Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேர்தலுக்குமுன் பிணைமுறி குற்­ற­வா­ளி­க­ளுக்கு தண்­டனை : வாக்குறுதியை ஜனாதிபதி நிறைவேற்றுவார் என்கிறது சு.க.

Featured Replies

தேர்தலுக்குமுன் பிணைமுறி குற்­ற­வா­ளி­க­ளுக்கு தண்­டனை : வாக்குறுதியை ஜனாதிபதி நிறைவேற்றுவார் என்கிறது சு.க.

4-ef82cd238537748f80f835614eb8ef409a0cf41f.jpg

 

(ஆர்.யசி)

அடுத்த ஆண்டு நடை­பெறும் உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­த­லுக்கு முன்னர் மத்­திய வங்கி பிணை­முறி ஊழல் விவ­ கா­ரத்தில் குற்­ற­வா­ளி­க­ளுக்கு தண்­டனை வழங்­கப்­படும் என ஜனா­தி­பதி உறு­தி­ய­ளித்­துள்­ள­தா­கவும், அறிக்­கை­யினை சமர்ப்­பிப்­பதில் தாமதம் ஏற்­ப­டலாம் எனினும் குற்­ற­வா­ளி­க­ளுக்கு தண்­டனை கிடைப்­பது உறுதி என்று அரச தொழில்­மு­யற்சி இரா­ஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபே­வர்­தன தெரி­வித்தார்.  

குற்­ற­வா­ளி­களை தண்­டிப்­ப­தாக ஜனா­தி­பதி கொடுத்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்ற வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் வாராந்த செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று கட்சி தலைமை அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்­றது. இதில் செய்­தி­யா­ளர்­க­ளிடம் கருத்து தெரி­விக்கும் போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறு­கையில்,

மத்­தி­ய­வங்கி பிணை­முறி ஊழல் விவ­காரம் குறித்த ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் விசா­ரணை அறிக்கை இம்­மாதம் 31 ஆம் திக­திக்கு முன்னர் கைய­ளிக்­கப்­பட வேண்டும் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்ளார். ஆகவே அறிக்கை கிடைக்­க­பெற வேண்டும். விசா­ரணை ஆணைக்­கு­ழுவின் அறிக்கை தயா­ரிப்­பதில் சில தாம­தங்கள் ஏற்­படும் என்­பதை அனை­வரும் ஏற்­று­கொள்ள வேண்டும். எனினும் மிக நீண்ட­காலம் கடத்தும் வகையில் அமை­யப்­பெ­றாது. அடுத்த ஆண்டு தேர்தல் இடம்­பெற முன்னர் மத்­திய வங்கி பிணை­முறி ஊழல் விவ­கா­ரத்தில் குற்­ற­வா­ளிகள் தண்­டிக்­கப்­ப­டு­வார்கள்.

ஜனா­தி­பதி எமக்கு அந்த வாக்­கு­று­தியை வழங்­கி­யுள்ளார். அத்­துடன் ஜனா­தி­பதி அமைத்த ஆணைக்­குழு நியா­ய­மா­னதும் நேர்­மை­யா­னதும் என்­பதை வெளி­ப­டுத்த வேண்­டிய கட­மையும் அவ­ருக்கு உள்­ளது. யாரையும் காப்­பாற்றி குற்­றங்­களை மூடி மறைக்க தயார் இல்லை என்­பதை ஜனா­தி­பதி தொடர்ச்­சி­யாக கூறி வரு­கின்றார். அவ்­வாறு இருக்­கையில் அதனை உறு­திப்­ப­டுத்த மத்­திய வங்கி பிணை­முறி விட­யத்தில் அவர் நேர்­மை­யாக நடந்­து­கொள்வார் என்ற நம்­பிக்கை ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யாக எமக்கு உள்­ளது.

