Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு நிமிடக் கதைகள்

Featured Replies

ஒரு நிமிடக் கதைகள்

 

white_spacer.jpg

ஒரு நிமிடக் கதைகள் white_spacer.jpg
title_horline.jpg
 
white_spacer.jpg
 

p149d.jpg பேரம்

காரிலிருந்தபடியே நடமாடும் காய்கறிக்காரியிடம் பேரம் பேசினார் அந்தத் தொழிலதிபர். “இந்தாம்மா, தக்காளி ஒரு கிலோ பன்னிரண்டு ரூபாய்னு கொடுத்தாக் கொடு. அதுக்கு மேல ஒரு பைசா தரமாட்டேன். கோயம்பேடுக்குப் போனா பத்து ரூபாய்க்கு சீப்படுது, தெரியுமில்லே!” என்று சளைக்காமல் பேசி, குறைவான விலைக்கு வாங்கினார். அது போலவே பழக் கடைக்காரன், பூக்காரி இவர்களிடமும் விலையை அடித்துப் பேசி குறைவான விலைக்கே வாங்கினார்.

அவரை வீட்டில் இறக்கிவிட்டுவிட்டு வீடு திரும்பிய டிரைவர் கணேசன், தன் மனைவியிடம் முதலாளியின் கஞ்சத்தனத்தைப் பற்றிச் சொல்லி, “அவருக்குக் காசு பணமா இல்லே? நேத்துகூட தன் வொய்ஃப் பர்த்டேக்கு அறுபதாயிரம் ரூபாய்க்கு தங்க நெக்லஸ் வாங்கி பிரசென்ட் பண்ணாரு. சின்ன வியாபாரிங்க கிட்டே இப்படி அடாவடி பண்றதா ஒரு பெரிய மனுஷனுக்கு அழகு?” என்றான்.

“நீங்க பேசாம இருங்க. யாரும் நஷ்டத்துக்கு ஒரு பொருளை விக்க மாட்டாங்க. உங்க முதலாளி மாதிரி பணக்காரங்க பேரம் பேசாம சொன்ன விலையைக் கொடுத்து வாங்கிட்டுப் போனா, அப்புறம் நமக்கும் அதே விலை சொல்ல ஆரம்பிச்சுடுவாங்க. நாம பேரம் பேசினா, சாவு கிராக்கி பட்டம்தான் கிடைக்கும் நமக்கு!” என்று ஒரே போடாகப் போட்டாள் கணேசனின் மனைவி.

- எஸ்.நடராஜ்

 

 

 

 

 

p156.jpg யாரோ நினைச்சுக்கிறாங்க!

ஆபீஸில் லன்ச் நேரம். சாப்பிட்டுக்கொண்டு இருந்த கமலாவுக்கு திடீரென்று புரைக்கேறியது. அவள் தலையில் தட்டி, குடிக்கத் தண்ணீர் கொடுத்த தோழி கல்பனா, “இந்த நேரத்துல யாருடி உன்னை நினைச்சுக்கறது? உன் வீட்டுக்காரரா?” என்றாள்.

“ஆபீசுக்குப் போயிட்டா அவருக்கு உலகமே மறந்துடும். என் பிள்ளை ரமேஷ் பெங்களூருல தங்கிப் படிச்சுட்டிருக்கான். ஹாஸ்டல் சாப்பாடு சாப்பிட்டு நாக்கு செத்திருக்கும் பாவம், அவன்தான் நினைக்கிறான்!” என்றாள் கமலா.

பெங்களூருவில்... சாப்பிட்டுக்கொண்டு இருந்த ரமேஷ§க்குப் புரைக்கேறியது.

“டேய் ரமேஷ், ஊர்ல உன்னை யாரோ நினைச்சுக்கறாங்கடா! அதான், இப்படிப் புரைக்கேறுது உனக்கு!” என்றான் அருகில் இருந்த நண்பன்.

“ஊர்ல இல்லடா! இங்கே நம்ம க்ளாஸ்ல ரெண்டாவது பெஞ்ச்ல உட்கார்ந்திருப்பாளே தீபிகா, அவதான் நினைக்கிறா!” என்றான் ரமேஷ்.

- கருப்பசாமி பாண்டியன்

 

 

 

p156a.jpg டேஸ்ட்

“நாளைக்கு என்ன சமையல் பண்ணட்டுங்க?” என்று ஆவலோடு கேட்டாள் திலகா.

