Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சு.க. – கூட்டு எதி­ரணி தேர்­தலின் பின்­ன­ரேனும் இணைவு சாத்­தி­யமா?

Featured Replies

சு.க. – கூட்டு எதி­ரணி தேர்­தலின் பின்­ன­ரேனும் இணைவு சாத்­தி­யமா?

 

எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலில் தமது வெற்­றி­யினை உறு­திப்­ப­டுத்­திக்­கொள்ளும் நோக்கில் அர­சியற் கட்­சிகள் தற்­போது தீவி­ர­மாக ஈடு­பட்டு வரு­கின்­றன. தேர்தல் பிர­சார நட­வ­டிக்­கை­களும் இப்­போது களை­கட்டி இருக்­கின்­றன. தேர்­தலில் பிர­தி­நி­தித்­து­வத்­தினை உறு­திப்­ப­டுத்­திக்­கொள்ளும் நோக்கில் வேட்­பா­ளர்கள் முழு­மூச்­சுடன் களத்தில் இறங்கி செயற்­பட்டு வரு­கின்­றனர். அர­சியற் கட்­சிகள் தனித்தும் கூட்டு சேர்ந்தும் போட்­டி­யி­டு­கின்ற நிலையில் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யையும் கூட்டு எதி­ர­ணி­யையும் இணைத்­துக்­கொண்டு இத்­தேர்­த­லுக்கு முகம் கொடுப்­ப­தற்கு முக்­கி­யஸ்­தர்­களால் பல்­வேறு முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டன. எனினும் இது சாத்­தி­யப்­ப­டாமல் போன­மையும் நீங்கள் அறிந்த விட­ய­மாகும். இந்­நி­லையில் உள்­ளூ­ராட்சி தேர்­தலின் பின்­ன­ரா­வது இவ்­விரு தரப்­பி­னரும் இணைந்து செயற்­பட வேண்டும் என்று சிலர் எதிர்­பார்ப்­பினைக் கொண்­டி­ருக்­கின்­றனர். இதற்­கி­டையில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் பொது எதி­ர­ணியும் இணைந்தே உள்­ளூ­ராட்சி மன்­றங்­களை அமைக்­கு­மென்றும் ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணைந்து உள்­ளூ­ராட்சி மன்­றங்­களை அமைக்க வேண்­டிய அவ­சியம் கிடை­யாது என்றும் அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

இம்­முறை உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் கை ஓங்கும் என்று பர­வ­லாக எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. இதற்கு காரணம் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி பிளவு பட்­டி­ருப்­ப­தே­யாகும். கட்­சி­களின் பிள­வு­களை ஐக்­கிய தேசி­யக்­கட்சி ஒரு­போதும் விரும்­பாது என்று ஐ.தே.கவின் முக்­கி­யஸ்தர் ஒருவர் தெரி­வித்­துள்­ள­போதும் சுதந்­திரக் கட்­சியின் பிளவு ஐ.தே.க.விற்கு உள்­ளூர மகிழ்ச்­சி­யினை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது என்­பதும் சொல்லித் தெரிய வேண்­டிய விட­ய­மல்ல. ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி வர­லாற்றில் பல சரி­வு­களைச் சந்­தித்­தி­ருக்­கின்­றது. எனினும் பின்னர் அக்­கட்சி தன்னை சரிப்­ப­டுத்­திக்­கொண்டு வீறு­கொண்­டெ­ழுந்­தி­ருக்­கின்­றது. எனவே அண்­மைய பிளவு என்­பது ஸ்ரீல.சு.க. விற்கு தற்­கா­லி­க­மா­னதே என்றும் இது விரைவில் சீர்­செய்­யப்­படும் என்றும் கருத்­துகள் வெளி­யி­டப்­பட்டு வரு­கின்­றன. கூட்டு எதி­ர­ணி­யையும் ஸ்ரீல.சு.க.யினையும் இணைத்­து­வைக்க முற்­பட்டு தோல்­வி­கண்ட நிலையில் கூட்டு எதி­ர­ணியின் விடாப்­பிடி தன்மை குறித்து பல விமர்­ச­னங்­களும் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தன.

