Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தரவுகளை பெற்றுக்கொண்டா டிலான் என்னை விமர்சிக்கும் அறிக்கையை வெளியிட்டார்?

Featured Replies

தரவுகளை பெற்றுக்கொண்டா டிலான் என்னை விமர்சிக்கும் அறிக்கையை வெளியிட்டார்?

as-d28cc9bc984c8b3a749e3d14d19bf2c90d8d2a86.jpg

 

விக்கி கேள்வி; அமைச்சருக்கு செலவு விவர பட்டியலையும் அனுப்பினார்

(நமது நிருபர்)

எம்மை குறைகூறி ஏற்கனவே நொந்துபோன தமிழ் மக்களின் வெறுப் புகளை மென்மேலும் சம்பாதித்துக் கொள்வதற்குப் பதிலாக உண்மை  நிலையை உணர்ந்துகொண்டு இம் மக்களின் அடிப்படைத் தேவைகளை யாவது நிறைவேற்றுவதற்கு டிலான் பெரேராவும்   அவர் சார்ந்த கட்சியின் அமைச்சுக்களும் முன்வரவேண்டும் என அன்பாக வேண்டுகோள் விடுக்கின்றேன் என்று வடக்கு முதல்வர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.  

டிலான் பெரேரா தரவுகள் எதையாவது பெற்று என்னை விமர்சிக்கும் அறிக்கையை வெளியிட்டாரா? அல்லது எழுந்தமானமாக வடமாகாண சபையைக் குறைகூற வேண்டும் என்ற அபிப்பிராயத்தில் இக்கருத்தைத் தெரிவித்தாரா? அல்லது இலங்கைத் தமிழ் மக்களுக்கு உலக மக்களிடம் இருந்து உதவி கிடைப்பதை எப்படியாவது தவிர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவ்வாறு கூறினாரா? என்றும் வடக்கு முதல்வர் விக்கினேஸ்வரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

மத்திய அரசாங்கம் வழங்கும் நிதியையே மீதப்படுத்தும் வடக்கு முதல்வர் விக்கினேஸ்வரன் மலேஷியா வழங்கும் நிதியை கொண்டு என்ன செய்யப்போகின்றார் என்று இராஜாங்க அமைச்சர் டிலான் பெரெரா அண்மையில் தெரிவித்திருந்தமை தொடர்பிலேயே வடக்கு முதல்வர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

நாட்டின் அனைத்து தர மக்களினதும் முன்னேற்றத்திற்கும் மேம்பாட்டிற்கும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் தினமும் பாடுபடுகின்றவர்கள் என தம்மை அடையாளப்படுத்திக் கொள்கின்ற மத்திய அமைச்சரவையின் அமைச்சர் குழாத்தில் அங்கம் வகிக்கின்ற சுதந்திரக்கட்சியின் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா “வீரகேசரி” தமிழ்த்தினப்பத்திரிகைக்கு மத்திய அரசாங்கம் வழங்கும் நிதியைப் பயன்படுத்தாத “விக்கி” மலேசியாவின் நிதியை வைத்து என்ன செய்வார் என்ற வினாக்குறியுடன் வழங்கிய செவ்வியைப்பார்த்து ஆச்சரியமடைந்தேன்.

  டிலான் பெரேரா தரவுகள் எதையாவது பெற்று இந்த அறிக்கையை வெளியிட்டாரா? அல்லது எழுந்தமானமாக வடமாகாண சபையைக் குறைகூற வேண்டும் என்ற அபிப்பிராயத்தில் இக்கருத்தைத் தெரிவித்தாரா? அல்லது இலங்கைத் தமிழ் மக்களுக்கு உலக மக்களிடம் இருந்து உதவி கிடைப்பதை எப்படியாவது தவிர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவ்வாறு கூறினாரா? அல்லது பத்திரிகைகளுக்கு அவர் கூறியது விளங்கவில்லையா? என்பதை நான் அறியேன்.

