Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊடகங்கள் மீண்டும் பொய்யுரைத்து வருகின்றன பாய்கிறார் சுமந்திரன்

Featured Replies

ஊடகங்கள் மீண்டும் பொய்யுரைத்து வருகின்றன பாய்கிறார் சுமந்திரன்

 

 
 

ஊடகங்கள் மீண்டும் பொய்யுரைத்து வருகின்றன பாய்கிறார் சுமந்திரன்

ஊடகங்கள் பொய் விளம்ப கூடாது என நான் மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டிருக்க என்னை பார்த்து சிரிப்பது போலவும், மக்களை பார்த்து ஏளனம் செய்வது போலவும் ஊடகங்கள் மீண்டும் பொய்யுரைத்து வருகின்றன. தாங்கள் சொல்வதைதான் மக்கள் நம்புவார்கள் என்று ஊடகங்கள் நினைக்ககூடாது. மேலும் சிலர் ஊடகங்களை பகைத்தால் தேர்தலில் வெற்றியடைய இயலாது என சொல்கிறார்கள். ஊடகங்களுக்கு பயந்து நாங்கள் மக்களிடம் சென்று பொய்யை சொல்ல இயலாது. எவ்வளவு பலமான ஊடகங்களாக இருந்தாலும் நாங்கள் மக்களிடம் சென்று உண்மையைதான் சொல்வோம். பொய் சொல்லும் ஊடகங்களை பகைத்தே நாங்கள் தேர்தலில் வெற்றியடைய வேண்டும்.
உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை அறிமுகம் செய்வதற்கான பொதுகூட்டம் நேற்று யாழ். ஓஸ்மானியா கல்லூரி வீதியில் நடைபெற்றிருந்தது. இந்த பொதுகூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே சுமந்திரன் இதனைத் தெரிவித்தார். இதன்போது, அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
ஏக்கிய இராச்சிய என்பது ஒற்றையாட்சி அல்ல என்று புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதனை விட ஒற்றையாட்சி இலங்கைக்கு பொருத்தமற்றது என இடைக்கால அறிக்கையில் கூறப்பட்டிருக்கின்றது. இப்படி இருக்க ஒற்றையாட்சிக்கு நாங்கள் இணங்கியதாக ஊடகங்கள் தொடர்ந்து பொய்யையே கூறி வருகின்றன என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையில் ஒற்றையாட்சி இலங்கைக்கு பொருத்தமற்றது என கூறப்பட்டுள்ளது. “ஏக்கிய இராச்சிய“ என்பது ஒற்றையாட்சி அல்ல அது ஒருமித்த நாடு என்பதும் இடைக்கால அறிக்கையில் எழுதப்பட்டிருக்கிறது. ஒருமித்த நாடு என்பதற்கே நாங்கள் இணங்கினோம். ஆனால் நாங்கள் ஒற்றையாட்சிக்கு இணங்கிவிட்டோம் என ஊடகங்கள் பொய்யை திரும்ப திரும்ப சொல்கின்றன.
70 வருடங்களாக தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள், சிங்கள மக்கள் அனைவரும் சொல்லணா துயரங்களை சந்தித்தார்கள். அந்த துயரங்களுக்கு ஒரு தீர்வினை காணவேண்டும். ஒரு தீர்வு திட்டத்தை உருவாக்கவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு முயற்சித்து கொண்டிருக்கையில், சில அரசியல் தரப்புக்களைப் போல் ஊடகங்களும் பொய்யை சொல்லிக் கொண்டிருக்கின்றன. இடைக்கால அறிக்கையில் தமிழ் மக்களை ஏற்காத ஒரு விடயம் கூட இடம்பெறவில்லை. எனவே ஊடகங்கள் பொய் சொல்வதை நிறுத்தவேண்டும், நீங்களாக திருந்தவேண்டும். இல்லையேல் திருத்தப்படுவீர்கள். மக்களாக ஊடகங்களை தூக்கி எறியும் நிலை உருவாகும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.(15)sumanthiran-080118-seithy

http://www.samakalam.com/செய்திகள்/ஊடகங்கள்-மீண்டும்-பொய்ய/

  • தொடங்கியவர்
  • சிறுபான்மை முஸ்லிம்களும் மிடுக்குடன் வாழ வேண்டும் – சுமந்திரன் எம்.பி.
sumanthiran-964854-750x400.jpg

சிறுபான்மை முஸ்லிம்களும் மிடுக்குடன் வாழ வேண்டும் – சுமந்திரன் எம்.பி.

