Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒருகோடி 45 இலட்சம் ரூபா பணம் மிளகாய் தூள்தூவி கொள்ளை : நுவ­ரெ­லி­யாவில் அதிர்ச்சி சம்­பவம்

Featured Replies

ஒருகோடி 45 இலட்சம் ரூபா பணம் மிளகாய் தூள்தூவி கொள்ளை : நுவ­ரெ­லி­யாவில் அதிர்ச்சி சம்­பவம்

p21-5d79b3216f42568dcf50ed7c6d067b21b9929925.jpg

 

(எம்.எப்.எம்.பஸீர், நுவ­ரெ­லியா, தல­வ­ாக்­கலை நிரு­பர்கள்) 

நுவ­ரெ­லியா, பிளக்புள் பகு­தியில் அமைந்­துள்ள சிகரட் முகவர் நிறு­வனம் ஒன்­றுக்கு சொந்­த­மான ஒரு­கோ­டியே 45 இலட்சம் ரூபா பணமும் 37 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான  காசோலை ஒன்றும், மிளகாய் பொடி தூவி கொள்­ளை­யி­டப்­பட்­டுள்­ளது.   

இச்­சம்­பவம் நேற்று காலை 8.27 இற்கு இடம்­பெற்­றுள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார். சிறிய ரக லொறி­யொன்றில் இந்த கோடிக் கணக்­கான பணம் வங்­கிக்கு கொண்டு செல்­லப்­பட்­டுள்­ள­துடன் முச்­சக்­கர வண்­டியில் வந்த மூவர் லொறியை மறித்து அதன் சாரதி மற்றும் உத­வி­யாளர் மீதும் மிளகாய் பொடி தாக்­குதல் நடாத்­தி­விட்டு பணம் இருந்த பையை கொள்­ளை­யிட்டு தப்பிச் சென்­றுள்­ளனர்.

  இந்த கொள்ளை தொடர்பில் சந்­தேக நபர்­களைக் கைது செய்ய, நுவ­ரெ­லிய பொலிஸ் அத்­தி­யட்சர் மஹிந்த திஸா­நா­யக்­கவின் நேரடி கட்­டுப்­பாட்டில் மூன்று விஷேட பொலிஸ் குழுக்கள் நட­வ­டிக்­கையில் ஈடு­ப­டுத்­தப்ப்ட்­டுள்­ள­தாக பொலிஸ் தலை­மை­ய­கத்தின் உயர் அதி­காரி ஒருவர் கேச­ரி­யிடம் தெரி­வித்தார்.

நுவ­ரெ­லியா அம்­பே­வலை பிர­தான வீதியில் பிளக்பூல் பகு­தியில் இருந்து நுவ­ரெ­லியா தனியார் வங்­கியில் வைப்­பி­லி­டு­வ­தற்­காக சிகரட் நிறு­வனம் ஒன்றின் முக­வர்­க­ளாக செயற்­ப­டு­கின்ற இரண்டு ஊழி­யர்­களால் இந்த பணம் சிறிய ரக லொறி ஒன்றில் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது.இவர்கள் நுவ­ரெ­லியா நகரின் விக்­டோ­ரியா பூங்கா வழி­யாக தனியார் வங்கி நோக்கி சென்­ற­போது இந்த பணம் கொள்­ளை­யி­டப்­பட்­டுள்­ளது.

இந்த பாதையில் முச்­சக்­கர வண்டி ஒன்றில் வருகை தந்த மூன்று பேர் குறித்த வாக­னத்தை வழி மறித்து அதில் இருந்­த­வர்­களின் முகத்­திற்கு மிளகாய் தூள் வீசி­யுள்­ளனர். இதன்­போது செய்­வ­த­றி­யாது திகைத்த லொறி ஒட்­டு­னரும் உத­வி­யா­ளரும் கண்­களை துடைக்க முற்­பட்ட வேளையில் உத­வி­யா­ள­ரிடம் இருந்த பணத்தை பறித்துக் கொண்டு ஒடி­யுள்­ளனர்.

 பையில் ஒரு கோடியே 45 இலட்சம் ரூபா பணம் மற்றும் 37 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யி­லான காசோலை ஆகி­யன இருந்­த­தாக பொலி­ஸா­ருக்கு வககு மூலம் அளிக்­கப்­பட்­டுள்­ளது. கொள்­ளை­யர்கள் பணத்தை கொள்­ளை­யிட்­ட­வுடன் நுவ­ரெ­லியா நகர பகு­தியை நோக்கி சென்­ற­தாக முதல்­கட்ட விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது. இந் நிலையில் சீ.சி.ரி.வி.கமரா மற்றும் நவீன தொழில் நுட்ப உத­வி­யுடன் பொலிஸார் மேல­திக விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ளனர்.

மத்­திய, வட­மத்­திய, வட மேல் மாகா­ணங்­க­ளுக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜகத் அபே­சி­ரி­கு­ண­வர்­த­னவின் உத்­த­ர­வுக்கு அமைய, நுவ­ரெ­லியா பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்­தன கலப்­பதி மற்றும் நுவ­ரெ­லியா பொலிஸ் அத்­தி­யட்­சகர் மகிந்த திசா­நா­யக்­கவின் நேரடி கட்­டுப்­பாட்டில் நுவ­ரெ­லியா பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் சந்­தன பஸ்­நா­யக்­கவின் கீழ் குற்­ற­வியல் பிரிவின் பொறுப்­பாளர் நிசாந்த பிரதீப் தலை­மை­யி­லான பொலிஸ் குழு­வினர் விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வருகின்றனர்.

கடந்த மூன்று தினங்களாக வங்கி விடுமுறை காரணமாகவே இந்த பணத்தை வங்கியில் வைப்பிலிட முடியாமல் போனதாகவும் அதனை நேற்று வைப்பிலிட கொண்டு வந்த பொழுதே இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிசாரிடம், பணத்தை பறிகொடத்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.