Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடு முன்னேற சிறப்பான அரசமைப்பு அமைவது அவசியம்!!

Featured Replies

 
நாடு முன்னேற சிறப்பான  அரசமைப்பு அமைவது அவசியம்!!
 
 

நாடு முன்னேற சிறப்பான அரசமைப்பு அமைவது அவசியம்!!

 
 

அர­ச­மைப்பு என்­பது ஒரு நாட்­டின் முது­கெ­லும் பாக வர்­ணிக்­கப்­ப­டும் ஒரு கட்­ட­மைப்பு. அது ஒரு புனித ஏடு என்று கூடக் கூற­லாம். அதன் உள்­ள­டக்­கங்­கள், சட்­டங்­கள், நிய­தி­கள் என்­பவை ஒரு நாட்­டின் இறை­யாண்­மையை ,ஐக்­கி­யத்தை,அர­சி­யலை அன்­னி­யோன்­னி­யத்தை இனங்­க­ளின் ஒன்­று­மையை எடுத்­தி­யம்­பும் ஏடா­கும்.

அது அந் நாட்­டின் பொரு­ளா­தா­ரம் மற்­றும் வெளி­யு­ற­வுக் கொள்­கை­களை தீர்­மா­னிக்­கும் முது­கெ­லும் பா­க­வும் திகழ்­கி­றது.

ஒரு நாட்­டின் அர­ச­மைப்­புக்­கும் அந்த நாட்­டின் பொரு­ளா­தா­ர வளர்ச்சி ,அமைதி என்­ப­ன­வற்­றுக்­கும் நேர­டி­யா­ன­தும் மறை­மு­க­ மா­ன­து­மான பெரும் தொடர்­பு­கள் இருக்­கின்­றன.

ஏனெ­னில் ஒரு நாட்­டில் பல இனங்­கள் வாழ்­கின்­ற­போது அந்த இனங்­க­ளைச் சம­மாக மதித்து அந்த நாட்­டின் சகல சட்ட உரி­மை­க­ளை­யும் அனு­ப­விக்­கும் உரித்­து­டை­ய­வர்­க­ளாக ஒவ்­வொரு இன­மும் அமை­யும்­போதே, அந்த நாடு வேற்­று மைகள் இல்­லாத, இனப்­பி­ரச் சினை­கள் இல்­லாத அமை­தி­யான நாடாக, பொரு­ளா­தா­ரத்­தில் பெரும் முன்­னேற்­றப் படி­களை எட்­டும் நாடா­க­ அமை­யும்.

அத்­த­கைய சமத்­து­வம், இன ஒற்­றுமை இல்­லா­து­வி­டின், நாட்­டின் அமைதி குலைந்து, பொரு­ளா­தார வளங்­கள் அழிவடைய நேரும். அண்டை நாடு­கள் அந்த நாட்­டின் அர­சி­ய­லில் மூக்கை நுழைக்­கும் நிலைக்கு தள்­ளப்­பட்டு, நாடு உறுதி யற்ற பாதை­யில் தள்­ளா­டிப் பய­ணிக்­கும்.

ஒரு நாட்­டின் முன்­னேற்­றத்­துக்கு
பொருத்­த­மான அர­ச­மைப்பு அவ­சி­யம்

இவை­யெல்­லாம் உலக நாடு­க­ளில் ஆங்­காங்கே நடை­பெ­று­வ­தாக அமை­கின்­றன. வளர்ச்சி அடைந்த நாடு­க­ளின் வர­லாற்­றை­யும் அர­ச­மைப்­பை­யும் தெளி­வா­கத் தெரிந்­து­கொள்­வ­தன் மூலமே , எமது நாட்­டின் நில­மை­யை­யும் எமது நாட்­டைப் போன்ற வேறு நாடு­க­ளின் நிலை­மை­யும் புரிந்­து ­கொள்ள இய­லும்.

பெரும்­பா­லும் இலங்கை போன்ற வளர்ச்­சி­ய­டைந்து வரும் நாடு­க­ளில், பெரும் பிரச்­சி­னை­யாக இருப்­பது சம உரிமை, சம அந்­தஸ்து வழங்­கப்­ப­டாத அர­ச­மைப்­புச் சட்­டங்­கள் பயன்­பாட்­டில் இருப்­ப­தே­யா­கும். அத­னால்­தான் அவை வளர்ச்­சி­ய­டைந்­து­வ­ரும் நாடு­க­ளாக மட்­டுமே இன்­று­வரை இருந்து வரு­கின்­றன.