கூட்டு எதி­ரணி ஸ்ரீல.சு.க.யுடன் இணைந்து கொள்­ளா­மை­யா­னது பாரிய ஒரு முட்டாள் தன­மான செயற்­பா­டாகும் என்றும் சிலர் கார­சா­ர­மாக தெரி­வித்­தி­ருந்­தனர். கூட்டு எதி­ரணி நிலை­கு­லைந்து போய் இருக்­கின்­றது. ஆச­னப்­பங்­கீடு தொடர்பில் பிரச்­சி­னைகள் மேலெ­ழுந்­தி­ருக்­கின்­றன. தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் முக்­கிய உறுப்­பி­னர்கள் ஸ்ரீல.சு.கட்­சியில் இணைந்து கொண்­டுள்­ளனர். கூட்டு எதிர்க்­கட்­சி­யுடன் இணைந்து செயற்­பட்டு வந்த முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் மக்கள் ஐக்­கிய முன்­ன­ணியின் உப தலை­வ­ரு­மான சோம­­வீர சந்­திர­சிறி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு ஆத­ரவு வழங்கி இருக்­கின்றார். இதே­வேளை ஏற்­க­னவே தினேஷ் குண­வர்­தன தலை­மை­யி­லான மக்கள் ஐக்­கிய முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான ஸ்ரீயானி விஜே­வர்த்­தன ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியில் இணைந்து கொண்டு பிர­தி­ய­மைச்சர் பத­வி­யி­னையும் பெற்­றுக்­கொண்­டுள்ளார். இந்­நி­லையில் அமைச்சர் மஹிந்த அம­ர­வீர பொது எதி­ர­ணியின் முக்­கி­யஸ்­தர்கள் சிலர் விரைவில் ஸ்ரீல.சு.க.உடன் இணைய உள்­ள­தாகக் கூறி இருக்­கின்றார். பொது அணி­யினர் மேடை­களில் மக்­களை ஏமாற்றும் கதை­களைக் கூறி­னாலும் மீண்டும் அவர்கள் எம்­முடன் இணைந்து பய­ணிக்க வேண்­டிய கட்­டாயம் காணப்­ப­டு­கி­றது. ஆகவே கூட்டு எதி­ர­ணி­யினர் பலர் எம்­முடன் விரைவில் இணை­வார்கள். நடை­பெற உள்ள உள்­ளூ­ராட்சி தேர்­தலின் பின்னர் ஸ்ரீல.சு.க தனி­பெரும் கட்­சி­யாக மாற்றம் பெறும்.

பொது­ஜன முன்­ன­ணியின் உறுப்­பி­னர்கள் தவிர்ந்து ஸ்ரீல.சு.க.வின் உறுப்­பி­னர்கள் அனை­வரும் எம்­முடன் இணை­வது உறு­தி­யா­கி­யுள்­ளது. இறு­தியில் பொது­ஜன முன்­ன­ணியின் சார்பில் ஜீ.எல்.பீரிஸ், பஷில் ராஜபக் ஷ மற்றும் சில மாகாண சபை உறுப்­பி­னர்­களும் அவர்­க­ளுக்கு துணை­போகும் ஒரு சில நபர்­க­ளுமே இருப்­பார்கள் என்று மஹிந்த அம­ர­வீர தெரி­வித்­தி­ருக்­கின்றார். கூட்டு எதி­ரணி ஆட்டம் கண்டு வரு­கின்ற நிலையில் மூழ்­கப்­போகும் கப்­பலில் ஏறு­வ­தற்கு யாரும் முயற்­சிக்கக் கூடாது என்றும் சிலர் வலி­யு­றுத்தி இருப்­ப­த­னையும் கூறி­யாதல் வேண்டும்.

ஸ்ரீல.சு.க.வும் ஐ.தே.க.வும் நல்­லாட்­சிக்கு கரு கொடுத்­தி­ருந்­தாலும் இவ்­விரு கட்­சி­க­ளுக்­கி­டை­யிலும் கருத்து முரண்­பா­டு­களும் கொள்கை ரீதி­யான வேறு­பா­டு­களும் காணப்­ப­டு­கின்­றமை யாவரும் அறி­யாத விட­ய­மல்ல. ஒவ்­வொரு கட்­சியும் தத்­த­மது ஆதிக்­கத்தை நிலை­நி­றுத்­து­வ­தி­லேயே குறி­யாக இருந்து வரு­கின்­றன. 2020 ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தனி ஆட்சி அமையும் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நம்­பிக்கை தெரி­வித்­தி­ருக்­கிறார். மேலும் 2020 ஆம் ஆண்டு அமையும் ஸ்ரீல.சு.க.வின் தனி அர­சாங்கம் மிகவும் தூய்­மை­யான அர­சாங்­க­மாக மாற்றம் காணு­மென்றும், ஸ்ரீல.சு.கட்­சியில் இனி ஒரு­போதும் குடும்ப அர­சியல் உரு­வா­வ­தற்கு இட­மில்லை என்றும் ஜனா­தி­பதி தெரி­வித்­தி­ருக்­கின்­ற­மையும் குறிப்­பி­டத்­தக்­க­தாகும். இதே­வேளை ஐக்­கிய தேசியக் கட்­சியும் தமது வெற்­றி­யினை எதிர்­வரும் தேர்­தலில் நிலை­நி­றுத்­து­வதில் குறி­யாக இருக்­கின்­றது.

