Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொறுப்பு நிறைவேற்றப்படுமா?

Featured Replies

பொறுப்பு நிறைவேற்றப்படுமா?

 

ஜன­நா­யகம் நிலை­நி­றுத்­தப்­படும், ஊழல் ஒழிக்­கப்­படும் என்­பதே நல்­லாட்சி அர­சாங்­கத்தின் அடிப்­படைக் கொள்­கை­க­ளாகும்.

அந்த வகையில் ஜனா­தி­பதி ஆட்சி முறையில் ஜனா­தி­ப­திக்­குள்ள நிறை­வேற்று அதி­கா­ரங்கள் இல்­லா­தொ­ழிக்­கப்­பட்டு, பாரா ளு­மன்றம் சார்ந்து பிர­த­ம­ருக்கு வழங்­கப்­படும். தேர்தல் முறைமை மாற்­றி­ய­மைக்­கப்­படும். இதற்­காக நாட்டில் புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­படும் என்­பது நல்­லாட்சி அர­சாங்­கத்­தினால் மக்­க­ளுக்கு அளிக்­கப்­பட்ட வாக்­கு­று­தி­யாகும். இதன் அடிப்­ப­டை­யி­லேயே மக்கள் இந்த அர­சாங்­கத்­திற்கு வாக்­க­ளித்து, ஆணை வழங்­கி­னார்கள். இது பொது­வா­னது.

போர்க்­குற்­றங்கள் தொடர்­பான நிவா­ர­ணங்கள் வழங்­கப்­படும். இனப்­பி­ரச்­சி­னைக்கு ஓர் அர­சியல் தீர்வு காணப்­படும் என்­பது போரினால் மிக மோச­மாகப் பாதிக்­கப்­பட்ட தமிழ் பேசும் மக்­க­ளுக்கு, விடே­ச­மாக, தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் நிபந்­த­னை­யற்ற ஆத­ரவின் ஊடாக வழங்­கப்­பட்ட உறு­தி­மொ­ழி­யாகும். இதற்­கா­கவே சிறு­பான்மை தேசிய இன மக்­க­ளா­கிய தமிழ் மக்கள் நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்கு ஆத­ர­வ­ளித்து ஆணை வழங்­கி­னார்கள்.

யுத்த மோதல்­களின் போது இழைக்­கப்­பட்ட போர்க்­குற்றம் சார்ந்த மனித உரிமை மீறல்­க­ளுக்கு பொறுப்பு கூறு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தாக நல்­லாட்சி அர­சாங்கம், 2015 ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதத்­திலும், 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதத்­திலும், ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் கொண்டு வரப்­பட்ட இரண்டு முக்­கிய பிரே­ர­ணை­க­ளுக்கு இணை அனு­ச­ரணை வழங்கி உறு­தி­ய­ளித்­தி­ருந்­தது.

உண்­மையைக் கண்­ட­றிதல், பாதிப்­பு­க­ளுக்கு நிவா­ரணம் வழங்­குதல், நல்­லி­ணக்­கத்தை உரு­வாக்­குதல், பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நீதி வழங்­குதல் ஆகிய நான்கு முக்­கிய அம்­சங்­க­ளுக்­கான பொறி­மு­றை­களை உரு­வாக்கி, பொறுப்பு கூறு­தலை நடை­மு­றைப்­ப­டுத்­துவோம் என்­பது இந்த உறுதி மொழியின் சாராம்­ச­மாகும்.

அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்து மூன்று வரு­டங்கள் கழிந்­து­விட்­டன. தனது ஐந்து வருட ஆட்சிக் காலத்தில் அரை­வா­சிக்கும் மேற்­பட்ட காலத்தைக் கடந்­து­விட்ட போதிலும், மக்­க­ளு­டைய ஆணையை நிறை­வேற்­று­வதில் ஒப்­பீட்­ட­ளவில் உரிய முன்­னேற்­றத்தைக் காட்­ட­வில்லை என்­பது கவ­லைக்­கு­ரி­யது.

