Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாரா­ளு­மன்றத்தை உடன் கூட்டுங்கள் : பிர­தான கட்­சிகள் கடும் தொனியில் வலி­யு­றுத்தல்

Featured Replies

பாரா­ளு­மன்றத்தை உடன் கூட்டுங்கள் : பிர­தான கட்­சிகள் கடும் தொனியில் வலி­யு­றுத்தல்

1-0f2adfcc500aa7eb8c3476f15947cbbade4e2840.jpg

 

(அலுவலக நிருபர்கள்)

மத்­திய வங்கி பிணை­முறி மோசடி தொடர்­பான ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையில் உள்ள விட­யங்கள் தொடர்­பாக ஜனா­தி­ப­தியின் அறி­விப்பு வெளியி­டப்­பட்­டுள்ள நிலையில் உட ன­டி­யாக பாரா­ளு­மன்ற அமர்வைக் கூட்டி அறிக்கை குறித்து விவாதம் நடத்­து­மாறு நாட்டின்  

பிர­தான அர­சியல் கட்­சிகள் கோரிக்கை விடுத்­துள்­ளன. உட­ன­டி­யாக பாரா­ளு­மன்ற அமர்வை கூட்டி இது தொடர்பில் விவாதம் நடத்­து­மாறு சிறி­லங்கா சுதந்­திரக் கட்சி

    கூட்டு எதி­ரணி மற்றும் மக்கள் விடு­தலை முன்­னணி ஆகி­யன இந்த கோரிக்­கையை முன்­வைத்­துள்­ளன. கொழும்பில் நேற்று நடத்­தப்­பட்ட செய்­தி­யாளர் சந்­திப்­புக்­க­ளி­லேயே இந்த விடயம் வலி­யு­றுத்­தப்­பட்­டது.

கூட்டு எதி­ர­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மஹிந்­தா­னந்த அளுத்­க­மகே குறிப்­பி­டு­கையில்

பாரா­ளு­மன்ற அமர்வை அவ­ச­ர­மாகக் கூட்டி மத்­திய வங்கி பிணை­முறி குறித்து ஆராய்­வ­தற்கு நிய­மிக்­கப்­பட்ட ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையை சமர்ப்­பித்து விவாதம் நடத்­தப்­பட வேண்டும் என்றார்.

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­னரும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் செய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான மஹிந்த அம­ர­வீர குறிப்­பி­டு­கையில்

மத்­திய வங்கி பிணை­முறி ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் விசா­ரணை அறிக்கை ஜனா­தி­ப­தி­யிடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ள­துடன் அதன் பரிந்­து­ரை­களை ஜனா­தி­பதி மக்­க­ளுக்கு வெளிப்­ப­டுத்­தினார். ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரைக்­க­மைய அடுத்த கட்ட நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­படும்.

மத்­திய வங்கி பிணை­முறி தொடர்­பான ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் விசா­ரணை அறிக்கை தொடர்பில் விவாதம் நடத்த பாரா­ளு­மன்­றத்தை கூட்­டு­வ­தற்கு ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி பிரே­ர­ணை­யொன்றை முன்­வைக்க தீர்­மா­னித்­துள்­ளது என்றார்.

மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் பேச்­சாளர் விஜித்த ஹேரத் குறிப்­பி­டு­கையில் இது தொடர்பில் விவாதம் நடத்த உட­ன­டி­யாக பாரா­ளு­மன்றம் கூட்­டப்­ப­ட­வேண்டும் என்றார்.

அத்­துடன் மக்கள் விடு­தலை முன்­னணி பாரா­ளு­மன்ற அமர்வை உட­ன­டி­யாக கூட்­டு­மாறு கோரி சபா­நா­ய­க­ருக்கு கடிதம் ஒன்­றையும் நேற்­றைய தினம் அனுப்பி வைத்­துள்­ளது. இதேவேளை ஐக்கிய தேசிய கட்சி நேற்று எந்த செய்தியாளர் சந்திப்பையும் நடத்தவில்லை. மாறாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிக்கை ஒன்றை விடுத்துள்ளதுடன் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.  