தேசிய அர­சாங்கம் என்ற எண்­ணக்­கரு இலங்­கைக்கு புதி­தாகும். தேசிய அர­சாங்கம் சாத்­தி­ய­மா­குமா? சாத்­தி­ய­மா­காதா என்­கிற கேள்­வி­க­ளுக்கும் மத்­தியில் இது சாத்­தி­ய­மாகி இருக்­கின்­றது. கட்­சி­களின் இழு­ப­றி­க­ளுக்கும் மத்­தியில் நல்­லாட்சி தொடர்ந்து கொண்­டி­ருக்­கின்­றது. ஸ்ரீல.சு.க. ஐக்­கிய தேசியக் கட்­சியை வீழ்த்­து­வதில் குறி­யாக இருக்­கின்­றது. இது­போன்றே கூட்டு எதி­ர­ணியும் ஐ.தே.க.வினை வீழ்த்­து­வதில் ஆர்வம் கொண்­டுள்­ளது. ஸ்ரீல.சு.கட்­சி­யுடன் தமக்கு எவ்­வி­த­மான பிரச்­சி­னையும் இல்லை என்றும் ஐக்­கிய தேசிய கட்­சி­யு­ட­னேயே உள்­ள­தா­கவும் அவர்­க­ளு­ட­னேயே தமக்கு தேர்தல் போட்­டியும் உள்­ள­தா­கவும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தெரி­வித்­தி­ருக்­கின்றார். மேலும் ஐ.தே.க.வுடன் கூட்­டாக இணைந்­தி­ருக்கும் வரையில் எம்மால் ஸ்ரீல.சு.க.வுடன் இணைய முடி­யாது. அவ்­வாறு இணைந்தால் ஐ.தே.க.விற்கு ஆத­ர­வ­ளித்­த­தாக ஆகி­விடும். எமது மக்கள் அதனை விரும்­ப­வில்லை என்றும் மஹிந்த ராஜபக் ஷ தெரி­வித்­தி­ருந்தார்.

2020 ஆம் ஆண்டில் ஸ்ரீல.சு.க. தனி ஆட்சி அமைக்கும் என்று கருத்­துகள் வெளி­யி­டப்­பட்­டுள்­ள­தைப்­போன்றே 2020 இல் ஐ.தே.க.வின் தனி அர­சாங்கம் அமை­யு­மென்று அமைச்சர் எரான் விக்­ர­ம­ரட்ன தெரி­வித்­தி­ருக்­கின்றார். பொது­ஜன முன்­ன­ணியின் முக்­கிய நபர்கள் சிலர் ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணை­வார்கள் அதன் பின்னர் தனித்த பய­ணத்­திற்­கான போராட்டம் தொடரும் என்றும் எரான் விக்­ர­ம­ரட்ன ஆழ­மாக வலி­யு­றுத்திக் கூறி இருக்­கின்றார். தேசிய அர­சாங்­கத்­தினை முன்­னெ­டுப்­பதில் உள்ள குறை­பா­டு­க­ளையும் அவர் தெளி­வா­கவே சுட்­டிக்­காட்டி இருக்­கின்றார். ஐக்­கிய தேசியக் கட்­சியின் சில செயற்­பா­டுகள் அக்­கட்­சி­யினை விமர்­ச­னத்­திற்கு உள்­ளாக்கி இருக்­கின்­றன. சில அச­மந்தப் போக்­குகள் கட்­சியின் மீதான சந்­தே­கப்­பார்­வை­யினை வலுப்­பெறச் செய்­தி­ருக்­கின்­றன. ஐ.தே.க. பொல்லைக் கொடுத்து அடி­வாங்கிக் கொண்­டி­ருக்­கின்­றதோ என்றும் சில வேளை­களில் எண்­ணத்­தோன்­று­கின்­றது.

