Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சத்­தியம் என்றும் தோற்­காது என்­கிறார் முத­ல­மைச்சர்.!

Featured Replies

சத்­தியம் என்றும் தோற்­காது என்­கிறார் முத­ல­மைச்சர்.!

 

பாட­சாலை அதி­பரை நான் மன்­னிப்புக் கோரு­மாறு கேட்­க­வில்லை. அவ­ரா­கவே வந்து வணங்கி புத்­தாண்டு வாழ்த்­துக்­களைக் கூறி­விட்டுச் சென்றார் என்று ஊவா மாகாண முத­ல­மைச்சர் சாமர சம்பத் தச­நா­யக்க தெரி­வித்தார்.

பதுளை தமிழ் மகா வித்­தி­யா­லய பெண் அதிபர் முத­ல­மைச்­ச­ரினால் முழந்­தா­ளிடச் செய்­யப்­பட்டு மன்­னிப்­புக்­கோர செய்­யப்­பட்­ட­தாக எழுந்­துள்ள குற்­றச்­சாட்டை அடுத்து நேற்று முத­ல­மைச்சர் பதுளை பொலிஸ் நிலை­யத்தில் சர­ண­டைந்தார். இத­னை­ய­டுத்து அவர் நீதி­மன்­றத்தில் ஆஜர் செய்­யப்­பட்டு இரண்டு இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான சரீரப் பிணையில் விடு­விக்­கப்­பட்டார்.

நீதி­மன்­றத்தை விட்டு வெளியே வந்த அவரை பெரு­ம­ள­வி­லான ஆத­ர­வா­ளர்கள் ஒன்­று­கூடி வர­வேற்­றனர். தனது உத்­தி­யோ­க­பூர்வ வாசஸ்­த­லத்­திற்கு அவர் வரு­கை­தந்த போதும் பெரு­ம­ள­வி­லான ஆத­ர­வா­ளர்கள் அவரை வர­வேற்­றனர். 

இங்கு ஆத­ர­வா­ளர்கள் மத்­தியில் கருத்துத் தெரி­வித்த முத­ல­மைச்சர்,

குறிப்­பிட்ட அதி­பரை மன்­னிப்புக் கேட்க நான் கோரவும் இல்லை. அவ­ரா­கவே வந்து வணங்கி புத்­தாண்டு வாழ்த்­துக்­களை கூறி­விட்டுச் சென்றார். இதனை முன்­னி­லைப்­ப­டுத்தி எனது தரப்­பினர் அர­சியல் இலாபம் தேடு­கின்­றனர். நான் தெய்வ நம்­பிக்கை உள்­ளவன். இன, மத பேதங்­க­ளுக்கு அப்­பாற்­பட்­டவன். சத்தியம் என்றும் தோற்றதில்லை. அத்துடன் எனது விடயத்திலும் சத்தியம் வெல்லும். அது வரை காத்திருப்பேன் என்றார். 

http://www.virakesari.lk/article/29848

முத­ல­மைச்சருக்கு பிணை : பொலிஸில் சரணடைந்ததையடுத்து கைதாகி நீதிமன்றில் ஆஜர்

1-60fe98013c8eef7a7900cd0b8b7b63ae2e886ea2.jpg

 

ஏட்டிக்கு போட்டியாக ஆர்ப்பாட்டங்கள்
விசாரணைகள் தொடர்கின்றன
இரண்டு சட்டத்தரணிகளுடன்
சரணடைந்தார்
ஐந்து மணி நேரத்தில் வெளியே வந்தார்


(எம்.எப்.எம்.பஸீர், பதுளை,
பண்­டா­ர­வளை மேல­திக நிரு­பர்கள்) 

பதுளை தமிழ் மகளிர் மகா வித்­தி­யா­லய அதிபர் ஆர். பவா­னியை முழந்­தா­ளிடச் செய்து மன்­னிப்பு கோரச் செய்­தமை, அச்­சம்­பவம் தொடர்பில் பொய்­யான வாக்கு மூலத்தை வழங்க அச்­சு­றுத்­தி­யமை உள்­ளிட்ட விட­யங் கள் தொடர்பில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்கும் பொலிஸார் நேற்று  ஊவா மாகாண முத­லை­மைச்­சரை கைது செய்­தனர்.  

நேற்று காலை ஊவா முத­ல­மைச்சர் சாமர சம்பத் தஸ­நா­யக்க, இரு சட்­டத்­த­ர­ணி­க­ளுடன் பதுளை பொலிஸ் நிலை­யத்­துக்கு வந்து சர­ண­ டைந்த நிலை­யி­லேயே,  வாக்கு மூலம் ஒன்­றினைப் பெற்­றுக்­கொண்ட பொலிஸார் அவரைக் கைது செய்­த­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் சட்­டத்­த­ரணி ருவன் குன­சே­கர தெரி­வித்தார்.  

