Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெறும் கண்­து­டைப்­புக்­காக மட்டும் விசா­ர­ணைகள் இடம்­பெ­றக்­கூ­டாது

Featured Replies

வெறும் கண்­து­டைப்­புக்­காக மட்டும் விசா­ர­ணைகள் இடம்­பெ­றக்­கூ­டாது

 

மக்­களின் உட­மை­க­ளுக்கும் அரச சொத்­துக்­க­ளுக்கும் இழப்­பினை ஏற்­ப­டுத்­திய சிறி­லங்கன் விமான சேவை, மிஹின் எயார் விமான சேவை என்­ப­வற்றில் இடம்­பெற்ற ஊழல் மோச­டிகள் குறித்து விசா­ர­ணை­களை மேற்­கொள்­வ­தற்­கான ஜனா­தி­பதி ஆணைக்­குழு எதிர்­வரும் ஜன­வரி மாதம் முதல் வாரத்தில் நிய­மிக்­கப்­படும் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அறி­வித்­துள்ளார்.

 ஊழல் மோசடி மற்றும் முறை­கே­டு­க­ளுக்கு எதி­ராக எந்­த­வொரு அர­சாங்­கமும் இது­வரை மேற்­கொண்­டி­ராத தீர்­மா­னங்­களை மேற்­கொண்­ட­துடன் எதிர்­கா­லத்தில் ஊழல் மோச­டிகள் மற்றும் முறை­கே­டு­க­ளுக்கு எதி­ராக கடு­மை­யான நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு ஒழுக்­க­மான அர­சியல் தலை­மை­மு­றை­யையும் தூய்­மை­யான தேசிய அர­சியல் இயக்­கத்­தையும் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கான பொறுப்­பினை நாம் நிறை­வேற்­று­கின்றோம்.

கடந்த காலத்தில் உள்­ளூ­ராட்சி நிறு­வ­னங்­களில் மோச­மான ஊழல் நிலை­மைகள் காணப்­பட்­ட­துடன் கொலை, துஷ்­பி­ர­யோ­கங்கள், போதைப்­பொருள் கடத்தல் மற்றும் அரச சொத்­துக்­களின் முறை­யற்ற பாவ­னையும் இடம்­பெற்று வந்­தன. எனவே எதிர்­வரும் தேர்தல் வெற்­றியின் பின்னர் உள்­ளூ­ராட்சி நிறு­வ­னங்­களில் புதிய மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­த­வுள்ளேன் என்றும் ஜனா­தி­பதி சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

கடு­வெல நகர வாராந்த சந்­தைக்­கட்­டட வளா­கத்தில் நேற்று முன்­தினம் இடம்­பெற்ற சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் மக்கள் சந்­திப்­பின்­போதே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இவ்­வாறு தெரி­வித்­துள்ளார். எதிர்­வரும் உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்தல் பிர­சா­ரத்­திற்­கான சுதந்­தி­ரக்­கட்­சியின் மக்கள் சந்­திப்­புக்­களில் ஒரு நிகழ்­வா­கவே இந்த கூட்டம் இடம்­பெற்­றி­ருந்­தது.

இத­னை­விட கடந்த சனிக்­கி­ழமை ஜனா­தி­பதி செய­ல­கத்தில் சுதந்­தி­ரக்­கட்­சியின் அமைப்­பா­ளர்­களை ஜனா­தி­பதி சந்­தித்து பேசி­யி­ருந்தார். இந்த சந்­திப்­பின்­போது ஊழல் மோச­டி­களை தடுப்­ப­தற்­காக விரி­வான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­படும் என்றும் சிறி­லங்கன் விமா­ன­சேவை, மிஹின் எயார் விமான சேவை ஆகி­ய­வற்றில் இடம்­பெற்ற ஊழல் மோச­டிகள் குறித்து விசா­ரணை நடத்த ஜனா­தி­பதி ஆணைக்­குழு அமைக்­கப்­படும் எனவும் ஜனா­தி­பதி உறுதி வழங்­கி­யி­ருந்தார்.

இத­னை­விட மத்­திய வங்­கியின் பிணை­முறி விவ­காரம் தொடர்­பி­லான ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்கை எதிர்­வரும் 31ஆம் திகதி தன்னிடம் கைய­ளிக்­கப்­படும் என்றும் அதற்­கேற்­ற­வ­கையில் பிணை முறி விவ­கா­ரத்தில் குற்­ற­வா­ளி­க­ளாக காணப்­ப­டு­ப­வர்­க­ளுக்கு எதி­ராக கடு­மை­யான நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்றும் ஜனா­தி­பதி இந்தக் கூட்­டத்­தின்­போது சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

