Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெள்ளை வேனில் கடத்­தப்­பட்­ட­வர்கள் 'கன்சைட்' முகாமில் வதைக்கப்பட்டனரா.?

Featured Replies

வெள்ளை வேனில் கடத்­தப்­பட்­ட­வர்கள் 'கன்சைட்' முகாமில் வதைக்கப்பட்டனரா.?

 

 
 

கொழும்பு மற்றும் அதனை அண்­டிய பகு­தி­களில் இடம்­பெற்ற வெள்ளை வேன் கடத்தல் சம்­ப­வங்கள், காணாமல் ஆக்­கப்­பட்ட சம்­ப­வங்­க­ளுடன் முன்னாள் கடற்­படைத் தள­பதி வசந்த கரன்­னா­கொட, முன்னாள் கடற்­படை பேச்­சாளர் டி.கே.பி. தஸ­நா­யக்க மற்றும் தற்­போது மரண தண்­டனை கைதி­யாக உள்ள முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குண­வர்­தன ஆகியோர் ஒன்­றி­ணைந்து செயற்­பட்­டுள்­ள­மையை குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் விசா­ர­ணை­களில் வெளிப்ப­டுத்­தி ­கொண்­டுள்­ளனர்.

1280x720-2xx.jpg

கொழும்பு மற்றும் அதனை அண்­டிய பகு­தி­களில் கடத்தி காணாமல் ஆக்­கப்­பட்ட 5 மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேர், கேகா­லையைச் சேர்ந்த சாந்த சம­ர­விக்­ரம, இப்­பா­க­மு­வையைச் சேர்ந்த பிரதீப் ஆகி­யோரின் கடத்­தல்கள் தொ­டர்பில் வெளிப்­ப­டுத்­தப்பட்­டுள்ள தக­வல்­க­ளுக்கு அமை­வா­கவே குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் இம்­மூ­வ­ருக்கும் இடை­யி­லான தொடர்பு குறித்து மேல­திக விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ளனர். அத்­துடன் இவ்­வாறு கடத்­தப்­பட்­ட­வர்கள் கன்சைட் எனும் நிலத்­தடி சிறைக் கூடங்­க­ளி­லேயே தடுத்து வைக்­கப்பட்டு காணாமல் ஆக்­கப்­பட்­டி­ருக்­கலாம் எனவும் குற்றப் புல­னா­ய்வுப் பிரிவு சந்தேகிக்கின்றது.

குறிப்­பாக 5 மாணவர் கடத்தல் விவ­கா­ரத்தில் கடற்படை முன்னாள் ஊடகப் பேச்­சாளர் தஸ­நா­யக்க, முன்னாள் தள­பதி கரன்னாகொட ஆகியோர் பொறுப்புக் கூற­வேண்டும் என்­ப­தற்­கான சான்­று­களை குற்றப் புல­ன­ய்வுப் பிரி­வினர் ஏற்­க­னவே கண்­ட­றிந்­தி­ருந்­தனர். இந் நிலையில் கேகாலை மேல் நீதி­மன்றில் இடம்­பெறும் வழக்­கொன்றின் பிர­தி­வா­தி­யான சாந்த சம­ர­விக்­ரம, இப்­பா­க­முவ பகு­தியை சேர்ந்த பிரதீப் ஆகியோர் கன்சைட் முகாமில் இருந்­த­மைக்­கான ஆதா­ரங்­களை குற்றப் புல­ன­ாய்வுப் பிரிவு கண்டு­பி­டித்து கோட்டை நீதி­வா­னுக்கு அறிக்­கையும் சமர்ப்­பித்­துள்­ளனர்.

இதில் கேகாலை சாந்த சம­ர­விக்­ரம, அலவ்வ பொலிஸார் கைது செய்­யப்பட்டு வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெறும்போது தப்­பி­யோ­டி­ய­தாக பொலிஸ் தரப்பில் அப்­போது கூறப்­பட்­டது. எனினும் தற்­போது காணாமல் போயுள்ள சாந்த எவ்­வாறு வைத்­தி­ய­சா­லையில் இருந்து தப்பி, அதி பாது­க­ப்பு வல­ய­மான கன்சைட் நிலத்­தடி முகா­முக்குள் வந்தார் என கேள்வி எழுப்பும் குற்றப் புல­னா­ய்வுப் பிரிவு அது தொடர்பில் விசா­ரணை செய்­கின்­றது.