சுய­லாப அர­சியல் தேவை­க­ளுக்­காகப் பின்­போ­டப்­பட்­ட­தாகக் குற்றம் சுமத்­தப்­பட்ட நிலையில் உள்­ளூராட்சி சபை­க­ளுக்­கான தேர்­தலை ஒரே நாளில் நாட­ளா­விய ரீதியில் நடத்­து­வ­தற்கு இந்த அர­சாங்கம் எடுத்­துள்ள நட­வ­டிக்கை அர­சியல் ரீதி­யாக பெருமை தரக் கூடி­யது.

சட்­ட­மி­யற்றும் வல்­ல­மையோ, அதி­கா­ரங்­களோ உள்­ளூராட்சி சபை­க­ளுக்கு கிடை­யாது. மத்­திய அர­சாங்­கத்­தி­னாலும், மாகாண சபை­க­ளி­னாலும் அதி­கா­ர­பூர்­வ­மாக வழங்­கு­கின்ற வேலைத்­திட்­டங்­களை நிறை­வேற்­று­கின்ற நடை­மு­றைப்­ப­டுத்­து­கின்ற நிறு­வ­னங்­க­ளா­கவே உள்­ளூ­ராட்சி சபைகள் திகழ்­கின்­றன. ஆனால், இந்த அர­சாங்­கத்தின் போக்கு கார­ண­மாக சட்­ட­வாக்கல் அதி­கா­ர­மற்ற உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­கான தேர்­தலில் தேசிய மட்­டத்­தி­லான அர­சியல் விட­யங்­களே முதன்மை பெற்­றி­ருக்­கின்­றன.

தேசிய மட்­டத்தில் மாற்­றங்­களை உரு­வாக்க வல்ல பொதுத் தேர்­தலைப் போன்று தேர்தல் பரப்­புரை நட­வ­டிக்­கை­களில் தீவி­ர­மான அர­சியல் நாட்டம் காட்­டப்­ப­டு­கின்ற சூழலில், உரிமை மீறல்­க­ளுக்­கான பொறுப்பு கூறும் விட­யத்தில் குறிப்­பாக நல்­லி­ணக்கச் செயற்­பா­டு­களும், அர­சியல் தீர்வு காண்­ப­தற்­கு­ரிய புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கச் செயற்­பா­டு­களும் புறந்­தள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றன.

ஆக, அர­சாங்­கத்­திற்கு நிபந்­த­னை­யற்ற ஆத­ரவை வழங்கிச் செயற்­பட்டு வரு­கின்ற தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பே, புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான இடைக்­கால அறிக்­கைக்கு மக்­க­ளு­டைய ஆணையைப் பெறு­வ­தற்­காக இந்தத் தேர்­தலைப் பயன்­ப­டுத்தி, தீவி­ர­மாக பரப்­பு­ரை­களை மேற்­கொண்டு வரு­கின்­றது.

இத்­த­கைய பின்­ன­ணி­யில்தான் ஐரோப்­பிய ஒன்­றியம், மனித உரி­மைகள் கண்­கா­ணிப்­பகம் ஆகிய சக்தி வாய்ந்த சர்­வ­தேச அமைப்­புக்கள் நல்­லி­ணக்கம் மற்றும் பொறுப்பு கூறல் விட­யங்­களில் ஸ்தம்­பித நிலைமை ஏற்­பட்­டி­ருப்­ப­தாகக் குத்­திக்­காட்­டி­யி­ருக்­கின்­றன. பயங்­க­ர­மான பாதிப்­பு­களை ஏற்­ப­டுத்­தி­யுள்ள பயங்­க­ர­வாதத் தடைச்­சட்டம் தாம­த­மின்றி நீக்­கப்­பட வேண்டும், நல்­லி­ணக்கச் செயற்­பா­டு­க­ளுக்கு அவ­சி­ய­மான பொறி­மு­றைகள் விரை­வாக உரு­வாக்­கப்­பட வேண்டும், இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு காண்­ப­தற்­கு­ரிய அர­சியல் தீர்வு காணப்­பட வேண்டும் என்று அந்த சர்­வ­தேச நிறு­வ­னங்கள் வலி­யு­றுத்­தி­யி­ருக்­கின்­றன.

