Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நேர்­மை­யு­டன் செயற்­ப­டும் அர­சி­யல்­வா­தி­களே எமது தெரி­வாக அமை­தல் வேண்­டும்

Featured Replies

 
நேர்­மை­யு­டன் செயற்­ப­டும்  அர­சி­யல்­வா­தி­களே  எமது தெரி­வாக அமை­தல் வேண்­டும்
 
 

நேர்­மை­யு­டன் செயற்­ப­டும் அர­சி­யல்­வா­தி­களே எமது தெரி­வாக அமை­தல் வேண்­டும்

 

அடுத்த ஆண்டு வடக்கு மாகா­ண­ச­பைக்­கான தேர்­தல் இடம்­பெ­று­மெ­னத் தெரிய வரு­கின்­றது. மாகாண சபை­யின் ஐந்து ஆண்­டு­கால சாத­னை­களை எடை­போட்­டுப் பார்ப்­ப­தற்கு இந்­தத் தேர்­தல் மக்­க­ளுக்கு ஒரு சந்­தர்ப்­பத்தை வழங்­கப் போகின்­றது.

தற்­போ­தைய முத­ல­மைச்­சர் மீண்­டும் அந்­தப் பத­வி­யில் நீடிப்­ப­தற்­கான சந்­தர்ப்­பம் இல்­லை­யென நம்­ப­க­மா­கத் தெரி­கின்­றது. ஆகவே இந்­தப் பத­விக்­குத் தகு­தி­யான வேறொ­ரு­வ­ரைத் தேர்ந்­தெ­டுக்க வேண்­டிய தேவை­யும் எழுந்­துள்­ளது.

கடந்த முறை ஏற்­பட்ட கசப்­பான அனு­ப­வம் இம்­மு­றை­யும் ஏற்­ப­டா­மல் பார்த்­துக் கொள்­வது அவ­சி­ய­மா­கும். மாகா­ண­சபை உறுப்­பி­னர்­க­ளைப் பொறுத்தவரை­யில் அவர்­க­ளுக்கு எந்­த­வி­தக் குறை­யு­மில்லை. பொரு­ளா­தார ரீதி­யில் செழிப்­பா­கவே காணப்­ப­டு­கின்­ற­னர். தீர்­வை­யற்ற வாகன அனு­ம­திப்­பத்­தி­ரம் அவர்­களை இலட்­சங்­க­ளில் மிதக்க வைத்­துள்­ளது.

தமக்கு வாக்­க­ளித்­தோ­ரது தேவை­களை நிறை­வேற்­று­வது அர­சி­யல்­வா­தி­க­ளது கடமை

இவர்­கள் தம்மை நம்பி வாக்­க­ளித்த மக்­க­ளை­யும் ஒரு கணம் சிந்­தித்­துப் பார்க்க வேண்­டும். அவர்­க­ளின் தேவை­கள் தொடர்­பா­க­வும் ஆராய்ந்து அவற்றை நிவர்த்தி செய்­வ­தற்கு கடு­மை­யாக உழைக்க வேண்­டும். தமக்கு ஒதுக்­கப்­ப­டு­கின்ற நிதியை தமது விருப்­பம்­போன்று பகிர்்ந்து அளித்­து­விட்டு கடமை முடிந்­து­ விட்­ட­தென நினைத்­துக் கொள்­வ­தால் பய­னொன்­றும் ஏற்­பட்டு விடாது.

 

உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் ஆச­னப் பங்­கீடு தொடர்­பா­கக் கூட்­ட­மைப்­புக்­குள் குழப்­ப­நி­லை ­யொன்று தோன்­றி­விட்­டது. இந்­தக் குழப்­ப­நிலை பங்­கா­ளிக்­கட்­சி­க­ளி­டையே மட்­டு­மல்­லாது, கூட்­ட­மைப்­பின் முதன் மைக் கட்­சி­யான தமிழ் அர­சுக் கட்­சிக்­குள்­ளும் நீடிப்­ப­தைக் காண முடி­கின்­றது. பதவி ஆசை பல­ரை­யும் ஆட்டி வைக்­கின்­றது.

இனத்­தின் மீதான அக்­கறை பின்­தள்­ளப்­பட்­டு­ விட்­டது. தனி­நாடு கேட்­டுப் போராடி அழிந்த ஓர் இனம் உள்­ளூ­ராட்­சிச் சபை­க­ளின் பதவி மோகம் கார­ண­மாக மல்­லுக்­கட்டி நிற்­கின்றது. போர்­கா­ர­ண­மாக இறந்­த­வர்­க­ளின் ஆத்­மாக்­கள் இவர்­களை மன்­னிக்க மாட்­டாது.

கடந்த முறை­யும் மாகா­ண ச­பைத் தேர்­த­லில் வேட்­பா­ளர்­க­ளைத் தெரிவு செய்­வ­தில் பங்­கா­ளிக்­கட்­சி­க­ளுக்­கி­டையே குழப்ப நிலை­யொன்று காணப் பட்­டது. பின்­னர் அமைச்­ச­ர­வையை அமைக்­கும்­போது சிலர் குழம்பி நின்­ற­னர். தமது மிக நெருங்­கிய உற­வி­னர் ஒரு­வ­ருக்கு முக்­கி­ய­மான அமைச்­சப் பத­வியை வழங்­கு­மாறு கட்­சி­யொன்­றின் தலை­வர் விடாப்­பி­டி­யாக நின்­றார். அவர் இப்­போது கூட்­ட­மைப்­பில் இல்லை . ஆனால் அவர் சுட்­டிக் காட்­டி­ய­வர் அமைச்­சப் பொறுப்­பில் அமைந்­தி­ருக்­கி­றார். இது­தான் மாகா­ண­ச­பை­யின் இன்­றைய இலட்­ச­ண­மா­கக் காணப்­ப­டு­கின்­றது.

