Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தனிக்­கட்சி அமைத்தால் மஹிந்த நீக்­கப்­ப­டுவார் : இணைந்து செயற்­ப­டு­வதே அவரை பாது­காக்கும் என்­கி­றது ஸ்ரீ.ல.சு.க

Featured Replies

தனிக்­கட்சி அமைத்தால் மஹிந்த நீக்­கப்­ப­டுவார் : இணைந்து செயற்­ப­டு­வதே அவரை பாது­காக்கும் என்­கி­றது ஸ்ரீ.ல.சு.க

3-12781013c90ebacd5ef081ff0f1d905f3fc83df3.jpg

 

(ஆர்.யசி)

ஸ்ரீலங்கா பொது­ஜன பெரமுனவின் தலை­மையை­ எடுக்கும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யினர் யாராக இருப்­பினும் அவர்கள் கட்­சியில் இருந்து நீக்­ கப்­ப­டுவர். இது மஹிந்த ராஜபக் ஷவுக்கும் பொருந்தும் என ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அமைச்சர் தயா­சிறி ஜெய­சே­கர தெரிவித்தார். 

 ஒன்­றி­ணைந்து செயற்­பட இன்றும் வாய்ப்­புள்­ளது, ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யாக பய­ணிப்­பதே மஹிந்­த­விற்கு ஆரோக்­கி­ய­மா­னது எனவும் அவர் வலி­யு­றுத்­தினார்.

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று கட்சி தலைமை அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்­றது. இதில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறு­கையில்,

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியில் இருந்து பிரிந்து செயற்­படும் பொது அணி­யி­னரும் கொள்கை அளவில் எமது உறுப்­பி­னர்­க­ளே­யாவர். கடந்த ஜனா­தி­பதி தேர்­தலின் பின்னர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் அனு­ம­தியை பெற்று எதி­ர­ணியில் அமர்ந்­த­வர்கள். ஆகவே அவர்­களும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யா­கவே செயற்­பட முடியும். எனினும் இன்று ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­னணி என கூறிக்­கொண்டு ஸ்ரீலங்கா சதந்­திர கட்­சியை பல­வீ­னப்­ப­டுத்தும் செயற்­பா­டு­களை இவர்கள் முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். பொது­ஜன முன்­ன­ணிக்கு என ஒரு தலை­மைத்­து­வமோ அல்­லது தனித்­து­வமோ இல்லை. அவர்கள் இன்றும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் வர்ணம், கொள்கை மற்றும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் தலை­வர்­களின் ஒரு­வ­ராக இன்றும் செயற்­படும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் படத்தை வைத்­துக்­கொண்டே மக்­க­ளிடம் செல்­ல­வேண்­டிய நிலைமை உள்­ளது.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ இன்னும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியை விட்டு வெளி­யே­ற­வில்லை. அவர்­களின் அணியில் உள்ள உறுப்­பி­னர்­களும் அவ்­வாறே உள்­ளனர். ஒரு­சிலர் மாத்­திரம் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியை பிள­வு­ப­டுத்தி ஜனா­தி­ப­தியை பல­வீ­னப்­ப­டுத்த வேண்டும் என்ற உடன்­ப­டிக்­கையின் பிர­காரம் செயற்­பட்டு வரு­கின்­றனர். எனினும் தனித்து பய­ணிக்க வேண்டாம் என்ற வார்த்­தை­யையே இப்­போதும் நாம் தெரி­வித்து வரு­கின்றோம். தனித்து பய­ணிப்­பதன் மூல­மாக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவிற்கே பாதிப்பு ஏற்­படும். அவர் இன்றும் ஏமாற்­றப்­பட்டு வரு­கின்றார். அவ­ரது புகைப்­படம் ஒன்­றுக்­காக அவ­ருடன் சில தந்­தி­ரக்­கா­ரர்கள் இணைந்து செயற்­பட்டு வரு­கின்­றனர். அதனை இப்­போ­தா­வது மஹிந்த ராஜபக் ஷ விளங்­கிக்­கொள்ள வேண்டும்.

மேலும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் உறுப்­பி­னர்கள் எவரும் கட்­சியை பல­வீ­னப்­ப­டுத்தும் கொள்­கை­யினை முன்­னெ­டுத்தால் அல்­லது ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யினை அழிக்கும் வகையில் வேறு கட்­சி­களை ஆத­ரித்தால் அவர்­க­ளுக்கு எதி­ராக ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யாக எமது தலை­மைத்தும் மூலம் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் தீர்­மானம் அது­வே­யா­கவும். ஆகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவாக இருந்தாலும் சரி அல்லது வேறு உறுப்பினராக இருந்தாலும் சரி அவர்கள் தனிக் கட்சியினை உருவாக்கும் தலைமைத்துவத்தை ஏற்றால் அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார். 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-01-03#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.