ஐரோப்­பிய ஒன்­றியம்

இலங்­கையின் நல்­லி­ணக்கச் செயற்­பா­டுகள் குறித்தும், பொறுப்பு கூறல் பற்­றிய செயற்­பா­டுகள் குறித்தும் விரி­வாக ஐரோப்­பிய ஒன்­றி­யமும், இலங்­கையும் இணைந்த ஆணை­ய­கத்தின் 21 ஆவது அமர்வின் முடிவில் பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தை நீக்­கு­வ­த­ற்குத் தாம­தமின்றி நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. மோச­மான விளை­வு­களை ஏற்­ப­டுத்­திய பார­தூ­ர­மான மனித உரிமை மீறல்­க­ளுக்கு வழி­வ­குத்­துள்ள பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தை நீக்க வேண்டும் என்­பது ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் உறு­தி­யான நிலைப்­பாடு.

பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தை நீக்கி அதற்குப் பதி­லாக சர்­வ­தேச நிய­மங்­க­ளுக்கு அமை­வா­ன­தொரு சட்­டத்தை உரு­வாக்­கு­வ­தற்கு ஐ.நா.வின் மனித உரிமைப் பேர­வையில் இலங்கை ஒப்­புதல் அளித்­தி­ருக்­கின்­றது. அதன் அடிப்­ப­டையில் சில நட­வ­டிக்­கை­களும் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. ஆனால், அந்த நட­வ­டிக்­கைகள் துரி­தப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. இந்த நிலையில் பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தை நீக்க வேண்டும் என்று, முன்­னரும் ஐரோப்­பிய ஒன்­றியம் இலங்கை அர­சாங்­கத்­திற்கு அழுத்தம் கொடுத்­தி­ருந்­தது.

ஐரோப்­பிய ஒன்­றியம் தனது உறுப்பு நாடு­களில் மனித உரிமை நிலை­மை­களும் ஜன­நா­யகப் பண்பு­களும் உரிய முறையில் பேணப்­பட வேண்டும் என்­பதில் உறு­தி­யான நிலைப்­பாட்டைக் கொண்­டி­ருக்­கின்­றது. இதன் அடிப்­ப­டை­யி­லேயே ஜீ.எஸ்.பி. வரிச்­ச­லு­கையை ஐரோப்­பிய ஒன்­றியம் நாடு­க­ளுக்கு வழங்கி வரு­கின்­றது. யுத்தம் முடி­வுக்கு வந்த பின்­ன­ணியில் கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்­கைக்­கான ஜீ.எஸ்.பி. வரிச்­ச­லு­கையை தற்­கா­லி­க­மாக நிறுத்தி வைப்­ப­தற்கு ஐரோப்­பிய ஒன்­றியம் முடிவு செய்­தி­ருந்­தது.

இலங்­கையின் நிலை­மைகள் குறித்து ஆராய்ந்த நுண்­ணாய்வு ஆணைக்­குழு வெளி­யிட்ட அறிக்­கையில் ஐ.நா.வின் மூன்று முக்­கிய சாச­னங்­களின் அம்­சங்­களை நிறை­வேற்­று­வதில் அரசு திருப்­தி­க­ர­மாகச் செயற்­ப­ட­வில்லை என்ற கார­ணத்­திற்­காக ஜீ.எஸ்.பி. வரிச்­ச­லு­கையை நிறுத்தி வைப்­ப­தற்­கான தீர்­மா­னத்தை ஐரோப்­பிய ஒன்­றியம் மேற்­கொண்­டி­ருந்­தது. சிவில் மற்றும் அர­சியல் உரி­மைகள், சித்­தி­ர­வ­தைக்கு எதி­ரான சாசனம், சிறுவர் உரி­மைகள் ஆகிய மூன்று விட­யங்­களில் அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­களில் ஐரோப்­பிய ஒன்­றியம் திருப்­தி­ய­டை­ய­வில்லை.

