Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உறவை முறிக்குமா பிணைமுறி?

Featured Replies

உறவை முறிக்குமா பிணைமுறி?

 

பிணைமுறி ஊழல் விவ­கா­ரமும் அது தொடர்­பாக கடந்த பத்து மாதங்களுக்கு மேலாக நடைபெற்ற ஜனா­தி­பதி ஆணைக்­குழு விசா­ரணை அறிக்­கையும் அதன் மீதான ஜனா­தி­ப­தியின் கருத்­துக்­களும் இந்த வார அர­சியல் களத்தில் பேசு­பொ­ரு­ளா­கி­யுள்­ளன. ஜனா­திபதி ஆணைக்­கு­ழுவின் அறிக்கை மீதான ஜனா­தி­ப­தியின் கருத்­துக்­களைப் போலவே பிர­த­மரின் கருத்­துக்­களும் கூட கவ­னத்­தைப்­பெற்­றுள்­ளன.

தேசிய அர­சாங்­கத்தின் இரண்டு பிர­தான கட்­சி­களின் தலை­வர்­க­ளான ஜனா­தி­பதி மைத்­தி­ரியும் பிர­தமர் ரணிலும் குற்­ற­வா­ளி­களை இனங்­கண்டு தண்­டனை வழங்க வேண்டும் என விடுத்­தி­ருக்கும் அறிக்கை முன்­மா­தி­ரி­யா­ன­துதான். எனினும் அத்­த­கைய குற்­ற­வா­ளி­க­ளா­ன சந்­தேக நபர்­களும் இதே நல்­லாட்­சியின் உறுப்­பி­னர்­கள்தான் என்ற நிலை வரு­கின்ற போதுதான் 'பிணை­முறி' விவ­காரம் தேசிய அரசின் உறவை முறிக்­குமா என எண்ணத் தோன்­று­கி­றது.

பொது­வாக கீழைத்­தேய நாடு­களில் அர­சி­யலில் கள­மி­றங்­கி­விட்டால் பெரும் பணக்­கா­ர­ரா­கி­வி­டலாம் என்­கின்ற மனப்­பாங்கு இருக்­கின்­றது. அதற்கு காரணம் அரச இயந்­தி­ரத்தில் கொள்கை தீர்­மானம் எடுக்கும் பாத்­தி­ரத்தை மாத்­திரம் வகிக்க வேண்­டிய அர­சியல் புள்­ளிகள் அத்­த­கைய தீர்­மா­னத்தை நடை­ மு­றைப்­ப­டுத்தும் நிர்­வாக இயந்­தி­ரத்­துக்குள் தமது அர­சியல் தலை­யீ­டு­களைச் செய்­வதன் ஊடாக தனக்கு இலாபம் ஈட்­டு­வ­தற்கு ஏற்­றாற்­போல அதனை அமைத்­துக்­கொள்­வ­தாகும்.

அபி­வி­ருத்தி அடைந்த நாடு­க­ளிலும் இத்­த­கைய ஊழல்கள் இடம்­பெ­றாமல் இல்லை. எனினும் அங்கு முறை­மைப்­ப­டுத்­திய ஒரு முறைக்குள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­ற­போது ஆசிய நாடு­களில் குறிப்­பாக தென்­னா­சிய நாடு­களில் இந்த நடை­மு­றைகள் அர­சி­யல்­வா­தி­களின் கைகளில் அதிக பலத்­தைக்­கொ­டுப்­ப­தாக உள்­ளன.

வளர்­முக நாடு­க­ளிலும் அபி­வி­ருத்­தியை இலக்­காகக் கொண்ட நாடு­களிலும் இந்­நி­லையில் பெரிதும் மாற்­றத்தைக் காணலாம். உதா­ர­ண­மாக பூட்டான் போன்ற நாடு­களில் சில முன்­மா­தி­ரி­யான அம்­சங்­க­ளையும் காண முடி­கின்­றது.

