Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்கள் கடத்தல் வழக்கில் பிணையில் விடுதலையானார் தஸநாயக்க

Featured Replies

தமிழர்கள் கடத்தல் வழக்கில் பிணையில் விடுதலையானார் தஸநாயக்க

 

தமிழர்கள் கடத்தல் வழக்கில் பிணையில் விடுதலையானார் தஸநாயக்க

தமிழ் மாணவர்கள் ஐவர் உட்பட 11 தமிழர்கள் வெள்ளை வானில் கடத்தி காணாமல் போகச்செய்த விவகார வழக்கில் ஸ்ரீலங்கா கடற்படையின் முன்னாள் பேச்சாளர் கமாண்டர் டி.கே.பி தஸநாயக்க உட்பட 6 சந்தேக நபர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு மேல் நீதிமன்றம் இவர்களுக்கான பிணை அனுமதியை வழங்கிய நிலையில் கொழும்பு கோட்டை நீதிமன்ற நீதவான் லங்கா டி ஜயரத்ன 6 மாதங்களுக்குப் பின்னர் இவர்களை இன்று வெள்ளிக்கிழமை பிணையில் விடுதலை செய்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலமான 2008ஆம் மற்றும் 2009ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் கொழும்பு கொட்டாஞ்சேனை, தெஹிவளை ஆகிய பகுதிகளில் ஐந்து தமிழ் மாணவர்கள் உட்பட 11 தமிழர்கள் வெள்ளை வானில் கடத்திச்செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டனர்.

இவர்களது உடல் எச்சங்கள் எனக்கூறுகின்ற சில எலும்புகளும் திருகோணமலை பகுதியிலுள்ள கடற்படையின் இரகசிய சித்திரவதை முகாமில் இருந்ததாக ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை நடத்தியதோடு ஸ்ரீலங்கா கடற்படையின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் கமான்டர் டீ.கே.பி தஸநாயக்க மற்றும் கடற்படையின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஐவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.

குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளின் விசாரணைகளில் பல அதிர்சித் தகவல்கள் தெரியவந்த நிலையிலேயே ஸ்ரீலங்கா கடற்படையின் முன்னாள் பேச்சாளர் டி.கே.பி.தஸநாயக்க நீதிமன்றின் அனுமதியுடன் கடந்த ஜுலை 12 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.

நீதிமன்றத்தின் உத்தரவுக்கு 6 மாதங்களாக தொடர்ந்தும் இவர்களுக்கான விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுவந்தது.

இதனை எதிர்த்து கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சந்தேக நபர்கள் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்ட நிலையில் மனுவை கடந்த 9ஆம் திகதி விசாரணை செய்த நீதிமன்றம், இவர்களுக்கான பிணை அனுமதியை வழங்குவதற்கான உத்தரவை பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில் வழக்கு இன்றைய தினம் கொழும்பு கோட்டை நீதிமன்ற நீதவான் லங்கா டி ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்படி தலா ஒருஇலட்சம் ரூபா ரொக்கம் மற்றும் 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் செல்ல அனுமதித்த நீதவான், வெளிநாடு செல்வதற்கான இடைக்காலத் தடையுத்தரவையும் பிறப்பித்தார்.

அத்துடன் மாதத்திற்கு ஒருமுறை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வருகைதந்து கையெழுத்து இடுமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

தமிழர்கள் கடத்தல் வழக்கில் பிணையில் விடுதலையானார் தஸநாயக்க

 

https://news.ibctamil.com/ta/internal-affairs/DKP-dasanayake-released-on-Bail

  • கருத்துக்கள உறவுகள்

  கொலைகாரரை ஏதோ அடிதடிகாரரை விடுவிக்கிறமாதிரி விடுகிறார்கள். இலங்கையில மட்டுந்தான்இந்த அதிசயங்கள் எல்லாம் நடக்கின்றது. இந்த லட்ஷணத்தில போர்க்குற்ற விசாரணை செய்யபோகினமாம். எங்களை நம்பட்டாம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.