Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊழலற்ற நிர்வாகத்தை உருவாக்க வடக்கு மக்கள் உறுதி பூணல் அவசியம்

Featured Replies

  • ஊழலற்ற நிர்வாகத்தை உருவாக்க வடக்கு மக்கள் உறுதி பூணல் அவசியம்
ஊழலற்ற  நிர்வாகத்தை  உருவாக்க  வடக்கு மக்கள்  உறுதி பூணல்  அவசியம்
 
 

ஊழலற்ற நிர்வாகத்தை உருவாக்க வடக்கு மக்கள் உறுதி பூணல் அவசியம்

 
 

சில தினங்­க­ளுக்கு முன்­னர் வட மாகாண முத­ல­மைச்­சர் உள்­ளு­ராட்­சித் தேர்­த­லில் ஊழ­லற்ற வேட்­பா­ளர்­க­ளுக்கு வாக்­க­ளிக்­கு­மாறு கோரி­யி­ருந்­தார். அதே­போல, அண்­மை­யில் தமிழ்த் தேசி­யப் பேர­வை­யும் ஊழ­லற்ற தமிழ் தலை­வர்­களை நாடு­வ­தாக ஒரு அறிக்­கையை வெளி­யிட்டு இருந்­தது.

தென் பகு­தி­யில் தொடர்ச்­சி­யாக ஊழ­லுக்கு எதி­ரான ஆர்­வ­லர்­க­ளும் அமைப்­பு­க­ளும் இயங்கி, பல ஊழ­லுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­களை வெற்­றி­க­ர­மாக முன்­னெ­டுத்து, ஊழல் செய்த மத்­திய அமைச்­ச­ரைக்கூட அமைச்­சுப் பத­வி­யில் இருந்து அகற்­றி­விட்ட நிலை­யில், வட பகு­தி­யில் உண்­மை­யில் ஊழ­லுக்கு எதி­ரான போராட்­டம் எந்த நிலை­யில் இருக்­கி­றது என்­பதை ஆராய்­வதே இந்­தக் கட்­டு­ரை­யின் நோக்­க­மா­கும்.

வட மாகாண சபை பதவி ஏற்ற சிறிது காலத்­தி­னுள்­ளேயே அமைச்­சர்­க­ளுக்கு எதி­ரான ஊழல் குற்­றச்­சாட்­டு­கள் ஆளும் கட்சி உறுப்­பி­னர்­க­ளி­னா­லும் ஏனைய தரப்­பி­ன­ரா­லும் சுமத்­தப்­பட்டு இருந்­தன. கால­தா­ம­தம் ஆனா­லும், முத­ல­மைச்­சர் தமது சொந்த அமைச்­சர்­க­ளின் மீது சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட் டுக்­களை விசா­ரிக்க சுயா­தீ­ன­ மான குழு ஒன்றை அமைத்­த­போது, நல்­லாட்­சிக்­கான முன்­னு­தா­ர­ண­மாக நாட்­டி­லுள்ள அனைத்து மக்­க­ளா­லும் அந்­தச் செயற்­பாடு வர­வேற்­கப்­பட்­டது.

குற்­றம் நிரு­பிக்­கப்­பட்ட இரு அமைச்­சர்­களைப் பதவி நீக்கி, ஏனைய இரு அமைச்­சர்­க­ளின் மீது சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட்­டு­ களை விசா­ரிக்க புதிய குழு அமைக்­கப்­ப­டும் என்று முத­ல­மைச்­சர் சூளு­ரைத்­த­போது, அவரை நீதி தேவ­தை­யின் மறு வடி­வ­மாக மக்­கள் பார்த்­தார்­கள். குறிப்­பாக இந்­தக் கால கட்­டத்­தில் இளைய தலை­மு­றை­யி­ன­ரால் ஊழ­லுக்கு எதி­ராக ப் போரா­டக் கூடிய ஒரு நம்­பிக்கை நட்­சத்­தி­ர­மாக முத­ல­மைச்­சர் கரு­தப்­பட்­டார்.

