Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2017: மறக்க முடியுமா? - உலகம்

Featured Replies

2017: மறக்க முடியுமா? - உலகம்

 

2CHWorldtrump

ஜனவரி

ஜன. 5: வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை ஆகியவற்றை மக்கள் எதிர்கொள்வதற்கு, ‘அடிப்படை ஊதிய’ (பேஸிக் இன்கம்) முறையை ஃபின்லாந்து அறிமுகப்படுத்தியது.

ஜன. 12: நார்வே நாட்டில் எஃப்.எம். ரேடியோ ஒலிபரப்பு, தடைசெய்யப்பட்டது. எஃப்.எம். ரேடியோவுக்குத் தடை விதித்த முதல் நாடு நார்வே.

பிப்ரவரி

பிப். 2: பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக், சிரியா ஆகிய ஐந்து நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு விசா வழங்குவதைத் தற்காலிகமாக நிறுத்திவைத்தது குவைத். பிப். 21: இந்து திருமணச் சட்ட மசோதாவுக்கு பாகிஸ்தான் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.

மார்ச்

மார். 14: ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் பிரிவதற்கான ‘ப்ரெக்ஸிட் மசோதா’வுக்கு பிரிட்டன் நாடாளுமன்றம் இறுதி ஒப்புதல் அளித்தது.

மார். 24: விடுதலைப் புலிகளுடனான போரின்போது நடைபெற்ற போர் குற்றங்களை விசாரித்து முடிவுகளைச் சமர்ப்பிக்க இலங்கை அரசுக்கு ஐ.நா. சபையின் மனித உரிமை கவுன்சில் மேலும் இரண்டு ஆண்டுகள் அவகாசம் அளித்தது.

2CHWorldApr15

ஆலன் கோல்ட்ஸ்

ஏப்ரல்

ஏப். 6: பிட்காயினைச் சட்டரீதியான பணமாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது ஜப்பான் அரசு.

ஏப். 8: ஐ.நா. சபையின் மிக இளவயது அமைதித் தூதராக பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யூசுஃப்சாய் தேர்வுசெய்யப்பட்டார்.

ஏப். 15: உலகப் புகழ்பெற்ற ஜாஸ் கிடார் கலைஞர் ஆலன் கோல்ட்ஸ் வொர்த் தனது 70வது வயதில் காலமானார். நாற்பது ஆண்டுகள் தொடர்ந்து பிரபலமாக இருந்த இசைப் பாணிகளுக்கு ஈடுகொடுத்துப் பணியாற்றியவர்.

ஏப். 17: நவீனக் கணினி, இணையதள இணைப்புகளை உருவாக்கிய ராபர்ட் டெய்லர் 85வது வயதில் காலமானார்.

ஏப். 28: உலோகச் சுரங்கங்களுக்குத் தடைவிதித்தது எல் சல்வடார். இப்படியான தடையை விதித்த முதல் நாடு இதுவே.

மே

மே 8: பிரான்ஸின் அதிபராக இம்மானுவேல் மக்ரோன் தேர்வுசெய்யப்பட்டார். நெப்போலியனுக்குப் பிறகு மிக இள வயதில் அந்நாட்டு அதிபராகப் பதவியேற்றவர் இவர்.

மே 10: இந்தியாவின் முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட மரண தண்டனைக்குத் தடைவிதித்தது சர்வதேச நீதிமன்றம்.

மே 20: ஈரானின் அதிபராக ஹசன் ரவுஹானி இரண்டாவது முறையாகத் தேர்வுசெய்யப்பட்டார்.

மே 23: சர்வதேச சூரிய எரிசக்தி கூட்டு ஒப்பந்தத்துக்கு நவுறு தீவு நாடு ஒப்புதல் அளித்தது. இந்த ஒப்பந்தத்தை உறுதி செய்த 6-வது நாடு இது.

