Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கசப்பான உண்மை பாடம் கற்பிக்கட்டும்!!

Featured Replies

 
கசப்பான உண்மை பாடம் கற்பிக்கட்டும்!!
 

கசப்பான உண்மை பாடம் கற்பிக்கட்டும்!!

 

இலங்கை மத்­திய வங்கி, மேற்­படி மாவட்­டங்­களை உரி­ய­வாறு ஆராய்ந்­த­தன் பிர­கா­ரம் உரி­ய­த­ர­வு­க­ளின்­படி வறு­மை­யில் கூடிய மாவட்­டங்­க­ளாக அறி­வித்­துள்­ளது.

வறுமை என்­றால் என்ன? என்று கேள்வி எழுப்­பும் மனி­தர்­கள் வாழு­கின்ற இந்த மண்­ணில், நாளாந் தம் கொட்­டப்­ப­டும் உண­வு­களை மதிப்­பீடு செய்­வோ­மாக இருந்­தால் அவற்­றின் பெறு­மதி கோடி ரூபாய்­கள் பெறும் என்­பது எனது தனிப்­பட்ட அபிப்­பி­ரா­யம்.

வீடு இல்­லாது, வரு­மா­னம் இல்­லாது, தொழில் இல்­லாது, கழிப்­ப­றை­யில்­லாது, நில­மில்­லாது, உணவு இல்­லாது, உற­வில்­லாது, உறக்­க­மில்­லாது வாடு­கின்ற மக்­க­ளையே வறுமை என்ற நோய் வாட்டி வதைத்து கொடு­மைப்­ப­டுத்­து­கி­றது.

கண­வனை அல்­லது மனை­வியை அல்­லது இரு­வ­ரை­யுமோ அல்­லது பிள்­ளை­ க­ளையோ இழந்து நிற்­கின்ற குடும்­பங்­களை­யும் வறுமை விட்டு வைக்­க­வில்லை.

சில நோய்­கள்­கூட, அவற்­றின் சிகிச்­சைக்­கா­கச் சம்­பந்­தப்­பட்ட குடும்ப இருப்­பு­க­ளை­யெல்­லாம் துடைத்து வழித்து நடுத்­தெ­ரு­வில் நிற்­க­வைத்­து­வி­டும். மேலும் வாங்­கிய கட­னை­யும் உரிய வட்­டி­யை­யும் கட்ட முடி­யா­மல் வீடு காணி­யை­யெல்­லாம் ஈடு­வைத்து ஈற்­றிலே வறு­ மை­யின் உச்­சத்தை எட்­டிப் பிடித்த சில குடும்­பங்­க­ளும் இருக்­கவே செய்­கின்­றன.

இவை ­அனைத்­தை­யும் அனு­ப­விக்­கின்ற அல்­லது ஏற்­க­னவே சொல்­ல­பட்­ட­வற்­றில் ஒரு சில­வற்­றையோ அல்­லது பல­வற்­றையோ அடைந்­தி­ருப்­ப­வர்­க­ளும், வறு­மைப் பிடிக்­குள் சிக்­கியே உள்­ளார்­கள். இவ்­வாறு இனங்­கா­ணப்­பட்ட மக்­கள் தொகை­யி­டப்­பட்­டி­ருக்­கி­றார்­கள்.

வறுமை நிலைக்கு உட்­பட்ட பகு­தி­க­ளது விவ­ரம்

 

கிளி­நொச்சி 21 ஆயிரத்து 249 நபர் கள், முல்­லைத்­தீவு 12ஆயிரத்து 003 நபர்கள், மட்­டக்­க­ளப்பு 60 ஆயி ரத்து 912 நபர்கள், திரு­கோ­ண­ மலை 39 ஆயிரத்து 718 நபர்கள், யாழ்ப்­பா­ணத்­தில் 46ஆயிரத்து 052 நபர்கள் என்­கி­றது அந்­தப் பட்­டி­யல். இலங்­கை­யில் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளி­லேயே அதி­க­ளவு மக்­கள் வறுமை நிலைக்­குள் தள்­ளப்­பட்­டுள்­ளார்­கள்.

