Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னை சூப்பர் கிங்ஸ் செய்திகள்

Featured Replies

  • தொடங்கியவர்

‘அன்பால் சேர்ந்த கூட்டம், அழிக்க முடியாது’: சிஎஸ்கே வீரர் இம்ரான் தாஹிர் சர்ச்சை ட்விட்

Imran-Tahir

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் இம்ரான் தாஹிர் : கோப்புப் படம்

சென்னையில் காவிரிக்கு ஆதரவான போராட்டம் தீவிரமடைந்து, ஐபிஎல்போட்டி நடத்தவும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த சூழலில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் இம்ரான் தாஹீர் சர்ச்சைக்குரிய வகையில் ட்விட் செய்துள்ளார்.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட காவிரி நிதிமேம்பாட்டு ஆணையத்தை அமைக்க கோரி தமிழகத்தில் போராட்டம் தீவிர மடைந்துள்ளது.

இந்த சூழலில் ஐபிஎல்போட்டிகள் சென்னையில் நடந்தால், மக்களின் கவனம், இளைஞர்களின் கவனம் கிரிக்கெட்டின் மீது திரும்பிவிடும், ஆதலால், ஐபிஎல் போட்டிகளை நடத்தக்கூடாது என்று பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் கடந்த சில நாட்களாக தீவிரமாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையிலான போட்டி நடக்க இருக்கிறது. இந்த போட்டியை நடத்தக்கூடாது என்று பல்வேறு அமைப்பினரும், அரசியல் கட்சிகளும் இன்று காலையில் இருந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த சூழலில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் இம்ரான் தாஹிர் சர்ச்சைக்குரிய வகையில் டிவிட் செய்துள்ளார். அதில் அவர் கூறுகையில், சென்னை சூப்பர் கிங்ஸின் சொந்த மண்ணில் ஐபிஎல் போட்டியில் இன்றுஇரவு விளையாட நான் மிகுந்த ஆர்வமாக இருக்கிறேன். இந்த போட்டியைக் காண சென்னை மக்கள் மிகுந்த ஆர்வமாக இருக்கிறார்கள், எங்களுக்கு உற்சாகத்துடன் ஆதரவு அளிப்பார்கள் என்று நம்புகிறேன்.

இது அன்பால சேர்ந்த கூட்டம் அழிக்க முடியாது. எடுடா வண்டிய, போடுடா விசில

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் காவிரி நிதிநீருக்கான போராட்டம் தீவிரமடைந்து இருக்கும்நிலையில், இம்ரான் தாஹிரின் ட்விட் யாருக்காக இந்த கருத்தை பகிர்ந்துள்ளார், காவிரி நதிக்காக போராடி வரும் தமிழக மக்களுக்காகவா அல்லது ஐபிஎல் போட்டிக்கு ஆதரவாக ஆவர் ட்விட் செய்துள்ளாரா என்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

http://tamil.thehindu.com/sports/article23494426.ece?homepage=true

  • Replies 133
  • Views 16.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

வெளியே ஆர்ப்பாட்டம்; உள்ளே கொண்டாட்டம்!

 
 

ஐபிஎல் போட்டிகள் நடத்தக் கூடாது என சேப்பாக்கம் மைதானத்துக்கு வெளியே பல போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் சென்னை அணியைச் சேர்ந்த வீரரின் மகனுக்கு அவர்கள் தங்கியிருக்கும் ஓட்டலில் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

ஐபிஎல்

இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள போட்டிகளை நிறுத்த வேண்டும் என்பதற்காகக் கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தில் பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதிலும் குறிப்பாக இன்று காலை முதல் மைதானத்தைச் சுற்றி ஆங்காங்கே பல்வேறு இடங்களில் பல விதங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஐபிஎல் போட்டிக்கு வலுத்து வரும் எதிர்ப்பால் சேப்பாக்கம் மைதானத்துக்கும், வீரர்கள் தங்கியிருக்கும் தனியார் ஓட்டலுக்கும் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் காலை முதலே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மைதானத்துக்குள் போட்டிகளைக் காணச் செல்லும் ரசிகர்களுக்கும் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. போலீஸாரின் பாதுகாப்பையும் மீறி மைதானத்தைச் சுற்றி சுமார் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

b_day_17598.jpg

வெளியில் இவ்வளவு பெரிய போராட்டங்கள் நடைபெற்று வரும் இந்த வேளையில் சென்னை வீரர்கள் தங்கியிருக்கும் ஓட்டலில் சிஎஸ்கே அணியைச் சேர்ந்த, தென்னாப்ரிக்க வீரர் இம்ரான் தாஹிர் மகன் ஜிப்ரானின் 4-வது பிறந்தநாள் விழா கேக்வெட்டி விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. பிறந்த நாள் கொண்டாடப்பட்ட புகைப்படங்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடுள்ளது.

https://www.vikatan.com/news/tamilnadu/121802-csk-celebrate-imrantahir-son-gibrans-birthday-in-chennai.html

  • தொடங்கியவர்

சென்னைகூட ஆடுனா அல்லு கேரெண்டி: ஹர்பஜன் சிங் தமிழில் ட்வீட்


 

 

harbhajan-singh-tweets-in-tamil

 

பயங்கர களேபரத்துக்கு இடையே நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையேயான போட்டி நடைபெற்றது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது. 


இந்தப் போட்டி குறித்து ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் ட்வீட் செய்திருக்கிறார்.
அதில், "மெட்ராஸ்ல  இருக்குது கிண்டி
நீ ஓட்றதோ பெட்ரோல் போட்ட வண்டி
நீ அடிக்கிற பந்து போயிருமாடா என்ன தாண்டி
@chennaiipl கூட ஆடுனா உனக்கு அல்லு கேரெண்டீ 
போயிடுவியா என் ஏரியாவ தாண்டி"
எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

'சென்னை அணி கூட ஆடுனா அல்லு கேரண்டி' என்று ஹர்பஜன் சிங் பதிவிட்டிருக்கும் இந்த ட்வீட்டுக்கு சிஎஸ்கே ரசிகர்கள் பலத்த வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

http://www.kamadenu.in/news/sports/1741-harbhajan-singh-tweets-in-tamil.html?utm_source=site&utm_medium=home_banner&utm_campaign=home_banner

  • தொடங்கியவர்

தன்னம்பிக்கையின் மறுபெயர் சிஎஸ்கே: அடுத்தடுத்து இரு ஆட்டங்களிலும் ஒரே மாதிரியாக வென்ற கதை!

 

 
Billings1

 

இந்த வருட ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய இரு ஆட்டங்களும் பரபரப்பாக அமைந்து கடைசியில் வெற்றியைத் தேடித்தந்துள்ளன. இந்த இரு ஆட்டங்களிலும் சென்னை அணி வெற்றி பெற்றதில் ஓர் ஒற்றுமை உண்டு.

நேற்று சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. 2 ஆண்டுகள் தடைக்கு பின் சொந்த மைதானத்தில் சிஎஸ்கே அணி களமிறங்கியது. நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்களை குவித்து. அதைத் தொடர்ந்து 203 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் சூப்பர் கிங்ஸ் அணி களம் கண்டது. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 19.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து சூப்பர் கிங்ஸ் அணி 205 ரன்களை குவித்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது.

இதேபோன்றதொரு பரபரப்பான ஆட்டத்தில் மும்பையை வென்றது சென்னை. இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி த்ரில் வெற்றி கண்டது. இதன்மூலமாக, 2 ஆண்டு தடைக்குப் பிறகு இந்த சீசனில் களம் கண்டுள்ள சென்னை அணி, வெற்றியுடன் தனது ஐபிஎல் பயணத்தை மீண்டும் தொடங்கியது. 

இந்த இரு ஆட்டங்களிலும் கடைசி 4 ஓவர்களில் தான் சிஎஸ்கே அதிக ரன்கள் குவித்து வெற்றியை அடைந்தது. இதில் பெரிய ஆச்சர்யமென்றால் இரு ஆட்டங்களும் ஒரேமாதிரியாக அமைந்ததுதான். 

மும்பைக்கு எதிராக

கடைசி 4 ஓவர்களில் 51 ரன்கள் தேவைப்பட்டன.
கடைசி 2 ஓவர்களில் 27 ரன்கள் தேவைப்பட்டன.
ஒரு பந்து மீதமிருக்க வெற்றியை அடைந்தது சிஎஸ்கே.

கொல்கத்தாவுக்கு எதிராக

கடைசி 4 ஓவர்களில் 51 ரன்கள் தேவைப்பட்டன.
கடைசி 2 ஓவர்களில் 27 ரன்கள் தேவைப்பட்டன.
ஒரு பந்து மீதமிருக்க வெற்றியை அடைந்தது சிஎஸ்கே.

jadhav122.jpg

http://www.dinamani.com/sports/special/2018/apr/11/csk-2898108.html

  • தொடங்கியவர்

‘தோனியைவிட ‘கூலாக’ களத்தில் வேறு எந்த வீரரும் இருக்க முடியாது’- சிஎஸ்கே வீரர் பில்லிங்க்ஸ் பெருமிதம்

 

 
billings970pti

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் சாம் பில்லிங்ஸ் : கோப்புப் படம்   -  படம்: ஏஎப்ஃபி

சென்னை சூப்பர்ஸ் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியைக் காட்டிலும் ரொம்ப கூலாக களத்தில் வேறு எந்த வீரரும் இருக்க முடியாது என்று அந்த அணி வீரர் சாம் பில்லிங்ஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடந்த ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

தோல்வியை நோக்கி சென்று கொண்டிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் வெற்றிக்கு அருகே அழைத்து வந்தார்.

23 பந்துகளைச் சந்தித்த பில்லிங்ஸ் 56 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். சாம் பில்லிங்ஸ் அதிரடி பேட்டிங்தான் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது, ஆட்டநாயகன் விருதும் அவருக்கே வழங்கப்பட்டது.

வெற்றிக்கு பின் ஊடகங்களிடம் சாம் பில்லிங்ஸ் பேசியாதாவது:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முதல் முறையாக இடம் பெற்று, அதிலும் உலகின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவரான மகேந்திர சிங் தோனியுடன் இணைந்து முதல் முறையாக விளையாடினேன். இருவரின் பாட்னர்ஷிப் 50 ரன்களுக்கு மேல் நீடித்தது.

களத்தில் தோனியினைப் போல் பொறுமையாக, அமைதியாக, ரொம்ப கூலாக இருப்பதைப்போல், வேறு எந்த வீரரும் இருக்க முடியாது. அவருடன் இணைந்து விளையாடியதால் என்னவோ அவரின் குணங்கள் எனக்கும் அந்த நேரத்தில் பரவிவிட்டது. அதனால், இருவருக்கும் இடையேயான பாட்னர்ஷிப் நீண்டநேரம் நீடித்தது.

அதிகமான டாட் பந்துகளைவிடாதீர்கள், பந்துகளை வீணாக்காமல் ஓடிக்கூட ரன்களை எடுக்கலாம் என்று அடிக்கடி தோனி என்னிடம் கூறினார். விக்கெட்டுகளுக்கு இடையே விரைவாக ஓடும் திறமையை தோனி பெற்று இருக்கிறார். இதனால், தொடக்கத்தில் நான் நிதான ஆட்டத்தை கையாண்டு, அதன்பின் எனது கிடைத்த வாய்ப்பில் எனது அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்தினேன். நான் அடித்து விளையாடும்போது, தோனி என்னை ஊக்கப்படுத்திக்கொண்டே இருந்தார்.

இவ்வாறு சாம் பில்லிங்ஸ் தெரிவித்தார்.

http://tamil.thehindu.com/sports/article23500967.ece?homepage=true

  • தொடங்கியவர்

மறுபடியும் சி.எஸ்.கே: ஒரு ரசிகனின் டைரி

 

(இந்தியாவில், ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் மிகவும் பிரபலமானது. இந்தத் தொடரில் முன்னணி அணியாகக் கருதப்படும் சி.எஸ்.கே எனப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இரண்டு ஆண்டு தடைக்குப் பிறகு இந்த ஆண்டு மீண்டும் களமிறங்கியுள்ளது. இந்த நிலையில், அந்த அணியின் தீவிர ரசிகர்கள் இதை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை, அத்தகைய ரசிகர்களில் ஒருவரான குமரன் குமணன் பிபிசி தமிழுடன் பகிர்ந்து கொள்கிறார். இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துக்கள். இவை பிபிசி தமிழின் கருத்துக்கள் அல்ல.)

