Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நத்தார் தினத்திலிருந்து அனைத்து சேவைகளும் புதிய பேரூந்து நிலையத்திலிருந்து இடம்பெறும்

Featured Replies

நத்தார் தினத்திலிருந்து அனைத்து சேவைகளும் புதிய பேரூந்து நிலையத்திலிருந்து இடம்பெறும்

 

வவுனியா புதிய பேரூந்து நிலையத்திலிருந்து நத்தார் தினத்தன்று அனைத்து பேரூந்து சேவைகளும் இடம்பெறும் என வவுனியா மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தலைவர் எஸ்.ரி. இராஜேஸ்வரன் தெரிவித்தார்.

bus-vavuniya.jpg

வவுனியா புதிய பேரூந்து நிலையம் கடந்த 2017 ஜனவரி 16 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டதன் பின்னர் சேவைகள் எவையும் அங்கிருந்து இடம்பெறாத நிலையில் பயன்பாடின்றி காணப்பட்டு வருகின்றது.

இந் நிலையில் வட மாகாண முதலமைச்சரும் போக்குவரத்து அமைச்சருமான சி.வி. விக்னேஸ்வரனுடன் வட மாகாணசபை கட்டிடத்தொகுதியில் புதிய பேரூந்து நிலையம் தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

வவுனியா பேரூந்து நிலையமானது பயன்பாடின்றி காணப்படுவது தொடர்பாக நாம் பல தடவைகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் சுட்டிக்காட்டியிருந்தோம். 

எனினும் அங்கிருந்து சேவைகளை மேற்கொள்ளவதற்கு இலங்கை போக்குவரத்து சபை முன்வராத நிலையில் எம்மாலும் சேவையினை அங்கிருந்து செயற்படுத்த முடியாதிருந்தது.

 

இந் நிலையில் வட மகாண முதலமைச்சரும் போக்குவரத்து அமைச்சருமான சி.வி. விக்னேஸ்வரன் அவர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தோம்.

இதன்போது தேசிய போக்குவரத்து அணைக்குழுவின் தலைவர், வட மகாண போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் மற்றும் செயலாளர், வட மகாண தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கங்களின் ஒன்றியத்தினர், ஐந்து மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்க பிரதிநிதிகள், இலங்கை போக்குவரத்து சபையினுடைய 7 சாலை முகாமையாளர்கள் இப் பேச்சுக்களில் ஈடுபட்டிருந்தோம்.

 

இதன்போது இறுதி முடிவாக அவைரும் இணைந்து எதிர்வரும் 25 ஆம் திகதி நத்தார் தினத்தன்று புதிய பேரூந்து நிலையத்தில் இருந்து சேவைகளை ஆரம்பிப்பது என முடிவு எட்டப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/28318

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

வவுனியா பழைய பேரூந்து நிலையத்தில் இருந்து சேவைகள் முன்னெடுப்பு!

 

வவுனியா பழைய பேரூந்து நிலையத்தில் இருந்து சேவைகள் முன்னெடுப்பு!

வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் இருந்து இன்று(25) முதல் பேரூந்துகள் சேவையில் ஈடுபட வசதியாக பழைய பேரூந்து நிலையத்தினை மூடி விடுமாறு வட மகாண முதலமைச்சரினால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட உத்தரவு உதாசீனப்படுத்தப்பட்டுள்ளதாக பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் தொடுர்பாக தெரியவருவதாவது...

வவுனியா பழைய பேரூந்து நிலையத்தில் இருந்து சேவைகள் முன்னெடுப்பு!

வவுனியாவில் கடந்த ஒரு வருட காலமாக பயன்பாடின்றி காணப்படும் புதிய பேரூந்து நிலையத்தினை மீள இயக்கும் நோக்கோடு வட மாகாண முதலமைச்சரினால் இன்று 25 ஆம் திகதியில் இருந்து தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் பேரூந்துகள் சேவையில் ஈடுபட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இது வரைகாலமும் இலங்கை போக்குவரத்து சபையின் பேரூந்துகள் சேவையில் ஈடுபட்டு வந்த நகரசபைக்கு சொந்தமான பகுதியை தனியார் வாகனங்கள் சென்று வருவதற்கு மாத்திரம் அனுமதி வழங்கும் வகையில் பேரூந்துகள் உட்செல்லாத வகையில் 24 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி முதல் மூடுமாறு வட மாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு முதலமைச்சர் கடிதம் மூலம் அறிவித்திருந்தார்.

இந் நிலையில் பழைய பேரூந்து நிலையம் மூடப்படாமல் காணப்பட்டதுடன் பொலிஸார் மற்றும் வவுனியா நகரசபை செயலாளர் உட்பட்ட உத்தியோகத்தர்கள் அவ்விடத்திற்கு பிரசன்னமாகியிருந்தனர்.

எனினும் பொலிஸார் தமக்கு பேரூந்து நிலையத்தினை மூடுமாறு உத்தரவு வரவில்லை எனவும் நகரசபையினரே மூட வேண்டும் என தெரிவித்ததுடன் அவ்வாறு மூடும் பட்சத்தில் தாம் பாதுகாப்பு தருவதாகவும் தெரிவித்திருந்தனர்.