தனிப்­பட்ட வங்­கி­கள் போதிய அளவு கடன்­களை வழங்­கு­வ­த­னால் நடுத்­த­ர­வர்க்க மக்­க­ளும் பாமர மக்­க­ளும் பெற்ற கடனை மீளக் கட்­ட­மு­டி­யாத நிலை­யில் பஞ்­சம், பிணி, பட்­டி­னி­யால் வாடி­வ­தங்­கு­வது மட்­டு­மல்­லாது, குடும்­பங்­க­ ளும் அல்­லோ­ல­கல்­லோ­லப்­பட்டு நட்­டாற்­றில் விடப்­ப­டு ­கின்­றன. இவர்­க­ளுக்கு யார்­தான் பரி­கா­ரம் செய்­யப்­போ­கின்­றார்­கள்? இது விட யத்தில் மலை­ய­க­மும் கவ­ னிக்­கப்­ப­டல் வேண்­டும்.

இந்த நிலை­யி­லி­ருந்து மீளும் வழி

நொந்­து­போன குடும்­பங்­கள் நிம்­ம­தி­யா­க­வும், நீடித்த வாழ்­வு­ட­னும், நிரந்­த­ர­மா­க­வும், பாது­காப்­பா­க­வும் வாழ்­வ­தற்­கான சொந்­த­வீடு முத­லில் அமைய வேண்­டும். அமைத்­துக் கொடுப்­பது அர­சி­னது கட­மை­யா­கும்.
தேர்­த­லில் நிற்­ப­வர்­கள் தத்­த­மது வீடு­க­ளை­யும், வச­தி­க­ளை­யும், வாய்ப்­புக்­க­ளை­யும், வாக­னங்­க­ளை­யும் பெருக்­கு­வதை இனி­மே­லா­வது விடுத்து, ஒரு லட்­சத்து 79 ஆயி ரத்து 934நபர்களுடைய வறுமை நிலையை அடி­யோடு விரட்­டப் பாடு­பட்­டே­யாக வேண்­டும்.

எமது கண்­ணுக்­கேற்­ற­தும், எமது கட­லுக்கு ஏற்­ற­து­மான சிறி­ய­ரக, நடுத்­தர, உயர் தரத்­தி­லான தொழிற்­சா­லை­களை நிறு­வு­வ­தற்கு ஏற்ற தொழில்­நுட்ப வசதி வாய்ப்­புக்­க­ளைப் பிற நாடு­க­ளி­லி­ருந்து பெற்­றுக் கொடுக்க அரசு ஆவன புரி­தல் வேண்­டும். இதற்­காக இல­கு­முறை கடன் வச­தி­கள் செய்து கொடுப்­பது மிக அவ­சி­யம்.

 

அதி வணக்­கத்­துக்­கு­ரிய சுவாமி ஞானப்­பி­ர­காச அடி­க­ளார், வட மாகாண இளை­ஞர்­க­ளுக்­காக தொழிற்­சா­லை­களை நிறு­வித் தரு மாறு கனடா நாட்டு அரசிடம் முன்னர் உரத்­துக் குரல் கொடுத்­தது போல், மக்­கள் பிர­தி ­நி­தி­க­ளும் வெளி­நா­டு­க­ளில் ஓங்­கிக் குரல் கொடுக்க வேண்டும்.

வட மாகா­ணத்­துக்கு இப்­போ­தைய தேவை வறுமை ஒழிப்­புக்­கான வாழ்­வா­தாரத் தேைவக­ளும், ஐம்­ப­தி­னா­யி­ரத்­துக்கு மேற்­பட்ட இளை­ஞர்­க­ளுக்­கான வேலை­வாய்ப்­பு­க­ளு­மா­கும். இதை விடுத்­துக் கோயில் களைப் புதி­தா­கக் கட்­டு­வ­தும், கோபு­ரங்­கள் புதிது புதி­தா­கக் கட்­டு­வ­தும் இறை­வ­னுக்கு விருப்­பம் என்­றால் நடக்­கட்­டும்.