இந்து சமுத்­தி­ரத்­தின் முத்­தென விளிக்­கப்­பட்ட இலங்கை, இன்று இந்து சமுத்­தி­ரத்­தின் மத்­தி­யில் விழி பிதுங்கி அழிந்­தி­ருப்­ப­தற்­கான சூட்­சு­மம் எது­வெ­னத் தேடி­னால், அதன் விடை அர­ச­மைப்­புச் சட்­ட­மாக மட்­டும்­தான் இருக்­கும்.

 

இலங்­கை­யில் வெள்­ளை­யர் ஆட்­சி­ யின் பின்னர், அனைத்து இன, மதக் குழு­மங்­க­ளுக்­கும் சம உரிமை அந்­தஸ்து வழங்­கி­யி­ருந்­தால் நாடு பற்றி எரிந்­தி­ருக்­காது. தமி­ழர் என்ற இனம் இங்கு ஆயு­தத்தை ஏந்­தி­யிருக்க மாட்­டாது. மாறாக இலங்­கை­யின் சுதந்­தி­ர­தின படை ஊர்­வ­லத்­தில் தமிழ் மக்­க­ளது படைப் பிரி­வு­க­ளும் நவீன ஆயு­த­மேந்தி அணி­வ­குத்­தி­ருந்­தி­ருப்­பார்­கள்.

அன்­றைய அர­ச­மைப்பு சிறப்­பாக இருந்­தி­ருந்­தால், இன்று இலங்கை என்­பது உலக வல்­ல­ரசு களின் ஒரு அங்­க­மாக இருந்­தி­ருக்­கும். ஆனால் எல்­லா­முமே தலை­கீ­ழாகி மாற விட்­டி­ருக்­கின்­றன வர­லாற்­றுப் பிழை­க­ளால்.

வெள்­ளை­ய­ரால்கூட அவ்­வப்­போது அதி­கா­ரங்­க­ளைப் பிரித்து வழங்­கு­வ­தற்­கான மனிங், டொன­மூர், சோல்­பரி என காலத்­துக்­கேற்­றாற்போல் அர­ச­மைப்­புக்­கள் சீர் செய்து பிரச்­சி­னை­கள் சரி செய்­யப்­பட்­டமை வர­லா­று.

ஆனால் இலங்கை பெய­ர­ள­வில் சுதந்­தி­ரம் பெற்ற பின்­னர் சிங்­க­ள­வ­ர்களிடம் அதி­கா­ரங்­கள் குவிக்­கப் பட்­ட­ த­னால், நாடு அத­ளல பாதா­ளத்­துக்­குள் அடி­யெ­டுத்து வைத்­தது.இனப்­பி­ரச்­ச­னை­யாக உரு­வெ­டுத்து, பின்­னர் நடந்­த­வற்றை உங்களுக்குச் சொல்­லிப் புரிய வேண்டிய அவ­சி­யம் இல்லை.

புதிய அர­ச­மைப்பு முயற்சி 
வெற்­றி­ய­ளிக்­குமா?

இன்று அவ்­வா­றா­ன­தொரு வர­லாற்­றுக் கால­கட்­டத்­தில் வந்து நிற்­கி­றது இலங்கை. அர­ச­மைப்­புச் சீர்­தி­ருத்­தம் என்­னும் தனது முது­கெ­ லும்பை நிமிர்த்த வைத்­தி­யம் செய்­கி­றது. ஆனால் அந்த வைத்­தி­யம் வெற்­றி­ய­ளிக்­குமா? என்ற கேள்வி அனைத்­துத் தரப்­பி­ட­மும் இருக்­கி­றது.

இலங்கை கடந்து வந்த கசப்­பான பாதை­க­ளை­யும் அனு­ப­வங்­க­ளை­யும் தொலைத்­துத் தலை­மு­ழுகி, நாட்டை அபி­வி­ருத்­திப் பாதை­யில் இட்டு செல்ல தமி­ழர்­க­ளுக்கு ஏதா­வது கொடுக்க வேண்­டும் என்­பதை வர­வேற்­றா­லும் , ஏதா­வ­தைக் கொடுப்­ப­தற்கு அப்­பால் அவர்­கள் விரும்­பி­ய­வற்றை கொடுத்­தாலே நாடு வளர்ச்சிப்­பா­தை­யில் செல்­லும். பகை­மை­கள் வேற்­று­மை­கள் மறைந்து போகும்.