மேலும் மத்­திய வங்கி விட­யத்தில் மட்டும் அல்­லாது மிஹின்­லங்கா விமா­ன­சேவை மற்றும் ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் விமான சேவை விட­யத்தில் இடம்­பெற்ற ஊழல் விவ­கா­ரங்­க­ளிலும் ஜனா­தி­பதி ஆணைக்­குழு அமைக்­கப்­படும் என ஜனா­தி­பதி தெரி­வித்­துள்ளார். இவ்விடயம் தொடர்­பிலும் ஜன­வ­ரியில் ஆணைக்­கு­ழுக்கள் அமைக்­கப்­படும். கடந்த காலங்­களில் இடம்­பெற்ற ஊழல் விட­யங்­களுக்கும் அடுத்த ஆண்டு தீர்­வுகள் கிடைக்கும் என்று உறு­தி­யாக கூற­மு­டியும். ஆணைக்­கு­ழுக்­களின் விசா­ர­ணை­கள் பிந்­தலாம் ஆனால் குற்­ற­வா­ளி­க­ளுக்கு நிச்­ச­ய­மாக தண்­டனை கிடைக்கும் என்­பதை நாம் உறு­தி­யாக கூறு­கின்றோம் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

அமைச்சர் மஹிந்த அமரவீர

செய்­தி­யாளர் சந்­திப்பில் கருத்து தெரி­வித்த அமைச்சர் மஹிந்த அம­ர­வீர கூறு­கையில்,

தேயிலை இறக்­கு­மதி தொடர்பில் ரஷ்ய அர­சாங்கம் விதித்­தி­ருந்த தடை நீக்­கப்­பட்­டுள்­ளது. எனினும் இந்தத் தடை நீக்­கப்­பட மாட்­டாது எனவும் அவ்­வாறு நீக்­கு­வ­தாக இருப்பின் நீண்ட காலம் எடுக்கும் எனவும் பலர் கூறினார். சில ஊட­கங்­களில் சிரேஷ்ட ஊட­க­வி­ய­லா­ளர்­களும் இந்தக் கருத்­தினை தெரி­வித்­தனர். அதில் உண்­மையும் உள்­ளது. இலங்­கைக்கு எதி­ரான மீன் இறக்­கு­மதி தடை­யினை ஐரோப்­பிய ஒன்­றியம் விதித்­த­போது அதனை நீக்க எமக்கு இரண்டு ஆண்­டுகள் தேவைப்­பட்­டது. ஜி.எஸ்.பி வரிச் சலு­கை­யினை மீண்டும் பெற்­றுக்­கொள்ள எமக்கு மூன்று ஆண்­டு­காலம் தேவைப்­பட்­டது. எனினும் தேயிலை ஏற்­று­மதி தடை விதிக்­கப்­பட்டு ஒரு வார­கா­லத்தில் மீண்டும் எம்மால் ரஷ்­யா­விற்­கான தேயிலை இறக்­கு­மதி தடை­யினை நீக்­கிக்­கொள்ள முடிந்­தது.

ஆட்சி மாற்­றத்தின் பின்னர் இலங்கை அர­சாங்கம் சர்­வ­தேச நாடு­க­ளுடன் ஏற்­ப­டுத்­திக்­கொண்ட நட்­பு­றவே இதற்கு கார­ண­மாகும். அத்­துடன் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சர்­வ­தேச நாடு­க­ளுடன் ஏற்­ப­டுத்­திக்­கொண்­டுள்ள நட்­பு­றவும் முக்­கிய கார­ண­மாகும். தேயிலை இறக்குமதி தடைவிதிப்பு விடயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேரடியாக ரஷ்ய ஜனாதிபதிக்கு தொடர்புகொண்டு கலந்துரையாடியதன் மூலமே இந்த வெற்றி எமக்குக் கிடைத்தது. ஆகவே இன்று இந்தியா, சீனா ஆகிய இரண்டு ஆசிய வல்லரசுகள் மற்றும் அமெரிக்கா - ரஷ்யா ஆகிய உலக வல்லரசுகள் இலங்கையுடன் கைகோர்த்து உள்ளமை எமக்கு மிகப்பெரிய வெற்றியாகும் எனவும் குறிப்பிட்டார். 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-12-27#page-1

 

 

பிணை­முறி விவ­கா­ரத்தின் பின்னர் அமைச்­சர்கள் சிலர் வெளி­யே­றுவர் : பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பந்­துல

6-df70f6f00c9b4174d1eb2a3e252a8a4ac427fcf9.jpg

 

(எம்.சி.நஜி­முதீன்)

மத்­திய வங்கி பிணை­முறி தொடர்பில் அமைக்­கப்­பட்ட ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்கை விவ­காரம் நிறை­வுற்ற பின்னர் அர­சாங்­கத்தில் அங் கம் வகிக்கும் ஒரு தரப்பு அர­சாங்­கத்­தி­லி­ருந்து வெளி­யே­ற­வுள்­ளது. குறித்த வெளி­யேற்­றத்தின் பின்னர் ஐக்­கிய தேசியக் கட்­சி­யினர்  வகிக்கும் அமைச்­சுகள் சில­வற்றை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கையேற்­க­வுள்­ள­தா­கவும்  பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பந்­தல குண­வர்­தன தெரி­வித்தார்.  