சென்னை சூப்பர் கிங்ஸ் - சுரேஷ் ரெய்னாபடத்தின் காப்புரிமைMANJUNATH KIRAN

2003-ம் ஆண்டின் மத்தியில் இங்கிலாந்தில் கவுன்டி போட்டிகள் நடப்பது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. இதே போன்ற வடிவத்தில் இந்தியாவிலும் கிரிக்கெட் போட்டிகள் நடந்தால் எப்படி இருக்கும் என கற்பனை செய்யத் துவங்கினேன். ஆனால் அதனை தீவிரமாக நான் யோசிக்கத் துவங்கவில்லை.

காலம் உருண்டோடியது. அது 2008-ம் ஆண்டு. அன்று, சென்னையில் ஒரு மூலையில் ஒரு காஃபி கோப்பையுடன் ஜந்து ஆண்டுகளுக்கு முன் ஒரு ரசிகன் அமர்ந்திருந்த போது அவனுள் தோன்றிய சிந்தனை போலவே இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கும் வந்ததன் விளைவு ஐபிஎல்.

முதல் முதலாக நடந்த ஐபிஎல் போட்டியிலேயே அதிரடி காட்டினார் பிரெண்டன் மெக்கல்லம். பெங்களூர் அணியை மிக எளிதாக வென்றது கொல்கத்தா அணி. 20 ஓவர் போட்டியில் ஒரு வீரர் 150 ரன்களுக்கும் மேல் எடுத்ததை பார்த்தபோது ஆச்சர்யமாக இருந்தது.

ஆனால் எனக்கு அந்தப் போட்டியைவிட அதிகம் நினைவில் நிற்பது, மெக்குல்லம் சதமடித்த முதல் ஐபிஎல் போட்டிக்கு மறுநாள் நடந்த போட்டியே. காரணம், அன்றைய நாளான ஏப்ரல் 19 ஆம் தேதியின் இரவில் தான், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் போட்டியில் விளையாடியது .

கிரிக்கெட்டை ரசித்துப் பார்க்கும் அனைவரும் விரும்பும் மைக்கேல் ஹஸ்ஸி, அன்றைக்கு ஓர் அருமையான சதத்தைப் பதிவு செய்தார். அந்தச் சதத்தின் உதவியுடன் 20 ஓவர்களில் 240 ரன்களைத் தொட்டது சென்னை சூப்பர் கிங்ஸ். பச்சை நிற புற்களுடன் மொகாலி மைதானம்; தலைக்கு மேல் மின்னொளியோடு மின்னும் கறுமை நிற வானம்; அதோடு மட்டுமின்றி, அன்று முதல் மஞ்சள் நிறமும் கிரிக்கெட் ரசிகனான எனக்கு மறக்க முடியாத ஒன்றானது.

சென்னை சூப்பர் கிங்ஸ் - டுவைன் பிராவோபடத்தின் காப்புரிமைMANJUNATH KIRAN

சிஎஸ்கேவுடன் எனக்கு அன்று துவங்கிய பந்தம், அந்த ஆண்டின் இறுதிப்போட்டியில் கடைசி வரை போராடி அந்த அணி தோற்ற பின்னரும் அந்த அணியின் முயற்சிக்காக பலத்த கைத்தட்டல் எழுப்பிய வரை தொடர்ந்தது. அன்று முதல் இன்று வரை ஒரு விஷயத்தை தொடர்ந்து செய்து வருகிறேன்.

மாற்றுத்திறனாளியாகிய நான், எனது ஊன்றுகோலை பிடித்தபடி எழுந்து நின்று மரியாதை செய்யும் வழக்கம் தான் அது. எந்த போட்டியில் எவர் நன்றாக விளையாடினாலும் நான் அப்படி மரியாதை செய்யத் தவறுவதில்லை.

ஐபிஎல் இரண்டாவது சீசன் தென்னாப்பிரிக்காவில் நடந்தது ஒரு வருத்தம். மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறாமல் போனது மற்றொரு சோகமாக அமைந்தது எனக்கு. மேலும் அந்த தொடரில் சென்னைக்கு கிடைத்தது நான்காம் இடமே. இதுவரையில் ஐபிஎல் தொடர்களில் சென்னை அணியின் மோசமான நிலையும் அதுவே. ஐபிஎல்லில் சென்னை அணியின் ஆதிக்கத்தை இந்த ஒரு விஷயமே சொல்லிவிடும்.

முதல் இரண்டு தொடர்களில் விட்டதை மூன்றாம் மற்றும் நான்காம் தொடர்களில் பிடித்தது சென்னை அணி. ஆம், அடுத்தடுத்த ஆண்டுகளில் மும்பை மற்றும் பெங்களூரூ அணிகளை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. இதில் 2011 ஐபிஎல் சீசன் இறுதிப் போட்டி சென்னையிலேயே நிகழ்ந்ததும் அதில் சிஎஸ்கே வென்றதும் பெருமகிழ்ச்சி அளித்தது.

 

 

இரண்டு தொடர் வெற்றிகள் என்றாலும் அவற்றில் 2010 வெற்றி சிறப்பானது என்பேன். 2010-ல் நடந்த இறுதிப்போட்டியில் சிஎஸ்கே வென்ற விதமும், அந்த போட்டியில் பொல்லார்டை சிஎஸ்கே ஆட்டமிழக்கச் செய்த விதமும் முக்கியமானவை.

ஓரு அணித்தலைவராக தோனி டி20 போட்டிகளின் ஆழமும் அடர்த்தியும் உணர்ந்து செயல்பட்டதால் அதே ஆண்டின் சாம்பியன்ஸ் லீக் கோப்பையும் சென்னை வசமானது .இங்கிருந்து தான் மற்ற அணிகளின் ரசிகர்கள் சி.எஸ்.கே அணிக்கு எதிரான கருத்துக்களை முன்வைக்க தொடங்கினர். 2015க்கு பின் அது இன்னும் அதிகமானது .

2012 முதல் 2015 வரை எத்தனையோ பிரம்மாண்ட தருணங்கள் சிஎஸ்கே ரசிகனுக்கு வாய்த்தது. ஆனால் மூன்று இறுதிப்போட்டிகளில் ஒன்றில் கூட வெல்ல முடியவில்லையே என்ற வருத்தம் வாட்டியது .

அதிலும் 2014ல் மும்பையில் இரண்டாம் தகுதிச்சுற்று ஆட்டத்தில் பஞ்சாப் அணிக்கு எதிராக ரெய்னா அடித்த 87 ரன்களில் ஒவ்வொன்றும் பொன்னுக்கு நிகர் என்பேன். நான் எழுந்து நின்ற மற்றொரு தருணம் அது. ஆனால் அப்போட்டியில் ரெய்னா விக்கெட் விழுந்ததும் நடந்த அதிர்ச்சி சரிவை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. 2015 ஐபிஎல்லிலும் மும்பை அணியிடம் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தது சென்னை அணி.

சென்னை சூப்பர் கிங்ஸ்படத்தின் காப்புரிமைGALLO IMAGES

2015 பிற்பகுதியில் சென்னை ,ராஜஸ்தான் அணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் அந்த அணிகளின் வீரர்கள் மற்ற அணிகளில் விளையாடலாம் எனும் விஷயத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வீரர்கள் விளையாட அனுமதிக்கப்படும் நிலையில். அணிகளை கலைக்காமல் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து வேறொரு நிறுவனத்துக்கு கை மாற்றியிருக்கலாமே என்று நினைத்தேன். ஏனெனில் சென்னை சார்பில் எந்த அணியும் அந்த ஐபிஎல் சீசனில் விளையாடவில்லை

2016ல் புனே அணியில் தோனியை பார்க்க வேண்டிய நிலையில் கண்ணீரை கட்டுப்படுத்த இயலவில்லை. 2017 தொடரில் தோனியிடமிருந்து தலைமை பொறுப்பும் பறிக்கப்பட்டது.

2018-ல் மீண்டும் சிஎஸ்கே

முன்பிருந்த அணியை விட வயதான வீரர்கள் அதிகம் மற்றும் பெரிய அளவிலும் உடனடியாகவும் அதிரடி காட்டக்கூடிய வீரர்கள் இல்லை என்பதை தவிர பெரிய குறை ஏதும் காண முடியாத அணியாக இப்போதைய சென்னை அணி உள்ளது. முரளி விஜய் மீண்டும் சென்னை அணிக்கு திரும்பியது மகிழ்ச்சி தந்துள்ளது. தென் ஆப்ரிக்க வீரரான லுங்கிடி சென்னை அணியில் விளையாட உள்ளார். அவரது பந்து வீச்சை காண காத்திருக்கிறேன்.

அணி கட்டமைப்பில் என்ன தான் மாற்றங்கள் இருந்தாலும் சரிவில் இருந்து மீளும் போர் குணத்தை களத்திலும் காட்டி அபாரமாக தொடரை தொடங்கி விட்டது சிஎஸ்கே. பிராவோ மற்றும் ஜாதவ் இருவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் வாழ்க்கையை அமர்க்களமாக துவக்கி வைத்துள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ்படத்தின் காப்புரிமைGALLO IMAGES

2016 ஆண்டு முதல் ஒரு ஐபிஎல் போட்டி கூட சென்னையில் நடைபெறவே இல்லை என்பதால் ரசிகர்கள் சோகத்தில் இருந்தனர். ரசிகர்கள் ஆரவாரத்துடன் காணப்படும் சேப்பாக்கம் மைதானம் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஆள் அரவமற்று இருந்தது.

இந்த ஆண்டு சென்னையில் போட்டி நடத்த அத்தனை ஏற்பாடுகளும் முடிந்த பின்னரும் போட்டிகளை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேறு சில காரணங்களை முன்வைத்து கோரிக்கை எழுப்பப்படுவதும், கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களும் சமூக அக்கறை இல்லாதவர்கள் போன்ற தோற்றம் கட்டமைக்கப்பட்டு வருவதும் என்னைப் போன்ற சிஎஸ்கே ரசிகர்களை மனமுடைய வைக்கும் செயல்கள்.

எனக்கு சில நல்ல நண்பர்களை தந்தது கிரிக்கெட்தான் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. டி20 கிரிக்கெட்டில் சி.எஸ்.கே உலகின் தலைசிறந்த அணிகளில் ஒன்று. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆண்டாண்டு காலமாக ரசிகராக இருந்து வருவது ஓர் உணர்வும் கூட. அந்த உணர்வை கொண்டாடவும் சி.எஸ்.கே இம்முறை தொடரை வென்றால் மரியாதை செய்ய கம்பீரமாக எழுந்து நின்று பாராட்டவும் காத்திருக்கிறேன்.

http://www.bbc.com/tamil/sport-43718024

  • தொடங்கியவர்

சென்னை ஐ.பி.எல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை திடீர் ஒத்திவைப்பு!

 
 

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஏப்ரல் 20-ம் தேதி நடைபெறவிருந்த சென்னை சூப்பர்கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையேயான ஐ.பி.எல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஒத்திவைக்கப்படுவதாகத் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. 

9f1c4d5d-c349-4b36-af66-dcb25faee0f2_173

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராகத் தமிழகம் முழுவதும் கடுமையான போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. அதன் ஒரு பகுதியாக, சென்னையில் ஐ.பி.எல் போட்டிகள் நடத்தக் கூடாது என்று போராட்டக்காரர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நேற்று, நடைபெற்ற ஐ.பி.எல் போட்டிக்கு எதிராக 2,000-க்கும் மேற்பட்டவர்கள் சேப்பாக்கம் மைதானத்தைச் சுற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

மேலும், போட்டியின்போது மைதானத்தினுள் செருப்பும் வீசப்பட்டது. இந்தநிலையில், சென்னையில் நடைபெறவிருந்த போட்டிகளை வேறு இடத்துக்கு மாற்றுவது குறித்து ஆலோசனை நடைபெறுவதாக ஐ.பி.எல் தலைவர் ராஜிவ் சுக்லா தெரிவித்திருந்தார். இந்தநிலையில், ஏப்ரல் 20-ம் தேதி நடைபெறவுள்ள சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த டிக்கெட் விற்பனையை ஒத்திவைப்பதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. 

https://www.vikatan.com/news/sports/121897-ipl-ticket-sales-has-been-postponed-tnca-announced.html

  • தொடங்கியவர்

அன்று தோனியுடன் செல்ஃபிக்கு பயந்தவர்... இன்று செய்தது மெர்சல்' - யார் இந்த பில்லிங்ஸ்?

 
 

அன்றைய ஐபிஎல் ஏலத்தில், பரபரப்பு முழுவதுமாக அடங்கியிருந்தது. பல கோடி ரூபாயில் நட்சத்திர வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டுவிட, மிச்ச சொச்சம் இருந்த விளையாட்டு வீரர்களை எல்லோரும் ஏலத்தில் எடுத்துக்கொண்டிருந்தார்கள். சாம் பில்லிங்ஸின் பெயர் ஏலத்தில் வந்தது. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சாம் பில்லிங்ஸ், 2016-2017 ஐபிஎல் போட்டிகளில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடியவர். ஆனால், `சென்னையின் மிடில் ஆர்டரும் ஸ்டிராங்காக இருக்கிறது. தோனியும் விக்கெட் கீப்பராக இருக்கிறார்' என சாம் பில்லிங்கை ஏலத்தில் எடுக்க யோசித்தது சென்னை.

