Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாங்கள் இணக்க அரசியல் செய்தபோது துரோகியென்றவர்கள் அதனை இன்று செய்கின்றனர் –டக்ளஸ் தேவானந்தா

Featured Replies

நாங்கள் இணக்க அரசியல் செய்தபோது துரோகியென்றவர்கள் அதனை இன்று செய்கின்றனர் –டக்ளஸ் தேவானந்தா

 

நாங்கள் இணக்க அரசியல் செய்தபோது துரோகியென்றவர்கள் அதனை இன்று செய்கின்றனர் –டக்ளஸ் தேவானந்தா

நாங்கள் இணக்க அரசியல் செய்தபோது தமிழ் தேசிய கூட்டமைப்பு எங்களை துரோகியென்றார்கள்.ஆனால் அவர்களும் அதே இடத்துக்கு வந்துள்ளனர்.எங்களது வழிமுறைக்கு வந்திருந்தாலும் எங்களது பொறிமுறைக்கு இன்னும் வரவில்லை என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் (ஈ.பி.டி.பி.)செயலாளர் நாயகமும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.மட்டக்களப்பு மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் (ஈ.பி.டி.பி.) சார்ப்pல் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவுறுத்தும் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் மட்டக்களப்பில் நடைபெற்றது.
மட்டக்களப்பு கூட்டுறவு நிலைய மண்டபத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சிமன்றத்தில்போட்டியிடும் வேட்பாளர்கள்,கட்சி முக்கிஸ்தர்கள் கலந்துகொண்டனா.
இதன்போது வேட்பாளர்கள் அறிவுறுத்தப்பட்டதுடன் எதிர்கால தேர்தல் செயற்பாடுகள் தொடர்பிலும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற கொள்கையுடன் நாங்கள் தொடர்ந்து பயணித்துவருகின்றோம்.எமது கருத்துகள் போதியளவு மக்களை சென்றடைவதில்லை.சில தமிழ் கட்சிகளும் ஊடகங்களும் எங்களது யதார்த்தமான கருத்துகளை மக்களுக்கு எட்டக்கூடிய பாதைகளை விரும்பாத காரணத்தினால் திட்டமிட்ட வகையில் எங்களு;ககு எதிராக சேறு”சல் நடவடிக்கையில் ஈடுபட்டார்கள்.
எனினும் நாங்கள் எங்கள் கொள்கைமீது உறுதியாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் இருந்துவருகின்றோம்.மக்கள் சரியான திசையினை நோக்கிவரவேண்டும்.அந்த நம்பிக்கையுடனேயே எமது செயற்பாடுகளை முன்கொண்டுசெல்கின்றோம்.
வடகிழக்கு பிரிக்கமுடியாத தனியலகு என்பதை வெளிப்படுத்தும் வகையில் கிழக்கு மாகாணத்தில் இம்முறை அம்பாறை,மட்டக்களப்பு,திருகோணமலை மாவட்டங்களில் ஏழு சபைகளில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி போட்டியிடுகின்றது.வடகிழக்கில் 38சபைகளில் போட்டியிடுகின்றோம்.
எமது கொள்கையானது நடைமுறைசாத்தியமானது,இந்த உள்ளுராட்சிசபையில் மக்கள் சரியானவர்களை தெரிவுசெய்யவேண்டும்.எமது வீணைச்சின்னத்திற்கு வாக்களித்து வெற்றிபெறசெய்ய வைத்தால் நாங்கள் தமிழ் மக்களின் பல பிரச்சினைக்கு தீர்வுகாணமுடியும்.
நாங்கள் அன்றாட பிரச்சினைக்கு தீர்வாக,அபிவிருத்திகளுக்கான தீர்வாக,அரசியல் உரிமைக்கான தீர்வாக என மூன்று திட்டங்களை முன்வைத்துள்ளோம்.இதுவே எங்களது நீண்டகால கொள்கையாகும்.நாங்கள் அதில் எந்த மாற்றத்தினையும் செய்யவில்லை.
இன்று மக்கள் மத்தியில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.சரியான பாதையினை நோக்கி சிந்திக்கும் நிலையுருவாகிவருகின்றது.மக்களின் நிம்மதியான வாழ்வினை தமிழ் தலைமைகள் பெற்றுக்கொடுக்கவில்லை.தமது சுயநல அரசியலுக்காக கடந்த காலத்திலும் இன்றும் மக்களை உசுப்பேத்தி சூடேத்தி வாக்குகளை அபகரிப்பதே அவர்களின் நோக்கமாகும்.தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்ககூடிய அக்கரை இல்லை.ஆசனங்களை பங்கிடுவதில் இருக்கும் அக்கறை மக்களின் பிரச்சினையை தீர்ப்பதில் இருப்பதில்லை.ஆசனங்களுக்காகவே சண்டையிடுகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துவருகின்றனர்,யாருக்கும் அடிமையாகாத கையேந்தாத சூழலைபெற்றுக்கொடுக்கவேண்டிய தேவையுள்ளது.மாகாணசபையானது பொன் முட்டையிடும் வாத்துக்கு சமனானது.இதன் ஊடாக பல பிரச்சினைகளுக்கான தீர்வினை நாங்கள் காணமுடியும்.நான் கற்பனையில் இதனை சொல்லவில்லை,எனது அனுபவம் ஊடாகவே சொல்லுகின்றேன்.
இலகுவில் செல்லக்கூடிய பாதைகளை விடுத்து மண்டையினை மோதி செல்லமுற்பட்டால் பாதிப்பே ஏற்படும்.இதுவே கடந்த காலத்தில் தமிழ் தலைமைகள் தமிழ் மக்களுக்கு செய்ததாகும்.இலகுவான பாதைகள் இருக்கின்றது.அதன் ஊடாக சென்று இலகுவாக எமது கொள்கைகளை அடைந்திருக்கமுடியும்.
இயக்கங்களின் போராட்டங்களினால் உருவாக்கப்பட்ட மாகாணசபையின் 13வதுதிருத்த சட்டத்தினை பலப்படுத்தி முன்கொண்டுசெல்வதன் மூலமே ஒரு நிலையான தீர்வினைப்பெறுவதற்கான யதார்த்தமான அணுகுமுறையாகும்.இதனையே நான் ஆரம்பகாலம் தொடக்கம் முன்வைத்துவருகின்றேன்.
தற்போது முன்வைக்கப்பட்டுள்ள அரசியல் சீர்திருத்ததிற்கு பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவைப்படுகின்றது.சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லவேண்டும்.இது இன்றைய காலகட்டத்தில் சாத்தியமான விடயமில்லை.அதுவெறும் கனவாகவே இருக்குமே தவிர ஜதார்த்தல் அல்ல.இருக்கின்ற ஒன்றில் இருந்து முன்னோக்கி செல்வதே ஜதார்த்தமானதாக இருக்கும்.13வது திருத்ததினை முழுமையாக அமுல்படுத்துவதன் மூலம் அதனை அடையமுடியும்.
கடந்த காலத்தில் ஈ.பி.டி.பி.மீது பல்வேறு குற்றசாட்டுகள் அரசியல்வாதிகளினால் முன்வைக்கப்பட்டன.ஜோசப்பரராஜசிங்கம் கொலை,ரவிராஜ்கொலை,மகேஸ்வரனின் கொலை,கொப்பேகடுவ,அத்துலத்முதலி, பல ஊடகவியலாளர்கள் கொலை போன்றவை அரசியல் காரணங்களுக்காக எங்கள் தலைமீது சுமத்தப்பட்டது.திருகோணமலையில் ஐந்து மாணவர்கள்,கொழும்பில் 21மாணவர்கள் கடத்தப்பட்டமை போன்ற குற்றச்சாட்டுகளும் அரசியல் உள்நோக்கங்களுக்காக எங்கள் மீது சுமத்தப்பட்டது.இன்று விசாரணைக்கூடாக எல்லாம்வெளியில் அம்பலப்பட்டுள்ளது.
ஈ.பி.டி.பி.யின் கொள்கை கொள்ளையடிப்பதும் கொலைசெய்வதும் அல்ல.கொள்ளையடிப்பதும்,கொலைசெய்வதும் ஊடாக பிரச்சினைக்கு தீர்வுகாணமுடியும் என்றால் எப்போதே பிரச்சினைகளை தீர்த்திருக்கமுடியும்.அதில் இருந்து நாங்கள் வேறுபட்டுள்ளோம்;.இந்திய இலங்கை ஒப்பந்தம் ஊடாக தேசிய நீரோட்டத்தில் கலந்துகொண்டு இணக்க அரசியல் ஊடாக ஜனநாயக வழியுடாக எமது பிரச்சினைகளை தீர்க்கலாம் என நம்புகின்றோம்.
எமது நிலைப்பாடுகள் சரியானது என்பதை காலம் உணர்த்துவருகின்றது.அன்று நாங்கள் இணக்க அரசியல் செய்தபோது தமிழ் தேசிய கூட்டமைப்பு எங்களை துரோகியென்றார்கள்.ஆனால் அவர்களும் அதே இடத்துக்கு வந்துள்ளனர்.எங்களது வழிமுறைக்கு வந்திருந்தாலும் எங்களது பொறிமுறைக்கு இன்னும் வரவில்லை.