ஆனால் அதற்கு நிறை­வேற்­றப்­ப­ட­ வுள்ள புதிய அர­ச­மைப்பு வழி வகுக்­குமா? அர­ச­மைப்பு வரை­யும் போதே கூட்­டாட்சி என்ற வார்த்தை சிங்­க­ளத் தரப்­புக்கு வேப்­பங்­கா­யா­கவே இருந்து வந்­துள்­ளது. விடு­த­லைப் புலி­கள் காலத்­தில் கூட்­டாட்சி முறையை வழங்கத் தயா­ரா­க­வி­ருந்த அரச தரப்பு இப்­போது கூட்­டாட்சி என்­பதை ஏன் உச்­ச­ரிக்­கப்­ப­டக் கூடாத வார்த்­தை­யா­கப் பார்க்­கி­றது?

 

கூட்­டாட்சி, ஏக்­கிய ராச்­சிய 
சொற்­ப­தங்­க­ளில் குழப்­பம்

கூட்­டாட்சி என்ற வார்த்தை அர­ச­மைப்பு மாற்­றத்­துக்கே வேட்டு வைத்­து­வி­டும் என்­ப­தால், அரசு கூட்­டாட்சி என்­பதை உச்­ச­ரிப்ப தைத் தவிர்க்க முன்­வந்­தது. அத­னைத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பும் தனது தேர்­தல் விஞ்­ஞா­பன பரப்­புரை மர­பி­லி­ருந்து விலகி ஏற்­கத் தலைப்­பட்­டது.

வார்த்தை தானா­கவே வாதம் ஆக, வார்த்­தையை மறைப்­போம் என்ற ‘போர்­முடா’ முக்கோண மாய உத்­தியைப் பயன்­ப­டுத்­தி­னர்.கூட்­டாட்சி என்­ப­தற்­குப் பதி­லாக ‘ஒற்­றை­யாட்சி’ என்ற பெயர் பொருத்­தம் பெற, அதற்­கும் கருத்து வேறு­பா­டுகள் வலுப்­பெற ‘‘ஏக்­கிய ராச்­சிய’ என்ற அடிக்­கோ­டிட்டு புது அர்த்­தம் புகுத்­தப்­பட்­டது.

உண்­மை­யில் அர­ச­மைப்­பில் அனைத்­துத் தரப்­புக்­க­ளும் ஏற்­றுக் கொண்ட ஒப்­பந்­த­மா­கவே வார்த்­தைப் பிர­யோ­கங்­கள் அமையவேண்­டும். ஒரு வார்த்­தைப் பிர­யோ­கத்­தைக் கூட ஏற்­றுக் கொள்­ளாத இனத்­தி­ட­மி­ருந்து, எவ்­வாறு உரி­மை­க­ளைப் பெற்­றுக் கொள்­வ­தென்ற பெரும் கேள்வி இங்கு தொக்கி நிற்­கின்­றது. பெரும்­பான்­மை­யி­னம், வார்த்­தை­யில் கூட நல்­லி­ணக்­கம் புரிந்­து­ணர்வு பெறா­த­போது, இன நல்­லி­ணக்­கம் எவ்­வாறு சாத்­தி­ய­மா­கும் என்­பது மிகப்­பெ­ரி­ய­தொரு கேள்­வி­யா­கும்.

தமி­ழில் ஒரு விளக்­க­மும், சிங்­க­ளத்­தில் ஒரு வார்த்­தைப் பிர­யோ­க­ மும் இருப்­பது எவ்­வா­றான மோச­மான ஏமாற்று விளை­வு­களை ஏற்­ப­டுத்­தும் என்­பதை நிரூ­பிக்க, வர­லாற்­றைப் புரட்­டிப் பார்ப்­ப­தற்­காக இலங்கை வர­லாற்­றில் உங்­க­ளைப் பின்­னோக்­கிக் கூட்­டிச் செல்­கி­றேன். 1

1638 ஆம் ஆண்­டில் இலங்­கையை ஒல்­லாந்­தர் ஆட்சி செய்­த­போது ஒல்­லாந்­தப் பிர­தானி வெக்ர வல்லுக்கும் இரண்டாம் இராசசிங்க மன்னனுக்கும் இடையில் மேற் கொள்ளப்பட்ட ‘வெ௧்­ர­வல் ’ இணக்­கப்­பாட்டு ஒப்­பந்­தம்’ ஒல்­லாந்த மொழி­யில் எழு­தப்­பட்­டது. அதன் கருத்­து­ரு­வாக்­கம் சிங்­கள மொழி­யில் வழங்­கப்­பட்­டது. ஆனால் ஒல்­லாந்த மொழி­யில் இருந்த ஒப்­பந்­தத்­தில் இருந்த விட­யங்­கள் அனைத்­தும் சிங்­கள மொழி கருத்­து­ரு­வாக்­கத்­தில், மொழி­பெ­யர்ப்­பில் இடம்­பெற்று இருக்­க­ வில்லை. அத­னால் நில­மை­கள் தலை­கீ­ழா­கின.