இத­னா­லேயே முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ரா­கத் தமி­ழ­ர­சுக் கட்­சி­யி­னால் கொண்­டு­வ­ரப்­பட்ட நம்­பிக்கை இல்­லாத் தீர்­மா­னத் துக்கு எதி­ராக வீதி­யில் இறங்­கிப் போராட அவர்­கள் துணிந்­த­னர். ஆனால் தமி­ழ­ர­சுக் கட்­சி­யு­ட­னான பேச்­சு­வார்த்­தை­யின் பின்­னர் தனது முன்­னைய நிலைப்­பாட்­டில் இருந்து குத்­துக்­க­ர­ணம் அடித்த முத­ல­மைச்­சர், விசா­ர­ணை­யின் பின்­னர் அமைச்­சர்­களை மாற்­றி­னால் அவர்­கள் குற்­றம் செய்­த­தாக அர்த்­தப்­ப­டாது என்று தெரி­வித்­த­தன் மூலம், பத­விக்­காக தன்னை மாற்­றிக் கொள்­ளும் ஒரு சரா­சரி அர­சி­யல்­வா­தி­யா­கத் தன்னை இனம்­காட்­டி­னார்.

ஊழல் நிரு­பிக்­கப்­பட்ட அமைச்­சர்­கள் இரு­வர் மீதும் பதவி நீக்­கத்தை தவிர வேறு எந்­த­வித நட­வ­டிக்கை எடுக்­கா­த­தும், ஏனைய இரு அமைச்­சர்­க­ளுக்கு எதி­ரான பார­தூ­ர­மான குற்­றச்­சாட்­டு­களைச் சடு­தி­யா­கக் கைவிட்­ட­தும், குறைந்த பட்­சம் முத­ல­மைச்­சர் நிதி மோச­டிப் புல­னாய்­வுப் பிரி­வி­டம் ஊழல் விசா­ரணை அறிக்­கை யைச் சமர்ப்­பித்து விர­ய­மாக்­கப் பட்ட பொது­மக்­க­ளின் வரிப்­ப­ணத்தை மீளப்­பெற்று மக்­க­ளின் அபி­வி­ருத்­தியை மேம்­ப­டுத்த உறு­தி­யான நட­வ­டிக்கை எடுப்­பார் என்று எண்­ணி­யி­ருந்­த­வர்­களை பலத்த ஏமாற்­றத்­துக்கு உள்­ளாக்­கி­னார்.

இந்த நிலை­யில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சிறி­த­ரன், பகி­ரங்­க­மாக அமைச்­சர்­க­ளின் ஊழலை முத­ல­மைச்­சர் வெளிப்­ப­டுத்­தி­னால், தாம் முத­ல­மைச்­ச­ரின் ஊழல்­களை வெளிப்­ப­டுத்­து­வேன் என்று மிரட்­டி­ய­தில் உண்மை இருக்­க­லாம் என்று பல­ரும் எண்­ணத் தலைப்­பட்­ட­னர். அதற்கு வலுச் சேர்ப்­பதுபோல, முத­ல­மைச்­ச­ரின் பிந்­திய நட­வ­டிக்­கை­கள் அமைந்து இருக்­கின்­றன.

சுன்னாகம் கழிவு ஒயில் கலப்பு விடயத்தில் 
வடக்கு மாகாண சபையின் தகிடுதத்தம்

உதா­ர­ண­மாக, சுன்­னா­கம் பகு­திக் கிண­று­க­ளில் குடி ­தண்­ணீரில் கழிவு எண்­ணெய் கலந்த பிரச்­சி­னை­யில், நீர்­வ­ழங்­கல், மாகா­ண­ச­பை­யின் அதி­கா­ரத்­திற்கு உட்­பட்­ட­தல்ல என்­றும், வட­மா­காண முன்­னாள் விவ­சாய அமைச்­சர் ஐங்­க­ர­நே­சன் தனக்குச் சட்­ட­பூர்­வ­மாக அதி­கா­ர­ம­ளிக்­கப்­ப­டா­த­தும், நிர்­வாக ரீதி­யாக தொடர்பு அற்றதுமான குறித்த வி­ட­யத்­தில் தலை­யிட்டு தன்­னிச்­சை­யாக 1.9 மில்­லி­ யன் ரூபா பணத்தைச் செல­வ­ழித்து ஒரு குழுவை அமைத்து, பாதிப்பை ஏற்­ப­டுத்­திய நிறு­வ­னத்­திற்கு சாத­க­மான அறிக்­கையை அக்­கு­ழு­வின் மூலம் பெற்று, அந்த நிறு­வ­னத்­தைப் பாது­காக்­கும் வகை­யி­லேயே செயற்­பட்­டி­ருக்­கி­றார் என விசா­ர­ணைக்­குழு தெளி­வா­கத் தெரி­வித்­தி­ருக்­கி­றது, அமைச்­ச­ரின் மீதான குற்­றச்­சாட்­டு­கள் நிரு­பிக்­கப்­பட்டு அவர் மாற்­றப்­பட்ட நிலை­யில், பல்­லா­யி­ரக்கணக்­கான தமிழ் மக்­களைப் பாதிக்­கும் இந்­தப் பார­தூ­ர­மான பிரச்­சி­னை ­யில் முத­ல­மைச்­சர் தலை­யிட்டு முன்­னர் வெளி­யி­டப்­பட்ட போலி நிபு­ணர் குழு அறிக்­கையை மீளப் பெற்று இருக்க வேண்­டும்.