கூட்டு எதி­ரணி தொடர்பில் உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தல் மேடை­களில் அதி­க­மாக பேசப்­பட்டு வரு­கின்­றது. இலங்கை அர­சி­யலில் மஹிந்­தவின் ஆளுமை எந்­த­ள­விற்கு இருக்­கின்­றது என்­ப­தனை உள்­ளூ­ராட்சி தேர்தல் முடி­வு­களே வெளிப்­ப­டுத்­து­வ­தாக அமையும். இதற்­கி­டையில் கூட்டு எதி­ர­ணிக்கு ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் மறை­முக ஒப்­பந்தம் இருப்­ப­தாக மேல்­மா­காண முத­ல­மைச்சர் இசுறு தேவப்­ரிய சந்­தேகம் வெளி­யிட்­டி­ருக்­கின்றார். இவ்­விரு கட்­சி­க­ளுக்­கி­டையே ஒப்­பந்தம் இருப்­ப­தாக ஏற்­க­னவே பலரும் சந்­தேகம் வெளி­யிட்­டி­ருந்­தமை தொடர்­பிலும் நீங்கள் அறிந்­தி­ருப்­பீர்கள். இந்­நி­லையில் இப்­போது இசுறு தேவப்­ரிய வாய் திருந்­தி­ருக்­கின்றார். கூட்டு எதிர்க்­கட்சி வெளிப்­ப­டை­யாக ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு எதி­ராக செயற்­பட்­டாலும் மறை­மு­க­மாக ஒப்­பந்தம் செய்து செயற்­ப­டு­கின்­றது. உண்­மை­யி­லேயே அவர்கள் ஐக்­கிய தேசிய கட்­சிக்கு விரோ­த­மா­ன­வர்கள் என்றால் தேர்­தலில் அவர்­களின் கட்சி நிரா­க­ரிக்­கப்­பட்ட பிர­தே­சங்­களில் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியை ஆத­ரிப்­ப­தாக தெரி­விக்க வேண்டும் என்று இசுறு தேவப்­பி­ரிய தெரி­வித்­தி­ருக்­கின்றார். ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி, ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணைந்து செயற்­ப­டு­கின்­றமை தொடர்பில் கூட்டு எதி­ரணி பல்­வேறு விமர்­ச­னங்­களை முன்­வைத்து வரு­கின்­றது. தாம் ஸ்ரீல.சு.க.வுடன் இணை­வ­தற்குத் தடை­யாக இச்­செ­யற்­பாடு இருப்­ப­தா­கவும் கூட்டு எதி­ரணி கூறி­வ­ரு­கின்­றது. இந்­நி­லையில் ஐ.தே.க. விற்கும் கூட்டு எதி­ர­ணிக்கும் இடையில் இருப்­ப­தாகக் கூறப்­படும் ஒப்­பந்தம் குறித்தும் நாம் சிந்­திக்க வேண்டி இருக்­கின்­றது.

கூட்டு எதி­ரணி தொடர்பில் ஆழ­மாகப் பேசப்­பட்டு வரு­கின்ற நிலையில், உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலின் பின்னர் கூட்டு எதி­ர­ணியும் ஸ்ரீல.சு.க வும் இணைந்து செயற்­ப­ட­வுள்­ளமை குறித்து அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த கருத்து கூறி­யி­ருக்­கின்றார். ஸ்ரீல.சு.கட்­சியும், பொது எதி­ர­ணியும் இணைந்தே உள்­ளூ­ராட்சி மன்­றங்­களை அமைக்கும். ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணைந்து உள்­ளூ­ராட்சி சபை­களை அமைக்க வேண்டிய அவ­சியம் கிடை­யாது. இப்­போது தனித்து செயற்­பட்­டாலும் மஹிந்த தரப்பும் நாங்­களும் ஒரு அணி என்­ப­தனை மறந்­து­விட வேண்டாம் எனவும் அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தெரிவித்திருக்கின்றார்.

ஐக்­கிய தேசியக் கட்­சியை எதிர்க்கும் விட­யத்தில் கூட்டு எதிர்க்­கட்சி மற்றும் ஸ்ரீல.சு.க. என்ற இரு­சா­ராரும் நண்­பர்­க­ளாகி இருக்­கின்­றார்கள். ஐ.தே.க.விற்கு இரு­பக்­கமும் அடி விழுந்­து­கொண்­டி­ருக்­கின்­றது. இதற்­கி­டையில் கள்­வர்­களைத் தண்­டிப்­ப­தாக வாக்­கு­றுதி வழங்கி வாக்­கு­களைப் பெற்­றுக்­கொண்ட அர­சாங்கம் இப்­போது அதே கள்­வர்­க­ளுடன் இணைந்து நாட்­டினைச் சூறை­யாடி வரு­கின்­றது என்றும் ரணில் – மைத்­திரி கூட்­டணி மஹிந்த ராஜபக் ஷவை காப்­பாற்றி வரு­வ­தா­கவும் ஜே.வி.பி. கண்­டித்­தி­ருக்­கின்­றது. ஐ.தே.க.வும் ஸ்ரீல.சு.க.வும் மக்­களை ஏமாற்­றி­யுள்ள நிலையில் அதி­கா­ரத்தைத் தம்­மிடம் வழங்­கு­மாறும் தாம் மக்­க­ளுக்கு சேவை­யாற்றிக் காட்­டு­வ­தா­கவும் ஜே.வி.பி. மேலும் தெரி­வித்­துள்­ளது. ஸ்ரீல.சு.க.வும் கூட்டு எதி­ர­ணியும் இணை­யும்­நிலை ஏற்­பட்டால் கூட்டு எதி­ரணி தொடர்பில் முன்­வைக்­கப்­பட்டு வரும் ஊழல் குற்­றச்­சாட்­டுகள் என்­ன­வாகும்? இவை­களை அர­சாங்கம் மூடி­ம­றைக்­குமா? என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.   

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-01-02#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.