பில்லிங்ஸ்

`1 கோடி ரூபாய் அடிப்படை விலை' என நிர்ணயம் செய்யப்பட்ட சாம் பில்லிங்ஸை, அதே 1 கோடி ரூபாய்க்கு ஏலத்தின் இறுதியில் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. கட்டக்கடைசியாக எடுக்கப்பட்டவர்தான்  இப்போது கொல்கத்தா அணியைப் பதம்பார்த்தவர். வாய்ப்பு கிடைத்த முதல் போட்டியிலேயே சாம் பில்லிங்ஸ் வெடித்த வெடி ஒவ்வொன்றும் சரவெடி. 

52 பந்துகளில் 103 ரன் தேவை என்ற நிலையில்தான், சாம் பில்லிங்ஸ் சேப்பாக்கம் மைதானத்துக்குள் பேட்டோடு நுழைந்தார். சுரேஷ் ரெய்னா அவுட்டானதால் உள்ளே வந்தவருக்கு எதிர்முனையில் பார்ட்னர் அணியின் கேப்டன் தோனி. அப்போது சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரேன் பந்துவீசிக்கொண்டிருந்தார்.

பில்லிங்ஸ்

இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்குப் பொதுவாகவே ஸ்பின்னர்கள் என்றால் அலர்ஜி. அந்த அலர்ஜி சாம் பில்லிங்ஸுக்கும் உண்டு. நரேனின் பந்துகளை மிகவும் கவனமாக எதிர்கொண்ட பில்லிங்ஸ், அடுத்து வந்த சாவ்லாவை உரசிப்பார்த்தார். சாவ்லாவை எதிர்கொண்ட முதல் பந்தையே கிரீஸைவிட்டு விரட்டி பெளண்டரிக்கு வெளுத்தார் சாம். இந்த நம்பிக்கைதான் அவரை பியுஷ் சாவ்லாவின் அடுத்தடுத்த பந்துகளையும் அசால்டாக எதிர்கொள்ளும் துணிச்சல் கொடுத்தது.  எதிர் திசையில் கேப்டன் தோனி குல்தீப் யாதவை வெளுக்க, ஸ்பின்னர்களின் ஓவர்கள் கிட்டத்தட்ட முடிந்தன. ஆனால், 24 பந்துகளில் 51 ரன் தேவை என்னும் முக்கியமான சூழலில் ஆட்டம் இழந்தார் தோனி. 

புதிதாக களத்துக்குள் வந்தவர் ஜடேஜா. அதனால் அடித்து ஆடும் முழு பொறுப்பும் பில்லிங்கிஸிடமே வந்தது. ஸ்பின்னர்களின் ஓவர்கள் கிட்டத்தட்ட முடிந்து பில்லிங்ஸ் எதிர்பார்த்ததுபோல வேகப்பந்து வீச்சாளர்களின் கைகளுக்குப் பந்து வந்தது. `இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பில்லிங்ஸ்' என்பதுபோல வேகப்பந்து வீச்சாளர்களின் ஒவ்வொரு பந்தையும் அவர் எதிர்கொண்டவிதம் அசாத்தியமானது. குரானின் பந்துகளை அடித்து ஆடியவர், ரஸலின் பந்துகளைப் பறக்கவிட்டார். கவர், ஸ்கொயர் லெக், ஃபைன் லெக், லாங் ஆன், மிட் விக்கெட் என 5 சிக்ஸர்கள் எல்லா திசைகளிலும் பறந்தன. எல்லாமே மிகச்சிறந்த கிரிக்கெட்டிங் ஷாட்கள். ஒன்றுகூட எட்ஜ் ஆகி, ஸ்லிப் ஆகி பெளண்டரிக்குப் பறந்ததல்ல.

26 வயதான சாம் பில்லிங், இங்கிலாந்து கவுன்ட்டி கிரிக்கெட் சென்னை சூப்பர் கிங்ஸுக்குக் கொடுத்திருக்கும் பரிசு. சென்னை அணிக்காக ஏலத்தில் சாம் பில்லிங்ஸ் எடுக்கப்பட்டபோது, சென்னை சூப்பர் கிங்ஸின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கம், ஒரு தகவலை ரீ-ட்வீட் செய்தது. `அன்று தோனியுடன் செல்ஃபி எடுக்க பயந்த சாம் பில்லிங்ஸ், இன்று தோனி தலைமையில் விளையாடப்போகிறார்' என்றது அந்த ட்வீட். ஆமாம், அன்று பயந்தவர் இன்று தோனிக்கே பாடம் எடுத்தார். தோனி சிங்கிள்ஸில் கவனம் செலுத்த பெளண்டரிகளையும், 2 ரன்னையும் மாறி மாறி எடுத்து அணியின் பிரஷரையும், தோனியின் பிரஷரையும் குறைத்தார் பில்லிங்ஸ். தோனி வெளியேறியப் பிறகு தோனி இருந்திருந்தால் என்ன செய்திருப்பாரோ அதற்கு மேலும் செய்தார். பில்லிங்ஸின் சிக்ஸர்கள் ஒவ்வொன்றையும் பார்த்து தோனியே மிரண்டுபோனார். 

``நீங்கள் உங்கள் மனதுக்குள் வெற்றிக்காக ப்ளான் ஏ, ப்ளான் பி, ப்ளான் சி என நிறைய ஆப்ஷன்கள் வைத்திருக்கலாம். ஆனால், நீங்கள் உங்கள் மீது நம்பிக்கைவைத்தால்தான் வெற்றிபெற முடியும். தோனியுடன் களத்தில் நின்று விளையாடியது மிகப்பெரிய அனுபவம். பிரஷர் அதிகமாகிக்கொண்டிருந்த நேரத்தில் ஒரு டாட் பாலையும் விட்டுவிடக் கூடாது என ஓடிக்கொண்டேயிருந்தார் தோனி. சென்னை சூப்பர் கிங்ஸில், அதுவும் தோனி போன்ற தலைவர் இருக்கும் அணியில் ஆடுவது எனக்கு வாழ்நாள் அனுபவம்'' என்றார் சாம், வெற்றிக்குப் பிறகு!

Sam Billings

 

கொல்கத்தா அணிக்கு எதிராக 2016-ம் ஆண்டிலும் இதேபோல் ருத்ரதாண்டவம் ஆடியிருக்கிறார் பில்லிங்ஸ். டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடிய பில்லிங்ஸ், அப்போது 34 பந்துகளில் 54 ரன்கள் அடித்து அசத்தியவர். இன்னொரு விஷயம் தெரியுமா? தோனியின் ஜெர்சி நம்பர் 7. பில்லிங்ஸ்  ஜெர்சி நம்பர் 77!

https://www.vikatan.com/news/sports/121887-a-story-about-emerging-cricketer-sam-billings.html

  • தொடங்கியவர்

பிரச்சனை விரைவில் தீர்ந்து மீண்டும் சென்னையில் போட்டி நடைபெறும்- ஹர்பஜன் சிங் நம்பிக்கை

 
அ-அ+

பிரச்சனைகள் அனைத்தும் விரைவில் தீர்ந்து மீண்டும் சென்னையில் போட்டி நடைபெறும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ஹர்பஜன் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். #CSK

 
 
 
 
பிரச்சனை விரைவில் தீர்ந்து மீண்டும் சென்னையில் போட்டி நடைபெறும்- ஹர்பஜன் சிங் நம்பிக்கை
 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், நேற்றுமுன்தினம் சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த சென்னை - கொல்கத்தா அணிகள் மோதிய போட்டியானது கடும் போராட்டங்களுக்கு இடையே நடத்தப்பட்டது.

தமிழ் அமைப்புகள், சினிமா பிரபலங்கள் என சேப்பாக்கம் மைதானத்தை சுற்றி போராட்டங்கள் நடந்தன. போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில் போலீஸ் தடியடி நடத்தினர். இதனை அடுத்து, சென்னையில் நடத்த திட்டமிட்டிருந்த மீதமுள்ள 6 போட்டிகள் புனேவிற்கு மாற்றப்பட்டுள்ளன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஹர்பஜன் சிங் இடம்பிடித்துள்ளார். இவர் ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பே தமிழக ரசிகர்களை கவரும் வகையில் தமிழில் டுவிட் செய்திருந்தார். தற்போது சென்னையில் போட்டியில்லை என்பதால் மிகுந்த வருத்தம் அடைந்ததுள்ளார்.

சென்னையில் விளையாட முடியாதது குறித்து ஹர்பஜன் சிங் தனது டுவிட்டரில் ‘‘சென்னையில் விளையாட முடியாமல் போனதில் மனம் உடைந்தது. பிற மண்ணில் களம் கண்டாலும், தமிழ் பாசமும்- நேசமும் துளியும் குறையாது. மீண்டும் சந்திப்போம் என்ற நம்பிக்கையுடன், எங்கள் மீது அளவுகடந்த அன்பு வைத்திருக்கும் தமிழ்நாடு ரசிகர்களிடம் இருந்து விடைபெறுகிறேன். வழக்கம்போல கீச்சுக்கள் தொடரும்.
 
201804120840423169_1_Capture._L_styvpf.jpg


அனைத்து பிரச்சினைகளும் விரைவில் தீர்ந்து, சென்னையில் மீண்டும் போட்டி நடைபெறும் என நம்புகிறேன். அன்பு வைத்திருந்த அனைவருக்கும் நன்றி. உங்களுடைய வாழ்த்துக்களும் ஆதரவுகளும் தேவை’’ என்று டுவிட் செய்துள்ளார்.#IPL

https://www.maalaimalar.com/News/Sports/2018/04/12084042/1156553/CSK-hope-all-the-issues-get-solved-soon-and-matches.vpf

  • தொடங்கியவர்

‘‘ஐ மிஸ் யு சென்னை’’ - சுரேஷ் ரெய்னா உருக்கமான ட்விட்

 

 
Raina%201

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் சுரேஷ் ரெய்னா: கோப்புப் படம்   -  படம் உதவி: ட்விட்டர்

காவிரி மேலாண்மை அமைக்கக் கோரி தமிழகத்தில் போராட்டம் வலுத்துவருவதால், சென்னையில் நடக்க இருக்கும் ஐபிஎல் போட்டிகள் அனைத்தும் புனே நகருக்கு மாற்றப்பட்டுள்ளன.

இது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா உருக்கமாக ட்விட் செய்துள்ளார்.

காவிரி நதிதீர் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த இறுதித்தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கோரி தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்த சூழலில் சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்தினால், இளைஞர்கள் திசைதிரும்பிவிடக்கூடும் ஆதலால், ஐபிஎல் போட்டிகளை சென்னையில் நடத்தகூடாது என்று பல்வேறு அமைப்பினரும், அரசியல் தலைவர்களும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த எதிர்ப்பையும் மீறி முதல் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டி பலத்த போலீஸ்பாதுகாப்புடன் நடத்தப்பட்டது. ஆனாலும், ரசிகர்களின் போர்வையில் நுழைந்த சில போராட்டக்காரர்கள், மைதானத்தில் ரவிந்திர ஜடேஜா மீது செருப்பு வீசினார்கள். இதனால், சிறிதுநேரம் ஆட்டம் தடைபட்டது.

மேலும், சென்னையில் நடக்கும் போட்டிகளுக்கு தொடர்ந்து பாதுகாப்பு அளிப்பது இயலாது என்று சென்னை போலீஸார் ஐபிஎல் நிர்வாகத்திடம் தெரிவித்துவிட்டனர். இதனால், சென்னையில் அடுத்தும் நடக்கும் ஐபிஎல் போட்டிகள் அனைத்தையும், புனைவுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

சூதாட்ட புகார் தொடர்பாக கடந்த 2 ஆண்டுகள் தடைக்கு பின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு விளையாட வந்துள்ளது. இதனால், சிஎஸ்கே அணியின் ஒவ்வொரு போட்டிகளையும் காண ரசிகர்கள் ஆர்வத்துடன் இருந்தனர். இந்நிலையில் போட்டி புனேவுக்கு மாற்றப்பட்டது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.

