Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரணில் – -மைத்திரி கூட்டணி மஹிந்தவை காப்பாற்றுகிறது

Featured Replies

ரணில் – -மைத்திரி கூட்டணி மஹிந்தவை காப்பாற்றுகிறது

anura-bbd2f75af5e940c1b3c750a0ac41a0486d22feca.jpg

 

உள்ளூராட்சி அதிகாரத்தை தாருங்கள் மக்களுக்கு சேவையாற்றி காட்டுகின்றோம் என்கிறார் அனுரகுமார  
(ஆர்.யசி)

கள்வர்களை தண்டிப்பதாக வாக்குறுதி வழங்கி வாக்குப்பெற்ற அரசாங்கம் இன்று அதே கள்வர்களுடன் இணைந்து நாட்டினை சூறையாடி வருகின்றது, ரணில்–மைத்திரி கூட்டணி மஹிந்த ராஜபக் ஷவை காப்பாற்றி வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின்  தலைவர் அனுரகுமார திசாநாயக குற்றஞ்சாட்டினார். 

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஜே.வி.பிக்கு அதிகாரத்தை கொடுங்கள் நாங்கள் மக்களுக்கு சேவையாற்றிக் காட்டுகின்றோம் எனவும் அவர் தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணியின் தேர்தல் பிரசார கூட்டம் நேற்று அகலியகொடை பிரதேசத்தில் இடம்பெற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

ஆட்சியில் உள்ள பிரதான இரண்டு கட்சிகளும் இன்று கள்வர்களை காப்பாற்றும் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிளவுபடக் கூடாது என்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னைய ஆட்சியாளர்களை காப்பாற்றி வருகின்றார். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மைத்திரிபால சிறிசேனவை அழிக்க திட்டம் தீட்டினார்கள் என அவரே தெரிவித்த நிலையில் இன்று அவர்களை காப்பாற்றவே முயற்சித்து வருகின்றார். மேலும் கடந்த 2015 ஆம் ஆண்டு தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஏன் மக்கள் வாக்களித்தனர். அப்போது அரசியல் மேடைகளில் பிரதமர் ரணில் விக்கிரமசியங்க கூறிய வாக்குறுதிகளே வாக்களிக்கக் காரணமாக அமைந்தன. கள்வர்களை பிடிப்பதாகவும், ஊழல் வாதிகளுக்கு தண்டனை வழங்குவதாகவும் அவர் கூறினார்.

 வாக்குறுதிகளை வழங்கி மூன்று ஆண்டுகள் ஆகியும் இன்றுவரை எந்தவொரு கள்வர்களையும் இவர்கள் பிடிக்கவில்லை. இன்று மஹிந்த ராஜபக்ஷவும் அவரது கூட்டணியுமே இதனை கேட்க ஆரம்பித்துவிட்டனர். கள்வர்களை பிடிக்காது அவர்களை பாதுகாக்கவே இந்த அரசாங்கம் முயற்சித்தது. கள்ளர்களை தண்டிக்க மக்கள் வாக்களித்த போது ஐக்கிய தேசியக் கட்சியினர் அலரிமாளிகையில் இருந்துகொண்டு மக்களின் சொத்துக்களை கொள்ளையடிக்க திட்டம் போட்டுகொண்டு இருந்தனர்.

ஆட்சி அமைத்து 50 நாட்களுக்குள் மத்திய வங்கியில் தமது களவை ஆரம்பித்தனர். நாட்டின் ஆட்சி அதிகாரத்தை கொடுத்த போது களவுகளை தடுக்காது கூட்டணி அமைத்து கொள்ளையடித்த நபர்களுக்கு இப்போது உள்ளூராட்சி தேர்தலில் அதிகாரத்தை வழங்கினால் என்னவாகும் என மக்கள் சிந்தித்துப்பார்க்க வேண்டும். இன்று ரணில் மைத்திரி கூட்டணி அரசாங்கமே மஹிந்த ராஜபக் ஷவை காப்பாற்றி வருகின்றது.

மறுமுனையில் தாமரை மொட்டு கட்சியினை எடுத்துக் கொண்டால் அவர்கள் எந்த வாக்குறுதியினை கொடுத்து தேர்தலின் மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்ள முடியும்? மஹிந்த ராஜபக் ஷ மேடையேறி களவுகளை தடுகின்றேன் என்று கூறினால் மக்கள் சிரிப்பார்கள். கள்வர்களே எவ்வாறு கலவை தடுக்க முடியும் என நினைப்பார்கள். இல்லாவிடில் கூட்டத்திற்கு வரும் மக்களே பஸில் பஸில் என கூச்சலிடுவார்கள். பொதுஜன முன்னணிக்கு வாக்களிக்காவிட்டால் நாடு பிரிபடும் என ஜி.எல்.பீரிஸ் தெரிவிக்கின்றார். நாட்டை காப்பாற்ற இவர்கள் நாட்டுப்பற்றாளர்களா? பொதுஜன முன்னணியில் உள்ள யார் நாட்டை நேசிக்கும் நபர்கள், அனைவருமே இனவாதத்தை கக்கும் நபர்கள்.

இவர்கள் ஜனாதிபதி தேர்தலில் கூறியதை சிந்தித்துப்பாருங்கள் , மஹிந்த ராஜபக் ஷ தேர்தலில் தோல்வி அடைந்தார் அவரை போர்க்குற்றதில் மின்சாரக்கதிரைக்கு கொண்டு செல்வர்கள் என கூறினார்கள். மஹிந்த ராஜபக் ஷ தோல்வியடைந்து மூன்று ஆண்டுகள் ஆகின்றது . ஆனால் மின்சாரக் கதிரை கதையும் இல்லை, போர்க்குற்ற கதையும் இல்லை. இவர்கள் வாய் திறந்தால் பொய்களையே கூறி வருகின்றனர்.

இந்த மூன்று கட்சிகளும் ஒன்றுடன் ஒன்று இரகசிய தொடர்புகளை பேணிவரும் கட்சிகளாகும். அனைவரும் ஒரு அணியாக செயற்பட்டு வருகின்றனர். மக்கள் மத்தியில் தாம் தனித்து உள்ளதாக கூறிக்கொண்டு கூட்டணி அமைத்து கொள்ளையடித்து வருகின்றனர். ஆகவே இவர்களுக்கு அதிகாரத்தை கொடுக்க வேண்டாம். மக்கள் விடுதலை முன்னணிக்கு மாகாணசபை அதிகாரங்களை தாருங்கள். நாங்கள் மக்களுக்கு சேவையாற்றுவதை செய்து காட்டுகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-12-26#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.