ஜூன்

ஜூன் 12: பாரிஸ் பருவநிலை மாற்ற மாநாட்டு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக அமெரிக்கா அறிவித்தது. பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்கும் நடவடிக்கைகளுக்குப் பெரும் பின்னடைவாகப் பல நாடுகளால் இது கருதப்படுகிறது.

ஜூன் 30: தன்பால் ஈர்ப்புகொண்டவர்கள் திருமணம் செய்துகொள்வதைச் சட்டப்பூர்வமாக அங்கீகரித்தது ஜெர்மனி .

ஜூலை

ஜூலை 4: காங்கோ நாட்டில் எபோலா நோய் மறைந்துவிட்டதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.

ஜூலை 10: ஐ.எஸ். தீவிரவாதிகளிடமிருந்து மொசூல் நகரை கைப்பற்றியது ஈராக்.

ஜூலை 28: பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீஃப், தனது பதவியை ராஜினாமா செய்தார். ‘பனாமா பேப்பர்ஸ்’ வழக்கில் அவர் சிக்கியதைத் தொடர்ந்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அவரைப் பிரதமர் பதவியிலிருந்து விலக உத்தரவிட்டது.

2CHWorldApr17

ராபர்ட் டெய்லர்

ஆகஸ்ட்

ஆக. 10: பெண்களுக்கு உடல்ரீதியாக ஏற்படும் இயற்கையான நிகழ்வான மாதவிடாய் நாட்களின்போது அவர்களை வீட்டைவிட்டு ஒதுக்கிவைக்கும் சம்பிரதாயத்தைக் குற்றமாக அறிவித்தது நேபாளம்.

ஆக. 29: உலகில் முதன்முறையாக ‘குறைந்த ஆற்றல்கொண்ட செறிவூட்டப்பட்ட யுரேனிய வங்கி’யை (லோ என்ரிச்டு யுரேனியம்) கஜகஸ்தானில் சர்வதேச அணு சக்தி முகமை ஏற்படுத்தியது.

செப்டம்பர்

செப். 3: ஹைட்ரஜன் அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்தியதாக வட கொரியா தெரிவித்தது. இதனால், பரிசோதனை செய்யப்பட்ட பகுதியைச் சுற்றிக் கிட்டத்தட்ட 6.3 ரிக்டர் அளவுக்கு நில அதிர்வு பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வட கொரியா மீது பொருளாதாரம் உட்படப் பல்வேறு விதமான தடைகளை ஐ. நா.வின் பாதுகாப்பு கவுன்சில் விதித்தது.

செப். 22: அணு ஆயுதங்களுக்கு எதிரான ஐ.நா. உடன்படிக்கையில் 50 நாடுகள் கையெழுத்திட்டன. இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்ட முதல் நாடு பிரேசில்.

அக்டோபர்

அக். 13: ஐ.நா.வின் அங்கமான யுனெஸ்கோ அமைப்பிலிருந்து இஸ்ரேல், அமெரிக்கா இரண்டு நாடுகளும் வெளியேறுவதாக அறிவித்தன.

அக். 24: பருவநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்தில் நிகரகுவா நாடு கையெழுத்திட்டது.

அக். 30: 2018-ம் ஆண்டிலிருந்து விளையாட்டு அரங்கங்களுக்குள் பெண்கள் அனுமதிக்கப்படுவார்கள் என சவுதி அரேபிய அரசு அறிவித்தது.

நவம்பர்

நவ. 5: பெரும் செல்வந்தர்கள் வரிச் சலுகையைப் பயன்படுத்தும் ரகசியங்களைப் பற்றி, ‘பாரடைஸ் பேப்பர்ஸ்’ என்ற தலைப்பில், ‘சுடூஸ்ச்சே ஜெய்டங்’ என்ற ஜெர்மன் நாளிதழில் புலனாய்வுப் பத்திரிகையாளர்கள் சர்வதேசக் கூட்டமைப்பு (ICIJ) அம்பலப்படுத்தியது.