அங்கு அர­சி­யலில் மக்கள் பிர­தி­நி­தி­யாக தெரிவு செய்­யப்­படும் ஒருவர் வேறு தொழில்­களை செய்ய முடி­யாது. அவர் முழு நேர­மாக தெரிவு செய்­யப்­பட்ட மக்கள் பிர­தி­நி­தி­யாக செயற்­ப­ட­ வேண்டும். அதற்­கு­ரிய கௌர­வ­மான கொடுப்­ப­னவும் இதர வச­தி­களும் அவ­ருக்கு வழங்­கப்­படும். இலங்கை போன்ற நாடு­களில் தெரி­வு­ செய்­யப்­படும் மக்கள் பிர­தி­நி­தி­க­ளுக்கு வழங்­கப்­படும் கொடுப்­ப­ன­வு­களும் இதர வச­தி­க­ளுக்­கான ஏற்­பா­டு­களும் பொருத்­த­மா­ன­தாக இல்லை. இதனால் இயல்­பா­கவே வரு­மா­னத்­திற்­கான மாற்­று­ வ­ழி­களை அவர்கள் நாடு­கின்­றனர்.

மறு­புறம் ஆட்சி அதி­கா­ரத்தைக் கைப்­பற்­று­வ­தற்கும் மக்கள் பிர­தி­நி­தி­யாக தெரி­வா­வ­தற்கும் அதி­க­ள­வான செல­வீ­னங்­களை செய்தே ஆக­வேண்டும் என்­கின்ற அர­சியல் கலா­சாரம் இலங்­கைக்குள் நில­வு­கின்­றது.

பிணைமுறி மோசடி விவ­காரம் கூட அந்த பின்­ன­ணியில் உரு­வா­ன­துதான் என்­பதை முதலில் புரிந்­து­கொள்ள வேண்­டி­யி­ருக்­கின்­றது.

கடந்த அர­சாங்கம் என்­பது தமது பரம்­பரை ஆட்­சியை முன்­னெடுப்பதற்­கான ஏற்­பா­டு­களை அர­சியல் அமைப்பு திருத்­­தத்தின் ஊடாக முன்­னெ­டுத்து அதனை நடைமு­றைச் ­சாத்­தி­ய­மாக்­கிக் ­கொள்­வ­தற்­கான ஏற்­பா­டாக ஜனா­தி­பதித் தேர்­தலை முன்­கூட்­டியே தீர்­மா­னித்த போதுதான் அந்த ஆட்­சியை முடி­வுக்கு கொண்­டு­ வ­ர­வேண்டும் என்னும் கருத்து பர­வ­லாக எழுந்­தது. அதன்­போது அதிக பணத்­தேவை அப்­போ­தைய எதி­ர­ணிக்கு தேவைப்­பட்­டி­ருக்கும்.

அர­சி­யலில் எப்­போதும் ஆட்­சியை தீர்­மா­னிக்­கின்ற சக்­தி­க­ளாக பெரும் வியா­பார புள்­ளிகள் இருப்­ப­துண்டு. தங்­க­ளது எதிர்­கால வியா­பாரத்துக்­கான முத­லீ­டாக முன்­கூட்­டியே தேர்­தல்­க­ளுக்­கா­கவோ அல்­லது ஆட்சி மாற்­றத்­துக்­கா­கவோ பெரும் வியா­பார புள்­ளிகள் கட்­சி­க­ளுக்கு பணம் வழங்­கு­வது வழமை. அவர்கள் முத­லீடு செய்த கட்சி அல்­லது அணி ஆட்­சிக்கு வந்­ததும் தமது முத­லீட்டை வட்­டியும் முத­லு­மாக ஈட்­டிக்­கொள்ளும் திட்­டத்தை அந்த பெரும் வியா­பார புள்­ளிகள் அந்த அர­சாங்­கத்தின் ஊடாக நிறை­வேற்­றிக்­கொள்வர்.

இதன்­போது அமை­கின்ற அர­சாங்­கமும் அத்­த­கைய வியா­பார புள்­ளி­க­ளுக்கு கைமாறு செய்ய வேண்­டிய கட்­டா­யத்தில் இருக்கும். எனவே முறை­மைக்கு மாறான வழி­களில் வியா­பா­ரத்­துக்­கான ஏற்­பா­டு­களை அரசாங்கம் குறித்த வியா­பார நிறு­வ­னத்­துக்கு ஏற்­றாற்­போல முறை­மையை மாற்­றி­ய­மைக்க ஒத்­து­ழைக்க வேண்­டி­யி­ருக்கும். இதுவே ஊழல்­களின் ஆரம்ப தள­மாக அமைந்து விடு­கின்­றது. மேலி­டத்தில் ஆரம்­பிக்கும் இந்த ஊழல் மிக்க நடை­முறை அடி­மட்ட அர­சியல் தளம் வரை பரந்து விரிந்து செல்லும்.