கடந்த அர­சாங்க காலத்தில் பல்­வேறு ஊழல் மோச­டிகள் இடம்­பெற்­ற­தாக பர­வ­லான குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்­டி­ருந்­தன. இதன்­கா­ர­ண­மா­கவே கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் புதிய அர­சாங்­கத்தை உரு­வாக்கும் வகையில் மக்கள் வாக்­க­ளித்­தி­ருந்­தார்கள். கடந்த ஆட்­சிக்­கா­லத்தில் இடம்­பெற்ற ஊழல் மோச­டிகள், அதி­கார துஷ்­பி­ர­யோ­கங்கள் என்­பவை தொடர்பில் உரிய விசா­ரணை நடத்­தப்­படும் என்றும் இழைக்­கப்­பட்ட குற்­றங்­க­ளுக்கு எதி­ரா­கவும் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் எனவும் அன்று எதி­ர­ணி­யாக செயற்­பட்ட ஐக்­கிய தேசி­யக்­கட்சி உறு­தி­வ­ழங்­கி­யி­ருந்­தது. ஜனா­தி­பதி தேர்­த­லின்­போது பொது எதி­ரணி வேட்­பா­ள­ராக போட்­டி­யிட்ட மைத்­தி­ரி­பால சிறி­சேன இதற்­கான உறு­தி­மொ­ழி­யினை வழங்­கி­யி­ருந்தார்.

ஆனாலும் கடந்த ஆட்­சிக்­கா­லத்தில் இடம்­பெற்ற ஊழல் மோச­டிகள் தொடர்­பாக உரிய விசா­ரணை நடத்­தப்­ப­ட­வில்லை என்றும் குற்­ற­வா­ளி­களை தப்­பிக்கும் விதத்தில் செயற்­பா­டுகள் தொடர்­வ­தா­கவும் சுதந்­தி­ரக்­கட்­சியின் தரப்பில் தொடர்ந்தும் குற்­றம்­சாட்­டப்­பட்டு வரு­கின்­றது. முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் குடும்­பத்­தி­ன­ருக்கு எதி­ராக உரிய விசா­ர­ணைகள் நடத்­தப்­ப­ட­வில்லை. என்று அமைச்­ச­ரவைக் கூட்­டத்தின் போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அதி­ருப்தி தெரி­வித்தும் இருந்தார்.

இந்த நிலை­யில்தான் கடந்த ஆட்­சிக்­கா­லத்தின் போது சிறி­லங்கன் விமான சேவை மிஹின் எயார் விமா­ன­சேவை என்­ப­வற்றில் இடம்­பெற்ற ஊழல் மோச­டிகள் தொடர்பில் விசா­ரணை நடத்­து­வ­தற்கு ஆணைக்­கு­ழுவை அமைக்­க­வுள்­ள­தாக ஜனா­தி­பதி அறி­வித்­துள்ளார். கடந்த ஆட்­சிக்­கா­லத்­தின்­போது ஊழல் மோச­டிகள் நடத்­தப்­பட்­ட­தாக பகி­ரங்­க­மாக குற்­றம்­சாட்­டப்­பட்­ட­போ­திலும் அது­கு­றித்த விசா­ர­ணைகள் உரிய வகையில் நடத்­தப்­ப­ட­வில்லை. ஒரு­சில அர­சி­யல்­வா­திகள் கைது­செய்­யப்­பட்டு விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்ட பின்னர் பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்­ளனர். இந்த விட­யத்தில் சட்­டமா அதிபர் திணைக்­களம் உரிய வகையில் செயற்­ப­ட­வில்லை என்ற குற்­றச்­சாட்டும் எழுப்­பப்­ப­டு­கின்­றது.

அண்­மையில் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி நடத்­திய செய்­தி­யாளர் மாநாட்டில் கருத்து தெரி­வித்த அமைச்சர் மஹிந்த சம­ர­சிங்க இரா­ணுவத் தலை­மை­யகம் உட­ன­டி­யாக மாற்­றப்­பட்­டமை இரா­ணுவத் தலை­மை­ய­கத்தின் காணி ஷங்­ரில்லா நிறு­வ­னத்­திற்கு உரித்­து­ரிமை அடிப்­ப­டையில் வழங்­கி­யமை ஆகி­ய­வற்றின் பின்­ன­ணியில் பாரிய சூழ்ச்சி உள்­ள­தா­கவும் இது­கு­றித்து விசா­ர­ணை­களை ஆரம்­பிக்க நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு ஜனா­தி­பதி அமைச்­ச­ர­வையில் கோரினார். இரா­ணுவத் தலை­மை­ய­கத்­திற்கு தற்­போது வரு­ட­மொன்­றுக்கு 500 கோடி ரூபா வாடகை வழங்­க­வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டுள்­ள­தாக சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.

 முன்னர் இருந்த இரா­ணுவத் தலை­மை­ய­கத்தை அகற்றி தற்­போது 15 கட்­ட­டங்­களை வாட­கைக்கு பெற்று அதில் இரா­ணுவம் தமது நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றது. இதற்கு வரு­ட­மொன்­றுக்கு 500 கோடி ரூபா செல­வி­டப்­ப­டு­கின்­றது. முன்னர் இருந்த இரா­ணுவக் காணிக்கு 125 மில்­லியன் அமெ­ரிக்க டொலர் வழங்­கப்­பட்­டுள்­ளது. ஷங்­ரில்லா நிறு­வனம் இந்த நிதி­யினைக் கொடுத்து காணியை விலைக்கு வாங்­கி­யுள்­ளது. காணி உரித்­து­ரி­மை­யுடன் அந்த நிறு­வ­னத்­துக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. துறை­முக நகர் திட்­டத்தின் போதும் குறித்த சில நிலப்­ப­ரப்­புக்­களை சீனா­வுக்கு விற்கும் உடன்­ப­டிக்­கையை செய்­துள்­ளனர். எனவே இந்த விட­யங்கள் குறித்தும் விசா­ரணை நடத்­த­வேண்­டி­யுள்­ளது என்றும் அமைச்சர் மஹிந்த சம­ர­சிங்க தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

