Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் பயங்கரம்: குழந்தையை குத்திக் கொன்ற கொடூரம்; இருவர் வைத்தியசாலையில்!

Featured Replies

யாழில் பயங்கரம்: குழந்தையை குத்திக் கொன்ற கொடூரம்; இருவர் வைத்தியசாலையில்!

 

யாழில் பயங்கரம்: குழந்தையை குத்திக் கொன்ற கொடூரம்; இருவர் வைத்தியசாலையில்!

யாழ்ப்பாணம் வண்ணார்ப்பண்ணைப் பகுதியில் மஊன்று வயதான குழந்தை ஒன்று கத்தியால் குத்திக் கொலைசெய்யப்பட்டுள்ளதோடு வயதான பெண் ஒருவரும் குத்துக்காயங்களுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் நபர் ஒருவரும் தற்கொலைக்கு முயன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த சம்பவம்குறித்து விரிவாகத் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் வண்ணார்ப்பண்ணை பத்திரகாளி கோவிலுக்கு அண்மையில் வசிக்கும் ஈஸ்வரன் எனும் நபர் தனது தாயினையும் தமையனின் குழந்தையையும் கத்தியால் குத்தியதோடு தானும் தற்கொலை செய்யும் நோக்கில் விஷம் அருந்தியுள்ளார்.

யாழில் பயங்கரம்: குழந்தையை குத்திக் கொன்ற கொடூரம்; இருவர் வைத்தியசாலையில்!

இந்த நிலையில் கத்திக் குத்துக்கு இலக்கான குழந்தை உயிரிழந்ததுடன் வயதான பெண்மணி படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கத்திக்குத்தினை மேற்கொண்டதாகச் சந்தேகிக்கப்படும் குறித்த நபர் விசம் அருந்திய நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்த விசாரணைகளை யாழ்ப்பாணப் பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டுவருகின்றனர்.

யாழில் பயங்கரம்: குழந்தையை குத்திக் கொன்ற கொடூரம்; இருவர் வைத்தியசாலையில்!

யாழில் பயங்கரம்: குழந்தையை குத்திக் கொன்ற கொடூரம்; இருவர் வைத்தியசாலையில்!

https://news.ibctamil.com/ta/internal-affairs/The-horrific-killing-of-a-child

  •  
  • பெரிய தந்தையால் 3 வயதுக் குழந்தை வெட்டிக் கொலை – வண்ணாா் பண்ணையில் சம்பவம்
media-share-0-02-06-1406061e8bc950fdd9f9

பெரிய தந்தையால் 3 வயதுக் குழந்தை வெட்டிக் கொலை – வண்ணாா் பண்ணையில் சம்பவம்

கோடாரியால் வெட்டியதில்  மூன்று வயது பெண்குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்ததுடன், கொலையாளி தானும் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் ஒன்று இன்று காலை  யாழ்.வண்ணாா் பண்ணை பகுதியில் இடம்பெற்றது.

http://newuthayan.com/story/63633.html

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

யாழில் பயங்கரம் - மகனின் கொலை வெறித் தாக்குதலில் தாய் படுகாயம் : சகோதரனின்  பிஞ்சு மகள் பலி 

 

 

 

யாழ்ப்பாணத்தில் மகனின் கொலை வெறித்தாக்குதலுக்கு இலக்கான தாயார் படுகாயமடைந்துள்ளதுடன் தாக்குதல்தாரியின் சகோதரனின் மகள் ஸ்தலத்திலேயே வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

jaffna-vannaarpannai.jpg

இந்நிலையில் தாக்குதல் மேற்கொண்ட நபர் தற்கொலை செய்யும் நோக்கில் நஞ்சருந்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

26942887_1035025299982172_648734889_n.jp

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணை, பத்திரகாளி கோவில் வீதியில் உள்ள தனது தாயின் வீட்டுக்குள் நுழைந்த மகன், கைக் கோடரியொன்றினால் தனது தாயையும் சகோதரனின் மகளையும் வெட்டியுள்ளார்.

26943221_1035025319982170_920246599_n.jp

இந்நிலையில், சகோதரனின் மகளான 3 வயதுடைய தனுஷன் நிக்ஷயா சம்பவ இடத்திலேயே கோடரித் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

 

இச் சம்பவம் இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

 

தாயாரான 55 வயதுடைய பரமேஸ்வரி என்பவர் கழுத்துப்பகுதியில் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனாவைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

உயிரிழந்த பிள்ளையின் தாயார் கர்ப்பிணி என்பதால் அவரது கணவனுடன் கிளினிக்கிற்கு சென்றுள்ள நிலையிலேயே இத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

 

இந்நிலையில் தாக்குதலை மேற்கொண்ட மகனான குணரத்தினம் ஈஸ்வரன் என்பவர் தற்கொலை செய்யும் நோக்குடன் நஞ்சருந்தியுள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

 

இச் சம்பவத்திற்கு குடும்பப் பிணக்கே காரணம் என சந்தேகிக்கும் யாழ்ப்பாணப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

http://www.virakesari.lk/article/29626

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள் 

 

  • தொடங்கியவர்

 

யாழ்.வண்ணார்பண்ணையில் வாள்வெட்டு 3 வயது சிறுமி பலி…

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.