பிணைமுறி விவ­கா­ரத்தின் பின்­னணி கூட இத்­த­கை­ய­தாக இருப்­ப­தற்­கான வாய்ப்­புக்கள் அதிகம் என்­பதை ஜனா­தி­ப­தியின் கடந்த வார விசேட உரையின் மூலம் அறி­யக்­கூ­டி­ய­தாக இருக்­கின்­றது. இதில் முதலில் பிணைமுறி வியா­பாரம் என்றால் என்ன என தெரிந்­து­கொள்­வதன் ஊடா­கத்தான் அங்கு இடம்­பெற்­ற­தாக சொல்­லப்­படும் ஊழல் பற்றி புரிந்­து­கொள்ள முடியும்.

'எந்­த­வொரு அர­சாங்­கமும் வரவு – செல­வுத்­திட்­டத்தின் ஊடாக எதிர்­வரும் ஆண்­டுக்­கு­ரிய வரு­மான வழி­வ­கை­க­ளையும் அது எவ்­வாறு செலவு செய்­யத்­திட்­ட­மி­டப்­ப­டு­கின்­றது என்­ப­தையும் முன்­கூட்­டியே கணித்­துக்­கொள்­வ­துண்டு. அபி­வி­ருத்தி அடைந்­து­வ­ரு­கின்ற உலகில் தமது வரு­மானம் எப்­போதும் தமது செல­வு­க­ளுக்கு போது­மா­ன­தாக இருப்­ப­தில்லை என்­கின்ற அடிப்­ப­டைக்கு அமை­வாக வரவு–செல­வுத்­திட்டம் எப்­போதும் பற்­றாக்­கு­றை­யா­ன­தா­கவே அமை­வ­துண்டு. இத­னையே அபி­வி­ருத்தி பாதீடு என்­கின்­றார்கள்.

வரு­மா­னத்­திற்குள் செல­வுகள் அமைந்­து­வி­டு­கின்ற பட்­சத்தில் நாட்டில் அனைத்து தேவை­களும் நிறைவு பெற்­றி­ருக்க வேண்டும். ஆனால் , நடை­முறை அவ்­வா­றா­ன­தாக இல்லை. எனவே பற்­றாக்­கு­றை­யான வரவு–செல­வுத்­திட்­டத்­தினை ஈடு செய்ய உள்­நாட்டு, வெளி­நாட்டு கடன்கள் பெறப்­ப­டு­வ­துண்டு. உள்­நாட்­டுக்­க­டன்­களைப் பெறு­வ­தற்கு உள்ள வழி­களில் பிர­தா­ன­மா­னது மத்­தி­ய­வங்கி ஊடாக வட்­டிக்கு கடன் பெறு­வ­துதான்.

மத்­தி­ய­வங்கி இவ்­வாறு பெற்­றுக் கொள்ளும் கடன்­க­ளுக்கு ஈடாக எத­னை­யா­வது கொடுக்க வேண்டும். அந்த ஈடுதான் திறை­சேரி உண்­டி­யல்­களும், பிணைமுறி­களும் ஆகும். சுருங்­கச்­சொன்னால் ஈட்­டுக்­க­டையில் வட்­டிக்கு பணம் எடுக்க நகை­களை அட­மானம் வைப்­ப­துபோல் உள்­நாட்டில் கடன் பெற்­றுக்­கொள்ள இந்த திறை­சேரி உண்­டி­யல்­க­ளையும் பிணைமுறி­க­ளையும் மத்­திய வங்கி ஈடாக வழங்கும்.

இந்த திறை­சேரி உண்­டி­யல்­க­ளி­னதும், பிணைமுறி­க­ளி­னதும் வடிவம் எத்­த­கை­யது என்றால் வெறும் காகி­தமே. இது ஒரு உறுதிச் சான்­றிதழ், அவ்­வ­ள­வுதான். மத்­திய வங்கி இறை­மை­யுள்ள நாட்டின் தலைமை நிதி நிறு­வனம் என்­கின்ற வகையில் அது விநி­யோ­கிக்கும் இந்த பத்­தி­ரத்­துக்கு ஒரு பண மதிப்பு உண்­டா­கின்­றது.

