Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடற்படை வாகனம் மோதி சிறுமி சாவு – புங்குடுதீவில் பதற்றம்

Featured Replies

  • கடற்படை வாகனம் மோதி சிறுமி சாவு – புங்குடுதீவில் பதற்றம்
26991865_2322146451146271_34818312870671

கடற்படை வாகனம் மோதி சிறுமி சாவு – புங்குடுதீவில் பதற்றம்

கடற்படை பவள் கவச வாகனம் மோதியதில் 9 வயது மாணவி உயிரிழந்தார். தரம் 4 இல் கல்வி கற்கும் திருவானந்தன் கேசனா (வயது-9) என்ற மாணவியே உயிரிழந்தார்.

மாணவியை ஏற்றிவந்தவர் காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

26994380_2322124917815091_6057303086696726994380_2322124917815091_6057303086696727072343_2322124921148424_74553294923852

மோட்டார் சைக்கிளில் தனது மாமனாருடன் றோமன் கத்தோலிக்க பாடசாலைக்கு சென்று கொண்டிருந்தபோதே எதிரே வந்த கவச வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து நடந்தது என்று தெரிவிக்கப்பட்டது.

சம்பவத்துடன் தொடர்புடைய கடற்படையின் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். வாகனமும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

இப் பவள் வாகனமானது கடற்படையினருக்கான உணவுப் பண்டங்களை ஏற்றியிறக்கவே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது .

26991758_2322146447812938_85009235169166

http://newuthayan.com/story/64260.html

  • தொடங்கியவர்

சிறுமி கேஷனாவின் உயிரை பறித்த கடற்படை வாகன சாரதி கைது…

 

 

யாழ்.புங்குடுதீவு பகுதியில் கடற்படையினருக்கு சொந்தமான கவச வாகனம் மோதி பாடசாலை மாணவியொருவர் சம்பவஇடத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவத்தில், கடற்படை கவச வாகனத்தைச் செலுத்திச் சென்றவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், வாகனத்தையும் கைப்பற்றிய  ஊர்காவத்துறை பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://globaltamilnews.net/2018/62982/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

நாடொன்றின் தேசிய பாதுகாப்பின் பெயரால்! தீபச்செல்வன்

20374522_1466120860165776_46136073952562
அறுக்கப்பட்ட முலைகளில்
பாலை ஊட்டப்பட்ட
எனது பிள்ளைகள் ஒரு விசித்திர தேசத்தில்
பிறந்து வளர்கிறார்கள்
அவதிப்படும் நகரத்தில்
அவர்களின் நித்திரை
குருதி பிரண்ட தோட்டாக்களை
வீதிகளில் பொறுக்கி
கணக்கிட்டு தங்கள் புலமையை
வளர்த்துக்கொள்கிறார்கள்
பீரங்கிகளின் முகங்களின் தேவைகளையும்
கவசவண்டிகளின் இரைச்சல்களின்
அதிகாரத்தையும்
அவர்கள் தினமும் பார்த்து நிற்கநேரிடும்
அடையாளங்களுக்கு கீழ்
அவர்களுக்கும் விசாரனைகள் நடக்கும்
சோதனைகள் நடக்கும்
தண்டனையும் உண்டு
புன்னகையிழந்த
எனது பிள்ளைகளின் உரிமை
துப்பாக்கிகளின் குறிக்குள்
சுருங்கிப்போயிருக்கும்
எப்போதும்போல்
பதுங்கு குழியின் மடியில்
எனது பிள்ளைகள்
கண்களை மறைத்திருக்கிறார்கள்
நாடொன்றின் தேசிய பாதுகாப்பின் பெயரால்.

http://globaltamilnews.net/2018/63130/

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்இன அழிப்பு எந்த வடிவிலும் நிகழ வேணும் என்பது சிங்களவனின் குறிக்கோள் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.