எனினும் பொதுமக்களுக்கு அரசின் நாடகப்பாணியிலான பொய்ப்பிரசாரங்களை விளக்குவதற்கு எனக்கொரு சந்தர்ப்பம் வழங்கியமைக்காக டிலான் பெரேராவுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டு கடந்த மூன்று ஆண்டுகளில் வடமாகாணசபைக்கு அரசினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை, அதில் வழங்கப்பட்ட கட்டுநிதி, செலவழிக்கப்பட்ட தொகை போன்ற விபரங்கள் அடங்கிய பட்டியல் ஒன்றை அமைச்சரின் பார்வைக்கும் பொதுமக்களின் பார்வைக்குமாக இதன் கீழ் சமர்ப்பிப்பதில் மகிழ்வடைகின்றேன்.

அதில் மத்திய அரசாங்கம் வழங்கும் நிதியை பயன்படுத்தாததற்குப் பதிலாக மத்திய அரசாங்கம் எமக்குத் தருவதாக உறுதிமொழி அளித்த பணம் இதுவரை வந்து சேராமையே உண்மை என்பது புலப்படும். இவ்வருடம் ரூபா 850.12 மில்லியன் அரசாங்கத்திடம் இருந்து எமக்குக் கிடைக்க வேண்டும். இதுவரையில் கிடைக்கவில்லை. கிடைத்த நிதி அவ்வளவும் செலவாகிவிட்டது.

முப்பது ஆண்டுகால நீண்ட போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வதிவிடம், தொழில் முயற்சி, வாழ்வாதார நிகழ்ச்சிகளை மேம்படுத்துவதற்காக ஏனைய மாகாணங்களை விட கூடுதலான நிதி வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு ஒதுக்கப்பட வெண்டும் என்ற எமது கோரிக்கை பலமான எதிர்ப்புகளுடன் மறுக்கப்பட்ட நிலையில் மிக மிக சொற்ப தொகையே வடமாகாணத்திற்கு ஒதுக்கப்படுகின்றது.

அவ்வாறு ஒதுக்கப்பட்ட ஒதுக்கீட்டிற்குக்கூட முழுமையான நிதி வழங்கப்படுவதில்லை. வழங்கப்பட்ட கட்டுநிதி முழுவதும் செலவு செய்யப்பட்டுள்ளமையை, தெளிவாக மக்கள் அறிந்துகொள்ள முடியும். சென்ற வருடம் தரப்பட்ட கட்டு நிதிக்கு மேலதிகமாகச் செலவு செய்யப்பட்டமை புலப்படுகிறது. மேலும் ஒதுக்கப்பட்ட தொகையை பெறுவதற்குக்கூட பலமுறை விண்ணப்பித்து நெருக்குதல்களைக் கொடுத்து வலிந்து பெறவேண்டிய ஒரு கட்டாயத்தில் நாம் உள்ளோம். கௌரவ டிலான் பெரேரா அவர்கள் தமக்குத் தெரியாத விடயங்களைத் தெரிந்தவர் போல பொது மக்கள் இடையிலே பகர்வதை நிறுத்த வேண்டும்.

அண்மைக்காலத்தில் மீதொட்டமுல்ல குப்பைமேடு சரிந்து அப்பகுதியிலுள்ள மக்கள் பாதிப்புக்களுக்கு உள்ளானபோது அரசு காட்டிய ஆர்வமும் வலிந்து மேற்கொண்ட உதவிகளும் இடரில் அகப்பட்ட மக்களை பாதுகாப்பதற்கான அவசர உதவிகளும் நாடறிந்தவை. இவை அரசாங்கம் என்ற நிலைக்கு ஒரு படி மேலாக மனிதாபிமான ரீதியில் ஆற்றப்பட்ட சேவைகள் என்பதால் பாராட்டிற்குரியன. ஆனால் 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின்போது ஸ்ரீலங்கா இராணுவம் கொத்துக்குண்டுகளை வீசி சுமார் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்களைக் கொன்று குவித்ததும் பல இலட்சக்கணக்கான மக்களை நிரந்தர ஊனமுற்றவர்களாக மாற்றியதும் மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களின் வாழ்விடங்களை அழித்து மண்ணோடு மண்ணாக்கியதும் எமது அரசிற்கு எந்தவித மனிதாபிமான உணர்வுகளையும் உண்டு பண்ணவில்லை. டிலான் பெரேராவுக்குக் கூட அவ்வாறான மனிதாபிமான எண்ணங்கள் எழுந்தனவோ நான் அறியேன்.