 

 

பிர­த­மரை உட­ன­டி­யாக பதவி நீக்­கவேண்டும் : கூட்டு எதிர்க்­கட்சி கோரிக்கை

 

(எம்.சி.நஜி­முதீன்)

பாரா­ளு­மன்ற அமர்வை அவ­ச­ர­மாகக் கூட்டி மத்­திய வங்கி பிணை­முறி குறித்து ஆராய்­வ­தற்கு நிய­மிக்­கப்­பட்ட ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையை சமர்ப்­பித்து விவாதம் நடத்­தப்­பட வேண்டும். அத்­துடன் பாரா­ளு­மன்றம் கூட்­டப்­ப­டு­வ­தற்கு முன்னர் ஜனா­தி­பதி, பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்­கவை பதவி நீக்க வேண்டும் என்று கூட்டு எதி­ர­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மஹிந்­தா­னந்த அளுத்­க­மகே தெரி­வித்தார். 

கூட்டு எதிர்க்­கட்சி ஏற்­பா­டு­செய்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு நேற்று கொழும்பு ஸ்ரீ வஜி­ரா­ஷர்ம பெளத்த நிலை­யத்தில் நடை­பெற்­றது. அந்­நி­கழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

இலங்கை வர­லாற்றில் இடம்­பெற்ற பாரி­ய­ள­வான நிதி மோச­டி­யாக மத்­திய வங்கி பிணை­முறை விவ­கா­ரத்தைக் கருத வேண்­டி­யுள்­ளது. அம்­மோ­சடி அர­சாங்­கத்தின் அனு­ச­ர­ணை­யுடன் இடம்­பெற்­றுள்­ளது. மேலும் அம்­மோ­சடி குறித்து ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலைவர், செய­லாளர் மற்றும் பிரதித் தலை­வரும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவில் சாட்­சி­ய­ம­ளித்­துள்­ளனர்.

ஆகவே ஜனா­தி­பதி, ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையை வெளி­யிட்­ட­துடன் நல்­லாட்சி அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க உட்­ட­பட அமைச்­ச­ர­வை­யையும் உட­ன­டி­யாக பதவி நீக்க வேண்டும்.

ஏனெனில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தவின் மின்­சாரக் கட்­ட­ணத்­தைக்­கூட செலுத்த முடி­யா­தி­ருந்த அக்­கட்சி கடந்த பாரா­ளு­மன்றத் தேர்தல் காலத்தில் அபேட்­சகர் ஒரு­வ­ருக்கு ஐம்­பது இலட்சம் ரூபாவை தேர்தல் பிர­சார நட­வ­டிக்­கை­க­ளுக்கு வழங்­கி­யி­ருந்­தது. அந்­த­ளவு பணம் திடீ­ரென அக்­கட்­சிக்கு எவ்­வாறு கிடைத்­தது?

எனவே மத்­திய வங்கி பிணை­முறி மோச­டி­யுடன் ஐக்­கிய தேசியக் கட்சி சம்­பந்­தப்­பட்­டி­ருப்­பதால் நல்­லாட்சி அர­சாங்­கத்தில் அங்கம் வகிப்­ப­தற்கு அக்­கட்­சிக்கு தார்­மீக உரிமை இல்லை. ஆகவே பிர­தமர் உட்­பட அமைச்­ச­ர­வையில் அங்கம் வகிக்கும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் சகல உறுப்­பி­னர்­க­ளையும் பதவி நீக்­கு­வ­துடன் புதிய அர­சாங்­கத்தை நிய­மிக்க வேண்டும்.