 அத்­துடன் கன்சைட் முகாமில் இருந்­த­தாக கூறப்­படும் தற்­போதும் காணாமல் போயுள்ள பிரதீப் என்­பவர் யார் என்­பதை அண்­மையில் குற்றப் புல­னா­ய்வுப் பிரிவு கண்­ட­றிந்­துள்­ளது. 

இப்­பா­க­முவ பிரதீப் என அறி­யப்­பட்ட குறித்த நபர், கொக­ரல்ல பொலிஸ் பிரிவில் தேவ­வ­ரம, யக்­கல இப்­பா­க­முவ எனும் முக­வ­ரியில் வசித்த விதா­ரன ஆரச்­சிகே தொன் பிரதீப் நிஷாந்த என்­பதை குற்றப் புல­னா­ய்வுப் பிரிவு கண்­டு­பி­டித்­துள்­ளது.

அவ­ர் காணாமல் போனமை தொடர்பில் கொக­ரல்ல பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு உள்ள நிலையில், ஜீப் வண்­டியில் வந்­தோரால் அவர் கடத்திச் செல்­லப்பட்­ட­தாக அவ­ரது குடும்­பத்­தினர் குற்றப் புல­னா­ய்வுப் பிரி­வுக்கு வாக்கு மூலம் வழங்­கி­யுள்­ளனர்.

அளவ்வை, கொக­ரல்ல பொலிஸ் நிலை­யங்கள் குரு­ணாகல் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் காரி­யா­ல­யத்­துக்கு உட்­பட்டு நிர்­வாகம் செய்­யப்­பட்ட நிலையில் இக்­க­டத்­தல்கள் இடம்­பெற்ற போது, முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குண­வர்­த­னவே குரு­ணாகல் மாவட்­டத்­துக்கு பொறுப்­பான பொலிஸ் பிர­தா­னி­யாக செயற்­பட்­டுள்ளார்.

அத்­துடன் 5 மாணவர் கடத்தல் விவ­காரம் வெளி­ப்ப­டுத்­தப்­பட கார­ண­மாக இருந்த, முன்னாள் கடற்­படை தள­பதி வசந்த கரன்னாகொட தனது தனிப்­பட்ட விவ­காரம் தொடர்பில் லெப்­டினன் கொமாண்டர் சம்பத் முன­சிங்­க­வுக்கு எதி­ராக முதலில் முறை­யிட்­டதும் வாஸ் குணவர்­த­ன­வி­ட­மாகும். பின்­ன­ரேயே அது பொலிஸ் மா அதி­பரால் சி.ஐ.டி.க்கு மாற்­றப்­பட்­டி­ருந்­தது.

இந் நிலை­யி­லேயே கரன்­னா­கொட, தஸ­நா­யக்க மற்றும் வாஸ் குண­வர்­தன ஆகியோர் ஒன்­றாக இந்த வெள்ளை வேன் கடத்­தல்கள் தொடர்பில் செயற்­பட்­ட­னரா, அவ்­வாறு வெள்ளை வேனில் கடத்­தப்­ப­டுவோர் கன்சைட்  நிலத்­தடி முகாமிம் தடுத்து வைக்­கப்­பட்டு காணாமல் ஆக்­கப்பட்­டுள்­ள­தாக குற்றப் புல­ன­ாய்வுப் பிரிவு சந்தேகிக்கின்றது.

இந் நிலையில் இது குறித்த மேல­திக விசாரணைகளை, குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன, பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுதத் நாகஹமுல்ல ஆகியோரின் மேற்பார்வையில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகரவின் வழி நடத்தலின் கூட்டுக் கொள்ளை பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா தலைமையிலான குழுவினர் முன் னெடுத்துள்ளனர்.

http://www.virakesari.lk/article/28612

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.