மத்­திய வங்­கியின் மீதான இந்த இறைமை உத்­த­ர­வாத நம்­பிக்­கையின் அடிப்­ப­டையில் கடன்கள் வழங்­கப்­ப­டு­கின்­றன. உரிய காலத்தில் மத்­தி­ய­வங்கி தான் பெற்­றுக்­கொண்ட கடன்­களை திரும்ப செலுத்தி தான் விநி­யோ­கித்த உறுதிச் சான்­றி­தழ்­க­ளான திறை­சேரி உண்­டி­யல்­க­ளையோ அல்­லது பிணைமுறி­க­ளையோ திரும்ப பெற்­றுக்­கொள்ளும்.

உள்­நாட்­டுக்­க­டன்­களைப் பெற்­றுக்­கொள்ள மத்­திய­ வங்கி இத்­த­கைய உண்­டி­யல்கள் அல்­லது பிணை முறி­க­ளுக்­காக விற்­பனை விளம்­ப­ரத்தை ஊட­கங்­களின் ஊடாக வெளி­யிடும். அவை 6 மாதம் , 12 மாதம் என மாதக்­க­ணக்கின் அடிப்­ப­டையில் மட்­டு­மல்­லாது வரு­டங்­களின் அடிப்­ப­டையில் நீண்ட காலப்­ப­கு­தி­களைக் கொண்­ட­தா­கவும் அமைந்­தி­ருக்கும்.

உள்­நாட்டில் மத்­திய வங்­கிக்கு கடன் கொடுக்க விரும்பும் ஒருவர் இந்த பத்­தி­ரத்தை கொள்­வ­னவு செய்­யலாம். முதிர்ச்சி கால முடிவில் அந்த பத்­தி­ரத்தை திரும்­பவும் மத்­திய வங்­கிக்கு கொடுத்­து­விட்டு தான் முத­லீடு செய்த பணத்தை திரும்ப பெற்­றுக்­கொள்­ளலாம். குறுங்­கால அடிப்­ப­டை­யிலோ அல்­லது நீண்ட கால அடிப்­ப­டை­யிலோ இந்த உண்­டி­யல்கள் அல்­லது முறிகள் விற்­பனை செய்­யப்­ப­டு­வ­துண்டு.

உள்­நாட்டில் நிதி­யினைக் கொண்­டி­ருக்க கூடிய வர்த்­தக வங்­கிகள், நிதி­நி­று­வ­னங்கள், நிதி­யங்கள், சேமிப்பு நிறு­வ­னங்கள் இந்த பிணைமுறி மீதான முத­லீ­டு­களை பிர­தா­ன­மான தொழி­லாக கொண்­டி­ருக்­கின்­றன. குறிப்­பாக ஊழியர் சேம­லாப நிதியம், ஊழியர் நம்­பிக்கை நிதியம், சேமிப்பு வங்­கிகள், காப்­பு­றுதி நிறு­வ­னங்கள், நிதி­யியல் நிறு­வ­னங்கள் போன்­றன பொதுமக்­க­ளிடம் இருந்து சேக­ரிக்­கின்ற நிதி­யினை முத­லீ­டு­க­ளாக மேற்­கொண்டு தமது வரு­மா­னத்தை ஈட்­டு­வ­தற்கு இறைமை பொறுப்புக் கூறக்­கூ­டிய மத்­திய வங்கி முறி­களில் அதிகம் முத­லீடு செய்­கின்­றன.

ஊழியர் சேம­லாப நிதி உண்­மையில் தொழி­லா­ளர்­களின் பெயரில் தொழி­லா­ளர்­க­ளி­னதும் தொழில் கொள்­வோ­ரி­னதும் பங்­க­ளிப்­புடன் உரு­வாக்­கப்­ப­டு­கின்­றது. மாதாந்தம் இந்த தொகை நிதி­யத்­துக்கு செலுத்­தப்­ப­டும்­போது அங்கு திரளும் நிதி­யினை திறை­சேரி உண்­டி­யல்கள் அல்­லது பிணைமுறி­களில் முத­லீடு செய்து ஊழியர் நம்­பிக்கை நிதி­ய­மா­னது வட்டி வரு­மா­னத்தை ஈட்­டிக்­கொள்­கின்­றது.