மத்­திய வங்­கிய பிணை­முறி மோசடி குறித்து பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க பொறுப்­புக்­கூற வேண்டும் என நாம் இலஞ்ச ஊழல் விசா­ரணை ஆணைக்­கு­ழுவில் ஏற்­க­னவே முறைப்­பாடு செய்­தி­ருந்தோம். அம்­மோ­ச­டியில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரவி கரு­ணா­நா­யக்­கவின் வகிபாம் பற்­றியும் பாரா­ளு­மன்றில் தெரி­வித்தேன். அப்­போது எனக்கு அச்­சு­றுத்தல் விடுக்­கப்­பட்­டது.

எனினும் ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையில் முன்னாள் நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­க­விற்கு எதி­ராக வழக்குத் தாக்கல் செய்­யு­மாறு குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. எனினும் அவ்­வாறு வழக்குத் தாக்கல் செய்­வ­துடன் மாத்­திரம் விட்­டு­விட முடி­யாது. மேலும் ஆணைக்­கு­ழுவின் அறிக்கை தொடர்பில் ஜனா­தி­ப­தி­யினால் தீர்­மானம் எடுக்­கவும் முடி­யாது. அவ்­வ­றிக்கை சட்­டமா அதி­ப­ருக்கு அனுப்­பப்­ப­ட­வுள்­ளது. எனவே சட்­டமா அதி­பரின் செயற்­பா­டுகள் பற்றி நாம் அவ­தா­னித்­துக்­கொண்­டி­ருப்போம்.

மேலும் கூட்டு எதிர்க்­கட்­சியில் அங்கம் வகிக்கும் உறுப்­பி­னர்­களின் முறைப்­பாடு கிடைக்­கப்­பெற்றால் சட்­டமா அதிபர் அதனை இரு வாரங்­களில் நீதி­மன்­றுக்கு அனுப்­பி­வி­டு­கிறார். ஆகவே ஜனா­தி­பதி ஆணைக்­குழு அறிக்கை தொடர்­பிலும் அவர் அவ­ச­ர­மாக நட­வ­டிக்கை எடுத்து சம்­பந்­தப்­பட்­ட­வர்­களை கைது­செய்ய வேண்டும். மேலும் குறித்த அறிக்­கை­யினை சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­திற்கு அனுப்­பு­யுள்­ள­தா­கவும் ஜனா­தி­பதி தெரி­வித்­துள்­ள­மையும் குறிப்­பி­டத்­தக்­கது.

அத்­துடன் ஜனா­தி­ப­தியின் அறிக்­கை­யா­னது நாம் எதிர்­பார்த்­தது போல் அமை­ய­வில்லை. எதிர்­பார்த்­ததில் சில பிரி­வு­க­ளையே ஜனா­தி­பதி வெளி­யிட்­டுள்ளார். எமக்கு கிடைத்­துள்ள தக­வ­லின்­படி ஆணைக்­குழு அறிக்­கையில் பிர­த­மரின் தலை­யீடு சம்­பந்­த­மாக இதற்கும் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. ஆகவே பிதமர் குறித்த மோசடி தொடர்பில் பொறுப்­புக்­கூற வேண்டும். எனவே இவ்­வி­ட­யத்தில் நியாயம் நிலை­நாட்­டப்­பட வேண்டும்.

மேலும் பாரா­ளு­மன்­றத்தை அவ­ச­ர­மாகக் கூட்டி ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையை பாரா­ளு­மன்றில் சமர்ப்­பித்து விவாதம் நடத்­தப்­பட வேண்டும். அத்­துடன் பாரா­ளு­மன்றம் கூட்­டப்­ப­டு­வ­தற்கு முன்னர் ஜனா­தி­பதி பிர­த­மரை பதவி நீக்க வேண்டும்.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் ஆட்சி காலத்தில் மோசடி இடம்­பெற்­ற­தாக பிர­சாரம் முன்­னெ­டுக்­கப்­பட்­ட­மை­யி­னால்தான் ஜனவரி எட்டாம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு மக்கள் வாக்களித்தனர். எனினும் ஆட்சிக்கு வந்த பின்னர் நல்லாட்சியில் மோசடி இடம்பெற்றுள்ளது. ஆகவே இந்த அரசாங்கத்தால் நாட்டில் ஆட்சியை முன்னெடுப்பதற்கான தார்மீகம் இல்லை.

மேலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் மோசடிகள் இடம்பெற்றதாகக் குறிப்பிட்டனர். எனினும் மூன்று வருடங்களாகிய போதும் அவற்றுக்ககு எதிராக எந்தவொரு வழக்கும் தாக்கல் செய்யப்படவில்லை என்றார். 

 

 

பிர­த­மரே சூத்­தி­ர­தாரி : ஜனா­தி­ப­தியின் வாள் வெட்ட தவ­றி­விட்­டது என்­கி­றது ஜே.வி.பி.

 

(எம்.எப்.எம்.பஸீர்)

மத்­திய வங்கி பிணைமுறி மோச­டியின் பிர­தான சூத்­தி­ர­தாரி பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்­க­வே­யாவார். இது சிறுபிள்­ளைக்கும் தெரியும். அவர் அந்த மோசடி தொடர்­பி­லான பொறுப்பில் இருந்து தப்­பிக்க முடி­யாது. ஜனா­தி­பதி மைத்திரியின் வாள் வெட்­டாமல் விட்ட பிர­தமர் ரணில் மீது குற்­ற­வியல் சட்­டத்தின் கீழ் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் விடு­தலை முன்­னணி வலி­யு­றுத்­தி­யுள்­ளது

குற்­ற­வியல் சட்­டத்தின் பிர­தான அங்­கங்­களில் ஒன்­றான   குற்­றத்­துக்கு முன், பின்­ன­ரான சூத்­தி­ர­தா­ரியின் நட­வ­டிக்கை தொடர்பில் அவ­தானம் செலுத்தும் போது பிர­தமர் ரணில் தானாக சிக்­கிக்­கொள்வார் என்றும் அக்­கட்சி குறிப்­பிட்­டது.   

மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலை­மை­ய­கத்தில் நேற்று விஷேட ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பை நடாத்தி அக்­கட்­சியின் பிரச்­சார செய­லாளர் விஜித்த ஹேரத்தும் அக்­கட்­சி­யின்மேல் மாகாண சபை உறுப்­பினர் சுனில் வட்­ட­க­லவும் இதனை வலி­யு­றுத்­தினர்.

 மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் பிரச்­சார செய­லாளர் விஜித்த ஹேரத் தெரி­வித்­த­தா­வது,

 ஐக்­கிய தேசிய கட்­சியும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியும் இந் நாட்டை கடந்த 70 ஆண்­டுகள் மாறி மாறி ஆட்சி செய்­ததன் ஊடாக நடை­பெற்­றுள்ள கொள்­ளைகள், மோச­டிகள் தொடர்பில் ஜனா­தி­பதி நேற்று முன் தினம் ஒப்­புதல் வாககு மூலம் ஒன்­றினை வழங்­கி­யுள்­ள­தா­கவே அவ­ரது விஷேட அறி­வித்தல் அமைந்­துள்­ளது.

 அதில், பிர­தான இரு கட்­சி­களைச் சேர்ந்­த­வர்­க­ளாலும் முன்­னெ­டுக்­கப்­பட்ட கொள்­ளைகள் தொடர்பில் சிக்­கிக்­கொண்­டுள்­ள­தாக ஜனா­தி­பதி தெரி­வித்­ததன் ஊடாக நாம் அத­னையே அவ­தா­னிக்­கின்றோம்.

 திரு­டர்­களை சிறையில் அடைக்கப் போவ­தாக ஆட்­சிக்கு வந்த இந்த அர­சாங்கம் பொறுப்­புக்­களை ஏற்று ஒரு மாதத்­துக்­குள்­ளேயே இந்த பாரிய வங்­கிக்­கொள்­ளையை அரங்­கேற்­றினர்.