இவ்வாறான சூழலில் பழைய பேரூந்து நிலையப்பகுதிக்கு வருகை தந்த வவுனியா தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி வவுனியா நகரசபை செயலாளரிடம் நகரசபையினால் பேரூந்து நிலையத்தினை மூடுங்கள் என தெரிவிக்கப்பட்டபோதிலும் அவ்வாறான உத்தரவு தமக்கு கிடைக்கவில்லை எனவும் முதலமைச்சர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கே உத்தரவு இட்டுள்ளதாகவும் நகரசபை செயலாளர் தெரிவித்தார்.

இந் நிலையில் முதலமைச்சரின் உத்தரவை பொலிஸார் கடைப்பிடிக்காமையினால் வழமைபோன்றே இலங்கை போக்குவரத்து சபையின் பேரூந்துகள் பழைய பேரூந்து நிலையத்தில் இருந்து சேவைகளை முன்னெடுத்திருந்தது.

வவுனியா பழைய பேரூந்து நிலையத்தில் இருந்து சேவைகள் முன்னெடுப்பு!

https://news.ibctamil.com/ta/internal-affairs/vavuniya-bus-stand-25

  • தொடங்கியவர்

விக்கியின் பணிப்புரைகள் புறக்கணிக்கப்படுகின்றனவா? மத்திய அரசிற்கும் மாகாண சபைக்குமான அதிகார இழுபறி உச்சத்தில்?

 

vikki.png?resize=576%2C439

வவுணியாவில் முன்பு இயங்கிய பழைய பேரருந்து நிலையத்தினை மூடிவிடுமாறும், புதிதாக அமைக்கப்பட்ட பேரருந்து நிலையத்தில் இருந்து பேரருந்துச் சேவைகளை, இன்று முதல் ஆரம்பிக்குமாறும், வடக்கு மாகாண முதலமைச்சர் விடுத்த உத்தரவு புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த வகையில் முதலமைச்சரின் உத்தரவை மீறி, பழைய பேரருந்து நிலையத்தில் இருந்தே சேவைகள் தொடர்வதாக வவுனியாச் செய்திகள் தெரிவிக்கின்றன.  கடந்த ஒரு வருட காலமாக, பல்வேறு தரப்பினரின் அழுத்தங்கள் காரணமாக, புதிதாக அமைக்கப்பட்ட பேருந்து நிலையம் பயன்பாடின்றி காணப்பட்டது. இந்த நிலையத்தில் இருந்து சேவைகளை ஆரம்பிப்பது குறித்த பல பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்தன.

இந்த நிலையில் புதிய பேரருந்து நிலையத்தில் இருந்து இன்று முதல் இருந்து தனியார் மற்றும் அரச பேரருந்துகள் சேவையில் ஈடுபட வேண்டும் என முதலமைச்சரால் பணிப்புரை வழங்கப்பட்டது.  அத்துடன், இது வரைகாலமும் அரச பேருந்துகள் சேவையில் ஈடுபட்டு வந்த நகரசபைக்கு சொந்தமான பகுதியை தனியார் வாகனங்கள் சென்று வருவதற்கு மட்டும் அனுமதி வழங்கும் வகையில், பேருந்துகள் உட்செல்லாமல் இருக்க 24ஆம் திகதி நள்ளிரவு 12 மணி முதல் மூடுமாறு வடக்கு மாகாண சிரேஸ்ட காவற்துறை அத்தியட்சகருக்கு முதலமைச்சர் கடிதம் மூலம் அறிவித்திருந்தார்.

இதனையடுத்து, பழைய பேருந்து நிலையம் மூடப்படாமல் காணப்பட்டதுடன் காவற்துறையினர் மற்றும் வவுனியா நகரசபை செயலாளர் உட்பட்ட உத்தியோகத்தர்கள் அவ்விடத்திற்கு சென்றிருந்தனர். எனினும் பேருந்து நிலையத்தினை மூடுமாறு தமக்கு உத்தரவு கிடைக்கவில்லை எனத் தெரிவித்துள்ள காவற்துறையினர், இது குறித்து நகரசபையினரே தீர்மானம் எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். அவ்வாறு நகரசபையின் தீர்மானத்திற்கு ஏற்ப மூடப்படுமாயின் தாம் பாதுகாப்பு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான சூழலில் பழைய பேருந்து நிலையப்பகுதிக்கு சென்ற வவுனியா தலைமையக காவற்துறைப் பொறுப்பதிகாரி, பேருந்து நிலையத்தினை மூடுமாறு நகரசபைச் செயலாளரிடம் கூறிய போதும், அவ்வாறான உத்தரவு தமக்கு கிடைக்கவில்லை எனவும் முதலமைச்சர் சிரேஸ்ட காவற்துறை அத்தியட்சகருக்கே பணிப்புரை வழங்கியதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் வழமைபோன்றே இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகள் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து சேவைகளை தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது.

http://globaltamilnews.net/2017/57486/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.