சிவில் மற்றும் அர­சியல் உரி­மைகள் தொடர்பில் பயங்­க­ர­வாதத் தடைச்­சட்டம் பார­தூ­ர­மான பாதிப்­பு­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது என்ற கார­ணத்­தி­னாலும் ஐரோப்­பிய ஒன்­றியம் தனது அக்­க­றை­யையும் கரி­சனை­யையும் வெளி­யிட்­டி­ருந்­தது. ஐ.நா. மனித உரிமைப் பேர­வை­யினால் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னங்­களின் அடிப்­ப­டையில் பயங்­க­ர­வாதத் தடைச்­சட்டம் நீக்­கப்­பட்­டி­ருக்க வேண்டும். ஆனால் அது இது­வ­ரை­யிலும் நீக்­கப்­ப­ட­வில்லை. இந்த விட­யத்தில் ஐரோப்­பிய ஒன்­றி­யமும் இலங்­கையும் இணைந்த ஆணை­ய­கத்தின் 21 ஆவது அமர்வில் ஐரோப்­பிய ஒன்­றியம் கூடுதல் கவனம் செலுத்­தி­யி­ருந்­தது. தாம­த­மின்றி பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தை நீக்­கு­வ­தற்கு அரசு நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த அமர்வில் வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது.

தற்­கா­லி­க­மாக நிறுத்­தப்­பட்­டி­ருந்த இலங்­கையின் சர்­வ­தேச வர்த்­தக நட­வ­டிக்­கை­க­ளுக்கு முக்­கிய உந்து சக்­தி­யாகத் திகழும் ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் ஜீ.எஸ்.பி. வரிச்­ச­லுகை, இலங்­கையின் 7500 உற்­பத்திப் பொருட்­களின் சர்­வ­தேச ஏற்­று­ம­தியில் வரு­வாய்க்­கு­ரிய அடிப்­ப­டை­யாக அமைந்­தி­ருந்­தது. எனினும் குறிப்­பிட்ட முக்­கிய துறை­களில் ஏற்­பட்­டி­ருந்த முன்­னேற்­றத்தைக் கருத்­திற்­கொண்டு ஜீ.எஸ்.பி. வரிச்­ச­லுகை மீண்டும் வழங்­கப்­பட்­டது. இதே­போன்று உரி­மைகள் சார்ந்த விடயம் கார­ண­மா­கவே ஐரோப்­பிய ஒன்­றியம் இலங்­கையின் மீன் இறக்­கு­ம­தி­யையும் நிறுத்­தி­யி­ருந்­தது.

இப்­போது பயங்­கர­வாதத் தடைச்­சட்­டத்தை நீக்­கு­வ­தற்கு உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்று ஐரோப்­பிய ஒன்­றி­யமும் இலங்­கையும் இணைந்த ஆணை­யக வரு­டாந்த மாநாட்டில் கோரிக்கை விடுக்­கப்­பட்­டி­ருப்­பது இன்­றைய இலங்­கையின் அர­சியல் சூழலில் மிக முக்­கி­ய­மான காய் நகர்த்­த­லா­கவே நோக்­கப்­ப­டு­கின்­றது.