இந்த நாட்­டில் எண்­ணிக்­கை­யில் சிறு­பான்­மை­யாக வாழ்ந்து வரு­கின்ற தமிழ் மக்­கள் தலை­நி­மிர்ந்து உரிய உரித்­து­டன் வாழ வேண்­டு­மா­னால், சிறு­பான்­மை­யி­ன­மாக வாழ்­கின்ற முஸ்­லிம் மக்­க­ளும் மிடுக்­கு­டன் வாழ­வேண்­டும். இவ்­வாறு தமிழ் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரி­வித்­தார்.

யாழ்ப்­பா­ணம் மாந­கர சபைக்­காக தேர்­த­லில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பின் சார்­பில் போட்­டி­யி­டும் வேட்­பா­ளர்­களை அறி­மு­கம் செய்­யும் கூட்­டம் ஒஸ்­மா­னி­யக் கல்­லூ­ரிக்கு அரு­கில் நேற்று நடை­பெற்­றது. அதில் கலந்து கொண்டு உரை­யாற்­றும் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார். அவர் தெரி­வித்த­தா­வது-:

இலங்­கை­யில் இடம்­பெற்ற போரின் கார­ண­மாக தமிழ் சமூ­கம் பல உயிர்­களை இழந்து பலர் காணா­மல் ஆக்­கப்­பட்­ட­னர். இழப்­புக்­க­ளைச் சந்­தித்­த­னர். சிங்­கள சமூ­க­மும் இழப்பை சந்­தித்­தது. முஸ்லிம் சமூ­க­மும் இழப்பை சந்­தித்­தது.

எதிர்­வ­ரும் உள்ளூ­ராட்சி தேர்­த­லில் தமிழ் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் சார்­பில் வவு­னி­யா­வில் 3 சிங்­கள சகோ­த­ரர்­க­ளும், கிழக்­கில் முஸ்லிம்­க­ளும் எமது பட்­டி­ய­லில் இணைந்து போட்­டி­யி­டு­கின்­ற­னர்.

 

தற்­போது அனைத்­துக் கட்­சி­க­ளும் இணைந்து புதிய அர­ச­மைப்பை உரு­வாக்­கும் முயற்சி நடை­பெற்று வரு­கின்­றது. வட­ம­ராட்­சி­யில் நடந்த கூட்­டத்­தில் ஒற்­றை­யாட்­சிக்கு இணங்­கி­னோம் என நான் கூறி­னேன் என்று பத்­தி­ரிகை ஒன்­றில் போடப்­பட்­டுள்­ளது. நான் பகி­ரங்­க­மாக சவால் விடு­கி­றேன் இவ்­வாறு கூறி­னேனா?.

ஊட­கத்­துக்­குப் பயந்து நாம் பொய் கூற முடி­யாது. ஊட­கத்தை பகைத்து தேர்­த­லில் வெல்ல முடி­யாது எனச் சிலர் கூறு­கின்­ற­னர்.
அர­சி­ய­லில் குழப்­பும் அர­சி­யல் சக்­தி­கள் போன்று ஊட­கங்­க­ளும் பொய்­யு­ரைக்­கின்­ற­ன. அந்த நிலை மாற்­றப்­ப­டும். இது இடைக்­கால அறிக்­கைக்­கான தேர்­தல் அல்ல. நகர அபி­வி­ருத்­திக்­கான தேர்­தல் –- என்­றார்.

http://newuthayan.com/story/61233.html

  • தொடங்கியவர்

 

 

வீடியோ இணைப்பு “ஏக்கிய இராச்சிய” என்பது ஒருமித்த நாடு தான் மாறுங்கள் அல்லது மாற்றப் படுவீர்கள். – சுமந்திரன் எச்சரிக்கை.:-

சுமந்திரனின் பொய்களை ஊடகங்கள் தோலுரித்துக் காட்டுவதால் ஊடகங்கள் மீது சுமந்திரன் பாய்கிறார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.