சென்னையில் புனேவுக்கு போட்டிகள் மாற்றப்பட்டதற்கு வேதனை தெரிவித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் சுரேஷ் ரெய்னா ட்விட்டரில் உருக்கமாக கருத்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

எங்களுடைய சொந்த மண்ணில் விளையாடுவதை இந்த ஆண்டும் இழந்துவிட்டோம். சென்னை ரசிகர்களையும், சிஎஸ்கே ரசிகர்களையும் இந்த ஆண்டும் மகிழ்விக்க முடியவில்லை. நாங்கள் சென்னையை விட்டு வெளிமாநிலம் சென்று விளையாடினாலும், சென்னை ரசிகர்களும், சிஎஸ்கே ரசிகர்களும் எங்கள் மனதில் எப்போதும் நிலையாக இருப்பீர்கள். வருத்தத்துடன் புனே செல்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

http://tamil.thehindu.com/sports/article23510262.ece?homepage=true

  • தொடங்கியவர்

சென்னையில் விளையாட முடியாமல்போனது வருத்தம்..! சி.எஸ்.கே வீரர்கள் ட்விட்

 
 

`சென்னையில் விளையாட முடியாமல்போனது வருத்தமளிக்கிறது' என்று இந்திய வீரர் ஹர்பஜன் சிங்கும் சி.எஸ்.கே பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங்கும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர். 

collagess_12489.jpg

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடுமையான போராட்டங்கள் நடைபெற்றதையடுத்து, சென்னையில் நடைபெறவிருந்த போட்டிகள் புனேவுக்கு மாற்றப்பட்டன. சென்னை அணியின் மைதானமாக புனே மைதானம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

30a70dd4-17a8-4b06-aaa1-48e481eec7e1_130

இதுகுறித்து ட்விட்டரில், தமிழில் பதிவிட்டுள்ள ஹர்பஜன் சிங், 'சென்னையில் விளையாட முடியாமல்போனதில் மனம் உடைந்தது. பிற மண்ணில் களம் கண்டாலும், தமிழ்ப் பாசமும் நேசமும் கிடைக்காது. மீண்டும் சந்திப்போம் என்ற நம்பிக்கையுடன், எங்கள் மீது அளவுகடந்த அன்பு வைத்திருக்கும் தமிழ்நாடு ரசிகர்களிடமிருந்து விடைபெறுகிறேன். வழக்கம்போல கீச்சுக்கள் தொடரும்' என்று பதிவிட்டுள்ளார்.

அதேபோல, சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங்கின் ட்விட்டர் பதிவில், 'சென்னையிலிருந்து இன்று செல்வது வருத்தமாக உள்ளது. பிரச்னைகள் தீர்ந்து, அமைதியான நிலை திரும்பும் என்று நம்புகிறேன். எங்கள் அணிக்கு சிறந்த வரவேற்பளித்த அனைவருக்கும் நன்றி' என்று பதிவிட்டுள்ளார். 

அதேபோல, ஷேன்வாட்சன், இம்ரான் தாஹிர், மைக் ஹஸ்ஸி, சுரேஷ் ரெய்னா ஆகியோரும் சென்னையில் விளையாட முடியாமல் போனது வருத்தமளிப்பதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.

https://www.vikatan.com/news/sports/121969-sad-to-be-leaving-chennai-says-harbhajan-and-fleming.html

  • தொடங்கியவர்

ஐ.பி.எல் போட்டிகள் புனேவுக்கு இடமாற்றம்: விடைபெற்ற சி.எஸ்.கே வீரர்கள் உருக்கம்!

சென்னையிலிருந்து விடைபெற்ற சி.எஸ்.கே வீரர்கள்; ட்விட்டரில் உருக்கம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் போராட்டங்கள் வீரியமடைந்துள்ள நிலையில், சென்னையில் நடைபெறவிருந்த ஐ.பி.எல் போட்டிகள் புனே மாநிலத்துக்கு மாற்றப்பட்டுள்ளன.

காவிரி பிரச்சனைக்காக போராட்டங்கள் நடந்து வரும் சூழ்நிலையில், சென்னையில் ஐ.பி.எல் போட்டிகள் நடத்தக் கூடாது என போட்டி நடைபெறும் சேப்பாக்கம் மைதானம் பகுதியில் பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள், திரை உலக பிரபலங்கள் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று போராட்டங்களை நடத்தினர்.

முதலில் பத்து, இருபது பேருடன் தொடங்கிய போராட்டம் நேரம் செல்ல செல்ல வீரியமடைந்தது. பல சோதனைகளுக்கு பின் சேப்பாக்கம் மைதானத்தின் உள் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டாலும், மைதானத்தின் உள்ளேயும் சில போராட்டங்கள் நடந்தன.

பல்வேறு கட்சியினர்களின் கோஷங்கள் அந்தப் பகுதியில் எதிரொலித்து கொண்டிருந்த போது, ஐ.பி.எல் மேட்ச்சை காண மஞ்சள் நிற ஜெர்ஸியில் வந்த ரசிகர்களும் தாக்கப்பட்டனர். சில ரசிகர்களின் மஞ்சள் நிற ஜெர்ஸியை ஆர்ப்பாட்டக்காரர்கள் அகற்றினர். அவர்கள் போலீஸிடம் இது குறித்து புகார் தெரிவித்தனர்.

சென்னையிலிருந்து விடைபெற்ற சி.எஸ்.கே வீரர்கள்; ட்விட்டரில் உருக்கம்படத்தின் காப்புரிமைSARAVANAN HARI

போட்டி நடந்து கொண்டிருந்த நேரத்தில் மைதானத்திற்குள் ஷூ வீசப்பட பதற்றம் அதிகரித்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஆட்டத்தில் சி.எஸ்.கே அணி திரில் வெற்றியை பெற்றது. இச்சூழலில், பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி சென்னையில் நடைபெறவிருந்த போட்டிகளை புனேவுக்கு பிசிசிஐ நிர்வாகம் மாற்றியுள்ளது.

இந்த மாற்றம் குறித்து சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் இடம்பெற்றிருக்கும் பல வீரர்கள் தங்கள் ஆதங்கங்களை ட்விட்டரில் கொட்டித் தீர்த்துள்ளனர்.

சென்னையிலிருந்து விடைபெற்ற சி.எஸ்.கே வீரர்கள்; ட்விட்டரில் உருக்கம்படத்தின் காப்புரிமைHARBHAJAN TURBANATOR

சேப்பாக்கத்திலிருந்து நாங்கள் வெளியேற வேண்டும் என்ற முடிவு அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என்றும், தாக்குதலுக்குள்ளான ரசிகர் விரைவில் குணம்பெற்று அனைத்து பிரச்சனைகளும் தீர்வை எட்டவேண்டும் என்றும் கிரிக்கெட் வீரர் சாம் பில்லிங்கஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னையில் விளையாட முடியாமல் போனதால் மனம் உடைந்தது என்று கருத்து தெரிவித்துள்ள ஹர்பஜன் சிங், பிற மண்ணில் களம் கண்டாலும், தமிழ் பாசமும் நேசமும் துளியும் குறையாது என்றும், மீண்டும் சந்திப்போம் என்ற நம்பிக்கையுடன் தமிழ்நாடு ரசிகர்களிடம் இருந்து விடைபெறுகிறேன் என்றும் உருக்கமாக பதிந்துள்ளார்.

சென்னையிலிருந்து விடைபெற்ற சி.எஸ்.கே வீரர்கள்; ட்விட்டரில் உருக்கம்படத்தின் காப்புரிமைRUSSELL Image captionவிமான நிலையத்தில் டோனி மற்றும் அவரது குடும்பத்தினர்

ஆதரவு அளித்ததற்காக சி.எஸ்.கே ரசிகர்களுக்கும் தனது நன்றிகளை தெரிவித்துள்ள மைக் ஹஸி, பிற போட்டிகளை சென்னையை விட்டு ஆட வேண்டும் என்பது கஷ்டமாக இருப்பதாகவும், தற்போது நிலவும் பிரச்சனைகளுக்கு அமைதி மற்றும் சுமூகமான தீர்வு எட்டப்பட வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃபெளெம்பிங், ''இன்று சென்னையைவிட்டு செல்வது வருத்தமளிக்கிறது. மீண்டும் சென்னைக்காக விளையாடியதும், தமிழ்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களின் அன்பு மற்றும் பாசத்தை மீண்டும் அனுபவித்தது மகிழ்ச்சியாக இருந்தது. அனைத்து பிரச்சனைகளும் சுமூகமாக முடிய வேண்டும்.'' என்று கருத்து தெரிவித்துள்ளார்.

சி.எஸ்.கே அணியில் இடம்பெற்றுள்ள தென் ஆஃப்ரிக்கா கிரிக்கெட் வீரர் இம்ரான் தஹிர், சென்னையைவிட்டு செல்வது வருத்தமளிக்கிறது என்றும், அடுத்த ஆண்டு வரும்போது பிரச்சனைகள் முடிந்திருக்கும் என்ற நம்பிக்கையோடு தான் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

புனே விமான நிலையத்தில் சுரேஷ் ரெய்னாபடத்தின் காப்புரிமைCHENNAI SUPER KINGS Image captionபுனே விமான நிலையத்தில் சுரேஷ் ரெய்னா

தனது வருத்தங்களை வெளியிட்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன், கடைசியாக நடைபெற்ற போட்டியின் சூழல் அபாரமாக இருந்ததாகவும், தமிழகத்தில் நிலவும் பிரச்சனைகள் விரைவாக தீர்வை எட்ட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

சொந்த மண்ணில் விளையாட இருந்த தருணங்களை நிச்சயம் தவறவிடுவோம் என்று குறிப்பிட்டுள்ள சுரேஷ் ரெய்னா, சி.எஸ்.கே ரசிகர்கள் எப்போது எங்கள் இதயத்தில் இருக்கிறார்கள் என்றும், தற்போது புனேவுக்கு செல்வதாகவும் தெரிவித்துள்ளார்.

http://www.bbc.com/tamil/sport-43737302

  • தொடங்கியவர்

"மே 3-க்கு மேல் மேட்ச்சை நடத்துங்கள்!" -பாதுகாப்பு தர மறுத்த தமிழக அரசு #CSK

 
 

``இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சென்னைக்கு ஐ.பி.எல் திரும்புகிறது என்பதால் சென்னை சேப்பாக்கம் மைதானத்தை முழுமையாகத் தயார் செய்துவைத்திருந்தோம். ஆன்லைனில் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத்தீர்ந்தன. ஆனால், போராட்டம், போலீஸ் மறுப்பு, தமிழக அரசின் கைவிரிப்பு காரணமாக சென்னையில் போட்டிகள் இனி நடக்காது என்பது எங்களுக்கே மிகப்பெரிய வேதனையாக இருக்கிறது'' என்கிறார் நம்மிடம் பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் (#CSK) நிர்வாகத்தின் மிக மூத்த அதிகாரி.

CSK

ஏன் புனேவுக்குப் போட்டிகளை மாற்றினீர்கள் என்று கேட்டபோது, ``எங்களுக்கு வேறு வழியில்லை. நாங்கள் எந்த சாய்ஸும் சொல்லவில்லை. பி.சி.சி.ஐ எங்களை புனேவில் விளையாடச் சொல்லியிருக்கிறது. நாங்கள் ஓகே சொல்லியிருக்கிறோம்'' என்றார் அவர்.

ஏப்ரல் 10-ம் தேதி கொல்கத்தா அணிக்கு எதிராகச் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களம் இறங்கக் காத்திருந்தபோது சென்னை அண்ணாசாலை மிகப்பெரிய போராட்டத்தைச் சந்தித்து. காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வேண்டும், அதுவரை ஐ.பி.எல் போட்டிகளை சென்னையில் நடத்தவிடமாட்டோம் என்று சில கட்சிகள் போராட்டம் நடத்தியதால் போர்க்களமானது சேப்பாக்கம். கிட்டத்தட்ட 3,000 பேர் அண்ணாசாலை, வாலாஜா சாலையில் கடந்த செவ்வாய்க்கிழமை கூடியதால் போராட்டக்காரர்களைச் சமாளிக்க முடியாமல் திணறியது சென்னை போலீஸ். போராட்டக்காரர்கள் மீது போலீஸ் தடியடி நடத்த, ஒரு இடத்தில் போலீஸ் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்த, சில இடங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்த எனப் பல  அத்துமீறல்கள் அரங்கேறின.

போராட்டத்தின் உச்சமாக மைதானத்துக்குள் செருப்புகளும் வீசப்பட்டன. கிரிக்கெட்டுக்கு எதிராக இப்படி ஒரு கடுமையான போராட்டத்தை தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் இதுவரை சந்தித்ததேயில்லை என்பதால் முழுக்க முழுக்கப் போலீஸையே நம்பியிருந்தது கிரிக்கெட் வாரியம். போலீஸும் செவ்வாய்க்கிழமை போட்டியைத் தடையின்றி நடத்தவேண்டும் என்று முழு ஒத்துழைப்பையும் கொடுத்தது. ஆனால், அடுத்தநாள் (புதன்கிழமை) சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை அலுவலர் காசி விஸ்வநாதனை அழைத்தார் சென்னையின் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன்.