பயங்­க­ர­வாதத் தடைச்­சட்டம்

கடந்த 1978 ஆம் ஆண்டு தற்­கா­லிக ஏற்­பா­டாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்ட பயங்­க­ர­வாதத் தடைச்­சட்டம் முழுக்க முழுக்க தமிழ் மக்­களின் அர­சியல் உரி­மைக்­கான ஆயுதப் போராட்டச் செயற்­பா­டு­களை முறி­ய­டிப்­ப­தற்­கா­கவே கொண்டு வரப்­பட்­டது. ஆயுத மோதல்கள் தீவி­ர­ம­டையத் தொடங்­கி­ய­தை­ய­டுத்து, நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்ட அவ­ச­ர­காலச் சட்டம் பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்­திற்கு மேலும் வலு­வூட்டி மோச­மான மனித உரிமை மீறல் செயற்­பா­டு­க­ளுக்கு ஊக்­க­ம­ளித்­தி­ருந்­தது. அப்­பட்­ட­மான மனித உரிமை மீறல்கள், சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்ட மீறல்கள், அப்­பட்­ட­மான படு­கொ­லைகள் என்­ப­வற்றில் இருந்து தண்­டனை விலக்கு பெறு­கின்ற போக்­கையும் பயங்­க­ர­வாதத் தடைச்­சட்டம் ஊக்­கு­வித்­தி­ருந்­தது. தேசிய பாது­காப்பு என்ற போர்­வையில் இடம்­பெற்ற சிறு­பான்மை தேசிய இன­மா­கிய தமிழ் மக்­க­ளுக்கு எதி­ரான அடக்­கு­முறை நட­வ­டிக்­கை­க­ளுக்கு பயங்­க­ர­வாதத் தடைச்­சட்டம் முக்­கிய கவ­ச­மா­கவும் அமைந்திருந்­தது.

யுத்தம் முடி­வ­டைந்­த­தை­ய­டுத்து நாட்டில் பயங்­க­ர­வாதம் ஒழிக்­கப்­பட்­டு­விட்­ட­தாக அர­சாங்கம் பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யது. பயங்­க­ர­வாதம் ஒழிக்­கப்­பட்ட பின்னர் நாட்டில் பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்­திற்கு அவ­சி­ய­மி­ருக்­க­வில்லை. ஆனால் அந்தச் சட்­டத்தை நீக்­கு­வ­தற்கு அர­சாங்கம் உட­ன­டி­யாக முன்­வ­ர­வில்லை. அந்தச் சட்­டத்தைப் பயன்­ப­டுத்தி தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்தல் விடுக்கக் கூடிய நட­வ­டிக்­கைக ௌன சந்­தே­கிக்­கப்­பட்ட சம்­ப­வங்­க­ளுடன் தொடர்­பு­டைய பலர் தொடர்ந்து கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டார்கள். இந்த நட­வ­டிக்கை அப்­பட்­ட­மான மனித உரிமை மீற­லாக சர்­வ­தே­சத்­தி­னாலும், ஐ.நா. மனித உரிமைப் பேர­வை­யி­னாலும் நோக்­கப்­பட்­டது.

உரிமை மீறல்­க­ளுக்குப் பொறுப்பு கூற வேண்டும் என பிரே­ரணை மூல­மாக வலி­யுறுத்­திய ஐ.நா. மனித உரி­மைகள் பேரவை, பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தை நீக்கி சர்­வ­தேச நிய­மங்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்ட புதிய சட்டம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட வேண்டும் என வலி­யு­றுத்­தி­யி­ருந்­தது. இத­னை­ய­டுத்து பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்­திற்கு (PTA) பதி­லாக பயங்­க­ர­வா­தத்­திற்கு எதி­ரான சட்டம் என்ற புதிய சட்­டத்­திற்­கான வரைவு தயா­ரிக்­கப்­பட்டு அமைச்­ச­ர­வையின் அங்­கீ­கா­ரத்­திற்­காக சமர்ப்­பிக்­கப்­பட்­டது. அந்த சட்ட வரைவு பற்­றிய தக­வல்கள் ஊட­கங்­களில் கசிந்­தி­ருந்­தன. புதிய சட்ட வரைவின் முக்­கிய அம்­சங்கள் முன்­னைய பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்­திலும் பார்க்க மோச­மான சரத்­துக்­களை உள்­ள­டக்­கி­யி­ருந்­த­தாக அந்தத் தக­வல்கள் வெளிச்­சம்­போட்டு காட்­டி­யி­ருந்­தன.