மேலும் மத்­திய அர­சாங்­கமே நீரில் கழிவு எண்­ணெய் கலந்து இருப்­பதை ஏற்­றுக்­கொண்­டு­விட்ட நிலை­யில், முத­ல­மைச் சர் நேர்­மை­யாக பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நிவா­ர­ணத்­தை­யும் தீர்­வை­யும் வழங்­கு­மாறு மத்­திய அர­சாங்­கத்­தின் மீது அழுத்­தத்தை பிர­யோ­கித்­தி­ருக்க வேண்­டும். ஆனால், இன்­று­வரை நீதி­மன்­றங்­க­ளி­லும் ஏனைய உத்­தி­யோ­க­பூர்வ விட­ யங்­க­ளி­லும் சுன்­னா­கம் நீரில் கழிவு எண்­ணெய் கலக்­க­வில்லை என்­பதே வட மாகாண சபை­யின் நிலைப்­பா­டாக இருக்­கி­றது.

சட்­டத்­து­றை­யில் பழம் தின்று கொட்டை போட்ட ஓய்வு பெற்ற சிரேஷ்ட நீதி­ப­தி­ யாக இருந்த முத­ல­மைச்­சர், மாகாண சபை­யின் அதி­கார வரம்பை அறி­யா­மலா விவ­சாய அமைச்­சரை நீர் வழங்­கல் பிரச்­சி­னை­யில் குழு அமைக்க அனு­ம­தித்­தார் என்ற கேள்வி எழு­கி­றது.

இதை­விட, இன்­று­வரை அந்த அறிக்­கையை மீளப்­பெ­றா­மல் இருப்­பது ஐங்­க­ர­நே­சன் தனது சாட்­சி­யத்­தின் போது முத­ல­மைச் ச­ரின் சம்­ம­தத்­து­ட­னேயே தாம் இந்த விட­யத்­தில் ஈடு­பட்­ட­தாக தெரி­வித்­ததை நிருபிக்­கும் வித­மாக இருப்­ப­து­டன், முத­ல­மைச்­ச­ரும் இந்த விட­யத்­தில் குற்­றம் சாட்­டப்­பட்ட நிறு­வ­னத்­துக்கு ஆத­ர­வாக செயற்­ப­டு­வதை உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளது. ஊழ­லி­னால் ஏற்­பட்ட பாதிப்­பு­களை உரிய முறை­யில் நிவிர்த் திக்­கத் தவ­றி­யுள்ள முத­ல­மைச்­சர், முன்­னர் ஊழல் விசா­ர­ணையை ஆரம்­பித்­தது, அமைச்­சர்­க­ளைக் காவு கொடுத்து ஊழல் குற்­றச் சாட்­டு­ க­ளில் இருந்து தனது நற்­பெ­ய­ரை­யும் விம்­பத்­தை­யும் காப்­பற்­று­வ­தற்கு மேற்­கொண்ட ஒரு முயற்­சியே என்­பது தற்­போது வெளிப்­பட்­டு ­விட்­டது.

இப்­போது தேர்­தல் நெருங்கி வரும் நிலை­யில் உதட்­ட­ள­வில் ஊழ­லுக்கு எதி­ராக பாவனை செய்து, மீண்­டும் தனது விம்­பத்தை உயர்த்­து­வ­தற்கு முத­ல­மைச்­சர் பிர­யத்­த­னம் செய்­கி­றார். பத­விக் கதி­ரை­க­ளுக்­காக குடு­மி­பி­டிச் சண்­டை­யில் ஈடு­பட்டு இருக்­கும் தமிழ் தேசி­யக் கூட்­ட­மைப்பு, மீண்­டும் முத­ல­மைச்­சர் பத­விக்­குத் தன்னை நிய­மிக்­காது என்ற யதார்த்­தத்தை முத­ல­மைச்­சர் உணர்ந்து கடை­சி­வரை ஊழ­லுக்கு எதி­ராக நேர்­மை­யா­கப் போராடி இருந்­தால், பதவி வில­கிச் செல்­லும்­போது தமி­ழர் வர­லாற்­றில் ஒரு மதிப்­புக்­கு­ரிய தலை­வ­ராக நிரந்­தர இட­மொன்றை அவர் பிடித்­தி­ருப்­பார்.