போர் முடிந்த பின்னராவது எஞ்சியுள்ள மக்களுக்கு அரசு எவ்வகையான உதவிகளை வழங்கியது என்பதனை டிலான் பெரேரா எடுத்துக்கூற வேண்டும் அல்லது அதுபற்றிய விபரப்பட்டியல்கள் இருந்தால் அவற்றையாவது வெளியிட வேண்டும். இலங்கையின் பூர்வீகக் குடிகளான தமிழ் மக்களுக்கு அரசினால் வலிந்து மேற்கொள்ளப்பட்ட கடுமையான தாக்குதல்கள் வாயிலாக ஏற்பட்ட பாதிப்புக்களுக்கு மனமுவந்து மனிதாபிமான ரீதியில் உதவிகளை ஆற்ற வந்த மலேசிய அரசின் பெருந்தன்மையைக்கூட எமது கௌரவத்திற்குரிய இராஜாங்க அமைச்சரால் பொறுக்க முடியவில்லை. அவ்வாறான பெருந்தன்மையை ஏற்றுக்கொள்கின்ற மனப்பக்குவமற்ற இவர் போன்றவர்களின் செயற்பாடே தமிழ் மக்களை விரக்தியின் விளிம்பிற்கு கொண்டு சென்றுள்ளது.

வடமாகாணத்தின் முதலமைச்சராக நான் தெரிவு செய்யப்பட்ட அன்றைய தினத்தில் இருந்து இன்று வரை அந்த மக்களுடனேயே நான் வாழ்ந்து வருகின்றேன். அந்த மக்கள் பல்வேறு வாழ்வாதார உதவிகளுக்காக என்னை நாடி வந்து தெரிவிக்கின்ற சோகக் கதைகள் எனது உள்ளத்தை பெரிதும் பாதித்துள்ளன. இந்த மக்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை ஆற்ற வேண்டுமென்ற அவாவிலேயே மலேசியப் பிரதம மந்திரி அனுப்பிய அழைப்பை நான் ஏற்றேன். அரசிடமும் வெளிநாட்டு இராஜ தந்திரிகளிடமும் மலேசியப் பிரதமரிடமும் எமது தேவைகளையே தொடர்ந்து முன்வைத்து வருகின்றேன். எனது நிலையில் டிலரான் பெரேரா இருந்திருப்பாரேயாகில் அவரின் கோரிக்கைகளும் நடவடிக்கைகளும் என்னைவிடப் பல மடங்கு கூடுதலாகவும் கூரியதாகவும் அமைந்திருப்பன என்பதில் ஐயமில்லை.

எனவே எம்மைக் குறைகூறி ஏற்கனவே நொந்துபோன தமிழ் மக்களின் வெறுப்புகளை மென்மேலும் சம்பாதித்துக் கொள்வதற்குப் பதிலாக உண்மை நிலையை உணர்ந்துகொண்டு இம் மக்களின் அடிப்படைத் தேவைகளையாவது நிறைவேற்றுவதற்கு கௌரவ டிலான் பெரேரா அவர்களும் அவர் சார்ந்த கட்சியின் அமைச்சுக்களும் முன்வரவேண்டும் என அன்பாக வேண்டுகோள் விடுக்கின்றேன்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-12-23#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.