கூட்டு எதிர்க்­கட்சி ஏற்­பா­டு­செய்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு நேற்று கொழும்பில் நடை­பெற்­றது. அதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­த­லா­னது உள்­ளூ­ராட்சி அதி­கார சபை­க­ளுக்­கான தேர்­த­லாக மாத்­திரம் அமை­யப்­போ­வ­தில்லை. மாறாக அது சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பாக அமை­ய­வுள்­ளது. தேர்­தலில் ஐக்­கிய தேசியக் கட்சி வெற்­றி­பெ­று­மி­டத்து தாம் கடந்த மூன்று வருட கால­மாக முன்­னெ­டுத்துச் செல்லும் வேலைத்­திட்­டங்­க­ளுக்கு மக்­களின் ஆத­ரவு உள்­ள­தாக அர­சாங்கம் சர்­வ­தே­சத்­திற்கு காண்­பிக்கும்.

ஆகவே அவ்­வாறு நடக்­கு­மாக இருந்தால் அர­சாங்கம் முன்­னெ­டுக்கும் சமஷ்டி அர­சி­ய­ல­மைப்பு,பொரு­ள­தார நட­வ­டிக்கை, சமூக வேலைத்­திட்டம் உள்­ள­டங்­க­லாக சகல விட­யங்­க­ளுக்கும் கிராம மட்ட மக்கள் ஆத­ரவு வழங்­கி­யுள்­ள­தா­கவே கொள்­ளப்­படும்.

எனினும் தற்­போது நாட்டின் நிதி விடயம், வங்கி நட­வ­டிக்கை, வாழ்­வா­தாரம் உள்­ளிட்ட சகல துறை­களும் வீழ்ச்சி கண்­டுள்­ளது. அவ்­வா­றான பிரச்­சி­னை­க­ளுக்கு அர­சாங்­கத்­தினால் தீர்வு வழங்­க­மு­டி­ய­வில்லை. எனினும் அர­சியல் ரீதி­யான போலி­வி­டங்­க­ளையே அர­சாங்கம் மக்கள் மத்­தியில் முன்­வைத்து வரு­கி­றது.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ யுத்­தத்­ததை முடி­வுக்கு கொண்­டு­வந்த பின்னர் நாட்டை அபி­வி­ருத்­தியின் பால் இட்டுச் சென்றார். அவர் பாரி­ய­ள­வான சால்­களை எதிர்­கொண்டார். எனினும் அச்­ச­வால்­களை முறி­ய­டித்­துக்­கொண்டு முன்­னேறிச் சென்றார். அவ­ரது ஆட்சி காலத்தில் வெளி­நா­டு­க­ளு­ட­னான உறவு பேணப்­பட்ட போதிலும் சர்­வ­தேச நாடு­க­ளுக்கு அடி­ப­ணிந்­து­செல்­ல­வில்லை. நாட்டின் சுயா­தி­பத்­தியம் உரிய முறையில் பாது­காக்­கப்­பட்­டது.

மேலும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி உறுப்­பி­னர்கள் அர­சாங்­கத்­தி­லி­ருந்து வெளி­யே­று­வது பற்றி தற்­போது பேசப்­ப­டு­கி­றது. எனவே மத்­திய வங்கி பிணை­முறி தொடர்பில் அமைக்­கப்­பட்ட ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்கை விவகாரம் நிறைவுபெற்ற பின்னர் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஒரு தரப்பு அரசாங்கத்திலிருந்து வெளியேறவுள்ளது.

அவ்வெளியேற்றத்தின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியினர் வகிக்கும் அமைச்சுகள் சிலவற்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையேற்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-12-27#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.