இதேபோல் எவன்காட் விவ­கா­ரத்­திலும் பெரு­ம­ளவு ஊழல் மோச­டிகள் இடம்­பெற்­ற­தாக குற்­றம்­சாட்­டப்­பட்­ட­போ­திலும் அது குறித்தும் உரிய விசா­ர­ணைகள் நடத்­தப்­ப­ட­வில்லை. இறுதி யுத்­தத்­தின்­போது விடு­தலைப் புலி­க­ளி­ட­மி­ருந்து கைப்­பற்­றப்­பட்ட தங்கம் தொடர்­பிலும் உரிய கணக்கு வழக்­குகள் காட்­டப்­ப­ட­வில்லை என்ற குற்­றச்­சாட்டும் எழுந்­தி­ருக்­கின்­றது.

எனவே, இவ்­வா­றான விட­யங்கள் தொடர்­பிலும் விசா­ர­ணை­களை நடத்­த­வேண்­டி­யது அவ­சி­ய­மா­க­வுள்­ளது. ஆனாலும் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியும் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியும் இணைந்து அமைத்­துள்ள நல்­லாட்­சியில் இத்­த­கைய ஊழல் மோச­டிகள் தொடர்­பான விசா­ர­ணைகள் முழுமை பெறாமை கவ­லைக்­கு­ரிய விட­ய­மா­கவே உள்­ளது. ஒருவர் மீது ஒருவர் குற்­றம்­சாட்­டிக்­கொண்டு விசா­ர­ணைகள் தள்­ளிப்­போ­டப்­ப­டு­வ­தா­கவே தெரி­கின்­றது.

இந்த நிலை­யில்தான் நல்­லாட்சி அர­சாங்கம் பத­வி­யேற்­றதன் பின்னர் மத்­தி வங்­கியபிணை முறி விவ­காரம் பெரும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யது. இந்த விடயம் குறித்­து ­வி­சா­ரணை நடத்­து­வ­தற்­காக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழு­வினை அமைத்து விசா­ர­ணைகள் இடம்­பெற்­றது. இந்த விசா­ரணை கார­ண­மாக நிதி அமைச்­ச­ரா­கவும், பின்னர் வெளி­வி­வ­கார அமைச்­ச­ரா­கவும் பதவி வகித்த ரவி கரு­ணா­நா­யக்க பதவி வில­க­வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டது. இதன் தொடர்ச்­சி­யாக ஐக்­கிய தேசி­யக்­கட்­சியன் முக்­கி­யஸ்­தர்­களும் அமைச்­சர்­க­ளான கபீர் ஹாஸிம், மலிக் சம­ர­விக்­கி­ரம ஆகியோர் ஆணைக்­குழு முன் சாட்­சி­ய­ம­ளித்­தி­ருந்­தனர். இதனை அடுத்து பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் சாட்­சி­ய­ம­ளிக்கும் நிலைமை ஏற்­பட்­டி­ருந்­தது.

இந்த விசா­ரணை ஆணைக்­கு­ழுவின் அறிக்­கை­யா­னது எதிர்வரும் 31 ஆம்திகதி சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையிலேயே இந்த விடயம் குறித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்திருக்கின்றார்.

ஆனாலும் இந்த ஆணைக்­கு­ழுக்­களை அமைத்து விசா­ரணை நடத்தும் விவ­காரம் தொடர்பில் ஜே.வி.பி.யின் பிர­சார செய­லா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான விஜித ஹேரத் யதார்த்­தப்­பூர்­வ­மான கருத்­தினை கூறி­யுள்ளார். ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழு­விற்கு முன்­னு­தா­ர­ண­மா­கவும் நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்தும் வகை­யிலும் பிணை முறிகள் தொடர்­பான ஜனா­தி­பதி ஆணைக்­குழு செயற்­ப­ட­வேண்டும். தேர்தல் காலத்தில் ஆணைக்­கு­ழுக்­களை அமைப்­பது பிர­சா­ரத்­திற்கு மட்­டு­மா­ன­தாக இருக்­கக்­கூ­டாது என்று அவர் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார்.

உண்­மை­யி­லேயே நாட்டில் இடம்­பெற்ற ஊழல் மோச­டிகள் தொடர்பில் உரிய விசா­ர­ணைகள் நடத்­தப்­ப­ட­வேண்டும். குற்­ற­வா­ளிகள் தண்­டிக்­கப்­ப­ட­வேண்டும். வெறும் கண்­து­டைப்­புக்கு மட்டும் விசாரணைகளை நடத்தும் செயற்பாடுகள் இனியும் இடம்பெறக்கூடாது என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-12-26#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.