Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய தேர்தல் முறையின் பாதகம் பற்றி கூறியும், ஜனாதிபதியும் சம்பந்தப்பட்ட அமைச்சரும் விடாப்பிடியாக உள்ளனர் :

Featured Replies

புதிய தேர்தல் முறையின் பாதகம் பற்றி கூறியும், ஜனாதிபதியும் சம்பந்தப்பட்ட அமைச்சரும் விடாப்பிடியாக உள்ளனர் :

hakeem-_3077.jpg?resize=800%2C534

புதிய தேர்தல் முறைமையின் பாதகங்கள் குறித்து பிரதமரிடமும், ஜனாதிபதியிடமும் பல வருடங்களாக பேசி வருகின்ற போதும் , ஜனாதிபதியும் சம்பந்தப்பட்ட அமைச்சரும் இதில் விடாப்பிடியாக இருக்கின்றனர். இருந்த போதும், தற்போதையை உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் ஜனாதிபதிக்கு நல்லதொரு படிப்பினையை கொடுக்கும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களுடனான இறைய சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சிறிய கட்சிகளின் தயவில்லாமல் ஆட்சியமைக்கும் நோக்கத்திலேயே இந்த தேர்தல் முறைமை கொண்டுவரப்பட்டதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதிக்கம் அதிகமுள்ள இடங்களில் தம்முடன் இணைந்து போட்டியிடுமாறு கோரி, ஐக்கிய தேசியக் கட்சி தங்களுடன் பேசிவந்தது. எங்களது ஆதரவுள்ள சபைகளை யானைச் சின்னத்தில் வென்றுகொடுத்தால், அதனை அவர்களது சபையாகவே அடையாளப்படுத்துவார்கள். இதன்மூலம் ஆட்சியாளர்களிடமிருந்து எங்களுக்கு அனுசரணை கிடைக்கும் டிகவும் அவர் தெரிவித்துள்ளார்.

hakeem-3076.jpg?resize=800%2C534

இதேவேளை, திருகோணமலையில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு ஓரிரு நாட்கள் இருக்கும்நிலையிலும், ஐ.தே.க.வுடன் இணைந்து போட்டியிடுவதற்காக, ரணில் விக்கிரமசிங்க தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திவந்தார். ஐ.தே.க. அமைப்பாளர்களும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து போட்டியிடுவதற்கே விரும்பியிருந்தார்கள்.

இந்நிலையில், மு.கா. மூலம் அரசியல் அதிகாரம் பெற்ற ஒரு அமைச்சர் அதற்கு அடம்பிடித்துக் கொண்டிருந்தார். கடைசியில் நாங்கள் எதிர்பார்த்தது போலவே நடந்தது. திருகோணமலையில் மூன்று கட்சிகளும் தனித்துப் போட்டியிடுகின்ற ஒரு சூழல் உருவாகியுள்ளது. எங்களது பலத்தை நிரூபிப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாகவே இந்தத் தேர்தலை நாங்கள் பார்க்கிறோம்.

மு.கா. மரச்சின்னத்தில் போட்டியிடவேண்டும் என்பதே, கட்சி ஆதரவாளர்களின் ஏகோபித்த ஆதரவாகவும் இருந்தது. மு.கா. தனித்து நின்று சபைகளை கைப்பற்றும் என்ற நம்பிக்கையை வேட்பாளர்களும், ஆதரவாளர்களும் தந்திருக்கிறார்கள். இந்த நம்பிக்கை கட்சியை மேலும் உற்சாகநிலைக்கு கொண்டுசென்றுள்ளது என ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/2018/59043/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.