CSK

``சென்னையில் இன்னும் 6 போட்டிகள்தான் இருக்கின்றன. பாதுகாப்பு தாருங்கள்'' என காசி விஸ்வநாதன் கேட்க, தமிழக அரசு சொன்னதை காசி விஸ்வநாதனிடம் சொல்லியிருக்கிறார் போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன். ``மே-3ம் தேதிக்கு மேல் 6 மேட்ச்சுகளையும் சென்னையில் விளையாடும்படி மாற்றுங்கள். முழு பாதுகாப்பு தருகிறோம். போராட்டங்களும் ஓய்ந்துவிடும். செவ்வாய்கிழமை போராட்டங்களைக் கட்டுப்படுத்துவதே பெரும்பாடாக இருந்தது. இப்போதுகூட சேப்பாக்கத்துக்குப் பாதுகாப்பு தரலாம். சென்னையின் மற்ற இடங்களுக்குப் போராட்டம் பரவினால் கட்டுப்படுத்துவது கடினம்'' என கமிஷனர் சொல்ல, அந்த முடிவு தங்கள் கையில் இல்லை என்பதை சொல்லிவிட்டு வந்திருக்கிறார் காசி விஸ்வநாதன்.

தமிழக அரசின் முடிவை, சென்னை போலீஸின் விளக்கத்தை காசி விஸ்வநாதன் ஐ.பி.எல் தலைவர் ராஜீவ் சுக்லாவிடம் சொல்ல, பி.சி.சி.ஐ இதுதொடர்பான ஆலோசனைகளை நடத்தியது. ஐ.பி.எல் ஷெட்யூலை ஒரு அணிக்காக மாற்ற முடியாது என்பதால் சென்னைக்குப் பதிலாக புனே, திருவனந்தபுரம், விசாகப்பட்டினம், ராஜ்கோட் என நான்கு இடங்களில் போட்டிகள் நடத்த பரிந்துரைக்கப்பட்டது. சென்னை அணி விசாகப்பட்டினத்தை ஓகே சொன்னது. ஆனால், பி.சி.சி.ஐ நிர்வாகம் குறிப்பாக, ஐ.பி.எல் தலைவர் ராஜுவ் சுக்லா புனேவை டிக் செய்தார். சென்னை சூப்பர் கிங்ஸின் முக்கால்வாசி வீரர்கள், கோச் மற்றும் உதவியாளர்களுக்கு ஏற்கெனவே புனேவில் விளையாடிய அனுபவம் இருப்பதோடு, புனேவிலிருந்து ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறும் மற்ற எல்லா ஊர்களுக்கும் கனெக்டிங் விமானங்கள் இருப்பதால் புனேவில் விளையாடும்படி சொல்லியிருக்கிறார் சுக்லா. 

CSK

``நாங்கள்  மீண்டும் முதலிலிருந்து தொடங்கவேண்டும். டிக்கெட் விலையை புதிய ஸ்டேடியத்துக்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டும். ஆனால், இவை எல்லாவற்றையும் விட, சென்னை ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தைத் தந்துவிட்டோம் என்பதுதான் பெரிய உறுத்தலாக இருக்கிறது. சென்னை ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம்'' என்றார் சிஎஸ்கே நிர்வாகி. 

 

சென்னையில் போட்டிகள் நடைபெறாததால் டிக்கெட் விலையிலிருந்து தமிழக அரசுக்குக் கிடைத்திருக்க வேண்டிய கிட்டத்தட்ட 5 கோடி ரூபாய் நஷ்டம். அதேபோல், போட்டிகள் இடம் மாறியதால் தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்துக்கும் மூன்றரைக் கோடி ரூபாய் நஷ்டம் என்கிறார்கள் தமிழ்நாடு கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள்!

https://www.vikatan.com/news/sports/121992-tamilnadu-government-refuses-to-give-security-to-ipl-matches-in-chennai.html

  • தொடங்கியவர்

‘உலக நாகரிகத்துக்கெல்லாம் வித்திட்ட தமிழ்மொழி’- தமிழில் புத்தாண்டு வாழ்த்து கூறிய ஹர்பஜன் சிங்

har

 இந்திய கிரிக்கட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரருமான ஹர்பஜன் சிங் தமிழக மக்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

ஐபிஎல் போட்டி தொடங்கியதில் இருந்து கடந்த 10 ஆண்டுகளாக ஹர்பஜன் சிங் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி வந்தார். ஆனால், 11-வது ஐபிஎல் சீசனில் ஹர்பஜன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வந்ததில் இருந்து ஹர்பஜன் சிங் அவ்வப்போது தமிழில் ட்வீட் செய்து வருகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அறிமுகத்தின்போது, ரஜினியின் 'கபாலி' பட வசனங்களைக் குறிப்பிட்டு ஹர்பஜன் ட்வீட் செய்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

இந்நிலையில் காவிரி நதி நீர் மேம்பாட்டு வாரியம் அமைப்பது தொடர்பாக தமிழகம், சென்னையில் போராட்டம் தீவிரமடைந்தது. சென்னையில் நடந்த சிஎஸ்கே, கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டியில் வீரர்கள் மீது செருப்பு வீச்சு நடந்ததால், போட்டிகள் அனைத்தும் புனேவுக்கு மாற்றப்பட்டன.

அதுதொடர்பாக ஹர்பஜன் ட்வீட் செய்தபோது கூட, சென்னையில் விளையாட முடியாதது வருத்தமளிக்கிறது. பிறமண்ணில் களம் கண்டாலும், தமிழ்மண்ணின் மீதான பாசமும், நேசமும் குறையாது என்று தெரிவித்திருந்தார்.

Harbhajan-Singhjpg

ஹர்பஜன் சிங்

 

இந்நிலையில், தமிழர்களின் தமிழ்ப் புத்தாண்டான சித்திரை 1 இன்று பிறந்துள்ளது இதையொட்டி ட்விட்டரில் தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தமிழில் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

அதில், ''தமிழா இது உன்னுடைய புத்தாண்டு, சோகங்கள், துன்பங்கள், அனைத்தும் மறந்து புதிய பாதை பிறக்கும். புதிய விடியலைப் பார்க்கக் காத்திருக்கும் விழிகளுக்கும் நன்மை வந்து சேரட்டும். உலக நாகரிகத்திற்கெல்லாம் வித்திட்ட தமிழ்மொழியை தமிழ்மொழியாய் கொண்ட என் தோழமை இனத்திற்கு புத்தாண்டு வாழ்த்துகள்'' என்று ஹர்பஜன் சிங் பதிவிட்டுள்ளார்.

http://tamil.thehindu.com/sports/article23542915.ece

  • தொடங்கியவர்

ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக ரெய்னா இல்லாமல் சிஎஸ்கே

 
அ-அ+

ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதன்முறையாக சுரேஷ் ரெய்னா இல்லாமல் களம் இறங்குகிறது. #CSK #IPL2018 #Raina

 
 
 
 
ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக ரெய்னா இல்லாமல் சிஎஸ்கே
 
ஐபிஎல் டி20 லீக்கின் 11-வது சீசன் நடைபெற்று வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது 2-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது. 203 என்ற இமாலய இலக்கை கடைசி ஓவரின் 5-வது பந்தில் சென்னை அணி எட்டி அசத்தல் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் ரெய்னா பேட்டிங் செய்யும்போது காயம் அடைந்தார். இதனால் அடுத்த இரண்டு போட்டிகளில் அவர் களம் இறங்கமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. 2-வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் ரெய்னா களம் இறங்கவில்லை.

2008-ம் ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்கியதில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருபவர் ரெய்னா. கடந்த 8 சீசன்களில் ஒருபோட்டியில் கூட ரெய்னா இடம்பெறாமல் போனது கிடையாது. தற்போது ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முதன்முறையாக ரெய்னா இடம்பெறவில்லை.

https://www.maalaimalar.com/News/Sports/2018/04/15152906/1157101/Raina-will-miss-a-Super-Kings-match-for-the-first.vpf

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 11 Personen, Personen, die lachen

#Thala wins the toss and we are chasing again! Here's how we have lioned up for the Kings' Duel! #WhistlePodu #Yellove #KXIPvCSK1f49b.png?1f981.png

 

  • தொடங்கியவர்

Nikaama odu odu odu odu! Varaan paaru #ParasakthiExpress. #WhistlePoduIPL_Chennai.png #Yellove #KXIPvCSK??Da1asTpWsAALSlL.jpg

பராசக்தி எக்ஸ்பிரஸ் : பேரக்கேட்டாலே சும்மா அதிருதுல்ல

  • தொடங்கியவர்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், தமிழரின் பெருமைக்கும் என்ன தொடர்பு?

சென்னையில் நடைபெறவிருந்த ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் புனே நகருக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தமிழரின் அடையாளம் என்ற ரீதியிலும், அந்த அணியில் இரண்டு தமிழக வீரர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளது குறித்து எதிர்வினைகளும் சமூகவலைத்தளங்களில் இடம்பெறுள்ளன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், தமிழரின் பெருமைக்கும் என்ன தொடர்பு?படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionசென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், தமிழரின் பெருமைக்கும் என்ன தொடர்பு?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆதரவாக பலர் தீவிரமாக சமூகவலைத்தளங்களில் கருத்து பதிவிடுகின்றனர். விசில்போடு என்ற ஹேஷ்டாக் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியையும், அந்த அணியில் விளையாடும் வீரர்களையும் தமிழர்களின் அடையாளமாக கருதி பலர் சமூகவலைத்தளங்களில் கருத்து வெளியிடுகின்றனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், தமிழரின் பெருமைக்கும் என்ன தொடர்பு?படத்தின் காப்புரிமைTWITTER/DHANA MSDIAN

இந்நிலையில், 2018 ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முரளி விஜய் மற்றும் நாராயண் ஜெகதீசன் ஆகிய இருவரும் மட்டுமே தமிழகத்தை சேர்ந்தவர்கள். நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே (சென்னை சூப்பர் கிங்ஸ்) அணி விளையாடிய முதல் இரண்டு போட்டிகளிலும் இவர்கள் இருவரும் களத்தில் விளையாடிய வீரர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை.

சமூக வலைத்தளங்களில் இது குறித்து கேள்விகள் எழுப்பும் பலரும் சென்னை அணியில் தமிழக வீரர்கள் புறக்கணிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.

ஆனால், அதே சமயம் சென்னை அணி என்றால் அதில் தமிழக வீரர்கள் மட்டுமே அதில் இடம்பெற்று இருக்க வேண்டும் என்று பொருளில்லை என சில விளையாட்டு ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் XI பஞ்சாப் அணிகளில் தமிழக வீரர்கள் அணித்தலைவர்களாக உள்ளதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

'கேளிக்கை மட்டுமே ஐபிஎல்லின் நோக்கம்'

இது குறித்து எழுத்தாளரும், விளையாட்டு ஆர்வலருமான பத்ரி சேஷாத்ரி பிபிசி தமிழிடம் உரையாடினார்.

''ஐபிஎல் தொடரே செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒன்றுதான். ஐரோப்பிய நாடுகளில் உள்ள கால்பந்து லீக் போட்டிகள்போல நடத்துவதற்காக தொடங்கப்பட்டதுதான் ஐபிஎல்'' என்று கூறிய பத்ரி சேஷாத்ரி, ஐபிஎல் தொடரால் உள்ளூர் பற்று எதுவும் அதிகரிக்காது” என்று தெரிவித்தார்.

''இந்த தொடரில் ஊர்ப் பெருமை முக்கியத்துவம் பெறவில்லை. நாளை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்பதை இந்தியா சிமெண்ட்ஸ் சூப்பர் கிங்ஸ் அணி என மாற்றினால்கூட கிரிக்கெட் ஆர்வலர்கள் பார்ப்பார்கள் என்று பத்ரி சேஷாத்ரி குறிப்பிட்டார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், தமிழரின் பெருமைக்கும் என்ன தொடர்பு?படத்தின் காப்புரிமைSARAVANAN HARI

ஐபிஎல் தொடர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆகியவை தமிழகத்தின் பெருமை என்று கூற முடியாது. ரஞ்சி கோப்பை ஆட்டங்களை வேண்டுமானால் அப்படி கூறலாம். அதுதான் உண்மையான தமிழக அணியின் பிரதிபலிப்பு என்று அவர் தெரிவித்தார்.

உள்ளூர் வீரர்களை ஐபிஎல் ஊக்குவிக்கவில்லையா?

''சென்னை அணி எப்படி தமிழரின் பெருமை என்று கூற முடியும்? பிராவோ மற்றும் தோனி ஆகியோர் வேட்டி கட்டிக் கொண்டு வந்தால் அது கோமாளித்தனமாகதான் படுகிறது'' என்றார் பத்ரி சேஷாத்ரி.

''சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தமிழரின் அடையாளம் என்று கூறுவது முழுக்க முழுக்க விளம்பரம் மற்றும் சந்தைப்படுத்துதலை நோக்கமாக கொண்டது மட்டுமே. ஆனால், இது வெகு காலம் நீடிக்காது. இந்த அடையாள எல்லை விரைவில் தகர்ந்துவிடும்'' என்று அவர் குறிப்பிட்டார்.

ஆரம்பத்தில் உள்ளூர் வீரர்களை ஊக்குவிப்பது இந்த தொடரின் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த தொடர் மீது எழுந்த விமர்சனங்களுக்காக சொல்லப்பட்ட சமாதானம்தான் அது என்று அவர் கூறினார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிபடத்தின் காப்புரிமைTWITTER/CHENNAI SUPER KINGS

''உண்மையான கிரிக்கெட் ரசிகன் தமிழரின் பெருமை, கர்நாடகத்தின் பெருமை என எதையும் கருத்தில் கொள்ளாமல் கிரிக்கெட் விளையாட்டை மட்டுமே பார்ப்பான்'' என்று பத்ரி சேஷாத்ரி தெரிவித்தார்.

உள்ளூர் வீரர்கள் எண்ணிக்கை குறைவதற்கு என்ன காரணம்?

ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கப்பட்டபோது ஒவ்வோர் அணியிலும் மூன்று அல்லது நான்கு உள்ளூர் வீரர்கள் இடம்பெறுவர் என்று கூறப்பட்டது.

தற்போது அந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது பற்றி மூத்த பத்திரிக்கையாளரான விஜய் லோக்பாலி கூறுகையில், ''உள்ளூர் திறமைகளை வெளிக்கொணர்வது மற்றும் ஊக்குவிப்பது இந்த தொடரின் நோக்கம் என்று ஆரம்பத்தில் சொல்லப்பட்டது'' என்று நினைவுகூர்ந்தார்.

ஆனால், அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டது. தற்போது ஏற்கனவே சாதித்த வீரர்கள் மூலம் அணியின் வெற்றியை உறுதிப்படுத்துவதே பிரதான நோக்கமாக மாறிவிட்டது என்று அவர் கூறினார்.

விஜய் லோக்பாலிபடத்தின் காப்புரிமைVIJAY LOKPALLY Image captionவிஜய் லோக்பாலி

''சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெறும் பிரதான வீரர்களான தோனி, ஜடேஜா போன்றோர் உள்ளூர் வீரர்கள் இல்லை. முரளி விஜய் மற்றும் மற்றொரு தமிழக வீரர் மட்டுமே நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளனர்'' என்று விஜய் லோக்பாலி கூறினார்.

ஐபிஎல் - ஆரம்பத்தில் சொன்னது நடந்ததா?

வாஷிங்டன் சுந்தர் போன்ற வீரர்கள் தமிழக ரஞ்சி அணி மூலம் வளர்ந்தார்கள். ஐபிஎல் புதிதாக எந்த இளம் வீரரையும் உருவாக்கவில்லை. இளம் உள்ளூர் வீரர்களை உருவாக்குவதை ஐபிஎல் நோக்கமாக கொண்டிருக்கும் என்று கூறப்பட்டது நடக்கவில்லை என்று அவர் தெரிவித்தார்.

ஐபிஎல் தொடரை கேளிக்கையாக மட்டுமே கருதமுடியும், ஐபிஎல் அணிகளுக்கும் ஊர், மொழி மற்றும் நாட்டுப்பற்றுக்கும் எந்த தொடர்புமில்லை என்று விஜய் லோக்பாலி மேலும் கூறினார்.

புனே விமான நிலையத்தில் சுரேஷ் ரெய்னாபடத்தின் காப்புரிமைCHENNAI SUPER KINGS Image captionபுனே விமான நிலையத்தில் சுரேஷ் ரெய்னா

முன்னதாக, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் போராட்டங்கள் தீவிரமடைந்த நிலையில், சென்னையில் நடைபெறவிருந்த ஐ.பி.எல் போட்டிகள் புனே நகருக்கு மாற்றப்பட்டுள்ளன.

காவிரி பிரச்சனைக்காக போராட்டங்கள் நடந்த சூழ்நிலையில், சென்னையில் ஐ.பி.எல் போட்டிகள் நடத்தக் கூடாது என போட்டி நடைபெற்ற சேப்பாக்கம் மைதானப் பகுதியில் பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள், திரை உலகப் பிரபலங்கள் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று போராட்டங்களை நடத்தின.

http://www.bbc.com/tamil/sport-43774490

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, நவீனன் said:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், தமிழரின் பெருமைக்கும் என்ன தொடர்பு?

சென்னையில் நடைபெறவிருந்த ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் புனே நகருக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தமிழரின் அடையாளம் என்ற ரீதியிலும், அந்த அணியில் இரண்டு தமிழக வீரர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளது குறித்து எதிர்வினைகளும் சமூகவலைத்தளங்களில் இடம்பெறுள்ளன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், தமிழரின் பெருமைக்கும் என்ன தொடர்பு?படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionசென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், தமிழரின் பெருமைக்கும் என்ன தொடர்பு?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆதரவாக பலர் தீவிரமாக சமூகவலைத்தளங்களில் கருத்து பதிவிடுகின்றனர். விசில்போடு என்ற ஹேஷ்டாக் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியையும், அந்த அணியில் விளையாடும் வீரர்களையும் தமிழர்களின் அடையாளமாக கருதி பலர் சமூகவலைத்தளங்களில் கருத்து வெளியிடுகின்றனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், தமிழரின் பெருமைக்கும் என்ன தொடர்பு?படத்தின் காப்புரிமைTWITTER/DHANA MSDIAN

இந்நிலையில், 2018 ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முரளி விஜய் மற்றும் நாராயண் ஜெகதீசன் ஆகிய இருவரும் மட்டுமே தமிழகத்தை சேர்ந்தவர்கள். நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே (சென்னை சூப்பர் கிங்ஸ்) அணி விளையாடிய முதல் இரண்டு போட்டிகளிலும் இவர்கள் இருவரும் களத்தில் விளையாடிய வீரர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை.

சமூக வலைத்தளங்களில் இது குறித்து கேள்விகள் எழுப்பும் பலரும் சென்னை அணியில் தமிழக வீரர்கள் புறக்கணிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.

ஆனால், அதே சமயம் சென்னை அணி என்றால் அதில் தமிழக வீரர்கள் மட்டுமே அதில் இடம்பெற்று இருக்க வேண்டும் என்று பொருளில்லை என சில விளையாட்டு ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் XI பஞ்சாப் அணிகளில் தமிழக வீரர்கள் அணித்தலைவர்களாக உள்ளதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

'கேளிக்கை மட்டுமே ஐபிஎல்லின் நோக்கம்'

இது குறித்து எழுத்தாளரும், விளையாட்டு ஆர்வலருமான பத்ரி சேஷாத்ரி பிபிசி தமிழிடம் உரையாடினார்.

''ஐபிஎல் தொடரே செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒன்றுதான். ஐரோப்பிய நாடுகளில் உள்ள கால்பந்து லீக் போட்டிகள்போல நடத்துவதற்காக தொடங்கப்பட்டதுதான் ஐபிஎல்'' என்று கூறிய பத்ரி சேஷாத்ரி, ஐபிஎல் தொடரால் உள்ளூர் பற்று எதுவும் அதிகரிக்காது” என்று தெரிவித்தார்.

''இந்த தொடரில் ஊர்ப் பெருமை முக்கியத்துவம் பெறவில்லை. நாளை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்பதை இந்தியா சிமெண்ட்ஸ் சூப்பர் கிங்ஸ் அணி என மாற்றினால்கூட கிரிக்கெட் ஆர்வலர்கள் பார்ப்பார்கள் என்று பத்ரி சேஷாத்ரி குறிப்பிட்டார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், தமிழரின் பெருமைக்கும் என்ன தொடர்பு?படத்தின் காப்புரிமைSARAVANAN HARI

ஐபிஎல் தொடர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆகியவை தமிழகத்தின் பெருமை என்று கூற முடியாது. ரஞ்சி கோப்பை ஆட்டங்களை வேண்டுமானால் அப்படி கூறலாம். அதுதான் உண்மையான தமிழக அணியின் பிரதிபலிப்பு என்று அவர் தெரிவித்தார்.

உள்ளூர் வீரர்களை ஐபிஎல் ஊக்குவிக்கவில்லையா?

''சென்னை அணி எப்படி தமிழரின் பெருமை என்று கூற முடியும்? பிராவோ மற்றும் தோனி ஆகியோர் வேட்டி கட்டிக் கொண்டு வந்தால் அது கோமாளித்தனமாகதான் படுகிறது'' என்றார் பத்ரி சேஷாத்ரி.

''சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தமிழரின் அடையாளம் என்று கூறுவது முழுக்க முழுக்க விளம்பரம் மற்றும் சந்தைப்படுத்துதலை நோக்கமாக கொண்டது மட்டுமே. ஆனால், இது வெகு காலம் நீடிக்காது. இந்த அடையாள எல்லை விரைவில் தகர்ந்துவிடும்'' என்று அவர் குறிப்பிட்டார்.

ஆரம்பத்தில் உள்ளூர் வீரர்களை ஊக்குவிப்பது இந்த தொடரின் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த தொடர் மீது எழுந்த விமர்சனங்களுக்காக சொல்லப்பட்ட சமாதானம்தான் அது என்று அவர் கூறினார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிபடத்தின் காப்புரிமைTWITTER/CHENNAI SUPER KINGS

''உண்மையான கிரிக்கெட் ரசிகன் தமிழரின் பெருமை, கர்நாடகத்தின் பெருமை என எதையும் கருத்தில் கொள்ளாமல் கிரிக்கெட் விளையாட்டை மட்டுமே பார்ப்பான்'' என்று பத்ரி சேஷாத்ரி தெரிவித்தார்.

உள்ளூர் வீரர்கள் எண்ணிக்கை குறைவதற்கு என்ன காரணம்?

ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கப்பட்டபோது ஒவ்வோர் அணியிலும் மூன்று அல்லது நான்கு உள்ளூர் வீரர்கள் இடம்பெறுவர் என்று கூறப்பட்டது.

தற்போது அந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது பற்றி மூத்த பத்திரிக்கையாளரான விஜய் லோக்பாலி கூறுகையில், ''உள்ளூர் திறமைகளை வெளிக்கொணர்வது மற்றும் ஊக்குவிப்பது இந்த தொடரின் நோக்கம் என்று ஆரம்பத்தில் சொல்லப்பட்டது'' என்று நினைவுகூர்ந்தார்.

ஆனால், அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டது. தற்போது ஏற்கனவே சாதித்த வீரர்கள் மூலம் அணியின் வெற்றியை உறுதிப்படுத்துவதே பிரதான நோக்கமாக மாறிவிட்டது என்று அவர் கூறினார்.

விஜய் லோக்பாலிபடத்தின் காப்புரிமைVIJAY LOKPALLY Image captionவிஜய் லோக்பாலி

''சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெறும் பிரதான வீரர்களான தோனி, ஜடேஜா போன்றோர் உள்ளூர் வீரர்கள் இல்லை. முரளி விஜய் மற்றும் மற்றொரு தமிழக வீரர் மட்டுமே நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளனர்'' என்று விஜய் லோக்பாலி கூறினார்.

ஐபிஎல் - ஆரம்பத்தில் சொன்னது நடந்ததா?

வாஷிங்டன் சுந்தர் போன்ற வீரர்கள் தமிழக ரஞ்சி அணி மூலம் வளர்ந்தார்கள். ஐபிஎல் புதிதாக எந்த இளம் வீரரையும் உருவாக்கவில்லை. இளம் உள்ளூர் வீரர்களை உருவாக்குவதை ஐபிஎல் நோக்கமாக கொண்டிருக்கும் என்று கூறப்பட்டது நடக்கவில்லை என்று அவர் தெரிவித்தார்.

ஐபிஎல் தொடரை கேளிக்கையாக மட்டுமே கருதமுடியும், ஐபிஎல் அணிகளுக்கும் ஊர், மொழி மற்றும் நாட்டுப்பற்றுக்கும் எந்த தொடர்புமில்லை என்று விஜய் லோக்பாலி மேலும் கூறினார்.

புனே விமான நிலையத்தில் சுரேஷ் ரெய்னாபடத்தின் காப்புரிமைCHENNAI SUPER KINGS Image captionபுனே விமான நிலையத்தில் சுரேஷ் ரெய்னா

முன்னதாக, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் போராட்டங்கள் தீவிரமடைந்த நிலையில், சென்னையில் நடைபெறவிருந்த ஐ.பி.எல் போட்டிகள் புனே நகருக்கு மாற்றப்பட்டுள்ளன.