சாமிக்கு விருப்­பம் என்­று­ தானே வேள்­வி­யும் நடந்து விருந்­தும் நடந்­தது. அன்­ன­தா­னம் இந்த ஒரு லட்­சத்து 79 ஆயிரத்து 934 நபர்க ளுக்குக் கிடைக்க வழி­பு­ரிந்­தால் பெரும் புண்­ணி­ய­மாக இருக்­கும்.

வறு­மைக் கோட்­டுக்­குள் இருப்­ப­வர்­க­ளுக்கு மட்­டும் அன்­ன­தா­னம் என்­றால், வசதியான­வர்­கள் ஒரு போதும் வர­வே­மாட்­டார்­கள். இங்கு வழம்­மாறி, வச­தி­யா­ன­வர்­க­ளும், விலா­ச­தா­ர­ரும் பந்­திக்கு முந்­தி­வி­டு ­வார்­கள். அடே­யப்பா! சில பரி­ச­ளிப்பு விழாக்­க­ளி­லும், ஒரு சில மணி விழாக்களிலும் உணவு விட­யம்­தான் மாண­வர்­க­ளை­யும் ஆசி­ரி­யர்­க­ளை­யும் சிப்­பிலி ஆட்­டு­விக்­கும். கட­மை­யைச் சரி­வர இயக்­க­வும் , படைக்­க­வும், தெரி­யா­த­வர்­களே உணவு விட­யத்­தில் அதீத சாதனை படைப்­பார்­கள்.

 

எனவே மாண­வர்­க­ளில் எத்­தனைபேர் வறு­மைக் கோட்­டுக்­குள் இருக்­கி­றார்­கள் என்­ப­தைப் புரி­யாத முகா­மைத்­து­வங்­க­ ளும் இருக்­கவே செய்­கின்­றன.  நிலபாவாடை விரிப்பு ஒருவித கொண்­டாட்­டம், பாண்ட் வாத்­திய அணி­வ­குப்பு ஒரு­பு­றம், பெண்­கள் மட்­டும் பங்­கு­பற்­றும் அணி வகுப்பு ஒரு புறம், இவற்­றுக்கு நடு­வில் கதா­நா­ய­கர்­கள் வரும் அழகு கொள்ளை அழகு. இவை­யெல்­லாமே போலி­யானவையே.

போலித்­த­னங்­க­ளில்  மூழ்­கா­தி­ருப்­போம்

போலித்­த­னங்­க­ளும், பொய்­மைத்­த­னங்­க­ளும் நிலை­யில்­லாத மதிப் பளிப்புக்களும், உச்­ச­மான நாக­ரீ­கங்­க­ளும், ஊழல் மிகுந்த நிர்­வா­கங்­க­ ளும் சூட்­சு­ம­மான கையூட்­டல்­க­ளும், குழி பறிக்­கும் விந்­தை­க­ளும், வீட்டு வருத்­தம் பார்க்­கா­மல் நாட்டு வருத்­தம் பார்த்து வீட்­டையே இழக்­கும் வீட்­டுச் சந்­நி­யா­சி­க­ளும், போலிச் சாமி­யார்­மா­ரும் இருக்­கும் வரை வறு­மையை ஒழிப்­பது மிக வும் கடி­னமே.

உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் மக்­க­ளது வாழ்­வுக்கு வழி சமைக்க வேண்­டும்

உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­தல்­கள் மக்­களை வாட்­டு­வ­ன­வாக அமைந்து வறு­மைக்­குள் மேலும் மேலும் தள்ளி விடா­மல், சுமார் இரண்டு லட்­சம் மக்­க­ளு­டைய வயிற்­றுக்­கும், வாழ்­வுக்­கும், வதி­வி­டத்­திற்­கும் வர­வுக்­கும் வழி­ச­மைக்க வேண்­டும் என்­பதே இந்த மண்­ணின் வேணவாவாகும்.

உங்­கள் பரப்­புரை எல்­லாம் வறு­மையை வெல்­வ­தாக அமை­யட்­டும். மேடைப் பேச்சு விடிந்­தால் போய்ச்­சுது என்­றில்­லா­மல் பாமர மக்­க­ளுக்­குப் பய­னா­கட்­டும்.

http://newuthayan.com/story/56969.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.