“நீயும்தான் தினம் தினம் இந்தக் கேள்வியைக் கேட்கறே. நான் என்னிக்காவது மத்தவங்களை மாதிரி எனக்கு இது பண்ணிப் போடு, அது பண்ணிப் போடுன்னு கேட்டிருக்கேனா? நீ எது செஞ்சு போட்டாலும், மறுக்காம சந்தோஷமா சாப்பிட்டுட்டுப் போறேனா, இல்லையா? அப்புறம் எதுக்கு இந்தக் கேள்வி?” என்ற சுரேஷ் சாப்பிட்டு முடித்துக் கை கழுவிவிட்டு, தன் அறையில் போய் உட்கார்ந்துகொண்டு, மும்முரமாக ஏதோ எழுதத் தொடங்கினான்.

“என்ன அப்படி எழுதறீங்க?” என்றபடி அவன் அருகில் வந்து உட்கார்ந்தாள் திலகா.

“அதுவா... இன்னிக்குக் காலையில ‘மல்லிகை’ பத்திரிகைலேர்ந்து பேசினாங்க. அடுத்த வாரம் சினிமா ஸ்பெஷலாம்! அதுக்குப் பொருத்தமா சினிமாவை மையமா வெச்சு அர்ஜென்ட்டா ஒரு சிறுகதை வேணும்னு கேட்டாங்க. என்னதான் நானே எழுதி அனுப்புற கதைகளைப் பாராட்டி பப்ளிஷ் பண்ணினாலும், அவங்க தேவைக்கேற்ப எழுதி அனுப்புறதுல கிடைக்கிற சந்தோஷமே தனி! என்ன சொல்றே..?” என்றவன் திலகா வின் பார்வையில் இருந்த ஆழத்தைப் புரிந்துகொண்டவனாக, “சரி, நாளை வெங்காய சாம்பாரும், உருளைக்கிழங்கு பொரியலும் பண்ணி ஜமாய்! என்ன...” என்று அவள் கன்னத்தைத் தட்டினான்!

- ஆர்.உஷா

 

 

 

 

 

 

p128.jpg வழிப்பறி!

மாதத்தின் முதல் தேதி. சுளையாக சம்பளம் ரூ.25,000 என் பேன்ட் பாக்கெட்டில்! ரொம்ப ஜாக்கிரதையாக இருந்தும், எவனோ ஒரு ராஸ்கல், பஸ்ஸின் குலுக்கலைப் பயன்படுத்தி, சட்டென்று என் பேன்ட்டிலிருந்து பர்ஸை உருவிவிட்டான். சுதாரித்து எவன் என்று திரும்பிப் பார்ப்பதற்குள், பஸ் ஒரு திருப்பத்தில் மெதுவாகச் செல்ல, சட்டென்று ஒரு தடியன் குதித்து ஓடத் தொடங்கினான்.

நான் ஒன்றும் பெரிய தைரியசாலி இல்லை என்றாலும், பெரிய தொகை இழப்பு என்பது என்னுள் ஒரு வேகத்தை உண்டுபண்ண, நானும் சட்டென்று குதித்து அவன் பின்னாலேயே துரத்திப்போய் மடக்கி, “எடுடா பர்ஸை! எவன்கிட்ட... மவனே, கொன்னுடுவேன்!” என்றேன். அவன் தயக்கத்தோடு தன் சட்டைப் பையி லிருந்து ஒரு பர்ஸை எடுத்து என்னிடம் நீட்டினான்.

சட்டென அதைப் பிடுங்கிக்கொண்டு விறுவிறுவெனத் திரும்பி நடந்து, அந்த வழியாக வந்த அடுத்த பஸ்ஸில் தாவி ஏறினேன். உள்ளே சென்று, என் பணம் சரியாக இருக்கிறதா எனப் பார்ப்பதற்காக பர்ஸைத் திறந்தேன். ரூ.12,000 பணமும், கூடவே அவனுடைய போட்டோவும், ஐடென்டிடி கார்டும் இருந்தன!

- ரவி இன்பஉதயன்

 

 

 

 

 

p128a.jpg ராசி

ராசி, சகுனம், சென்டிமென்ட் இதிலெல்லாம் அதிகம் நம்பிக்கை உள்ளவன் வாசு. குறிப்பாக, நியூமராலஜியில் ரொம்ப நம்பிக்கை. வாடகைக்கு வீடு பார்ப்பதாக இருந்தால் கூட தன் பிறந்த நாள் எண், பெயர் எண் இவற்றோடு பொருந்திப் போகும்படியான கதவு எண்ணாகத் தேர்ந் தெடுத்துதான் குடி போவான்.