 அதி­பரின் கட­மைக்கு இடை­யூறு விளை­வித்­தமை, அவரை அச்­சு­றுத்­தி­யமை தொடர்பில் அவரை இவ்­வாறு கைது செய்­த­தாக பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர கேச­ரிக்கு மேலும் தெரி­வித்தார்.

 இந் நிலையில் முத­ல­மைச்சர் சாமர சம்பத் தஸ­நா­யக்­கவை பதுளை பிர­தான நீதிவான் நயந்த சம­ர­துங்க முன்­னி­லையில் பொலிஸார் ஆஜர் செய்­த­போது அவரை 2 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான சரீ­இரப் பிணையில் செல்ல நீதிவான் அனு­ம­தி­வ­ழங்­கினார்.

முத­ல­மைச்சர் சர­ண­டைந்­தமை, விசா­ரணை, நீதி­மன்றில் ஆஜர் செய்­யப்­பட்­டமை, பிணை கிடைத்­தமை உள்­ளிட்ட நட­வ­டிக்­கைகள் 5 மணி நேரத்­துக்கும் குறை­வான நேரத்தில் நடந்து முடிந்­தன.

 எவ்­வா­றா­யினும் முத­ல­மைச்சர் சாமர சம்பத் தஸ­நா­யக்­க­வுக்கு பிணை வழங்­கப்­பட்ட போதும், பதுளை மாவட்ட ஆசி­ரி­யர்­களும் அரச ஊழி­யர்­களும் நேற்றும் முத­ல­மைச்சர் அலு­வ­ல­கத்­துக்கு முன்­பாக ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர்.

நேற்று பிற்­பகல் ஊவா மாகாண முத­ல­மைச்சர் சரீ­ரப்­பி­ணையில் விடு­த­லை­யாகி வரு­கை­தரும் போது ஊவா மாகாண சபைக்கு முன்னாள் குறித்த எதிர்ப்பு இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருந்­ததால் பதற்ற நிலை ஏற்­பட்­டது. எனினும் பொலி­ஸாரும் கல­க­ம­டக்கும் பிரி­வி­னரும் அங்கு நிலைக் கொள்ளச் செய்­யப்­பட்­டி­ருந்த நிலையில் நிலைமை எல்லை மீரிச் செல்­வதில் இருந்து கட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டது.

 இந் நிலையில் பிணையில் வந்த முத­ல­மைச்­சரை அவ­ரது ஆத­ர­வா­ளர்கள் வர­வேற்­றனர். அத்­துடன் முத­ல­மைச்­சரின் வாசஸ்­த­லத்தில் சமய அனுஸ்­டா­னங்கள் இடம்­பெற்­றன. அவை ஒலி­பெ­ருக்கி மூலம் ஒலி­ப­ரப்­பப்­பட்­டன. அதன் போது எதிர்ப்பு ஆர்ப்­பாட்டம் முன்­னெ­டுக்­கப்­பட்­டது.

கடந்த ஞாயி­றன்று பாதிக்­கப்­பட்ட அதிபர், பொலி­ஸா­ருக்கு 3 மணி நேர விஷேட வாக்கு மூலம் ஒன்­றினை வழங்­கி­யதைத் தொடர்ந்து மேலும் மூன்று சாட்­சி­யா­ளர்­க­ளிடம் பொலிஸார் வாக்கு மூலங்­களைப் பதிவு செய்­தி­ருந்­தனர். அத்­துடன் நேற்று முன் தினமும் சில சாட்­சிகள் பதிவு செய்­யப்ப்ட்ட நிலையில் முத­ல­மைச்சர் அதி­பரின் கட­மை­க­ளுக்கு இடை­யூறு ஏற்­ப­டுத்­தி­யமை தொடர்பில் சாட்­சிகள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

 பதுளை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி தலை­மை­யி­லான குழு­வினர், முத­ல­மைச்­சரை கைது செய்­வது என தீர்­மா­னித்­துள்ள நிலை­யி­லேயே நேற்று அவர் பொலிஸ் நிலை­யத்­துக்கு வந்து சர­ண­டைந்­துள்ளார். இத­னை­ய­டுத்தே அவரை நீதி­மன்றில் ஆஜர்ச் செய்­த­தாக ஊவா மாகா­ணத்தின் சிரேஷ்ட பொலிஸ் அதி­காரி ஒருவர் கேச­ரிக்கு தெரி­வித்தார்.

