவலிங்கங்களும், எண்ணற்ற நந்தி சிலைகளும் வரிசையாகக் காட்சி தருகின்றன. இயற்கையாகவே உருவான இந்த சிவ வடிவங்கள் காண்பவரை மெய்சிலிர்க்கச் செய்கின்றன.

சிவரூபங்கள்

அவற்றின் எதிரிலேயே சுயம்புவாக எழுந்தருளிய காஞ்சனகிரீஸ்வரரும், நந்தி தேவரும் திருக்காட்சி தருகிறார்கள். அந்த இடத்தில் ஒரு சமாதியும் அமைந்திருந்தது. அதைப் பற்றி உடன் வந்தவரிடம் கேட்டபோது, போகும் வழியில் சொல்வதாகத் தெரிவித்தார்.

சித்தர் சமாதி


இன்னும் சற்றுத் தொலைவு சென்றால், சைவ வைணவ ஒற்றுமையை உணர்த்தும் வகையில் ஓர் அற்புதக் காட்சியைக் கண்டோம். ஆம். சிவலிங்கங்கள் நிறைந்த அந்த மலையில், எரிமலைப் பாறையால் உருவான பெருமாளும், கருடனும் நமக்குக் காட்சி தருகின்றனர்.

முருகன் கோயில்


அமைதியே உருவாகக் காட்சி தரும் இந்தக் காஞ்சனகிரியின் புராணம் மிகப் பழைமையானது. கஞ்சன் எனும் அசுரன் இந்த மலையில் இருந்தபடி, திருவலநாதரைப் பிரார்த்தித்து தவமியற்றி வந்தான். வெகுகாலம் தவமிருந்தும் காட்சி தராத ஈசனிடம் கோபம் கொண்ட கஞ்சன், திருவலநாதர் அபிஷேகத்துக்குத் தீர்த்தம் எடுக்க வந்த அர்ச்சகரை அடித்து உதைத்து விரட்டி விட்டான். நாளும் தம்மை பூஜிக்கும் அர்ச்சகரை அடித்துத் துன்புறுத்திய கஞ்சனின் செயல் சிவபெருமானுக்குக் கடும் கோபத்தை ஏற்படுத்தியது. அசுரனை வதம் செய்து வரும்படி நந்திதேவருக்கு உத்தரவிட்டார்.  

காஞ்சனகிரீஸ்வரன்

நந்தியெம்பெருமானும் அசுரனை 10 துண்டுகளாக்கி வீசினார். அசுரனின் எந்த உறுப்பு எங்கே விழுந்ததோ அந்த உறுப்பின் பெயரிலேயே இன்றும் அங்கு ஊர்கள் இருக்கின்றன. தெங்கால், வடகால், மணி(க்கை) யம்பட்டு, அவரக்கரை (ஈரக்குலை) லாலாபேட்டை (இதயம்) சிகைராஜபுரம்(தலை) குகையநல்லூர் (இடுப்பு), மாவேரி (மார்பு) என ஊர்கள் அமைந்துள்ளன. அசுரன் வதம் செய்யப்பட்ட பிறகு, அவனது ஆன்மா ஈசனிடம் மன்றாடி மன்னிப்புக் கேட்டது. மனமிரங்கிய ஈசன், அந்த அசுரன் வேண்டியபடி தைத்திங்கள் 10-ம் நாளன்று, அசுரனின் உடல் பாகங்கள் விழுந்த அத்தனை ஊர்களுக்கும் சென்று அசுரனுக்கு திதி கொடுப்பது ஆச்சர்யமான விஷயம். கஞ்சனை அழித்துவிட்டாலும், அவனைப் போன்ற இன்னும் வேறு யாரேனும் அசுரர்கள் வந்துவிடுவார்களோ என்று நினைத்தவராக, இன்றும் திருவலம் கோயிலில் நந்தி திரும்பிப் பார்த்தபடியே அமர்ந்துள்ளது என்கிறது திருவலம் தலவரலாறு.


புராணக் காலத்திலிருந்து திரும்பவும் காஞ்சனகிரிக்கு வருகிறோம். காஞ்சனகிரி மலையில் ஒரு பாறையைக் கண்டோம். உடன் வந்த அன்பர், அந்தப் பாறையின் பெயர் மணிப்பாறை என்று கூறினார். அந்தப் பாறையைத் தட்டிப் பார்த்தோம். வெண்கல மணிச் சத்தம் வெளிப்பட்டு எதிரொலித்தது. அசுரனின் கண்டப்(கழுத்து)பகுதியே இந்தப் பாறை என்று சொல்லப்படுகிறது.அந்தப் பாறையைத் தட்டினால் வெளிப்படும் வெண்கல மணிச் சத்தம், திருவலம் வில்வநாத ஈஸ்வரர் கோயிலில் கேட்கிறது என்கிறார்கள். நம்முடன் வந்த அன்பர் காஞ்சனகிரியைப் பற்றி சில தகவல்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