 2015 பெப்­ர­வ­ரியில் இந்த பாரிய மோசடி அரங்­கே­ரி­யதும் நாம் முதலில் இதனை வெளிப்­ப­டுத்­தினோம். எமது கட்சி உறுப்­பினர் சுனில் ஹந்துன் நெதி 2015.03.10 ஆம் திகதி ஊட­க­வி­ய­ளாலர் சந்­திப்பை நடாத்தி இதனை வெளிப்­ப­டுத்­தினார். பின்னர் எமது கட்சித் தலைவர் அனுர குமார திசா­நா­யக்க 2015.03.17 ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்தில் இது விட­ய­மாக பிர­த­ம­ரிடம் நேர­டி­யாக கேள்வி எழுப்­பினார்.

இதற்கு பதி­ல­ளித்த பிர­தமர் அர்ஜுன் மகேந்­திரன் எந்த குற்­றமும் புரி­ய­வில்லை என பதி­ல­ளித்தார். அவர் மீதான குற்­றச்­சாட்­டுக்­களை மறுத்து பிர­தமர் அர்­ஜுன மகேந்­தி­ரனை காப்­பாற்­றினார். இந் நிலையில் 2015 டியூ குண­சே­கர தலை­மை­யி­லான கோப் குழு விசா­ர­ணையில் மத்­திய வங்­கியில் இடம்­பெற்ற மோச­டிகள் வெளி­வந்­தன. பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட்டு அந்த கோப் அறிக்கை மழுங்­க­டிக்­கப்­பட்­டது.

 பின்னர் 2016 புதிய பாரா­ளு­மன்றின் கோப் குழுவின் தலை­வ­ராக எமது கட்­சியின் சுனில் ஹந்துன் நெத்தி தெரி­வானார். அவரின் கீழ் விசா­ரணை நடந்­தது. அதன் அறிக்கை 15 மாதங்­க­ளுக்கு முன்­ன­ரேயே கைய­ளிக்­கப்­பட்­டு­விட்­டது.

 அவ்­வ­றிக்­கையில் முறை­யற்ற கொடுக்கல் வாங்கல், ஒரு நிறு­வனம் சட்ட விரோத இலா­ப­மீட்­டி­யமை, அர்­ஜுன மகேந்­தி­ரனின் முறைக்­கே­டான தலை­யீ­டுகள் தொடர்பில் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டன. சட்ட நட­வ­டிக்கை எடுப்­ப­தற்­காக அந்த அறிக்கை சட்ட மா அதி­ப­ருக்கும் கைய­ளிக்­கப்­பட்­டது. எனினும் இன்று வரை அந்த அறிக்­கையை மையப்­ப­டுத்தி சட்ட மா அதிபர் வழக்கு தாக்கல் செய்­ய­வில்லை.

2016.11.10 ஆம் திகதி கோப் குழு அறிக்கை சட்ட மா அதி­ப­ருக்கு கொடுக்­கப்­பட்­டது. அந்த கோப் குழு அறிக்­கையை மையப்­ப­டுத்தி வழக்கு விசா­ரணை செய்­தி­ருந்­தாலே இன்று வழக்கின் மூன்றில் இரு பகுதி முடி­வ­டைந்­தி­ருக்கும்.

 ஆனால் அவ்­வாறு செய்­ய­வில்லை. மாற்­ற­மாக இழுத்­த­டிப்பு செய்­யப்­பட்­டது. அர்ஜுன் மகேந்­தி­ரனைக் காப்­பாற்ற பல தரப்­பி­னரும் பல நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­தனர். கோப் குழுவில் அர்ஜுன் மகேந்­தி­ரனை காப்­பாற்ற பாரிய முயற்­சிகள் எடுக்­கப்­பட்­டன. இதற்­காக புட் நோட் குழு மிக மும்­மு­ர­மாக செயற்­பட்­டது. கோப் குழுவில் இருந்து வேலு குமாரை இரா­ஜி­னாமா செய்யச் செய்து அந்த இடத்­துக்கு மகேந்­தி­ரனை பாது­காக்­க­வென சுஜீவ சேன­சிங்க அமர்த்­தப்­பட்டார். இவை­யெல்லாம் திட்­ட­மிட்டு நடந்­த­வை­யாகும்.