 முத­ல­மைச்சர் சாமர சம்பத் தஸ­நா­யக்க, கைது செய்­யப்­பட்ட போதும் அச்­சு­றுத்தல் விடுத்த சம்­பவம் தொடர்பில் ஊவா மாகாண கல்விச் செய­லாளர் சந்­தியா அம்­பன்­வெல மற்றும் வலயக் கல்விப் பணிப்­பாளர் ரத்­நா­யக்க ஆகி­யோ­ருக்கு எதி­ரா­கவும் அதி­பரின் முதல் வாக்கு மூலத்தை மாற்ற நட­வ­டிக்கை எடுத்­த­வர்கள் எனக் கூறப்­ப­டுவோர் தொடர்­பி­லான விசா­ர­ணை­களும் தொடர்ந்தும் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வ­தாக அந்த அதி­காரி சுட்­டிக்­காட்­டினார்.

கடந்த ஜன­வரி மூன்றாம் திகதி முதலாம் தரத்­துக்­கான அனு­மதி தொடர்பில், எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி சபைக்­காக போட்­டி­யிடும் உறுப்­பினர் ஒரு­வரின் உற­வி­ன­ரான பெற்றோர் முத­ல­மைச்­சரின் கோரிக்கை கடி­தத்­துடன் சென்­றுள்­ளனர். கல்வி அமைச்சின் சுற்று நிரு­பத்தின் பிர­காரம் உரிய முறை­மை­களின் கீழேயே அவர் அக்­க­டி­தத்தின் பிர­காரம் அம்­மா­ண­வியை சேர்த்­துக்­கொள்ள முடி­யாது என கூறி­யுள்ளார். எனினும் முத­ல­மைச்­சரின் கோரிக்­கையை அதிபர் நிரா­க­ரித்த சம்­ப­வத்தை மையப்­ப­டுத்தி, அதி­பரை முத­ல­மைச்­சரின் வாசஸ்­த­ல­திற்கு வர­வ­ழைத்து நிந்­தித்­தமை, அதி­பரை மண்­டி­யிட்டு மன்­னிப்பு கோர அழுத்தம் பிர­யோ­கித்­தமை தொடர்பில் ஊட­கங்கள் ஊடாக வெளிக்­கொ­ண­ரப்­பட்­ட­தை­ய­டுத்து இது தொடர்பில் சர்ச்சை வெடித்­தது.

எனினும் இந்த சர்ச்­சை­க­ளி­டையே அதிபர் ஆர். பவா­னியின் வாக்கு மூலம் ஒன்றும் ஊட­கங்­களில் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டது. அதில் முழந்­தா­ழிடச் செய்த சம்­பவம் ஒன்று நடக்­கவே இல்லை எனவும், முத­ல­மைச்­சரும் ஏனைய அதி­கா­ரி­களும் பாட­சா­லையின் ஒவ்­வொரு விட­யத்­திலும் அக்­க­றை­யுடன் செயற்­ப­டு­வ­தா­கவும், இது அர­சியல் பருவ காலம் என்­பதால் இவ்­வாறு ஒரு கதை சொல்­லப்­ப­டு­வ­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

 எனினும் கடந்த வெள்­ளி­யன்று அந்த வாக்கு மூல­மா­னது அச்­சு­றுத்திப் பெறப்­பட்­டது என்­பதை அதிபர் ஆர். பவானி வெளிப்­ப­டுத்­தினார் ' சுற்­ற­றிக்­கையில் பிர­கா­ரமே, 2018ஆம் ஆண்டு முதலாம் தரத்­துக்கு மாண­வி­களை சேர்த்­துக்­கொள்ளும் செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. எங்­க­ளு­டைய பாட­சா­லையை பொறுத்­த­வ­ரையில் முஸ்­லிம்­க­ளுக்கு 8 சத­வீ­தமே ஒதுக்­கப்­படும். அத­ன­டிப்­ப­டை­யி­யேயே, மாண­விகள் சேர்த்­துக்­கொள்­ளப்­பட்­டனர்.

எனினும், இன்­னு­மிரு மாண­வி­களை சேர்த்­துக்­கொள்­ள­வேண்­டு­மென, முத­ல­மைச்சர் சாமர சம்பத், கடி­த­மொன்றை அனுப்­பி­வைத்­தி­ருந்தார். அவ்­வாறு கடி­தங்­க­ளுடன் வந்­தி­ருந்த இரு­வ­ரையும், அழைத்து, சுற்­ற­றிக்­கையை தெளி­வுப்­ப­டுத்­தினேன்.

இய­லாத பட்­சத்தில், மாகாண பணிப்­பாளர் அல்­லது மாகாண செய­லா­ள­ரிடம் கடி­தங்­களை பெற்­று­வ­ரு­மாறு அவ்­வி­ரு­வ­ரையும் அனுப்­பி­வைத்தேன். இதே­போன்­ற­தொரு பிரச்­சினை, 2017 ஆம் ஆண்டின் போதும், தரம் ஒன்­றுக்கு மாண­வர்­களை சேர்த்­துக்­கொள்ளும் போது இடம்­பெற்­றது.