தமிழ் மக்­கள் பேர­வை­யின் கண்­ணா­மூஞ்சி 
விளை­யாட்டு பகி­டிக்கு இட­மா­ன­தொன்று

அடுத்­த­தாக, தமிழ் மக்­க­ளின் நலன்­க­ளைப் பாது­காப்­ப­தாகக் கூறிக்­கொள்­ளும் தமிழ் மக்­கள் பேர­வையை எடுத்­துக்கொள்­வோம். இவர்­கள் வட­மா­காண சபை­யில் மற்­றும் நாட்­டில் ஊழல் பல இடம் பெற்­ற­போது கண்­டும் காணா­தது போல இருந்­த­தும், சுன்­னா­கம் பிரச்­சினை உட்­பட தமி­ழர்­க­ளைப் பாதிக்­கும் பல போராட்­டங்­க­ளில் மக்­கள் ஈடு­பட்­ட­போது அவற்­றில் கலந்துகொள்­ளாது வாளா­தி­ருந்­த­தும், குறைந்­த­பட்­சம் ஆத­ரவு தெரி­விக்கக்கூட முன்­வ­ர­வில்லை என்­ப­தும் அனை­ வ­ரும் அறிந்­ததே.

முன்­னை­நாள் போரா­ளிக் குழுக்­க­ளின் கிரி­மி­னல்­களை இணைத்­த­லை­வர்­க­ளா­க­வும், முக்­கிய உறுப்­பி­னர்­க­ளா­க­வும் பேரவை இணைத்­துக் கொண்­டுள்ள நிலை­யில், பேர­வை­யின் ஊழ­லுக்கு எதி­ரான கோரிக்கை, உள்­ளக விமர்­ச­னத் துக்கு உட்­ப­டாத அமைப்­பாகத் தன்னை இனம் காட்­டி­யுள்­ள­து­என்பதுடன் “ஊருக்கு உப­தே­சம் உனக்­கல்­லடி மகளே’’ என்ற பழ­மொ­ழியையும் நினைவுபடுத்­தி ­யுள்­ளது. சில­தி­னங்­க­ளுக்கு முன்­னர் முன்­னை­நாள் போரா­ளிக்­குழு ஒன்று இன்­ன­மும் யாழ்ப்­பா­ணத்­தில் அடாத்­தாக பொது­மக்­க­ளின் வீடு­க­ளைப் பிடித்து வைத்து இருப்­ப­தும், ஆயு­தங்­க­ளு­டன் இர­க­சி­ய­மாக மக்­களை அச்­சு­றுத்­து­வ­தும் அம்­ப­லப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள நிலை­யில் தமிழ் மக்­கள் முத­லில் பாது­காக்­கப்­பட வேண்­டி­யது இந்த கிரி­மி­னல் குழுக்­க­ளி­டம் இருந்து என்­பதை பேரவை உணர்ந்து கொள்­ள­வேண்­டும்.

முத­லில் இந்த ஆயு­தக் குழுக்­களை கடந்த காலத்­தில் ஆயு­தம் ஏந்தி செய்த தவ­று­க­ளுக்­கும் அரா­ஜ­கச் செயல்­க­ளுக்­கும் மக்­க­ளி­டம் மன்­னிப்­புக் கோருமாறும், அதேவேளை செய்த பாவங்­க­ளுக்­காக பின்­வ­ரும் வழி­க­ளில் பிரா­யச்­சித்­த­மும் செய்யு மாறும் பேரவை வெளிப்­ப­டை­யாக வேண்­டு­கோள் விடுக்­க­ வேண்­டும்.

தவ­று­க­ளுக்­குப் பிரா­யச்­சித்­தம் செய்ய தமிழ் மக்­கள் பேரவை முன்­வ­ருமா?

1. கடந்த காலத்­தில் இந்­தக் குழுக்­கள் படு­கொலை செய்த, முக்­கி­ய­ மாக ஆயு­தம் ஏந்­தாத பொது­மக்­க­ளின் உற­வி­னர்­க­ளி­டம் வெளிப்­ப­டை­யாக மன்­னிப்­புக் கோர­வேண்­டும்.