காவிரி பிரச்சனைக்காக போராட்டங்கள் நடந்த சூழ்நிலையில், சென்னையில் ஐ.பி.எல் போட்டிகள் நடத்தக் கூடாது என போட்டி நடைபெற்ற சேப்பாக்கம் மைதானப் பகுதியில் பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள், திரை உலகப் பிரபலங்கள் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று போராட்டங்களை நடத்தின.

http://www.bbc.com/tamil/sport-43774490

தமிழ் நாட்டிற்கும் தமிழர்களுக்கும் என்ன தொடர்பு ? அரசியல்வாதிகள் தொடக்கம் அரச / தனியார் அதிகாரிகள் வரை எல்லாம் வேற்று மாநிலத்தவர்கள்.

  • தொடங்கியவர்

நெட்டிசன் நோட்ஸ்: சிஎஸ்கே தோத்துடுச்சி, ஆனா தோனி ஜெயிச்சிட்டார்

 

 
3png

பஞ்சாப் உடனான நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

எனினும் சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது பேட்டிங்கில் நிகழ்த்திய அதிரடியால் அவரது ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது. இந்த நிலையில் இதுகுறித்து நெட்டிசன்கள் தொடர்ந்து தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர் அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்....

   

Dr. பகவான்

‏சீரியஸா தோத்த பீல் இல்லை. அது எனக்கு மட்டும் தானா..

சண்டியர்

‏இவ்ளோ நேரம் இவன அவுட் ஆக்காம வச்சுருந்து ஜெயிக்கணும்னு ட்ரோல் பண்ண ஹேட்டர்ஸ இப்ப இவன் அவுட் ஆனா போதும்ன்னு யோசிக்க வச்சான் பாரு.. அவன் தான் தோனி..

CSK ஜெயிச்ச மேட்ச்ல கூட இவ்ளோ சந்தோசமா தூங்க போகல..

விஜய் ஆனந்த்...

‏தோனிக்கு வயசாகிடுச்சாடா டா டா....! என்று புலம்பும் Haters க்கு ஆழ்ந்த இரங்கல்கள்

1png
 

ஏழில்

ஒரு மேட்ச் தான தல போயிட்டு போது உன்னோட பழைய ருத்ரதாண்டவத்த பார்த்ததே போதும்      #WhistlePodu

ehan vinoth

‏நம்ம டீம் தான் ஜெயிக்கபோறதுன்னு தெரிஞ்சும் கடைசி நேரத்துல கூட தோனி அவுட் பண்ண முடியுமாங்குற நினப்பும்,பயமும்

அங்க நிக்குறாரு டா தோனி

7png
 

திருச்சி மன்னாரு

‏ஒரு தோல்வியக் கொண்டாட வைக்கறதெல்லாம் தல தோனியால மட்டும் தான் முடியும்

வினோத் முனியசாமி

‏CSK முதல் மேட்ச் ஜெயிச்சது ஏப்ரல் 7 அதுக்கப்புறம் 7 நாள் 11 மேட்ச் நடந்து முடிஞ்சுட்டு ஆனால் CSK ஜெயிச்சப்பவும் இப்பவும் தான் சோஷியல் மீடியாவே அலறுது!அதுதான் தல அதுதான் CSK இன்னும் நூறு வருசம் ஐபிஎல் நடந்தாலும் இப்படி ஒரு Fanbase எந்த டீமுக்கும் கிடைக்காது.

4png

s ɪ ʙ ɪ

‏தோத்தாலும் இப்படி தோக்கணும் #KXIPvCSK #Dhoni

moses Snowin Viswasam

‏வலியோடு போராடி மக்கள் மனதில் இடம் பிடித்தவர்.

கடைசி வரை தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் இறுதி வரை போராடிய போராட்ட வீரன்

vijayvelvikram

‏குருவைத் தோற்கடித்த சிஷ்யன் #KXIPvCSK

2png

அருண்

எல்லா Matchயும் ஜெய்ச்சிட்டே இருந்தா போர் அடிச்சுடும் நண்பா

Mani Apj

‏பந்து போட்ட பவுலர் பவுன்டரி லைன்ல வேடிக்கை

பார்த்த சேவாக் & சுத்தி நின்னு வேடிக்கை பார்த்த பஞ்சாப் மக்கள கேட்டுப்பார் “தல” அடி எப்படி இருந்துச்சின்னு சொல்லுவாங்க

Ap

யாரு வேணாலும் #CSK தோல்வி பத்தி பேசுங்க !

ஆனா மும்பை பேன்ஸ் மட்டும் பேசாதீங்கடா !!  

உங்களுக்கு முதல் வெற்றியே இன்னும் கிடைக்கல... இந்த நிலைமைல எங்க முதல் தோல்விக்கு ஏன் மண்டி போட்டுட்டு இருக்கீங்க ???

சிவராம்

‏எதிரிக்கு பயத்த கொடுக்கணும்...

அதெல்லாம் CSK வால மட்டும் தான் முடியும்...

சினிமாபுரம்

தோனி எப்பவும் பால் வேஸ்ட் பண்ணுவார்னு யாரோ சொன்னீங்களே..

இங்க வாங்க...

அடிக்க மாட்டேன் சார் இங்க வாங்க

Daksh

‏ஜெயிக்கிறோம் இல்ல தோக்றோம்....ஆனால் கடைசி வரைக்கும் உங்க கண்ணுல இருந்த பயம் அது எங்களுக்கு புடிச்ருக்கு!!!! #Dhoni rocks

Hameed

‏நேற்று ஜெயித்தது என்னவோ பஞ்சாப் தான் ! ஆனால் டிரெண்டிங்கில் இருப்பதோ தல

priyadhanush rasigai

‏போராடி தோற்றுப் பார் ஜெயித்தவன் உன்னை மறக்க மாட்டான்

கமல்ஹாஷ்யன்

‏ட்விட்டர் பூராவுமே பஞ்சாப் ஜெயிச்சதவிட தோனியோட அட்டகாசமான ஆட்டத்த பத்திதான் இருக்கு.

என்னமோ தெர்ல, சென்னை தோத்த ஃபீலே வரல. தலடா

Prakash GoldPearl

‏தோனி இடம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் "விடாமுயற்சி"...

ℳЅⅅ நாயர்

‏தோல்வியையும் வெற்றியையும் ஏற்றுக்கொள்வதில் தலைவன் தோனி ஒரே ரகம் தான்

Thanujan92

‏தோனி 20/20ல இருந்து ரிட்டையர்மென்ட் ஆகலாம்னு சொன்னவங்களுக்கெல்லாம் தோனி தன் பேட் மூலமாகவே பதில் சொல்லிருக்காரு...

Aravind Dinesh

‏#Csk தோத்துடுச்சி, ஆனா

 #Dhoni  ஜெயிச்சிட்டான்

Sharmi   

‏50 அடிச்சிட்டோம்னு அலட்டல் இல்ல

முதுகு வலிச்சும் முயற்சிய விடல

தோத்துட்டோம்னு வருத்தமும் இல்ல

ட்விட்   காதலன்

‏அது செரி... தோனிக்கு வயசு ஆய்டுச்சு இனிமேல் அடிக்கவேமாட்டாருனு நினைச்சது எவ்ளோ பெரிய மகா முட்டாள் தனம்

இறைவன்

‏பரபரப்பான மேட்ச்ல  ஜெயிச்சவனை விட்டு தோத்தவனை இந்த உலகம் கொண்டாடுதுனா அதுதான் அவனுக்கான அடையாளம்

அருண்

சிஎஸ்கே  ஜெயிச்சுதானு ஹேட்டர்ஸ் கேட்கமாட்டானுக.

தோனி எத்தனை ரன் அடிச்சாருனு தான் கேட்பானுங்க.

அப்போ மீசைய முறுக்கிட்டு கெத்தா சொல்லலாம் 79 ரன் அடிச்சார்னு   அந்த கெத்து போதும்.

http://tamil.thehindu.com/opinion/blogs/article23557388.ece

  • தொடங்கியவர்

‘‘போட்டியை புனேவுக்கு மாற்றினால் என்ன? - விசில்போடு எக்ஸ்பிரஸ் ’’ சென்னையில் இருந்து தனி ரயிலில் புறப்பட்ட சிஎஸ்கே ரசிகர்கள்

 

 
klipng

 புனேவில் நடைபெறவுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் போட்டியை காண்பதற்காக  தனி ரயிலில் புனே புறப்பட்டுப் சென்றுள்ளனர் அந்த அணியின் ரசிகர்கள்.

காவிரி வாரியம் அமைக்கக் கோரிய தமிழகத்தில் போராட்டங்கள் வலுப்பெற்றது. இதனையடுத்து ஐபிஎல் போட்டிகளுக்கு எதிராக சென்னை சேப்பாக்கத்தில் கட்சிகள் போராட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸின் உள்ளூர் போட்டிகள் புனேவுக்கு மாற்றப்பட்டன.

2 வருடங்களுக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் போட்டிகளுக்கு திரும்பிய நிலையில் சென்னையில் நடைபெறவிருந்த போட்டிகள் புனேவுக்கு மாற்றப்பட்டதால் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களும் இது தொடர்பாக தங்களது வருத்தத்தை பதிவு செய்தனர்.

இந்த நிலையில் புனேவில் வெள்ளிக்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் அணியுடன் மோதும் போட்டியை காண விசில்போடு எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் புனேவுக்கு செண்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ரயில் ஒன்று புறப்பட்டது.

அந்த ரயிலின் அனைத்து இருக்கைகளையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களால் நிரப்பட்டுள்ளது.

மஞ்சள் நிற ஆடையுடனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொடியுடனும் ரசிகர்கள் தங்கள் புகைப்படங்களையும், வீடியோக்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இதனை சென்னை சூப்பர் கிங்ஸ் ட்விட்டர் பக்கம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

சென்னை சூப்பர் அணியின் மீதான சென்னை ரசிகர்களின் அன்பு பாராட்டுக்குரியது என்று பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றன.

http://tamil.thehindu.com/sports/article23600509.ece?homepage=true

 

 

 

 

புனேக்கு படையெடுக்கும் சென்னை ரசிகர்கள் 

 

 

சென்னை சுப்பர் கிங்ஸ் பங்குபற்றும் ஐ.பி.எல். போட்டியை பார்வையிடுவதற்காக சென்னை சுப்பர் கிங்ஸ் ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரயிலில் புனே நோக்கி படையெடுத்துள்ளனர்.

  CSK.jpg

இந்தியாவில் 10 ஆவது தடவையாக இடம்பெற்றுவரும் ஐ.பி.எல். போட்டியில் 7 போட்டிகள் சென்னையில் இடம்பெறவிருந்தன. 

ஆனால் கடந்த 7ஆம் திகதி மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையிலான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இடம்பெற்றது. 

30716691_10209400694889047_3027036793523

அப்போது, சென்னையில் காவிரி மேலாண்மை தொடர்பில் போாராட்டங்கள்  இடம்பெற்றுக் கொண்டிருந்தமையினால் சென்னையில்  ஐ.பி.எல் போட்டிகளை நடத்தக்கூடாதென பலர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இந்நிலையில் அதனை மீறி  ஐ.பி.எல். நிர்வாகம் சென்னையில் போட்டியை நடத்தியது. அப் போட்டியின் போது போராட்டக் காரர்கள் செருப்புகளை வீசியும் கோசங்களை எழுப்பியும் போராட்டதிதில் ஈடுபட்டனர்.

30729499_10209400694969049_5239206978328

இதையடுத்து மிகுந்த பாதிப்புக்குள்ளான ஐ.பி.எல் நிர்வாகம் சென்னையில் நடக்கவிருந்த மிகுதி 6 போட்டிகளையும் புனேக்கு இடம்மாற்றியது. 

இதனை தொடர்ந்து சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கும்  ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கும் இடையிலான போட்டி நாளை 20 ஆம் திகதி  புனேயில் இடம்பெறவுள்ளது.

30738852_10209400695289057_1594681692981

இப்  போட்டியை பார்வையிடுவதற்காக  சென்னை சுப்பர் கிங்ஸ் ரசிகர்கள் 1000 பேர் விசேட ரயில் மூலம் இன்று காலை சென்னை மத்திய புகையிரத நிலையத்தில் இருந்து புறப்பட்டனர்.