எது எப்­ப­டியோ, கால தாம­த­மா­னாலும் கூட புதிய சில வெளிப்­ப­டுத்­தல்­க­ளுடன் ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக் குழு அறிக்கை சமர்ப்­பித்­துள்­ளது. ஏனைய அறிக்­கை­களைப் போன்று கிடப்பில் போடாமல் இந்த அறிக்கை தொடர்பில் உடன் நட­வ­டிக்கை எடுக்­கவும். ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக் குழுவின் பரிந்­து­ரை­களில் கோப் குழு முன்­வைத்த பரிந்­து­ரை­களை ஒத்த பரிந்­து­ரை­களும் சில விஷே­ட­மான மேல­திக தக­வல்­களும் வெளி­பப்­டுத்­தப்­பட்­டுள்­ளமை வர­வேற்­கத்­தக்­கது.

 ரவி கரு­ணா­நா­யக்க சொகுசு வீடு பெற்ற விடயம் தொடர்பில் இலஞ்ச ஊழல் சட்­டத்தின் கீழும் ஆணைக் குழு­வுக்கு பொய் சாட்சி வழங்­கி­யமை தொடர்பில் தண்­டனை சட்டக் கோவையின் கீழும் நட­வ­டிக்கை எடுக்க பரிந்­து­ரைத்­தமை வர­வேற்­கத்­தக்­கது. அதே போல் அர்­ஜுன மகேந்­திரன் விடயம் தொடர்­பிலும் தெளி­வான நிலைப்­பாடு, அவர் அத்து மீரி­யுள்­ளமை தொடர்­பி­லான அவ­தா­னிப்பு தொடர்­பிலும் நட­வ­டிக்கை எ டுக்க உத்­தர்­வி­டப்­பட்­டுள்­ளமை ஆரோக்­கி­ய­மா­னது.

2015 ஆம் ஆண்டில் இடம்­பெற்ற இந்த பிணை முறி மோச­டியைப் போன்றே 2008 ஆம் ஆண்டு முதல் நடந்­து­வந்­துள்­ள­தாக ஆணைக் குழு தெரி­வித்­துள்ள நிலையில் அது தொடர்பில் அவ­தானம் வேண்டும். மஹிந்த அர­சாங்­கத்தின் காலப்­ப­கு­தி­யான அக்­கா­லப்­ப­கு­தியில்; மத்­திய வங்கி அஆ­ளு­ந­ராக கட­மை­யாற்­றிய அஜித் நிவாட் கப்­ரா­லையும் அது தொடர்பில் விசா­ரணை செய்து நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்.

2008 இலும் சரி 2015 இலும் சரி மத்­திய வங்கி பிணை முறி மோச­டிகள் கார­ண­மாக ஊழியர் சேம இலாப நிதி­யத்தின் பணம், பெரு­ம­ளவு மோசடி செய்­யப்­பட்­டுள்­ளது. 8529 மில்­லியன் ரூபா இவ்­வாறு மோசடி செய்­யப்­பட்­டுள்­ளது. இது இந் நாட்டின் 70 இலட்சம் தனியார் ஊழி­யர்­களின் வியர்வை. அதே போல் மஹ பொல உயர் கல்வி புலமை பரிசில் நிதியம், தேசிய சேமிப்பு வங்கி, காப்­பு­றுதி கூட்­டுத்­தா­பனம் ஆகி­ய­வற்றின் பணம் இவ்­வாறு மோசடி செய்­யப்­பட்­டுள்­ளது.