சாதா­ரண குற்றச் செய­லுடன் சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளை­யும்­கூட நாட்டின் தேசிய பாது­காப்­புக்குக் குந்­தகம் விளைவிக்கும் வகையில் வேவு பார்த்தார் என ,குற்றம் சுமத்தி அவ­ருக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுப்­ப­தற்குக் கூட அந்தச் சட்ட வரைவில் இட­ம­ளிக்­கப்­பட்­டி­ருந்­தது என்ற தக­வல்­களும் வெளி­யாகி மனித உரிமை அமைப்­புக்­க­ளையும் மனித உரிமைச் செயற்­பா­ட்டாளர்­க­ளையும் அதிர்ச்சிய­டை­யவும், திகைப்­ப­டை­யவும் செய்­தி­ருந்­தது.

கடந்த வருடம் ஏப்ரல் மாதப்­ப­கு­தியில் ஜி.எஸ்.பி. வரிச்­ச­லுகை தொடர்பில் நிலை­மை­களை ஐரோப்­பிய ஒன்­றியம் தீவி­ர­மாகக் கண்­கா­ணித்­த­போது, புதிய பயங்­க­ர­வாத எதிர்ப்புச் சட்­டத்தில் குறிப்­பிட்ட சில மாற்­றங்­களைச் செய்து புதிய வரைபு ஒன்றை அர­சாங்கம் வெளி­யிட்­டி­ருந்­தது. ஆயினும் புதிய வரை­பும்­கூட மனித உரிமை அமைப்­புக்­க­ளையும், மனித உரிமைச் செயற்­பாட்­டா­ளர்­க­ளையும் திருப்திப் படுத்­து­வ­தாக அமை­ய­வில்லை.

இந்த அளவில் பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தை இல்­லாமல் செய்யும் நட­வ­டிக்­கைகள் கிடப்பில் போடப்­பட்ட விவ­கா­ர­மாக இருந்து வரு­கின்­றது. இத்­த­கைய ஒரு பின்­ன­ணி­யில்தான் பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தை நீக்­கு­வ­தற்கு அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை ஐரோப்­பிய ஒன்­றி­யமும் இலங்­கையும் இண­ணந்த ஆணை­ய­கத்தின் வரு­டாந்த அமர்வின் மூலம் அர­சாங்­கத்­திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இப்­போது வந்­துள்­ளது.

மனித உரி­மைகள் கண்­கா­ணிப்­பகம்

பயங்­க­ரவாதத் தடைச்­சட்­டத்தை நீக்கி மனித உரிமை நிலை­மை­களை மேம்­ப­டுத்­து­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்ற ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் வலி­யு­றுத்தல் வெளி­யா­கி­யுள்ள அதே­வேளை, மனித உரி­மைகள் நிலை­மை­களில் முன்­னேற்­றமே இல்லை என்ற வகையில் மனித உரி­மைகள் கண்­கா­ணிப்­பகம் வெளி­யிட்­டுள்ள ஆண்­ட­றிக்­கையில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டி­ருக்­கின்­றது.

மஹிந்த ராஜ­பக்­ ஷவின் அர­சாங்கம் 2015 ஆம் ஆண்டு தேர்­தலின் மூல­மாகத் தோற்­க­டிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து, ஏற்­பட்­டி­ருந்த ஊட­கங்­க­ளுக்கும், சமூக சிவில் அமைப்­புக்­க­ளுக்கும் திறந்­து­வி­டப்­பட்­டி­ருந்த சுதந்­தி­ர­மான செயற்­பா­டு­க­ளுக்­கான வெளி 2017 வரை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் ஆட்­சியில் தொடர்ந்­தது என மனித உரி­மைகள் கண்­கா­ணிப்­பகம் கூறி­யுள்­ளது. ஆயினும், பிரி­வினை கோரி போரா­டிய விடு­தலைப் புலி­க­ளு­ட­னான 26 வருட சிவில் முரண்­பாட்டு நிலை­மை­க­ளினால் எழுந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்பு கூறு­வ­தற்கும், அர­சியல் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கும் 2015 ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­ய­கத்­திற்கு வழங்­கிய உறு­தி­மொ­ழி­களை நிறை­வேற்­று­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் செய­லற்­றி­ருக்­கின்­றன என்று மனித உரி­மைகள் கண்­கா­ணிப்­பகம் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்­றது.