 

அவ்­வா­றான குழப்பம் போன்­ற­தொரு நில­மை­யில் தான் இன்­றைய அர­ச­மைப்பு இணக்­கப்­பா­டும். சிங்­க­ளத்­தில் ‘ஏக்­கிய ராச்­சிய’ என்ற சொற்­ப­த­மும், தமி­ழில் வேறொரு சொற்­ப­த­மும் வர­லாற்­றுத் தவ­று­களை மீள­வும் உரு­வாக்­கா­மல்­விட்­டால் அது சிறப்­பா­னது.

அதற்­கப்­பால் இத்த கைய இணக்கப்பட்டு, சம­உ­ரிமை பெறு­வ­தற்­கான அர­ச­மைப்பு வரை­பில் பெளத்­தத்­துக்கு முன்­னு­ரிமை என்­பது பல சம­யத்­த­வர் வாழும் இலங்­கை­யில் எவ்­வாறு நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­தப் போகி­றது என்­பதைப் பொறுத்­தி­ருந்துதான் பார்க்க வேண்­டும். இந்­துத்­து­வம் பேசும் இந்­தி­யாவே (பேரி­லேயே இந்­து­வைக் கொண்ட நாடு) மதச்­சார்­பற்ற நாடாகத் தன்னை அறி­வித்து முன்­னே­றிச் செல்­கி­றது.

நிறை­வேற்று 
அதி­கார ஒழிப்பு 
முயற்சி என்­ன­வாச்சு?

அதை­விட நிறை­வேற்று அதி­கா­ரத்தை ஒழிக்­கத் தலைப்­ப­டும் அர­ச­மைப்பு, ஏன் தனது நாட்டு அரச தலை­வ­ராக ஒருவர் வரு­வ­தானால், அவர் கட்­டா­ய­மாக மதத்­தால் பெளத்­த­னா­க­வும், இனத்­தால் சிங்­க­ள­வ­னா­க­வும் இருக்க வேண்­டும் என்­கி­றது? இது அடிப்­ப­டை­வா­தத்­தி­லேயே பிழை என்­றா­கி­றதே? கறுப்­பி­னத்தை அடக்­கி­யாண்ட அமெ­ரிக்க வல்­ல­ரசே, இன நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்தி கறுப்­பி­னத்­தைச் சேர்ந்த அரச தலை­வ­ரை­யும் (ஒபாமா) கண்­டு­விட்­டது.

ஆனால் இலங்­கையோ தனது பெளத்த சிங்­கள கடுங்­கோட்­பாட்­டி­லி­ருந்து இம்­மி­ய­ள­வும் வில­கத் தயா­ரா­யில்­லையே? ஆக, இலங்கை அர­ச­மைப்பு எனும் முது­கெ­லும்பிலுள்ள நோய்க்கு அதன் ஒரு பகு­தி­யில் மட்­டும் வைத்­தி­யம் செய்­வ­தால் குண­மா­கி­வி­டப் போவ­தில்லை.

மாறாக முது­கெ­லும்­புக் கூட்­டையே கழற்­றி­யெ­டுத்து கீழி­ருந்து மேலாக ஒழுங்­கு­மு­றை­யில் சரி­யா­கப் பொருத்தி வந்­தாலே, இலங்­கை­யில் நிலை­யான நல்­லி­ணக்­க­மும், சமத்­து­வ­மும் ஏற்பட்டு, நாடு சுபீட்­ச­மான பாதை­யில் முன்­னேற வாய்ப்பு அமையும். இன நல்­லி­ணக்­கம் ஏற்­பட்­டாலே நாட்டு வளர்ச்­சி­யில், அதி­கா­ரத்­தில், பொரு­ளா­தா­ரத்­தில், தமி­ழர்­க­ளும் பங்­கெ­டுத்து நாட்டை முன்­னேற்­றப் பாதை­யில் இட்­டுச் செல்ல முடி­யும். இல்­லை­யேல், இன்­று­வ­ரை­யுள்ள இலங்­கை­யின் கடன்­தொ­கை­யான 12 டில்­லி­யன் அமெ­ரிக்க டொலர் இன்­னும் பல மடங்குகளாகலாம்.

http://newuthayan.com/story/57234.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.