இத­னைக்­கொண்­டுதான் ஊழியர் சேம­லா­ப­நி­திக்கு தொழி­லா­ளர்கள் செலுத்தும் நிதி­யினை மீளப்­பெ­றும்­போது வட்­டி­யுடன் திருப்பிச் செலுத்­து­கின்­றது. இதன்­படி பார்த்தால் மத்­திய வங்­கிக்கு தேவை­யான உள்­நாட்­டுக் ­க­டன்­களைப் பெற்­றுக்­கொ­டுப்­பது பொது­மக்­களின் சேமிப்­பு­களே. அதனை வங்­கி­களும் நிதி­யங்­களும் சேமிப்பு வட்­டியின் அடிப்­ப­டையில் ஒன்று திரட்டி அர­சக்கு வழங்கி தாம் வட்டி வரு­மா­னத்தை பெற்­றுக்­கொள்­வ­தோடு அதன் பய­னா­ளி­க­ளான பொது­மக்­க­ளுக்கும் ஒரு பகு­தியைக் கொடுக்­கின்­றது.

மத்­திய வங்கி பிணைமுறி­களை விற்­பனை செய்­யும்­போது ஏற்­க­னவே தங்­க­ளிடம் பதிவு செய்­துள்ள கொள்­வ­ன­வா­ளர்­க­ளுக்கு முன்­னு­ரிமை அளிப்­ப­துண்டு. தவி­ரவும் அவை குறித்த பிணை முறிக்­காக கோரும் வட்டியின் வீதத்­தையும் கொடை ­மு­னைவு (offer) செய்யும். இது கேள்வி அறி­வித்தல் ஊடாக இடம்­பெறும். இவ்­வாறு பதிவு செய்­யப்­பட்ட நிறு­வ­னங்கள் பிணைமுறி­களை கொள்­வ­னவு செய்து தான் பெறு­கின்ற வட்­டி­யினை விட அதிக வட்­டிக்கு பிற நிறு­வ­னங்­க­ளுக்கு கைமாற்­றுவ­தன் ஊடா­கத்தான் பிணைமுறி வியா­பா­ர பண்­ட­மாக மாறு­கின்­றது.

இப்­போது ஊழல் தொடர்பில் குற்றம் சாட்­டப்­பட்­டி­ருக்கும் பேர்­பச்­சுவல் ட்ரெஷரீஸ் என்னும் நிறு­வனம் இவ்­வாறு பிணைமுறி கொள்­வ­ன­வுக்­காக மத்­தி­ய­ வங்­கியில் பதிவு செய்­து­கொண்­டுள்ள நிறு­வனம். இந்த நிறு­வனம் ஏனைய நிறு­வ­னங்கள் கோரு­கின்ற வட்டி வீதத்­திலும் பார்க்க அதிக வட்டி வீதத்தை கோரி­நின்ற சந்­த­ர்ப்­பத்­திலும் அவர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது.

அதிக வட்டி வீதத்தை மத்­திய வங்­கி­யிடம் பெற்று அதனை விட குறைந்த வட்டி வீதத்­துக்கு ஏனைய நிதிய நிறு­வ­னங்­க­ளுக்கு கைமாற்றி தனது இலாபத்தை சம்­பா­தித்­துக் கொண்டுள்­ளது. எனவே மத்­திய வங்கி நேர­டி­யாக ஏனைய நிதி­நி­று­வ­னங்­க­ளுக்கு விற்­பனை செய்­தி­ருந்தால் செலுத்­தி­யி­ருக்க வேண்­டிய வட்டி வீதத்­திலும் பார்க்க அதி­க­ள­வான வட்­டி­யினை குறித்த பிணைமுறி விவ­கா­ரத்தில் செலுத்­தி­யுள்­ளது. இதனால் அர­சாங்­கத்­திற்கு பாரிய நஷ்டம் ஏற்­பட்­டுள்­ளது.