 இந் நிலையில் இந்த மோச­டிக்கு எதி­ராக நட­வ­டிக்கை எ டுக்க புதுச் சட்டம் இயற்ற வேண்டும் என கூறப்­பட்­டுள்­ளதால் உடன் பாரா­ளு­மன்றை கூட்டி அதற்­கன நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்டும்.

  மோசடிக் காரர்­க­ளுக்­கான தண்­டனை கொடுக்­கப்­படல் வேண்டும். அதுவே மக்­களின் எதிர்ப்­பார்ப்பு. இந்த அறிக்­கையைப் போன்றே ஏனைய பாரிய மோச­டிகள் தொடர்­பி­லான 34 அறிக்­கைகள் தொடர்­பிலும் நட­வ­டிக்கை எடுக்­க­பப்டல் வேண்டும்.

ஜனா­தி­பதி வீர வசனம் பேசு­வதை விட்­டு­விட்டு அவற்றை செயலில் காட்ட வேண்டும். அண்­மையில் தனது வாள் வீச்சில் யாரெல்லாம் சிக்கப் போகின்­ற­னரோ தெரி­யாது என கடு­மை­யாக பேசினார். அடுத்த சில நாட்­க­ளி­லேயே ஜனா­தி­ப­தியின் வாள் பிர­த­மரின் கழுத்தை பதம்­பார்க்க தவ­றி­விட்­டது. அவ­ரது வாள் வீச்சின் காற்று மட்­டுமே பிர­த­மரின் கழுத்தை வரு­டி­யுள்­ளது. வாள் வெட்டு விழ­வில்லை.

அர்ஜுன் மகேந்­தி­ரனை நிய­மிக்கும் போது பிர­தமர் சரி­யான அனு­கு­மு­றையை பின் பற்­றி­ய­தா­கவும், அவரை பாது­கக்கும் விததில் பாரா­ளு­மன்றில் பேசி­யது தவறு என்றும் ஜனா­தி­பதி கூறு­வது என்ன முறைமை என தெரி­ய­வில்லை.

இந்த பிணை முறி மோச­டி­யுடன் பிரதமர் ரணில் தொடர்புபட்டுள்ளமை சிறு பிள்ளைக்கும் தெரியும். அர்ஜுன் மகேந்திரனை காப்பாற்ற பிரதமரே முன் நின்றார். இந்த மோசடியின் பிரதான சூத்திரதாரியே பிரதமர் தான். அவருக்கு எதிராக நடவடிக்கை அவசியம் வேண்டும்.

குற்றவியல், சிவில் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எ டுத்து நட்டத்தை மீள அறவீடு செய்வதுடன் குற்றவியல் சட்டத்தின் கீழ் தண்டனை வழங்க வேண்டும் என்பது ஆணைக் குழுவின் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அவை நிறைவேற்றப்பட வேண்டும். அது வரை நாம் ஓயமாட்டோம். மகேந்திரனை பாதுகாக்க ரணில் வந்தார். அலோசியஸை காக்க ரவி வந்தார். தற்போது வசமாக அவர்கள் மாட்டிக்கொண்டுள்ளனர். நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டும். என்றார்.

 

 

பாரா­ளு­மன்ற அமர்வை கூட்ட பிரே­ரணை முன்­வைப்போம் : திட்டவட்டமாக அறிவித்தது சுதந்­திரக் கட்சி

 

(எம்.ஆர்.எம்.வஸீம்)

மத்­திய வங்கி பிணை­முறி தொடர்­பான ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் விசா­ரணை அறிக்கை தொடர்பில் விவாதம் நடத்த பாரா­ளு­மன்­றத்தை கூட்­டு­வ­தற்கு ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி பிரே­ர­ணை­யொன்றை முன்­வைக்க தீர்­மா­னித்­துள்­ளது என கட்­சியின் சிரேஷ்ட உறுப்பி­னரும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் செய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான மஹிந்த அம­ர­வீர தெரி­வித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி தலைமை அலு­வ­ல­கத்தில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில்,  மத்­திய வங்கி பிணை­முறி ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் விசா­ரணை அறிக்கை ஜனா­தி­ப­தி­யிடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ள­துடன் அதன் பரிந்­து­ரை­களை ஜனா­தி­பதி மக்­க­ளுக்கு வெளிப்­ப­டுத்­தினார். ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரைக்­க­மைய அடுத்த கட்ட நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­படும்.  