பொறுப்பு கூறல் விட­யத்தில் முக்­கி­ய­மாக 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்­தத்­தின்­போது வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் தொடர்பில் அர­சாங்க தடுப்பு நிலை­யங்­களில் உள்­ள­வர்­களின் பெயர்ப்­பட்­டியல் வெளி­யி­டப்­படும் என்ற ஜனா­தி­ப­தியின் வாக்­கு­று­திக்­க­மைய பட்­டியல் இன்னும் வெளி­யி­டப்­ப­ட­வில்லை. சர்­வ­தேச நிய­மங்­க­ளுக்கு அமைய வலிந்து காணாமல் ஆக்­கப்­ப­டு­வதில் இருந்து அனைத்து ஆட்­க­ளையும் பாது­காப்­ப­தற்­கான சட்டம் ஒன்றை அர­சாங்கம் உரு­வாக்­கி­ய­போ­திலும், அது கடந்த கால சம்­ப­வங்கள் அல்­லது நிகழ்­வு­க­ளுக்குப் பொருந்­த­மாட்­டாது என தெளி­வாகக் கூறி­யி­ருக்­கின்­றது என்றும் மனித உரி­மைகள் கண்­கா­ணிப்­பகம் தெரி­வித்­தி­ருக்­கின்­றது.

ஐ.நா. மனித உரிமைப் பேர­வையின் 2015 ஆம் ஆண்டு பிரே­ர­ணைக்கு அமை­வாக மனித உரி­மைகள் விட­யத்தில் மறு­சீ­ர­மைப்­புக்கள் பல­வற்றைச் செய்­வ­தாக அரசு உறு­தி­ய­ளித்­தி­ருந்­தது. அத்­துடன், யுத்­த­கா­லத்தில் இடம்­பெற்ற சம்­ப­வங்­களின் விளை­வாக எழுந்­துள்ள உரிமை மீறல்கள் தொடர்பில் நிலை­மாறு கால நீதியை நிலை­நி­றுத்­து­வ­தற்­காக, சர்­வ­தேச நீதி­ப­திகள் விசா­ர­ணை­யா­ளர்கள், சட்­டத்­த­ர­ணிகள், விசா­ர­ணை­யா­ளர்­களை உள்­ள­டக்­கிய சுதந்­தி­ர­மான நீதி விசா­ரணைப் பொறி­முறை ஒன்றை உரு­வாக்­கு­வ­தா­கவும் அர­சாங்கம் உறு­தி­ய­ளித்­தி­ருந்­தது என்­பதை அந்த கண்­கா­ணிப்­பகம் நினை­வூட்­டி­யி­ருக்­கின்­றது.

சர்­வ­தே­சத்­திற்கு இவ்­வாறு உத்­த­ர­வா­தங்­க­ளையும் உறு­தி­மொ­ழி­க­ளையும் வழங்­கி­யுள்ள போதிலும், அர­சாங்­கத்­தினால் நிய­மிக்­கப்­பட்ட குழு­வொன்று நிலை­மா­றுகால நீதி தொடர்­பாக மக்­க­ளு­டைய கருத்­த­றிந்து வெளி­யிட்ட முக்­கி­ய­மான பரிந்­து­ரை­க­ளுடன் கைய­ளிக்­கப்­பட்ட அறிக்­கை­யைக்­கூட ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் நேர­டி­யாகப் பெற்­றுக்­கொள்­ள­வில்லை. நீண்­ட­கால ஆயுத மோதல் முரண்­பாடு கார­ண­மாக பாதிக்­கப்­பட்ட அனை­வ­ருக்கும் இன, மத, அர­சியல் வேறு­பா­டின்றி நீதி வழங்­கப்­பட வேண்டும் என்று இந்த அறிக்கை வலி­யுத்­தி­யி­ருக்­கின்­றது என்­ப­தையும் சுட்­டிக்­காட்­டி­யுள்ள மனித உரி­மைகள் கண்­கா­ணிப்­பகம், அரச தலை­வர்கள், மூத்த அமைச்­சர்கள் உள்­ளிட்ட பலரும் சர்­வ­தேச நீதி­ப­தி­களை உள்­ள­டக்­கிய விசா­ரணை நடை­பெ­ற­மாட்­டாது என்­பதை வெளிப்­ப­டை­யாகக் கூறி­யி­ருப்­ப­தையும் குறிப்­பாக ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் யுத்த வீரர்­க­ளான இரா­ணு­வத்­தினர் எந்த ஒரு விசா­ர­ணைக்கும் உட்­ப­டுத்­தப்­பட மாட்­டார்கள் என்­ப­தையும் குறித்துக் காட்­டி­யி­ருக்­கின்­றது.

