Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருமலையில் கடத்தப்பட்ட வர்த்தகரின் மகன் மிரிஸ்வத்தையில் மீட்பு : நடந்ததென்ன ?

Featured Replies

திருமலையில் கடத்தப்பட்ட வர்த்தகரின் மகன் மிரிஸ்வத்தையில் மீட்பு : நடந்ததென்ன ?

 

 

திரு­கோ­ண­ம­லையில், காலஞ்­சென்ற பிர­பல வர்த்­தகர் ஒரு­வரின் மகன் மர்ம நபர்­களால் கடத்­தப்­பட்­டி­ருந்த நிலையில், நேற்று மாலை அவர் கம்­பஹா, யக்­கல - மிரிஸ்­வத்தை பகு­தியில் வைத்து பொலி­ஸாரால் மீட்­கப்­பட்­டுள்ளார். 

son.jpg

கொழும்பு குற்றத் தடுப்புப் பிரி­வி­னரால் அவர் இவ்­வாறு நேற்று மாலை மீட்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், கடத்தல் முறைப்­பாடு தொடர்பில் திரு­மலை பொலிஸார் விசா­ர­ணை­களை முன்­னெ­டுப்­பதால் அவரை திரு­கோ­ண­ம­லைக்கு நேற்று இர­வோ­டி­ர­வாக அழைத்துச் சென்று ஒப்­ப­டைத்­த­தா­கவும் பொலிஸ் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சகர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.

இது தொடர்பில் மேல­திக விசா­ர­ணை­களை திரு­மலை பொலிஸார் முன்­னெ­டுப்பர் எனவும் கடத்தல் உள்­ளிட்ட அனைத்து விட­யங்­களும் அவர்­க­ளது விசா­ர­ணை­க­ளி­லேயே தெரியவரும் எனவும் பொலிஸ் பேச்­சாளர் சுட்­டிக்­காட்­டினார். 

திரு­மலை, நான்காம் மைல் கல் பகு­தியைச் சேர்ந்த  23 வய­தான வாலிபர், கடந்த 5 ஆம் திகதி மாலை  தனது காத­லியைச் சந்­தித்­து­விட்டு வீடு திரும்­பிக்­கொண்­டி­ருந்­த­போதே கடத்திச் செல்­லப்­பட்­ட­தாக கூறப்­பட்­டது. குறித்த இளை­ஞரின் தந்தை, திரு­ம­லையில் பிர­பல வர்த்­த­க­ராவார். சில வரு­டங்­க­ளுக்கு முன் அவர் சுட்டுக் கொல்­லப்­பட்­டி­ருந்தார். இளை­ஞரின் தாய்க்கு  கடந்த ஐந்தாம் திகதி இரவு கிடைத்த தொலை­பேசி அழைப்பில், இளை­ஞரின் தந்தை பற்­றிய சில விப­ரங்­களைக் கேட்டுத் தெரிந்­து­கொள்­வ­தற்­கா­கவே இளை­ஞரைக் கடத்­தி­யி­ருப்­ப­தாகத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்தக் கடத்தல் விவ­காரம் குறித்து பொலி­ஸா­ருக்குத் தெரி­விக்கக் கூடாது என்றும் தொலை­பேசி அழைப்பில் கூறப்­பட்­டுள்­ளது. எனினும் இளை­ஞரின் தாய் திரு­கோ­ண­மலை பொலிஸில் தமது மகன் கடத்­தப்­பட்­டமை குறித்து புகார் அளித்தார். அதன் அடிப்படையிலேயே பொலிஸார் தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்தனர். இந் நிலையிலேயே அவர் மிரிஸ்வத்தை பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளார்.

http://www.virakesari.lk/article/29132

மைத்திரி, ரணில் அரசின் கடத்தல் கலாச்சாரம்!
இந்த வருடம் கொலைகாரர்கள் கைகளில் இலங்கை ஆட்சி கிடைத்து 70 ஆண்டுகள் முடிகிறதாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.