அத்­துடன் ஆணைக்­கு­ழுவின் அறிக்கை தொடர்­பாக பாரா­ளு­மன்­றத்தில் விவாதம் நடத்­தப்­ப­ட­வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மற்றும் பிரதி அமைச்­சர்கள் எங்­க­ளிடம் கோரிக்கை விடுத்து வரு­கின்­றனர். அதன் பிர­காரம் பாரா­ளு­மன்­றத்தை கூட்டி இது தொடர்­பாக விவாதம் ஒன்றை மேற்­கொள்­வ­தற்கு ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி பிரே­ர­ணை­யொன்றை முன்­வைக்க தீர்­மா­னித்­துள்­ளது.

அத்­துடன் பாரா­ளு­மன்ற விவா­தத்­தின்­போது மத்­திய வங்கி பிணை­முறி தொடர்­பாக மாத்­திரம் விவா­திப்­ப­தற்கு பாரா­ளு­மன்­றத்தை கூட்­டு­மாறு நாங்கள் தெரி­விக்­க­மாட்டோம். இதற்கு முன்னர் பாரிய நிதி மோசடி தொடர்­பாக விசா­ரணை நடத்­திய ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்கை கைய­ளிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. அது­தொ­டர்­பா­கவும் விவா­திக்­க­வுள்ளோம்.

மத்­தி­ய­வங்கி பிணை­முறி தொடர்­பான விசா­ரணை அறிக்­கையை மறைக்­கவே பாரிய நிதி மோசடி தொடர்­பான அறிக்கை அவ­ச­ர­மாக கைய­ளிக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் உதய கம்­மன்­பில தெரி­வித்­தி­ருந்தார். ஆனால் அவ்­வாறு இல்­லாமல் பாரிய நிதி மோசடி விசா­ரணை அறிக்­கைக்கு முன்­னரே இந்த அறிக்கை வெளி­வந்­துள்­ளது. பிணை­முறி அறிக்­கையை மறைப்­ப­தற்கு நாங்கள் நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்தால் ஆரம்­ப­மாக பாரிய நிதி மோசடி அறிக்­கை­யையே கொண்­டு­வந்­தி­ருக்­க­வேண்டும்.

அத்­துடன் நிதி மோசடி தொடர்­பான ஜனா­தி­பதி ஆணைக்­குழு கடந்த இரண்டு வரு­டங்­க­ளுக்கு முன்னர் அமைந்­த­தாகும். இந்த மோச­டியில் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி உறுப்­பி­னர்கள் பல­ருக்கு இது­தொ­டர்பில் குற்­றச்­சாட்டு இருக்­கின்­றது. அத­னால்தான் இந்த இரண்டு மோச­டி­க­ளிலும் பிர­தான கட்சி உறுப்­பி­னர்­க­ளுக்கு தொடர்பு இருப்­ப­தாக ஜனா­தி­பதி தெரி­வித்­தி­ருந்தார். அதனால் கடந்த அர­சாங்­கத்தில் இடம்­பெற்ற மோச­டி­களை மறைக்க எங்­க­ளுக்கு எந்த தேவையும் இல்லை.

எனவே இரண்டு ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் தொடர்பாக விவாதம் நடத்தப்படவேண்டும். அதற்காக பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிரேரணை முன்வைக்க தீர்மானித்துள்ளது.அத்துடன் இந்த விவாதத்தின்போது அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் போதுமான காலம் வழங்குவோம் என்றார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-01-05#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.