DSC08201DSC08205DSC08207DSC08221

http://www.samakalam.com/செய்திகள்/நாங்கள்-இணக்க-அரசியல்-செ/

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை,  காட்டிக் கொடுப்பது... மட்டுமே, 
டக்ளஸ் தேவானந்தாவின், இணக்க... அரசியல். 
அதனைத்  தான்.... சம்பந்தன் / சுமந்திரன்   கூட்டமைப்பும்  செய்கின்றது.

ஒரு,  வித்தியாசம்...  தேவானந்தாவிற்கு, மகிந்த மட்டுமே.....
சம்பந்தனுக்கு.... மைத்திரியும், மகிந்தவும்... கூட்டாளிகள். 
இதில்... யார், திறமையாக....  தமிழர் வாழ்வை,  சீர்  குலைத்தவர்கள்  என்பதை,  நீங்களே... முடிவு  பண்ணிக்  கொள்ளுங்கள். 

Edited by தமிழ் சிறி

17 hours ago, நவீனன் said:

நாங்கள் இணக்க அரசியல் செய்தபோது துரோகியென்றவர்கள் அதனை இன்று செய்கின்றனர் –டக்ளஸ் தேவானந்தா

கடத்தல், கப்பம், கொள்ளை, கொலை, பாலியல் பலாத்காரம் போன்றவை தான் டக்ளசின் அரசியல் என்பது உலகறிந்த உண்மைகள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.