நவ. 7: இதுவரை பதிவான வெப்பமான மூன்று ஆண்டுகளில் 2017-ம் ஆண்டு இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளதாக நவம்பர் 6-ல் ஜெர்மனியில் நடைபெற்ற ஐ.நா. பருவநிலை மாற்றம் பற்றிய கருத்தரங்கில் உலக வானிலை மையம் அறிவித்தது.

நவ. 1: கடந்த 37 ஆண்டுகளாக ஜிம்பாப்வே நாட்டின் அதிபராக இருந்த ராபர்ட் முகாபே தனது பதவியை ராஜினாமா செய்தார். நவம்பர் 15 அன்று ஜிம்பாப்வே அரசு நடவடிக்கைகளில் அந்நாட்டின் ராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட தலையீட்டைத் தொடர்ந்து அவர் பதவியைத் துறந்தார்.

டிசம்பர்

டிச. 4: ‘பிட்காயின்’ போன்று ‘பெட்ரோ’ (Petro) எனும் புதிய மெய்நிகர் ரொக்கத்தை வெனிசுலா அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது.

டிச. 21: இஸ்ரேலின் தலைநகரமாகப் பல காலமாக டெல் அவிவ் இருந்துவருகிறது. ஆனால், இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேம் நகரத்தைக் கடந்த ஆண்டு டிசம்பர் 6-ல் அமெரிக்கா அறிவித்தது. இதை ஐ.நா. சபை டிசம்பர் 21 அன்று நிராகரித்தது.

ரோஹிங்கியா ரணம்

ரோஹிங்கியா முஸ்லிம்களின் பிரச்சினை 2016-லிருந்து முடிவில்லாமல் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது. மியான்மர் நாட்டில் உள்ள சில காவல் நிலையங்கள் மீது ரோஹிங்கியா கிளர்ச்சியாளர்கள் சிலர் 2017 ஆகஸ்டில் தாக்குதல் நடத்தியதாகக் கூறி, அந்நாட்டு அரசு ஒட்டுமொத்த ரோஹிங்கியா முஸ்லிம்களின் மீதும் தாக்குதலை ஏவியது. அரச பயங்கரவாதத்திலிருந்து தப்பிக்க, ரோஹிங்கியா முஸ்லிம்கள் காடுகள், நதிகள் எனப் பல அபாயங்களைக் கடந்து இந்தியா, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் அகதிகளாகத் தஞ்சமடைந்துவருகிறார்கள். இந்தத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதால், ‘நோபல் அமைதி பரிசு பெற்றவரே இந்த விஷயத்தில் அமைதி காக்கலாமா’ என்று ஆங் சான் சூ கி மீது விமர்சனங்கள் எழுந்தன.

2CHWorldtrump
 

டிரம்பின் நழுவல்

அமெரிக்காவின் 45-வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற (ஜனவரி 21) பிறகு, அமெரிக்கர்களுக்கு நல்லது நடந்ததோ இல்லையோ உலகின் இதர நாடுகளுக்கு அவ்வப்போது சிக்கல்கள் அதிகரித்துக்கொண்டேயிருக்கின்றன. ஈரான், ஈராக், பாகிஸ்தான் போன்ற இஸ்லாமிய நாட்டினருக்கு விசா மறுப்பு, பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்திலிருந்து நழுவல், அகதிகள் தொடர்பான ஐ.நா. உடன்படிக்கையிலிருந்து பின்வாங்கல், வடகொரியாவுடன் சச்சரவு, இஸ்ரேல் நாட்டின் தலைநகரை மாற்றுவதில் மண்ணைக் கவ்வியது என டிரம்ப் பதவியேற்ற முதல் ஆண்டிலேயே ஏகப்பட்ட பிரச்சினைகள் வரிசைகட்டி நின்றன.

http://tamil.thehindu.com/opinion/columns/article22374164.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.