 இவ்­வாறு முறை­யற்ற வகையில் குறித்த நிறு­வ­னத்­திற்கு குறித்த பிணை­களை விற்­பனை செய்­வ­தற்கு ஏது­வாக மத்­திய வங்­கியில் இருந்தும், திறை­சே­ரியில் இருந்தும் அர­சியல் சார்ந்த ஒத்­து­ழைப்­புகள் கிடைத்­தி­ருக்­கின்­றன. இதனால் குறித்த உத­வி­களைச் செய்த அர­சி­யல்­வா­தி­களும் அதி­கா­ரி­களும் குறித்த வியா­பார கம்­ப­னி­களால் கவ­னிக்­கப்பட்­டி­ருக்­கி­றார்கள். குறித்த நிறு­வ­னமும் குறு­கிய காலத்தில் அதி­க­ளவு இலாபத்தை ஈட்­டி­யதன் கார­ண­மாக உள்­நாட்டு இறை­வ­ரித்­ தி­ணைக்­க­ளத்­திற்கும் சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்­தவே இந்த வியா­பாரம் அம்­ப­ல­மா­னது.

இப்­போது குற்றம் சாட்­டப்­பட்­டி­ருப்­ப­வர்கள் எவ்­வாறு இந்த ஊழல் தொடர்பில் தொடர்­பு­ப­டு­கின்­றார்கள் என பார்த்தால் இன்னும் இந்த வலைப்­பின்னல் தெரி­ய­வரும். மத்­திய வங்கி பிணைமுறிகள் ஊடாக திரட்­டப்படும் நிதி திறை­சே­ரிக்கு அனுப்­பப்­ப­டு­வ­தோடு திறை­சே­ரியே அதனை திருப்பிச் செலுத்­தவும் வேண்டும். திறை­சேரி அப்­போ­தைய நிதி அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­கவின் கட்­டுப்­பாட்டில் இயங்­கி­யது. மத்­தி­ய­வங்கி நேர­டி­யாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் கீழ் இயங்­கி­யது.

இதன்­போது மத்­தி­ய­ வங்­கியின் ஆளு­ந­ராக சிங்­கப்பூர் குடி­யு­ரி­மை­பெற்ற இலங்­கை­ய­ரான அர்ஜுன மகேந்­தி­ரனை நியமித்­தது பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க. அர்ஜுன மகேந்­தி­ரனின் தந்­தையார் மகேந்­திரன் முன்னாள் ஐக்­கிய தேசிய கட்சி உயர் பீட உறுப்­பி­னர்­களில் ஒரு­வ­ராக இருந்­தவர் என்­பது மேல­திக செய்தி. பேர்பச்­சுவல் ட்ரெஷரீஸ் என்னும் நிறு­வ­னத்தின் உரி­மை­யாளர் அர்ஜுன் அலோ­சியஸ். இவர் மத்­திய வங்கி ஆளு­ந­ராக இருந்த அர்ஜுன மகேந்­தி­ரனின் மரு­மகன் முறை­யா­னவர். இப்­போது மேற்­கூ­றிய அர­சியல் பின்­பு­லங்­க­ளு­ட­னான வியா­பார புள்­ளி­க­ளான அவர்கள் எவ்­வாறு இந்த வியா­பா­ரத்தில் தொடர்பு பட்­டி­ருப்­பார்கள் என்­ப­துவும் கண்­கூடு.

மத்­தி­ய­வங்கி ஆளு­ந­ராக இருந்த அர்ஜுன மகேந்­திரன் தனது மரு­ம­க­னான அர்ஜுன் அலோ­சி­யஸின் கம்­ப­னிக்கு குறித்த பிணைமுறி­களை விற்­பனை செய்­வ­தற்கு ஏற்­ற­வாறு கேள­விப்­பத்­தி­ரத்தை ஒழுங்கு செய்து கொடுத்­தி­ருக்­கலாம். இந்த விற்­பனை மூல­மான நிதி திறை­சே­ரிக்கே சென்று சேரு­கின்­றது என்­பதன் அடிப்­ப­டையில் திறை­சே­ரிக்கு பொறுப்­பான இருந்த அப்­போ­தைய நிதி அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க மத்­திய வங்கி ஆளுந­ருக்கு ஒத்­து­ழைத்­த­தனால் அவ­ருக்கு சன்­மானம் வழங்­கப்­பட்­டி­ருக்­கலாம். (அது அளவு கடந்­த­த­னால்தான் என்­னவோ தனது வீட்­டுக்கு வாடகை யார் செலுத்­தி­யது என்று அவ­ருக்கே தெரி­யாது போனது.)