அது மட்­டு­மல்­லாமல், வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­டோ­ருக்­கான அலு­வ­லக உரு­வாக்கம், அர­சியல் நல்­லி­ணக்­கத்­திற்­கான அர­சியல் தீர்­வுக்கு வழி­வ­குக்கும் என்று எதிர்­பார்க்­கப்­பட்ட புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வதில் இடைக்­கால அறிக்கை எற்­ப­டுத்­தி­யுள்ள சர்ச்சைகள், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதில் அரசாங்கத்தின் அசமந்தப் போக்கு, சித்திரவதைகள் தொடர்பில் வெளியிடப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் பின்னரும் பொறுப்பு கூறுகின்ற கடமைச் செயற்பாடுகளில் ஏற்பட்டுள்ள மந்தநிலைமை, பெண்களுக்கு எதிரான வன்முறை நிலைமைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கை பேசியிருக்கின்றது.

மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் 2018 ஆம் ஆண்டுக்கான வருடாந்த உலக அறிக்கை வழமையானதோர் அறிக்கைதானே, என்று சாதாரண ஒரு விடயமாகக் கருதப்படலாம். ஆனால், எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிகைகள் பேரவையின் அமர்வில் கடுமையான நிலைப்பாட்டிற்கு இலங்கை அரசாங்கம் முகம் கொடுக்கவுள்ளதாக சர்வதேச இராஜதந்திர வட்டாரங்களில் கருத்து நிலவுகின்ற சூழலில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ள விடயங்கள் மிகக் கனதியான தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு வழிவகுக்கும் என்பது மனித உரிமைச் செயற்பாடாளர்களின் கருத்து.

பிணை முறி விவகாரத்தில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் உணர்வுபூர்வமானதொரு விரிசலை ஏற்படுத்தியுள்ள ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களிடையேயான அரசியல் வாக்குவாதம் காரணமாக நல்லாட்சி அரசாங்கம் ஆட்டம் காணும் நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றது.

இத்தகைய ஒரு நிலையில் நல்லாட்சி அரசாங்கத்தின் கடந்த மூன்று வருட கால செயற்பாடுகளும் உள்ளுர் மற்றும் சர்வதேச மட்டத்திலான வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் முறையான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவில்லை என சர்வதேச நிறுவனங்களினால் சுட்டிக்காட்டப்பட்டிருப்பது நாட்டில் நிலையான நலன்களுக்கு நல்லதல்ல.

நல்லாட்சிக்குள் ஏற்பட்டுள்ள நிலைமைகளை உணர்வு நிலைக்கு அப்பால் அறிவுபூர்வமாகவும் நாட்டு மக்களின் நலன்கள் சார்ந்தும் சீர்தூக்கி முடிவெடுத்து உறுதியான நிலையில் தேர்தல் கால வாக்குறுதிகள் மற்றும் மக்கள் ஆணை தொடர்பிலான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியது அரசாங்கத்தின் முன்னால் இப்போதுள்ள பாரிய பொறுப்பாகும்.  

பி.மாணிக்­க­வா­சகம்

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2018-01-20#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.