2. பய­மு­றுத்தி மற்­றும் படு­கொலை செய்து சம்­பா­தித்த சொத்­துக்­களை மீள­வும் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளி­டம் அல்­லது அவர்­க­ளின் உரித்­துக்­கா­ரர்­க­ளி­டம் கைய­ளிக்க வேண்­டும். தொடர்ந்­தும் பொது­மக்­க­ளின் வீடு­களை அடாத்­தாக பிடித்து வைத்­தி­ருப்­பது, இர­க­சி­ய­மாக ஆயு­தங்­க­ளு­டன் பய­மு­றுத்­து­வது போன்ற செயல்­கள் இவர்­கள் இன்­ன­மும் சட்­ட­வி­ரோத செயல்­களை நிறுத்தி ஜன­நா­யக வழி­க்கு வர விரும்­ப­வில்லை என்றே பொருள்­ப­டும் நிலை­யில், பேர­வை­யில் இருந்து இவர்­களை வெளி­யேற்­று­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டும்.

3. வர­த­ரா­ஜ­பெ­ரு­மாள் போலல்­லாது, இந்­தி­யா­வி­டம் பல உத­வி­களைப் பெற்­றுக் கொண்டு இந்­திய நலன்­காக்­கும் ஐந்­தாம் படை­யா­கச் செயற்­ப­டா­மல், ஈழத்­துத் தமிழ் மக்­க­ளின் நலன் காப்­ப­தற்­காக நேர்­மை­யாக, இத­ய­சுத்­தி­யு­டன் இனி­யா­வது செயற்­ப­டு­வோம் என்ற உறு­தி­மொ­ழியை அளிக்­க­வேண்­டும். ஈழ மக்­க­ளின் நம்­பிக்­கை­யைப் பெறு­வ­தற்­காக கடந்த காலங்­க­ளில் இந்­தி­யா­வி­டம் பெற்­றுக் கொண்ட உத­வி­களை பகி­ரங்­கப்­ப­டுத்த வேண்­டும்.

4. கடந்த காலத்தைப் போலல்லாது பொது­மக்­க­ளின் சொத்து மற்­றும் வரிப்­ப­ணத்­தில் ஊழல், அதி­கார துஷ்­பி­ர­யோ­கம் மற்­றும் நிதி­மோ­ச­டி­யில் ஈடு­ப­ட­மாட்­டோம் என்று உறுதி அளிக்­க­வேண்­டும்.

5. தேர்­த­லில் போட்­டி­யி­டும் நிலை ஏற்­பட்­டால் வேட்­பா­ளர் இலங்­கை­யி­லும் புலத்­தி­லும் தனது பெய­ரி­லும் பினா­மி­க­ளின் பெய­ரி­லும் இருக்­கும் சொத்­துக்­களை நேர்­மை­யாக வெளிப்­ப­டுத்­து­வது அவர்­கள் ஊழல் மற்­றும் நிதி­மோ­ச­டி­யில் ஈடு­ப­ட­மாட்­டார்­கள் என்­னும் நம்­பிக்­கையை வாக்­கா­ளர்­க­ளுக்கு ஏற்­ப­டுத்­தும்.

தமி­ழர்­க­ளது குடித்­தொ­கையை அதி­க­ரிக்­கச் செய்ய 
செயற்­றிட்­டம் தேவை

மேலே குறிப்­பிட்ட வேண்­டு­கோள்­களை பேரவை வெளிப்­ப­டை­யாக முன்­வைத்து, தமிழ் மக்­க­ளைப் பாது­காப்­ப­தற்­கும் தமிழ்ப் பிர­தே­சங்­க­ளில் உண்­மை­யான சன­நா­ய­கம், அரா­ஜ­கம் மற்­றும் ஊழ­லற்ற நல்­லாட்­சியை வழங்க முன்­வ­ருமா? தமி­ழர் நலன்­க­ளைப் பாது­காக்க வேண்­டு­மா­யின், முத­லில் இலங்­கை­யில் நலிந்­து­வ­ரும் தமி­ழர் குடித் தொ­கையை அதி­க­ரிப்­ப­தற்­கு­ரிய செயற்­றிட்­டங்­க­ளுக்கு முன்­னு­ ரிமை கொடுத்­துப் பேரவை செயற்­பட்­டி­ருக்­க­வேண்­டும்.

இன்­று­வரை அதைப்­பற்றி எந்­த­வித கரி­ச­னை­யும் இல்­லா­மல், தமிழ் மக்­க­ளின் குடித்­தொ­கைப் பலமே தமி­ழ­ருக்கு உரி­மை­களை பெற்­றுத்­த­ரும் என்ற அடிப்­படை உண்­மை­யை­யும் உண­ரா­மல் அர­சி­யல் யாப்­பில் எவ்­வாறு மாற்­றங்­களை செய்­ய­வேண்­டும் என்று விவா­திப்­பது எந்­தப் பய­னை­யும் தமி­ழ­ருக்கு ஏற்­ப­டுத்­தாது.

http://newuthayan.com/story/58306.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.