இந்த இரண்டு வச­தி­களின் ஊடாக அர்ஜுன் அலோ­சி­யஸின் கம்­ப­னி­யான பேர்­பச்­சுவல் ட்ரெஷரீஸ் அதிக இலாபம் ஈட்­டி­யி­ருக்­கலாம். ஆக மொத்­தத்தில் குறைந்த வட்டி வீத்­ததில் அர­சாங்கம் பெற்­றி­ருக்க வேண்­டிய கடன் அதிக வட்டி வீத்தில் பெறப்­பட்டு நாட்டின் மீது கடன் சுமையை ஏற்­ப­டுத்தி தனிப்­ப­ட்­ட­வர்கள் இலாபத்தை அடைந்­தி­ருக்­கின்­றார்கள்.

இந்த தனிப்­பட்­ட­வர்­களின் இலாபம் என்­பது தனிப்­பட்­ட­வர்­களின் இலாபம் மட்­டும்­தானா என்ற கேள்வி எழு­கின்­ற­போது கடந்த ஆட்சி மாற்­றத்­திற்கு தேவை­யான நிதிப்­பு­ழக்­கத்­திற்கு பின்னால் நின்­ற­வர்­க­ளுக்கு இந்த வியா­பா­ரத்தின் ஊடாக இலாபம் பகி­ரப்­பட்­டி­ருக்­கலாம். ஆட்சி மாற்­றத்­திற்கு தேவை­யான நிதி உள்­நாட்டில் இருந்து மட்­டு­மல்­லாது வெளிநாட்டில் இருந்தும் கிடைக்­கப்­பெற்­றி­ருக்­கலாம். இதனால் வெளி­நாட்டு குடி­யு­ரிமை பெற்ற ஒருவர் நாட்டின் பொரு­ளா­தார உயர்பீட­மான மத்­திய வங்­கிக்கு ஆளு­நராக நிய­மிக்­கப்­பட்­டி­ருக்­கலாம். இந்த நிய­ம­னத்தை செய்­தவர் என்­ற­ வ­கையில் பிர­தமர் இந்த விட­யங்­க­ளுக்கு உடந்­தை­யாக இருந்­தாரோ என்னும் சந்­தேகம் எழுப்­பப்­ப­டு­கின்­றது.

ஆட்சி மாற்­றத்தின் ஊடாக ஐக்­கிய தேசிய கட்சி மட்­டும்தான் நன்மை அடைந்­த­தா? ஆட்சி மாற்­றத்தின் ஊடா­கத்­தானே புதிய ஜனா­தி­ப­தியும் தெரி­வு­செய்­யப்­பட்டார் எனவே ஏற்­க­னவே வியா­பார புள்­ளிகள் செல­விட்ட தொகைக்குள் ஜனா­தி­ப­தியின் தெரி­வுக்கு பயன்­பட்­டதும் அடங்­கா­மலா இருக்கும்? இப்­போது ஜனா­தி­பதி, பிர­தமர் இரு­வ­ருமே நீதி­யான விசா­ரணை வேண்டும். குற்­ற­வா­ளிகள் தண்­டிக்­கப்­படல் வேண்டும் என அறிக்கை விடு­வது யார் யாரை விசா­ரிப்­பது என்னும் கேள்­விக்­கு­றியை தோற்­று­விக்­கின்­றது.