இந்­நி­லையில், ஜன­வரி 3 ஆம் திக­தி­யன்று தன்­னு­டைய காரி­யா­ல­யத்­துக்கு வரு­மாறு மாகாண செய­லாளர் என்னை அழைத்­தி­ருந்தார். நானும் சென்­றி­ருந்தேன். சிறி­து­நேரம் கழித்து, முத­ல­மைச்­சரின் அலு­வ­ல­கத்­துக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு, தங்­க­ளு­டைய பிள்­ளை­களை முதலாம் தரத்­துக்கு சேர்த்­துக்­கொள்­ளு­மாறு, முத­ல­மைச்­சரின் கடி­தங்­க­ளுடன், பாட­சா­லைக்கு வந்­தி­ருந்த பெற்றோர் இரு­வரும் இருந்­தனர். மாகாண கல்விப் பணிப்­பா­ளரும் இருந்தார்.

கடு­மை­யான கோபம் கொண்­டி­ருந்த முத­ல­மைச்சர் சாமர சம்பத் தஸ­நா­யக்க, “நான் 8ஆவது படிக்­கா­தவன் என்று தெரி­வித்­தீரா, உனக்கு இங்கு வேலை­யில்லை. ஏதா­வது தூர பிர­தே­ச­மொன்­றுக்கு இட­மாற்­றவும்” என, மாகாண கல்விப் பணிப்­பாளர் மற்றும் மாகாண செய­லா­ள­ருக்கு கடு­மை­யான கட்­ட­ளை­யிட்டார்.

அத்­துடன், அவ்­விரு பெற்­றோர்கள் முன்­னி­லை­யிலும் முழங்­கா­லிட்டு, மன்­னிப்புக் கேட்­கு­மாறு கேட்டார்.

“என்­மீ­தான குற்­றச்­சாட்­டுகள் அனைத்­தையும் நிரா­க­ரித்தேன். என்ன செய்­வ­தென்று தெரி­யாத நான், இறு­தியில் முழங்­கா­லிட்டேன். மன்­னிப்பு கேட்டேன். என் வாழ்க்­கையில் எப்­போதும் பொய் சொல்­லி­யது இல்லை. மாண­வி­களை சேர்க்கும் விவ­கா­ரத்தில் இன, மத, மொழி உள்­ளிட்ட வேறு­பா­டு­களை பார்க்­க­மாட்டேன். சுற்­ற­றிக்­கையின் பிர­கா­ரமே செயற்­ப­டுவேன். கடந்த காலங்­களில் செயற்­பட்டும் உள்ளேன். ஆளுநர் எவ்­வி­த­மான அழுத்­தங்­க­ளையும் பிர­யோ­கிக்­க­வில்லை” என்றேன்.

எனினும், என்­னு­டைய விளக்­கங்­க­ளுக்கு செவி­சாய்ப்­ப­தாக, முத­ல­மைச்சர் அன்­றி­ருக்­க­வில்லை. தொழில் பயம், அச்சம் உள்­ளிட்­டவை கார­ண­மா­கவே, முழங்­கா­லிட்டு மன்­னிப்புக் கேட்டேன். அத­னை­விட, என்னால் ஒன்­றுமே செய்­ய­மு­டி­யாது. எனினும், அவ்­வி­டத்தில் மாகாண கல்விப் பணிப்­பா­ளரும், மாகாண செய­லா­ளரும் இருந்­தனர். அங்கு நடந்தவை என்னவென்று அவர்களுக்குத் தெரியும்” என்றார்.

முதலமைச்சர் காரியாலயத்தில் நான் முகம்கொடுத்த சம்பவம் தொடர்பில், பாடசாலையின் லொக் புத்தகத்தில் அப்படியே பதிவிட்டுள்ளேன்.

“நான், அச்சுறுத்தப்பட்டதனால், அங்கு நடந்த சம்பவத்தை முற்றாக மாற்றியே ஊடகங்களுக்கு அன்று தெரிவித்தேன். அன்று நடந்த சம்பவம் எனது மனநிலையை வெகுவாகப் பாதித்துவிட்டது. எனக்கும், எனது பாடசாலைக்கும் களங்கம் ஏற்பட்டதை எண்ணி மனதுக்குள்ளேயே குமுறிக்கொண்டிருக்கின்றேன்.

“எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், மாகாண முதலமைச்சர், மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சந்தியா அம்பன்வெல, மாகாண கல்விப் பணிப்பாளர் ஆகியோரே பொறுப்பேற்க வேண்டும்” என குறித்த சம்பவம் தொடர்பில் அதிபர் ஆர் பவானி பின்னர் நடந்தவைகளை மேற்கண்டவாறு தெரிவித்திருந்ததுடன் பொலிஸாருக்கும் வககு மூலம் வழங்கியிருந்தார்.

 

 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-01-24#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.