 

தமிழ் நாடு கிரிக்கெட் சங்கமும் சென்னை அணி ரசிகர்கள் மன்றமும் இந்த சிறப்பு ரயில் சேவையை  ஏற்பாடு செய்துள்ளது. இதன்போது சென்னை ரசிகர்கள் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் ஜேர்சியை அணிந்து சென்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/32620

  • தொடங்கியவர்

ஆயிரக்கணக்கான சிஎஸ்கே ரசிகர்களுடன் புணேவுக்குக் கிளம்பியது ‘விசில் போடு’ எக்ஸ்பிரஸ்!

 

 
csk_express1

 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதற்கிடையே சில நாள்களுக்கு முன்பு, சென்னை சூப்பர் கிங்ஸ் - நைட் ரைடர்ஸ் ஆட்டத்தை சென்னையில் நடத்தக்கூடாது என பல்வேறு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்தன. ஆனால் அதையும் மீறி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் ஆட்டம் நடைபெற்றது. எனினும் மைதானத்தின் உள்ளே காலணிகளை வீசியும், செல்லிடப்பேசிகளின் விளக்குகளை எரிய வைத்தும் போராட்டக்காரர்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். பலத்த பாதுகாப்பையும் மீறி மைதானத்தின் உள்ளே இதுபோன்ற சம்பவங்கள் நடந்தது பிசிசிஐக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து சென்னையில் நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் ஆட்டங்கள் புணேவுக்குத் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. வருகிற 20-ம் தேதி சென்னை - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் புணேவில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் சென்னையில் நடைபெறுவதாக இருந்த சிஎஸ்கே ஆட்டங்களைக் காண முடியாத ரசிகர்களுக்கு புதிய ஏற்பாடு ஒன்றைச் செய்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம். சென்னையில், சிறப்பு ரயில் ஒன்றை வாடகைக்கு எடுத்து அதில் சிஎஸ்கே ரசிகர்களை புணேவுக்கு அனுப்பி வைத்துள்ளது. விசில் போடு எக்ஸ்பிரஸ் என்று பெயரிடப்பட்டுள்ள அந்தச் சிறப்பு ரயில் இன்று காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புணேவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளது. 

சிஎஸ்கே ஃபேன்ஸ் கிளப் என்றொரு அமைப்பின் மூலமாக சிஎஸ்கே நிர்வாகத்துக்கு கோரிக்கை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. சென்னை ஆட்டங்கள் புணேவுக்கு மாற்றப்பட்டுள்ளதால், சலுகை விலையில் ரயில் அல்லது விமான டிக்கெட்டுகள் ஏற்பாடு செய்து தருமாறும் அல்லது ஆட்டத்துக்கான டிக்கெட் கட்டணத்தை ஏற்றுக்கொள்ளுமாறும் வைத்த கோரிக்கைக்கு இதுபோன்ற ஒரு ஏற்பாட்டைச் செய்துள்ளது சிஎஸ்கே நிர்வாகம். ரயிலில் ஓரிரு பெட்டிகள் ஒதுக்கித் தந்தால் கூடப் போதும் என்று கேட்டதற்கு ஒரு ரயிலையே ஏற்பாடு செய்துவிட்டது. இதையடுத்து தோனியின் தீவிர ரசிகரான சரவணன், பிரபு ஆகியோர் புணே செல்லக்கூடிய சிஎஸ்கே ரசிகர்களைத் தேர்வு செய்துள்ளார்கள். 

நாளை புணேவில் சென்னை - ராஜஸ்தான் ஐபிஎல் ஆட்டம் நடைபெறவுள்ளது. இந்த ஆட்டம் முடிந்தபிறகு அதே சிறப்பு ரயிலில் அனைவரும் அடுத்த நாள் சென்னைக்குத் திரும்புகிறார்கள். சிறப்பு ரயிலை ஏற்பாடு செய்தது மட்டுமல்லாமல் புணேவில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் தங்குவதற்கும் அவர்களுடைய உணவுச் செலவுக்கும் பொறுப்பு ஏற்றுக்கொண்டுள்ளது சிஎஸ்கே நிர்வாகம்.சிஎஸ்கே ட்விட்டர் பக்கத்தில் இந்தப் பயணம் குறித்த புகைப்படங்களும் காணொளிகளும் வெளியிடப்பட்டுள்ளன.

 

csk_express8881112211.jpg

csk_express88811122.jpg

csk_express888111.jpg

csk_express33.jpg

csk_express88888.jpg

csk_express77.jpg

csk_express888.jpg

http://www.dinamani.com/sports/special/2018/apr/19/csk-organizes-special-train-for-fans-to-watch-clash-in-pune-2903361.html

  • தொடங்கியவர்

வலைப்பயிற்சியில் பங்குபெறாத தோனி: நாளைய ஆட்டத்தில் விளையாடுவாரா?

 

 
dhoni12

 

பஞ்சாப் கிங்ஸ் லெவன் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இடையே ஆன ஐபிஎல் 12-வது ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை மொஹாலியில் நடைபெற்றது. முன்னதாக டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பீல்டிங்கை தேர்வு செய்தார். அதைத் தொடர்ந்து பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்களை எடுத்தது. அதைத் தொடர்ந்து சென்னை அணியால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு சென்னை அணி 193 ரன்களை மட்டுமே குவிக்க முடிந்தது. கடைசி ஓவரில் 11 ரன்கள் வெற்றிக்கு தேவை என்ற நிலையில் பஞ்சாப்பின் மொகித் சர்மா திறமையாக பந்து வீசி ரன்குவிப்பை கட்டுப்படுத்தினார். எனினும் கடைசி பந்தில் தோனி இமாலய சிக்ஸரை அடித்தார். 5 சிக்ஸர், 6 பவுண்டரியுடன் 44 பந்துகளில் தோனி 79 ரன்களைக் குவித்தும் சென்னை அணியால் வெற்றி பெற முடியவில்லை. எனினும் அவருடைய அதிரடி ஆட்டம், ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. 

இந்நிலையில் புணேவில் நாளை நடைபெறுகிற ஆட்டத்தில் ராஜஸ்தானை எதிர்கொள்கிறது சென்னை அணி.

பஞ்சாப்புக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் 79 ரன்கள் எடுத்த தோனிக்குக் காயம் ஏற்பட்டது. இது முழுவதுமாகக் குணமடையாததால் அவர் சிஎஸ்கே வீரர்களுக்கான வலைப்பயிற்சியில் இதுவரை ஈடுபடவில்லை. 

தோனி, முக்கிய பேட்ஸ்மேனாக மட்டுமல்லாமல் விக்கெட் கீப்பராகவும் செயல்படுவதால் முதுகு வலி உள்ளிட்ட பல காயங்களுக்கு உள்ளாக நேரிடுகிறது. இதனால் நாளைய ஆட்டத்தில் தோனி விளையாடுவது சந்தேகம் என்று அறியப்படுகிறது. இல்லாவிட்டால், விக்கெட் கீப்பிங் பணிகளை வேறொருவரிடம் அளித்துவிட்டு பேட்ஸ்மேனாக மட்டும் விளையாடவும் வாய்ப்புண்டு. இதனால் நாளைய ஆட்டத்தில் அம்பட்டி ராயுடு விக்கெட் கீப்பராகச் செயல்படுவார் எனத் தெரிகிறது

மேலும், சுரேஷ் ரெய்னா காயத்திலிருந்து குணமாகிவிட்டதால் நாளைய ஆட்டத்தில் விளையாடவும் வாய்ப்புண்டு. எனினும் சிஸ்கே அணியில் தோனி, ரெய்னா ஆகிய இரு வீரர்களும் இடம்பெறுவார்களா என்பது நாளைதான் தெரியவரும்.

http://www.dinamani.com/sports/special/2018/apr/19/dhoni-misses-practice-session-2903393.html

  • தொடங்கியவர்

விசில் போடு எக்ஸ்பிரஸ்: 1,000 ரசிகர்களை இலவசமாக புனே அழைத்துச் சென்ற சிஎஸ்கே

ரசிகர்களை இலவசமாக புனேவுக்கு அழைத்துச்சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிபடத்தின் காப்புரிமைCHENNAI SUPER KINGS

சென்னையில் நடைபெற வேண்டிய ஐபிஎல் போட்டிகள் புனேவுக்கு மாற்றப்பட்டதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1,000 ரசிகர்களை தேர்ந்தெடுத்து அவர்களை இன்று புனேவில் நடைபெறும் போட்டியை காண்பதற்காக சிறப்பு ரயிலில் இலவசமாக அழைத்து சென்றுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்தக்கூடாது என்று பல அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் வலியுறுத்தின. அதை மீறி போட்டிகளை நடத்தினால் ஏற்படும் பாதுகாப்பு பிரச்சனைகளை கருத்திற்கொண்டு சென்னையில் நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் போட்டிகள் புனேவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இன்று (வெள்ளிக்கிழமை) ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான சென்னையில் நடைபெறவேண்டிய போட்டி புனேவில் நடந்தாலும், அங்கு தனது அணியின் ரசிகர்கள் இருப்பார்கள் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், 'விசில் போடு எக்ஸ்பிரஸ்' என்று அழைத்துக்கொள்ளும் ரயிலில் புனேவை நோக்கிய 21 மணிநேர பயணத்தை 1000 ரசிகர்கள் சென்னையிலிருந்து வியாழக்கிழமை காலை துவக்கினர்.

ரசிகர்களை இலவசமாக புனேவுக்கு அழைத்துச்சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிபடத்தின் காப்புரிமைCHENNAI SUPER KINGS

இந்தப் போட்டியை காண்பதற்காக ரயிலில் இலவசமாக அழைத்துச்செல்லப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் குழுவின் உறுப்பினர்களுக்கு போட்டிக்கான டிக்கெட், உணவு மற்றும் இருப்பிடமும் இலவசமாக வழங்கப்படுகிறது.

ரசிகர்கள் போட்டியை காண்பதற்கு மிகவும் ஆவலுடன் உள்ளதாக சிஎஸ்கே அணியின் தலைமை செயலதிகாரியான காசி விஸ்வநாதன் கிரிக்இஃன்போ இணையதளத்திடம் தெரிவித்துள்ளார்.

"இந்த ஏற்பாடுகளை செய்து தருமாறு ரசிகர்கள் எங்களுக்கு கோரிக்கை விடுத்தனர். ரசிகர்களுக்கு நல்ல பதிலை கொடுக்கும் வகையில் அவர்களின் கோரிக்கையை நாங்கள் ஏற்றுக்கொண்டோம்."

"இதுபோன்ற ஏற்பாடுகளை புனேவில் நடைபெறும் அனைத்து போட்டிகளுக்கும் ஒருங்கிணைப்பது கடினம். முதற்போட்டிக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, இதைத் தொடர்ந்து நடைபெறும் போட்டிகளுக்கும் தொடர்வதைப் பற்றி முடிவு செய்வோம். இவை எல்லாமுமே ரசிகர்களுக்குக்காகத்தான்" என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இன்றிரவு 7:30 மணிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக புனேவில் நடைபெறும் போட்டியில் மகேந்திர சிங் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்குகிறது.

https://www.bbc.com/tamil/sport-43840615

  • தொடங்கியவர்

வாட்சன் சதம்: ஆர்சிபிஐ கிண்டல் செய்த நெட்டிசன்கள்

 
 
jkupng

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடானான நேற்றையை போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸின் வெற்றிக்கு சதம் விளாசி முக்கிய காரணமானவராக விளங்கினார் ஷேன் வாட்சன்.

புனேவில் வெள்ளிக்கிழமை ராஜஸ்தானுடன் நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணி வீரர் ஷேன் வாட்சன் 57  பந்துகளில் 106 ரன்கள் எடுத்து சென்னை அணியின் வெற்றிக்கு உதவிக்கு வித்திடார்.

சென்னையின் வெற்றியை சமூக வலைதளங்களில் பலர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த அதே வேளையில் மற்றும் சிலர் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை கிண்டல் செய்து பதிவுகளையிட்டு வந்தனர்.

பெங்களூர் அணியிலிருந்து கழற்றிவிடப்பட்ட வீரர்கள் (கெயில், வாட்சன்)  பிரகாசமாக விளையாடி வருவதால் அதனை குறிப்பிட்டு ஆர்சிபி அணியை நெட்டிசன்கள் கிண்டல்  செய்தனர்.

இதோ அவற்றில் சில பதிவுகள்:

தலவெறியன் பிரவீன் 

‏ஆனால் எனக்கு தெரிஞ்சு மற்ற டீம்ல இருந்து வந்த வீரர்கள் ஒவ்வொரு சீசன்லயும் CSK டீம்காக நல்ல விளையாடுறத பார்க்க முடியுது...

kpng

Moses Snowin Viswasam

‏வாட்சன் அடிக்குற ஒவ்வொரு அடியும் ஆர்சிபி பேன்ஸ்க்கு வயிறு எரியும்

kilpng
vgbpng
7png
9opng

http://tamil.thehindu.com/sports/article23626143.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.