இந்த 2016 பிணைமுறி வியா­பார விவ­காரம் ஒரு புற­மி­ருக்க 2008 இலேயே இத்­த­கைய வியா­பாரம் இடம்­பெற்­றி­ருப்­ப­தாக ஆணைக்­குழு அறிக்­கையில் குறிப்­பிட்­டுள்­ள­தாக ஜனா­தி­பதி தனது அறிக்­கை­யி­லேயே தெ­ரி­விக்­கின்றார். 2008 ஆம் ஆண்டு இருந்த அர­சாங்­கத்தில் இப்­போ­தைய ஜனா­தி­பதி என்ன பத­வியில், என்ன பொறுப்பில் இருந்தார்? அப்­போது அமைச்­ச­ர­வைக்கு மேற்­படி விடயம் வரா­மலா இருந்­தி­ருக்கும். எனவே 2008 ஆம் ஆண்டு முதல் நடை­பெற்­ற­தாகச் சொல்­லப்­படும் பிணை முறி மோசடி விவ­கா­ரத்­தினை விசா­ரிக்க ஜனா­தி­பதி இதே­போல ஒரு ஆணைக்­கு­ழுவை நிய­மிப்­பாரா? புதிய மோச­டியில் தொடர்­பு­பட்­ட­வர்­க­ளாக சந்­தே­கிக்­கப்­படும் பிர­தமர், முன்னாள் மத்­திய வங்கி ஆளுநர் மகேந்­திரன், முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணா நாயக்க போன்றோர் ஆணைக்­குழு முன் சாட்­சி­ய­ம­ளிக்க முன்­வந்­த­துபோல் முன்னாள் நிதி­ய­மைச்­சரும் ஜனா­தி­ப­தி­யு­மான மஹிந்த ராஜ­பக்­ ஷவையும் அப்­போ­தைய மத்­திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்­ரா­லையும் ஆணைக்­குழு முன் நிறுத்த முடி­யுமா? இப்­போது எதிர்க்­கட்­சியில் இருக்கும் மஹிந்த ராஜ­பக் ஷ தான் அர­சியல் ரீதி­யாக பழி­வாங்­கப்­ப­டு­வ­தாக மக்­க­ளிடம் சென்று நின்று அர­சியல் குழப்­பத்தை உரு­வாக்கி தட்­டிக்­க­ழித்தால் இப்­போது மாட்­டிக்­கொள்­ளப்­போ­வது ஐக்­கிய தேசிய கட்சி மாத்­தி­ரமா? எது எவ்­வா­றெ­னினும் இரண்டு ஆட்­சி­யி­லுமே அங்கம் வகித்த இப்­போ­தைய ஜனா­தி­பதி இது விட­யத்தில் எவ்­வாறு நடு­நி­லையை கடை­ப்பி­டிக்­கப்­போ­கின்றார் என்­பது பெரும் கேள்வி தான் நல்­ல­வ­ராக இருந்­து­வி­டு­வ­தனால் மாத்திரம் தான் பதவிக்கு வருவதற்கு காரணமாக இருந்த ஐக்கிய தேசிய கட்சி மீது குற்றம் சுமத்தப்படுவதற்கு ஜனாதிபதி துணை போவாரா? இதனால் தேசிய அரசாங்கத்தில் முறிவு ஏற்படுமா?

இவ்வாறான கேள்விகள் எல்லாம் ஒருபுறம் இருக்க இவ்வாறு தேடப்பட்ட பணத்தினைக் கொண்டுகுறிப்பிட்ட நிறுவனம் வேறு எவ்வாறான முதலீடுகளைச் செய்யத் தயாரா கியிருக்கிறது என்பது இன்னும் பல கேள்விகளை உரு வாக்கியிருக்கிறது. கிழக் கில் சாராயம் வடிக்கும் தொழிற்சாலை ஒன்றை நிறுவுவது தொடர்பில் கடந்த ஆண்டில் பெரும் சர்ச்சை நிலவியது.   

மறுபுறத்தில் ஒரு ஊடக நிறுவனம் தொடங்கப்பட்டு அதனூடாக பத்திரிகை களை வெளியிடவும் ஏற்பாடாகியுள்ளது. ஆக மொத்தத்தில் இந்த விவகாரம் பொது மக்களின் அபிவிருத்திக்காக தயாரிக்கப் படும் வரவு – செலவுத்திட்ட பற்றாக் குறை க்கு மக்களிடமே கடன்பெறுவதற்காக உள்ள பொறிமுறையினை முறையற்ற வகையில் பயன்படுத்தி மக்களை மேலும் கடன் சுமையில் தள்ளி யுள்ளது. இது 2016, 2008 இல் மாத்திரமல்ல, எல்லா ஆட்சிக் காலத்திலும் நடந்திருக்க வாய்ப்பு இருக் கிறது.  

நமது நாட்டில் இதுவரை வாழ்ந்த எல்லா தலை முறையினரும் சரி இனிவரப்போகும் தலை முறையினரும் சரி அவர்கள் இவ்வாறே அழைத்துக்கொண்டிருப்பர். 'இலங்கை அபி விருத்தி அடைந்துவரும்' நாடு. எல்லா மட்டத் திலும் ஊழல் ஒழிக்கப்படாதவரை நமது நாடு அபிவிருத்தி அடைந்த நாடாக ஆவதற் கான சாத்தியங்கள் ஏதுமில்லை. அரசியலும் நேர்மையானதாக அமைய வாய்ப்பில்லை. 

ஜீவா சதாசிவம்

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2018-01-06#page-2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.