Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

75 வீத கட்டமைப்பைக் கொண்ட புத்தளத்தை ஒரு காத்தான்குடியாகவோ, பொத்துவில்லாகவோ மாற்ற பாடுபடுங்கள்..!! தனது வேட்பாளர்களுக்கு அமைச்சர் ரிஷாத் அறிவுரை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே  எழுபந்தைந்து  சதவிகித கட்டமைப்பைக் கொண்ட புத்தளம் நகரை , இத்தேர்தலில்  வெற்றி பெறுவதன் மூலம்  ஒரு  காத்தான்குடி  போன்று..பொத்துவில்  போன்று  ஒரு  அழகிய  நகராக  மாற்றியமைக்க  பாடுபடுமாறு  அமைச்சரும்  அகில  இலங்கை  மக்கள்  காங்கிரஸ்  தலைவருமான  ரிஷாத்  பதியுதீன்  தனது  பிரதான  வேட்பாளர்களுக்கு  ஆலோசனை  வழங்கினர்.

Ri-wed-5-300x225.jpg

 

நேற்று  இரவு  புத்தளம்  நுஹ்மான்  மண்டபத்தில்  அடம்  பெற்ற  வைபவமொன்றின்  போதே  இந்த  அறிவுரையை  வழங்கினார்.

முசலி  போன்று  காடுகளைக்  கொண்டிராத  ஏற்கனவே  75  சதவிகித  உள்ளக  கட்டமைப்பைக்  கொண்ட  புத்தளம்  நகரம்  இன்னும்  அழகிய  நகராகவும்  வட  மேல்  மாகாணத்தின்  ஒரு  சிறந்த  முன்மாதிரி  நகராகவும்  மிளிர  வேண்டும். இத்தேர்தலில்  கடுமையாக  உழைத்து  வெற்றி  பெற  பாடுபடும்  அதே  நேரம்  அதற்கான  கைம்மாறாக  உங்கள்  நகரையும்  மாற்றி  அமைக்க  பாடுபட  முன்வர  வேண்டும்  என்றும்  தெரிவித்தார்.

 

Ri-wed-3-300x225.jpg

” வடக்கு  கிழக்குக்கு  வெளியில்  ஒரு  நகர சபைத்   தலைவர்  பதவியை  ACMC  க்கு  வழங்க  வேண்டும்  என்றும்  நாம்  பிரதமர்  ரணிலிடம்  கோரிக்கை  வைத்துள்ளோம். நாம்  விடுத்துள்ள  ஒரே  கோரிக்கை  இது  மாத்திரம்  தான். எனவே  சப்ரி  உற்பட  வேட்பாளர்கள்  தமக்கிடையில்  உள்ள  வேறுபாடுகளைக்  களைந்து  கட்சியின்  கோட்பாடுகளை  மதித்து  நடக்க  வேண்டும்  என்று  தெரிவித்த  அமைச்சர்  ரிஷாத்,

தனது  அமைப்பாளரும்  முதன்மை  வேட்பாளருமான  சபரியை  நோக்கி, அரசியல்  அனுபவம்  இல்லாத  சிறியவர்களின் ஆலோசனைகளைப்  புறந்தள்ளி   பந்து  சின்னம்  என  வரும்  செய்திகளுக்கு  முற்றுப்  புள்ளி  வைத்துவிட்டு  தமது  அணியை  வெற்றி  பெற வைக்க  பாடுபடுமாறு கேட்டுக்  கொண்டார்.தான்  மிகவும்  பிரயாசைப்பட்டு  ஐக்கியத்  தேசியக்  கட்சியிடம்  இருந்து  வட்டாரங்களைப்  பெற்றதாகவும்  அவர்  கூறினார்.

Ri-wed-12-300x225.jpg

 

இந்தச்  சந்திப்பில்  கட்சியின்  உப  தலைவர்  எம்.எச்.எம். நவவி எம்.பி. முன்னாள்  எம்.பி. டாக்டர். இல்யாஸ், இலங்கை  ஜமாஅத்  இஸ்லாமியின்  முக்கியஸ்தரான  ஹிதாயத்துல்லாஹ்  அஜ்மல்,  நகர சபை  வேட்பாளர்களான  அமைப்பாளர்  அலி சப்ரி  ரஹீம்,  வை.எம். நிஸ்தாத், இளம்  வேட்பாளரான  முர்ஷீத் , மற்றும் ஐக்கியத் தேசியக்  கட்சி  வேட்பாளர்  பரூஸ்   அமைச்சரின்  புத்தளம்  அரசியல்  விவகார  ஆலோசகர்களான  முபாஸ், எம்.எச். முஹம்மது , எம்.ஏன்.எம். இப்ளால் ஆகியோரும்  கலந்துக்  கொண்டனர்.

Ri-wed-8-300x225.jpghttp://puttalamtoday.com

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.