காஞ்சனகிரி சித்தர்


''புராணகாலத்தில் புகழ்பெற்று விளங்கிய இந்த மலையைப் பற்றிய நினைவுகள், காலப்போக்கில் மக்களின் நினைவுகளிலிருந்து மறைந்துவிட்டது. சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பு, ஈசனின் அருளால் இந்த மலையைப்பற்றி அறிந்து கொண்ட மலேசியத் தொழிலதிபர் சிவஞானம், 1938-ம் ஆண்டு முதல் தனது ஆயுள், உழைப்பு, சொத்துகள் முழுவதையும் இந்த மலைக்காகவே அர்ப்பணித்து இங்கேயே வாழ்ந்தார். அவரது அர்ப்பணிப்பால்தான் நாம் இங்கே தரிசித்த முருகன் கோயில், திருக்குளம், சப்த கன்னியர், ஆஞ்சநேயர் சந்நிதி எல்லாம் உருவானது. அவரே பிற்காலத்தில் தாம் பெற்ற சித்துகளால் பலரின் கஷ்டங்களையும் போக்கி அருளிய ஶ்ரீலஶ்ரீ சிவஞான ஸ்வாமிகள். அவருடைய சமாதியைத்தான் நீங்கள் மலையின்மேல் பார்த்தது. 1973-ம் ஆண்டு டிசம்பர் 8-ம் நாள் ஸ்வாமிகள் சிவபதம் அடைந்ததும் அவரது சிஷ்யை கெங்கம்மாள் இந்தக் கோயிலை நிர்வகிக்கத் தொடங்கினார். தற்போது அவரது வம்சாவளியினரே இந்த மலையை நிர்வகித்து வருகின்றனர்'' என்றார்.

காஞ்சனகிரியின் சிறப்பினை வீடியோவாகப் பார்க்க இங்கே க்ளிக்  செய்யவும்...

 

கஞ்சன் தவமிருந்ததால் அவன் பெயரால் காஞ்சனகிரி என்று அழைக்கப்படும் இந்த மலையில் பௌர்ணமி, சிவராத்திரி, கார்த்திகை தீபம் போன்றவை விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. இயற்கை அழகும், ஈசனின் அருளாட்சியும் ஒருசேர விளங்கும் இந்தக் காஞ்சனகிரி காண்பவரைக் கவர்ந்து இழுக்கும் ஆற்றல் கொண்டது. மலைக்கோயில்களுக்குப் புகழ்பெற்ற இந்த வேலூர் மாவட்டத்தில், அவ்வளவாக ஜன சஞ்சாரம் இல்லாமல், அமைதியாகக் காட்சி தரும் மலைக்கோயில் இது. வள்ளிமலை செல்பவர்கள், காஞ்சனகிரிக்கும் சென்று ஈசனை தரிசித்து வரலாம். அசுரனுக்கே இரங்கி அருள் செய்த காஞ்சனகிரீஸ்வரன் உங்களுக்கும் நல்லாசியை வழங்கி நலமே செய்வார். 

https://www.vikatan.com/news/spirituality/116645-kanchanagiri-lord-shiva-still-awaits-for-kanjanan.html

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வடக்கு கிழக்கில் உள்ளவர்கள் ஹிந்தியும் படித்தால் இன்னும் முன்னுக்கு வரலாம் ...என்பது எனது கருத்து ...பிராந்திய வல்லரசின் ஆட்சி மொழி தெரிந்திருந்தால் அதனுடாக‌ தமிழ் மக்களுக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும்  ...சிறிலங்கா இறையாண்மை உள்ள நாடு (ஹிந்தி மொழி தெரியாத காரணத்தால் தான்)  இந்திய அரசுடன்  அடிக்கடி மீன்பிடி பிரச்சனை வருகின்றது ... சிறிலங்கன் கடற்படையினர் இந்திய‌ மீனவர்களை கைது செய்கின்றனர் ...வடக்கு கிழக்கில் அமைச்சராக இருப்பவர்கள் நிச்சயமாக ஹிந்தி படிக்கவேண்டும்...வடக்கு மாகாண‌ ஆளுனர் நாலு மொழிகளில் திறைமையுடையவராக இருந்தால்   ....பிராந்திய வல்லரசை இலகுவாக சமாளிக்க  முடியும்..மீனவர் பிரச்சனையும் ..
    • பொருளாதர பிரச்சனை இருப்ப‌வன் புலம்பெயர்ந்து தனது பொருளாதாரத்தை ஈட்டிக்கொள்வான் ....அந்த புலம் பெயர்ந்தவனை கொண்டே தாயகத்தின் பொருளாதாரத்தை உயர்ந்த ஒர் மாகாண சுயாட்சி தேவை.... இது சிறிலன்கன் என்ற நாட்டுக்கு நல்லது ...இந்தியவை பார்த்தாவது திருந்த வேண்டும் ....புதுச்சேரிக்கே மாகாண சுயாட்சி உண்டு ... நான் மாற மாட்டேன் பனங்காட்டு நரி...நம்ம டக்கியரின் விசிறி...மத்தியில் கூட்டாச்சி மாகாணத்தில் சுயாட்சி😅
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • கொஞ்சம் அழ இரண்டு ரீல்ஸ் ....... சரமாரி முத்தம் பெறவேண்டிய வயசில் தாயை இழந்துவிட்டது, அவள் கல்லறைக்கு முத்தம் கொடுத்து தன் கவலையை மறக்கிறது.   மகவை இழந்த சின்ன தாயை மகனாகி ஆறுதல் சொல்லி தேற்றுகிறது. கொஞ்சம் சிரிக்க மூண்டு ரீல்ஸ் ...................... திமிர் புடிச்ச குழந்தை   எனக்கு அடிவிழும்வரைதான் இன்னொருவனுக்கு எப்படி கவனமாய்  இருக்கவேண்டுமென்று அட்வைஸ் பண்ணலாம்.   இரு மம்மி, இந்த குண்டாவால போடு அந்த  குல்பி ஐஸ் விக்குறவனுக்கு      பொறுப்புணர்வுக்கு இரண்டு ரீல்ஸ் ......... வீட்டில் மொப் அடிக்கும்போது மனிசனே கொஞ்சம் நகர்ந்து நிக்கோணும் எண்டு நினைப்பதில்லை   ஐந்து பெரிதா ஆறு பெரிதா? அறிவு என்று வரும்போது ஆறைவிட ஐந்துதான் பெரிது.  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.