 

அதி­கா­ரம் இல்­லாத மாகாண சபை­யால்  பய­னென்ன?

தனி­நாடு கேட்­ட­வர்­க­ளுக்கு அதி­கா­ரம் எது­வு­மில்­லாத மாகா­ண­சபை வழங்­கப்­பட்­டமை, பசித்த வயிற்­றுக்கு அரி­சிப்­பொரி கிடைத்­த­தற்­குச் சம­னா­னது. ஆனால் அதைக்­கூட சரி­யா­கப் பயன்­ப­டுத்­து­வ­தற்கு எம்­ம­வர்­க­ளுக்­குத் தெரி­ய­வில்லை. அர­சி­யல் கட்­சி­க­ளின் தலை­வர்­கள் தரா­த­ரம் பார்க்­காது தமக்கு வேண்­டி­ய­வர்­க­ளுக்கு தேர்­தல்­க­ளில் இடம் வழங்­கு­வதை ஒரு வழக்­க­ மா­கக் கொண்­டி­ருக்­கி்ன்­ற­னர். இத­னால் தகு­தி­யில்­லா­த­வர்­க­ளும் பத­வி­யில் அமர முடி­ கின்­றது. இந்த நிலை உட­ன­டி­யா­கத் தவிர்க்­கப்­ப­டல் வேண்­டும்.

தமிழ் நாட்­டின் மறைந்த முன்­னாள் முத­ல­மைச்­ச­ரான ஜெய­ல­லிதா சொத்­துக்­கு­விப்பு வழக்­கில் சிறைத் தண்­டனை பெற்­ற­வர். இதே குற்­றத்­துக்­காக அவ­ரது நெருங்­கிய தோழி­யான சசி­க­லா­வும் வேறு சில­ரும் சிறை­வா­சம் அனு­ப­விக்­கின்­ற­னர். ஜெய­ல­லிதா இறந்­த­ப­டி­யால் சிறைத் தண்­ட­னை­யி­லி­ருந்து தப்­பி­விட்­டார்.

எமது நாட்­டி­லும் பத­வி­யில் அமர்ந்­தி­ருப்­ப­வர்­க­ளில் பல­ரும் பத­விக்கு வந்­த­தன் பின்­னர் சொத்­துக் குவித்­துள்­ளதை அவ­தா­னிக்க முடி­கின்­றது. இதில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளும், மாகா­ண­சபை உறுப்­பி­னர்­க­ளும் அடங்­கு­வர்.

ஆனால் இவர்­கள் தொடர்­பாக முறை­யான விசா­ர­ணை­ கள் எது­வும் இடம்­பெ­று­வ­தா­கத் தெரி­ய­வில்லை. மக்­க­ளின் பணத்­தைக் கொள்­ளை­ய­டிக்­கின்ற எவ­ரும் தண்­டிக்­கப்­பட வேண்­டி­ய­வர்­களே. அர­சி­யல் ஒரு சாக்­கடை என வர்­ணிக்­கப்­பட்­டா­லும் அதை உரிய வகை­யில் பயன்­ப­டுத்­தி­னால் அதன் சக்தி மிக­வும் உயர்­வா­னது.

 

ஒரு நாட்­டின் அதி­கா­ரத்­தைத் தீர்­மா­னிக்­கின்ற சக்­தி­யா­க­வும் அர­சி­யலே காணப்­ப­டு­கின்­றது.

அடுத்த வடக்கு மாகாண சபை நிர்­வா­க­மா­வது சரி­யா­கச் செயற்­ப­டல் அவ­சி­யம்

வடக்கு மாகா­ண­சபை தனது அடுத்த பருவ காலத்­தி­லா­வது சிறப்­பா­கச் செயற்­பட வேண்­டும் என்­பதே வட­ப­குதி மக்­க­ளின் எதிர்­பார்ப்­பா­கும். இதை நிறை­வேற்ற வேண்­டி­யது அர­சி­யல் தலை­வர்­க­ளின் தலை­யாய கட­மை­யா­கும். உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லின்போது ஏற்­பட்ட குழப்­ப­நிலை மாகா­ண ச­பைத் தேர்­த­லி­லும் நீடிக்­கு­ மா­யின் மக்­கள் அதை மன்­னிக்­கவே மாட்­டார்­கள்.தேர்­தல் நெருங்கி வரும்­போது உணர்ச்­சி­க­ர­மான வச­னங் க­ளைப்­பேசி மக்­களை ஏமாற்­றிய காலம் மலை­யே­றி­விட்­டது. மக்­கள் அர­சி­யல்­வா­தி­க­ளி­டம் இனி­யும் ஏமா­று­வ­தற்­குத் தயா­ரில்லை.

உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் முடி­வு­கள் இதைத் தௌிவாக எடுத்­துக்­காட்­டப் போகின்­றன. மாகா­ண­ச­பைத்­தேர்­த­லி­லும் மக்­கள் அத்­த­கை­யோ­ருக்­குப் பாடம் புகட்­டத் தவ­றப் போவ­தில்லை.ஆகவே மக்­களை ஏமாற்­ற­லா­மென அர­சி­யல் வாதி­கள் இனி­யும் நினைக்­கக்­கூ­டாது. அவர்­கள் தாமா­கவே திருந்த வேண்­டும்; இல்­லை­யென்­றால் மக்­களே அவர்­க­ளைப் புற­ மொ­துக்கி விடு­வார்­கள்.

http://newuthayan.com/story/56622.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.