Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோண்டாவில் பகுதியில் வாள்வெட்டுக் குழுவை துரத்தி அடித்த மக்கள்!

Featured Replies

கோண்டாவில் பகுதியில் வாள்வெட்டுக் குழுவை துரத்தி அடித்த மக்கள்!

 

கோண்டாவில் பகுதியில்  வாள்வெட்டுக் குழுவை துரத்தி அடித்த மக்கள்!

கோண்டாவில் பகுதியில் சாகசம் காட்ட முற்பட்ட வாள்வெட்டு குழுவினரை அப்பகுதி மக்கள் துரத்தி துரத்தி அடித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அத்துடன் அவர்களிடம் இருந்து வாள்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை கைப்பற்றிய பொதுமக்கள் கோப்பாய் பொஸிசிடம் பாரப்படுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றதாகவும் இதன்காரணமாக குறித்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளா் தெரிவித்தாா்.

கோண்டாவில் குட்சட் வீதி பகுதியில் சற்று முன்னர் 4 மோட்டார் சைக்கிள்களில் வந்திருந்த வாள்வெட்டு குழுவினர் அப்பகுதி மக்களை அச்சுறுத்த முற்பட்டுள்ளனர்.

அப்போது அங்கிருந்த ஊர் இளைஞர்கள் ஒன்று திரண்டு இவர்களை சுற்றி வளைத்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதை சற்றும் எதிர் பார்க்காது செய்வதறியாது திகைத்த வாள்வெட்டு குழுவினர் ஆயுதங்களை போட்டு விட்டு சிதறி ஓடியுள்ளனர்.

அவர்களிடம் இருந்த இரண்டு வாள்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளை கோப்பாய் பொலிஸாரிடம் பொதுமக்கள் பாரப்படுத்தியுள்ளனர்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/konndavil-news-16-jaffna

  • கருத்துக்கள உறவுகள்

வாள்வெட்டுக் குழுவினருக்கு தர்ம அடி கொடுத்த கோண்டாவில் மக்கள்!

Report us S.P. Thas 12 hours ago

யாழ்ப்பாணத்தை கலக்கிவரும் வாள் வெட்டுக்குழுவினரால் பொது மக்களுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருந்தது. அடிக்கடி இரவு வேளைகளில் மோட்டார் சைக்கிள்களில் வெளியே வரும் இந்தக் குழுவினர் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவது வாடிக்கையான நிகழ்வாக இருந்தது.

இதேபோன்று இன்றைய தினமும் கோண்டாவில் பகுதியில் சாகசம் காட்ட முற்பட்ட வாள்வெட்டு குழுவினரை அப்பகுதி மக்கள் துரத்தி துரத்தி தர்ம அடி கொடுத்துள்ளனர் என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக கோண்டாவில் பகுதியில் இருந்து கிடைத்த தகவல்களின்படி, இன்று இரவு வாள்கள் சகிதம் மோட்டார் சைக்கிள்களில் வந்த வாள் வெட்டுக் குழுவினர், தமது சாகச நிகழ்வுகளை காட்ட முற்பட்டுள்ளனர்.

எனினும் சுதாகரித்துக் கொண்ட பொதுமக்கள் வந்தவர்களை விரட்டி விரட்டி அடித்துள்ளனர். பொது மக்களும், இளைஞர்களும் சுதாகரித்துக் கொண்டு தாக்குதல் நடத்தியதை எதிர்பாராத வள்வெட்டுக் குழுவினர் சிதறி ஓடியுள்ளனர்.

இதன் காரணமாக குட்சட் பகுதியில் சிறிது நேரம் பதட்டம் ஏற்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, அவர்களிடம் இருந்து வாள்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை கைப்பற்றி கோப்பாய் பொலிஸிசிடம் ஒப்படைத்துள்ளனர் என தெரியவருகிறது.

http://www.tamilwin.com/living/01/168221?ref=home-imp-parsely

  • தொடங்கியவர்

கோண்டாவில் கடையொன்றில் வாளுடன் கொள்ளையிட முயன்ற இருவர் கைது!

 

கோண்டாவில் கடையொன்றில் வாளுடன் கொள்ளையிட முயன்ற இருவர் கைது!

யாழ்ப்பாணம் கோண்டாவில் புகையிர நிலையத்திற்கு முன்பாகவுள்ள கடையொன்றில் வாளுடன் சென்று கொள்ளையிட முயன்ற இருவர் கோப்பாய்  பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கோண்டாவில் புகையிர நிலையத்திற்கு முன்பாகவுள்ள கடையொன்றில் வாளுடன் சென்று கொள்ளையிட முயன்ற இளைஞர்கள் இருவரை கண்ட அப்பகுதி மக்கள் அவர்களை விரட்டியடித்துள்ளனர். இதன்போது குறித்த நபர்கள் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸில் முறையிட்ட நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட கோப்பாய் பொலிஸார், கொக்குவில் கோண்டாவில் பகுதியை 18 மற்றும் 22 வயதுடைய இரு இளைஞர்களை கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து வாள் ஒன்றும் இரும்பு குளாய் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கோண்டாவில் கடையொன்றில் வாளுடன் கொள்ளையிட முயன்ற இருவர் கைது!

https://news.ibctamil.com/ta/internal-affairs/tow-arrested-in-kondavil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.