எட்டாம் எண் என்றால், வாசுவுக்கு அப்படியரு அலர்ஜி! பெண் பார்க்கும்போதுகூட எட்டாவதாக வந்த ஜாதகத்தை பெண் எப்படி, என்ன, ஏது என எதுவும் விசாரிக்காமல் கண்ணை மூடிக்கொண்டு மறுத்துவிட்டான். அவ்வளவு ஏன்... அவன் ஆபீஸுக்குப் போவதற்கு 8-ஏ, 7-ஜி என இரண்டு பஸ்கள் உண்டு. என்னதான் காலியாக இருந்தாலும், 8-ம் நம்பர் பஸ்ஸில் ஏறவே மாட்டானே!

நம்பர் பொருத்தம் எல்லாம் பார்த்து, வாசு ஒரு டூ-வீலர் வாங்கினான். ஆனால், பாவம்... அதை ஓட்டிச் செல்லும் கொடுப்பினைதான் அவனுக்கு இல்லாமல் போய்விட்டது. பின்னே... ‘எட்டு’ போட்டுக் காட்டினால்தான் டிரைவிங் லைசென்ஸ் தருவோம் என்று படுத்தினால்..?

- ரஜ்னீஷ்

 

 

 

 

p127a.jpg கல்யாணம் எப்போது?

23 வயதில்...

“முதல்ல எம்.காம்., முடிக்கிற வழியைப் பாருடா! அப்புறம் கல்யாணத்தப் பத்தி யோசிக்கலாம்!”

30 வயதில்...

“உத்தியோகம்புருஷ லட்சணம். கல்யாணம் எப்ப வேணா பண் ணிக்கலாம்! முதல்ல உருப்படியா ஒரு வேலை தேடிக்கிற வழியைப் பாரு!”

35 வயதில்...

“பத்தாயிரம் ரூபா சம்பளம் இந்தக் காலத்துல நாக்கு வழிக்கக்கூடக் காணாதேடா! சம்பளம் கொஞ்சம் உசரட்டும்... ஜாம் ஜாம்னு பண்ணிட லாம்!”

40 வயதில்...

“குடும்பம், குழந்தை குட்டின்னு ஆயாச்சுன்னா அப்புறம் சேமிக்கவே முடியாது. முதல்ல ஒரு வீடு... அட் லீஸ்ட் ஒரு ஃப்ளாட்டாவது வாங்குற வழியப் பாரு! ஆயிரம் பொண்ணுங்க ஜாதகம் தன்னால தேடி வரும்!”

 

45 வயதில்...

“கிட்டத்தட்ட அரைக் கிழவன் ஆயாச்சு! இனிமே எவடா உனக்குக் கழுத்தை நீட்டுவா? அதது அந்தந்தக் காலத்துல நடக்க வேணாமா? உனக்கே கல்யாணத்துல அக்கறை இல்லாதப்ப, நான் என்ன பண்ணட்டும், சொல்லு?”

- ஆர்.நரசிம்மன்

 

 

 

 

 

 

p127.jpg நல்ல துணை!

“சிவா! வீணா அந்த விஜியையே நினைச்சு ஏங்கிட்டு இருக்காதே! அவ என்ன பெரிய கிளியோபாட்ராவா? உன்னையே நினைச்சு உருகிட்டிருக்கா சுமதி. அவளையே லவ் பண்ணிக் கல்யாணம் பண்ணிக்க! அதான் நல்லது! ‘வசந்தமாளிகை’ படம் பார்த்திருக்கியா, அதுல சிவாஜி சார் ஒரு வசனம் சொல்வார்... நாம விரும்புற பெண்ணைவிட, நம்மை விரும்புற பெண்தான் மேல்னு! அதான் நிஜம்!”

நண்பன் குமார் கொஞ்சம் கொஞ்சமாக என் மனதை மாற்றினான்.

மறுநாள்... சுமதியிடம் என் காதலைச் சொல்லிவிட்டுப் பரவசமாக நின்றேன்.

“ஸாரி சிவா! நாம விரும்புறவரைவிட நம்மை விரும்புற வர்தான் மேல்னு குமார் சொல்லிட்டிருந்ததை நானும் கேட்டேன். அதனால, நான் என் மனசை மாத்திக்கிட்டு, என்னை விரும்புற கணேஷையே கணவனா ஏத்துக்குறதுன்னு முடிவு பண்ணிட்டேன்!” - சொல்லிவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் நடந்தாள் சுமதி!

- ஆர்.ஷைலஜா

https://www.vikatan.com

  • கருத்துக்கள உறவுகள்

சின்னக் கதைகள் என்றாலும் செல்லக் கதைகள்.....!  tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.